• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - 08

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி.....
1cb67919664263438865a8fb8fddfe31.jpg
முல்லை பந்தலின் கீழ் நின்று கொண்டிருந்த சரோஜா சேலை நுனியை கையில் வைத்து சுருட்டுவதும், விரிப்பதுமாக இருக்க அஜய் அங்கிருந்த ஒரு கம்பத்தின் மேல் சாய்ந்து நின்று சரோஜாவையே பார்த்து கொண்டு நின்றான்.


"இது சரிப்பட்டு வர்ற மாதிரி எனக்கு தெரியல...." எனத் தனக்குள்ளேயே கூறி கொண்டவன் சரோஜாவின் முன்னால் வந்து நின்றான்.
திடீரென அஜய் தன் முன்னால் வந்து நிற்கவும் சரோஜா பதட்டத்துடன் இரண்டு அடி பின்னோக்கி நகர்ந்தாள்.


"ஹேய்....கூல்....நான் மனுஷன் தான்மா....பேயோ, பிசாசோ இல்ல....எதுக்கு இவ்வளவு பதட்டம்???" என அஜய் கேட்கவும் நிமிர்ந்து அவனைப் பார்த்த சரோஜா சட்டென்று தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.


"நான் கூட லாஸ்டா நீ என் கூட பேசுனதை பார்த்து நெக்ஸ்ட் டைம் ஒரு பெரிய சண்டையே போடுவேன்னு நினைச்சேன்....ஆனா இங்க நடக்குறது நான் சுத்தமாக எதிர்பார்க்காத ஒண்ணா இருக்கே...." என சரோஜாவை ஓரக் கண்ணால் பார்த்து கொண்டே யோசிப்பது போல அஜய் பாவனை செய்யவும்


"அட ஆமா....நெக்ஸ்ட் டைம் இவரைப் பார்த்தா சண்டை போடணும்னு தானே இருந்தேன்....இப்போ பேசாமல் இப்படி ஆஃப் ஆகி நிற்குறேனே....நோ சரோஜா நோ....தைரியமாக பேசிடு.....ரெடி வன்...டூ...த்ரீ...." என்று மனதிற்குள் கூறி கொண்டவள்


"என்ன மிஸ்டர்.அஜய்ராஜ் திமிரா???" என்று கேட்டாள்.


"வாவ்....சரோஜா பேசிட்டாங்க....." எனக் கை தட்டியவாறு அஜய் கூறவும்


அவனை முறைத்து பார்த்தவள்
"ஹலோ...போதும்...ஓவரா ஆக்ட் பண்ணாதீங்க தாங்கல....ஆமா என்ன ஸார் நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல?? ஆக்சிடெண்ட் பண்ணிட்டு ஒரு ஸாரி கூட சொல்லாம தலைமறைவாகிட்டீங்க....ஆக்சிடெண்ட் பண்ணதுக்காக நான் கம்ப்ளெயிண்ட் எதுவும் பண்ணிடுவேன்னு பயந்து தான் எனக்கு எல்லா ஹெல்ப்பும் நீங்க பண்ணுணீங்கனு எனக்கு தெரியும்....ஏ.சி.பி னா தப்பு பண்ணலாமா??? சொல்லுங்க ஸார்...." எனக் கேட்க அஜய் அமைதியாக நின்றான்.


"சரோஜா ஆக்சிடெண்ட் விஷயம் தப்பு தான்....நான் அக்செப்ட் பண்ணிக்குறேன்....ஆனா அந்த டைம் நான் என்னோட பக்க நியாயத்தை பற்றி பேசாமல் போனதும் ஒரு வகையில் தப்பான விஷயம் தான்....ஏற்கனவே வேலையில் பிரஷர் ஜாஸ்தி....அதோட இதுவும் சேர்ந்தா என் பாடு திண்டாட்டம் ஆகி இருக்கும்....ஷோ அதுக்காக நான் ஸாரி கேட்க ரெடி....ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி...." என அஜய் மன்னிப்பு கேட்டு சரோஜா வாயடைத்துப் போய் நின்றாள்.


"என்ன இப்படி ஒரேயடியாக சரண்டர் ஆகிட்டாரு???" என சரோஜா யோசித்த வண்ணம் நிற்க


அவள் முகத்தின் முன்னால் சொடக்கிட்டு அவளை நனவுக்கு கொண்டு வந்தவன்
"அப்புறம் உங்க கிட்ட எனக்கு ஒரு ஹெல்ப் ஆகணும்...." என்று கூறவும்


வியப்பாக அவனைப் பார்த்த சரோஜா
"ஹெல்ப்பா??? என் கிட்டயா??? என்ன ஹெல்ப்???" எனக் கேட்டாள்.


"ஆமா....லாஸ்டா ஒரு ஹவுஸ்ல நாம மீட் பண்ணுணோம் தானே...அங்கே நீ ஒரு ரூமுக்குள்ள போய் எதையோ எடுத்துட்டு வந்த...."


"இல்ல...அது வந்து...."


"நான் சொல்லி முடிச்சதுக்கு அப்புறம் நீ பேசு....நீ எடுக்கலேனு எல்லாம் சொல்லாதே....நீ எதையோ எடுத்த எனக்கு தெரியும்....அது இந்த கேஸோட ரொம்ப ரிலேடட் ஆனதுனு என் மைண்ட்க்கு படுது....அப்பா கிட்ட நான் இதை பற்றி பேசல....ஏன்னா அப்பாவோட வேலையில் நான் தலையிட மாட்டேன்....அது என் பாலிஸி....." என அஜய் கூறவும்


"நல்ல பாலிஸி...." என சரோஜா முணுமுணுத்துக் கொண்டாள்.


"என்ன???" என்று அஜய் கேட்கவும்


"ஒண்ணும் இல்லை மேல சொல்லுங்க...." என சரோஜா கூறவும்


"ஓகே....நான் என்ன சொல்ல வர்றேன்னா நீ அந்த ரூமுக்குள்ள போய் எடுத்த அந்த கிஃப்ட் இப்போ எங்க இருக்கு??? அதை ஏன் எங்க கிட்ட காமிக்காமல் கொண்டு போன???" என அஜய் கேட்க


"கிஃப்டா??? கிஃப்ட எங்க நான் எடுத்தேன்???" எனக் குழப்பமாக கேட்டாள் சரோஜா.


"ஹேய் சரோஜா விளையாடாதே..."


"நான் ஏன் உங்க கூட விளையாடப் போறேன்??? அன்னைக்கு நீங்க நார்மலா பேசி இருந்தா நான் இதை சொல்லி இருப்பேன்...நீங்க ஓவரா என்னை சீண்டிப் பார்த்தீங்களா அது தான் நானும் கோபமாக நடந்துட்டேன்....அன்னைக்கு நான் ரூமுக்குள்ள போய் ஒரு பொருளை எடுத்தது உண்மை தான்...ஆனா நீங்க சொல்லுற மாதிரி கிஃப்ட் எல்லாம் இல்ல...ஒரு கிஃப்ட் ராப்பிங் பேப்பர் அதோட ஒரு வெள்ளை பேப்பர்...அந்த வெள்ளை பேப்பர்ல 'ஃபார் மை லவ்' அப்படினு ஒரு வசனம் அவ்வளவு தான்....இருந்தாலும் அது இந்த கேஸ்க்கு யூஸ் ஆகும்னு தோணுச்சு....ஷோ அதை நான் அன்னைக்கு ஈவ்னிங்கே ஸார் கிட்ட கொடுத்துட்டேன்....அது இப்போ அனலைஸிங் பொரசஸ்ல இருக்கு...இன்னும் இரண்டு, மூணு நாள்ல அதோட ரிஸல்ட்டும் வந்துடும்....." என சரோஜா கூறவும்


"கிஃப்ட் உன் கிட்ட இல்லையா???" என அஜய் ஆச்சரியமாக கேட்டான்.


"கிஃப்டும் இல்ல ஒரு மண்ணும் இல்ல....ஏன் என்னாச்சு???" என சரோஜா கேட்கவும்


"ஒண்ணும் இல்ல....வேற ஒரு யோசனை...." எனக் கூறியவன் கண்களை மூடி தலையை ஒரு முறை அழுந்தக் கோதிக் கொண்டான்.


"கிஃப்ட் வந்த வரைக்கும் திரு சொன்னாரே....ஒரு வேளை வீட்ல தான் எங்கேயும் அந்த கிஃப்ட் இருக்குமோ...." என யோசித்தவன் உடனே தன் போனை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டான்.


"ஹலோ மருது....நீங்க உடனே திருவோட வீட்டுக்கு போங்க....அங்க அந்த ரூம்ல நான் சொல்ற மாதிரி ஒரு ஸ்டச்சு இருக்கானு பாருங்க....." என்ற அஜய் சிறிது நேரம் அதை பற்றி விளக்கமாக கூறி விட்டு சரோஜாவை நிமிர்ந்து பார்த்தான்.


"ஏதாவது பிராப்ளமா???" என சரோஜா கேட்கவும்


"பிராப்ளம் எல்லாமஎ இல்ல....ஒரு சின்ன க்ளூ...தட்ஸ் இட்..." என்று கூற


"உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா???" என சரோஜா கேட்டாள்.


"என்ன கேளு???"


"அது வந்து....உங்க அப்பா கிட்ட நீங்க கேஸ் பற்றி பேசவே மாட்டிங்களா???" என சரோஜா கேட்கவும் அமைதியாக நின்ற அஜய் ஒரு முறை கண்களை இறுக மூடித் திறந்து கொண்டு பேசத் தொடங்கினான்.


"அப்பா இந்தியாவில் இருந்த டைம் வர நான் எல்லாம் டிஸ்கஸ் பண்ணுவேன்...பட் அது சில பேருக்கு பிடிக்கல....நான் அப்பா பின்னாலேயே இன்னமும் தங்கி இருக்குறேன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க....அப்பாவுக்கும் இதெல்லாம் கேட்டு கஷ்டமாகிடுச்சு....ஷோ என் திறமை எல்லோருக்கும் புரியணும்னு அப்பா எனக்கு ஸ்பேஸ் கொடுத்துட்டு இந்த வேலைகளை எல்லாம் தனபால் அங்கிள்கிட்ட கொடுத்துட்டுப் போனாங்க....ஆனா அம்மாவுக்கு இதில் இஷ்டம் இல்ல....எப்படியோ அம்மாவை சமாளித்து ஐந்து வருஷம் அங்க இருந்துட்டு வந்தாங்க....இப்போ இந்த கேஸ்ல நீங்க உள்ளே வந்தது மறுபடியும் எனக்கு பிரச்சினை ஆகலாம்...ஆனா நான் என் கடமையை செய்வேன்....அந்த கிஃப்ட் இந்த கேஸோட முக்கியமான எவிடன்ஸ்...அதை நீ எடுத்து இருப்பேன்னு தான் நான் இன்னைக்கு இங்க வந்ததே....நீ அதை பொரசஸ்க்கு கொடுத்து இருப்பேன்னு எல்லாம் நான் யோசிக்கல....உன் கிட்ட இருக்குற அந்த கிஃப்ட்டை வாங்கிட்டுப் போகலாம்னு தான் வந்தேன்...." என அஜய் கூறவும் அத்தனை நேரம் அவனை எண்ணி வியந்து நின்றவள் இறுதியாக அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு கலங்கி போனாள்.


"அப்போ இவர் விருப்பப்பட்டு இங்க வரலயா???" என யோசித்தவள் தன் சிந்தனை போகும் போக்கை எண்ணி அச்சம் கொண்டவளாக அந்த சிந்தனையை தற்காலிகமாக ஒதுக்கி வைத்தாள்.


சூழ்நிலையை சகஜமாக்க
"அய்யோ....பேச வந்த விஷயத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் நாம பேசிட்டு இருக்கோமே....." என்று சரோஜா கூறவும்


"அட ஆமா...." என்ற அஜய்


"சொல்லுங்க நீங்க என்ன சொல்ல வந்திங்க என் கிட்ட???" என்று கேட்டான்.


"அது....அது....." என்று இழுத்தவள் ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை சமன் செய்து கொண்ட பின் அஜயை நேராக பார்த்து பேசத் தொடங்கினாள்.


"எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்குறதுல சுத்தமாக இஷ்டம் இல்லை....அம்மாவோட வார்த்தைக்காக தான் நான் இன்னைக்கு இந்த பொண்ணு பார்க்குற சம்பிரதாயத்துக்கு ஒத்துக்கிட்டேன்....எனக்கு லைப்ல ஒரு லட்சியம் இருக்கு....எதாவது பெரிதா சாதிக்கணும்....மத்தவங்களுக்கு முன் மாதிரியாக ஒரு ரோல் மாடலாக இருக்கணும்....ஷோ அது வரை கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு தான் இருந்தேன்...ஆனா என் தம்பி என் மனசை மாத்திட்டான்....கல்யாணம் பண்ணிட்டும் சாதிக்கலாம் வரப்போற ஹஸ்பண்ட் துணையாக இருந்தா மட்டும்னு அவன் சொன்னதும் எனக்கு கரெக்ட்னு பட்டது....அது தான் உங்க கிட்ட இதை சொல்றேன்....கல்யாணம் நடந்தாலும் நான் என் வேலையில் முழு ஈடுபாட்டுடன் தான் இருப்பேன்...என் முழு கான்ஸன்ட்ரேஷனும் என்னோட அய்ம்ல தான் இருக்கும்.....இப்போ ஏன் இதை சொல்லுறேன் இங்க நீங்க ஓகே சொல்லிட்டு பின்னாடி அதையே ஒரு பிரச்சினையாக ஆக்க கூடாது இல்லையா??? இதற்கு உங்களுக்கு சம்மதம்னா எனக்கும் இந்த மேரேஜ்ல நோ ஆப்செக்சன்ஸ்...." என்ற சரோஜா அவன் இதற்கு சாதகமாக ஏதாவது கூறமாட்டானா என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.


"அய்யோ...." என்று தன் நெஞ்சில் அஜய் கை வைத்து கொள்ள


"என்ன??? என்னாச்சு???" எனப் பதட்டத்துடன் சரோஜா கேட்டாள்.


"உங்க பேச்சை கேட்டு பீல் ஆகிட்டேன்...." என அஜய் கூறவும் சரோஜா அவனை முறைத்து பார்த்தாள்.


"சரி சரி விளையாட்டு வேண்டாம்...நான் உன்னை பொண்ணு பார்க்க வந்ததே அந்த பொருள் விஷயமாக பேசணும்னு தான்...அதை நான் உன் கிட்ட வேற இடத்தில் மீட் பண்ணியும் கேட்டு இருக்கலாம்....பட் இது தானாக அமைஞ்ச சிட்டுவேஸன் ஷோ அதை நான் எனக்கு சாதகமாக யூஸ் பண்ணிட்டேன்....ஐ யம் ஸாரி...." என அஜய் கூறவும்


"ஓஹ்.....இட்ஸ் ஓகே...." எனக் கூறிய சரோஜாவின் குரலில் அத்தனை உயிர்ப்பு இருக்கவில்லை.


சரோஜாவின் முக மாற்றங்களை பார்த்து அஜயின் மனம் வாடினாலும் அதற்கான காரணம் அவனுக்கு புரியாமல் இல்லை.


"நான் வந்தது என்னவோ அந்த கேஸ் விஷயமாக பேசத் தான்...ஆனா இப்போ என் மனசு என்கிட்ட இல்லையே.."

என்று நினைத்துக் கொண்டவன் சரோஜாவை நிமிர்ந்து பார்த்தான்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
எளிமையான அலங்காரத்தில் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு மின்ன எங்கோ ஒரு மூலையில் தன் பார்வையை செலுத்த நின்ற சரோஜா ஏனோ அவன் கண்களுக்கு இன்று வித்தியாசமாக தெரிந்தாள்.


"அன்னைக்கு கோபத்தில் இருந்ததை விட இப்போ அமைதியாக ரொம்ப அழகாக இருக்காளே....." என்று நினைத்துக் கொண்டவன்


"சரி வந்து ரொம்ப நேரமாச்சு உள்ளே போகலாமா??" என்று கேட்கவும்


"நீங்க முன்னாடி போங்க நான் ஒரு ஐந்து நிமிஷத்துல வர்றேன்...." என்று சரோஜா கூற சரியென்று விட்டு அஜய் உள்ளே சென்று விட சரோஜாவோ சோகமாக அங்கிருந்த கம்பத்தில் சாய்ந்து கொண்டாள்.


அஜயை தன் வீட்டில் பார்த்ததுமே அதிர்ச்சியாகி நின்றவள் கனகாவின்
"சரோஜா இப்படி வந்து உட்காருமா...." என்ற அழைப்பிலேயே நடப்புக்கு வந்தாள்.


கால்கள் தடுமாற தட்டுத் தடுமாறி அவர்கள் எதிரில் வந்து அமர்ந்தவள் மறந்து கூட நிமிர்ந்தும் அஜயை பார்க்கவில்லை.


"இரண்டு பேரும் தனியா பேசுறதுனா கொஞ்ச நேரம் பேசட்டும்...." என ராஜஷேகர் கூறவும் மறுப்பாக தலை அசைக்க வந்தவள் காலையில் கணேஷ் சொன்னது ஞாபகம் வரவும் அமைதியாக அஜயை பின் தொடர்ந்து சென்றாள்.


அவனிடம் பேசப்பேச ஏதோ ஒரு சந்தோஷமான மனநிலையை உணர்ந்தவள் அவளையும் அறியாமல்
தன் ஆசையை அவனிடம் கூறிய பின் அவனும் அதற்கு சம்மதிக்க கூடும் என ஆவலுடன் அவன் முகம் பார்த்து இருக்க அவன் கூறிய பதிலோ அவள் முற்றிலும் எதிர்பாராதது.


"இப்போ என்ன ஆச்சுன்னு பீல் பண்ணுற??? கல்யாணம் இப்போ வேண்டாம்னு தானே முடிவெடுத்து இருந்த??? அது தான் அவரே அவர் முடிவை சொல்லிட்டான்....இன்னும் என்ன?? போ போய் வேலையைப் பாரு....இத்தனை நாள் எதிரியாக இருந்தவன் மேல என்ன புதுசா
பாசம், அக்கறை??" என மனது கேள்வி எழுப்ப


"அக்கறையும் இல்லை சக்கரையும் இல்லை...." என தன் தலையை உலுக்கி கொண்டவள் வீட்டிற்குள் சென்றாள்.


"சரோஜா வாழ்த்துக்கள்....." என கணேஷ் ஓடி வந்து அவள் கை பற்றி குலுக்கவும்


குழப்பமாக அவனை பார்த்த சரோஜா
"எதுக்கு டா இப்போ சம்பந்தம் இல்லாம விஸ் பண்ணுற???" என்று கேட்டாள்.


"ஒன்றரை மணி நேரமாக மாமாவோட பேசிட்டு இப்போ வந்து ஒண்ணும் தெரியாத மாதிரி எப்படி ஆக்ட் பண்ணுற நீ...." என்று கணேஷ் கூற


"மாமாவா???" என அதிர்ச்சியடைந்தவள் அஜயை திரும்பி பார்த்தாள்.


அஜய் அவளை பார்த்து புன்னகத்து கொண்டே கண்ணடிக்க அவளுக்கு அப்போது தான் எல்லாம் புரிந்தது.


"என் கிட்ட வெளியே அப்படி சொல்லிட்டு இங்க வந்து அப்படியே பல்டி அடிச்சுட்டானே சரியான கேடி போலீஸ்...." என்று மனதிற்குள் அவனைத் திட்டிக் கொண்டவள் எதுவும் பேசாமல் அவளது அறைக்குள் சென்று விட கனகா குழப்பமாக அஜயை பார்த்தார்.


"என்னடா சரோஜாவுக்கும், எனக்கும் சம்மதம்னு எங்க கிட்ட சொன்ன சரோஜா எதுவுமே சொல்லாமல் போயிட்டா...." என்று கனகா கவலையுடன் கூறவும்


"அம்மா...." என்று அவர் கையை ஆதரவாக பற்றி கொண்டவன்


"அவ வெட்கப்பட்டுட்டு போறாமா....வேணும்னா நானே போய் சரோஜாவை கூட்டிட்டு வர்றேன்....நீங்களே உங்க காதால அவ சம்மதம்னு சொல்லுறத கேளுங்க சரியா???" என்று விட்டு வித்யாவைப் பார்க்க வித்யா சம்மதமாக தலை அசைத்தார்.


"கணேஷ் நீயும் என் கூட வா....நான் தனியாக போறது சரி இல்லை...." என்று விட்டு கணேஷின் கை பிடித்து அழைத்து கொண்டு அஜய் சரோஜாவின் அறைக் கதவைத் தட்டி விட்டு காத்து நிற்க அறைக் கதவை திறந்த சரோஜா அஜயையும், அஜயின் பின்னால் நின்று கொண்டிருந்த கணேஷையும் கேள்வியாக நோக்கினாள்.


"அம்மா கிட்ட நீயே உன் வாயால உன் சம்மதத்தை சொல்லிடு...." என அஜய் கூறவும்


"நான் சம்மதம்னு உங்க கிட்ட சொல்லவே இல்லையே....." என சரோஜா கேலியாக கூற


"ஓஹ் அப்படியா??? அப்போ சரி அம்மா கிட்ட சரோஜாவுக்கு விருப்பம் இல்லேனு சொல்லிடுறேன்...." என்று விட்டு அஜய் திரும்பி செல்ல போக அவசரமாக அவன் கை பிடித்து தடுத்தாள் சரோஜா.


"என்ன தான் உங்களுக்கு அவசரமோ???" என்றவள்


அவன் கை பிடித்து இருந்த தன் கையை எடுத்து விட்டு தலை குனிந்து நின்று
"எனக்கும் சம்மதம் தான்.....உங்க கிட்ட சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்...." என்று கூற


"அய்யோ இந்த கொடுமையை பார்க்கவா என்னை கூட்டிட்டு வந்தீங்க....விடுங்க மாமா நான் போறேன்...." என்று விட்டு கணேஷ் சென்று விட அஜய் சிரித்துக் கொண்டே சரோஜாவின் புறம் திரும்பினான்.


"அப்படியே இதை வெளியில் வந்து சொன்னா எல்லோரும் சந்தோஷப்படுவாங்க தானே..." என்று அஜய் கூற சரியென்று தலை அசைத்தவள் அஜயை கடந்து செல்லும் போது ஏதோ ஒரு புது உணர்வை உணர்ந்தாள்.


மனது என்றும் இல்லாதவாறு சந்தோஷத்தை அன்று உணர பெரியவர்கள் முன்னால் வந்து நின்ற சரோஜா வித்யாவை நிமிர்ந்து பார்த்து
"எனக்கும் சம்மதம்..." என்று விட்டு நிற்காமல் ஓடி விட


அவளின் அருகில் வந்து நின்ற அஜய் புன்னகையோடு சரோஜாவைப் பார்த்து விட்டு
"அம்மா இப்போ சந்தோஷமா???" என்று கேட்டான்.


"இப்போ தான் எனக்கு முழுமையாக சந்தோஷமா இருக்கு....." என்ற கனகா


வித்யாவின் புறம் திரும்பி
"ரொம்ப சந்தோஷம் சம்பந்தி....எல்லாம் நல்ல படியாக முடிஞ்சது....அப்புறம் நாங்க வீட்டுக்கு போயிட்டு எங்க குடும்ப ஜோசியர் கிட்ட பேசிட்டு தான் நிச்சயத்துக்கு நாள் பார்க்குறதா இருக்கோம்....
நீங்க நாளைக்கு காலையில வீட்டுக்கு வர முடியும்னா வாங்க....நீங்க வர்ற நாள்ல தான் ஜோசியரையும் வரச் சொல்லணும்...." எனக் கூறவும்


"இதுல என்ன இருக்கு சம்பந்தி?? நீங்க எப்போ வரச்சொல்லுறீங்களோ அப்போ நான் வரப் போறேன்....நாளைக்கு காலையில் வர்றதுனா கூட எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை...." என்று கூறினார் வித்யா.


"சரி சம்பந்தி அப்போ நாளைக்கு காலையில் வந்துடுங்க...." என்று விட்டு ராஜஷேகரும், கனகாவும் வெளியேற கணேஷ் அவர்களை வீட்டு வாயில் வரை சென்று வழியனுப்பி விட்டு வந்தான்.


சரோஜாவின் வீட்டில் இருந்து வெளியேறும் போது அஜய்க்கு ஸ்டேஷனில் இருந்து போன் வரவும் கனகா, ராஜஷேகரிடம் சொல்லி விட்டு அஜய் வேகமாக ஸ்டேஷனை நோக்கி விரைந்தான்.


வந்தவர்களை வழியனுப்பி விட்டு நேராக சரோஜாவைத் தேடி சென்ற கணேஷ் அவளை கிண்டல் செய்யத் தொடங்க சரோஜாவோ வெட்கம் தாளாமல் வித்யாவின் பின்னால் தஞ்சம் புகுந்து கொண்டாள்.


சரோஜாவின் இந்த சந்தோஷம் எப்போதும் போல நீடித்து இருக்குமா என்பது அந்த கடவுள் ஒருவனுக்கே வெளிச்சம்.


ஸ்டேஷனின் முன்னால் பைக்கை நிறுத்தி விட்டு அஜய் ஸ்டேஷனுக்குள் உள் நுழையவும் அவன் முன்னால் மருது வந்து நிற்கவும் சரியாக இருந்தது.


"சொல்லுங்க மருது....நான் சொன்ன பொருள் அங்க இருந்துச்சா??"


"இல்ல ஸார்....அப்படி எதையும் அங்க காணவே இல்லை....."


"எஸ்.....நான் கெஸ் பண்ணது கரெக்ட்....." என்று அஜய் கூறவும் மருது அவனை குழப்பமாக பார்த்தார்.


"உங்களுக்கு ஒண்ணும் புரியல தானே...." என அஜய் கேட்கவும் மருது ஆமென்று தலை அசைத்தார்.


"நம்ம இன்விஸ்டிகேஷன் டைம்ல திரு ஒரு விஷயம் சொன்னாரு....அவங்க வைஃப் மேர்டருக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு கிஃப்ட் யாருனு தெரியாத ஒரு இடத்தில் இருந்து வந்ததுனு....அவங்க வைஃப்க்கு இப்படி அடிக்கடி கிஃப்ட் வரும் அவங்க ஒரு சோஷியல் சர்வீசராக இருக்குறதனாலனு திரு என்கிட்ட சொன்னாரு....அந்த கிஃப்ட் வந்த விஷயத்தை சொன்னவரு அந்த கிஃப்ட்ல எழுதி இருந்த விஷயத்தை நம்ம கிட்ட சொல்லல....ஒரு வேளை அதை அவர் கவனிக்காம விட்டாரோ தெரியல....ஆனா இப்போ அந்த கிஃப்ட் அங்க இல்லை.....ஒண்ணு திரு நம்ம கிட்ட பொய் சொல்லி இருக்கணும்....இல்ல நம்ம தேடிட்டு இருக்குற ஆள் அந்த கிஃப்டை வச்சு அவனை நம்ம கண்டு பிடிச்சுடுவோம்னு மறைச்சு இருக்கணும்....சரோஜா எடுத்து இருப்பான்னு தான் நான் நினைச்சேன்....ஆனா அவ எடுக்கல.....ஷோ இனிமேல் தான் நமக்கு உண்மையாக வேலை தொடங்கப் போகுது...." என அஜய் கூற


"எஸ் ஸார் கூடிய சீக்கிரம் அந்த குற்றவாளியை நம்ம கண்டு பிடிச்சுடலாம்....." என்று மருது கூறினார்.


தன்னுடைய அறைக்குள் வந்து அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்ட அஜய் வெகு நாட்களாக இழந்திருந்த நிம்மதியை மீண்டும் திரும்ப பெற்று கொண்டது போல உணர்ந்தான்.


"இன்னைக்கு சரோஜாவை பார்த்ததும் ஒரு வகையில் நல்லதாக போச்சு....." என அஜய் நினைத்து கொள்ள அவன் மனதோ சரோஜாவைப் பார்த்துப் பேசிய அந்த மணித் துளிகளையே சுற்றி வந்தது.


"நான் அவகிட்ட கேஸ் விஷயமாக தான் அங்க வந்தேன்னு சொன்னதும் அவ முகத்தை பார்க்கணுமே....அப்படியே சுருங்கி போயிடுச்சு.....நான் அங்க போனது என்னவோ அதைப் பற்றி பேசத் தான்....ஆனா அவ கூட பேசுனதுக்கு அப்புறம் என் மனசு மொத்தமாக அவ பக்கம் போயிடுச்சே....என்னை அங்க பார்த்ததும் அப்படியே ஷாக் ஆகிட்டா....இன்னைக்குத் தான் அவளை சரியாக கவனிக்க கிடைச்சது....குறுகுறுனு பார்க்குற அவ கண்ணு....படபடனு பட்டாசு மாதிரி அவ பேச்சு....டென்ஷன்ல தந்தியடிக்குற அவ உதடு...பஞ்சு போல ஷாப்ட்டான அவ கை....கடைசியில் என்னையும் இப்படி வர்ணிச்சு பேச வச்சுட்டாளே......இன்னைக்கு அவளை முதன் முதலா சாரியில் பார்த்ததும் என்னை அறியாமலே என்னை அவ பக்கம் இழுத்துட்டுப் போயிட்டா...அவளைக் கல்யாணம் பண்ணிக்க போறவன் பெரிய தியாகியாக இருப்பான்னு சொன்ன நானே கடைசியில் அந்த பட்டத்தை வாங்கிக்கிட்டேனே.....அய்யோ அய்யோ......" என தன்னை எண்ணி சிரித்துக் கொண்டவன்


"இனி நம்ம வாழ்க்கை காலம் பூராவும் சவுண்ட் சரோஜா கூட தான்....ஏதோ ஒரு மேஜிக் இருக்கு அவ பேச்சுல...." என்று நினைத்தவாறே தன் வேலைகளில் மூழ்கிப் போனான்.


மறுபுறம் சரோஜா அஜயின் சம்மதத்தை எண்ணி வியந்து போய் இருந்தாள்.


"அவரை பழி வாங்க நினைச்சது என்ன?? இப்போ கல்யாணத்துக்கு ஓகே சொன்னது என்ன?? இப்படி ஒரேயடியாக கவுந்துட்டியே சரோஜா....கார்த்திகா சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணி வைஃப்பாக போய் அவரை உண்டு, இல்லைனு பண்ண வேண்டியது தான் போல...." என நினைத்து சிரித்து கொண்ட சரோஜா


"கார்த்திகா கிட்ட இன்னைக்கு பேசவே இல்லையே....நேற்றும் சரியாக அவ கிட்ட பேச கிடைக்கல....இப்போ போன் பண்ணி பேசுவோம்....." என்றவள் தன் போனை எடுத்து கார்த்திகாவிற்கு அழைப்பை மேற்கொண்டாள்.


பலமுறை அழைத்தும் கார்த்திகா போனை எடுக்காமல் இருக்க யோசனையாக போனைப் பார்த்த சரோஜா
"என்ன இவ போனை எடுக்கவே இல்லை??? வேலையாக இருக்காளோ என்னவோ....பரவாயில்லை நாளைக்கு ஆபீஸ் போய் பேசிக்கலாம்....." என்று எண்ணி கொண்டு சரோஜா எழுந்து ஹாலுக்கு சென்று விட மறுபுறம் கார்த்திகா அழுது கொண்டே தன் கையில் இருந்த போனை வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தாள்......
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
இவ்ளோ சீக்கிரம் கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்கன்னு expect பண்ணவே இல்ல. அஜய் ரொம்ப ஸ்ட்ராங் நினைச்சா இப்படி கவுந்துட்டியே பா. கார்த்திகாக்கு என்ன பிரச்சனையா இருக்கும்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top