• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி:love::love::love:1gossip-1532938257.jpg
சரோஜா மற்றும் அஜயின் நிச்சயதார்த்த நாள் இனிதே விடிந்தது.


சரோஜாவின் வீட்டில் கணேஷ் மற்றும் வித்யா அவர்களது உறவினர்களுடன் சேர்ந்து மும்முரமாக வேலைகளை பார்த்து கொண்டிருக்க கார்த்திகாவும், இன்னும் சில பெண்களும் சேர்ந்து சரோஜாவை அலங்கரித்து கொண்டிருந்தனர்.


எல்லோர் முகத்திலும் சந்தோஷம் பரவி இருக்க சரோஜா மாத்திரம் எங்கோ ஓர் மூலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


"சரோஜா.....சரோஜா....." என்று கார்த்திகா சரோஜாவின் தோள் தொட்டு உலுக்க


கனவில் இருந்து விழிப்பது போல பார்த்தவள்
"என்ன....என்ன ஆச்சு???" என்று கேட்டாள்.


"சரி தான்....பொண்ணு இப்போவே கல்யாணக் கனவு காண ஆரம்பிச்சுட்டா போல..." என்றவாறு சரோஜாவை சுற்றி நின்ற பெண்கள் கூறி சிரிக்க சரோஜாவோ அமைதியாக தன் கையில் இருந்த வளையல்களைப் பார்த்து கொண்டு இருந்தாள்.


கார்த்திகா சரோஜாவின் முகத்தை பார்த்து குழப்பத்தோடு மெதுவாக அவள் நெற்றிச்சுட்டியை சரி செய்வது போல குனிந்து அவள் காதில்
"உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா???" என்று கேட்கவும்


அதிர்ச்சியாக அவளைப் பார்த்த சரோஜா
"அடிப்பாவி அப்படி எதுவும் வெளியில் போய் சொல்லிடாதே....இது வேறு யோசனை....அந்த மேர்டர் கேஸ் பற்றி யோசிச்சுட்டு இருக்கேன்...." என்று கூறவும் கார்த்திகா அவளை விசித்திரமாக பார்த்தாள்.


"இன்னைக்கு உனக்கு நிச்சயதார்த்தம்.....இப்போவும் வேலையை பற்றி தானா யோசிக்கணும்?? உன் கடமை உணர்ச்சி எல்லை மீறி போகுது பார்த்துக்கோ.....அந்த, இந்த யோசனை எல்லாம் தூக்கி போட்டுட்டு சந்தோஷமாக சிரிச்ச முகமாக வெளியே வந்து உட்காரணும்....இது மாதிரி பேமிலி, பிரண்ட்ஸ் கூட இருக்க இனி நேரம் கிடைக்குமோ??கிடைக்காதோ?? ஷோ லெட்ஸ் என்ஜாய் மா..... சரியா???" என கார்த்திகா கேட்கவும்
சிரித்துக் கொண்டே சரியென்று தலை அசைத்த சரோஜா அதன் பிறகு அவள் முகத்தில் இருந்த அந்த புன்னகையை மறைய விடவில்லை.


"அஜய் சீக்கிரம் வாடா நேரமாகுது....." என்று கனகா அஜயின் அறைக் கதவை தட்டி கொண்டு நிற்க அஜயோ கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றான்.


"அஜய்....டேய் அஜய்...." என்று கனகா சற்று சத்தமாக அதட்டலாக அழைக்கவும்


சலித்து கொண்டே கதவைத் திறந்தவன்
"என்னம்மா ஆச்சு இப்போ??? கொஞ்ச நேரம் ரெடி ஆக விடாமல் இப்படி பண்ணுற???" என்று கேட்கவும்


அவனை மேலிருந்து கீழாக ஆச்சரியமாக பார்த்த கனகா
"என் பையன் அஜயா இது??? என் கண்ணே பட்டுடும் போல இருக்கே...." என்றவாறே திருஷ்டி கழித்தார்.


மெரூன் நிற சர்ட் மற்றும் சந்தன நிற பேண்ட் அணிந்து, கட்டுக்கு அடங்காமல் அலை பாய்ந்த கேசத்தை ஜெல் இட்டு வாரி, இத்தனை நாட்களாக வெளிக்காட்டி கொள்ளாமல் மறைத்து வைத்திருந்த தன் வசீகர புன்னகையோடு ஆண்மகனுக்கே உரிய கம்பீரத்தோடு நின்ற தன் மகனை பார்த்து கனகா கண் கலங்கி நின்றார்.


"அம்மா லேட் ஆகுதுனு சத்தம் போட்டுட்டு இப்போ இப்படி வந்து நிற்குற....என்ன ஆச்சு மா உனக்கு???" என்று அஜய் கேட்கவும்

சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்த கனகா
"ஒண்ணும் இல்லை....நேரம் ஆகுது... வா போகலாம்..." என்று விட்டு முன்னே செல்ல அஜய் தன் தோளை குலுக்கி கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றான்.


கடந்த ஒரு வாரமாக நிச்சயதார்த்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்க அஜய் தன் தேடுதல் பணியை கை விடவில்லை.


சிறு சிறு விடயத்தை கூட நுணுக்கமாக, உன்னிப்பாக ஆராய்ந்து அதில் ஒவ்வொரு விடயத்தையும் சேகரித்த வண்ணம் சரோஜா ஒரு புறம் இருக்க அஜயோ தோல்விகளைக் கண்டு பின் வாங்காமல் தன் பணியில் முழு மூச்சாக செயல்பட்டுக் கொண்டிருந்தான்.


சாண் ஏறினால் முழம் சறுக்குவது போல ஒவ்வொரு தடயங்களும் சிறிது நேரத்திலேயே ஒன்றும் இல்லாமல் ஆகி விடும் மர்மம் மாத்திரம் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே இருந்தது.


வேலை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க நிச்சயதார்த்த நாளை எண்ணி இருவர் மனமும் சந்தோஷம் கொள்ளாமல் இல்லை.


அன்று சரோஜாவோடு கோபமாக பேசி விட்டு சென்ற பின் அஜயும், சரோஜாவும் பேசிக் கொள்ளவில்லை என்பதை விட இருவருக்கும் பேசுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை என்பது தான் உண்மை.


அன்றைய சம்பவத்தை இருவரும் மறந்து போய் நிச்சயதார்த்தத்திற்காக தயாராகி கொண்டிருக்க அடுத்து விதி அவர்களுக்காக வைத்திருப்பது என்னவோ????


சரோஜாவின் வீட்டின் முன்னால் அஜயின் கார் வந்து நிற்க கணேஷ் முன்னால் வந்து எல்லோரையும் உள்ளே அழைத்து கொண்டு சென்றான்.


"மாப்பிள்ளை நம்ம சரோஜாவுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்காரு...."


"நம்ம சரோஜாவைக் கட்டிக்கப் போற தம்பி இவர் தானா???"


"மாப்பிள்ளை பார்க்க அம்சமாக இருக்காரு....." என சுற்றி நின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக் கொண்டு இருக்க சரோஜாவை கார்த்திகா மற்றும் வித்யா ஹாலுக்கு அழைத்து கொண்டு வந்தனர்.


கடல் நீல நிற பட்டு சேலை அணிந்து, வெண்ணிற முத்து மாலை, முத்து கம்மலோடு, மல்லிகை பூ நிறைத்த ஒற்றை ஜடையை முன்னால் எடுத்து விட்டு தலை குனிந்து சிறிது வெட்கமும், அச்சமும் மனதில் எழ மெல்ல நடந்து வந்த தன் மனதிற்கினிய தேவதையை அஜய் விழி எடுக்காமல் ரசித்து கொண்டிருந்தான்.


ஏனோ சரோஜாவை காணும் போதெல்லாம் அஜயின் மனம் துள்ளிக் குதித்து பரவசமடையும்.


இன்றும் அதே பரவச நிலையில் சரோஜாவை அஜய் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.


ஏற்கனவே பேசியது போல நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடத்த தீர்மானித்து இருந்ததால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ அஜய் மற்றும் சரோஜாவின் நிச்சயதார்த்த வைபவம் ஆரம்பித்தது.


அஜயை நேரில் காணும் வரை அன்றைய சம்பவத்தை மறந்து போய் இருந்த சரோஜா அஜயை கண்டதும் கோபமாக தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.


அஜய் ஆசையாக சரோஜாவின் முகத்தை பார்த்து கொண்டு இருக்க அவளது இந்த திடீர் முகத் திருப்பல் அவன் மனதை வாடச் செய்தது.


பெரியவர்கள் தாம்பூலத் தட்டை பரிமாறிக் கொள்ள சரோஜா மற்றும் அஜயின் நிச்சயதார்த்தப் பத்திரிகை வாசிக்கப்பட்டது.


அஜய் நொடிக்கு ஒரு தடவை சரோஜாவின் முகத்தையே பார்த்து கொண்டு இருக்க சரோஜாவோ வேண்டுமென்றே அஜயை தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் தன் பார்வையை செலுத்தினாள்.


"எனக்கே விளையாட்டு காட்டுறியா???இருக்கட்டும் பார்த்துக்குறேன்....." என மனதிற்குள் நினைத்துக் கொண்ட அஜய் அடுத்த நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.


"இரண்டு பேரும் மோதிரத்தை மாற்றிக்கோங்க...." என்று கனகா கூறவும் சட்டென்று சரோஜா அஜயை நிமிர்ந்து பார்க்க அஜயோ சரோஜாவைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.


"இப்போ எப்படி என்னை அவாய்ட் பண்ணுவ???" என மனதிற்குள் நினைத்துக் கொண்டு சரோஜாவின் அருகில் அஜய் சென்று நிற்க சரோஜாவோ தலை குனிந்து நின்றாள்.


"சரோஜா இப்போ நீ என்னை நிமிர்ந்து பார்க்கலேனா நான் இந்த மோதிரத்தை போட்டு விடமாட்டேன் பரவாயில்லையா???" என மெல்லிய குரலில் அஜய் கேட்கவும்

சரோஜா தன் தலையை நிமிர்த்தாமலேயே
"ஆமா இப்போ மட்டும் பாசமாக சிரிச்சு சிரிச்சு பேசுவாரு....வெளியே பார்த்தா அப்படியே தலைகீழாக மாறி எரிந்து விழுந்து பேசுவாரு....இவர் மாறி மாறி பேசுனா நாங்களும் அப்படியே பின்னாலேயே வந்துடனுமோ....." என்று மெதுவாக அதே நேரம் அஜய்க்கு மட்டுமே கேட்கும் வகையில் கூற அஜய்க்கு அப்போது தான் அவளது கோபத்திற்கான காரணம் புரிந்தது.


சிரித்துக் கொண்டே அவளது முகத்தை பார்த்தவன் ஏதோ கூற வாய் திறக்க
"மோதிரத்தை மாற்ற இவ்வளவு நேரமா??? யப்பா சாமி முடியல....கேமரா மேன் அதற்குள்ள வேறொரு கல்யாண வீட்டுக்கும் போயிட்டு வந்துட்டாரு.....பாவம்யா அந்த மனுஷன்....." என்று கணேஷ் கூறவும்


நாக்கை கடித்து கொண்டு அவர்களை பார்த்து சமாளிப்பாக சிரித்துக் கொண்ட அஜய்
"ஸாரி...ஸாரி கைஸ்...." என்றவாறே சரோஜாவின் கையை பற்றினான்.


சரோஜா வெட்கத்தோடு அவனை நிமிர்ந்து பார்க்க போக அவளது மனமோ
"நோ சரோஜா....கெத்தை மெயிண்டைண்ட் பண்ணு...." என்று அவளை கட்டி போட்டது.


கையை பிடித்த பின்னராவது சரோஜா நிமிர்ந்து பார்க்க கூடும் என்று அஜய் நினைத்து இருக்க அப்போதும் சரோஜா நிமிர்ந்து பார்க்காமல் இருக்க அஜய் அவளது பிடிவாதத்தை பார்த்து ரசித்து சிரித்தான்.


"ச.....ரோஜா....." என்று அஜய் அழைக்கவும் விழி இரண்டும் அகல ஆச்சரியமாக சரோஜா அவனை நிமிர்ந்து பார்க்க அந்த நொடி அவள் மிருதுவான விரல்களில் அஜய் மோதிரத்தை அணிவித்தான்.


சரோஜா நிமிர்ந்து பார்த்ததும் கண்ணடித்து அவளைப் பார்த்து சிரித்துக் கொண்ட அஜய் தன் கையை அவள் புறமாக நீட்டினான்.


கார்த்திகா சரோஜாவின் கையில் மோதிரத்தை கொடுக்க அதை வாங்கி கொண்டவள்
"இந்த ராஜாவுக்கு ஏற்ற ரோஜா யாரோ???" என்றவாறே அவன் விரலில் மோதிரத்தை மாட்டி விட இம்முறை அஜய் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.


அவள் கூறிய வசனத்தையே அஜயின் மனம் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்தது.


"ராஜா...ரோஜா ஒரே ரைமிங் தான்...." என்று கூறி அஜய் சிரிக்கவும் அவனைப் பார்த்து சரோஜாவும் புன்னகைக்க நிச்சயதார்த்த நிகழ்வு இனிதே சிறப்பாக நிறைவுற்றது.


அடுத்த மாதம் முதலாவதாக வரும் நல்ல நாளில் அஜய் மற்றும் சரோஜாவின் திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட மறுபுறம் ஒரு இளவட்டக் கும்பல் சேர்ந்து சரோஜா மற்றும் அஜயை ஒரு வழி செய்து விட்டே விலகினர்.


எல்லோரும் சந்தோஷமாக பேசி கொண்டிருக்க நவீன் மாத்திரம் ஒரு மூலையில் நின்று சரோஜா மற்றும் அஜயை ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு வெளியேறி செல்ல அஜயின் கண்கள் அதை கண்டு கொண்டது.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
"எதுக்கு இவன் இப்படி பார்த்துட்டு போறான்??? ஆளோட முகமே சரி இல்லையே...." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட அஜய் நவீனைப் பின் தொடர்ந்து சென்றான்.


அஜய் வருவதற்குள் நவீன் அவனது பைக்கை எடுத்துக் கொண்டு சென்று இருக்க அஜய் யோசனையோடு நவீன் சென்ற வழியை பார்த்து கொண்டு நின்றான்.


"என்ன ஆச்சு இவனுக்கு?? எதுக்கு இப்படி அவசரமாக போறான்?? எதுவோ சரி இல்லையே....." என்று அஜய் யோசித்து கொண்டிருக்கையில்


"என்ன ஏ.சி.பி ஸார் யோசனை எல்லாம் பலமாக இருக்கு???" என்றவாறு சரோஜா அவன் பின்னால் வந்து நிற்க உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு திரும்பிய அஜய் அவளைக் கேள்வியாக நோக்கினான்.


"மேடம்க்கு என் மேல கோபம் போச்சா??" என அஜய் கேட்கவும்
யோசிப்பது போல பாவனை செய்தவள் மெது மெதுவாக நடந்து முல்லைப் பந்தலின் அருகில் சென்று நின்றாள்.


அஜயும் சரோஜாவைப் பின் தொடர்ந்து வந்து நிற்க சரோஜா அஜயை திரும்பி பார்த்து
"கோபம் இன்னும் இருக்கு....ஆனா போனா போகுதுனு உங்களை மன்னிச்சு விடுறேன்....." என்று கூறவும்


"என்ன ஒரு தாராள மனசு???" என்றவாறு அஜய் அவளின் அருகில் வந்து நின்றான்.


அஜய் தன்னருகில் வந்து நிற்கவும் சரோஜாவின் இதயம் தாளம் தப்பி ஆட்டம் கண்டது.


படபடக்கும் விழிகளோடு அஜயை சரோஜா நிமிர்ந்து பார்க்க அவளது வெட்கச் சிவப்பு அஜயை கிறங்கடிக்கச் செய்தது.


"ஆமா உள்ளே வைச்சு நான் உன்னை ரோஜானு சொல்லவும் ஏன் அப்படி பார்த்த??"


"எனக்கு நினைவு தெரிந்து என் அப்பா மட்டும் தான் என்னை அப்படி கூப்பிடுவாங்க....இன்னைக்கு அப்பாவை நினைத்து தான் அங்கே நின்னேன்....நீங்க அப்படி சொல்லவும் எனக்கு அந்த இடத்தில் அப்பா தான் ஞாபகம் வந்தாரு....அது தான் அப்படி பார்த்தேன்...." என சரோஜா புன்னகையுடன் கூற


இன்னும் அவளை நெருங்கி நின்ற அஜய் அவள் காதோரமாக குனிந்து
"இந்த ராஜாவுக்கு ஏற்ற ரோஜா என் கையில் தான் இருக்கு....." என்று கூற சரோஜா அவன் கைகளை குனிந்து பார்த்தாள்.


ஒற்றை நொடியில் சரோஜாவை அஜய் அவன் கைகளில் ஏந்தி கொள்ள சரோஜா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.


"ச.....ரோஜா இப்போ என் கையில்....." என அஜய் கூறவும் வெட்கத்தோடு அவனிடமிருந்து துள்ளி இறங்கியவள்


தன் பதட்டத்தை காட்டிக் கொள்ளாமல்
"ஏ.சி.பி ஸார் இவ்வளவு ரொமாண்டிக்னு தெரியாம போச்சே....." என்று சிரித்துக் கொண்டே கண்ணடித்து கூறி விட்டு அவனைத் தாண்டி ஓடி செல்லப் போக அஜயின் வலிமையான கரங்கள் அவளது இடையை வளைத்து பிடித்தது.


சரோஜா பதட்டத்துடன் அஜயை பார்க்க ஒற்றை இழுப்பில் அவளைத் தன்னருகில் கொண்டு வந்தவன்
"இந்த ஏ.சி.பி யோட ரொமான்ஸை போகப் போக நீ பார்ப்ப....." என்றவாறே கள்ளத்தனமாக சிரித்துக் கொண்டு அவள் இதழை நெருங்க சட்டென்று அவனைத் தள்ளி விட்டவள் வெட்கம் தாளாமல் வீட்டினுள் ஓடிச்சென்றாள்.


அஜய் புன்னகையோடு தன் தலை முடியை கோதிக் கொண்டு அந்த முல்லைப் பந்தலில் இருந்து வந்த நறுமணத்தை ஆழ்ந்து ரசித்து சுவாசித்துக் கொண்டு நின்றான்.


"காதல் வந்தால் சின்ன சின்ன மாற்றங்களையும் ரசிக்க தோணும்னு சொல்லுவாங்க....அப்போ சரோஜா மேல் எனக்கு காதல் வந்திடுச்சா???" என்று யோசித்து பார்த்த அஜய் சரோஜாவை முதல் முதலாக பார்த்த அந்த நாளை எண்ணி ரசித்தது.


"பார்த்த முதல் நாளே என் மனசுல அவ உள் நுழைந்து இருக்கா....அது தெரியாமல் நான் சுற்றிட்டு இருந்திருக்கேன்.....வெளியே கேஸ் டென்ஷன் தலையை உடைத்து போடுற அளவுக்கு இருந்தும் சரோஜா என் கூட இருக்குற இந்த நேரம் எவ்வளவு நிம்மதியாக இருக்கு......இதை புரிஞ்சுக்காம சரோஜாவைத் திட்டிட்டியே அஜய்...எப்படி எல்லாம் திட்டி இருக்க...." என்று தன்னை தானே கடிந்து கொண்டவன் (சரோஜா அவனை விதம் விதமாக திட்டியது அவனுக்கு தெரியாதே) வீட்டிற்குள் செல்ல எண்ணித் திரும்புகையில் அவன் முன்னால் கணேஷ் வந்து நின்றான்.


"ஹாய் கணேஷ்....என்ன இந்த பக்கம்??"


"அது வந்து மாமா....அது....உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்....தனியா பேசணும்....."


"அதற்கென்ன பேசலாமே.....சொல்லு என்ன விஷயம்???"


"அது....அது மாமா....இந்த விஷயம் நம்ம இரண்டு பேரைத் தவிர வேற யாருக்கும் தெரிய கூடாது....சரியா???"


"என்ன சஸ்பென்ஸ் எல்லாம் ரொம்ப பலமாக இருக்கு??? சரி ப்ராமிஸா நம்ம இரண்டு பேரைத் தவிர நீ சொல்லப் போற விஷயம் வேறு யாருக்கும் தெரிய வராது போதுமா???" என்றவாறு கணேஷின் கையின் மேல் அஜய் தன் கையை வைத்து கூற


"தாங்க்ஸ் மாமா....ரொம்ப தாங்க்ஸ்...." என்று கூறிய கணேஷ் சுற்றிலும் பார்த்து விட்டு அஜயை சற்று தள்ளி அழைத்து சென்றான்.


"யாரும் பார்த்துடுவாங்க மாமா....அது தான் இங்க கூட்டிட்டு வந்தேன்...."


"நான் சொல்லப் போறது சின்னப் பிள்ளை தனமான விஷயமாக உங்களுக்கு தெரியலாம்....ஆனா இது சரோஜாவோட வாழ்க்கை சம்பந்தப்பட்டது....சரோஜாவுக்கு பயம் கொஞ்சம் அதிகம்....இருட்டு, பேய் இது இரண்டும் அவளுக்கு ரொம்ப பயத்தை கொடுக்குற விஷயம்....சரோஜா நிறைய யோசிப்பா....அவ செய்யுற வேலையும் நிறைய வித்தியாசமான விஷயத்தை உள்ளடக்கிய வேலை....சின்ன வயதிலிருந்தே சரோஜா நைட் ஆனா கனவு கண்டு பயப்படுவா....ஆரம்பத்தில் நானும் சரி அம்மாவும் சரி பெரிதாக இதை கவனிக்கல...ஆனா இப்போ அவ அடிக்கடி பயப்பட ஆரம்பிச்சுட்டா....அப்படி பாதி தூக்கத்தில் அவ எழுந்தா அவ பக்கத்தில் கண்டிப்பாக யாராவது இருக்கணும்....இல்லேனா அவ பயத்தில் மயக்கம் போட்டுடுவா....இந்த விஷயம் அம்மாவுக்கு கூட
தெரியாது....ஒரே ஒரு தடவை இப்படி ஆகி இருக்கு....வியர்த்து கொட்டி டென்ஷன் ஆகி அவ கொஞ்ச நேரம் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டா....அம்மா இதைப் பெரிதாக எடுத்துக்கல....அவ பேய் படம், புக் படிக்குறதால அப்படி நினைத்து இருக்கானு அவங்க நினைச்சு இருக்காங்க....ஆனா இது சரோஜாவோட வாழ்க்கை விஷயம் என்னால சாதாரணமாக விட முடியல....அது தான் உங்க கிட்ட சொல்றேன்....எனக்கு எங்க அக்கா தான் எல்லாம்....சண்டை போடுறதுல இருந்து எனக்கு ஒண்ணுனா ஓடி வர்ற வரைக்கும் அவ தான் எல்லாம்....இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் சரோஜா உங்க பொறுப்பு....நீங்க தான் அவளை பத்திரமாக பார்த்துக்கணும்......" என கணேஷ் கூறவும்


அவன் தோளில் ஆதரவாக கை போட்டு கொண்ட அஜய்
"நான் இன்னைக்கு சரோஜாவோட கை பிடித்து மோதிரம் போட்ட அந்த செக்கனே அவளை என் பொறுப்பாக மனசார ஏற்றுக்கிட்டேன்....இனி நடக்க போறது நம்ம பாரம்பரிய சம்பிரதாயம்....இனி சரோஜா பற்றி எந்த கவலையும் உனக்கு வேண்டாம்....சரோஜா இனி என் பொறுப்பு...." என்று கூற


"தாங்க்ஸ் மாமா.....தாங்க்ஸ்...தாங்க்ஸ்...." என்றவாறே கணேஷ் அஜயை அணைத்துக் கொண்டான்.


"சரி வா உள்ளே போகலாம்....." என்று விட்டு அஜயும், கணேஷும் வீட்டினுள் சென்று விட அங்கிருந்த மரத்தின் பின்னால் நின்ற ஒரு உருவம் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடி சென்றது.


சிறிது நேரத்தில் அஜயின் குடும்பத்தினர் புறப்பட்டு சென்று விட சரோஜா தன் அலங்காரங்கள் எல்லாவற்றையும் கலைந்து விட்டு சாதாரண காட்டன் சுடிதாருக்கு மாறி தன் ஹேண்ட் பாக்கை எடுத்துக்கொண்டு வந்தாள்.


"எங்க சரோஜா கிளம்பிட்ட?? நிச்சயதார்த்தம் நடந்த அன்னைக்காவது வீட்டில் இருக்கக் கூடாதா???" என்று வித்யா கேட்கவும்


தன் போனை எடுத்து எதையோ சரி பார்த்து கொண்ட சரோஜா
"அம்மா....ஒரு சின்ன வேலை...ஒரு மணி நேரத்தில் வந்துடுவேன்...வரேன் மா..." என்று விட்டு தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சென்று விட


"சொல்றதை காதில் வாங்காமலே போறதை பாரு....இன்னைக்கு வா உனக்கு இருக்கு...." என்றவாறே வித்யா வீட்டு வேலைகளை கவனிக்க தொடங்க மறுபுறம் அஜய் ஸ்டேஷனுக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தான்.


"இன்னைக்கு கண்டிப்பாக நீ போய் ஆகத்தானா வேணும்??" என்று கனகா அஜயை பார்த்து கேட்கவும்


அவர் கன்னத்தை பிடித்து ஆட்டிய அஜய்
"அம்மா.....கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியாவது இந்த கேஸை முடிக்கணும்னு ஒரு வேகத்தோடு வேலை பார்த்துட்டு இருக்கேன்....நீ இப்படி நடு நடுவில் சடன் பிரேக் போட்டு என் வேகத்தை குறைக்கப் பார்க்காதேமா....." என்று விட்டு அவரது கன்னத்தை தட்டி விட்டு சென்று விட கனகா புன்னகையோடு அஜயை பார்த்து கொண்டு நின்றார்.


ஸ்டேஷனுக்கு வந்த அஜய் ஏற்கனவே மனதில் கணக்கு போட்டு வைத்திருந்த வேலைகளை எல்லாம் மற்ற காவலர்களுக்கு பொறுப்பு கொடுத்து விட்டு தன்னுடைய வேலைகளை கவனிக்க தொடங்கினான்.


அஜய் ஸ்டேஷனில் மும்முரமாக தன் வேலைகளை பார்த்து கொண்டிருக்க மறுபுறம் சரோஜா துப்பட்டாவால் தன் முகத்தை மறைத்து கொண்டு வேகமாக ஸ்கூட்டரில் ஒரு காரைப் பின் தொடர்ந்து பறந்து சென்று கொண்டிருந்தாள்.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top