• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி.....
MV5BMzA3NjNmMjAtNDMwMS00YWVjLThmMGMtZDZiNDYwYzJkYjY3XkEyXkFqcGdeQXVyODc2MzQyNzc@._V1_.jpg
அன்னை இல்லத்தின் முன்னால் போலீஸ் வாகனமும், மீடியா வாகனங்களும் குவிந்து நிற்க அஜய் மற்றும் சரோஜா அந்த இடத்தை வந்து சேர்ந்தனர்.


ராஜஷேகர் யோசனையோடு ஒவ்வொரு இடமாக பார்த்து கொண்டு வர சரோஜா அஜயை பின் தொடர்ந்து சென்றாள்.


லலிதாவின் அறையில் கதிரையில் அமர்ந்த நிலையிலேயே லலிதா இறந்து கிடக்க அங்கிருந்த குழந்தைகள் எல்லோரையும் காவல்துறையினர் அந்த அறைக்குள் நுழைய விடாமல் மற்றைய புறமாக அழைத்து கொண்டு சென்றனர்.


லலிதா இறந்து கிடந்த நிலையை பார்த்து சரோஜாவிற்கு தலை சுற்றுவது போல இருக்கவே அஜயின் கைகளை பற்றி கொண்டவள் அஜயுடன் சேர்ந்து லலிதாவின் உடலின் அருகில் சென்றாள்.


அஜய் கையை முன்னே நீட்டுவதற்காக தன் கையை எடுக்கப் பார்க்க அவனது கையை எதுவோ பலமாக பற்றி இருந்தது.


அஜய் குழப்பமாக திரும்பி பார்க்க சரோஜா ஒரு கையால் அவனது கையை இறுக்கமாக பற்றி கொண்டு மறு கையால் மேஜை மேல் எதையோ மும்முரமாக பார்த்து கொண்டு நின்றாள்.


"க்கும்....." என அஜய் தொண்டையை செரும


அவனை நிமிர்ந்து பார்த்த சரோஜா
"என்ன தண்ணீர் வேணுமா???" என்று கேட்டாள்.


அஜய் குனிந்து தன் கைகளை பற்றி இருந்த சரோஜாவின் கையை பார்க்கவும் நாக்கை கடித்து கொண்டு சமாளிப்பாக அவனை பார்த்து புன்னகத்தவள் மெல்ல அவன் கையில் இருந்த தன் கையை விலக்கி எடுத்தாள்.


அந்த அறையிலும் தடயங்கள் சேகரிப்பு பணி தொடங்கி விட அஜய் விசாரணைக்காக அங்கே இருக்கும் வாட்ச்மேனைத் தேடி சென்றான்.


லலிதாவின் உடலின் அருகிலேயே சுற்றி வந்த சரோஜா அவரது கை இறுக மூடி இருப்பதை பார்த்து அதை திறக்க முயற்சி செய்தாள்.


சிரமப்பட்டு அவரது கையை திறந்தவள் அதனுள் இருந்த பொருளை பார்த்து அதிர்ச்சியாகி நிற்க மறுபுறம் அஜய் வாட்ச்மேனை துருவி துருவி விசாரித்துக் கொண்டு நின்றான்.


வாட்ச்மேன் தனக்கு தெரிந்த விடயங்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் அவற்றை எல்லாம் குறித்து கொண்ட அஜய் மீண்டும் லலிதாவின் ஆபீஸ் அறையை நோக்கி சென்றான்.


சரோஜாவின் அருகில் வந்த கார்த்திகா அவளது தோளில் தட்டவும் திடுக்கிட்டு அவளைத் திரும்பி பார்த்த சரோஜா லலிதாவின் கையை நோக்கி தன் கையை காட்டினாள்.


"என்ன இது??? டாலர் மாதிரி இருக்கு??" எனக் கேட்ட கார்த்திகா உடனடியாக ராஜஷேகரை அழைத்து கொண்டு வந்தாள்.


அவர்கள் அருகில் வந்த ராஜஷேகர் லலிதாவின் கையில் இருந்த டாலரை எடுத்து பார்த்தார்.


"இது அந்த கொலைகாரனோட டாலராக இருக்கலாம்னு நினைக்குறேன்....தன்னை காப்பாற்றிக் கொள்ளுவதற்காக இவங்க சண்டை போடும் போது வந்து இருக்கலாம்...." என ராஜஷேகர் கூறவும்


"ஆனா அவ்வளவு ஈஸியாக அந்த கொலை காரன் தடயங்களை விட்டுட்டு போறவன் இல்லையே...." என்றவாறே அஜய் அவரின் முன்னால் வந்து நின்றான்.


"எதை வைத்து நீ அப்படி சொல்லுற அஜய்???"


"சாதாரண கிஃப்ட் ராப்பிங் பேப்பரில் கூட கை ரேகை படாமல் கொடுத்து விட்டவன் இப்படி தடயத்தை விட்டு போக கூடுமா??? ஆனா இருந்தாலும் நமக்குன்னு ஒரு நடைமுறை இருக்கே....ஷோ நீங்க இதை மேற்கொண்டு என்ன செய்யணுமோ அதை பண்ணுங்க...." என்று விட்டு திரும்பி நடந்தவன் ஏதோ நினைவு வந்தவனாக மீண்டும் ராஜஷேகரின் அருகில் வந்தான்.


தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து ராஜஷேகரிடம் கொடுத்தவன்
"இது திருவோட வீட்டில் எனக்கு கிடைச்சது....இதையும் பொரசஸ்க்கு அனுப்பி விடுங்க....ரிசல்ட் கொஞ்சம் அவசரமாக கிடைக்குற மாதிரி பண்ணுங்க...." என்று விட்டு சென்று விட ராஜஷேகர் அடுத்த கட்ட வேலைகளை தன் பணியாளர்களோடு சேர்ந்து திட்டமிடத் தொடங்கினார்.


ஸ்டேஷனுக்கு வந்த அஜய் தன் தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு எதிரில் இருந்த மேஜையை வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தான்.


"எந்த ஒரு கேஸும் இவ்வளவு தலைவலியை எனக்கு தந்தது இல்லை.....இந்த ஒரு கேஸ் ஏன் இவ்வளவு மர்மமாக இருக்கு??? இதற்கு எல்லாம் காரணம் யாரு??? அவங்க நோக்கம் என்ன??? சே.....ஒரு சின்ன ஐடியா கூட வரலயே....." என அஜய் தனக்குள்ளேயே கேள்வி கேட்டு கொண்டிருக்க மறுபுறம் சென்னை விமான நிலையத்தில் லண்டனில் இருந்து வந்த விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.


கையில் அசாதாரணமாக கிடந்த கோர்ட்டை எடுத்து மறு கையில் போட்டு கொண்டே சட்டையில் மாட்டி இருந்த கூலிங் கிளாஸை எடுத்து அணிந்து கொண்டு ஒற்றை கையால் காற்றில் அலை பாய்ந்த முடியை கோதி விட்டுக் கொண்டே தன் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வேகமாக படியிறங்கி வந்தவனைப் பார்த்து
"ஹலோ சித்தார்த்....." என வேகமாக கையசைத்தார் முன்னாள் எம்.எல்.ஏ வாஞ்சிநாதன்.


"ஹாய் டாட்...." என்றவாறே அவரின் அருகில் வந்து அவரை அணைத்துக் கொண்டவன்


"ஹவ் ஆர் யூ டாட்??? மாம் வரலயா???" எனக் கேட்டான்.


"அவ இங்க வந்தா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஒரு வழி பண்ணிடுவா....அது தான் நான் மட்டும் வந்தேன்....நீ எப்படி டா இருக்க???"


"ம்ம்ம்ம்ம்ம்....நீங்களே சொல்லுங்க நான் எப்படி இருக்கேன்???" என்று கேட்ட சித்தார்த்தைப் பார்த்த வாஞ்சிநாதன் கூட ஒரு கணம் பெருமை பட்டு கொண்டார்.


ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்தில் கட்டுக்கோப்பாக வைத்திருந்த உடல் வாக்கோடு முகம் நிறைந்த புன்னகையோடு நிற்கும் தன் மகனின் தோளில் தட்டி
கொடுத்த வாஞ்சிநாதன்
"உனக்கு என்னப்பா??? ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாட்டம் அம்சமாக இருக்கே..." எனவும்


"அய்யோ....இந்த வசனம் மட்டும் சித்ரா காதில் விழுந்ததுனா வீட்டை இரண்டாக்கிடுவா....அவன் மட்டும் தானா உங்களுக்கு பிள்ளையானு கேட்டு காதை பஞ்சராக்கிடுவா....." என்று சிரித்துப் பேசிக் கொண்டே சித்தார்த்தும், வாஞ்சிநாதனும் கார் பார்க்கிங் அருகில் வந்து சேர்ந்தனர்.


"டிரைவர் இந்த லக்கேஜ் எல்லாம் எடுத்து வை...." என்று கட்டளையிட்ட வாஞ்சிநாதனைப் பார்த்து புன்னகத்து கொண்டே சித்தார்த் வண்டியில் ஏற சிறிது நேரத்தில் ஒரு அரண்மனை போன்ற வீட்டின் முன்னால் அந்த கார் சென்று நின்றது.


"சித்து கண்ணா....." என்று சந்தோஷமாக கூறிய வண்ணம் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த தன் அன்னை ருத்ராவை பார்த்ததும் சித்தார்த் ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டான்.


"ம்மா.....எப்படி ம்மா இருக்க??"


"நான் ரொம்ப நல்லா இருக்கேன்டா கண்ணா....நீ தான் ரொம்ப இளைச்சு போயிட்ட பாரு....."


"ஹா ஹா ஹா.....எந்த பிள்ளை ஊரில் இருந்து வந்தாலும் அம்மா எல்லோரும் சொல்லுற இந்த வசனம் மட்டும் இன்னும் மாறவே இல்லை....இல்லையாப்பா???" என்றவாறு சித்தார்த் திரும்பி வாஞ்சிநாதனைப் பார்க்க அவர் மும்முரமாக போனில் யாரிடமோ பேசி கொண்டு நின்றார்.


"உங்க அப்பா போன் பேச தொடங்கிட்டாரு....இனி அவருக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவுமே தேவை இல்லை....நீ வாடா கண்ணா நாம உள்ளே போகலாம்...." என்று விட்டு ருத்ரா சித்தார்த்தின் கை பிடித்து அழைத்து செல்ல


"எங்க நம்ம வீட்டு அல்லிராணி??? காலேஜ் போயிட்டாளா???" என்று தன் அன்னையுடன் பேசிக் கொண்டே சித்தார்த் வீட்டிற்குள் சென்றான்.


"ஒரு வேளை உருப்படியாக பண்ணத் தெரியல....உங்களை எல்லாம் இன்னும் வேலைக்கு வைத்திருக்கேனே என்னை சொல்லணும்....போனை வை....ஈவ்னிங் வந்து பேசுறேன்....." என்ற வாஞ்சிநாதன் கோபமாக தன் போனை கட் செய்து விட்டு வீட்டினுள் சென்ற தன் மகனையும், மனைவியையும் பார்த்து கொண்டு நின்றார்.


வாஞ்சிநாதன் முன்னாள் எம்.எல்.ஏ.
பதவியில் இருந்த காலத்தில் எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒரு உயர்ந்த மனிதர்.


பல விதமான சேவைகளை மக்களுக்காக செய்து கொடுத்து மக்களின் நன் மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர் என்றால் மிகையாகாது.


சித்தார்த் மற்றும் சித்ரா தான் அவரது சகல விதமான சொத்துக்களுக்கும் ஏக போக வாரிசுகள்.


வாஞ்சிநாதன் தன் கட்சியில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக அரசியல் வாழ்க்கையை முழுக்குப் போட்டு விட்டு அவரது பரம்பரை சொத்துக்களைக் கண்காணிக்கும் பொறுப்புகளை கையில் எடுத்தார்.


சித்தார்த் லண்டனில் எம்.பி.ஏ முடித்து விட்டு இந்தியாவில் இருக்கும் அவர்களது பரம்பரை சொத்தான ஸ்டீல் பக்டரியை பொறுப்பு எடுக்க தற்போது இங்கே வந்துள்ளான்.


சித்தார்த் மற்றும் வாஞ்சிநாதனின் வருகை இங்கே நன்மைக்காகவா?? தீமைக்காகவா?? காலம் வைத்திருக்கும் மர்மம் எதுவோ???


எம்.ஆர் டிடெக்டிவ்ஸ் என்றும் இல்லாமல் அன்று வெகு மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது.


சரோஜா மற்றும் கார்த்திகா இந்த கொலை வழக்கு சம்பந்தமாக மும்முரமாக
கலந்துரையாடிக் கொண்டிருக்க நவீன் அவர்கள் இருவருக்கும் அருகில் வந்து நின்றான்.


கார்த்திகா நவீனைப் பார்த்து விட்டு தன் முகத்தை திருப்பிக் கொள்ள சரோஜா நவீனை பாவமாக பார்த்து கொண்டு இருந்தாள்.


சவரம் செய்யப்படாத முகத்தோடு கண்களின் கீழ் சுருக்கமும், கருவளையமும் சூழ்ந்து ஒரு கணம் இது நவீன் தானா என்று யோசித்து பார்க்கும் அளவுக்கு நின்றவனைப் பார்க்க சரோஜாவிற்கு என்னவோ போல் ஆனது.


"என்ன....என்னாச்சு நவீன்???" என சரோஜா கேட்கவும்


கார்த்திகாவின் புறம் இருந்து தன் பார்வையை சிரமப்பட்டு சரோஜாவின் புறம் திருப்பிய நவீன்
"அந்த கேஸ் பைலை கொஞ்சம் தர முடியுமா?? சில டீடெய்ல்ஸ் பார்க்கணும்..."


"யா...ஸ்யூர்....இந்தாங்க...."


"தாங்க்ஸ்...." என்றவன் அவர்களை திரும்பியும் பார்க்காமல் சென்று விட சரோஜா கார்த்திகாவை திரும்பி பார்த்தாள்.


"நவீன் போயிட்டார்....." என சரோஜா கூறவும் அவளை நிமிர்ந்து பார்த்த கார்த்திகாவின் கண்கள் இரண்டும் கலங்கி இருந்தது.


"ஹேய்....என்னாச்சு????" என சரோஜா கேட்கவும்


அவள் கைகளை பற்றி கொண்ட கார்த்திகா
"எனக்கு கில்டியா இருக்கு சரோஜா....என்னால தானே நவீன் இப்படி ஆகிட்டாரு....யார் கூடவும் பேசாமல் எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்காரு....." என்று கூற


"ஓஹ்.....அப்படியா விஷயம்?????" என சரோஜா கேட்க கார்த்திகா அவளை முறைத்து பார்த்தாள்.


"நீ நினைக்குற மாதிரி எதுவும் இல்லை....நான் போறேன் போ...." என்று விட்டு கார்த்திகா எழுந்து செல்ல


"எத்தனை நாள் இப்படி ஓடி ஒளியுறேன்னு பார்க்குறேன்...." என்று சிரித்துக் கொண்ட சரோஜா மீண்டும் தன் வேலைகளில் மூழ்கி போனாள்.


நாட்கள் அதன் பாட்டில் கால்களில் சக்கரத்தை கட்டி கொண்டவாறு வெகு வேகமாக ஓடிக்கொண்டிருக்க அனைவரும் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தட்டுத் தடுமாறி ஓடி கொண்டிருந்தனர்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சரோஜா மற்றும் அஜயின் திருமணத்திற்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சி இருக்க அஜய் அதை முழுமையாக சந்தோஷமாக அனுபவிக்கும் மனநிலையில் இல்லை.


மர்மமான கொலை வழக்கு என்றே ப்ரியா மற்றும் திருவின் கொலையை மக்கள் எல்லோரும் இந்த நாட்களில் அழைக்க ஆரம்பித்தனர்.


கண்டு பிடிக்கும் தடயங்கள் எல்லாம் எந்த வகையிலும் பயனற்றதாக போய் கொண்டிருக்க மேல் இடத்தில் இருந்து அஜய்க்கு தொடர்ந்து அழுத்தம் வந்து கொண்டே இருந்தது.



"அஜய் நீங்க எந்த கேஸையும் ஈஸியாக கையாளுவீங்கனு தான் இந்த கேஸை உங்க கிட்ட தந்தோம்....ஆனா நீங்க எந்த ஒரு தகவலும் இன்னும் கண்டு பிடிக்கல...இன்னும் உங்களுக்கு ஒரு மாதம் தான் டைம்....அதற்குள்ள இந்த கேஸை முடிக்க பாருங்க....இல்லேனா நான் வேற யாருக்கும் இந்த கேஸை மாற்றி கொடுக்க வேண்டி வரும்...." என்று காலையில் டி.ஐ.ஜி அஜயை சந்தித்து கூறியதையே நினைத்து கொண்டு தெரு ஓரமாக இருந்த மரத்தில் சாய்ந்து நின்றவன் தன் எதிரில் வந்து ஒரு கார் நின்றதையோ அதிலிருந்து வாஞ்சிநாதன் அவனை பார்த்து விட்டு சென்றதையோ அவன் கவனிக்கவில்லை.


பக்டரிக்குள் நுழைந்து ஒவ்வொரு பகுதியாக பார்த்து கொண்டு சென்ற வாஞ்சிநாதன்
"எப்படியோ இன்னும் கொஞ்ச நாள்ள நீ வெளியில் வந்துடலாம்...." என்று போனில் பேசி கொண்டே சித்தார்த்தின் அறையைக் கடந்து செல்ல சித்தார்த் அவரை குழப்பமாக பார்த்து கொண்டு இருந்தான்.


"அப்பா அடிக்கடி யாரு கிட்ட பேசிட்டு இருக்காங்க??? எதுவோ சரி இல்லை....பார்க்கலாம்...என்ன நடக்குதுனு கண்டுபிடிக்குறேன்....." என்று நினைத்துக் கொண்ட சித்தார்த் மீண்டும் தன் கையில் இருந்த பைலை புரட்டிப் பார்க்கத் தொடங்கினான்.


சரோஜா ஆபீஸ் செல்வதற்காக தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய வித்யா அவளின் முன்னால் வந்து நின்றார்.


"கல்யாணத்துக்கு இன்னும் ஐந்து நாள் தான் இருக்கு...இப்போவும் ஆபீஸ் போகணுமா??? உள்ளே போ சரோஜா...."


"அம்மா....வேலைக்கு போகும் போதே இப்படி சொன்னா போற காரியம் சரி வருமா சொல்லு....இன்னைக்கு லீவு லெட்டர் கொடுத்துட்டு ஒரு சின்ன வேலை இருக்கு....அதையும் முடிச்சுட்டு வரத் தான் போறேன்....இப்போ வழி விடும்மா ப்ளீஸ்...." என சரோஜா கெஞ்சலாக கேட்கவும்


சிறிது யோசித்து விட்டு வண்டியை விட்டு தள்ளி நின்ற வித்யா
"சாயங்காலம் நான்கு மணிக்கு எல்லாம் வீட்டில் இருக்கணும் பார்த்துக்கோ....பத்திரமாக போயிட்டு வா...." என்று கூற


"தாங்க்ஸ் டியர் மம்மி..." என வித்யாவின் கன்னத்தில் தட்டி விட்டு சரோஜா செல்ல வித்யா சரோஜா சென்ற பாதையை பார்த்து கொண்டு நின்றார்.


"ஏன் எனக்கு இப்படி மனசு கிடந்து அடிச்சுக்குது...ஒரு வேளை எதுவும் பெரிய பிரச்சினை வரப்போகுதா.....சே..சே...அப்படி எதுவும் ஆகாது..." என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு வித்யா வீட்டினுள் நுழைந்து கொள்ள மறுபுறம் சரோஜாவை பின் தொடர்ந்து ஒரு வேன் சென்று கொண்டிருந்தது.


வேலை எல்லாவற்றையும் முடித்து விட்டு தன் பைல்களை எல்லாம் அடுக்கி வைத்த சரோஜா மாலை நான்கு மணி அளவில் ஆபீஸிலிருந்து தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி புறப்பட்டாள்.


வழக்கம் போல அவளது தெருவிற்குள் நுழையும் போது அந்த பங்களாவின் புறம் தன் பார்வையை திருப்பியவள் சட்டென்று தன் ஸ்கூட்டரை நிறுத்தினாள்.


அந்த வீட்டின் தோற்றம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டிருக்க சரோஜாவின் விழிகள் ஆச்சரியமாக அந்த வீட்டை அளவிட்டது.


புதிதாக பூச்சு பூசப்பட்டு இலை உதிர்ந்து நின்ற மரங்கள் எல்லாம் இளந்தளிரை ஏந்தி வீட்டின் முன்னால் இருந்த நீர்த் தடாகம் நீரை வாரி இறைக்க அந்த வீடு முழுவதும் ஒரு கலைநயம் கொட்டிக் கிடந்தது.


"பேய் பங்களாவா இது??? அடையாளமே மாறிடுச்சே...." என்று தனக்குள்ளேயே கூறி கொண்டு சரோஜா தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சென்று விட காலையில் அவளை பின் தொடர்ந்து சென்ற அதே வேன் அந்த தெரு ஓரமாக நின்று கொண்டிருந்தது.


அஜய் தன் கையில் இருந்த பைலை பார்த்து புன்னகத்து கொண்டே
"இனி நீ எப்படி தப்பிக்குறேன்னு பார்க்குறேன்....இத்தனை நாளாக எல்லோரையும் முட்டாள் ஆக்கிட்ட....இனி அது நடக்காது..." என்று கூறியவன் அந்த பைலை எடுத்து கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தான்.


"மருது.....ஒரு வாரம் நான் ஸ்டேஷனுக்கு வரமாட்டேன்....இந்த பைல் என் கிட்டயே இருக்கட்டும்...அந்த கொலையாளி யாருனு கண்டுபிடிச்சாச்சு.....ஒரு வாரம் கழித்து வந்து அந்த கிரிமினலை அரஸ்ட் பண்ண ஏற்பாடு பண்ணுறேன்...டேவிட் கிட்ட இதை சொல்லிடுங்க....." என்று விட்டு அஜய் சென்று விட


"ஏன் ஒரு வாரம்?? இப்போவே அரஸ்ட் பண்ணா என்ன??? என்னாச்சு இவருக்கு???" என மருது யோசித்த வண்ணம் நிற்க அஜய் வெற்றி களிப்போடு தன் வீட்டை வந்து சேர்ந்தான்.


"அம்மா ஒரு வாரம் லீவு போட்டாச்சு....இப்போ சொல்லுங்க நான் என்ன பண்ணணும்???" என்றவாறே கனகாவின் அருகில் அஜய் அமர்ந்து கொள்ள


அவனை விசித்திரமாக பார்த்த கனகா
"நிஜமாகவே லீவு போட்டுட்டியா??? நம்ப முடியலயே...ஏதாவது
எடக்கு மடக்காக பிளான் போட்டு இருக்கியா???" என கேட்கவும்
அவரைப் பார்த்து புன்னகத்து கொண்டே அஜய் எழுந்து சென்று விட கனகா அஜயை விழியகலாமல் பார்த்து கொண்டு இருந்தார்.


"ஏதோ பிளான் பண்ணிட்டான்....காரணம் இல்லாமல் இவன் இப்படி லீவு போட மாட்டானே....அதுவும் ஒரு வாரம்....ஏதோ நடக்க போகுது....இரு மகனே உன்னை கவனிச்சுக்குறேன்...." என்று விட்டு கனகா மீண்டும் தன் வேலைகளை கவனிக்க தொடங்க அஜய் தன் அறையின் பின்புறமாக வந்து நின்றான்.


"ஸ்டேஷனில் வெடியை பற்ற வைச்சாச்சு...இதற்கு யாரு நம்ம ஸ்டேஷன்ல இருந்து துணை போறாங்கனு கண்டு பிடிக்கிறேன்.....இன்னைக்கு நைட் கண்டிப்பாக இந்த பைலை எடுக்க யாராவது வருவாங்க....இல்ல இல்ல வரணும்...வரட்டும் அதற்கு அப்புறம் இன்னைக்கு தான் அவங்களுக்கு சிவராத்திரி....எல்லா தடயங்களும் மர்மமாக ஒண்ணுமே இல்லாமல் எப்படி போக முடியும்??? எல்லாவற்றுக்கும் இன்னையோட முடிவு கட்டுறேன்...." என்று நினைத்துக் கொண்டு அஜய் அறையினுள் நுழையவும் அஜயின் வீட்டின் பின்புறமாக ஒரு வேன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.


இரவு தூங்குவதற்கு தயாராக எல்லாவற்றையும் ஒழுங்கு செய்த அஜய் மேஜை மீது அவன் கொண்டு வந்த பைலை வைத்து விட்டு சுற்றிலும் ஒரு முறை நோட்டம் விட்டு விட்டு வந்து தன் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.


நொடிக்கு ஒரு தடவை அவனது பார்வை மேஜை மீது இருந்த பைலில் பட்டு மீண்டு கொண்டே இருக்க அவன் எதிர்பார்த்த நிகழ்வு மட்டும் அரங்கேறவே இல்லை.


நான்கு மணி வரை தூங்காமல் சிரமப்பட்டு விழித்திருந்த அஜய் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் தூங்கி விட அந்த அறையில் எந்த மாற்றமும் நடக்கவில்லை.


காலையில் கண் விழித்து பார்த்த அஜய் நேரத்தைப் பார்த்து விட்டு பதட்டத்துடன் அங்கிருந்த பைலை பார்க்க அது இரவு அவன் வைத்த நிலையிலேயே இருந்தது.


"என்ன இது??? பைல் அப்படியே இருக்கு...அப்போ நம்ம போலீஸ் ஆபிஸர் யாரும் இதற்கு துணை போகலயா?? நான் தான் சந்தேகப்பட்டுட்டேனா??" என அஜய் யோசித்து கொண்டிருக்க


"ஹலோ அண்ணா...." என்றவாறு அவனது அறைக்குள் இரண்டு வாலிபர்கள் நுழைந்தனர்.


"ஹேய்....ராகுல், கிருஷ்....எப்போடா வந்தீங்க??? சித்தி, சித்தப்பா எல்லாம் எங்கே???" என உற்சாகமாக தன் தம்பிகளுடன் பேசத் தொடங்கியவன் அதன் பிறகு இந்த பிரச்சினையை பற்றி தற்காலிகமாக மறந்தே போனான்.


வீடு முழுக்க உறவினர்கள் நிறைந்து இருக்க அஜயின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அந்த புது பங்களாவினுள் சந்தோஷமாக அடியெடுத்து வைத்தனர்.


விடிந்தால் திருமணம் என்ற நிலையில் சரோஜாவின் குடும்பத்தினரும் அந்த வீட்டிற்கு வந்து இருக்க எல்லோர் முகத்திலும் மனதிலும் சந்தோஷம் நிறைந்து இருந்தது.


தற்காலிகமாக அந்த கொலை சம்பவத்தை மனதை விட்டு தள்ளி வைத்திருந்த அஜய் அன்று இரவு மீண்டும் அதை பற்றி சிந்திக்கலானான்.


"இன்னும் மூன்று வாரம் தான் இருக்கு....அதற்கிடையில் இந்த கேஸை முடித்து ஆகணும்....ஒரு சின்ன தடயம் கிடைத்தால் கூட போதும்....ஆனா எங்க போய் நான் தடயத்தை தேடுவேன்...." என அஜய் அவனது அறை பால்கனியில் நின்று யோசித்து கொண்டு இருக்க
மறுபுறம் சரோஜா அவளது அறைக்குள் இருந்து தன் கையில் இருந்த பைலை பார்த்து கொண்டிருந்தாள்.


"இன்னும் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிந்தால் போதும்....உண்மையான குற்றவாளி யாருனு கண்டு பிடிச்சுடலாம்...கல்யாணம் நல்ல படியாக முடியட்டும்...அடுத்த நாள் இந்த கேஸை நான் முடிவுக்கு கொண்டு வரேன்...." என்று சரோஜா மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டிருக்க இவை எல்லாவற்றுக்கும் காரணமானவனோ அஜய் மற்றும் சரோஜாவின் புகைப்படத்தை பார்த்து புன்னகத்து கொண்டு நின்றான்......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top