• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி......Harshad-bepannaah.jpg

டிரஸ்ஸிங் டேபிளின் முன்னால் அமர்ந்து தன் அணிகலன்கள் ஒவ்வொன்றாக கழட்டி மேஜையில் வைத்து கொண்டிருந்த சரோஜாவின் மனம் முழுவதும் சற்று நேரத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்களையே சுற்றி வந்தது.


வாஞ்சிநாதனைப் பார்த்து அதிர்ந்து போய் நின்ற சரோஜா அஜயின்
"சரோஜா...சரோஜா...." என்ற தோள் உலுக்கலிலேயே சுய நினைவுக்கு வந்தாள்.


எல்லோரும் சரோஜாவையே வித்தியாசமாக பார்த்து கொண்டிருக்க சமாளிப்பது போல எல்லோரையும் பார்த்து புன்னகத்து கொண்டவள்
"ஸாரி....ஸாரி....நான் வேறு ஒரு யோசனையில் இருந்துட்டேன்....ஸாரி...." என்று கூற மற்றவர்களும் புன்னகையோடு தங்கள் விடுபட்ட பேச்சை பேச ஆரம்பித்தனர்.


ஆனால் அஜய் மாத்திரம் சரோஜாவின் நடவடிக்கைகளை மனதில் குறித்து வைத்துக் கொண்டு அவளிடம் நேரடியாக எதுவும் கேட்காமல் அமைதியாக அவளை நோட்டம் விட்டு கொண்டு நின்றான்.


மேடையேறி வந்த பின்பும் சரோஜா சிந்தனை வயப்பட்டவளாக நிற்பதைப் பார்த்து குழப்பத்தோடு அவளைப் பார்த்தவன்
"வாஞ்சிநாதன் அங்கிளை முன்னாடியே உனக்கு தெரியுமா???" என்று கேட்டான்.


அஜயின் இந்த நேரடி கேள்வியில் அதிர்ச்சியாக அவனை திரும்பி பார்த்த சரோஜா
"எ..என்...என்ன கேட்டீங்க??" என தடுமாற்றத்துடன் வினவினாள்.


"அங்கிளை பார்த்ததில் இருந்து நீ ஏதோ யோசிச்சுட்டே இருக்க...ஏதோ சரி இல்லை....அவரை இதற்கு முன்னாடி எங்கேயாவது பார்த்து இருக்கியா?? ஏன் திடீர்னு இந்த சடன் சேஞ்ச்???" என அஜய் கேட்கவும்


சுற்றிலும் ஒரு முறை தன் பார்வையை சுழல விட்டவள்
"கடைசியாக திரு கூட ஒரு வயதான ஆளைப் பார்த்தேன்னு சொன்னேன் இல்லையா??? அது இவர் தான்..." என்று கூற


"என்ன???" என அதிர்ச்சியாக கேட்ட அஜய் வாஞ்சிநாதனை திரும்பி பார்த்தான்.


"ஆர் யூ ஸ்யூர்??? சரியாக தான் சொல்லுறியா சரோஜா???"


"ஹன்ரட் பெர்சன்ட் ஸ்யூர் அஜய்....இவரே தான்...நான் நேற்று நைட் கூட இவரைப் பற்றி தான் யோசித்துப் பார்த்தேன்...இவர் யார் என்னனு எனக்கு அப்போ தெரியல...இவரைப் பற்றி ஸார் கிட்ட சொல்லி இருந்தேன்...அடுத்த நாள் அதே ஏரியாவில் போய் அவரை பற்றி விசாரித்து பார்க்க இருந்தோம்...ஆனா அடுத்த நாள் திரு கொலை நடக்கவும் இது அப்படியே தள்ளி போயிடுச்சு....அகைன் ஒரு இரண்டு, மூணு நாள் கழித்து அந்த ஏரியாவுக்கு போய் விசாரித்து பார்த்தோம்...ஆனா இவரை பற்றி யாருக்கும் தெரியல...கடைசியாக கிடைச்ச சஸ்பெக்ட் இவர்...ஷோ இவரை மீட் பண்ணா எதுவும் தகவல் கிடைக்கலாம்னு இத்தனை நாளா தெரு தெருவா தேடி திரிந்தேன்....அவரை பார்த்தது நான் மட்டும் தானே...ஷோ வேற எப்படி விசாரித்து பார்க்குறதுனும் தெரியல....என்ன பண்ணுறதுனு தெரியாம இதை பென்டிங்ல வைச்சோம்...இப்போ இங்க இவரை பார்த்ததும் எனக்கு ரொம்ப ஷாக் ஆகிடுச்சு..." என சரோஜா கூறவும் அஜய் வாஞ்சிநாதனையும், சரோஜாவையும் மாறி மாறிப் பார்த்து கொண்டு நின்றான்.


"என்னாச்சு அஜய்???"


"எனக்கு சின்ன வயதிலிருந்தே அங்கிளைத் தெரியும்...அவர் மேல தப்பு இருக்கும்னு நான் நினைக்கல....அது தான் அவர் மேல உடனே சந்தேகப்படவும் முடியல...அவர் மற்ற அரசியல் வாதிகள் மாதிரி இல்ல...ரொம்ப நேர்மையாக இருந்தவர்....நல்ல விடயங்களுக்கு இந்த காலத்தில் அனுமதி இல்லையே....அதனால்தான் கட்சியில் இருந்தே அவரை விலக்கிட்டாங்க...."


"ஒஹ்....ஒரு வேளை கட்சியில் இருந்து விலக வேற ஏதாவது காரணமும் இருக்கலாம் இல்லையா??? எதற்கும் நாம நம்ம முறைப்படி இந்த கேஸை டீல் பண்ணுவோம்....மே பீ நீங்க சொல்ற மாதிரி அவர் உண்மையாகவே இந்த கேஸில் சம்பந்தப்படலேனா நாம வேற வழியை செலக்ட் பண்ணலாம்....சரியா??" என சரோஜா கேட்கவும் ஆமோதிப்பாக தலை அசைத்த அஜய்
"இரண்டு, மூணு நாள் போகட்டும்...நானே எல்லாம் பார்த்து சொல்லுறேன்..." என வாய் வார்த்தையாக கூறினாலும் அவன் மனதோ இரு பக்கமும் சாய முடியாமல் தவித்தது.


"இல்லை அங்கிள் அப்படி பண்ணக் கூடியவர் இல்லை...." என மனதிற்குள் நினைத்துக் கொண்ட அஜய் அதன் பின்பும் அதே சிந்தனையில் நின்று கொண்டிருந்தான்.


"சரோஜா, மாமா....என்ன இது??? இரண்டு பேரும் யாரோ ஒருத்தரோட கல்யாணத்துக்கு வந்த மாதிரி ஆளுக்கொரு பக்கம் யோசிச்சுட்டு இருக்கீங்க???" என கணேஷ் கேட்கவும்


"ஒண்ணும் இல்லை கணேஷ்...கேஸைப் பற்றி..." என்று ஒரு சேர அஜயும், சரோஜாவும் கூற சுற்றி நின்ற அனைவரும் சரோஜாவையும், அஜயையும் விநோதமாக பார்த்தனர்.


சரோஜா மற்றும் அஜய் கூட அவர்கள் இருவரும் ஒரே பதிலைக் கூறியதை எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள மேடையில் நின்று கொண்டிருந்த கனகாவோ அஜயின் அருகில் வந்து
"யப்பா கடமை கந்தசாமியோட பேரனே!!! இன்னைக்கு உனக்கு கல்யாணம் நடந்து இருக்குப்பா....இன்னைக்காவது உன் மூளையை கொஞ்சம் ஓய்வு எடுக்க விடுடா..." என்று கூற


அவர்கள் முன்னால் நின்ற கணேஷோ
"மாமாவோட தாத்தா பேர் கந்தசாமியா?? அது என்ன கடமை?? ஒரு வேளை அவங்க அப்பாவோட பேரா இருக்குமோ??" எனக் கேட்க அங்கு நின்ற அனைவரும் வாய் விட்டு சிரித்தனர்.


"நீ இவ்வளவு அறிவாளியாக இருக்கக்கூடாது கணேஷ்..." என சித்தார்த் கூறி சிரிக்க


எல்லோரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு
"நன்றி....நன்றி....நன்றி...." என்று கூறிய கணேஷ்


சரோஜாவின் புறம் திரும்பி
"அத்தை சொன்னது உனக்கும் சேர்த்து தான்...உன் கடமை
உணர்ச்சியை இன்னைக்கு மட்டும் அப்படி ஒரு ஓரமாக மூட்டை கட்டி வை....இப்போ எல்லோரும் வாங்க சாப்பிடலாம்....பசி உயிரை கொல்லுது...." என்று கூற புன்னகையோடு கணேஷை அனைவரும் பின் தொடர்ந்து சென்றனர்.


அதன் பிறகு கணேஷின் கலகலப்பான பேச்சிலும், அஜயின் சகோதரர்களின் கலாட்டாவிலும் அந்த வீடே சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது.


திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக சென்று விட இறுதியாக அந்த வீட்டில் அஜயின் குடும்பத்தினரும், சரோஜாவின் குடும்பத்தினருமே எஞ்சி இருந்தனர்.


சரோஜாவிடம் விடைபெற்றுக் கொள்வதற்காக வித்யா அவளருகில் வர சரோஜா கண்கள் கலங்க தன் அன்னையைப் பார்த்து கொண்டு நின்றாள்.


வித்யாவும் கண்கள் கலங்கி சரோஜாவின் அருகில் நிற்க இருவருக்கும் நடுவில் வந்து நின்ற கணேஷ்
"ஆனாலும் நீங்க இவ்வளவு செண்டிமெண்டை பிழியக் கூடாதும்மா...ஒரே தெருவில் இடறி விழுற தூரத்தில் வீட்டை வைச்சுக்கிட்டு என்னவோ கண் காணாத நாட்டுக்கு சரோஜாவை அனுப்பி வைக்குற மாதிரி நிற்குறீங்க....இதெல்லாம் ரொம்ப தப்பும்மா...." என்று கூற


"போடா....." என்றவாறு அவன் தோளில் செல்லமாக தட்டிய வித்யா


"பக்கத்து வீடோ பக்கத்து தெருவோ என்ன இருந்தாலும் இத்தனை வருஷம் நம்ம கைக்குள்ள வைத்து வளர்த்த பிள்ளையை விட்டு பிரிந்து இருக்குறது எல்லாப் பெற்றவங்களுக்கும் வர்ற கஷ்டம் தான்......" என்று கூற


"அம்மா...." என்றவாறே கண்கள் நீரைத் துளிர்க்க வித்யாவை சரோஜா அணைத்துக் கொண்டாள்.


"இதற்கு தான் உங்களையும் எங்க கூடவே இதே வீட்டில் இருக்கச் சொன்னேன்....நீங்க தான் ஒத்துக்கவே இல்லை....உங்களுக்கு எங்க மேல எதுவும் கோபமோ தெரியல....." என குறைபட்டுக் கொண்டவாறு அவர்கள் அருகில் அஜய் வரவும்


அவனை பார்த்து புன்னகத்து கொண்ட வித்யா
"அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாப்பிள்ளை....என்ன இருந்தாலும் நம்ம வீட்டையும் நம்ம கவனிக்க தானே வேணும்....இங்க பக்கத்தில் தானே வீடு இருக்கு...நினைத்த நேரம் நான் வந்து பார்த்துட்டு போகப்போறேன்....அதில் என்ன இருக்கு?? நீங்க சரோஜாவோடு சந்தோஷமாக இருந்தா போதும்...." என்றவாறே சரோஜாவின் தலையை வருடிக் கொடுத்தார்.


"அப்போ நாங்க போயிட்டு வர்றோம்...." என்று விட்டு கணேஷ் மற்றும் வித்யா சென்று விட சரோஜா அவர்கள் சென்ற வழியையே பார்த்து கொண்டு நின்றாள்.


"சரோஜா போய் டிரஸ் மாத்திக்கோமா....இந்தா இந்த ஸாரியைக் கட்டிக்கோ...." என கனகா சரோஜாவின் கையில் லாவண்டர் நிற சில்க் ஸாரி ஒன்றை வைக்க


புன்னகையோடு
"சரிங்க அத்தை...." என்று அவரை பார்த்து தலை அசைத்தவள் தங்கள் அறையை நோக்கிச் சென்றாள்.


தற்காலிகமாக வாஞ்சிநாதன் பற்றிய எண்ணங்களை மறந்து இருந்த சரோஜா அறையில் தனிமையில் இருந்த நேரம் மீண்டும் அதை பற்றி யோசிக்க தொடங்கினாள்.


ஏனோ அவள் மனது வாஞ்சிநாதனுக்கும் இந்த கொலை சம்பவங்களுக்கும் சம்பந்தம் இருப்பது போல உணர்த்திக் கொண்டே இருக்க இந்த நிலையை எவ்வாறு கையாளுவது என்று அவள் மூளை பல்வேறு கோணங்களில் சிந்திக்கத் தொடங்கியது.


குளியலறையில் இருந்து முகத்தை துடைத்து கொண்டே சாதாரண டீசர்ட், பேண்டிற்கு மாறி இருந்த அஜய் சரோஜாவின் பின்னால் வந்து நின்றான்.


அஜய் வந்து நின்றது கூட தெரியாமல் சரோஜா யோசித்து கொண்டிருக்க
"என்ன இது??? மேடம் நம்ம வந்தது கூட தெரியாமல் யோசிச்சுட்டு இருக்காங்க....இது சரி இல்லையே...." என்று நினைத்துக் கொண்ட அஜயின் மனது தன் குறும்பு தனத்தை மெல்ல தலை தூக்க செய்தது.


கையில் இருந்த டவலை அருகில் இருந்த கதிரையில் வைத்தவன் மெல்ல சத்தம் எழுப்பாமல் நடந்து வந்து சரோஜாவின் இடையை வளைக்க இதை சற்றும் எதிர்பாராத சரோஜாவோ
"ஆஆஆஆஆஆஆ....." என்று கத்தி வைத்தாள்.


சரோஜாவை தன் புறமாக திருப்பி
"உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..." என்றவாறே சரோஜாவின் வாயை இறுக மூடிய அஜய்


"எப்படி ஐயாவோட ஷாக் என்ட்ரி???" என்று சிரித்துக் கொண்டே கேட்கவும்


கோபமாக அவன் கைகளை தட்டி விட்டவள்
"உங்களை....கொஞ்ச நேரத்தில் எனக்கு உயிரே போயிடுச்சு....பண்ணுறதையும் பண்ணிட்டு சிரிக்குறீங்களா??" என முறைத்து கொண்டு கேட்க அஜயோ ஒரே இழுப்பில் அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தான்.


"பின்ன வேற என்ன பண்ணுறது?? வெளியில் தான் எதையோ யோசிச்சுட்டு இருக்கேனு பார்த்தா ரூமுக்கு வந்த அப்புறமும் அதே மாதிரி இருக்க....அது தான் சின்னதாக ஒரு ஷாக்...."


"நல்ல ஷாக் கொடுத்தீங்க போங்க..."


"அதெல்லாம் இருக்கட்டும்...நான் காலையில் என்ன சொன்னேன்...இன்னைக்கு நைட் நம்ம மொட்டை மாடி கார்டனில் தானே இருக்கப் போறதா சொன்னேன்....ஆனா நீ இன்னும் டிரஸ் கூட சேஞ்ச் பண்ணாமல் இருக்க...." என அஜய் சற்று காட்டமாக கூற


நாக்கை கடித்து கொண்டு அவனைப் பார்த்து புன்னகத்து கொண்ட சரோஜா "ஸாரி...ஸாரி....அஜய்.....ஜஸ்ட் டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க.. ரெடி ஆகிட்டு ஓடி வர்றேன்...." என்றவாறே குளியலறைக்குள் நுழைந்து கொள்ள அஜய் புன்னகையோடு தன் போனை பார்த்து கொண்டே அங்கிருந்த ஸோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அஜயிடம் சொன்னது போலவே பத்து நிமிடங்களில் தயாராகி வந்த சரோஜா அஜயின் முன்னால் வந்து நின்று
"சொன்ன மாதிரியே பத்து நிமிஷத்தில் வந்துட்டேன்....போகலாமா???" என்று கேட்க அஜயோ கண் இமைக்கவும் மறந்து சரோஜாவை பார்த்து கொண்டு இருந்தான்.


லாவண்டர் நிற சேலை அவள் உடலில் வாகாக பொருந்தி இருக்க அவள் முகமோ ஒப்பனை எதுவுமின்றி ஜொலித்து கொண்டிருந்தது.


இது நாள் வரை அவனை அறியாமலே அவள் மீது கொண்டிருந்த காதல் இன்று கரைகடந்து அஜயின் மனம் முழுவதும் சாரல் வீசத் தொடங்கியது.


இந்த காதல் அவன் மனதிற்குள் எப்போது உருவானது என்ற கேள்விக்கான பதில் அவனுக்கு தெரியவில்லை.


ஆனால் இந்த காதல் எந்த காலத்திலும் மாறப் போவதில்லை என்பது மட்டும் அஜய்க்கு உறுதியாக தெரிந்தது.


"அஜய்....அஜய்...." என்றவாறு சரோஜா அஜயின் தோளில் தட்ட


"ஆஹ்...என்...என்ன கேட்ட???" என அஜய் தன் தடுமாற்றத்தை மறைத்து கொண்டு கேட்கவும்


அவனைப் பார்த்து புன்னகத்து கொண்ட சரோஜா
"நான் ரெடி ஆகிட்டேன்...போகலாமானு கேட்டேன்...." என்று கூறினாள்.


"ஓஹ்...போகலாமே...." என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு அஜய் முன்னே செல்ல சரோஜா அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.


அஜய் மொட்டை மாடி கதவை திறக்காமல் எதையோ தேடி கொண்டு நிற்க யோசனையோடு அஜயை பார்த்த சரோஜா கதவைத் திறப்பதற்காக கதவில் கை வைக்க போக அவசரமாக அவள் கையை பற்றிய அஜய்
"நோ...நோ...ஒரு ஐந்து நிமிஷம் வெயிட் பண்ணு...." என்று விட்டு அருகில் இருந்த பெட்டியில் எதையோ எடுத்துக் கொண்டு வந்தான்.


"என்ன அது???" என சரோஜா கேட்கவும்


சாவி ஒன்றை சரோஜாவிடம் கொடுத்த அஜய்
"சர்ப்பரைஸ்.....நீயே திறந்து பாரு...." என்று கூற புரியாமல் அவனைப் பார்த்த சரோஜா சாவி கொண்டு அந்த கதவை திறந்தாள்.


கதவைத் திறந்து முன்னே சென்றவளின் கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்து கொள்ள அஜய் பின்னால் வந்து அவள் தோளில் கை போட்டு நின்றான்.


அங்கு வைக்கப்பட்டிருந்த எல்லா பூ மரங்களிலும் சிறு சிறு இதய வடிவிலான மெழுகுவர்த்திகள் கண்ணாடிக் குவளைக்குள் வைத்து வைக்கப்பட்டிருக்க மல்லிகை, முல்லைப் பந்தலிலும் அந்த மெழுகுவர்த்திகள் கட்டி வைக்கப்பட்டிருந்தது.


அன்று பௌர்ணமி தினமும் சேர அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தையும் தாண்டி வான் நிலவின் ஒளி அந்த ஒட்டுமொத்த இடத்தையும் மெருகேற்றிக் கொண்டிருந்தது.


"எப்போ இதெல்லாம் நீங்க செய்யுறீங்க?? காலையில் இருந்து என் கூட தானே இருந்தீங்க.....காலையில் ஒரு சர்ப்பரைஸ்....இப்போ அடுத்த ஒரு சர்ப்பரைஸ்....இதெல்லாம் எப்படி அஜய்???"


"நம்ம கல்யாணம் நிச்சயம் ஆன நாள்ல இருந்து நம்ம இரண்டு பேரும் சரியாக பேசிக்கிட்டதே இல்லை....அதே மாதிரி உன் கூட என்னால டைம் ஸ்பெண்ட் பண்ணவும் முடியல....ஏன்னா நம்ம வேலை அப்படி....இந்த நாள் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ரொம்ப ஸ்பெஷலான நாள்...ஷோ என்னால முடிஞ்ச ஸ்பெஷலை உனக்கு கொடுக்கணும்னு நினைச்சேன்....இதெல்லாம் கிடைக்குற டைம்ல ஓடி வந்து பண்ணுணேன்....." என அஜய் கூறவும் சரோஜா புன்னகையுடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.


"நம்ம முதல்ல ஒருத்தரைப் பற்றி ஒருத்தர் தெரிஞ்சுக்கணும்....மனம் விட்டு பேசி நம்மை நாம புரிஞ்சுக்க ட்ரை பண்ணணும்....ஆனா அது ஒரு நாள்ல நடக்கப் போறது இல்ல...ஷோ அதற்கு ஒரு சின்ன ஆரம்பமாக இது இருக்கும் இல்லையா????." என்று அஜய் கேட்கவும்


"கண்டிப்பாக...." என்ற சரோஜா அங்கிருந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டாள்.


"உங்களுக்கு சூப்பர் ரசனை அஜய்....வானத்தில் பௌர்ணமி நிலவு....இங்க தரை முழுவதும்
அழகான பூக்கள்....இயற்கை காற்று....இதை விட ஸ்பெஷல் டே என் லைப்ல அமையுமானு தெரியல...." என்று குதூகலத்துடன் சரோஜா கூறவும்


அவளருகில் வந்து அமர்ந்து கொண்ட அஜய்
"எல்லாவற்றையும் பற்றி சொல்லிட்ட....இதை எல்லாம் அரேஞ்ச் பண்ண என்னை பற்றி எதுவும் சொல்லலயே...." என அவள் காதோரமாக கேட்க அஜயை திரும்பி பார்த்த சரோஜாவின் முகமோ வெட்கத்தால் சிவந்து போனது.


சரோஜாவை பார்வையினாலேயே ரசித்து கொண்டிருந்த அஜயின் மனதோ
"அஜய்....இன்னும் நீங்க இரண்டு பேரும் மனசு விட்டு பேசவே இல்லை....முதல்ல அவளை புரிஞ்சுக்க....அப்புறம் உன் ரொமாண்ஸை எடுத்து விடு...." என கட்டளையிட பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு தன் தலையை அழுந்த கோதிக் கொண்ட அஜய் வேறு விடயங்கள் பற்றி பேசத் தொடங்கினான்.


சிறிது நேரம் கழித்து அஜய் பேசிக் கொண்டே சரோஜாவின் புறம் திரும்பி பார்க்க அவளோ அஜயின் தோளில் சாய்ந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.


சரோஜாவின் முகத்தில் விழுந்து கிடந்த முடிக் கற்றைகளை ஒதுக்கி விட்டவாறே அஜய் அவளது முகத்தை ரசித்து பார்த்தான்.


முதன்முதலில் நடு வீதியில் அஜயின் வாகனம் அவளை மோத வருகையில் அவளது முகத்தில் தெரிந்த பதட்டம், இரண்டாம் தடவை அவளாகவே வந்து அவனிடம் பேசியது, அவளது கோப முகம் எல்லாவற்றுக்கும் மேலாக அவளது வீட்டில் அவனை பார்த்ததும் அவள் விழிகள் காட்டிய அதிர்ச்சி என எல்லாவற்றையும் யோசித்து பார்த்த அஜய் புன்னகையோடு சரோஜாவின் நெற்றியில் இதழ் பதித்தான்.


"வீட்ல அம்மா உன்னை பொண்ணு பார்க்க போறதாக சொல்லும் போது எனக்கு தெரியல....என் மனசை இவ்வளவு சீக்கிரமாக உன்கிட்ட நான் கொடுத்துடுவேன்னு....எதனால என் மனசு உன்னை பார்க்கும் போது எல்லாம் சந்தோஷம் அடையுதுனு தெரியல....ஆனா இந்த சந்தோஷம் வேற எந்த விதத்திலும் எனக்கு கிடைக்காது....ரோஜா.... நான் உன்னை மனசார நேசிக்கிறேன்னு நினைக்கிறேன்டா...." என்ற அஜய் சரோஜாவின் கன்னத்தை ஆசையாக வருடிக் கொடுத்தான்.


அஜயின் கை படவும் சரோஜா மெல்ல அசைந்து கொள்ள மெதுவாக தன் கையை பின்னிழுத்துக் கொண்ட அஜய் சரோஜாவின் தன் கைகளில் ஏந்தி கொண்டு அவர்கள் அறையை நோக்கி சென்றான்.


சரோஜாவை நேராக படுக்க வைத்து விட்டு போர்வையை போர்த்தி அவள் நெற்றியில் மெல்ல இதழ் பதித்தவன்
"குட் நைட் ரோஜா...." என்று விட்டு மீண்டும் மொட்டை மாடியில் வந்து நின்றான்.


கைகளை கட்டி கொண்டு வானத்தை பார்த்து கொண்டு நின்ற அஜயின் மனது அத்தனை நேரம் இருந்த அந்த ஏகாந்த உணர்வை மறந்து அவனது வேலையை பற்றி சிந்திக்க ஆரம்பித்தது.


எப்படியாவது கொடுக்கப்பட்டிருக்கும் நாட்களுக்குள் குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன் அடுத்து தன்னை சூழ்ந்து இருக்கும் வேலைகளை எல்லாம் எண்ணி மலைத்துப் போய் நின்றான்.


வாஞ்சிநாதனைப் பற்றிய சந்தேகம் ஒரு புறம், சரோஜாவின் பயத்தை பற்றிய கவலை ஒரு புறம் என அஜயின் மனதை பல்வேறு சிந்தனைகள் சூழ்ந்து கொள்ள மறுபுறம் சரோஜா ஏதோ சத்தம் கேட்டு மெல்ல கண் விழித்து பார்த்தாள்.


"ம்மா...எங்க உன்னோட கை..." என்றவாறு தூக்க கலக்கத்துடனேயே கட்டிலில் தன் கையினால் சரோஜா துலாவ அங்கே யாரும் இருக்கவில்லை.


பதட்டத்துடன் எழுந்து அமர்ந்த சரோஜா சுற்றிலும் அந்த இடத்தை பார்த்து விட்டு
"இது எந்த இடம்?? அம்மா எங்கே??" எனத் தேடி பார்க்க அப்போது தான் அவளுக்கு இன்று தனக்கு திருமணம் நடந்து விட்டது என்பது நினைவு வந்தது.


தன் தலையில் தட்டி கொண்டு சுற்றிலும் அந்த அறையை நோட்டம் விட்டவள் அஜயை காணாமல் போகவே
"அஜய் எங்கே??? ஒரு வேளை பால்கனியில் இருக்காரோ???" என்றவாறே மெல்ல எழுந்து பால்கனி நோக்கி சென்றாள்.


அங்கும் அஜய் இல்லாமல் இருக்கவே மறுபடியும் அறைக்குள் செல்ல போனவள் ஏதோ ஒரு எண்ணம் தோன்ற மேலே நிமிர்ந்து பார்த்தாள்.


அந்த வீட்டின் மொட்டை மாடி அந்த வீட்டின் பரப்பை விட சற்று சிறியதாக இருந்ததால் மொட்டை மாடியில் யார் நின்றாலும் கீழே இருப்பவர்களுக்கு தெளிவாக தெரியும்.


சரோஜா மேலே அண்ணாந்து பார்க்க அங்கே அஜய் வானத்தை பார்த்து கொண்டு நின்றான்.


"நடு ராத்திரியில் அப்படி வானத்தில் என்ன தெரியுதோ???" என நினைத்து சிரித்துக் கொண்ட சரோஜா மறுபடியும் தங்கள் அறைக்குள் செல்ல போக கீழே தோட்டத்தில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது.


சரோஜாவின் இதயம் ஒரு முறை நின்று துடிக்க பயத்துடன் கீழே பார்க்கப் போனவள் உடனே தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.


"வேண்டாம் சரோஜா பார்க்காதே....சத்தம் எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக்கலாம்....இப்போ போ...." என தனக்குத்தானே கூறிக் கொண்டவள் வேகமாக பால்கனி கதவை சாத்தி விட்டு மீண்டும் வந்து போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டு தூங்கத் தொடங்கினாள்.


சரோஜா தற்காலிகமாக தன் சிந்தனைகளை ஒதுக்கி வைத்து நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருக்க அஜயோ ஒட்டுமொத்த சிந்தனைகளையும் தனக்குள் போட்டு சிந்தித்து கொண்டிருக்க இந்த சிந்தனைகளுக்கு எல்லாம் பதிலாக வரப்போகும் அந்த நிழலின் நிஜம் யாரிடமோ.......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top