• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
d6a0c6534c2eb5607f99d1384f120ba4.jpg

காலையில் சூரிய வெளிச்சம் தன் முகத்தில் பட கண்களை சுருக்கி தன் முகத்தை மறைத்தவாறே எழுந்து அமர்ந்து கொண்ட சரோஜா தன் இரு கைகளையும் தேய்த்து முகத்தை துடைத்து கொண்டு மெல்ல தன் கண்களை திறந்து பார்த்தாள்.


அவளருகில் அஜய் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்க மெல்ல சத்தம் எழுப்பாமல் கட்டிலில் இருந்து இறங்கிக் கொண்டவள் அஜயின் தூக்கத்தை தொந்தரவு செய்யாமல் மெல்ல குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.


சிறிது நேரத்தில் தயாராகி வந்தவள் அஜயை எழுப்பலாம் என்று நினைத்துக் கொண்டே அவனருகில் செல்ல அந்த நேரம் பார்த்து அவளின் போனும் அடித்தது.


"கார்த்திகா....இந்த நேரத்தில் எதுக்கு போன் பண்ணுறா???" என போனை பார்த்து கொண்டு யோசித்தவள் அஜய் தூக்கத்தில் இருந்து எழும்புவது போல இருக்கவும் அவனை தொந்தரவு செய்ய கூடாது என நினைத்து கொண்டு அவசரமாக பால்கனியை நோக்கிச் சென்றாள்.


"ஹலோ கார்த்திகா....என்ன இந்த காலங்கார்த்தாலேயே போன் பண்ணி இருக்க?? ஏதாவது பிரச்சினையா??"


"ஹலோ சரோஜா....நவீனை நேற்று நைட்ல இருந்து காணோமாம்....இப்போ தான் பாஸ்கர் போன் பண்ணி நவீன் உங்க கிட்ட ஏதாவது சொன்னானு கேட்டாங்க....எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியலடி....எனக்கு ரொம்ப பயமாக இருக்கு சரோஜா...நவீன் எங்கே போயிட்டாரோ தெரியல....உன் கிட்ட ஏதாவது சொன்னாரா??" என பதட்டமாக கார்த்திகா கேட்கவும் என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் சரோஜா விழித்து கொண்டு நின்றாள்.


"சரோஜா....ஹலோ...ஹலோ...சரோஜா....நான் பேசுறது கேட்குதா???"


"ஹான்....கேட்குதுடி....நவீன் என் கிட்ட எதுவும் சொல்லல....ஸாரி...."


"நீ எதுக்கு ஸாரி சொல்லுற?? நவீன் எங்கே போனாரோ தெரியல....சரி நான் வேற யாருக்கும் எடுத்து கேட்குறேன்....உனக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் எனக்கு சொல்லு சரியா???" என்று விட்டு கார்த்திகா போனை வைத்து விட சரோஜா தயக்கத்துடன் போனைப் பார்த்து கொண்டு நின்றாள்.


"நவீனுக்கு ஏதாவது ஆபத்தா?? தேவை இல்லாமல் நான் நவீனை இதில் சிக்க வைச்சுட்டேனோ...." என யோசித்து பார்த்த சரோஜா உடனே தன் போனை எடுத்து நவீனுக்கு அழைப்பை மேற்கொண்டாள்.


பலமுறை அழைத்தும் மறுமுனையில் சுவிட்ச் ஆஃப் என்றே வர சரோஜாவை பதட்டம் தொற்றிக் கொண்டது.


"இப்போ நான் என்ன பண்ணுறது?? சரியாக எவிடன்ஸ் இல்லாமல் இந்த விஷயத்தை எதற்கு செய்தீங்கனு மாமா கேட்டால் நான் என்ன சொல்லுவேன்???" என சரோஜா புலம்பிக் கொண்டு நிற்க


"எதை மாமா கிட்ட சொல்லணும்???" என்றவாறே அஜய் அவளது முன்னால் வந்த நின்றான்.


அஜயை அங்கு எதிர்பார்க்காத சரோஜா அதிர்ச்சியாக அவனைப் பார்த்துக் கொண்டு நிற்க அஜய் அவள் முகத்தின் முன்னால் சொடக்கிட்டு
"மாமா கிட்ட யாரைப் பற்றி என்ன சொல்லணும்???" என்று கேட்டான்.


"அது..அது...ஆஹ் நேற்று நைட் கீழே தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்டது...அதை தான் எப்படி சொல்றதுனு யோசித்து பார்த்தேன்...." என சரோஜா கூறவும்


"அப்படியா? எனக்கு ஒரு சத்தமும் கேட்கலயே...அப்படியே சத்தம் கேட்டாலும் என் கிட்ட சொல்லாம அதை ஏன் நேரடியாக அப்பா கிட்ட சொல்லணும்??" என அஜய் சரோஜாவை கூர்மையாக பார்த்து கொண்டே கேட்டான்.


"அது...ஐ யம் ஸாரி அஜய்...நான் உங்க கிட்ட ஒரு உண்மையை மறைச்சுட்டேன்..." என தலை குனிந்து நின்றவாறு சரோஜா கூறவும்


"உண்மையா?? என்ன உண்மை??" என அஜய் குழப்பமாக கேட்டான்.


"நேற்று ஈவ்னிங் ரிசப்சன் நடந்துட்டு இருக்கும் போது வாஞ்சிநாதன் வந்து இருந்தார் இல்லையா?? அவரைப் பார்த்து நான் உங்க கிட்ட எல்லாம் சொன்னேன் தானே...அதற்கு அப்புறம் கணேஷ் வந்து பேசி எல்லோரையும் சாப்பிட கூட்டிட்டு போனான்....ஆனா எனக்கு அதற்கு அப்புறமும் அதை பற்றியே யோசனையாக இருந்தது....அப்போ நவீன் அந்த பக்கமாக வந்தாரு...." என்றவள் நேற்று நடந்த சம்பவத்தை விவரிக்க தொடங்கினாள்.


சரோஜா தனியாக நின்று யோசித்து கொண்டிருக்க அந்த வழியாக வந்த நவீன் சரோஜாவை யோசனையாக பார்த்து விட்டு அவளருகில் வந்து நின்றான்.


"சரோ...." என்ற நவீனின் அழைப்பில் திரும்பி பார்த்த சரோஜா நவீனைப் பார்த்து மெலிதாக புன்னகத்தாள்.


"என்ன ஆச்சு சரோ??? ஏதாவது பிரச்சினையா?? ரொம்ப டல்லா இருக்குற மாதிரி இருக்கு...." என நவீன் கேட்கவும்


தன் தயக்கத்தை மறைத்து கொண்டு அவனைப் பார்த்து புன்னகத்த சரோஜா
"சே...சே...அதெல்லாம் ஒண்ணும் இல்லை....சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்..." என்றவளின் பார்வை அவர்களை கடந்து சென்ற வாஞ்சிநாதனின் மேல் நிலை குத்தி நின்றது.


சரோஜாவின் பார்வை சென்ற திசையை திரும்பிப் பார்த்த நவீன் வாஞ்சிநாதனைப் பார்த்து விட்டு மீண்டும் சரோஜாவின் புறம் திரும்பி
"என்ன ஆச்சு சரோ??? ஏதாவது பிரச்சினையா??" என்று கேட்டான்.


நவீனிடம் சொல்வதா? வேண்டாமா? என்று யோசித்து பார்த்தவள்
"நம்ம கூட வேலை பார்க்குறவர் தானே நவீன்...எவ்வளவு கேஸ்ல நமக்கு உதவி பண்ணி இருக்காங்க...ஷோ நம்பி சொல்லுவோம்...." என நினைத்து கொண்டே தன் மனதிற்குள் வாஞ்சிநாதன் பற்றி இருந்த சந்தேகம் முழுவதையும் ஒரே மூச்சில் கூறி முடித்தாள்.


சரோஜா கூறி முடிக்கும் வரை நவீன் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு கொண்டு நின்றான்.


"ஷோ அந்த பீச் ஹவுஸ் ஏரியாவில் நீ பார்த்தது இவரை தான் இல்லையா???" என நவீன் கேட்கவும் சரோஜா ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.


"நம்ம திருவை பாலோ பண்ணதில் மிஸ் ஆகி இருந்த ஒரு டீடெய்லும்
இப்போ நமக்கு கிடைச்சாச்சு...சரோ யூ டோன்ட் வொர்ரி....நீங்க திரும்ப வேலைக்கு வரும் போது இவர் பற்றிய முழு விவரமும் நம்ம கிட்ட இருக்கும் ஓகே வா???"


"ஓகே நவீன்...பட் எதற்கும் கொஞ்சம் கேர்புல்லா டீல் பண்ணுங்க...." என சரோஜா கூறவும் சரியென்று விட்டு சென்ற நவீனைப் பார்த்து சரோஜா பெருமூச்சு விட்டு கொண்டாள்.


எல்லாவற்றையும் கூறி விட்டு சரோஜா அஜயை நிமிர்ந்து பார்க்க அஜயின் முகமோ பாறையென இறுகி இருந்தது.


"அஜய்..." என தயக்கமாக சரோஜா அஜயின் கையைத் தொட அவள் கையில் இருந்து தன் கையை மெல்ல விலக்கி எடுத்து கொண்டவன் எதுவும் பேசாமல் கைகளை கட்டி கொண்டு சரோஜாவை கூர்மையாக பார்த்தான்.


"அப்போ இவ்வளவு நடந்து இருக்கு...இதை பற்றி ஒரு வார்த்தை கூட நீங்க இரண்டு பேரும் யாரு கிட்டயும் சொல்லல அப்படி தானே???" என அஜய் கேட்கவும் சரோஜா அமைதியாக அஜயை பார்த்து கொண்டு நின்றாள்.


"சரி நான் உங்க வேலை சம்பந்தமாக உங்க கூட பேசுறது உனக்கு பிடிக்காமல் என் கிட்ட இதை பற்றி சொல்லல....பரவாயில்லை....அப்பா கிட்ட கூட நீங்க இதை பற்றி சொல்லல இல்லையா??"


"அப்படி இல்லை அஜய்...வெறும் டீடெய்ல்ஸ் தானே அப்புறம் சொல்லிக்கலாம்னு இருந்தேன்...ஆனா இப்படி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...."


"அப்படி என்ன ஆச்சு??"


"நவீனை நேற்று நைட்ல இருந்து காணோமாம்....கார்த்திகா இப்போ தான் போன் பண்ணி சொன்னா....இப்போ தான் நான் அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டேனோனு தோணுது...." என்றவாறே சரோஜா தன் தலையில் கை வைத்து கொள்ள அதே நேரம் அவர்களது அறைக் கதவு தட்டப்படும் சத்தமும் கேட்டது.


அஜய் தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு சென்று கதவைத் திறக்க அங்கே கனகா நின்று கொண்டிருந்தார்.


"மணி பத்து ஆகப்போகுதுடா....காலை டிபன் சாப்பிட ஐடியா இருக்கா இல்லையா??? நானும் நீங்க வருவீங்கனு காத்துட்டே இருக்கேன்....இரண்டு பேரும் வர்ற மாதிரி இல்ல...அது தான் என்ன நடந்தாலும் சரினு நான் மேலே வந்துட்டேன்..." என கனகா கூறவும்


"பத்து மணியா???" என்று ஆச்சரியமாக திரும்பி சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்த்தவன்


தன் தலையில் தட்டி கொண்டே
"ஸாரி மா...கொஞ்சம் லேட் ஆயிடுச்சு....சரோஜா ரெடி ஆகிட்டா...பால்கனியில் இருக்கா நீங்க போய் அவகிட்ட பேசிட்டு இருங்க..நான் ஒரு பத்து நிமிஷத்தில் வந்துடுறேன்...." என்று விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொள்ள கனகா புன்னகத்து கொண்டே சரோஜாவை தேடி சென்றார்.


கனகா வருவதைப் பார்த்ததும் தன் முகத்தை சரி செய்து கொண்டு அவரைப் பார்த்து புன்னகத்து கொண்ட சரோஜா
"ஸாரி அத்தை...ஒரு கால் வந்தது...அதை பேசிட்டு அப்படியே நின்னுட்டேன்...ஸாரி..." என்று கூற


அவள் தலையை வருடிக் கொடுத்த கனகா
"அதெல்லாம் நான் ஒண்ணும் தப்பாக எடுத்துக்கலமா....மத்தியானம் ஆகப்போகுது....இன்னும் காலையில் டிபன் சாப்பிடலயேனு தான் கூட்டிட்டு போக வந்தேன்...சரி நீ வா நம்ம முதல்ல போகலாம்....அஜய் ரெடி ஆகிட்டு வரட்டும்..." என்று விட்டு செல்ல சரோஜா அவரைப் பின் தொடர்ந்து சென்றாள்.


வீடு முழுவதும் அஜயின் குடும்பத்தினர் நிறைந்து இருக்க சரோஜாவிற்கு அதைப் பார்க்கவே வியப்பாக இருந்தது.


"இந்த காலத்திலும் கூட்டுக் குடும்பமாக இருக்க எவ்வளவு பேருக்கு மனசு வரும்???" என நினைத்து கொண்டே படியிறங்கி வந்தவள் எல்லோரையும் பார்த்து புன்னகத்து கொண்டே அங்கு அமர்ந்து கொண்டாள்.


வெளியில் புன்னகையோடு இருப்பதை போல தன்னை காட்டிக் கொண்டாலும் அவள் மனதோ நவீனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தது.


அஜய் தயாராகி வந்ததும் கனகா சரோஜாவையும் சாப்பிட அழைக்க அஜயின் எதிரில் அமர்ந்து கொண்ட சரோஜாவை அஜய் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.


சரோஜாவிற்கோ அஜயின் இந்த முகத் திருப்பல் மனதை வலிக்கச் செய்தது.


வேகமாக சாப்பிட்டு விட்டு கையை கழுவி விட்டு எழுந்து கொண்டவன்
"அம்மா ஒரு சின்ன வேலை இருக்கு...போயிட்டு வந்துடுறேன்..." என்று விட்டு நிற்காமல் சென்று விட


"அஜய் இவ்வளவு அவசரமாக எங்கே டா போற???" என்று கனகா கேட்டு முடிப்பதற்குள் அவன் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தான்.


"கல்யாணம் ஆகி முழுதாக ஒரு நாள் முடியல....அதற்கிடையில் வேலை....என்ன பையனோ!!!" என்ற கனகா சரோஜாவை திரும்பி பார்க்க அவளோ தட்டில் இருந்த சாப்பாட்டை அளைந்து கொண்டு இருந்தாள்.


"என்னம்மா சாப்பிடலயா??" என கனகா சரோஜாவின் தோளில் கை வைக்க கலங்கிய தன் கண்களை யாரும் அறியாமல் துடைத்து கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்தவள்
"எனக்கு போதும் அத்தை....அது தான்..." என்று தயக்கத்துடன் இழுக்கவும்


"நல்ல பொண்ணு மா நீ....இதற்கா இவ்வளவு யோசிச்ச...போதும்னா சொல்ல வேண்டியது தானே...அதற்கு ஏன் இவ்வளவு தயக்கம்???சரி போதும்னா விடு...நீ போய் கையை கழுவிக்கோ...." என்றவாறே அவள் தட்டை எடுத்து கொள்ளப் போக


அவசரமாக அவர் கை பிடித்து தடுத்த சரோஜா

"பரவாயில்லை அத்தை நான் இதை சுத்தம் பண்ணுறேன்...
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
நீங்க போய் ரெஸ்ட் எடுங்க...." என்று விட்டு டைனிங் டேபிளை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.


கை அதன் பாட்டிற்கு வேலை செய்து கொண்டு இருந்தாலும் சரோஜாவின் எண்ணங்களோ அஜயையே சுற்றி வந்தது.


"நைட் மொட்டை மாடியில் வைத்துப் பேசும் போதாவது நான் இதை அவர் கிட்ட சொல்லி இருக்கலாம்...இரண்டு, மூணு நாள் கழித்து அவரே இதை பார்க்குறேனு சொல்லி இருக்கும் போது நான் அவசரப்பட்டு நவீன் கிட்ட சொல்லி இப்போ நவீனையும் வம்பில் சிக்க வைச்சுட்டேன்....நான் எப்படி இதை எல்லாம் சரி செய்வது??" என சரோஜா யோசித்து கொண்டிருக்கையில் அவளது போன் அடித்தது.


அஜயிடம் இருந்து அழைப்பு வந்தததைப் பார்த்ததும் அத்தனை நேரம் இருந்த கவலை மறைய போனை அட்டன்ட் செய்தவள்
"ஹலோ அஜய்..." என உற்சாகமாக கூறினாள்.


"வீட்டுக்கு முன்னாடி பைக்கில் இருக்கேன்...சீக்கிரமாக வெளியே வா..." என்று விட்டு சரோஜாவின் பதிலை எதிர் பாராமலேயே அஜய் போனை வைத்து விட சரோஜா ஏமாற்றத்துடன் போனை எடுத்து பார்த்தாள்.


"இவர் வரச் சொன்னா நான் போயிடணுமா??" என போனை பார்த்து கேட்டவள்


"அது தான் அவரே மனசு மாறி கூப்பிடுறார்லே...போய் பார்த்தால் என்ன நடந்திடப் போகுது??" என அவள் மனது கேள்வி எழுப்ப


"அது தானே..." என்று தனக்குத்தானே கூறி கொண்டவள் வீட்டில் இருந்து வெளியேறி அஜயை தேடி சென்றாள்.


அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் சாய்ந்து கொண்டு போனை பார்த்து கொண்டு நின்ற அஜயை பார்த்ததும் சரோஜாவின் மனம் குதூகலம் அடைந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அஜயின் முன்னால் வந்து நின்றாள்.


"எதுக்கு வரச் சொன்னீங்க??" என எங்கோ பார்த்து கொண்டு சரோஜா கேட்கவும் போனில் இருந்து தன் தலையை நிமிர்த்தி அவளை பார்த்த அஜய் மீண்டும் குனிந்து தன் போனை பார்க்க தொடங்கினான்.


ஓரக் கண்ணால் அஜயை பார்த்து கொண்டு நின்ற சரோஜா அஜய் மீண்டும் போனை பார்க்க தொடங்கவும் கோபமாக அவன் கையில் இருந்த போனை பறித்து எடுத்தாள்.


"இங்க பாருங்க அஜய்...நான் உங்க கிட்டயோ மாமா கிட்டயோ சொல்லாமல் நவீனை இதில் அனுப்பி வைச்சது தப்பு தான்...அதற்கு பதிலாக நாலு வார்த்தை திட்டினாலும் பரவாயில்லை....இப்படி முகத்தை தூக்கி வைச்சுட்டு பேசாமல் இருக்காதீங்க....கஷ்டமாக இருக்கு...." என்றவளின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்க அஜய் அவளருகில் வந்து அவள் கண்களை மெல்ல துடைத்து விட்டான்.


"நான் திட்டுனா அதைத் தாங்குற சக்தி உனக்கு இருக்கா???" என அஜய் கேட்கவும் அன்று ஆபீஸில் அஜய் கோபமாக பேசியதை ஒரு தடவை நினைத்துப் பார்த்து கொண்டவள் அவசரமாக இல்லை என தலை அசைத்தாள்.


"இங்க பாரு சரோஜா....நீ பண்ணுண வேலை முழுமையாக நான் தப்புன்னு நான் சொல்லல....ஆனா நீ ஒழுங்காக யோசிக்காமல் இதை பண்ணிட்ட...யார் கிட்டயும் இன்பார்ம் பண்ணல...இப்போ நவீனுக்கு ஏதாவது ஆச்சுனா யாரு பொறுப்பு???"


"அய்யய்யோ அப்படி எல்லாம் எதுவும் ஆகாது...."


"எதுவும் ஆகாமல் இருக்குற வரைக்கும் நல்லது...அப்பா கிட்ட இதை பற்றி நான் பேசிட்டேன்....இப்போதைக்கு நவீன் காணாமல் போன விஷயம் வெளி ஆளுங்க யாருக்கும் தெரியாது....தெரியவும் கூடாது...கார்த்திகா கிட்ட போன் பண்ணி இதை எல்லாம் சொல்லிடு....திரும்ப அவ எதையாவது புதுசா இழுத்து வரப்போறா....."


"ஸாரி அஜய்...நான் வேணும்னே இப்படி எல்லாம் பண்ணல...."


"புரியுது மா...பட் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம்....வாஞ்சி நாதன் அங்கிள் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ண போறதா சொன்னதுக்கு அப்புறம் தானே நவீன் காணாமல் போய் இருக்கார்....ஷோ நவீனோட போனை ட்ரேஸ் அவுட் பண்ண சொல்லி இருக்கேன்....வாஞ்சிநாதன் அங்கிள் வீட்டை கண்காணிக்க ஆளும் போட்டாச்சு....ஒரு வேளை வாஞ்சிநாதன் அங்கிள் தான் குற்றவாளினா கண்டிப்பாக அவர் பண்ண தப்பு எல்லாவற்றுக்கும் பதில் சொல்லியே ஆகணும்...." என்று அஜய் கூறவும் சரோஜா அமைதியாக நின்றாள்.


"சரி நீ உள்ளே போ...இந்த விஷயத்தை வீட்டுக்கு உள்ள வைத்துப் பேசுனா அம்மா டென்ஷன் ஆகிடுவாங்க....அது தான் உன்னை வெளியே கூப்பிட்டேன்....நீ உள்ளே போ....நான் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வர்றேன்...." என்று விட்டு அஜய் பைக்கில் ஏறி கொள்ள சரோஜா தயங்கி தயங்கி அவன் முன்னால் வந்து நின்றாள்.


"என்ன???" என்று அஜய் சரோஜாவை பார்த்து கேட்க


"என் மேல உங்களுக்கு கோபம் இல்லை தானே??" என தயக்கமாக சரோஜா கேட்டாள்.


"கோபம் இல்லையாவா??? நீ பண்ணி வைத்திருக்க வேலைக்கு செவுல்லயே இரண்டு உடனும் போல இருந்துச்சு....இனி அப்படி பண்ணுறதால நடந்தது மாறப் போறது இல்லையே....அதனால சும்மா விட்டுட்டேன்...." என அஜய் முகத்தை சீரியசாக வைத்து கொண்டு கூறவும் சரோஜா அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.


"என்ன பயந்துட்டியா??? சும்மா சொன்னேன் டா....கோபம் எல்லாம் இல்லை....கொஞ்சம் கவலை அவ்வளவு தான்...ஒழுங்காக பிளான் பண்ணி இதெல்லாம் செய்து இருந்தா இந்தளவிற்கு இது போய் இருக்காதே....இட்ஸ் ஓகே....இதுவும் ஒரு அனுபவம் தான்...நீ உள்ளே போ...நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்...." என சரோஜாவின் கன்னம் தட்டி சொல்லி விட்டு அஜய் சென்று விட சரோஜா கவலையுடன் வீட்டை நோக்கி சென்றாள்.


என்னதான் முயன்று தன் மனதை தெளிவாக்க சரோஜா நினைத்தும் அவளால் முழுமையாக தெளிவு பெற முடியவில்லை.


"அஜய் சொன்ன மாதிரியே ஒழுங்காக செய்து இருந்தா இவ்வளவு பிரச்சினை உருவாகி இருக்காதே....நவீனோட அம்மா, அப்பா இப்போ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க....என்னோட அவசரத்தால் எவ்வளவு பிரச்சினை???" என அங்கிருந்த தோட்டத்தில் அமர்ந்து இருந்தவாறே சரோஜா யோசித்து கொண்டிருக்க சற்று தள்ளி ஏதோ ஆட்கள் நடக்கும் சத்தம் கேட்டது.


"பசங்க யாராவது விளையாடுறங்களா???" என்று யோசித்து கொண்டே சரோஜா சத்தம் கேட்ட பக்கமாக நடந்து சென்றாள்.


அஜய் ஸ்டேஷனில் நவீன் இறுதியாக யாருடன் பேசி இருக்கிறான், எந்த இடத்தில் இறுதியாக அவனது போன் வேலை செய்தது, வாஞ்சிநாதன் வீட்டில் என்ன நிலவரம்?? போன்ற தகவல்களை சேகரித்து கொண்டிருக்க மறுபுறம் நவீனோ குற்றுயிரும், குலையுயிருமாக இரத்தம் உடம்பில் இருந்து சொட்டச் சொட்ட தூணில் கட்டி வைக்கப்பட்டிருந்தான்......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top