• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
இன்னைக்கு சிறிய அப்டேட் தான்....அட்ஜஸ்ட் கரோோ பிரண்ட்ஸ்.....
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி....
unnamed (3).jpg
ஆபிஸ் செல்வதற்காக தயாராகி சித்தார்த் போனை பார்த்து கொண்டே படியிறங்கி வந்து கொண்டிருக்க அவன் முன்னால் சித்ரா வந்து நின்றாள்.


"என்ன??" என தலையை நிமிர்த்தாமலேயே சித்தார்த் கேட்கவும் சித்ரா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.


"ப்ச்....என்ன சித்ரா?? ஏதாவது சொல்லணும்னா சொல்லு....ஆபிஸ் போற டைம்ல விளையாட்டு வேண்டாம்...." என்றவாறே நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் கலங்க நின்ற தன் தங்கையை பார்த்து துடித்துப் போனான்.


"ஹேய்...சித்ராம்மா என்னடா ஆச்சு??? காலேஜில் ஏதாவது பிரச்சினையா??"


"இல்லை..."


"அப்போ வேற என்ன ஆச்சு?? மாம் ஏதாவது திட்டுனாங்களா??"


"இல்லை...."


"சித்ரா என்ன ஆச்சு சொல்லும்மா..." என சித்ராவின் அருகில் வந்து

அவள் முகத்தை நிமிர்த்தி சித்தார்த் கேட்கவும்
"அண்ணா..." என்று விசும்பலோடு அவன் மீது சாய்ந்தவள்



"அப்பா...அப்பா..." என்று மட்டுமே கூறி கொண்டு நின்றாள்.


"முதல்ல அழுகையை நிறுத்து..." என அதட்டலாக கூறிய சித்தார்த் அவள் கை பிடித்து அவனது ஆபிஸ் அறையை நோக்கி அழைத்து சென்றான்.


"சொல்லு டாட்க்கு என்ன பிரச்சனை??" என சித்தார்த் கேட்கவும்


கண்களை துடைத்து கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்த சித்ரா
"அப்பா ஏதோ தப்பான வேலை பார்த்துட்டு இருக்காங்கண்ணா...நேற்று நைட் நானே என் காதால் கேட்டேன்...."


"சும்மா உளறாதே சித்ரா...." பல்லைக் கடித்து கொண்டு சித்தார்த் அதட்டலாக கூறவும்


திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள்
"சத்தியமாக நான் சொல்றது உண்மை ண்ணா..."


"நேற்று அஜய் அண்ணா வீட்டில் இருந்து வந்ததும் நான் என் ரூமுக்கு போயிட்டேன்...அப்போ அப்பா கோபமாக போனில் பேசிட்டு என் ரூமைத் தாண்டி போனாங்க...எதுவும் பிரச்சனையோ தெரியலையேனு நான் ரூமை விட்டு வெளியே வந்தேன்....அப்போ அப்பா போனில் சொன்ன வார்த்தையை கேட்டு என் உயிரே நின்னுடுச்சு...."


"அ..அப்..அப்படி என்ன சொன்னாங்க???" தடுமாற்றத்துடன் வெளிவந்தது சித்தார்த்தின் குரல்.


நேற்று இரவு தான் கேட்ட, பார்த்த நிகழ்வுகளை ஒன்று விடாமல் சித்ரா சித்தார்த்திடம் ஒப்புவித்தாள்.


வாஞ்சிநாதனின் கோபமான குரலைக் கேட்டு பதட்டத்துடன்
தன் அறையில் இருந்து வெளியே வந்த சித்ரா வாஞ்சிநாதன் பேசியதை கேட்டு ஆணியடித்தாற் போல உறைந்து நின்றாள்.


"அவனை பிடிச்சு உயிரோடு சமாதி கட்டாமல் இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க??? நான் அங்கே வர்றேன்...அதற்குள்ள அவனை பிடிச்சு வைங்க....அவனுக்கும் என் கையால் தான் சாகணும்னு விதி இருக்கு..." என்று கூறி கொண்டே வாஞ்சிநாதன் வீட்டில் இருந்து வெளியேறி சென்று விட சித்ரா தான் கேட்ட வார்த்தைகளை நம்ப முடியாமல் திகைத்து போய் நின்றாள்.


"அப்பா இப்படி பண்ணுவாங்கனு நான் நினைச்சு கூட பார்க்கலண்ணா...." அழுத வண்ணம் சித்ரா கூற



அவளது கண்களை துடைத்து விட்டவன்
"அழாதே சித்ரா....எனக்கும் டாட் மேல ஒரு சந்தேகம் இருந்தது உண்மை தான்....ஆனா இந்தளவிற்கு டாட் போவார்னு நினைக்கல....நீ எதுவும் யோசிக்காமல் காலேஜ் போ....நான் இந்த விஷயத்தை கவனிச்சுக்குறேன்...சரியா???"


"சரிங்க அண்ணா..." என்றவாறே கண்களை துடைத்து கொண்டு சித்ரா அந்த அறையை விட்டு வெளியேறப் போக


"சித்ரா ஒரு நிமிஷம்...." என்றவாறு சித்தார்த் அவள் முன்னால் வந்து நின்றான்.


"இந்த விஷயம் நம்ம இரண்டு பேருக்கும் மட்டும் தெரிஞ்சதாக இருக்கட்டும்....மறந்து கூட மாம் கிட்ட சொல்லிடாதே....புரிஞ்சுதா???"


"சரிண்ணா...." என்று விட்டு சித்ரா அறையில் இருந்து வெளியே சென்று விட சித்தார்த்தோ தன் தலையில் கை வைத்து கொண்டு நின்றான்.


வேகமாக தன் அறையில் இருந்து வெளியேறி வந்தவன் தன் போனை எடுத்து வாஞ்சிநாதனுக்கு அழைப்பை மேற்கொள்ள மறுமுனையில் அழைப்பு எடுக்கப்படவே இல்லை.


"டாட் கிட்ட கண்டிப்பாக பேசியே ஆகணும்...ஏதோ சரி இல்லை...." என நினைத்து கொண்டே தன் காரில் ஏறி அமர்ந்த சித்தார்த் அடுத்த பத்தாவது நிமிடம் தங்கள் பாக்டரியின் முன்னால் நின்றான்.


மின்னல் வேகத்தில் லிப்டில் நுழைந்தவன் வேகமாக வாஞ்சிநாதனின் அறையை நோக்கி சென்றான்.


ஆனால் அங்கே வாஞ்சிநாதன் இருக்கவில்லை.


அங்கு வேலை பார்ப்பவர்கள் எல்லோரிடமும் சித்தார்த் கேட்டுப் பார்த்தும் யாருக்கும் வாஞ்சிநாதன் இருக்கும் இடம் தெரிந்து இருக்கவில்லை.


அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் தலையில் கை வைத்து நின்றவன் மறுபடியும் தன் போனை எடுத்து வாஞ்சிநாதனுக்கு அழைப்பை மேற்கொண்டான்.


இந்த முறையும் அழைப்பு எடுக்கப்படாமல் போக சித்தார்த்தை அச்சம் தொற்றிக் கொண்டது.


"சித்ரா சொன்னது போலவே டாட் ஏதாவது தப்பாக பண்ணி இருந்தால்...." நினைத்துப் பார்க்கவே சித்தார்த்தின் உள்ளம் நடு நடுங்கியது.


"டாட்டை கண்டிப்பாக காப்பாற்றியே ஆகணும்...." என மனதிற்குள் முடிவெடுத்து கொண்டவன் தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.


தோட்டத்தில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்த சரோஜா ஏதோ சத்தம் கேட்கவும் மெல்ல எழுந்து அந்த சத்தம் வந்த பக்கமாக நடந்து சென்றாள்.


வேகமாக யாரோ ஓடிச்செல்லும் சத்தம் கேட்க அந்த சத்தத்தை பின் தொடர்ந்து சென்றவள் அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை தாண்டி ஒருவன் பாய்ந்து செல்வதைப் பார்த்து விட்டு உடனடியாக வீட்டின் முன்னால் நின்ற தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு அந்த நபர் பாய்ந்த வீதியின் புறமாக தன் ஸ்கூட்டரை செலுத்தினாள்.


வெண்ணிற வேன் ஒன்று அங்கிருந்து செல்வதைப் பார்த்தவள் அந்த வேனை தன்னால் முடிந்த மட்டும் வேகமாக பின் தொடர்ந்து சென்றாள்.


அவளது குறிக்கோள் முழுவதும் அந்த வேனிலும், அவர்கள் வீட்டில் இருந்து பாய்ந்தோடிய நபர் மீதுமே இருக்க சரோஜா தெரிந்தோ, தெரியாமலோ இதை பற்றி வீட்டினரிடமும், அஜயிடமும் சொல்ல மறந்து போனாள்.


அவள் சொல்ல மறந்து போனது இன்னும் சற்று நேரத்தில் அவளுக்கே வினையாக அமையப் போவதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


வாஞ்சிநாதனின் போனுக்கு தொடர்ந்து சித்தார்த் அழைப்பு மேற்கொண்ட வண்ணம் இருப்பதை கண்டு கொண்ட அஜய் தன் போனை எடுத்து சித்தார்த்திற்கு அழைப்பை மேற்கொண்டான்.


அஜயிடம் இருந்து அழைப்பு வருவதைப் பார்த்து சித்தார்த்தின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டது.


"அஜய்....இவன் இப்போ எதுக்கு போன் பண்ணுறான்?? ஒருவேளை டாட்க்கு ஏதாவது பிரச்சினையோ???நோ...நோ...இருக்காது...." என்றவாறே போனை அட்டன்ட் செய்து காதில் வைத்த சித்தார்த்


"சொல்லு அஜய்...." என முயன்று உற்சாகமாக பேசுவது போல கேட்டான்.


"சித்தார்த் எங்க இருக்க?? ஆபீஸ்லயா?? வீட்லயா??"


"நான் வெளியே ஒரு வேளையாக போயிட்டு இருக்கேன் அஜய்....ஏன் ஏதாவது பேசணுமா???


"அப்படி எதுவும் இல்லை....அங்கிள் எங்கே சித்தார்த்??? உன் பக்கத்தில் இருக்காரா??? அவர் போன் ரீச்சே ஆக மாட்டேங்குது...."


"டாட்டா?? என் கூட இல்லையே....ஏன்?? ஏன் கேட்குற??" எவ்வளவு முயன்றும் சித்தார்த்தின் குரல் தடுமாறவே செய்தது.


"ஒரு சின்ன வேலை விஷயமாக பேசணும்....வேற எதுவும் இல்லை...நீ அங்கிளைப் பார்த்தால் எனக்கு போன் பண்ண சொல்லு சரியா??" என்று அஜய் கேட்கவும் சரியென்று விட்டு போனை வைத்த சித்தார்த் தன் காரை வீதியின் ஓரமாக நிறுத்தி விட்டு ஸ்டியரிங்கில் தலை குனிந்து அமர்ந்தான்.


"சுற்றி என்ன நடக்குதுனே தெரியல....டாட் யார் கிட்டயும் சொல்லாமல் அப்படி எங்கே போய் இருப்பாங்க?? என் கிட்ட கூட மறைக்குற அளவுக்கு டாட்க்கு என்ன பிரச்சனை???" என யோசித்து கொண்டே சித்தார்த் மீண்டும் தன் காரை ஸ்டார்ட் செய்தான்.


அஜய் ஒரு புறம் ஸ்டேஷனில் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் சித்தார்த் வாஞ்சிநாதனைத் தேடி கொண்டிருக்க இன்னொரு புறம் சரோஜாவின் ஸ்கூட்டர் கவனிப்பாரின்றி நடு வீதியில் விழுந்து கிடந்தது......
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
ஹுஸ்னா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top