• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Nizhalin Nijam - 21 [ Final ]

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
36159613_2109349879343673_4618991508689780736_n.jpgimages.jpeg
சரோஜா மயங்கி வீழ்ந்ததும் அஜய்க்கு ஒரு கணம் என்ன செய்வது என்றே தெரியவில்லை.


சரோஜாவின் கன்னத்தில் தட்டி அவளை எழுப்ப அஜய் முயற்சி செய்து கொண்டிருக்க மறுபுறம் மற்றைய காவலர்கள் சொன்ன தகவல்களை வைத்து ராஜஷேகர் ஆம்புலன்ஸ் மற்றும் இன்னும் ஒரு சில காவலர்களை அழைத்து கொண்டு அந்த இடத்திற்கு வந்திருந்தார்.


நவீன் மற்றும் சரோஜா இருந்த நிலையை பார்த்து அதிர்ந்து போன ராஜஷேகர் உடனடியாக ஆம்புலன்ஸ் ஒன்றில் சரோஜா மற்றும் நவீனை ஏற்றி அனுப்பி விட்டு அவர்களுடன் அஜயையும் அனுப்பி வைத்தார்.


வாஞ்சிநாதன் மற்றும் சித்தார்த் இரத்தத்தில் முற்றிலும் நனைந்து தங்கள் உயிரை தொலைத்து இருக்க சுற்றிலும் அந்த இடத்தை பார்வையிட்ட ராஜஷேகர் தன் நண்பனின் நிலையை எண்ணி ஒரு கணம் வருந்த அவர் மனமோ
"தவறிழைப்பவன் ஒரு நாள் தண்டனை வாங்கியே தீருவான்..." என்று எப்போதோ ஒரு நாள் தான் கேட்ட கூற்றை எண்ணி பார்த்து அவர் வருத்தத்தை இல்லாமல் ஆக்கியது.


அவர்கள் இருவரினதும் உடலை அப்புறப்படுத்த சொல்லி விட்டு ஏனைய காவல்துறையினர் பிடித்து வைத்திருந்த வாஞ்சிநாதனின் ஆட்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தவர் நவீன் மற்றும் சரோஜா அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலையை நோக்கி சென்றார்.


போகும் வழியில் கனகா மற்றும் வித்யாவிடம் ராஜஷேகர் தகவல் சொல்லி இருக்க ராஜஷேகர் ஹாஸ்பிடல் வந்து சேரும் அதே நேரம் வித்யா, கணேஷ் மற்றும் கனகாவும் ஹாஸ்பிடலை வந்து சேர்ந்தனர்.


அழுது கொண்டே ராஜஷேகரைப் பின் தொடர்ந்து சென்றவர்கள் அஜய் தலையை சுவற்றில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருப்பதைப் பார்த்து வேகமாக அவனருகில் விரைந்து சென்றனர்.


"அஜய்...." என்ற ராஜஷேகரின் அழைப்பில் மெல்ல கண் திறந்து பார்த்தவன் எதிரில் நின்ற கனகா, வித்யா மற்றும் கணேஷை குழப்பமாக பார்த்தான்.


"நான் தான் இவங்களுக்கு தகவல் சொன்னேன்....சரோஜா இப்போ எப்படி இருக்கா???"
ராஜஷேகரின் கேள்விக்கு


பதில் கூறாமல் சரோஜா வைக்கப்பட்டிருந்த அறையை திரும்பி பார்த்தவன்
"எதுவாக இருந்தாலும் ஐந்து, ஆறு மணி நேரம் கழித்து தான் சொல்ல முடியும்னு டாக்டர் சொல்லிட்டாங்க...." என்று கூற


"சரோஜா...." என கதறி அழுது கொண்டே வித்யா மயக்கமானார்.


அவசரமாக அருகில் இருந்த கதிரையில் அவரை அமரச் செய்த கணேஷ் வேகமாக தண்ணீரை ஒரு டம்ளரில் எடுத்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்தான்.


வித்யாவின் முகத்தில் சிறிது தண்ணீரை தெளித்து அவரை மயக்கத்தில் இருந்து எழுந்து அமரச் செய்தவன்
"அம்மா...இங்கே பாரும்மா...சரோஜாவுக்கு எதுவும் இல்லை...இங்கே பாரும்மா..." என அவர் கன்னத்தில் தட்ட


கணேஷின் கைகளை இறுக பற்றி கொண்ட வித்யா
"சரோஜாவுக்கு எதுவும் இல்லை தானே?" என கண்கள் கலங்க கேட்டார்.


வித்யாவின் முன்னால் வந்து முழங்காலிட்டு அமர்ந்து கொண்ட அஜய்
"அத்தை இங்க பாருங்க...சரோஜாவுக்கு எதுவும் ஆகாது...இத்தனை நாளாக ஊரை ஏமாற்றி பொய் வேஷம் போட்ட ஆளுங்களை இந்த உலகத்திற்கு கண்டு பிடித்து காட்டி இருக்கா நம்ம சரோஜா...அத்தனை ஆம்பளங்க முன்னாடி ஒற்றை பொண்ணா தைரியமாக நின்னு இருக்கா அவ...சரோஜாவை நினைத்து நீங்க பெருமைப்படணும்...இப்படி உடைந்து போககூடாது...தனக்கு எதுவும் ஆனாலும் பரவாயில்லைனு இவ்வளவு பெரிய ரிஸ்கை அவ எடுத்து இருக்கா...இங்க பாருங்க கடைசியாக அவ போனில் தான் எங்கே இருக்கேன்னு எனக்கு லொகேஷன் வரை அவ அனுப்பி இருக்கா...ஆனா பதட்டததில் அவ டேட்டாவை ஆன் பண்ணல...அதை மட்டும் சரியாக பண்ணி இ சரோஜாவை கொஞ்சம் முன்னாடி போய் காப்பாற்றி இருக்கலாம்...இப்போவும் எதுவும் கெட்டு போகல...சரோஜா பழைய படி வரத்தான் போறா...எல்லோர் கூடவும் சந்தோஷமாக பேசி சிரிக்கப் போறா...கவலைப்படாதீங்க அத்தை..." என்று கூற வித்யா சிறிது தைரியமாக அஜயை பார்த்து கொண்டு இருந்தார்.


ராஜஷேகர் அஜய் கூறிய வார்த்தைகளைக் கேட்டு புன்னகத்து கொண்டே சற்று தள்ளி போடப்பட்டிருந்த கதிரையில் சென்று கண் மூடி அமர்ந்து கொண்டார்.


அஜய் கூறிய அந்த வார்த்தைகள் வித்யாவிற்கு மாத்திரம் கூறப்பட்டது அல்ல அஜய் தனக்கு தானே தைரியம் கூற கூறி கொண்ட வார்த்தைகள் என்பதை உணர்ந்து கொண்ட ராஜஷேகர் அடுத்து என்ன செய்வது என்று மனதிற்குள் திட்டமிட்டு கொண்டிருக்க சிறிது நேரத்தில் சரோஜா வைக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்து டாக்டர் ஒருவர் வெளியேறி வந்தார்.


டாக்டரை நெருங்கி வந்த அஜய்
"சரோஜா இப்போ எப்படி இருக்கா டாக்டர்?" என்று கேட்கவும்


அவனது தோளில் தட்டி கொடுத்த டாக்டர்
"பயப்படுற அளவுக்கு எதுவும் ஆகல அஜய்...கொஞ்சம் ஓவர் பவரான போதை மருந்து அவங்க பிளட்ல கலந்து இருக்கு...நீங்க கரெக்ட் டைம்க்கு அவங்களை கொண்டு வந்ததனால் அவங்க உடம்பில் அந்த போதை மருந்து பரவ விடாமல் பண்ணிட்டோம்...இப்போ அவங்க மயக்கத்தில் இருக்காங்க...கொஞ்ச நேரம் கழித்து நீங்க போய் அவங்களை பார்க்கலாம்..." என்று விட்டு செல்ல சுற்றி நின்ற அனைவரும் நிம்மதியாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.


பழைய நினைவுகளில் நின்று கொண்டிருந்த அஜயின் தோளில் ராஜஷேகர் கை வைக்க தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு அவரை திரும்பி பார்த்தவன் அவரின் பின்னால் நின்ற ருத்ரா மற்றும் சித்ராவை தவிப்போடும், கவலையுடனும் நோக்கினான்.


ருத்ராவின் அருகில் அஜய் வரவும் கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவர் எதுவும் பேசாமல் வாயை இறுக மூடிக் கொண்டு அழ அஜய்க்கு அவரை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை.


"அம்மா...ப்ளீஸ் அழாதீங்க..." அஜய் ருத்ராவின் கை பற்றி கூறிக் கொண்டு நிற்க சித்ரா அவர்களை கண்கள் கலங்க வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.


சிறிது நேரத்தின் பின்னர்
அழுதழுது ஓய்ந்து போய் அங்கிருந்த கதிரையில் ருத்ரா அமர்ந்து கொள்ள ராஜஷேகர் மற்றும் சித்ரா கவலையுடன் அவரை பார்த்து கொண்டு நின்றனர்.


யாரிடம் யார் எதைப் பற்றி பேசுவது என்று யாருக்கும் அந்த நொடி புரியவில்லை.


அஜய் மாத்திரம் அந்த இடத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருக்க சிறிது நேரம் கழித்து சரோஜா வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து வெளியேறி வந்த நர்ஸ் ஒருவர்
"ஸார்...மேடம் கண் முழிச்சுட்டாங்க...உங்களை உள்ளே வரச் சொல்லி கூப்பிடுறாங்க..." என்று கூறியதும் தான் தாமதம் அடுத்த கணம் அஜய் அந்த அறைக்குள் நுழைந்து இருந்தான்.


அறைக்குள் நுழைந்த அஜய்க்கு சுற்றி நின்ற எதுவும் கருத்தில் படவில்லை.


வாடிய கொடி போல கட்டிலில் துவண்டு போய் கண் மூடி படுத்து இருந்த தன் மனைவியை ஒரே எட்டில் நெருங்கி சென்றவன்
"ரோஜா..." என குரல் கம்ம அழைத்தான்.


அஜயின் அழைப்பில் சட்டென்று தன் கண்களை திறந்து கொண்ட சரோஜா
"அஜய்..." என்றவாறே எழுந்து அமர்ந்து கொள்ள போக அவளை பார்த்து வேண்டாம் என்று தலை அசைத்தவன் அவள் கையை பற்றி கொண்டு அவளருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.


எவ்வளவு நேரமாக இருவரும் ஒருவருக்கொருவர் பார்வையாலேயே பேசிக் கொண்டு இருந்தனர் என்பது அவர்களுக்கே தெரியாது.


கதவு தட்டப்படும் ஓசையில் நனவிற்கு வந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகத்து கொண்டனர்.


அஜய் எழுந்து சென்று கதவைத் திறக்க வெளியே ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சரோஜாவைப் பார்க்க போகிறோம் என்ற ஆவலுடன் நின்று கொண்டிருந்தனர்.


"அம்மா...அத்தை...வந்துட்டீங்களா? ஸாரி...ரொம்ப நேரமாக வெளியில் நிற்க வைச்சுட்டேனா..." கவலையுடன் அஜய் கேட்கவும்


அவனை பார்த்து புன்னகத்து கொண்ட கனகா
"அப்படி எல்லாம் இல்லை அஜய்...இப்போ தான் நாங்க வந்தோம்...சரோஜா கண் முழிச்சுட்டா நீ உள்ளே இருக்கேன்னு அப்பா சொன்னாரு அது தான் கதவைத் தட்டி பார்த்தோம்..." என்று கூறவும் அவர்களைப் பார்த்து பதிலுக்கு புன்னகைத்தவன் அவர்கள் உள்ளே வருவதற்கு வழி விட்டு சற்று விலகி நின்றான்.


சரோஜாவை பார்த்ததும் வித்யா கண்கள் கலங்க
"சரோஜா..." என்றவாறே அவளை நெருங்கி அவளது தலையை வருடிக் கொடுக்க சரோஜாவும் கண்களில் நீர் சூழ தன் அன்னையின் மறு கையை பற்றி கொண்டாள்.


எல்லோரையும் சுற்றி ஒரு முறை தன் பார்வையை சுழல விட்டவள் அந்த அறைக் கதவருகில் தயங்கியவாறு நின்ற சித்ரா மற்றும் ருத்ராவை பார்த்து கலவரத்தோடு வித்யாவின் கைகளை மேலும் இறுக பற்றி கொண்டாள்.


வித்யா குழப்பமாக சரோஜாவை திரும்பி பார்க்க சரோஜாவின் பார்வையோ ருத்ரா மற்றும் சித்ராவின் மீதே இருந்தது.


சரோஜாவின் முகத்தையே பார்த்து கொண்டிருந்த அஜய் சரோஜாவின் இந்த திடீர் மாற்றத்தை பார்த்து கேள்வியாக அவளை பார்த்த வண்ணம் அவளருகில் சென்று அவள் தோளில் கை வைக்க பதட்டத்துடன் அவனைப் பார்த்த சரோஜா
"நான் உங்க கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்..." என்று கூறினாள்.


"இப்போ எதுவும் அவசரமாக பேச தேவையில்லை சரோஜா...கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு..." சரோஜாவின் தலையை வருடிக் கொடுத்தவாறே வித்யா கூறவும்


அவரைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள்
"இல்லை நான் இப்போவே பேசணும்..." என பிடிவாதமாக கூறினாள்.


வித்யா மறுப்பாக ஏதோ கூற போக அவரை பார்த்து வேண்டாம் என்பது போல தலை அசைத்த அஜய் சரோஜாவின் கையை ஒரு முறை மெல்லமாக அழுத்திக் கொடுத்து
"என்ன சொல்லணுமோ சொல்லு சரோஜா..." என்று கூறினான்.


அஜயை பார்த்து சரியென்று தலை அசைத்த சரோஜா மேற்கொண்டு பேசத் தொடங்கினாள்.


சரோஜா தன்னுடைய ஸ்கூட்டரில் தங்கள் வீட்டின் பின்னால் நின்று மர்ம நபர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வேனை விடாமல் துரத்திக் கொண்டு சென்று கொண்டிருக்க அந்த வேனில் உள்ளவர்களோ இதை கவனிக்கவில்லை.


ஆள் அரவமற்ற ஒரு சாலையில் அந்த வேன் நுழைந்ததும் தன்னால் முடிந்த மட்டும் தன் ஸ்கூட்டரை வேகமாக செலுத்திய சரோஜா ஒரு கட்டத்தில் அந்த வேனைக் கடந்து சென்று அந்த வேனின் முன்னால் தன் ஸ்கூட்டரை நிறுத்தினாள்.


சரோஜா திடீரென்று அந்த வேனின் முன்னால் ஸ்கூட்டரை நிறுத்த அந்த வேனிற்குள் இருந்த நபர்களோ கோபமாக வேனை விட்டு கீழிறங்கி வந்தனர்.


"ஏய் உனக்கு அறிவு இருக்கா? இல்லையா? நீ சாகுறதுக்கு எங்க வண்டி தான் கிடைச்சதா?" அந்த கும்பலில்
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஒருவன் சரோஜாவை கோபமாக முறைத்து பார்த்து கொண்டு கேட்க தன் ஸ்கூட்டரை விட்டு இறங்கி அவன் முன்னால் வந்து நின்ற சரோஜா தன் கைகளை கட்டி கொண்டு அவர்களை முறைத்த வண்ணம்
"யாரு சாகப் போறாங்கனு இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு புரிய வைக்குறேன்..." என்று கூற அந்த நபர்களில் ஒருவன் கோபமாக சரோஜாவை நெருங்கி வந்தான்.


அப்போதும் சரோஜா அசைந்து கொடுக்காமல் அவர்களை முறைத்து கொண்டு நிற்க அந்த கூட்டத்தில் ஒருவன் தன் போனை எடுத்து யாரிடமோ பேசி கொண்டு நின்றான்.


"ஒழுங்காக வழியை விட்டு விலகி நில்லு...இல்லேனா நடக்குறதே வேற..." அந்த நபர்களில் ஒருவன் தன்னால் முடிந்த மட்டும் பொறுமையாக சரோஜாவைப் பார்த்து கூறினான்.


"முடியாது...நீங்க எல்லோரும் எதற்காக எங்க வீட்டுக்கு பின்னால் ஒளிந்து நின்னீங்க? உங்களை எல்லாம் யார் அனுப்பி வைத்தாங்க? இதற்கு எல்லாம் பதில் சொல்லாமல் உங்க யாரையும் இந்த இடத்தை விட்டு நகர விடமாட்டேன்..." என்று சரோஜா கூறவும் அந்த நபர்கள் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்.


இதற்கிடையில் சரோஜா அவர்கள் கவனிக்கா வண்ணம் தன்னுடைய போனில் தான் எங்கே இருக்கிறோம் என்ற இடத்தை பற்றிய தகவல்களை அஜய்க்கு அனுப்பி வைத்தாள்.


ஆனால் அவசரத்தில் சரோஜா டேட்டாவை ஆன் செய்ய மறந்ததால் அந்த தகவல் அஜய்க்கு அனுப்பி வைக்கப்படாமலேயே போனது.


அப்போது அந்த நபர்களில் போன் பேசி கொண்டு நின்றவன் தன் போனை கட் செய்து விட்டு சரோஜாவின் அருகில் வந்து
"நீ தான் அந்த அசிஸ்டெண்ட் கமிஷனரோட வைஃப்பா?" என்று கேட்டுக் கொண்டே வேகமாக அவளது கன்னத்தில் அறைய சரோஜா அந்த அறையை தாங்க சக்தியின்றி மயக்கமடைந்து வீழ்ந்தாள்.


அதன் பிறகு அவர்கள் சரோஜாவை தூக்கி அவர்கள் வந்த வேனில் போட்டு கொண்டு அந்த குடோனை நோக்கி சென்றனர்.


அந்த நபர் அறைந்த வேகத்தில் சரோஜாவின் கையில் இருந்த போன் கீழே விழுந்து கிடக்க அதுவே கடைசியில் வாஞ்சிநாதன் முடிவுக்கும் வழி வகுத்தது.


மெல்ல மயக்கம் தெளிந்து சரோஜா கண் திறந்து பார்க்க முதலில் தான் எங்கே இருக்கிறோம் என்பது அவளுக்கு புரியவில்லை.


அந்த இடத்தில் தரையில் வீழ்ந்து கிடந்தவள் மெல்ல எழுந்து அமர்ந்து தன் ஆடையிலும், கையிலும் இருந்த தூசினை தட்டி விட்டவாறே அந்த இடத்தை சுற்றி தன் பார்வையை சுழல விட்டாள்.


சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டவள் அருகில் ஒரு தூணில் நவீன் இரத்தம் சொட்ட சொட்ட கட்டி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து பதட்டத்துடன் அவனை நெருங்கி சென்றாள்.


"நவீன்...நவீன் என்ன ஆச்சு உங்களுக்கு?" பதட்டத்துடன் அவனது கன்னத்தை தட்டிய சரோஜா அவசரமாக அவனது கை மற்றும் கால் முடிச்சுகளை அவிழ்த்து விட்டாள்.


நவீன் அரை மயக்கத்தில் சரோஜாவை நிமிர்ந்து பார்க்க சரோஜா தவிப்போடு அந்த இடத்தை விட்டு தப்பித்து செல்ல ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடி பார்த்த வண்ணம் நிற்க திடீரென்று அந்த குடோன் கதவு திறந்து கொண்டது.


சரோஜா சத்தம் கேட்டுதிடுக்கிட்டு போய் திரும்பி பார்க்க வாஞ்சிநாதன் அவர்களைப் பார்த்து புன்னகத்து கொண்டே அவர்களை நெருங்கி நடந்து வந்தார்.


சரோஜாவிற்கு அந்த நொடி எல்லா உண்மைகளும் பிடிபடத் தொடங்கியது.


கோபமாக வாஞ்சிநாதனை முறைத்து பார்த்தவள்
"எனக்கு அப்போவே தெரியும்...இவ்வளவு நாளாக நடந்த எல்லா பிரச்சினைக்கும் நீ தான் காரணம்னு...நிச்சயமாக நான் உன்னை சும்மா விடமாட்டேன்..." என சத்தமாக கூற அவளது சத்தம் அந்த குடோன் முழுவதும் எதிரொலித்தது.


"அப்படியா?" என்றவாறே சரோஜாவை பார்த்து கேலியாக புன்னகத்த வாஞ்சிநாதன்


"எதிரியோட இடத்திற்கு வந்து இப்படி வீரவசனம் பேசலேனா நீ ஹீரோயின் ஆக முடியாதே...அதனால நீ எவ்வளவு வேண்டுமானாலும் பேசு...பேசி முடிந்ததும் அவனுக்கு துணையாக உன்னையும் அனுப்பி வைக்கிறேன்...." என்று கூற சரோஜா வாஞ்சிநாதனை வெறுப்பாக நோக்கினாள்.


"சரி பர்ஸ்ட் யாரு திரு, ப்ரியா, லலிதாக்கு துணையாக போகப் போறீங்க சொல்லுங்க?" வாஞ்சிநாதன் தன் துப்பாக்கியில் தோட்டா ஒவ்வொன்றாக போட்டு கொண்டே கேட்க சரோஜா நவீனை அதிர்ச்சியாக திரும்பி பார்த்தாள்.


நவீன் சரோஜாவின் கை பிடித்து தள்ளி
"இங்க இருந்து போயிடு சரோ...எனக்கு எதுவும் ஆனாலும் பரவாயில்லை...நீ இங்க இருந்து போ...ப்ளீஸ்..." என்று கூற


சரோஜாவோ
"முடியாது நவீன்...இந்த வாஞ்சிநாதன் அழிவைப் பார்க்காமல் நான் போக மாட்டேன்..." என்று பிடிவாதமாக அந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றாள்.


வாஞ்சிநாதன் அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகத்து கொண்டே தன் துப்பாக்கியை சரோஜாவின் புறமாக குறி வைக்க
"டாட்...." என்றவாறே அந்த குடோனிற்குள் சித்தார்த் நுழைந்தான்.


சித்தார்த்தின் குரல் கேட்டு அனைவரும் அதிர்ச்சியாக சித்தார்த்தை திரும்பி பார்க்க வாஞ்சிநாதன் தன் கையில் இருந்த துப்பாக்கியை நழுவ விட்டவாறே அதிர்ச்சியோடு சித்தார்த்தை திரும்பி பார்த்தார்.


"என்ன டாட் இதெல்லாம்? அப்போ சித்ரா சொன்ன மாதிரி நீங்க ஏதோ தப்பான வேலை தான்
செய்துட்டு இருக்கீங்களா?" வாஞ்சிநாதன் முன்னால் வந்து நின்று சித்தார்த் கேட்கவும் வாஞ்சிநாதன் எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து நின்றார்.


"சொல்லுங்க டாட்..." சித்தார்த் வாஞ்சிநாதனின் தோளின் இருபுறமும் கை வைத்து உலுக்க நிமிர்ந்து அவனைப் பார்த்தவர்
ஆமென்று தலை அசைத்தார்.


சட்டென்று அவர் தோள் மீது இருந்த தன் கையை விலக்கி எடுத்தவன் சரோஜா மற்றும் நவீன் நின்ற புறமாக சென்று நின்றான்.


"அண்ணா..." சரோஜா சித்தார்த்தின் தோளில் கை வைக்க திரும்பி அவர்களைப் பார்த்தவன் பெருங் குரலெடுத்து சிரிக்க தொடங்கினான்.


நவீன் மற்றும் சரோஜா குழப்பமாக சித்தார்த்தைப் பார்க்க சித்தார்த் சிரித்துக் கொண்டே வாஞ்சிநாதன் அருகில் சென்று அவர் தோள் மேல் கை போட்டு கொண்டு நின்றான்.


"சித்து கண்ணா...பசங்க ஷாக் ஆகி நிற்குறாங்கடா...என்ன நடக்குதுனு சொல்லிடுபா..." என்று வாஞ்சிநாதன் கூறவும் சித்தார்த் புன்னகையோடு அவரை பார்த்து தலை அசைத்தான்.


"என்ன நவீன் அப்படி பார்க்குற? டாட் வெறும் ஆக்டிங் தான்...கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே இந்த ஐயா தான்..." சித்தார்த் நவீன் மற்றும் சரோஜாவைப் பார்த்து புன்னகத்தவாறே கண்ணடித்து கூறினான்.


"என்ன????" அதிர்ச்சியாக நவீன் மற்றும் சரோஜா ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள


சித்தார்த் புன்னகையோடு அவர்கள் இருவரின் அருகிலும் வந்து நின்று
"உங்க கிட்ட எல்லா உண்மையும் சொல்லி முடிக்க அந்த நேரம் பார்த்து உங்களைக் காப்பாற்ற யாரும் வந்து சேர...இது தேவையா? அதனால..." என்றவாறே அருகில் ஒரு மேஜையில் இருந்த ஒரு ஸ்ரிஞ்சை கையில் எடுத்தான்.

சரோஜா அதிர்ச்சியாக சித்தார்த்தைப் பார்க்க அவளை நெருங்கி வந்த சித்தார்த் சரோஜா சுதாரித்துக் கொள்ளும் முன்பே தன் கையில் இருந்த ஸ்ரிஞ்சை அவள் தோளில் செலுத்தி இருந்தான்.


நவீன் கையாலாகாத தனத்தோடு சரோஜாவின் கையை பற்றி இருக்க மறுபுறம் சித்தார்த் சரோஜாவின் மறுகையை பற்றி நின்றான்.


"பயப்பட வேண்டாம் சரோஜா...ஒரு சாதாரண இன்செக்ஷன் தான்...இரண்டு, மூணு மணி நேரத்தில் உன் உடம்பில் இந்த மருந்து கலந்துடும்...அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக ஹார்ட் பீட் லோ ஆகி அப்படியே உன்னை சொர்க்கவாசலுக்கு கூட்டிட்டு போயிடும்...சிம்பள்..." என்றவாறே சித்தார்த் சரோஜாவை திரும்பி பார்க்க சரோஜா தன் கையை அவன் கையில் இருந்து பிரித்து எடுக்க போராடிக் கொண்டு நின்றாள்.


"ரொம்ப கஷ்டப்படாதே சரோஜா...கொஞ்ச நேரம் தான் எல்லாம் சரியாகிடும்..." என வாஞ்சிநாதன் கூறவும்


அவரை கோபமாக நிமிர்ந்து பார்த்தவள்
"உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா? அது தான் இவ்வளவு சொத்து சேர்த்து வைத்து இருக்கீங்களே...அது போதாதா உங்களுக்கு? எதற்காக இப்படி அடுத்தவங்க வாழ்க்கையில் விளையாடுறீங்க?" என்று கேட்க வாஞ்சிநாதன் சித்தார்த்தைப் பார்த்து தோளை உலுக்கினார்.


"சரோஜா பணம் ஒரு போதை மாதிரி...ஒரு தரம் அது நம்ம கிட்ட வந்துடுச்சுனா திரும்ப திரும்ப அதை தேடி தான் நம்ம மனம் போகும்...நீ அடுத்த ஜென்மத்தில் பிறந்து வந்தா அந்த இன்பத்தை அடைய ட்ரை பண்ணு..." என வாஞ்சிநாதன் கூறவும் சரோஜாவோ மனதிற்குள் எப்படி இவர்களிடம் இருந்து தப்பித்து செல்வது என யோசிக்க தொடங்கினாள்.


"சரோஜா நம்மளை பாலோ பண்ணி வந்தா சரி...ஆனா நவீன் என்ன பண்ணுணான்? அவன் தான் நம்ம பாசத்துக்குரிய விசுவாசி ஆச்சே..." சித்தார்த் கேள்வியாக நவீனைப் பார்க்க நவீன் தலை குனிந்து நின்றான்.


நவீன் செய்த விடயங்களைப் பற்றி வாஞ்சிநாதன் சித்தார்த்திடம் கூறவும் சரோஜா அதிர்ச்சியாக நவீனை திரும்பி பார்த்தாள்.


நவீனோ குற்ற உணர்ச்சியோடு தலை குனிந்து நிற்க சித்தார்த் கோபமாக நவீனின் முன்னால் வந்து நின்று ஓங்கி ஒரு அறை அறைந்தான்.


"இத்தனை நாளாக எங்க வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு வளர்ந்தவன் இப்போ எங்களுக்கு துரோகம் பண்ண பார்க்குறியா?" என்று சித்தார்த் கோபமாக நவீனின் தலை முடியை பற்றி இழுக்கவும் நவீன் வலியால் தன் கண்களை இறுக மூடிக் கொண்டு நின்றான்.


"ஆனா சித்தார்த் நான் இங்க இருக்கேன்னு உனக்கு யார் சொன்னா?" வாஞ்சிநாதன் யோசனையாக சித்தார்த்தைப் பார்த்து கேட்கவும்
கண்களை மூடி ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு கொண்டவன் வாஞ்சிநாதன் புறம் திரும்பி கோபமாக அவரருகில் வந்து நின்றான்.


"யாரு சொன்னாங்களா? நேற்று நைட் என்ன நடந்தது தெரியுமா? சித்ரா நீங்க பேசுனது எல்லாம் கேட்டு இருக்கா...காலையில் வந்து என் கிட்ட சொல்லி ஒரே அழுகை...அவளை சமாதானப்படுத்தி அம்மா கிட்ட இந்த விஷயத்தை சொல்லாமல் உங்களை தேடி எவ்வளவு நேரமாக அலைந்தேன் தெரியுமா? நான் சொல்லித் தானே எல்லா விஷயமும் பண்ணுணிங்க...இப்போ இந்த விஷயத்தை பற்றி ஏன் என் கிட்ட சொல்லல..." என்று சித்தார்த் கோபமாக கேட்கவும்


தன் நெற்றியை நீவி விட்டு கொண்ட வாஞ்சிநாதன்

"அது வந்து பா...இது சின்ன விஷயம் தானேனு தான் உன் கிட்ட சொல்லல...எல்லாம் முடிச்சுட்டு உன் கிட்ட இதை
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சொல்ல இருந்தேன்...அதற்கிடையே இந்த பொண்ணு வேற குறுக்கே வந்துட்டா...மன்னிச்சிடுபா..." வாஞ்சிநாதன் சித்தார்த்தின் கைகளை பற்றி கொண்டு கவலையுடன் கூறவும்


அவர் கையின் மேல் தன் கையை வைத்து அழுத்தி கொடுத்தவன்
"பரவாயில்லை டாட்...நீங்க எதுவும் தப்பாக பண்ணிட்டு மாட்டிக்க கூடாதுனு தான் நான் நினைத்தேனே தவிர வேற எதுவும் இல்லை...அது மட்டுமல்ல அஜய் எனக்கு போன் பண்ணி இருந்தான்...எனக்கு என்னவோ அஜய் உங்களை சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டான்னு தோணுது...அதனால நாம உடனே இவங்களை டிஸ்போஸ் பண்ணிட்டு போயிடுறது நல்லதுனு தோணுது..." என்று கூறவும் வாஞ்சிநாதனும் ஆமோதிப்பாக வாஞ்சிநாதனைப் பார்த்து தலை அசைத்தார்.


"ஸாரி சரோஜா...கல்யாணம் ஆன அடுத்த நாளே உன்னை ரொம்ப தூரம் அனுப்பி வைக்கப் போறோம்..." என்றவாறே அவளருகில் வந்த சித்தார்த்


"உன்னை மாதிரி தான் அந்த ப்ரியாவும் ஓவரா பேசுனா...ஒரு சின்ன கிஃப்ட் அதை வைத்து அவ ஹஸ்பண்டோட சண்டை போட வைத்து அவளை போட்டு தள்ள பிளான் பண்ணா...பிளான் கொஞ்சம் சொதப்பிடுச்சு...ஆனா மேர்டர் மாத்திரம் சிறப்பாக நடந்தது இல்லையா டாட்?" என்றவாறு வாஞ்சிநாதனைப் பார்க்க


அவனை பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்த வாஞ்சிநாதன்
"ஆனாலும் இந்த காலத்தில் பசங்க ரொம்ப விவரம்...அந்த திரு பையன் அவனோட பொண்டாட்டி பணக்கார வேஷம் போட்டு சமூக சேவை செய்யுறவங்க எல்லாம் நல்லவங்க இல்லேனு சொன்ன ஒரு வசனத்தை வைத்து நம்மளை நெருங்கி வந்துட்டான்...எனக்கே ஷாக் ஆகிடுச்சு...இவ்வளவு விவரமானவங்க நம்ம ஊருக்கு தேவையில்லைனு அவனையும் அனுப்பி வைத்தா...அதற்கு மேல அந்த லலிதா...நம்பிக்கை துரோகம் பண்ணிட்டு ஓடி போக பார்த்தா...இதோ இந்த நவீன் மாதிரி...எங்களை பகைத்துக்கிட்டா என்ன நடக்கும்னு இப்போ புரியுதா? இப்போ உங்க இரண்டு பேரையும் மேல அனுப்பி வைத்தா மொத்தமாக எல்லா கணக்குகளையும் முடிச்சுடலாம்...இல்லையா?" என்றவாறே கீழே விழுந்து கிடந்த தன் துப்பாக்கியை எடுத்துக் கொள்ள சரோஜா வேகமாக நகரப் போனாள்.


ஆனால் அதற்குள் சித்தார்த் அவளது கையை பற்றி கொள்ள சரோஜா தவிப்போடும், பயத்தோடும் கண்களை மூடி கடவுளை மனதார வேண்டிக் கொண்டாள்.


"அஜய் எப்படியாவது இந்த இடத்திற்கு வந்து சேருவான்...அவனிடம் தன் உயிர் போவதற்குள் எல்லா உண்மையும் சொல்லி விட வேண்டும்..." என மனதிற்குள் நினைத்துக் கொண்டே சரோஜா கண்களை திறந்து கொள்ளவும் அஜய் அந்த குடோனில் நுழையவும் சரியாக இருந்தது.


சரோஜா எல்லாவற்றையும் கூறி முடிக்க அந்த இடத்தில் கனத்த அமைதி நிலவியது.


சரோஜா கூறிய விடயங்களை கேட்டு யார் அதிக பட்ச அதிர்ச்சியாகி நின்றார்கள் என்று யாருக்கும் புரியவில்லை.


ருத்ரா தன் கண்களை துடைத்து கொண்டு சரோஜாவின் முன்னால் வந்து நின்று
"நான் எங்கே என்ன தப்பு பண்ணேன்னு தெரியல...நான் ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டேன் போல...அதனால தான் நான் இத்தனை நாள் நம்பி இருந்த உறவு என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துருக்கு...உனக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு எங்களை மன்னிச்சுடுமா..." இரு கரம் கூப்பி நின்றவரின் கைகளை பற்றி வேண்டாம் என்று தலை அசைத்த அஜய்


"இதில் உங்க தப்பு எதுவும் இல்லைம்மா...தவறான எண்ணங்கள் கொண்ட அவங்க மனசு தான் இதற்கு காரணம்...அவங்க என்ன தான் வெளியே தப்பு பண்ணி இருந்தாலும் உங்களுக்கு உண்மையானவங்களா, உங்களை மனசு சங்கடப்பட்டு போக வைக்கல...அந்த வகையில் உங்க மேல எந்த தப்பும் இல்லை மா...அவங்க சேர்ந்த இடம் தான் சரி இல்லை..." என்று கூற ருத்ரா கண்கள் கலங்க அஜயின் கைகளில் தன் முகம் புதைத்து கண்ணீர் விட்டார்.


"அஜய் அண்ணா..." என்றவாறு அஜயின் முன்னால் வந்து நின்ற ருத்ரா


"எங்க அண்ணாவும், அப்பாவும் பண்ண தப்புக்கு பிராயச்சித்தம் என்ன பண்ணப் போறோம்னு தெரியல...ஆனா இத்தனை நாளாக நாங்க வாழ்ந்து அனுபவித்த எல்லாம் நிறைய பேரோட கண்ணீரும், இரத்தமும் தான்...அதனால இந்த சொத்து எல்லாவற்றையும் அப்பாவால் பாதிக்கப்பட்ட ஆசிரமத்திற்கு கொடுத்துடுங்கண்ணா...எனக்கு இன்னும் ஒரு மாதத்தில் படிப்பு முடிந்துடும்...அதற்கு அப்புறம் என்னோட அம்மாவை நான் நல்லா பார்த்துக்குவேன்..." என்று கூற அஜய் மட்டுமின்றி அங்கே நின்ற அனைவரும் சித்ராவை பெருமிதத்துடன் நோக்கினார்.


சிறிது நேரத்தின் பின்னர் ருத்ரா மற்றும் சித்ரா சென்று விட அஜய் மாத்திரம் சரோஜாவோடு அந்த அறையில் தங்கி இருக்க மற்ற அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.


சரோஜா ஏதோ சிந்தனை வயப்பட்டவளாக வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க அவளருகில் கட்டிலில் ஓரமாக வந்து அமர்ந்து கொண்ட அஜய் அவள் தோளில் தன் கரம் வைத்தான்.


சரோஜா அஜயை திரும்பி பார்த்து முயன்று புன்னகக்க அஜயோ அவளை கேள்வியாக நோக்கினான்.


"என்ன ஆச்சு டா?" சரோஜாவின் கண்களை பார்த்து கொண்டே அஜய் கேட்கவும்


கண்கள் கலங்க அவனை பார்த்தவள்
"நீங்க மட்டும் சரியான நேரத்திற்கு அங்கே வரலகேனா..." என்றவளின் வாயின் மேல் கை வைத்தவன்


"அப்படி எதுவும் ஆகாது...ஏன்னா நீ மெசேஜ் பண்ணலனாலும் சித்தார்த்தை வைத்து கண்டிப்பாக உன்னை நான் கண்டுபிடித்து இருப்பேன்..." என்று கூற அவனது தோளில் புன்னகையோடு சரோஜா சாய்ந்து கொண்டாள்.


"உலகம் எவ்வளவு வினோதமானது இல்லையா அஜய்? வாஞ்சிநாதன் வெளி உலகிற்கு நல்லவராக ஒரு வேஷம் போட்டார்...ஆனா அவர் நிழலில் வேற ஒரு தோற்றம் இருந்தது...அது தான் முடிவுனு நெருங்கி போனால் அந்த வாஞ்சிநாதன் நிழலுக்கு பின்னாடி இன்னொரு பெரிய நிஜம் ஒளிந்து இருந்து இருக்கு...இப்படி தானே எல்லோர் வாழ்விலும் ஒரு நிஜம் ஒளிந்து இருக்கும் இல்லையா?" என சரோஜா கேட்கவும்


அவளை பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்த அஜய்
"ரொம்ப சரியாக சொன்ன...ஒவ்வொரு நல்ல விடயங்களுக்கு பின்னாடியும் சரி, ஒவ்வொரு கெட்ட விடயங்களுக்கு பின்னாடியும் சரி ஒரு உண்மை மறைந்து இருக்கும்...அதை கண்டு பிடித்து நல்லதாகவோ, கெட்டதாகவோ மாற்றி கொள்ளுறது அவங்க அவங்க கையில் தான்...வாஞ்சிநாதன் வெறும் நிழல் தான்...அந்த நிழலின் நிஜம் சித்தார்த்..." என்று கூற சரோஜா அஜயின் கைகளை ஆதரவாக பற்றி கொண்டாள்.


"ஆனாலும் உனக்கு இவ்வளவு தைரியம் ஆகாது சரோஜா...தனியா அவங்க பின்னாலேயே போய் இருக்க...உன்னை காணலனு சொன்னதும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?" என அஜய் கவலையுடன் கூறவும்


அவன் முகத்தை தன் புறமாக திருப்பிய சரோஜா
"அது தான் நீங்க என்னோட நிழலாக இருக்கும் போது நான் எதற்கு பயப்படணும்..." என்று கேட்க


புன்னகையோடு அவள் நெற்றியில் தன் இதழ் பதித்த அஜய்
"இப்போ மட்டும் இல்லை எப்போதும் இந்த ராஜா என்னுடைய ரோஜாவுக்கு நிழலாக தான் இருப்பான்...." என்று கூற சரோஜா மனம் நிறைந்த சந்தோஷத்தோடு அஜயின் தோளில் சாய்ந்து கொண்டாள்.


ஒவ்வொரு நிழலின் பின்னணியிலும் ஒரு நிஜம் இருக்கும்.


அந்த நிழலின் நிஜத்தை அறிந்து கொள்ளாவிட்டால் வாழ்வில் இன்பமேது?


அஜய் சரோஜாவின் நிழலாக அவளை காதல் செய்ய அந்த காதல் இன்று போல் என்றும் சந்தோஷத்தை அவர்கள் வாழ்வில் வாரி வழங்க வேண்டும்.....
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
wow well done....:cool::cool:
super ra muduchutinga... husna.....(y)(y)(y)
nilalin nijam sidharth sathiyama yathir pakatha twistuu...:devilish::devilish:

raja, roja happy irukanum...:love::love::love:
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top