• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

No

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

N

No name

Guest
En peyar nan solla virumba villai en vayathu 24 nan oru thaniyar niruvanathil panipurikiren engal vitil nan en amma en thangai mattume nangal pirantha konjam nal kazhithu enga appa veru thirumanam seithu kondar nangal ammavin valarpil valarntha pasanga enga amma engala valakka romba kastapattanga amma voda kastatha pathu tha valanthom enga amma house keeping vela senji enga 2 peraiyum clg varaikum padikka vechanga romba pasama valathanga 2 peraiyum nan 10th padikum pothu oru paiyana virumbuna avan tha en ulagam ellame nenachen ana Ava enna virumbothe Vera oru ponnaiyum virumbi irukan nan athu theriyama avana lusu mari virumbi iruken avan 2 vatha love pannu ponna merrage pannitan enna time poss nnu solli vittutan nan avanukaka susait panna pona analum enga amma pasama enna saga vidala ithu enga vitla ellarukum therium aprom en clg en vela nnu ellame balls pochi vitlaiyum varan pathanga athu ethum sari illai appa ellatha thala ellam avanga estathuku varan pathanga ellam me god niruthitaru .pona year December oru paiyan vanthu enkitta yenga nan ungala romba nala pathuttu iruken ungala pathi visarichathula therinjichi ninga enna Vida 4 years periya pannu nu sorry sollittu poitan athe paiyan 1 month kalichi ungala ennala maraka mudiyannu sonna nanum avanuku ithellam saripattu varathu Ni un velaiya pathuttu po nnu kandichen marupadiyum vanthan oru vela nan erkanave oru paiyana virumbi iruken nnu ennoda past life en family story sonna apaiyum avan Ni tha venum Na .ennala avana avoid panna mudiyala avan love kku OK sonna avanga vitla OK sonna OK nnu sonna avanga vitlaiyum starting la yarum othukala avanga amma en kupttu pesunanga Ni un paiyana iruntha etha yethukuviya ithellam vena sollitanga nanum avana avoid panna enga vitlaiyum en thangachi kitta solliten avalum enga amma kitta sollita avanga avana kalyanam panna nan sethuduvennu solranga enga vitla Ni love panrathu prachna illai Ni enna Vida China paiyana love panrathu tha prachana avanuku oru age vanthathunna unna vittuduvan Aprom niyum enna mari tha irukanum avan vena nu solranga nanum avanuku puriya vaikka muyarchipanna avan purinjikala avan enna romba love panrannu ennaku theriyuthu irunthalum enga amma VA ennala vittu poga mudiyala athanala en ammavum en thangachi yum tha mukiyam Ni ennaku vena nu solliten avan enna Ava wife fa nenachi en name avan nenjila pacha kuthitan en venanu sonna thala susait pannikitan ennaku enna panrathu nnu theriyala avana marakavum ennala mudiyala nan enna panna enga vitla ennaku varan pakuranga avan romba nalla paiyan en 1 love la Na avana evvolo virumbuneno athanala Vida athikama Evan enna viruran nan enna panrathu ennaku age 25 agapoguthu avanuku 21 agapoguthu avan clg mudichi job Ku thetran nan enna panna ennaku oru vazhi sollunga ma itha ninga news paper website ethulaiyum varama pathukonga ninga oru vazhi sollunga eppadiku ungal nangal.
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இது உங்கள் அந்தரங்கம் சகோதரி. இதை யாரும் அம்பலப்படுத்த மாட்டார்கள். கவலை வேண்டாம்.
21 வயது என்பது என்னைப் பொறுத்தவரை மிகவும் சிறிய வயது. அந்த வயதில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் முதிர்ச்சி ஆணுக்கு இருப்பதில்லை.
உங்கள் அம்மா வாழ்க்கையை வாழ்ந்த அனுபவசாலி. அதனாலேயே அவர் சொல்வது சரியென்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர் கூறுவதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.
பையன் ஒரு வேலை தேடிக் கொள்ளட்டும். கொஞ்சம் அவருக்கும் அவகாசம் கொடுங்கள். வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளட்டும்.
உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் (உங்களுக்கு வரன் பார்ப்பவர்கள்) தெளிவாக கொஞ்சம் கால அவகாசம் கேளுங்கள்.
உங்கள் இறந்த காலத்தின் கசப்பான அனுபவத்தை அறிந்த ஒரு தூய்மையான அன்பை (அது உண்மையாக இருக்கும் பட்சத்தில்) உதாசீனப் படுத்துவதும் முட்டாள் தனம்.
அவசரக் கோலத்தில் முடிவெடுக்க வேண்டாம். 25 வயதாகிறது என்று சொல்கிறீர்கள். இருந்தாலும் பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது. இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் போது அவசர முடிவு வேண்டாம் என்று நினைக்கிறேன்.
இது என் அபிப்பிராயம் சகோதரி.
@lakshmi2407
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
En peyar nan solla virumba villai en vayathu 24 nan oru thaniyar niruvanathil panipurikiren engal vitil nan en amma en thangai mattume nangal pirantha konjam nal kazhithu enga appa veru thirumanam seithu kondar nangal ammavin valarpil valarntha pasanga enga amma engala valakka romba kastapattanga amma voda kastatha pathu tha valanthom enga amma house keeping vela senji enga 2 peraiyum clg varaikum padikka vechanga romba pasama valathanga 2 peraiyum nan 10th padikum pothu oru paiyana virumbuna avan tha en ulagam ellame nenachen ana Ava enna virumbothe Vera oru ponnaiyum virumbi irukan nan athu theriyama avana lusu mari virumbi iruken avan 2 vatha love pannu ponna merrage pannitan enna time poss nnu solli vittutan nan avanukaka susait panna pona analum enga amma pasama enna saga vidala ithu enga vitla ellarukum therium aprom en clg en vela nnu ellame balls pochi vitlaiyum varan pathanga athu ethum sari illai appa ellatha thala ellam avanga estathuku varan pathanga ellam me god niruthitaru .pona year December oru paiyan vanthu enkitta yenga nan ungala romba nala pathuttu iruken ungala pathi visarichathula therinjichi ninga enna Vida 4 years periya pannu nu sorry sollittu poitan athe paiyan 1 month kalichi ungala ennala maraka mudiyannu sonna nanum avanuku ithellam saripattu varathu Ni un velaiya pathuttu po nnu kandichen marupadiyum vanthan oru vela nan erkanave oru paiyana virumbi iruken nnu ennoda past life en family story sonna apaiyum avan Ni tha venum Na .ennala avana avoid panna mudiyala avan love kku OK sonna avanga vitla OK sonna OK nnu sonna avanga vitlaiyum starting la yarum othukala avanga amma en kupttu pesunanga Ni un paiyana iruntha etha yethukuviya ithellam vena sollitanga nanum avana avoid panna enga vitlaiyum en thangachi kitta solliten avalum enga amma kitta sollita avanga avana kalyanam panna nan sethuduvennu solranga enga vitla Ni love panrathu prachna illai Ni enna Vida China paiyana love panrathu tha prachana avanuku oru age vanthathunna unna vittuduvan Aprom niyum enna mari tha irukanum avan vena nu solranga nanum avanuku puriya vaikka muyarchipanna avan purinjikala avan enna romba love panrannu ennaku theriyuthu irunthalum enga amma VA ennala vittu poga mudiyala athanala en ammavum en thangachi yum tha mukiyam Ni ennaku vena nu solliten avan enna Ava wife fa nenachi en name avan nenjila pacha kuthitan en venanu sonna thala susait pannikitan ennaku enna panrathu nnu theriyala avana marakavum ennala mudiyala nan enna panna enga vitla ennaku varan pakuranga avan romba nalla paiyan en 1 love la Na avana evvolo virumbuneno athanala Vida athikama Evan enna viruran nan enna panrathu ennaku age 25 agapoguthu avanuku 21 agapoguthu avan clg mudichi job Ku thetran nan enna panna ennaku oru vazhi sollunga ma itha ninga news paper website ethulaiyum varama pathukonga ninga oru vazhi sollunga eppadiku ungal nangal.
ஹாய், வணக்கம்...

முதல்ல ஒரு விஷயத்தைத் தெளிவாச் சொல்லிடுறேன்:

நான் சைக்காலஜிஸ்டு இல்ல! ‘முகம் தெரியாத நண்பன் / நலம் விரும்பி’ அப்படிங்குறதத் தவிர எனக்கு வேற எந்தத் தகுதியும் இல்ல, எனவே நான் சொல்லப்போவதை நீங்கள் எடைபோட்டுப் பார்த்து, ஏற்றதைச் செய்யவும்!

நான் உங்களுக்குச் சொல்ல விரும்புறதுலாம் ஒன்னே ஒன்னுதான்:

உங்க கடந்த காலத்தை மறக்க உங்க எதிர்காலத்தில் மேல கவனம் செலுத்துங்க!

உங்க அம்மா, தங்கச்சி, நீங்க மூனு பேருமே நல்லா இருக்கனும், அதை உங்க குறிக்கோளா வெச்சுக்கோங்க... அதை நோக்கிப் பயணப்படுங்க...

25 என்பது சின்ன வயசுதான், இப்பலாம் பெண்களின் சராசரி திருமண வயது 28-லேர்ந்து 30-வரை...

உங்க அம்மா கஷ்டப்பட்டு உங்க இரெண்டு பேரையும் காலேஜ் டிகிரிவரை படிக்க வெச்சாங்க, நீங்க அவங்களுக்குப் பதிலுக்கு என்ன பண்ணப் போறீங்கணு யோசிங்க?

உங்களுக்கு ஏற்ற ஒரு வேலை தேடிக்கோங்க, கொஞ்ச நாளைக்கு உங்க மூனு பேர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துறதுல கவனம் செலுத்துங்க...

உங்க தங்கசிக்கு விருப்பம் இருந்தா அவங்களை மேல படிக்க வைங்க,

முடிஞ்சா நீங்களும் பார்ட்-டைம் / கரஸ்பாண்டன்ஸ் இப்படி ஏதாச்சு மேல படிங்க...

மறுபடி நான் முதல்ல சொன்னதையே சொல்றேன்:

உங்க கடந்த காலத்தை மறக்க உங்க எதிர்காலத்தில் மேல கவனம் செலுத்துங்க!

ஒரு பெரிய டார்கெட் (3னு / 5சு வருஷம் கழிச்சு நீங்க எப்படி இருக்க விரும்புறீங்க?),

அதை நோக்கி உங்களைச் செலுத்தும் சின்னச் சின்ன டார்கெட்டுகள் (6 மாசதுக்கு ஒன்னு / 1 ஆண்டுக்கு ஒன்னு - நான் மேலே குறிப்பிட்ட வேலை, கல்வி இப்படி ஏதாச்சு!)

தினசரி வாழ்க்கைல மனசு ஊசலாடும்போதோ / கஷ்டப்படும்போதோ அதை ஒருமுகப்படுத்த ஆன்மிகம், புத்தகம், தோட்டம்... இப்படி ஏதாச்சு ஒரு பழக்கத்த ஏற்படுத்திக்கோங்க...

உங்க எண்ணங்களை இங்க எங்களோட பகிர்ந்துக்கோங்க (இதே மாதிரி பெயர் சொல்லாமலே பகிர்ந்துக்கலாம்...)

----

நான் முன்ன சொன்ன மாதிரி, நான் அங்கீகரிக்கப்பட்ட உளவியல் ஆலோசகன் கிடையாது எனவே, நான் சொன்னது உங்க பிரச்சனைக்குத் தீர்வா தெரியலைனா யோசிக்காம விட்டுடுங்க...

இங்க இருக்கும் தோழிகளில் யாராவது வேறு நல்ல உகந்த யோசனை சொல்லலாம்...

ஆனா, எதுவுமே பயன்படாதுனு தோனினாலோ / பயன்படலேனாலோ யோசிக்காம ஒரு நல்ல மனநல ஆலோசகரைப் போய் பாருங்க...

மனநல மருத்துவரைப் பார்த்தா நம்மைத் தப்பா நெனச்சுப்பாங்கனு நினைக்காதீங்க... எப்படி ஒரு தலைவலி, வயிற்று வலினா டாக்டர்-கிட்ட போறோமோ அப்படித்தான் இதுவும்...

---

உங்கள் வாழ்வு இனிதாக என் வாழ்த்துகள் தோழி... (y)(y)(y)
 
Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
முதலில் பெயர் தெரியாத தோழிக்கு எனது வணக்கம்.

நீங்க சிறு வயதில் இருந்து தந்தை இல்லாமல் வளர்ந்திருக்கிறீங்க. உங்க அம்மா உங்களையும் உங்க தங்கையையும் நல்லா படிக்க வச்சு சுயமா நீங்க சம்பாதிக்கற அளவு வளர்த்திருக்காங்க. அதுக்கு கண்டிப்பா நிறைய கஷ்டப்பட்டிருப்பாங்க இல்லையா?

அவர்களுடைய உலகம் உங்க இருவரை சுற்றி தான் . அவங்க உங்களுக்கு சொல்வது அனைத்தும் உங்க நல்லதுக்காகத் தானே இருக்கும்.

முதலில் நீங்க பத்தாவது படிக்கும் போது காதல் என்று மனதில் நினைத்தது காதலே அல்ல. அது வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே. எதிர் பாலினரைப் பார்த்தாலோ, அவர்கள் நம்மோடு சற்று சிரித்துப் பேசி பழகினாலோ, அல்லது உண்மையான அன்பை காட்டுபவர்களாகக் கூட இருக்கலாம் அவர்கள் மீது நம் மனம் செல்வது அந்த வயதில் இயற்கை.

அந்த வயதில் வாழ்க்கைப் பற்றிய புரிதலோ, அனுபவ அறிவோ நம்மிடம் இருக்காது. அந்த வயதில் காதல் , திருமணம் போன்ற முடிவுகளை எடுப்பது தவறு. நன்மை தீமையை அலசி ஆராயும் பக்குவம் அந்த வயதில் நம்மிடையே இருக்காது.

ஆகவே அந்த வயதில் நீங்கள் காதல் என்று நினைத்தது காதலே அல்ல. அதை நினைத்து குற்ற உணர்வு கொள்ளத் தேவையும் இல்லை. அப்படிப்பட்ட ஒருவனிடம் இருந்து தப்பித்து விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். அதற்காக உங்களை பெற்ற தாயை எண்ணிப்பார்க்காமல் தற்கொலை வரை சென்றது முட்டாள் தனத்தின் உச்சம் என்றே சொல்வேன்.

இப்பொழுது உங்கள் வயது 25 ஐ நெருங்குகிறது. எது சரி எது தவறு என்று பகுத்துணரும் பக்குவம் தங்களுக்கு வந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.

உங்களுடைய கடிதத்திலே உங்களுடைய நிலைப்பாடு தெரிகிறது. இரு வீட்டினரும் சம்மதிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். தாயின் பேச்சை மீறவும் முடியாது அந்தப் பையனின் அன்பையும் இழக்க முடியாது என்ற நிலையில் இருக்கிறீர்கள் இல்லையா?

அந்தப் பையனுக்கு வயது தற்போது 20 அல்லவா? அவனுக்கென்று உத்யோகமும் இல்லை. இன்னமும் படித்துக் கொண்டிருக்கும் பையனாக இருப்பான் என்று நினைக்கிறேன். பெண்களுக்கு 20,21 வயதில் சற்று முதிர்ச்சி வந்து விடும் தோழி ஆனால் ஆண்களுக்கு குறைந்தது 24,25 வயதாவது ஆக வேண்டும்.

அவனுக்கு வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் தெரியாத வயது. உன் புறத்தோற்றத்தால் மட்டுமே கவரப்பட்டு உன்னைத் திருமணம் செய்ய நினைக்கிறான். ஒரு நான்கு வருடம் கழித்து அவனது தவறை அவன் உணரக்கூடும். அப்போது நீ அவனுடன் உன் வாழ்க்கையை இணைத்திருந்தால் உன் வாழ்க்கை பாழாகக்கூடும்.

இது நீ உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கும் தருணமல்ல... அறிவுப் பூர்வமாக சிந்திக்க வேண்டிய தருணம்.

நம் வாழ்க்கை நம் கையில் . உன் உள்ளம் சொல்வதைக் கேள். கண்டிப்பாக அது உன் தாய் உனக்கு நல்லதையே செய்வார் என்று சொல்லும். உன் படிப்பிற்கேற்ப ,உன்னை நல்லபடியாக கவனித்துக் கொள்ளும் அளவு வருமானம் தரும் நல்ல உத்யோகத்தில் இருக்கும், உனது தாய் பார்க்கும் வரனைத் திருமணம் செய்து கொள்.

அந்தப் பையனுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க முயற்சி செய் , ஒத்துவர வில்லை என்றால் அவனை ஒதுக்கு. நாளடைவில் அவனே புரிந்து கொள்வான்.

வாழ்த்துகள் தோழி. அருமையான திருமண வாழ்வு அமைய வாழ்த்துகிறேன்.
 
Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
கொஞ்சம் கத்திமேல் நடப்பது போல உள்ளது உங்கள் நிலைமை. பள்ளி பருவத்தில் வந்தது காதல் இல்லைமா. அதையும் காதல் நீங்கள் கணக்கில் கொண்டு வரவேண்டாம். உங்கள் தாயார் உங்களை ஆண்களுக்கு சாதகமான உலகத்தில் உங்களை எவ்வளவு சிரமமான சூழ்நிலையில் வீட்டு வேலை செய்து பட்டப் படிப்பு படிக்க வைத்துள்ளார். அந்த பொறுப்பான தாயாரின் மகளாக நீங்கள் பொறுப்புடன் யோசனை செய்ய வேண்டும். உங்களுக்கு தன் கடமையைச் செய்த தாயாருக்கு உங்களால் என்ன செய்ய முடிந்தது. அவரின் அனுபவத்தையும், அறிவுரையும் யோசித்து பாருங்கள் மா. உங்களை காதலிக்கிறேன் என்று சொல்லும் அந்த பையனுக்கு வாழ்வில் பொறுப்பாக குடும்பத்தை ஏற்று நடத்தும் வயதா?. அவர் வேலை கிடைத்து வாழ்க்கையில் பக்குவம் கிடைத்தும் உங்கள் மீது இதே காதலுடன் இருந்தால் அவரது காதல் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அதற்காக நீங்கள் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதை இப்பொழுது சொல்ல முடியாது. அதனால் நீங்கள் முதலில் உங்களது வேலையில் முனைப்போடு பணியாற்றி முன்னேறுங்கள். உங்கள் தங்கை உங்களுக்காக காத்திருக்க வைக்காமல் அவருக்கு திருமணம் செய்து வைத்து அம்மாவை வாழ்க்கையில் மீதமுள்ள பகுதியை நிம்மதியுடன் எதிர்நோக்கும் வண்ணம் பொருளாதாரம் ஏற்படுத்திக் கொண்டு வைத்துவிட்டு காதலருக்காக காத்திருக்கலாம், உண்மையான காதலாக இருக்குமானால் காத்திருப்பதும் சுகம்தான். அது வரை மனதளவில் மட்டுமே பழக்கம் இருக்க வேண்டும்.
அந்த காதலன் இதற்கெல்லாம் ஒத்து வராவிட்டால் உங்கள் தாயார் பார்க்கும் வரனை நன்கு ஆராய்ந்து கவனத்துடன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து மணம் செய்து வாழுங்கள்.
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஹாய்ம்மா, உங்கள் அந்தரங்கம் வேறெங்கும் பகிரப்படமாட்டாதும்மா.

21 வயது என்பது பக்குவமான முடிவெடுக்கும் பருவம் சர்வ நிச்சயமாகக் கிடையாது. இப்பொழுது சரியாகப்படும் எல்லா விஷயமுமே கொஞ்ச நாள் கழித்து யோசித்துப் பார்க்கும் பொழுது தவறாகத் தோன்றும். நெஞ்சில் பச்சைக் குத்திக் கொள்வது என்பதெல்லாம் உங்களை ஏதோ ஒரு வகையில் நிர்பந்தப்படுத்துவதற்காகவே என்றே தோன்றுகிறது. இது படிக்கும் வயது. முதலில் படித்து நல்ல ஒரு வேலையைத் தேடச் சொல்லுங்கள். அதில் கவனம் மாறும் பொழுது வெளியுலக கஷ்டங்கள் புரியும் பொழுது அவராகவே உங்களை விட்டு விலக் வாய்ப்புகள் இருக்கிறது.
உங்கள் அம்மா அனுபவசாலி. அவர் கூறுவது முற்றிலும் சரியான கருத்தே என்னைப் பொறுத்த வரையில். நீங்களும் உங்கள் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்புங்கள். வேலை பார்க்கும் இடத்தில் இடமாற்றம் செய்ய முடியுமென்றால் அதை முயற்சி செய்து பாருங்கள். இடமாற்றம் உங்களுக்குள்ளும் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கும்.
சில நாட்கள் அவரவர் வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகும் அந்தப் பையன் உங்களையே விரும்பினால், உங்களுக்கும் நாட்டம் இருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள். இப்போதைக்கு எந்த முடிவும் உடனடியாக எடுக்காமல் ஒத்தி வைத்துவிட்டு உங்கள் அம்மா தங்கை வேலை படிப்பு என்பதில் கவனமாக இருங்கள்.
 
Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
வணக்கம் தோழி,

கவலை படாதிங்க...யாரும் இத வெளில சொல்ல மாட்டோம்...

முதல்ல நீங்க 10th படிக்கும் போது வந்தது காதலே கிடையாது...அது ஒரு இனக்கவர்ச்சி மட்டும் தான்..

அந்த வயசுல ஒரு பையன் நம்ம மேல அதிக பாசம் காமிச்சாலோ..நமக்கு புடிச்சதுலாம் வாங்கி கொடுத்தாலோ...மனசு அவுங்க சைடு சாய ஆரம்பிச்சிடும்...அத நீங்க தப்பா காதல்னு எடுத்து கிட்டிருக்கிங்க..

அந்த பையன்னா விலகி போனத சந்தோஷமா எடுத்துக்காம..சூசைடு அட்டன்ட் பன்னது ரொம்ப தப்பு...

அப்பா இல்லாம உங்கள வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க உங்க அம்மா..ஒரு நொடி கூட அவுங்க முகமும்,தங்கச்சியும் நியாபகத்துக்கு வரலியா... இன்னுமொரு முறை கூட அந்த எண்ணத்த வர விடாதிங்க...இது என்னுடைய கைண்ட் ரிக்கவஸ்ட்.

அப்புறம் அந்த பையனுக்கு 21 வயசுன்னு சொல்லுறிங்க...கண்டிப்பா ஒரு ஆணுக்கு முடிவெடுக்குறதுக்கான மெச்சுர் லேவல் கிடையாது...24க்கு மேல தான் அவுங்களுக்கு மெச்சுரிட்டி லேவல் வரும்..வாழ்க்கையோட மேடு பள்ளங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்கும்....

என்ன பொருத்த வரைக்கும் உங்க அம்மா சொல்லுறது தான் கரைக்ட்..

பச்ச குத்துறது எல்லாம் உங்கள ஒத்துக்க வைக்கிறதுக்கான ஒரு செயல்...

இப்போதைக்கு இடம் மாற்றம் பண்ண முடியும்மானு பாருங்க...

பார்ட் டைம்ல ஏதாவது ஒரு கோர்ஸ் சேர முடியும்முன்னா சேருங்க...இல்ல உங்களுக்கு பிடிச்ச வேலையில உங்க மனச திருப்புங்க... உங்க குடும்பத்தோட வாழ்வாதாரத்த உயர்த்த பாருங்க..

அப்புறம் அந்த பையன் படிச்சு முடிக்கனும்...வேலைக்கு போகனும்..இன்னும் சில வருசம் கண்டிப்பா ஆகும்...அப்பவும் அந்த பையன் இதே காதலோட இருந்தான்னா கல்யாணம் பண்ணிக்கோங்க...இல்லைன்னா உங்க அம்மா பார்க்குற வரனுக்கு முழு மனசா ஓகே சொல்லுங்க...
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
வணக்கம்!!

நான் உங்களுக்கு அறிவுரையெல்லாம் சொல்ல மாட்டேன். ஏன்யென்றால் உங்கள் வாழ்க்கைக்கு எது நல்லது கெட்டது என்று முடிவு எடுக்கும் பக்குவம் உங்களுக்கு இருக்கு என்று நம்புகிறேன்...

உங்களுக்கும் அந்த பையன் மேலே விருப்பமிருக்கு. இல்லையென்றால் நீங்கள் ஆலோசனை கேட்டு இங்கே வந்து இருக்க மாட்டீங்க.. ஏதாவது மாஜிக் நடந்து இரு குடும்பமும் சம்மதத்துடன் திருமணம் நடக்காதா என்கிற தவிப்பு உங்க மெசெஜில் தெரியுது..

இது தான் சரி, இது தான் தவறு என்று எந்த வரைமுறையும் கிடையாது. எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலையை பொறுத்தே கணிக்கப்படுகிறது. காதலில் தவறு இல்லை.. என்ன அவனுக்கு பருவம்(21) தான் பிரச்சனை. இதே அவன் நல்ல படிப்பு, உத்தியோகம் என்று இருந்து உங்களிடம் காதலை சொல்லி இருந்தால் கதையே வேறு. இப்ப அப்படி இல்லையே..

நீங்க கொடுத்த தகவலை வைத்து மட்டும் என்னால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. நிறைய கேள்விகள் இருக்கு உங்களிடம் கேட்க அதை என்னால் இங்கே கேட்க முடியாது.

ஆகையால் நீங்க ஏதாவது ஒரு Psychatrist போய் பாருங்க.. அவங்களால் உங்களுக்கு மனரீதியாக சரியான தீர்வை சொல்ல முடியும். அந்த பையனுக்கும் அது ரொம்ப உதவியாக இருக்கும்.

காதலிக்கும் போது ஏற்படும் புரிதல் புரிதலில்லை
திருமணத்திற்கு பின்பு வரக்கூடியது தான் சரியான புரிதல்..

உங்க வாழ்க்கைக்கான முடிவு உங்க கையில் தான் இருக்கும்.. வெளியே தேடினால் கிடைக்காது.. just listen to your mind..

???
 
vidya narayanan

மண்டலாதிபதி
Joined
Apr 29, 2018
Messages
289
Reaction score
1,360
Location
Pondicherry
Hi பா,

கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். மனது சம்பந்தப்பட்டது.
எடுத்தேன் கௌத்தேன் என்று முடிவு எடுக்க முடியாது பா.

ஒரு suggestion மட்டும் சொல்கிறேன்:
2 அல்லது 3 வருடம் அவனிடம் time கேளுங்கள்.
அவனும் அவன் படிப்பை முடித்து வாழ்க்கையில் settle ஆகட்டும்.
நீங்களும் இந்த காலத்தில் உங்கள் தகுதியை ஏற்றி கொள்ளுங்கள்.

பிற்பாடு மன நிலை ரெண்டு பேருக்கும் மாறாமல் இருந்தால்
வாழ்க்கையில் சேர்வதை பற்றி யோசியுங்கள்.

அவனும் ஒரு நல்ல பக்குவப்பட்ட ஆண்மகனாக ஆகி விடுவான்.

பிரேக் கொடுங்கள் அவனுக்கு புரிய வையுங்கள், காத்திருங்கள்.

உங்கள் இருவருடைய காதல் உண்மையாக இருக்கும் பட்ஷத்தில் நல்லதே நடக்கும் பா.

ஆனால் கொஞ்சம் பொறுமை தேவை. உங்கள் அம்மாவையும் convinc e பண்ண முடியும், முடிந்தால் உங்கள் தங்கையின் கல்யாணம் கூட நீங்க முடித்து விடலாம். God bless பா
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top