• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV---5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஏப்ரல் -13-பைசாகி தினம்/அறுவடை திருநாள் .விவசாயிகளின் உயிர் மூச்சான பண்டிகை .ஒட்டுமொத்த பஞ்சாப் மாநிலம் விழாக்கோலம் பூண்டு இருந்தது .அதிலும் பதிந்தாவில் அர்ஜுன் தலைமையில் கொண்டாட்டம் என்றால் சொல்லவும் வேண்டுமோ ?"Jatta aai Baisakhi"என்ற குரல் எங்கும் ஒலிக்க ,பாங்க்ரா,GIDDA நடனங்கள் அந்த மைதானத்தையே அதிர வைத்து கொண்டு இருந்தது.

நகரின் மையத்தில் அமைந்து இருந்தது பிரமாண்டமான ஹோட்டல் ---"ஹோட்டல் comfort inn tulip" .ஹோட்டலின் பின் உள்ள பறந்து விரிந்த மைதானத்தில் இருந்து தான் பெரும் சத்தம் வந்து கொண்டு இருக்கிறது.மேளா தாளம் முழங்க 3000 மேற்பட்டோர் குவிந்து உள்ளனர்.

Comfort-Inn-Tulip-Heights_w.jpg

புத்தாடை அணிந்து 22 கிராம மக்களும் அந்த மைதானத்தில் உற்சாகத்துடடன் ஆடி பாடி கொண்டு இருக்கின்றர்.குதிரை ஓட்டம் -ஓடும் மூன்று குதிரைகள் மேல் கயிற்றை பிடித்து கொண்டு நிற்பது,குதிரை ஹாக்கி,குதிரை ரேக்ளா,வாள் யுத்தம்,ஒட்டக டான்ஸ்,பாங்க்ரா,வாள்,வில் வித்தை என்று கோடி கண்கள் தேவை.எதை பார்க்க எதை விட என்று குழம்பி தான் போவோம்.

அந்த பக்கம் இரு டிராக்டர் ஒன்றோடு ஒன்று இணைக்க பட்டு வெவேறு திசைகளில் இழுக்கும் போட்டியாம்.அட அந்த இரு டிராக்டர் இணைப்பில் நின்று போஸ் கொடுப்பது யாரு-நம்ம ஹீரோ "ஹரிஓம் அர்ஜுன் ரப்தார் பாட்டியா" (hari om arjun raftaar bahtia ).

(இவ்வளவூ பெரிய பெயரை சொல்லி முடிப்பதற்குள் நாக்கு தள்ளுது...இனிமேல் அர்ஜுன் என்றே அழைப்போம் )

அர்ஜுன் அசப்பில் நம்ம அக்ஷய் குமார் --அதான் பா padman பட ஹீரோ."khiladi பாய்" என்று கூப்பிடுவாங்களே.

(ஐந்து படம்" கிலாடி" என்ற பெயரில் நடித்து எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்...அதனால் இந்த பெயர்...நம்ம நடிகர் சூர்யாவிற்கு இவர் தான் குரு போலெ இருக்கு....சிங்கம் 1,2,3).

Akshay-Kumar.jpg

உயரம் 5அடி 11 அங்குலம்.80 கிலோ வெயிட்.42-32-16 அளவூ.ஆழந்த பிரவுன் நிற கண்கள். கோதுமை நிறம் .வெண்ணை பூசியது போலெ அப்படி ஒரு மினுமினுப்பு .உழைப்பால் வந்த கம்பீரம் .சிரித்தால் கணத்தில் விழும் குழி . பல கன்னியரின் மனதை கொள்ளை அடிக்கும் மன்மதன்

படித்தது குரு நானக் காலேஜ் -விவசாயம்.தொழில் -விவசாயம்,ஏற்றுமதி,ஹோட்டல்,’பஞ்சாப் சுற்றுலா’ வைத்து நடத்துவது.பல்துறை வல்லுனன்.உயர்தர மத்திய விவசாய குடும்பம்.20-30 பேர் உள்ள மிக பெரிய கூட்டு குடும்பம்.

(என்னது 20-30 பேர் ஒரே வீட்டிலா ?அவ்வளவூ பெரிய கூட்டு குடும்பமா ....?)

இவன் கொள்ளு தாத்தா தரஞ்சீத் bhatiya- 20 இவன் தாத்தா உபிந்தர் bhatiya -12,இவன் அப்பா யதுவீர் bhatiya -7.இது என்ன நம்பர் ஏன்று பார்க்கறீங்களா...இவங்க குழந்தைங்க கணக்கு பா .

(என்னது இத்தனை குழந்தைங்களா? )


கூட்டு குடும்பம் என்றால் மருமகள் -மாமியார் இந்தியா -பாகிஸ்தான் யுத்தம்,மருமகன் -மாமனார் கோல்டு வார்,நாத்தனார் wwf எல்லாம் கேள்வி பட்டு இருப்போம் .அது தான் ஒன்றுக்கு 10 டிவி சீரியல் எப்படி குடும்பங்களை குலைப்பது என்று மஹா ,மெஹா தொடர் என்று கிளாஸ் எடுக்கறாங்களே ....போதாதா ?அர்ஜுன் வீட்டில் அந்த வீணா போன தொடர் எல்லாம் பார்ப்பது இல்லை போல் இருக்கு.இங்கே 20-50 பேர் ஒரே குடும்பமாய் இருப்பார்கள் .மாமியாரின் மாமியாரின் மாமியார் வரை எல்லோரும் ஒரே சமையல்,ஒரே வீடு.எங்கே செல்வதாய் இருந்தாலும் லாரியில் தான் செல்ல முடியும்.....எலெக்ஷன் மீட்டிங்க்கு இல்லை பா !
இங்கு குடும்பத்திற்கு மதிப்பு கொடுக்க படுகிறது. இவர்கள் வாழ்க்கை முறை “கூட்டு குடும்பத்திற்கு” இன்றளவும் மிக சிறந்த உதாரணம் என்பதை மறுக்க முடியாது.

அர்ஜுன் வீட்டில் அனைவரும் அவன் தொழிலுக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள் .அவன் தம்பி தீப் ஹோட்டல் கவனித்து கொள்கிறான் .வீட்டினர் விவசாயத்தில் உதவுகிறார்கள் .தேவை இல்லை என்றால் வெளி வேலைகளுக்கு இவர்கள் செல்வதே இல்லை .தேவைக்கு மேல் வருமானம் வருகிறது .ஒரே வீடு ,ஒரே சமையல் என்பதால் எல்லோரும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதால் செலவும் குறைகிறது .

அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு நிறைய தாத்தா ,பாட்டி ,மாமா ,மாமி ,அத்தை ,பெரியம்மா ,பெரியப்பா ,சித்தப்பா ,சித்தி ,கொள்ளு தாத்தா என்று பலதலைமுறைகளின் வழிகாட்டுதல் இங்கு உண்டு .

554440_452544714786880_1000559452_n.jpg

‘வேலைக்கு செல்கிறேன்’ என்று போகும் பெற்றோருக்கு தூணாய் ,இளைய தலைமுறையின் பொறுப்பை மூத்த தலைமுறை ஏற்கிறது .எல்லா குழந்தைகளும் ஒன்றாய் வளரும் போது போட்டி ,பொறாமை இல்லாமல் ,விட்டு கொடுத்து வளரும் மனப்பக்குவம் ,மத்த உயிரை தன் உயிராய் மதிக்கும் குணம் இயற்கையாக வளர்கிறது .

சாப்பாட்டை கொடுத்து விட்டு கூடவே கையில் போன்,TV எடுக்கும் பழக்கம் குழந்தைகளிடம் இல்லை .சின்ன வயதில் இருந்து இவர்கள் விளையாட்டு தளம் வயல்வெளிகள் ,மண் என்றே இருப்பதால் அதன் பெருமை ,அருமை அறிந்து வளர்கிறார்கள் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
பைசாகி போன்ற திருநாட்களில் உறவோடு எங்கு இருந்தாலும் வந்து சேர்ந்து கொண்டாடி விட்டு தான் செல்வார்கள் .அது ஒருவாரம் கூட ஆகும் ....தவிர இங்கு குடும்பம் ,சமுதாயம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது .கண்டிப்பாக குருத்துவராகளில் சென்று தொழுவார்கள் .அங்கு பலரை சந்திப்பதால் இவர்களின் நட்பு வட்டம் அதிகமாகிறது . யாருக்காவது ஒன்று என்றால் ஒட்டுமொத்த சமுதாயம் குரல் கொடுக்க தயங்குவதில்லை .இங்கு பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது .இந்த பிணைப்பை பார்த்து மற்றவர்கள் பெண்களிடம் வம்புக்கு போவதில்லை .

பெண்கள் இங்கு முழு சுதந்திரம் கொண்டவர்கள் .குருநானக் தன் போதனைகளில் அப்படி தான் சொல்லுகிறார் .இங்கு பெண்கள் மத தலைவர்களாகவும் ,போர்க்களத்தில் ஆணுக்கு நிகராய் போர் புரிந்த தளபதிகளாகவும்,சொந்த தொழில் செய்பவர்களாவும் ,சிந்தனை ஒடுக்க படாதவர்களாகவும் ,வெற்றி திருமகள்களாய் இருந்து இருக்கிறார்கள் .இவர்களின் சிறகுகள் முறிக்க படுவதில்லை .

“ஆணுக்கு நிகர் பெண் .அடுத்த தலைமுறை செழிக்க வைக்கும் உயிரினை சுமக்கும் அமிர்த கலசங்கள் பெண்கள் .சாதாரண மனிதனை மட்டும் இல்லை வருங்கால ராஜாக்களையும் ,ஞானிகளையும் உருவாகும் ஆற்றல் ,வளர்க்கும் திறன் பெற்றவர்கள் பெண்” என்று 14ஆம் நூற்றாண்டில் சொன்னவர் குருநானக் .

சேவை ,தியாகம் ,பக்தி ,வீரம் என்று எல்லாவற்றிலும் பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்றார் அவர் . Mata Gujri, Mai Bhago, Mata Sundari, Rani Sahib Kaur, Rani Sada Kaur and Maharani Jind Kaur போன்ற பெண்கள் இதற்கு சிறந்த உதாரணம்.

முகலாயர்கள் ஆட்சி காலத்தில் பெண்கள் சோளம் அரைத்து கொண்டு இருப்பார்களாம் .அவர்கள் கண் முன்னே அவர்கள் குழந்தைகள் ,கணவன்மார்கள் மதம் மாறவில்லை என்பதற்காக கொடுமை செய்து கொல்லப்படும் போதும் இவர்கள் உதட்டில் இருந்து சிறு கேவலோ ,கண்களில் இருந்து கண்ணீரோ வழியாமல் ,தியாகத்தை உயிராக ஏற்று கொண்டு தங்கள் மதத்தை காப்பாற்றிய கதைகள் இங்கு ஏராளம்

பர்தா ,பெண் சிசு கொலை ,சதி -உடன்கட்டை ஏறுதல் ,பால்ய விவாகம் ,விதவைகளின் நிலை ,டௌரி என்று எல்லாவற்றையும் உடைத்து ,எதிர்த்து முன்னோக்கி போன ஒரே மதம் சீக்கிய மதம் என்றால் மிகையல்ல . அதுவும் 12-14 ஆம் நூற்றாண்டிலேயே இத்தகைய முற்போக்கு சிந்தனைகள் என்று படிக்கும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை .

பெண் என்பவள் பெற்ற வீட்டின் கண் போன்றவள். திருமணம் ஆகி குடி புகுந்த வீட்டின் புது தூணாய் தன்னை மாற்றி கொள்பவள் .திருமணம் என்ற பந்தத்தில் ஆணும் ,பெண்ணும் எல்லா விதத்திலும் சமஉரிமை கொண்டவர்கள் .குடும்ப வாழ்க்கை என்பது இங்கு தெய்வீக அன்பின் வெளிப்பாடு.ஆண் பெண் இருவரும் ஒரே கண்ணாடியில் தெரியும் இரு பிம்பங்கள் .

ஹிந்து பஞ்சாபிகள் பெண்களை சக்தியும் சொரூபமாய் வணங்குவார்கள் .ஆண்கள் திருமணம் ஆன பெண்கள் ,கன்னி பெண்கள் ,குழந்தைகளை அமர வைத்து பாத பூஜை செய்து அவர்களுக்கு உபசாரம் செய்வார்கள் .

பெரியவர்களின் பாதங்களில் ஆண்கள் மட்டுமே விழுந்து வணங்குவார்கள் .பெண்கள் சக்தியின் சொரூபம் என்பதால் அவர்கள் தெய்வத்திற்கு நிகராக ,வீட்டின் ராணியாக வைத்து கொண்டாடுவார்கள் .அருகில் இருந்து பார்க்கும் போது தான் இந்த மதிப்பு ,மரியாதை நமக்கு புரியும் .முழு எகனாமிக் freedom பெண்களுக்கு உண்டு .

வெளிநாடு சென்று சம்பாதித்தால் தான் பணம் ,உணவூ என்ற நிலை இல்லாமல் இருப்பதை வைத்து அதில் தங்கள் உழைப்பால் மாநிலத்திற்கே மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே உணவூ போட்டு ,அந்நிய செலாவணி ஈட்டி கொண்டு இருக்கிறார்கள் .கடின உழைப்பு தேவை படும் தொழில்.அதனால் உடல் நலமும் கெடுவதில்லை .இயற்கையான உணவூ வகை .நோயை அண்ட விடுவதில்லை .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இப்படி ஒரு அழகான விவசாய கூட்டு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் தான் நம்ம அர்ஜுன் .அர்ஜூன் உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணா -ஏற்கனவே அறிமுகம் ஆனா இன்ஸ்பெக்டர் சரண்பால், ரெண்டு அக்கா, தம்பி கியான்தீப். .அக்கா ரெண்டு பேருக்கும் திருமணம் ஆகி 2-3 பிள்ளைகளே இருக்காங்க..ஆனா நம்ம அர்ஜுன் 18 வயது இருக்கும் போது பெண் பார்க்க ஆரம்பிச்சாங்க.... பார்த்தாங்க.. பார்த்தாங்க...பார்த்துட்டு இருக்காங்க...இனியும் இருப்பாங்க போல் இருக்கு.....இப்போ அர்ஜுன்க்கு வயது 28குள் இருக்கும் .

DdptT47VwAA_4-S.jpg dimpe-kapadia_8c2146e373dd9c9787d5b50664c17d3b.jpg

"நீ வருவாய் என"படத்தில் பார்த்திபன் அப்பா பொண்ணு பார்த்த லிஸ்ட் கோயில் சுவற்றில் கோடு கோடாய் போடுவார்....இங்கே யதுவீர் அதை தான் செய்துட்டு இருக்கார்.

(அடப்பாவமே....இவ்வளவூ அழகான மேன்லியான உனக்கா பொண்ணு கிடைக்கலை.....சோ sad)

அத்தை மகள் ,மாமன் மகன் திருமணம் எல்லாம் இங்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் .பஞ்சாப் மக்கள் ரத்த உறவுக்குள் திருமணம் செய்ய மாட்டார்கள் .அதனால் அர்ஜுனுக்கு நிறைய அத்தை மகள் ரத்தினங்கள் ,மாமா மகள் அஞ்சுகங்கள் இருந்தும் யூஸ் இல்லை .

எந்த பெண்ணும் அமையலை.பையன் ரொம்ப நல்லவன்,வல்லவன்,பணக்காரன் தான். ஆனா என்ன வாய் பேசுவதற்கு முன் கை பேசிவிடும்.பிரச்சனை தேடி இவன் போவான்.சில சமயம் பிரச்சனை இவனை பிடித்து தொங்கும்.விக்கிரமாதித்தன் வேதாளம் போல் அர்ஜுன்- பிரச்சனையை பிரிக்கவே முடியாது. ....ஊருக்கு நல்லது செய்யறேன் என்று மாதத்தில் 10-20 நாள் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் உள்ளே இருப்பான்.

(அப்போ நீ கெட்டவன் இல்லையா ? நல்லது செஞ்சிட்டு தான் உள்ளே இருக்கியா ?)

பஞ்சாப் முழுவதும் இவனுக்கு பெண் ரசிகை உண்டு.பெண்களின் கனவு நாயகன் நம்ம அர்ஜுன்."அர்ஜுனை போலே ஒரு பிள்ளை நாட்டுக்கு தேவை" என்ற டைலொகு வரும்.கவர்னர் கூப்பிட்டு விவசாயத்தில் புரட்சி செய்ததற்காக,அந்நியச்செலாவணி ஈட்டுவதற்காக பாராட்டி,தங்க மெடல் கொடுப்பார்.ஆனா திருமணம் செய்ய பெண் என்று வரும் போது எல்லா பெண்ணை பெத்தவங்களும் கதவை இழுத்து மூடிப்பாங்க.

கொஞ்சம் முரடன் வேறு.தப்பு என்று பட்டால் "நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே "என்று பொங்கிடுவான்.அந்த பகுதி SSP இவன் பெரியப்பா,இன்ஸ்பெக்டர் இவன் அண்ணா.இருவரும் இவனை உள்ளே தூக்கி போடுவாங்க.இவன் மாமா வக்கீல் ,இவனுக்கு ஜாமீன் எடுத்தே ஓடாய் போனவர்.

ஒட்டுமொத்த கிராமம் இவன் குடும்பம்.குடும்பம் மொத்த கிராமம்.

(பின்னே 20 குழந்தை கொள்ளு தாத்தாவிற்கு இருந்தால் ஒரு ஸ்கூல் தான் ஆரம்பிக்க வேண்டும் )

இவன் டிராக்டர் இழுத்து பல் உடைந்து டாக்டர் கிட்டே போகட்டும்.நம்ம ஹோட்டல் ஒரு ரவுண்டு அடிப்போம்.

60740706_916214818724326_2106028690490082447_n.jpg
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹோட்டல் comfort inn tulip -1978 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 4 ஸ்டார் ஹோட்டல்.அரசு அங்கீகாரம் பெற்றது.அர்ஜுன் தாத்தா உருவாக்கியது.இப்போ விவசாயத்தோடு அதை தம்பி கியான்தீப் உடன் சேர்ந்து நடத்துவது அர்ஜுன் தான். கியான்தீப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவன்.
ஹோட்டல் உள் இருந்து வெளியே வெகு பதட்டத்துடன் வந்து கொண்டு இருந்த கியான்தீப் ,உள்ளே நுழைந்து கொண்டு இருந்த அமர்நாத் மேல் மோதி கொண்டான்.

"ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. கியான்தீப் (ஹை பீச் ---என் காது போச்சு ) சமஸ்ய கி ஹை ?...ஜனா ஹூலி ----“என்ன பிரச்சனை ?மெதுவாக போ " என்று சொல்கிறார் போல் இருக்கு.

KHER.jpg

பைசாகி கொண்டாடும் மக்களின் சத்தத்தையும் விட அதிக சத்தத்தில் பேசும் இவரை நோட் செய்துக்கோங்கோ.இவருக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் நிறைய இருக்கு .இந்த டோட்டல் கதையை மாத்த போகும் புண்ணியவான் இவர் தான் .பலர் வாழ்வில் நாரதர் வேலை பார்த்து ,கில்லி ,கோலி ,கபடி ஆட போகும் பால் வடியும் அமுல் பேபி இந்த மாமா தான் .நாரதர் கலகம் நன்மையில் தான் முடியுமாம் .இவர் செய்து வைக்க போகும் வேலை எப்படி முடிய போகுதோ !!!
((யோசிக்கவே வேண்டாம் ...குஷி பட டயலாக் தான் )

சட்டென்று பார்ப்பதற்கு "அனுபம் kher "அதான்பா சிம்ரன் ,பிரபு தேவா ,ரம்பா நடித்த "VIP "படத்தில் சிம்ரனுக்கு அப்பாவாய் வருவாரே ,அவரை போல் இருந்தார் .தலையில் மொத்தம் பிளாட் வாங்கி இருந்தார் .சுத்தமாய் முடி கொட்டி போன வழுக்கை தலை .ரொம்ப ஜாலியானா கேரக்டர் .எப்பொழுதுமே டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு சிரிப்பது போன்ற முகம் .வீட்டில் எல்லோருக்கும் பிடித்த நல்ல மனிதர்.


"மாமா !சோனு,மோனு,சின்னு மிஷிகா / காணாம போய்ட்டாங்க."என்றான் கியான்தீப் .

eCwO_8GC_400x400.jpg

"என்னடா இவ்வளவூ பொறுமையா சொல்றே பாடீஜா (nephew /நம்ம பக்கம் மருமகன் ) கிட்டே சொல்ல வேண்டியது தானே "என்றார் அமர்நாத் அதாவது குழந்தைகள் காணாமல் போனதை அர்ஜுன் இடம் சொல்ல சொல்கிறார் போலே இருக்கு.

"வீர்ஜி--அவர் கிட்டே சொல்ல தான் போய்ட்டு இருந்தேன்(வீர்ஜி -அண்ணாவை இப்படி சொல்வார்கள்)...... உங்க மேல் மோதிட்டேன் மாமா (அம்மாவின் தம்பி )."என்றான் கியான்தீப்

( ஓஹ் இந்த புது என்ட்ரி அர்ஜுன்,கியான்தீப் மாமா போல் இருக்கு .)

"சோனு,மோனு,சின்னு" மிஷிகா/காணவில்லை .கண்டு பிடித்து தருபவர்களுக்கு 10 லட்சம் பரிசு என்று அறிவித்து விடலாமா தீப் ?"என்றார் அமர்நாத்.

அவர் சொன்னதை கேட்டு ," என்னது !10 லட்சமா ?"என்று அதிர்ந்தவனாய் பேய் விழி விழித்தான் தீப்.

கியான்தீப் தன் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ,”பாடீஜா எங்கே ? ." என்றார் அமர்நாத்.

"பைசாகி இல்லையா அதான் வீர்ஜி தன் திறமையை காட்டிட்டு இருக்கார்....தோ வந்துட்டார்."என்றான் தீப்.

l_d19f3cc85bc4eb1cd3500ab768e1714f.jpg

மைதானத்தில் அமைக்க பட்டு இருந்த இவர்கள் ஹோட்டல்லின் ரெஸ்டூரண்ட்- பந்தல் போடப்பட்டு விருந்தினர் வேடிக்கை பார்த்து கொண்டே சாப்பிடும் விதமாக அமைக்க பட்டு இருந்தது.டிராக்டர் பல்லால் இழுத்து –“உலக சாதனை” படைத்து ஒரு மாலை பரிசளிக்க பட வந்து கொண்டு இருந்தான் அர்ஜுன் .

akshay-kumar-s-movie-khiladi-786-new-stills_13546035854.jpg

தன் மாமா /அம்மாவின் தம்பி அமர்நாத்தை கண்ட அர்ஜுன்," sat sri akaal மாமாஜி! எப்படி இருக்கீங்க?பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.அமிர்தசரஸில் எப்படி போகுது உங்க மேட்ரிமோனி/ திருமண தகவல் மையம்?" என்றவன் அவர் காலில் விழுந்து பணிய ,அவனை அணைத்து கொண்டார் அமர்நாத் .

அமர்நாத்துக்கு அர்ஜுன் என்றால் உயிர் .சொந்த பிள்ளைகளை விட அர்ஜுன் மேல் அவருக்கு அதிக பாசம் ,அன்பு .அர்ஜுனுக்கு மிக பிரியமான,முதல் நண்பர் அமர்நாத் .

"அதை பிறகு சொல்றேன் .சோனு,மோனு,சின்னு காணோம்.கூட்டத்தில் பாவம் பசங்க பயந்துட போறாங்க.இல்லை எவனாவது களவாணி குழந்தையை கடத்திட்டனோ.?" என்றார் அமர்நாத் பதட்டத்துடன்.

அர்ஜுன் கியான்தீப்பை கேள்வியுடன் ஒரு பார்வை பார்க்க ,"கொஞ்சம் வேலையா இருந்தேன் வீர்ஜி.எப்படி காணாம போச்சுங்கனே தெரியலை.தேடிட்டு இருக்கேன்.கிடைக்கலை."என்றான் தலை குனிந்தவாறு

(அப்போ நைட் கோடௌனில் இருந்து நீங்க தூக்கிட்டு வந்தது குழந்தைகளையா ?அவங்களை எதுக்கு டா மரபெட்டியில், கூண்டில வைத்து எடுத்து வந்தீங்க ?)

பயணம் தொடரும் ....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top