• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

pakkathu veetil - By Aruna Kathir

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aruna Kathir

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,030
Reaction score
4,650
Location
Palani
ஹாய்....

"பக்கத்து வீட்டில்" என்ன நடக்குதுன்னு உங்களுக்கும் ஆர்வமா இருக்கும் இல்லையா....
வாங்க போய் பார்ப்போம்...
படிச்சுட்டு அப்படியே ஓடிராதீங்க....மறக்காம உங்களோட கருத்தை ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க....
I will be happy... அப்போ தான் உங்களுக்காக நிறைய நிறைய யோசிச்சு கதை எழுத தோணும்.....

கம்...lets go and peep inside our பக்கத்து வீடு....

d0b81428854be69064a215d60225be67.jpg

பக்கத்து வீட்டில்....

இருளில் அந்த அறை மூழ்கியிருந்தது.. சிறிய மின்விளக்கின் ஒளி நீல நிறத்தில் அந்த அறையை நிறைத்தது..மெதுவாக சுழன்ற மின்விசிறி கிரீச்..கிரீச் என்று அவ்வப்போது ஒலி எழுப்பியது.

அறையை பாதி அடைத்துக் கொண்டு நின்ற தேக்குக் கட்டிலில் படுத்திருந்த இளமதிக்கு ஏனோ உறக்கம் கலைந்து விட்டிருந்தது. ஏதோ சத்தம் கேட்டு எழுந்து கொண்டவள், சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

3.08

விடிவதற்கு இன்னும் நேரம் இருந்தது. அருகில் படுத்திருந்த கணவன் கணேசனைத் திரும்பிப் பார்த்தாள். நல்ல உறக்கத்தில் இருந்தான். என்னவோ சத்தம் கேட்டு கண்விழித்த இளமதி கட்டிலில் இருந்து எழாமல் கூர்ந்து கவனித்தாள்.

மீண்டும் அந்த சத்தம் கேட்டது.

சலக்..சலக்..சலக்..

கொலுசு சத்தம். இந்த இரவில் ரோட்டில் யார் நடப்பார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. எழுந்து பார்க்கலாமா என்று நினைத்தாள். சுபாவத்திலேயே சிறிது பயந்தாங்கொள்ளி. எழுந்து சென்று ஜன்னல் திரையை விலக்கிப் பார்க்க தைரியம் இல்லை.

பக்கவாட்டில் திரும்பி கணவனை எழுப்பிப் பார்க்கச் செல்லலாமா என்று ஒரு கணம் யோசித்தாள். வேண்டாம். திட்டுவான். அலுப்பில் அயர்ந்து தூங்குபவனை எழுப்பி நன்றாக வாங்கிக் கொள்வானேன் என்று அமைதியாக இருந்துவிட்டாள்.

மீண்டும் அந்த சத்தம் தெளிவாகக் கேட்டது.

சலக்...சலக்...சலக்...

போர்வையை நன்றாக முகம் முழுவதும் போர்த்திக் கொண்டு மனதில் கந்தஷஷ்டி கவசத்தை கூற ஆரம்பித்தவள் விடிவதற்காக காத்திருந்தாள்.

ஏழு மணிக்கு சூரியன் சோம்பலாக துயில் எழுந்த பின்னர் கூட அருகில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை எரிச்சலுடன் எழுப்பினான் கணேசன்.

“ஏ...மதி...மதி..எந்திரிடீ...மணீ ஏழு ஆச்சு...இன்னமும் என்ன தூக்கம்?”

திடீரென்று பயத்தில் கண்விழித்தவள் ஒரு நிமிடம் பிரம்மை பிடித்தவள் போல கணவனை உற்று பார்த்த வண்ணம் இருந்தாள்.

“ஏ..மதி...என்ன ஆச்சு...?” என்று அவளது தோழைப் பிடித்து உலுக்கினான்.

“ஆங்....எந்திரிச்சுட்டீங்களா? அதுக்குள்ள விடிஞ்சிருச்சா?”

“சரியா போச்சு...மணி ஏழாகப் போகுது...எந்திரிச்சு சமையல் வேலையைப் பாரு”

“ஏங்க...நைட் என்னாச்சுன்னு தெரியுமா....ராத்திரி ஒரு மூனு மணீக்கு எனக்கு முழிப்பு வந்திருச்சு...எதுனாலன்னு பார்த்தா சலக்..சலக்னு ஒரு சத்தமங்க...அதுக்கப்பறம் நான் தூங்கவேயில்லை...”

“சலக் சலக்னு சத்தமா?”

“ஆமாங்க சலங்கை சத்தம்...நிஜம்மா கேட்டுச்சுங்க”

“யாராவது ரோட்டில நடந்து போயிருப்பாங்க..”

“மூனுமணிக்கு யாருங்க நடக்க போறா?”

“இப்ப என்ன தாண்டீ சொல்ல வர்ற?”

“கண்டிப்பா ஏதோ விஷயமிருக்குங்க...பயமா இருங்குங்க”

“இத பாரு மதி...பக்கத்து வீட்டில அந்த சின்ன பொண்ணு செத்து போனதுல நீ கொஞ்சம் அப்செட் ஆகியிருக்க...அதனால தான் ஏதேதோ கர்பனை பண்ணிக்கற..”

“இல்லைங்க..நிஜமாவே அந்த கொலுசு சத்தத்தை நான் கேட்டேன்ங்க”

“காலங்காத்தால கொல்லாத டீ. போயி..டிஃபன் ஏதாவது செய்யப்பாரு..எனக்கு ஆபீஸிற்கு டைம் ஆச்சு” என்று கூறிவிட்டு டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

இளமதிக்கு அன்று வேலையே ஓடவில்லை. இயந்திர கதியில் தன்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தாள். கணேசனை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு வெளியில் வந்து திண்ணையில் அமர்ந்தாள்.

வலது பக்கவாட்டில் இருந்த அவந்திகாவின் வீடு மதியின் மனதில் சஞ்சலத்தை அதிகரித்தது. அவர்கள் இருந்தது வரிசையாக தனிவீடுகள் கொண்ட ஒரு காலனியில். வாடகைக்கு தான் இருந்தார்கள். சிட்டிக்கு சற்று தள்ளியிருந்த போதும், தனிவீடு, சுற்றிலும் கொஞ்சம் மண்தரை என்று அந்த வீடு கணவன் மனைவி இருவருக்கும் பிடித்துப் போனது.

இருவருக்கும் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் குழந்தைப்பேறு இல்லை. சொந்தத்தில் திருமணம் செய்ய வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் யார் மதியின் பேச்சைக் கேட்டார்கள்.

குழந்தை இல்லாத குறை தெரியாமல் இருவரையும் சிரிக்க வைத்தவள் பக்கத்து வீட்டு அவந்திகா. ஆறு வயதில் குண்டு கன்னங்களும், திராட்சை விழிகளுமாக “மதி ஆண்டீ..” என்று இந்த வீட்டிற்கு குடிவந்த சில தினங்களிலேயே ஒட்டிக் கொண்டுவிட்டாள்.

எல்லாமே இன்பமாக இருக்கிறது என்று நினைக்கும் வேளையில் தான் அந்த துயரச் சம்பவம் நடந்தது. பள்ளிக்குச் சென்ற சிறுமி எதிரில் வந்த லாரியில் தூக்கி எறியப்பட்டாள். என்ன என்னவோ வைத்தியம் பார்த்தும் காப்பாற்ற முடியவில்லை. குடும்பத்தினர் அனைவரும் நொந்து போயினர். இளமதியும் தான்.

மகளின் பிரிவு தாளாமல், அவள் நினைவுகளால் சூழ்ந்த வீட்டில் இருக்கப் பிடிக்காமல், வீட்டை வாடகைக்கு விட ஏற்பாடு செய்துவிட்டு அவந்திகாவின் குடும்பம் வேறு இடத்திற்கு சென்றுவிட்டனர்.

இன்னும் பக்கத்து வீட்டிற்கு யாரும் குடிவரவில்லை..பூட்டி தான் இருக்கிறது. ஏதேதோ நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். கேட் கதவு திறக்கும் சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தாள்..எதிரில் காலனியில் குடியிருக்கும் அம்புஜம் மாமி நின்றிருந்தார்.

“என்னடி மதி...பயங்கர யோசனை..ஆள் வர்ரது கூட தெரியாம”

“ஓன்னுமில்ல மாமி..உட்காருங்க”

“மொகமில்லாம் வாடி போயிருக்க...என்னாச்சு டீ..ஆம்பளையான் கூட சண்டை போட்டுயா என்ன?”

“இல்லை மாமி..நைட் சரியா தூக்கமில்லை..அதான்”

சிறிது நேரம் அமைதியாக இருந்த மாமி ஏதோ சொல்ல நினைப்பவள் போல தொண்டையை செருமிக் கொண்டாள்.

“மதி..நான் ஒன்னு சொல்லறேன் மனசுல வச்சுக்க..நீ சின்ன பொண்ணு...முடிஞ்ச வரைக்கும் உன் ஆம்பிளையாண்ட சொல்லி வேற வீடு பார்க்க முடியுதான்னு பாரு”

“ஏன் மாமி இப்படி சொல்லறீங்க.”

“உன் பக்கத்து வீட்டைப் பத்தி தான் சொல்லறேன்...சொன்னா புரிஞ்சுக்கோ...உன் நல்லதுக்குத் தான் சொல்லறேன்.”

“புரியறமாதிரி சொல்லுங்க மாமி..”

“மதி...அதாவது...சில சமயம் எல்லோரும் கொஞ்சம் சுய நலமா இருக்கறது நல்லது தெரியுமோ?”

“புரியலை..”

“நீ அந்த பொண்ணு கிட்ட பாசமாத்தான் பழகுன..என்ன பண்ணறது...விதி..அது தலையில அல்பாயிசுல போகனும்னு இருக்கு. போயிடுத்து..”

“அதுக்கும் நான் வேற வீட்டுக்கு போறதுக்கும் என்ன இருக்கு மாமி..”

“சில சமயம் உடம்பு மட்டும் தாண்டி இந்த உலகத்துல இருந்து போகுது..ஆத்மா இங்கேயே தான் இருக்கும்னு பெரியவா சொல்லுவா..”

இளமதி இதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தாள். என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“என்னடீ ஒன்னும் பேசமாட்டேங்கற?”

“இல்லை மாமி..நேத்து கூட ராத்திரி ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு..கொலுசு சத்தம்..”

“நான் சொன்னேனோன்லோ...இது கொஞ்ச நாளாவே காலனியில நடக்கற சங்கதி...எங்க நீ பயப்படுவியோன்னு தான் சொல்லாம இருந்தேன்...பாத்து நடந்துக்கோடி மா...நான் வர்றேன்..” என்று எறிகிற தீயில் எண்ணை வார்த்துவிட்டு மாமி சென்றுவிட்டிருந்தார்.

மதி அடுத்து வந்த தினங்களில் இயந்திரம் போல தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள். மனது குழப்பமாகவே இருந்தது. என்ன நடந்தாலும் நடக்காமல் போனாலும் அதிகாலை மூன்று மணிக்கு கேட்கும் கொலுசு சத்தம் நின்றபாடில்லை. கணவனிடம் அடிக்கடி சொல்வதையும் நிறுத்திக்கொண்டிருந்தாள். என்ன சொல்லியும் நம்பாதவனிடம் புரியவைக்க முடியவில்லை.

சில வாரங்கள் கழித்து அன்று ஒரு நாள், அவந்திகாவின் பெற்றோர் இவர்களது வீட்டிற்கு வந்திருந்தனர். கணேசனும் வீட்டில் இருந்தான். எதார்த்தமாக பேச முடியாமல் கணத்த மெளனங்களே நீடித்தன.

“அவந்தி இல்லாம எதுவுமே முடியலை கணேசன்..எங்க திரும்பினாலும் அவ தான் தெரியறா.” என்று தொண்டையில் நின்ற கண்ணீரை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு பேசினார் அவந்திகாவின் தந்தை.

“இங்க மதியும் அப்படித்தான் இருக்கா..எல்லாம் விதி...யாரைச் சொல்லி என்ன பண்ண?” என்றான் கணேசன். அவனுக்கும் துக்கமாகத்தான் இருந்தது.

“அவந்தி மெடிக்கல் செலவு கொஞ்சம் கை மீறிப் போயிருச்சு...அதனால வீட்டை விக்கலாம்னு இருக்கோம்.” என்றார் மென்று விழுங்கிக் கொண்டு.

“உங்களுக்கு வீடு வாங்கற யோசனை இருந்தா..நீங்களே வாங்கிக்கங்கன்னு சொல்லத்தான் வந்தேன் கணேசன்.. உங்களுக்குன்னா சொன்ன விலையில இருந்து குறைச்சு குடுக்கறேன்.. நீங்களே குடிவந்துட்டீங்கன்னா உங்கள பார்க்க வர்ற சாக்குல என் அவந்தி வாழ்ந்த வீட்டை....நான்...பார்த்து...” என்று சமாதனப்படுத்த முடியாத வண்ணம் தேம்பி அழ ஆரம்பித்திருந்தார்.

கணேசனுக்கும் இளமதிக்கும் தர்ம சங்கடமாகிப் போயிருந்தது.

“அழாதீங்க சார்...ப்ளீஸ் மனசை தேத்திக்கோங்க..” என்று ஒருவாறு கணேசன் சமாதானம் செய்திருந்தான். சிறிது நேரம் பேசாமல் அமர்ந்திருந்தவர்,

“அப்ப நான் கிளம்பறேங்க கணேசன்...வீடு வாங்கற யோசனை இருந்தா சொல்லுங்க..” என்று விடை பெற்றுக் கொண்டு கிளம்பிச் சென்றார்.

அடுக்களையில் நின்று கேட்டுக் கொண்டிருந்த இளமதிக்கு முகத்தில் இருந்து ரத்தம் சுண்டியிருந்தது. பக்கத்து வீட்டில் இருப்பதற்கே இந்த பாடு படுகிறேன். இதில் அதே வீட்டில் இருந்தால் இன்னும் என்ன ஆவேனோ என்று மிகவும் பயந்து போனாள்.

இதை எல்லாம் கணவனிடம் கூற பயமாக இருந்தது. இப்போதெல்லாம் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை வெகுவாக குறைந்து போயிருந்தது.

“சரி..வேண்டாம்..சாப்பாடு வைச்சிட்டேன்” என்று இரு வார்த்தைகளின் அளவில் முடிந்திருந்தது. குழந்தை பாக்கியம் இல்லை என்று உள்ளூர இருவருக்குமே வருத்தம் மேலோங்கியிருந்தது.

கணவன் அவந்திகாவின் வீட்டை வாங்குவது பற்றி என்ன யோசிக்கிறானோ என்று அந்த எண்ணம் வேறு பயமுறுத்தியது. இளமதி பயந்தது போலவே நடந்தும் போனது. கணேசன் பக்கத்து வீட்டை வாங்க முடிவு செய்துவிட்டிருந்தான்.
 
Aruna Kathir

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,030
Reaction score
4,650
Location
Palani
இளமதியின் மனதை பலமுறை எடுத்துக் கூறிப் பார்த்தும் பயனில்லை.

“இவ்வளவு பெரிய வீடு இந்த ரேட்டுக்கு யார் குடுப்பா? குறைச்சலா இருக்கறப்ப வாங்கிப் போட்டாத்தான்.” என்று வியாக்கியானம் பேசினான்.

இரண்டு மாதத்தில் மளமள வென வேலைகள் நடந்தன. பத்திரம் பதிவு முடிந்து, சிறிய அளவில் கிரகப்பிரவேஷம் செய்து அவந்திகாவின் வீட்டில் குடிவந்தாயிற்று. இன்னமும் மூன்று மணி கொலுசு சபதம் தொடரத்தான் செய்கிறது.

அன்று, முதல் தினம் அவந்திகாவின் வீட்டில் உறங்கப் போகிறோம் என்ற எண்ணமே இளமதியின் வயிற்றில் புளியைக் கரைத்தது. காலை முதல் வீடு முழுவதும் உறவினர்கள் நிரம்பியிருந்ததால் வேறுபாடாகத் தெரியவில்லை.

மாலை சூழ்ந்து வீட்டில் ஒருவரும் இல்லாத இந்த சூழல் பயத்தைக் கொடுத்தது. கணேசன் இன்னமும் வீடு திரும்பவில்லை. நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தான். இளமதி வெளிவாசல் திண்ணையில் அமர்ந்து கணவனுக்காக காத்திருந்தாள்.

அதே நேரத்தில் வீட்டில் இருந்து அரை மைல் தூரம் இருந்த இன்னொரு வீட்டில்,

“இன்னமும் எவ்வளவு நாள் தான் வெயிட் பண்ணறது கணேஷ்..”

“கொஞ்ச நாள் தான் ஸ்டெல்லா....ப்ளீஸ்...எனக்காக செய்ய மாட்டியா?”

“உங்களுக்காகத்தான் ரெண்டு வருஷமா காத்திருக்கேனே...”

“இன்னும் கொஞ்ச நாள் தான் டியர்..அதுக்கப்பறம் அவள டைவர்ஸ் பண்ணீட்டு..உன்னை கல்யாணம் பண்ணிக்குவேனாம்”

“ம்ம்ம்ம்...போங்க..”

“கோவிச்சுக்காத டா...நீ சொல்லற மாதிரி தானே நான் நடந்துக்கறேன். இளமதிக்கு குழந்தை உண்டாகாம இருக்க நீ குடுத்த மாத்தரை எல்லாம் இவ்வளவு நாளும் அவளுக்கே தெரியாம அவ சாப்பாட்டில கலந்திருக்கேன்”

“அது தான் குழந்தை இல்லைன்னு சொல்லி டைவர்ஸ் பண்ணலாம்ங்கற ஐடியா வர்க அவுட் ஆகலியே..இந்த சலங்கை ஐடியா எப்படி போகுது? உன் பொண்டாட்டி நம்பறாளா?”

“நம்பறான்னு தான் நினைக்கறேன்..என் வாட்சில இருந்து தான் நான் அமுத்தற போதெல்லாம் சலங்கை சத்தம் கேட்குதுன்னு கொஞ்சம் கூட சந்தேகப் படலை....இப்போல்லாம் எங்கிட்ட பேசறதக் கூட கொறச்சுகிட்டா...எதையோ பரிகொடுத்தவ போல தான் இருக்கா”

“கரெக்ட்...இப்படியே கொஞ்ச நாள் கொண்டு போகலாம்..அப்பறமா வேற ஏதாவது பண்ணி அவளுக்கு பைத்தியம் புடிச்சிருக்குன்னு ஊர நம்ப வைச்சிட்டாப் போதும்...”

“அதுக்குத் தான நீ சொன்ன மாதிரியே பக்கத்துவீட்டை விலைக்கு வாங்கி குடியோயிருக்கேன்.”

“கொஞ்ச நாள் வாட்ச் சலங்கை ஐடியாவையே மெயின்டெயின் பண்ணுங்க...அப்பத்தான் சந்தேகம் வாராம, உங்க பொண்டாட்டிய அனுப்ப முடியும்..அந்த இடத்துக்கு நான் வரமுடியும்”

“ஆமா யாருக்கும் சந்தேகம் வராம நடந்துக்கறது தான் முக்கியம்...வேற மதம்னு காரணம் காமிச்சு 4 வருஷம் காதலிச்ச உன்னை கலியாணம் பண்ணிக்கவிடாம..வேண்டா வெறுப்பா மாமன் பொண்ணுன்னு என் தலையில் அவளை கட்டி வெச்ச என் அப்பாக்கும் என் மாமாக்கும் நல்ல பாடமா இருக்கும்..”

இது எதுவும் தெரியாமல் இளமதி கணேசனுக்காக வீட்டு வாசலில் காத்திருந்தாள். இரவு பதினொரு மணி வாக்கில் வீடு திரும்பிய கணேசன், உடை மாற்றிக் கொண்டு படுக்கையில் விழுந்தான்.

அடுத்த தினம் காலையில் கண்விழித்தவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது., இளமதி புன்சிரிப்புடன் கணவனை எழுப்பினாள்.

“என்னாச்சுங்க...ஏன் இப்படி திடும்னு முழிக்கறீங்க...”

“இல்லை ஓன்னும் இல்லை...நீ எப்ப எந்திரிச்ச...நைட் நல்லா தூங்கினியா?”

“சொன்னா நம்ப மாட்டீங்க..ரொம்ப நாள் கழிச்சு நேத்துத் தாங்க நல்லா தூங்கினேன். மனசில இருந்து பெருசா ஏதோ பாரம் போன மாதிரி இருக்குங்க....அவந்திக்கா வீட்டை நாம வாங்கினது கூட நல்லது தான் இல்லீங்க”

“எப்பவும் ஏதோ சத்தம் கேட்குதுன்னு சொல்லுவியே..நேத்து கேட்கலையா?”

“இல்லைங்க...நல்லா தூங்கினேன் நீங்க எந்திரிச்சு குளிக்கப்போங்க.” என்று கூறியபடி சமையல் அறைக்குள் நுழையும் மனைவியை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

அப்படி என்றால் மூன்று மணிக்கு எனக்குக் கேட்ட சலங்கைச் சத்தம் எங்கிருந்து வந்திருக்கும்..நான் என் வாட்சில் இருந்து சத்தம் கொடுத்த போதும் நிம்மதியாக உறங்கும் மனைவியைக் கண்டு கோபமாக வந்தது. வேலை களைப்பு என்று எண்ணினேன்.

அடுத்த நிமிடம் ஸ்டெல்லாவிடம் இருந்து ஃபோன் வந்தது.

“வீட்டுல இருக்கறப்போ கூப்படாதன்னு சொல்லியிருக்கேன்ல..” என்று பற்களை நற நறத்த வண்ணம் கூறினான் கணேசன்.

“இல்லை கணேஷ்...மனசே சரி இல்லை... நைட் எல்லாம் தூக்கமே இல்லை தெரியுமா....நைட் மூனு மணீ இருக்கும்...சலக் சலக்ன்னு ஒரு சத்தம்...கூடவே யாரோ சிரிக்கற மாதிரி கேட்டுச்சு கணேஷ்....எனக்கு பயமா இருக்கு...”

“எனக்கும் தான் ஸ்டெல்லா....” என்றான் கணேசன்.
 
Akila saravanan

இணை அமைச்சர்
Joined
Oct 12, 2018
Messages
586
Reaction score
662
Location
Sattur

Mam super story
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான சிறுகதை,
அருணா கதிர் டியர்
 
Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Superb sis vinai vithaithavan vinai aruppan krathu sariya irukku illamathiya thavikka vita patha avanathi aathma ganesh &stellaa va thav ila vitutha
 
Jiffy

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
45
Reaction score
48
Age
39
Location
Dubai
Nice short story Aruna sissy ?
Avanthika super
As usual unga way of writing very attractive sissy...
Ippadi more stories kodunga ??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top