• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 10 Part 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

Chapter 10 is posted below. Please post ur comments after reading.

அத்தியாயம்----10
கதவின் இருபக்கமும் நின்றுக் கொண்டு சுடரை சூர்யாவும்…. விக்ரம், சூர்ய கலாவை … பார்த்திருக்க. அந்த சகோதரிகளோ...இவர்களை பார்க்காது அவர்களுக்குள் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த சூர்யா…
“என்னடா வில்லனை போலாவது பார்ப்பாங்கன்னு பார்த்தா…..இவங்க அது மாதிரி கூட பார்க்காம இருக்காங்க.” என்றவனின் பேச்சை கேட்காது அவர்களையே விக்ரம் உற்று நோக்க.
அப்போது தான் சூர்யாவும் அவர்களை கவனித்தான். முகம் வேர்த்து தட தடக்க இருப்பவர்களின் பயத்தை சூர்யா புரிந்துக் கொண்டாலும் அவர்கள் அருகில் செல்லாமல் அமைதியாக நிற்க.
விக்ரம் தான் சூர்ய கலாவின் அருகில் சென்று அவள் பக்கத்தில் அமர பார்க்க. சூர்யா பயத்துடன் தன் சகோதரியுடன் ஒன்றினாள் என்றால்…..
சுடரோ...தன் ஒத்தை விரலை நீட்டி…. “பக்கத்தில் வர வேல எல்லாம் வெச்சிக்காதிங்க.” என்று விக்ரமை பார்த்து சொன்னவன்.
அடுத்து சூர்யாவை நேர்க் கொண்டு அவன் கண்ணை பார்த்து….. “நீங்க என்ன மிரட்டினாலும் நாங்க கேச வாபஸ் வாங்க மாட்டோம்.” வீட்டுக்கு வந்த போது யார் என்று தெரியாததால்...விக்ரம் தான் அஸ்வினின் உறவு முறை என்று நினைத்து தான் அவனின் சட்டையை பிடித்தது.
ஆனால் அடுத்த நாளே….வேதாச்சலத்திடம் சென்ற சுடர் அனைத்தையும் சொன்னதும் வேதாச்சலம் அஸ்வினின் உறவு முறை அனைவரின் புகைப்படங்களையும் காட்டிய பிறகு தான் புரிந்தது சூர்ய பிரகாஷ் தான் அஸ்வினின் தாய் மாமன் என்பதும்.
விபத்து நடந்த அந்த நேரத்தில் அஸ்வின் அப்பா,தாத்தா, இருவரும் ஊரில் இல்லை என்ற கூடுதல் தகவலோடு...அனைவரையும் சரிகட்டியது அனைத்தையும் சூர்ய பிரகாஷ் தான் செய்தான் என்பது வெட்ட வெளிச்சம் ஆகி விட.
அந்த வெறுப்பில் அளவுக்கு அதிகமாகவே அவனை முறைத்து பார்த்திருந்தவளின் கண்ணை பார்த்த வாரே….அவளை நோக்கி மெல்ல அடி எடுத்து வைக்க.
சுடருக்கு சூர்யா தூரத்தில் இருந்த போது இருந்த தைரியம் அவன் அருகில் வர வர காணாமல் போக. அதை தெள்ள தெளிவாக அவள் கண்ணும் காட்டி கொடுத்து விட.
இவ்வளவு பயம் இருக்குறவளுக்கு என்னத்துக்கு அந்த பேச்சு வேண்டி இருக்கு என்று மனதில் அவளை பற்றி நினைத்துக் கொண்டே கட்டில் அருகில் வந்தவன் சுடர் அருகே செல்லாது விக்ரம் அமர்ந்து இருந்த பக்கத்தில் போனவன்.
விக்ரமை பார்த்து…..”நீ எழுந்துடு சகல.” என்றதும்.
அவன் முகத்தை பார்த்துக் கொண்டே எழுந்து நின்றதும்….விக்ரம் அமர்ந்த இடத்தில் சூர்ய கலாவின் மிக அருகில் சூர்யா அமர்ந்துக் கொள்ள.
விக்ரமுக்கு சக்தி இருந்தால் கண்டிப்பாக அந்த இடத்திலேயே சூர்ய பிரகாஷை பொசுக்கி இருப்பான். நல்ல வேலை கடவுள் அந்த சக்தி விக்ரமுக்கு கொடுக்க படாததால் சூர்யா காப்பற்ற பற்றவனாய் ஜம் என்று அமர்ந்து.
“சுடர் என்ன சொன்ன…..?” என்று சூர்ய கலாவை இடிக்கும் படி அந்த பக்கத்தில் அமர்ந்து இருந்த சுடரிடம் வினவ.
பார்ப்பதற்க்கு மிக நெருக்கமாக தெரியும் படி அமர்ந்தானே தவிர…. சூர்ய கலாவின் மேல் படாமல் மிக ஜாக்கிரதையாக அமர்ந்து கேட்க.
முதலில் விக்ரம் அமர்ந்ததுக்கே பயத்தில் இருந்த சுடர் இப்போது சூர்ய பிரகாஷ் நெருக்கத்தில் வந்து அமர்ந்ததும் அய்யோ அவனே பரவாயில்லை என்பது போல் விக்ரமை பாவமாக பார்க்க.
அதை சரியாக கேச் பிடித்த விக்ரம். “அய்யோ அம்மு நம்மைய பாக்குதே….” என்று குழியாகி இருடா நான் இருக்கேன் என்ற ரீதியில்…..
“சூர்யா பாவம் எதுன்னாலும் அப்புறம் பேசலாம். பாரு அவங்க எவ்வளவு டையர்டா இருக்காங்கன்னு.” என்று சொன்னவன்.
அந்த அறையில் இருந்த பெல் இன்டர்காம் மூலம் ஒரு பணியாள் அழைக்க.
“ஆப்பிள் ஜூஸ் இரண்டு.” என்றவனின் பேச்சை இடையிட்ட சூர்யா.
“நான்கு ….” என்று அந்த பணியாளை அனுப்பியவன். அந்த ட்ராயரில் இருந்த பேப்பரை எடுத்து சுடர் , சூர்ய கலா இருவர்களுக்கும் இடையில் வைத்து விட்டு….. “குடிச்சிட்டு சைன் பண்றிங்கலா…..? சைன் பண்ணிட்டு குடிக்கிறிங்களா…..” என்று கூலாக கேட்பவனை சுடர் தன்னால் முடிந்த மட்டும் முறைக்க.
“அப்புறம் என்னை பொறுமையா பாக்கலாம். நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு…..”
“என்னால பதில் சொல்லவும் முடியாது. அதே போல இதில் சைன் பண்ணவும் முடியாது. இப்போ என்னடா பண்ணுவ.” இந்த கொஞ்ச நேரத்திலேயே விக்ரம் முழு வில்லன் கிடையாது. இந்த சூர்ய பிரகாஷ் தான் முழு வில்லன்.
இந்த முழுவில்லன் ஏதாவது செய்ய நினைத்தாலும்...இந்த பாதி வில்லன் ஏதாவது சொல்லுவான் என்ற நம்பிக்கையில் கெத்தாக சூர்ய பிரகாஷை டா...போட்டு பேச. வந்ததே கோபம்….
நீங்கள் நினைப்பது போல் சூர்ய பிரகாஷூக்கு இல்லாது விக்ரமுக்கு வந்து விட. தன் காதலியின் சகோதரி என்று கூட பாராது.
“ஏய் உன் வயசு என்ன….? அவன் வயசு என்ன….? வயசுக்கு கூட மரியாதை தர மாட்டியா….? என்று எகிறி கொண்டு பேசியவனை பார்த்து மனதில் அய்யோ இவன் தான் கொஞ்சம் பரவாயில்லேன்னு நினச்சேன் ஆனா இவன் என்ன இப்படி எகிறிக் கொண்டு வருகிறான் என்றுமனதில் பயத்துடன் நினைத்துக் கொண்டாலும் வெளியில் கெத்தாக.
“பெரியவங்கன்னு மரியாதை தர்றது வயச பாத்து இல்ல. அவங்க நடத்தைய பார்த்து தான். நீங்க பண்ண பண்ற காரியத்துக்கு நான் கொடுத்த மரியாதையே ரொம்ப ஜாஸ்த்தி.” என்று தெனாவெட்டாக பேசியவளின் அருகில் செல்ல பார்த்த விக்ரமின் கை பற்றி தடுத்த சூர்ய பிரகாஷ்.
சூர்ய கலாவின் அருகில் இருந்து எழுந்து சுடரை நோக்கி வந்து அவள் அருகில் அமர்ந்தவன்.
“என்ன சொன்ன….? என்ன சொன்ன…..? நடத்தைய வெச்சி தான் மரியாதை தருவியா….?” என்று கேட்டவன்.
தன் மோவாயில் தட்டிக் கொண்டு ஏதோ யோசிப்பது போல் யோசித்தவன். பின் சுடரை பார்த்து….. “அப்போ எனக்கு உன் மரியாதை தேவையில்ல.” ஆன் பேச்சில் குழம்பி போய் பார்த்தவளின் கன்னத்தை தொட்டு தன் கண்ணை பார்க்க வைத்தவன்.
“ஏன்னா எனக்கு உன் கிட்ட மரியாதையோட வேறு ஒன்று தான் வேண்டும்.” அலுங்காமல் ஒரு குண்டை தூக்கி போட்டதும்.
மனதில் பயம் இருந்தாலும் அதை வெளியில் காட்டாது தைரியத்துடன் பேசிக் கொண்டு இருந்த சுடர் சூர்ய பிரகாஷின் இந்த பேச்சில் வெளியில் காட்டிய தைரியம் முற்றிலுமாக ஒடுங்க.
“என்ன சொல்ற…..? என்று திரும்பவும் ஒருமையிலேயே கேட்க.
“நீ அடங்க மாட்ட போல.சரி சரி நமக்குள்ள எதுக்கு மரியாதைன்னு நினச்சிட்ட போல.” என்று கேட்டதும்.
“இல்ல இல்ல நமக்குள்ள மரியாதை வேண்டும் வேண்டும்.” என்று உலறியவளின் கையில் இருந்த ஜூஸ் க்ளாஸை வாங்க கை நீட்ட.
அவள் பயத்தில் சூர்ய கலாவின் மேலேயே சாய. கட்டிலின் விளிம்பில் அமர்ந்து இருந்த சூர்ய கலா கீழே சரிவதை கொஞ்சம் தள்ளி நின்றுக் கொண்டு இருந்த விக்ரம் பார்த்து….
“ஏய்…” என்று கத்திக் கொண்டே சூர்ய கலாவை கீழே விழாமல் தாங்கியவனின் மேல் மொத்தமாக சரிந்தவளை பிடித்துக் கொண்ட விக்ரம்.
பிடித்த பிடியை விடாது சுடரிடம் “இப்போ அவன் உன் கையில் உள்ள க்ளாசை தானே வாங்க வந்தான் . அதுக்கு ஏன் அப்படி அலறி இவ மேல விழுற . கொஞ்சம் விட்டா விழுந்து இருப்பா பாரு…..?” என்று சூர்ய கலா விழுந்து இருப்பாளே என்ற பதட்டத்தில் சுடரை திட்ட.
சுடரோ…”என்னடா நடக்குது இங்கே ….” என்ற முரையில் புரியாது பேந்த பேந்த விக்ரமை விழி விரித்து பார்க்க.
அந்த விழி தாக்குதலில் பார்த்தவன் சாயாது எதிர் பக்கத்தில் இருந்த சூர்ய பிரகாஷ் மொத்தமாக சாய்ந்து விட.
“சர சகல விடு விடு அவளும் சின்ன பிள்ள தானே…..” என்று விக்ரமிடம் சமாதானப்படுத்தியவன்.
சுடர் ஜோதியையும், சூர்ய கலாவையும் ஒரு சேர பார்த்து….’தோ பாருங்க…..” என்று ஆரம்பித்தவனின் பேச்சை தடுத்த விக்ரம்.
“வேண்டாம் வேண்டாம் நானே பேசிடறேன். நீ பேசுவது உங்க அப்பா மேடையில் மைக் பிடிச்சி பேசுவது போல இருக்கு. இது பொண்ணுங்க கிட்ட பேசுறது. அதுவும் நம்ம மனசுக்கு பிடிச்ச பொண்ணுங்க கிட்டஇப்படியா பேசுறது….?” என்ற விக்ரமின் பேச்சில் விக்கித்த இருபெண்களும்.
“யாரு….? மனசுக்கு பிடிச்ச பொண்ணு…?”
இது வரை பயத்தில் அமைதியாக இருந்த சூர்ய கலா விக்ரமின் பேச்சில் பயம் கொஞ்சம் பின்னால் செல்ல சிறிது தைரியத்தை வர வழைத்துக் கொண்டு கேட்க.
“நீ தான்டா கண்ணம்மா….” அவளின் கன்னத்தை தட்டி சொல்ல.
திரும்பவும் சுடர் ஒரு விரலை நீட்டி என்னவோ சொல்ல வர.
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
என்னடா வில்லனை போலாவது பார்ப்பாங்கன்னு பார்த்தா…..இவங்க அது மாதிரி கூட பார்க்காம இருக்காங்க.
Semma bannu:LOL: nice ud(y) but romba sothapureenga pa heros kala:LOL: training paththala rendu perukum;)
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Hi mam
Cha ivanugalukku romance panna chance kidaikathu nu paatha ippidi continues ah kidaichutte irukku. So naama thittalam ???? yen bros ungalukku romance panna place vera kidaikkalaya????? Sudar and surya be bold girls. Nice update . Waiting for next update.☺☺☺☺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top