• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 12 Part 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

Chapter 12 posted below. Padichitu unga
அத்தியாயம்----12​
“ உங்க அப்பா இப்போ தானே சுடர் நம்ம வீட்டு மருமகளுன்னு சொல்லிட்டு போனாரு. அவர் எப்படி அவங்க வீட்டுக்கு எதிரா ….?” என்று தன் பேச்சை தயங்கி நிறுத்தியவனிடம்.
“சொன்னாரு தான். ஆனா சுடர் எங்க அப்பா சொல் படி கேட்டா தான்.” என்று சொல்லி விட்டு யோசனையில் இருக்கும் போதே…
அந்த இடத்துக்கு வந்த டேவிட்….”பிக்…” சொல்ல வந்தவன் விக்ரமை பார்த்து. “பெரிய அய்யா அவங்கல வீட்டில் கொண்டு போய் விட்டுட சொன்னாரு….”என்றனின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாது ...சம்மதமாக தலையாட்ட.
விக்ரம் தான் “நாமே கூட்டிட்டு போய் விட்டுடலாமா….?” என்ற அவன் பேச்சை மறுத்து.
“வேண்டாம் டேவிட்டே கூட்டிட்டு போகட்டும்.” என்று சொன்னவன். திரும்பவும் சுடர் சூர்ய கலா இருக்கும் அறைக்கு தன் பார்வை செலுத்தாது அடுத்து என்ன என்ற யோசனையிலேயே இருக்க. விக்ரமுக்கு தான் கண் அங்கும் இங்கும் அலைபாய்ந்து ஓய்ந்தது விட்டது.
தன் அலுவலகத்தில் இருந்த வேதாச்சலத்துக்கு மனது ஆற மறுத்தது. தன் வாழ் நாளிலேயே மிரட்டலுக்கு பயந்து நேர்மையை அடகு வைக்க வேண்டி வந்த சூழ்நிலையை நினைத்து நினைத்து வருந்தினார். இது வரை தன் வாழ்நாளில் எத்தனையோ மிரட்டலை எதிர் நோக்கி இருக்கிறார்.
அனைத்தும் உயிர் பய மிரட்டல் தான். உயிர் போனா என் ****** போனது போலடா என்று மிரட்டியவனுக்கே சவால் விட்டும் இருக்கிறார்.
ஆனால் இது மாதிரி சிலை கடத்தல். அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை.தன் மகன் சிறுவயதாக இருக்கும் போதே...இதே மாதிரி மந்திரிக்கு எதிராக கேஸ் எடுத்து வாதாடும் போது உன் மகனை கொன்று விடுவேன் என்றதுக்கு துளியும் அஞ்சாது அந்த கேசை எடுத்து வாதாடி ஜெயித்தும் காமித்தார்.
அவர் மச்சான் தான் கொஞ்ச நாளுக்கு தங்கை, தங்கை மகனை தன் ஊருக்கு அழைத்து சென்றார்.
ஆனால் இந்த மாதிரி….நினைக்க நினைக்க மனது பொறுக்கவில்லை. மகனின் தற்கொலை, மருமகளின் குழந்தை பெரும் காலம். இதை மனதில் வைத்து கேசை எடுக்கவில்லை என்றாலும்…
ஏதாவது….ஏதாவது செய்ய வேண்டும். பதவியும், பணமும் இருந்தால் போதும் எது வேண்டுமானலும் சாதிக்கலாம் என்பதை தகர்தெரிய வேண்டும்.
அதை நினைத்து தான் சுடரின் தந்தைக்கு அழைப்பு விடுக்க. அந்த பக்கமோ….”வேண்டாம் சார். இந்த கேச இதோடு விட்டுடுங்க. மூணு பொம்பள பிள்ளைய வெச்சி இருக்கேன். உயிர் போனா கூட பரவாயில்லை. வேறு ஏதாவது என்றால்….நாங்க செத்த பிறகு கூட எங்கல இந்த மக்கள் விட மாட்டாங்க சார். விட்டுடுங்க.” என்று சொல்லும் மனிதரிடம் வேதாச்சலம் வேறு என்ன பேச முடியும். விட்டு விட்டார்.
ஆனாலும் மனது ...விட முடியாது அடித்துக் கொண்டது.சுடர்...அந்த பொண்ணுக்கு தைரியம் ஜாஸ்த்தி தான் மறைமுகமாக அந்த பெண்ணை வைத்து நாரயணன் பேரனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.
அடுத்த வாரம் மேல் படிப்புக்காக வெளிநாடு செல்கிறான். அதற்க்குள் என்ன செய்யலாம்….?யோசித்து யோசித்து தலை வலி வந்தது தான் மிச்சம். ஒன்றும் புரியாது இருந்தார்.
சுடரே தன்னை பார்க்க அலுவலகம் வந்து இருப்பதை தன் ஜூனியர் வந்து சொன்ன உடன் மகிழ்ச்சி என்பது மிக குறைந்த வார்த்தை. ஆனாலும் அதை வெளி காட்டிக் கொள்ளாது அனுப்பு என்று சொன்னவர்.
ஒரு பேப்பரை எடுத்து கட கட வென்று ஏதோ எழுதிக் கொண்டு இருக்கும் போதே….சுடர் அங்கு வர.
சத்தமாக …. “நான் தான் உங்க கேச எடுக்கலேன்னு சொன்னனே எதுக்கு நீ இங்கு வந்த….? என்று சொல்லிக் கொண்டே கண் ஜாடை காட்ட. சத்தியமாக சுடருக்கு ஒன்னும் புரியாது.
“என்ன சார் சொல்றிங்க. நான் உங்கல நம்பி தானே வந்தேன்.” என்று சொன்னவளுக்கு.
“இந்த கேச நான் எடுக்கல.” என்று சொல்லிக் கொண்டே இன்னொரு துண்டு பேப்பரில்….நம்மை கவனிக்கிறாங்கலோன்னு எனக்கு சந்தேகம்…”என்று எழுதியவர்.
பின் தான் எழுதிய லெட்டரை...டேபுல் மீது வைத்து. “நீ முதல்ல இடத்த காலி பண்ணும்மா...” என்று அதட்டல் விட.
சுடரும் அவர் சொன்னதுக்கு ஏற்ப அக்கம் பக்கம் பார்த்து அந்த கடித்தத்தை மறைத்து தன் பேகில் வைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
வேதாச்சலம் இனி எதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். நேற்று சுடரின் தந்தைக்கு பேசிய அடுத்த பதினைந்தாவது நிமிடம் போனின் மூலம்.
“என்ன சார் அடங்க மாட்டிங்க போல. அது தான் அவங்கல விடுன்னு சொல்லிட்டாங்கலே...இன்னும் என்ன…..? என்று கேட்டவன்.
பின் உங்க பையன் பிழைச்சிக்கிட்டான்னு தைரியமா…..?உங்க மருமக முழுகாம இருக்கா போல. பிரசவம் மருத்துவமனையில் பார்த்தா எல்லாம் ரொம்ப செலவு ஆகும் நாங்கலே பார்க்கட்டுமா…..”
வேதாச்சலத்துக்கு…..இவர்கள் கொன்று விடுவேன் என்று மிரட்டி இருந்தால் கூட. போங்கடா என்று சொல்லி இருப்பார்.
ஆனால் அவர்கள் ஒவ்வொரு நடவடிக்கையும் மானத்தை விலை பேசுவது போலவே இருக்க தான் கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டு விட்டது.
இருந்தும் எத்தனுக்கு எத்தன் என்பது போல். சூர்ய பிரகாஷ் ,விக்ரம், இருவரின் பெயரிலேயே சிம் வாங்கியவர்.
ஒன்றை தான் வைத்துக் கொண்டு மற்றொன்றை அந்த கடிதத்தில் வைத்து சுடருக்கு கொடுத்து விட்டார்.
சுடர் தன் வீட்டில் அடி எடுத்து வைத்ததும் குணசேகர்…. “என்ன சுடர் எங்கே போயிட்டு வர்ற…..?” எப்போதும் அன்புடன் பேசும் தந்தை இன்று அதிகாரத்துடன் கேட்க.
“பிரண்ட் கிட்ட ஒரு நோட்ஸ் வாங்கிட்டு வர்றேன்னு சூர்யா கிட்ட சொன்னனேப்பா…..”
“ஆ சொன்னா சொன்னா...இனி இந்த நோட்ஸ் வாங்க அது இதுன்னு எங்கேயும் தனியா போக தேவயில்ல. லீவ் போட்ட பாடத்தை விட்டுட்டு படிங்க. வர்ற மார்க்கு வரட்டும்.” என்று கண்டிப்பாக சொல்லி விட்டு போகும் அப்பாவை எதிர்த்து பேசி பழக்கமில்லை என்பதால் அமைதியுடன் தன் அறைக்கு சென்றவளுக்கு சூர்யா மூலமும் “அப்பா ரொம்ப கோபத்தில் இருக்கிறார்.” என்று தெரிய வர அதை கருத்தில் கொள்ளாது.
வேதாச்சலம் கொடுத்த கடிதம் படிப்பதிலேயே இருந்தவளுக்கு தனிமை கிடைப்பேனா என்று இருந்தது. வெண்ணிலா வேறு ஊரில் இருந்து வந்து விட்டதால் சூர்யாவது…. இல்லை வெண்ணிலா…. யாராவது ஒருத்தர் அறையில் இருக்க.
எப்படி படிப்பது என்று நினைத்தவள். சரி குளிக்கும் சாக்கில் குளியல் அறையிலாவது படிக்கலாம் என்று தன் நையிட்டி எடுக்கும் போது தான் வெண்ணிலா முதல்ல நான் குளிக்கிறேன் என்று போட்டிக்கு வர.
எப்போதும் விட்டு கொடுக்கும் சுடரோ….’இவ்வளவு நேரம் சும்மா தானே இருந்த நான் குளிக்கும் போது தான் உனக்கு குளிக்க தோனுமா….?” என்று என்றைக்கும் இல்லாது இன்று எரிந்து விழுந்தவளை அதிசயமாக பார்த்த வெண்ணிலா.
“சரி சுடர் நீயே முதல்ல குளி. கச கசன்னு இருக்குதேன்னு நினச்சேன்.” என்று சகோதரி சொன்னதை கேட்டு சுடருக்கு வருத்தமாக போய் விட்டது.
“சாரி….” என்று சொன்னவள் . மறுத்து பேசாது தன் உடையோடு போனவளை பார்த்து வெண்ணிலா, சூர்ய கலா இருவரும் பார்த்துக் கொண்டனர்.
comments sollunga. Last episode comments potavangaluku thanks.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜி டியர்
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Semma epi mam. Waiting for actions of sudar and the lawyer sir. Ivangala ellam ippidi summa vida kodathu sudar. Be bold sudar and her family ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top