• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 25 Part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Chapter 25 continuation

தன் தந்தையின் கைய் பற்றி….”என்னப்பா பிரச்சனை…..?” முதன் முறையாக தன் மகனின் ஆறுதலான வார்த்தை கேட்டவருக்கோ...கண் தன்னால் கலங்க.
அதை பார்த்த சுடருக்கே ஒரு மாதிரியாகி விட்டது. எப்போது ஒரு விரைப்போடு பார்த்தவரை...சொல்ல போனால் தன் மனதில் வில்லன் என்று சித்தரித்த ஒருவரின் இந்த கண் கலங்கல் அவளுக்கே ஒரு மாதிரியாக இருந்தது என்றால்…
அரசியல்வாதி என்ற கெத்தில் எப்போதும் சுற்றி திரிந்தவரை பார்த்திருந்திருந்த சூர்யாவுக்கு இந்த கண்கலங்கள் எத்தனை பேரதிர்ச்சியாக இருக்கும்.
“அப்பா….” அந்த அழைப்பிலேயே தன் ஒட்டு மொத்த அதிர்ச்சியை காட்ட.
எப்போதும் தன் மகனை எதற்க்கும் நிர்பந்திக்க கூடாது என்று நினைப்பவருக்கு தன் வருத்தத்தை மறைத்தவராய்.
சிறுவயதில் அழைக்கும் … “என்ன ராசு” என்ற அழைப்பே அவரின் மனதை தெள்ளத்நெளிவாக விளக்கி விட.
ஒரு நிமிடம் என்ன பேசுவது என்று மனதில் யோசித்தவன். பிடித்த அவர் கை விடாது.”அப்பா இனி நான் இங்கேயே இருக்கிறேன்.” தன் முடிவை எந்த பூசி மெழுகலும் இல்லாது சொல்லி விட.
“எதுக்கு…..?” அவர் கேட்ட கேள்வியை விட அவர் குரல் மாறுதலை உள் வாங்கியவனாய்.
“எதுக்கா…?என்னப்பா இது என் வீடு தானே….?” என்று கேட்டவனிடம்.
“ஓ இப்போ தான் இது உன் வீடுன்னு தெறிதா…..?” என்று கேட்டவர்.
பின் அவரே….” வேண்டாம் சூர்யா. என் இந்த வருத்தம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் மறஞ்சு போயிடும். நீ எப்போதும் போலவே இரு.” என்று சொல்ல.
“இப்போ உங்க மனசு வேதனையில் இருக்கு அப்படி தானே….?”
இது என்ன கேள்வி என்பது போல் நாரயணன் ஒரு பார்வை பார்த்து வைத்தார். “அதுக்கு தான் நான் இங்கு இருக்கேன்னு சொல்றேன்.” என்று சொன்னதும்.
“என் வேதனை இப்போ வந்தது இல்லேப்பா…..அஸ்வின் எப்போ போனானோ அப்போ ஆராம்பிச்சி அந்த பாவி பய செய்த வேலைய கேள்வி பட்டதும் அது உச்சத்தில் போயிடுச்சி.
அப்போ எல்லாம் ஏதோவிருந்தாளி போல வந்து என் கிட்டேயும் அம்மா கிட்டேயும் பேசிட்டு போயிட்டு இருந்தவனுக்கு இப்போ மட்டும்….” அதற்க்கு மேல் பேச விடாது தன் வாயை கட்டி போட்டது மருமகளின் பார்வை.
எப்போதும் தனக்கு முன் எகிறி குத்திப்பவன் இப்போது தன் தந்தையின் பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லாது அமைதியாக இருந்தவனை பார்த்து.
என்ன பையன் இப்படி அமைதி காக்குறான். இப்படி இருப்பவன் இல்லையே…..ஒரு சமயம் மருமகளுக்கும், அவனுக்கும் ஏதாவது பிரச்சனையா…. என்ற கவலையில் சுடர் முகத்தை பார்த்தார்.
இனி தனக்கு சந்தோஷம் என்ற ஒன்று உண்டு என்றால் அது மகன் மருமகள் வாழும் வாழ்க்கை தான். அதற்க்கும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ ….?அவர் தன் கவலை மறந்தவராய் மகனை பயத்துடன் பார்த்தவர் சுடரை தயக்கத்துடன் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே…. “ராசா உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே…..?” தன் தந்தையின் கேள்வி புரியாதவனாய்.
“என்னப்பா….?” என்று கேட்டவனிடம் திரும்பவும் அந்த கேள்வி கேட்காது.
“எதுக்கு நீ இங்கயே இருக்கேன்னு சொன்ன….?’ இப்போது தயங்குவது சூர்யாவின் முறையானது.
பின் இவனா தயங்கினான் என்பது போல் சுடரிடன்…. “சுடர் நான் அப்பா கிட்ட கொஞ்சம் பேசனும். நீ கொஞ்சம் நம்ம ரூமுக்கு போறியா…..?” என்று சொன்னதும் நாரயணன் பதட்டத்துடன்.
“இப்போ எதுக்கு அந்த பிள்ளையஅனுப்புற…?எது இருந்தாலும் சுடர் இருக்கட்டும்.” என்று அவசரமாக சொல்லி முடித்தார். இதனால் எங்கு மருமகள் கோபித்துக் கொள்வாளோ என்ற பயம் தான்.(ஆ அந்த பயம் இருக்கனும்லே….)
“இருக்கட்டும்…” மாமா என்று சகஜமாக அழைக்க முடியவில்லை அதனால் மொட்டையாக பேசி விட்டு தன் கணவனை முடிந்த அளவுக்கு முறைத்து விட்டு தான் சுடர் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
பின் என்ன முதல்லய அவ போக தான் பார்த்தா...அப்போ இரு போகாதே...உன்னை விட்டு எனக்கு ரகசியம் எதுவும் இல்ல என்ற ரீதியில் பேசியவன் இப்போ அவனே போன்னு சொன்னா கோபம் வரத்தானே செய்யும்.
மருமகள் அந்த இடத்தை விட்டு அகன்றதும்….”என்ன சூர்யா ஏற்கனவே சுடர் கோபமா தான் இருக்கா…. அவ கிட்ட இப்படி பேசுவது பிரச்சனை வளர செய்யாதா….அதுவும் இல்லாம இப்போ எதுக்கு இங்க இருக்கனும் என்று சொல்ற.
அது எல்லாம் வேண்டாம் மருமகளும். நீயும் கொஞ்சம் தனியா இருங்க. அப்போ தான் உங்களுக்குள்ள எல்லாம் சரியா ஆகும்.” என்று சொன்னவர்.
மனதில் முனு முனுக்கிறேன் என்று கொஞ்சம் சத்தமாகவே….”அங்கே அங்கே கல்யாணம் ஆவதுக்கு முன்ன அப்பா அம்மா கூட இருப்பாங்க. ஆயிட்டா பொண்டாட்டிய கூட்டிட்டு தனியா போயிடுவாங்க. இங்கு என்னனா எல்லாம் உல்ட்டாவா நடக்குது.” என்று சொல்லி முடித்ததும்.
“அப்பா நீங்க சொன்னது சரி தான்.ஆனா நான் அவளை கூட்டிட்டு தனியா போனா...நீங்க கல்யாணத்துக்கு முன்ன கேட்டத என்னால செய்ய முடியாதே…..?” மகன் பேச்சி புரியாது.
“நான் என்னத்த உன் கிட்ட கேட்டேன்….?”
“அது தான் கல்யாணம் செய்யிறதே வாரிசுக்காக தான்னு. அதை என்னால நிறை வேத்த முடியாதே….”
“என்னடா உலற்ர….”
“அப்பா உலற்றல நிஜமா தான் சொல்றேன். தோ இப்போ என்ன பாத்து நேரா பேசினாலே...அப்போ தான் நான் முடிவு செஞ்சேன் நாம இங்கேயே இருந்து குறஞ்சது ஒரு ஏழு எட்டு பிள்ளையாவது பெத்த பின்னாடி தான் இங்கு இருந்து போகனும் என்று.”
மகனின் இந்த பேச்சில் தன் கவலை மறந்தவராய்…. “ஏழு எட்டு போதுமாடா….?” என்று கேட்டு விட்டு மனது விட்டு சிரித்தவர்.
“உன் இந்த பேச்சி உண்மையா ஆன என்னோட சந்தோஷப்படுறவன் இந்த உலகத்தில் எவனும் இல்லடா…..” உணர்ச்சி வசப்பட்டு பேசும் தன் தந்தையின் தோள் தொட்ட சூர்யா…
“நடக்கும் அப்பா கண்டிப்பா நடக்கும். ஆனா ஏழு, எட்டு எல்லாம் விளையாட்டுக்கு சொன்னது. இரண்டு ஒன்னு சந்திராவுக்கு ஒன்னு எங்களுக்கு.” என்று சொன்ன மகனை வியப்புடன் பார்க்க.
“ஆமாப்பா….அஸ்வின் செய்தது தப்புன்னாலும் ஏதோ நான் சுயநலமா இருந்துட்டனோன்னு தோனுது. அதுவும் அந்த ஆள நம்பி….ஒரு தம்பியா என் கடமைய செய்யலையோன்னு குத்துதுப்பா…
அதுவும் இன்னிக்கி அக்கா ஒரு மூளையில என்னால முடியலப்பா…..அவ மனச திசை திருப்ப சரியான வழி ஒரு குழந்த.” என்று சொல்லி முடித்ததும்.
“நானும் அத தான் யோசிச்சேன் சூர்யா. ஆனா தத்து எடுக்கலாம் என்று நினச்சேன். ஆனா நீ…..ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா….” தன் மகன் கை பற்றி சொன்னார்.
இவர்களின் இந்த முடிவுக்கு சுடர் சம்மதிப்பாளா….?” (முதல்ல அடியேன்னு கூப்பிடுறதுக்கு பொண்டாட்டி காணுமா…?இதில் பெண் எத்தனை …?ஆண் எத்தனைன்னு கேட்டானா….?அப்படி இருக்கு இவங்க இரண்டு பேரோட பேச்சு. முதல்ல அவ உன் கூட குடித்தனம் நடத்தட்டும் அப்புறம் பாக்கலாம்.)
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
வர்களின் இந்த முடிவுக்கு சுடர் சம்மதிப்பாளா….?” (முதல்ல அடியேன்னு கூப்பிடுறதுக்கு பொண்டாட்டி காணுமா…?இதில் பெண் எத்தனை …?ஆண் எத்தனைன்னு கேட்டானா….?அப்படி இருக்கு இவங்க இரண்டு பேரோட பேச்சு. முதல்ல அவ உன் கூட குடித்தனம் நடத்தட்டும் அப்புறம் பாக்கலாம்.)
aamam illa.......... mudala antha pilla surya aasaiya look vittatutum............ nice epi sis.
 




Sindu_rr

மண்டலாதிபதி
Joined
Jan 27, 2018
Messages
202
Reaction score
651
Location
Mum
(முதல்ல அடியேன்னு கூப்பிடுறதுக்கு பொண்டாட்டி காணுமா…?இதில் பெண் எத்தனை …?ஆண் எத்தனைன்னு கேட்டானா….?அப்படி இருக்கு இவங்க இரண்டு பேரோட பேச்சு. முதல்ல அவ உன் கூட குடித்தனம் நடத்தட்டும் அப்புறம் பாக்கலாம்.)
:p:p:p:)
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் விஜி
அப்டேட் சூப்பர்மா
அதானே இந்த சுடர் பொண்ணு first லுக்கே இப்ப தான் விட்டுருக்கு அதுக்குள்ள அய்யா பேரன் பேத்தி வரைக்கும் கற்பனையில் கோட்டை கட்டுவான் போல இந்த சூர்யா ஏம்ப்பா சூர்யா ஏலெட்டு போதுமா இல்ல நம்ம பெரியவங்க வாழ்த்துவாங்களே பதினாறும் பெற்று பெரு வாழ்வு அதுக்கு வேணா நீ முயற்சிக்கலாமே முதலில் உன் பொண்டாட்டியை கரெக்ட் பண்ணுவியா அதைவிட்டு உங்க அப்பாகிட்ட நல்ல டயலாக் விட்டுக்கிட்டு இருக்க எங்க பக்கம் சொல்வாங்க வாய்ப்பேச்சுகாரவங்க செயலில் இருக்காது நீ எப்படி செயலில் பார்ப்போம் உன் வீரத்தை தேங்க்ஸ் விஜி நல்ல ரசிக்கும்படியான பதிவு காத்திருக்கிறோம் அடுத்த பதிவுக்கு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top