• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 27 Part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Chapter 27 Continuation

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம அங்கு இருக்க எல்லா முன்னாடியும் அடிச்சிட்டு அவங்க மனேஜர் கிட்ட….”இனி இவனை இங்கு கூட்டிட்டு வராதிங்க. அங்கயே இருக்கட்டும் என்று சொன்னதோடு மட்டும் அல்லாம அத செயலையும் காட்டிட்டாங்க.
வீவ் நாள்ள எல்லாம் ஏதாவது ஒரு கோர்சுல சேத்து விட்டுட்டாங்க. அப்போ தான் சூர்யாவின் நட்பு கிடைச்சது. அவங்க அம்மாவ பாக்க பாக்க இவங்க என் அம்மாவா இருக்க கூடாதான்னு நினைக்காத நாள் இல்ல. அத ஒரு தடவ ரேவதி அம்மா கிட்ட சொல்லவும் செய்துட்டேன்.
அப்போ அவங்க என் தல மேல தட்டி … “இப்போ மட்டும் என்ன நான் உனக்கு அம்மா தான்னு சொல்லி அணச்சிக்கிட்டப்ப எனக்கு எப்படி இருந்தது தெரியுமா….?
அம்மான்னு ஒரு வார்த்தையா மட்டும் கேட்டுட்டு இருந்த நான் அவங்க அணைப்பில தான் உணர்ந்தேன். பக்கத்தில் உட்கார்ந்துட்டு இருந்த சூர்யா அப்பா….”அம்மா மட்டும் இருந்தா போதுமா….?அப்பா தேவையில்லையான்னு பேச்சில் மட்டும் இல்லாம அத செய்யல்ல காமிச்சாரு.
பன்னிரெண்டாம் கடைசி பரிட்சை முடிஞ்ச பின் சூர்யா வீட்டுக்கு வாடான்னு கூப்பிட்டப்ப.எப்போவும் போல புது கோர்சுக்கு சேர்த்து விடுறதுக்கு மேனஜர் வர்றதா சொன்ன தொட்டு அவன் கிட்ட நீ போடா நான் வேல முடிச்சிட்டு வர்றேன்னு அவன அனுப்பிச்சிட்டேன்.
என் அம்மா கணவரை தான் அடிக்கடி மாத்திட்டு இருந்தாங்க மேனஜர் அதே மேனஜர் தான். அவர பார்த்துட்டு எப்போவும் என்ன முறச்சிட்டு இருக்க ஒரு பையன் இன்னொருவன் கிட்ட…
“என்டா விக்ரமுக்கு இவரு அப்பாவா இருப்பாரான்னு கேட்டதுக்கு இன்னொருத்தன் அம்மாவோட சம்மந்த படுத்தி வந்த கிசு கிசுவில் உள்ள பெயரை எல்லாம் சொல்லி சீட்டு எழுதி போட்டு குலுக்கி நம்ம விக்ரமையே எடுக்க சொல்லிடலாம் யாரு பேரு வருதோ அவனையே விக்ரமுக்கு அப்பாவா ஆக்கிடலாம்.
பாவம் பள்ளியில் தான் அப்பா பேரு போட முடியல. நம்ம புன்னியத்தில் காலேஜிலேயாவது போடட்டுமேன்னு…..” என்று சொன்னதும் அங்கு இருந்த பெண்கள் கூட சிரிச்சிட்டாங்க.
இத்தன வருஷம் அவமானம், அவமானம் மொத்தமா கோபம் என்பதை விட வெறி. வெறின்னு சொன்னா தான் சரியா இருக்கும். அங்கு ஒரு பையன் கிரிக்கட் பேட் வெச்சிட்டு இருந்தான்.
அத பிடுங்கி அவன் மண்ட உடஞ்சி ரத்தம் வர வரை அடிச்சேன். எங்கு இருந்து தான் அவ்வளவு சக்தி வந்ததோ அங்கு இருக்குறவங்க என்னை பிடிச்சி கூட அவங்க இரண்டு பேரையும் என் கிட்ட இருந்த காப்பத்த முடியல.
அதில் ஒருத்தன் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் ஒட. விடலையே துரத்தி துரத்தி அடிச்சேன். பின்னாடி பார்த்துட்டு ஓடின அவன் முன்னாடி வந்த கார கவனிக்காம மோத. அனைவரின் கையும் என்னை தான் காட்டுச்சி.
அவ்வளவு நேரம் இருந்த ஆத்திரம் அடங்கி அந்த இடத்தில் பயம், பயம், பயம் மட்டும் தான்.
அந்த வயசுல போலீஸ் பிடிப்பாங்கலோ….? ஜெயில்ல போட்டுவாங்கலோ...?அடிப்பாகலோ….? எல்லோரும் என்னை கொலைக்காரனா தான் பார்ப்பாங்கலா…..? இப்பவும் அத நினச்சா…. தன் மார்பில் ஒண்டிக் கொண்டு இருந்த கலாவை விளக்கி விட்டு படுக்கையில் அமர்ந்து தலையை பிடித்துக் கொண்டவன்.
“அப்போ நாரயணன் அப்பா தான். அவர் அரசியல் பலம், பணம் பலம், அவர் செல்வாக்கு பயன் படுத்தி போலீஸ் பார்வை கூட என் மேல பட விடாம.” அதற்க்கு மேல் தொடர்ந்து அவனால் பேச முடியாது.
“ஆனா நான் அவர் பேரன. தப்பு தான் அஸ்வின் செஞ்சது தப்பு தான்.நாரயணப்பா பேரன காப்பத்த என்ன வேணா செய்யலாம் அது மட்டும் தான் என் மனசுல இருந்தது.
எனக்கு தெரியும் சுடர பத்தி தப்பா பேசுனா சூர்யா கஷ்டப்படுவான்னு. ஆனா எனக்கு அப்போ சூர்யா கஷ்டம் தெரியல. நாரயணப்பா கிட்ட என் நன்றிய காமிக்கனும். ரேவதியம்மா கிட்ட அவங்க பேரன கொடுக்கனுமுன்னு நினச்சேன் ஆனா முடியல என்னால முடியல. அஸ்வினை காப்பத்த முடியலே….” ஒரு அளவுக்கு மேல் விக்ரமின் குரலின் மாறுபாட்டால் சூர்யா அவனை கட்டி அணைத்து அவனின் முதுகை தட்டிய வாறே….”ரிலேக்ஸ் விக்ரா...ரிலேக்ஸ்….” என்று விக்ரமை சமாதானப்படுத்துவதை சகோதரி இருவரும் விழி விரித்து பார்த்து இருந்தனர்.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nehilvana pathivu sis vikram sudarai visaranaiyin pothu pesiathu koota thavaraka theriyalai................
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top