• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Pesum silaiye.. Kattavizhkava..? Epi ~ 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் டியர்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க... ரொம்ப ரொம்ப சாரிப்பா... நெட் problem சோ எபி வர லேட் ஆகிட்டு.. ... சாரிப்பா...... நீங்க ஆவலுடன் எதிர் பார்த்த எழிலன், அக்கி இந்த எபியில் வாறாங்க.... படிங்க படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... ஏதாவது தவறுகள் இருந்தால் சொல்லுங்க திருத்திக் கொள்கிறேன்...படித்து கமெண்ட்ஸ் சொல்லுற உங்க எல்லோருக்கு ரொம்ப நன்றி...நன்றி டியர்ஸ்....

கட்டு – 16
கடந்த ஆறு மாதமாக சாமுண்டி சித்தர் எழிலன் உடலை, அவன் ஆன்மாவை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்...




அவனின் மூச்சு சீராக இருகிறதே ஒழிய அவன் எழவும் இல்ல, பேசவும் இல்லை.. தினமும் இவர் விண்பா பற்றி, அவன் பிறப்பு பற்றி என்று அவனின் கடந்த காலங்கள் எல்லாம் பேசுகிறார் தான் அவனிடம் இருந்து ஒரு அசைவு கூட இல்ல..



இதற்கு மேல் கோட்டைத்தாய் கருணைக் காட்டினால் மட்டுமே உண்டு...



“ விண்பா “ அவளை நினைத்தால் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை..



அவரும் கடந்த 6 மாதமாக முயற்சி செய்துக் கொண்டு தான் இருக்கிறார்... எழிலன் எழுந்தால் மட்டுமே அவளை அந்த சிலையில் இருந்து மீட்க முடியும்..



இந்த 6 மாதமாக சாமுண்டி சித்தர் ஒரு சிவன் கோவிலில் இருந்து தன் தவத்தை செய்கிறார்.. அவரது வேண்டுதல் எல்லாம் விண்பாவை காக்க வேண்டும் என்பதே..



அங்கிருந்து கிளம்பி நேராக எழிலன், விண்பா தங்கி இருக்கும் வீட்டை நோக்கி நடந்தார்...



தன் தவசக்தியால், மந்திர சக்தியால் அவள் உடலுக்கு சேதாரம் வராமல் சுற்றிலும் மந்திர கட்டுகள் கட்டி அவர்களை அதில் வைத்திருந்தார்.. இருவர் உடலும் அவர் கோட்டை வரும் வரை காக்க வேண்டும் அது தான் இதுவரை உள்ள சக்தி எல்லாம் ஓன்று திரட்டி அவர்களை பாதுகாத்து வருகிறார்....



அவள் நினைவலையில் அன்று 6 மாதங்களுக்கு முன் நிகழ்ந்த நினைவு வந்துப் போனது...



வலியில் துடித்துக் கொண்டு, உயிரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொண்டிருந்த எழிலனை தூக்கிக் கொண்டு சாமுண்டி நடந்து சென்றார்...



சென்றவர் அக்கியில் ஊருக்கு சென்றார்... அங்குஉள்ள சிவன் கோவிலில் அவனை படுக்க வைத்துக் கொண்டு காட்டுக்கு சென்றார் மூலிகை செடி பறிக்க சென்றார்..



அவர் அப்படி மூலிகை பறிக்க செல்லும் பொழுது தான் அந்த ஆற்றை கடந்து அடுத்த பக்கம் செல்ல அந்த ஆற்றில் கால் வைக்கும் பொழுது தான் தூரத்தில் அக்கி, விண்பாவின் உடலை சுமந்து வருவது அவர் கண்ணில் பட்டது...



“ இவங்க உடல் இங்க வருது என்ன ஆச்சு “ என்ற யோசனையுடன் ஆற்றில் இறங்கி அவர்களை கரையில் இழுத்து வந்தார்...



வின்பாவுக்காகவும், தன்னை படைத்த சாமுண்டி சித்தரை காணவுமே அக்கி தன் உயிரை தக்க வைத்துக் கொண்டான்...



சித்தர் அவன் உடலில் புகவுமே அக்ரதா சாமுண்டி தான் தன்னை படைத்தார் என்று அறிந்துக் கொண்டான்... சித்தர் அவன் உடலில் இருந்து வெளியில் வரவுமே அவருக்கு தெரியும் “ அக்கி எப்படியும் இறந்து விடுவான் “ என்று அதனால் தான் அவர் அவனை தொடரவில்லை...



கரைக்கு வந்த அக்ரதா “ விண்பாவை எப்படியாவது காப்பாற்றி விடுங்க... அப்படியே எழிலனையும் காப்பாற்றி அவனை இவளுடன் சேர்த்து வைங்க “ என்று அவரை நோக்கி கையெடுத்து வணங்கியவனை கண்டு பதறி தவித்த சாமுண்டி



“ எதுக்கு இப்படி பேசுற அக்ரதா.., நான் உன்னை காப்பாத்துறேன் “ என..



“ உங்களால் முடியாது சித்தரே.. நானும் வாழவிரும்பலை.. எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருகிறேன்.. பண்ணிய தவறுக்கு கிடைத்த தண்டனை தான் என் சாவு.. அதையும் அவனே எனக்கு தந்தான் “ என மகரிஷியை கூறினான்...



அவருக்கும் தெரியுமே “ இப்படி உடலில் இருந்தவர்கள், அந்த உடலுக்கு சொந்தகாரன் தனக்கு தேவை இல்லை என்றால், வெளியில் வரவும் அவர்கள் உயிர் போய் இருக்கும் என்பதும் அவருக்கு தெரியும்.. அவனிடம் இப்பொழுது எழிலன் நிலையை கூற பதறி தவித்த அக்ரதா எழிலன் இருக்கும் கோவில் நோக்கி வின்பாவையும் தூக்கிக் கொண்டு சென்றான்..



கொஞ்சமும் யோசிக்காமல் விண்பாவை அவன் இடது பக்கம் படுக்க வைத்த அவன், எழிலனின் வலது பக்கம் படுத்துக் கொண்டான்... இவன் செயலை சாமுண்டி ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தார்..



அவரை நோக்கி “ என் ஆன்மாவை எழிலன் உடலில் செல்ல உத்தரவிடுங்கள் சித்தரே உங்களால் முடியும் “ என கூற



அவருக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை... எழிலனுக்கும் மீனை போல் வாழ்வு மிகவும் குறைவு, ஆனால் அக்ரதாவுக்கு மனிதனைப் போல் பல வருட வாழ்வு... அதற்காக அவனை காக்க இவன் உயிரை மாய்ப்பது அவருக்கு சரியாக தோணவில்லை... எழிலனை வேற வழியில் காக்கவேண்டும் என்று எண்ணி இருக்கிறார்.. ஆனாலும் அவருக்கு ஒரு வழியும் இல்லை...



அக்ரதாவின் மூலமாக தான் மறுவாழ்வு இருக்கும் போல என எண்ணினார்... அக்ரதாவும் இன்னும் கொஞ்ச நேரத்திலோ, அல்லது கொஞ்ச நாளிலோ இறந்து விடுவான்... அதை அறிந்த அவர் ஒரு உயிரைக் கொண்டு இரு உயிரை காக்க எண்ணினார்...

 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அதன் படி மந்திரங்களை கூற, அக்ரதாவின் உடலில் இருந்து அவன் உயிரைப் பிரித்து எழிலன் உடலில் சேர்த்தார்.. ஆனால் எழிலன் உடல் அவன் உயிரை ஏற்க மறுத்தது...

அவர் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவன் உயிரை ஏற்க மறுத்தான்.... ஆனால் அதை அறியாத அக்ரதாவோ மரணத்தை தழுவினான்...

சாமுன்டியால் அவன் ஆன்மாவை அவன் உடலுடன் சேர்க்க முடியவில்லை.... வேறு வழி இல்லாமல் அவன் உடலைக் கொண்டு கோட்டைநல்லூரில் கொண்டு போட்டு வந்தார்..

அவன் உடலை கெளதம் தான் தகனம் செய்தான்... அவன் இறப்பை யாராலும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை...

விண்பா காணாமல் சென்றது பெரும் இழப்பு, அதை விட இவன் அக்ராதாவின் மரணம் யாரும் எதிர் பார்க்காதது...

இரண்டு மாதம் கழித்து தான் எழிலன் உடல் அக்ரதாவின் உடலை ஏற்றுக் கொண்டது... அதில் எழிலன் முழுவதையும் இழந்தான் அவன் நினைவு உட்பட...

இத 6 மாதமாக அவர் காத்துக் கொண்டு இருக்கிறார்.. எழிலன், அக்ரதாவாக எழுவானா? இல்லை அவனாக எழுவானா என்று...

காட்டில் இருந்த சித்தர் யார் நினைவும் இல்லாமல் முழுவதும் விண்பா நினைவில் மயங்கி இருந்தார்...

அவருடன் விண்பா ஒரு மாதம் கழித்து பேச ஆரம்பித்தாள், அவள் அவரிடம் பேசும் பொழுது எல்லாம் அவள் பேச்சிலையே மகிழ்ந்துப் போவார்...

இரவு ஆனால் அவள் சிலையை சுற்றிக் கொண்டு தான் அவர் இருப்பார்... அவள்மேலான காதல் அவருக்கு வரும் பொழுது எல்லாம் அவர் அந்தசிலையை சுற்றிக் கொள்வார்..

அவள் பேசும் நேரம் எல்லாம், அவள் மனதில் எப்பொழுதும் இவர் நினைவு வர அவர் பல மந்திரங்களை அவளுக்கு கற்றுக் கொடுப்பார்..

ஆனால் அவளோ, அவள் நினைவை இழக்கவே இல்ல.. அவள் மனம் முழுவதும் எழிலனே நிறைந்து இருந்தான்.. சித்தர் கூறும் மந்திரத்தை வைத்து அவள் எழிலன் மனத்தை எழுப்பி கொண்டு இருந்தாள்...

அவர் கூறிய பல மந்திரத்தால் தான், அவள் எழிலன் நிலையை அறிந்துக் கொண்டாள்... அதாவது அக்ரதாவை எப்படி அவர் கூட வைத்துக் கொண்டு அவளை இங்கு அழைத்து வந்தார்களோ, அதே முறையை இப்பொழுது அவள் பயன்படுத்தினாள்...

அதை எதையும் சித்தர் அறியவே இல்லை.. அவர் விண்பா தன்னை முழுதாக அறிய வேண்டும் என்று மட்டுமே எண்ணினார்...

அதே போல சாமுண்டியும், இங்கிருந்துஎழிலனை அவளுக்கு உணர்ந்து போராடிக் கொண்டு இருந்தார்.. இப்படியாக விண்பா, சாமுண்டி இருவரின் விடா முயற்சியும் அன்று செயல் படுத்த ஆரம்பித்தது..


அன்று மகரிஷி புது வித்தை ஒன்றை விண்பாவுக்குகற்றுக் கொடுத்தார்...




அதாவதுமகரிஷி பாம்பில் இருந்து தன் ஆன்மாவை வெளியில் எடுத்தார், அதே போல் விண்பா ஆன்மாவையும் அதே போல் அந்த சிலையில் இருந்து வெளியில் எடுத்து வந்தார்..



வந்தவர் அவள் கையை பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.. அப்பொழுது அனல் காற்று வீசி அவர்களை கலைக்க, பழையதுப் போல் விண்பா ஆன்மா சிலையிலும், அவர் ஆன்மா பாம்பிலும் தஞ்சம் புகுந்தது..



கட்டவிழ்க வருவான்....

 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் ஷாந்தினி
பதிவு அருமை எழில் அக்ரதா இருவருமே விண்பாவின் நலன் விரும்பிகள் உண்மையில் அக்ரதாவின் விண்பாமீதான காதல் சுயநலமில்லாத பரிசுத்தமானது அதே மாதிரி எழிலன் அன்பும் அப்படியே ஒரு குற்றம் குறை சொல்ல முடியாத அன்பு இதில் வேறுபாடானது மகரிஷியின் செயல் ஒன்றே அவர் செயல் அனைத்தும் இயற்கைக்கு புறம்பானது அவரது பேராசை மூவரின் வாழ்க்கையை மட்டுமல்ல அவர்கள் சேர்ந்தவர்களுக்கும் துன்பத்தை தந்து விட்டது இனி என்ன நடக்கும் அறிய காத்திருக்கிறோம் ஷாந்தினி சவாலான பதிவு தான் யாருக்கு நியாயம் செய்ய போகிறது காலமும் கடவுளும் சித்தரும் என்ன செய்ய போகிறார்கள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top