Porkalathil oru pen pura...(part-6)

Sri Sathya

Active member
#1
போர்க்களத்தில் ஒரு பெண்புறா ...(பகுதி-6)

"நானா... நான் இவங்களை கொல்லப்போறேனா ..." அதிர்ச்சி விலகாமல் கேட்டான் மகேஷ்!

"ஆமாம் மகேஷ் நீங்கதான் ...நீங்களேதான் .. "என்று சுக்வீந்தர் கூறவும் மகேசின் உடலெங்கும் ஒருவித பதற்றம் வந்து குடியேறியது!

"நீங்க என்ன சொல்றிங்கனு எனக்கு புரியலை சார் ...
நான் எதுக்கு இவங்களை கொல்லணும்? ??"

"சொல்றேன் மகேஷ் ...

உங்க முகத்தை ஒரு பாகிஸ்தானியோட முகம் போல மாத்த தேர்ந்த முகமாற்று அறுவை சிகிச்சை நிபுணரும்,
உங்களுக்கு மொழியை கற்றுக்கொடுக்க ஒரு ஆசிரியரும் நியமிக்கப்படுவார் ...
இந்த ப்ரோசஸ்லாம் முடிய எப்படியும் மூணு,நாலு மாசமாகிடும் ...
அதுக்கப்புறம் நீங்க அந்த தீவிரவாத இயக்கத்துல சேரணும் ...

அந்த இயக்கத்துல சேருவது அவ்வளவு சுலபமான காரியமில்லை ...

அதுக்குத்தான் இந்த ரெண்டு பேரும் இவங்க உயிரை உங்க கையால பறிகொடுக்கப்போறாங்க ..."

"நீங்க ...நீங்க என்ன சொல்றிங்கனு எனக்கு சரியா புரியலை சார் ..."

"புரியறாப்போல சொல்றேன் மகேஷ் ...
உங்களை பார்டர்ல வெச்சி நான் பிடிக்கறாப்போல பிடிச்சி நம்ம இந்தியாவுக்கு கொண்டுவந்து விசாரணைன்ற பேர்ல என் கஸ்டடியில எடுப்பேன் ...
இதுவே பாகிஸ்தான்ல நம்ம இந்தியாவைச் சேர்ந்த ஒருத்தன் பிடிபட்டாலும் சுட்டு கொன்னுட்டுதான் வெளியே நியூசே சொல்லுவானுங்க ...ஆனா,நாமதான் அப்படியில்லையே நாட்டுக்குள்ள புகுந்து தாக்குதல் நடத்துறவனுக்கு பிரியாணி பொட்டலம் வாங்கி கொடுத்து நாட்டை சுற்றி பார்க்க வந்த டூரிஸ்ட் போலதான பார்த்துப்போம் அவனை ...
அதுப்போல உன்னை கஸ்டடியில எடுப்பேன் ...
என் கஸ்டடியில இருக்க நீ எப்படியோ தப்பிச்சுப்போனாப் போல ஒரு டிராமா கிரியேட் பண்ணுவோம் ...
இதனால எனக்கு மெமோ கொடுப்பாங்க ஏன் சன்பன்ஸன் கூட பண்ணுவாங்க...பரவாயில்லை அதை நான் பார்த்துக்குறேன் ...

கஸ்டடியில இருந்த தீவிரவாதி தப்பிச்சிட்டான்னு ஒரு நியூஸ் கொடுப்போம் ...இது கண்டிப்பா அந்த தீவிரவாத இயக்கத்தை போய்ச் சேரும் ...
பாகிஸ்தான்ல எந்தெந்த இடங்கள்ல தீவிரவாதிங்க பதுங்கியிருப்பாங்கனு போன முறை நான் அரஸ்ட் பண்ணி வெச்சிருந்தவன் சொல்லிட்டான் ...
ஒரு இந்தியனா நுழைய முடியாது அதனாலதான் ஒரு பாகிஸ்தானியனா உன்னை தயார் செஞ்சி அனுப்புறோம் ...

தப்பிச்சிப்போன நீ அந்த இயக்கத்தை போய் சேரணும் ...
வெறும் கையோட இல்ல இந்த ரெண்டு பேரோட தலையோட ..."என்று கூறி சுக்வீந்தர் மகேஷ் முகத்தை பார்க்க மகேசின் இருதயம் பல மடங்கு வேகமாய் துடித்தது!

"ஆமாம் மகேஷ் இந்த ரெண்டு பேரோட தலையோட நீ அங்கப் போனாதான் அவங்களுக்கு உன் மேல ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை வரும் ...
நம்ம நாட்டுலேயே புகுந்து நம்ம ஆர்மி ஆபிசரோட இரண்டு தலையை ஒருத்தன் கொண்டு வர்றான்னா அவனுங்க உன் தைரியத்தை பாராட்டி உன்னை ரொம்ப நெருக்கமா வெச்சிப்பாங்க ..."

"எல்லாம் சரிதான் சார் ...இது என்னால முடியுமா? ??
என் மகா ..எனக்கு பிறக்கப்போற குழந்தை இதுவெல்லாம்தானே சார் என் நினைவுல இருக்கும் ...
எனக்கு என் மகாவை பார்க்கணும் சார் ...
அவ கூட பேசணும் சார் ...
எனக்கு பிறக்கப்போற குழந்தையை தூக்கி கொஞ்சணும் சார் ...

இதெல்லாம் விட்டுட்டு என்னால எப்படி சார் ... " என்று மகேஷ் இழுக்க ...

"இங்கப்பாருங்க மகேஷ் ...
உயிருக்கு போராடிக்கிட்டிருந்த உங்களை நான் அங்கேயே விட்டுட்டு வந்திருந்தா கொஞ்ச நேரத்துல இறந்துப் போயிருப்ப ...
அப்போ ஜென்மத்துக்கும் உன் பொண்டாட்டியையோ,பிள்ளையையோ பார்த்திருக்கவே முடியாது. ஆனா,இப்போ அப்படியில்ல ...

ஒரு ஆறு மாசம்தான் ...
ஆறு மாசத்துக்கப்புறம் உன் பொண்டாட்டி,குழந்தைனு சந்தோசமாயிருக்கலாம்
நாட்டை காப்பாத்தினோம்ன்ற ஒரு மன நிறைவோட ...

இதுக்கப்புறம் நான் உன்னை கட்டாயப்படுத்த விரும்பலை மகேஷ் ...

சாரி உங்ககிட்ட கொஞ்சம் வயலன்ட்டா நடந்துகிட்டதுக்கு ...

நீங்க கிளம்புங்க ...நீங்க,உங்க குடும்பம்னு இருங்க ...
ஆனா,இந்த தீவிரவாத இயக்கத்தால நம்ம நாட்டுல ஒவ்வொரு உயிர் போனாலும் நாம தடுத்திருக்கலாமோனு ஒருவித குற்ற உணர்ச்சி உன்னை அணு அணுவா கொல்லும் ..."


"சார் நான் ...என்னால ...என்னால முடியுமானு தெரியலை சார் ...இது பெரிய காரியம் ...இதுக்கு நான் தகுதியானவனானு தெரியலை சார் ..."

"தகுதியா ...என்ன தகுதியில்லை மகேஷ் உனக்கு ...
ஏதோ ஒரு டிகிரி படிச்சிட்டு ஐடி பார்க்ல குளு,குளு ஏசி ரூம்ல உட்கார்ந்து மணியடிச்சா சாப்பிட்டோமா ...
வீக் என்ட்ல மாலுக்கும், ரெசார்ட்டுக்கும் போனோமானு இருக்க பசங்களுக்கு நடுவுல நேரம் காலம் பார்க்காம ...
சரியான தூக்கமில்லாம சொற்ப சம்பளத்துக்காக குடும்பம், குழந்தை, சொந்த ஊருனு எல்லோத்தையும் விட்டுட்டு நாட்ட காக்க எப்போ இந்த யூனிபார்மை போடுறோமோ அப்பவே நமக்கு எல்லா தகுதியும் வந்திடுது மகேஷ் ...

அதுலயும் தமிழ்நாட்டு பசங்ககிட்ட ஒரு துடிப்பு இருக்கும் ...
பார்க்க அமைதியா இருப்பானுங்க ஆனா லேசா உரசிவிட்டா தீக்குச்சிப்போல சும்மா பத்திகிட்டு எரிவானுங்க ...

அதனாலதான் நான் ஒரு தமிழ்நாட்டுக்காரனை இந்த ஆப்ரேசனுக்கு செலக்ட் பண்ணியிருக்கேன் ..."

"ம்ம்ம் ...என்னால முடியும்னா நான் செய்யறேன் சார் ...

என் உயிர் போயி நம்ம தேசத்துல ஒரு உயிர் தப்பிக்கும்னாலும் நான் என் உயிரை சந்தோசமா இழக்குறேன் சார் ..."என்று கூறி மகேஷ் விரைப்பாய் ஒரு சல்யூட் வைக்க ...

"இதான்யா தமிழ்நாட்டு பசங்க. ...சாரி மகேஷ் நான் உங்களை இதுக்கு சம்மதிக்க வைக்கதான் உங்களை கொன்னுடுவேன்னு சும்மா பயமுறுத்த துப்பாக்கியை கையிலெடுத்தேன் ..."


"நான் கூட நீ கொன்னுடுவிங்கனு பயந்து இதுக்கு ஒத்துக்கல சார் ...
என் தேசத்தை காப்பாத்த வேண்டிய கடமை எனக்கும் இருக்குனுதான் ஒத்துகிட்டேன் ..."என்று மகேஷ் கூற ...

"வெல்டன் பாய் ..."என்றவாறே அணைத்துக் கொண்டார் சுக்வீந்தர்!

"ஓகே மகேஷ் நாளைக்கே வேலைகளை தொடங்கிடலாம் ...
"

"சார் ...அதுக்கு முன்ன நான் மகாகிட்ட பேசணும் ..."என்று மகேஷ் கூற ...

"கண்டிப்பா மகேஷ் ...
இது ரிஸ்ட்ரிக்டட் ஏரியா ...இங்கே செல்போன் வேலை செய்யாது நாளைக்கு நான் சாட்டிலைட் போன் கொண்டு வர்றேன் ..."என்று சொல்லிவிட்டு சுக்வீந்தர் வெளியேற குல்தீப்பும், ஃபரூக்கும் பின் தொடர்ந்தனர்!

"என்ன சார் பொண்டாட்டிகிட்ட பேசணும்னு சொல்றான் ...நீங்களும் சரினு சொல்றிங்க ...
இது சரியா வருமா ..."என்று குல்தீப் கேட்க ...

"எதுக்கு குல்தீப் டென்சனாகுற ...
நாளைக்கு காலையில தான் யாருனு அவனுக்கே தெரியப்போறதில்ல ...
நான் சொல்றாப்போல செய்ங்கனு ..."இருவரின் காதிலும் ஏதோ சொல்லிவிட்டு காரிலேறி பறந்தார் சுக்வீந்தர்!


**************************************************

மகா அழுது, அழுது வீங்கிப்போயிருந்த முகத்தோடு ஓர் மூலையில் சுருண்டு படுத்திருக்க அவளின் குழந்தை ஏதோ ஓர் பெண்ணின் மார்பில் முகம் புதைத்து பசியாறிக் கொண்டிருந்தது!

"மகாமா ..."என்ற கணேசன் குரல் கேட்டதோ இல்லையோ தெரியவில்லை மகா தலை நிமிரவில்லை!

"மகாமா ..."

"..... . "

"அம்மாடி ...."என்று கணேசன் மகாவின் தலையை பிடித்து நிமிர்த்தியவர் ...

"மகா ......."என்று அலறியதில் பால் கொடுத்துக் கொண்டிருந்த பெண் குழந்தையை கிடத்திவிட்டு ஓடி வந்துப் பார்க்க மகா வாயில் நூரைத்தள்ள கண்கள் சொருகிப் போயிருந்தாள்!


(தொடரும்)
 
#2
ஆனா,நாமதான் அப்படியில்லையே நாட்டுக்குள்ள புகுந்து தாக்குதல் நடத்துறவனுக்கு பிரியாணி பொட்டலம் வாங்கி கொடுத்து நாட்டை சுற்றி பார்க்க வந்த டூரிஸ்ட் போலதான பார்த்துப்போம்
well said sago . avanukku 7 atukku pathukappu kodupom thantanai kodukka pala yugam aagam.
எப்போ இந்த யூனிபார்மை போடுறோமோ அப்பவே நமக்கு எல்லா தகுதியும் வந்திடுது மகேஷ் ...
nice lines sago.sukveendar avan familyoda pesa vituvara:unsure::unsure::unsure::unsure: maha visam kudithu vittala:unsure::unsure::unsure: nice epi sago(y)(y)(y)(y)(y)
 
#3
கதை கற்பனை தான் என்றாலும் பல உண்மையானவையே பக்காவா அவன் தான் கல்பிரிட்னு தொிஞ்சா கூட சாட்சி இருக்கானு ஆராய்ச்சி பண்ணிகிட்டு விசாரணை கைதியா உள்ள வச்சி பிரியாணி பொட்டலம் வாங்கி கொடுத்து பாதுகாப்பளிப்போம் ஸ்டோரி ரொம்ப விறுவிறுப்பா இருக்கு சத்யா செம்ம சூப்பா்
 

Sponsored

Advertisements

Top