PorKalathil oru pen puraa 2

Sri Sathya

Active member
#1
போர்க்களத்தில் ஒரு பெண் புறா ...(பகுதி -2)

திலீப்பின் செல்போன் சிணுங்கவே அதை எடுத்துப் பார்த்தவன் மறு முனையில் மகாவின் எண்ணிலிருந்து அழைப்பு வருவதைக் கண்டு கதறியழுதான்!

செல்போனை உயிர்பித்து காதில் வைக்க மறுமுனையில் கரகரப்பாய் ஒரு ஆணின் குரல் கேட்டது ...

"ஹலோ ...."

"ஹ...ஹலோ..யா..யாரு? ??"

"தம்பி நீங்க திலீப் தானே? ??"

"ம்ம்ம் ...."என்று பேச முடியாமல் திலீப் விம்ம ...


"தம்பி நான் கணேசன் பேசறேன் ...மகாவோட அப்பா ...
என்ன தம்பி குரல் ஒரு மாதிரியிருக்கு ...
ஏதாச்சும் பிரச்சனையா அங்க ...."

"சார் ......"என்று திலீப் கதறியழ மறுமுனையில் கணேசனை பதற்றம் தொற்றிக் கொண்டது!

"தம்பி ...என்னாச்சிப்பா ..
ஏன்பா அழறே ???"

"சார் ...அது ...நம்ம ...மகேஷ் ..."

"அய்யோ தம்பி... மாப்பிள்ளை ...மாப்பிள்ளைக்கு என்னாச்சி? ??"

"மகேஷ் ...மகேஷ் ...நம்ம எல்லோரையும் விட்டுட்டு போயிட்டான் சார் ....
பாவி போய்ட்டான் ..." என்று திலீப் சவப்பெட்டியின் மேல் விழுந்து கதறியழ மறுமுனையில் கணேசன் தன் செல்போனை தரையில் நழுவ விட்டார்!

கீழே விழுந்துக் கிடந்த செல்போனில் திலீப்பின் அழுகை சன்னமாய் கேட்க நடுங்கும் கரங்களோடு அதை எடுத்து காதில் வைத்தார் கணேசன்!

"தம்பி ...தம்பி ...நீங்க என்ன சொல்றிங்க? ??
என்னாச்சி மாப்பிள்ளைக்கு ....
என்னாச்சி தம்பி. ."

"நேத்து எல்லையில நடந்த துப்பாக்கி சண்டையில மகேஷ் இறந்துட்டான் சார் ...
பாவி போயிட்டான் சார் ..."

"அய்யோ ...மாப்ள ....என் பொண்ணு...
இன்னும் உலகத்தையே பார்க்காத அவர் பிள்ளை ...

அய்யோ கடவுளே ...
என் பொண்ண முண்டச்சியாக்கி மூலையில உட்கார வெக்காவா உனக்கு விரதமிருந்து கும்பிட்டேன் ...
அய்யோ இதை ..இதை ...மகா ...
மகா எப்படி? ??
அய்யோ ....."தலையிலடித்துக் கொண்டு அழுதார் கணேசன்!

"சார் ...நீங்கதான் மகாகிட்ட பக்குவமா இதை சொல்லணும் ...
இங்க இன்பர்மேஷன் ரூம்லயிருந்து கால் பண்ணியிருப்பாங்க ...
மகாவை பத்திரமா பார்த்துக்கங்க ...
நான் மகேஷ் ...மகேஷ் பாடியோட....." அதற்கு மேல் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க தன் கைகளால் அங்கே வர்றேன் என்பதைப் போல் தமிழ்நாட்டிலிருக்கும் கணேசனுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை என்ற போதிலும் சைகை செய்தான் திலீப்!


"தம்பி மகாவுக்கு பிரசவ வலி வந்து ஆஸ்பிட்டல்ல சேர்த்திருக்கேன் ...
பிரசவம் ரொம்ப சிக்கல்னு டாக்டரெல்லாம் சொல்றாங்க ...
மகா மாப்பிள்ளகிட்ட ஒரு வார்த்தை பேசணும்னு ஆசைப்பட்டா அதான் அவர் நம்பருக்கு போன் பண்ணா எடுக்கலை ...மகாதான் உங்க நம்பரை கொடுத்து பேச சொன்னா ..

ஆனா மாப்பிள்ள ...அய்யோ ...
இதை நான் எப்படி ...
எப்படி மகாகிட்ட சொல்ல போறேன் ...
அவ உயிரையே விட்டுடுவாளே ..."தலையிலடித்துக் கொண்டு அழுதார் கணேசன்!

"சார் ...சொல்லிதான் ஆகணும் சார் ...
பக்குவமா சொல்லிடுங்க சார் ...
இன்னைக்கு சாயங்காலமே பாடி ஊருக்கு வந்துடும் ...
திடுதிடுப்புனு மகேசை அப்படி பார்த்தா மகா செத்தே போயிடுவா சார் ...

ப்ளிஸ் சார் ...பக்குவமா மகாகிட்ட சொல்லிடறதுதான் சார் நல்லது!" என்றான் திலீப்!


"தம்பி ...சத்தியமா மகா ...மகா இருக்க இந்த நிலமையில ...
இதை ....
செத்துடுவா தம்பி ..."வார்த்தைகளை தவணை முறையில் சிந்தினார் கணேசன்!

"அய்யோ மகேஷ் ...உன் உயிர் பூமியை தொடும் போதுதானாடா நீ பூமியை விட்டுப் போகணும் ...
பாவி பெத்த அப்பன் முகத்த கூட பார்க்காத பாவியாக்கிட்டு போயிட்டியேடா அந்த குழந்தையை ...

அய்யோ கடவுளே ...மகேஷ் ...வாடா ...வாடா மச்சான் ...
டேய் இப்போ நீ போக கூடாதுடா ...
உன் பிள்ளை கேட்பான்டா அப்பா எங்கேனு ...

டேய் மச்சான் ...

உன் விரல பிடிச்சிகிட்டு தானேடா அவன் நடை பழகணும் ...

மச்சான் டேய் உன் மீசையை கிள்ளி,கிள்ளி நீ அலறுறதை பார்த்து அவன் சிரிப்பான்டா ...

மச்சான் டேய் . .
நம்ம ஊரு மாரியாத்தா திருவிழாவுல எல்லா அப்பனும் அவனவன் பிள்ளைங்களை தோளுல தூக்கிகிட்டு திரியும் போது உன் பிள்ளை உன் தோளை எங்கடா போய் தேடுவான் ...

டேய் மச்சான் நிறைய இருக்குடா ...
அழகான கவிதை எழுதி அதை அடுத்த நிமிசமே தீயில போட்டு எரிக்குறியே இது நியாயமாடா ...

மச்சான் எழுந்திருடா ...

எழுந்திரு மகேஷ் ..." திலீப் கதறியழ மறுமுனையில் கணேசனின் அழுகுரல் அதிகமாகவே இருந்தது!

**************************************************

மருத்துவமனையில் ஒரு மூலையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தவரை நர்ஸின் குரல் நிமிர செய்தது!

"அய்யா...அழாதீங்கய்யா ...
உங்க பொண்ணுக்கு ஒண்ணுமாகாது ...
பொண்ணா பொறந்த ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையில அனுபவிக்க வேண்டிய வலிதான் சார் இது ...
இந்த வலி, உங்களோட அழுகையெல்லாம் பேரக்குழந்தை பிறந்ததும் பறந்து போயிடும் சார் .."என்றாள்!

"அய்யோ ...அய்யோ ...அந்த ஜீவன் மண்ணுக்கு வர்றதுக்குள்ள ஏன் இப்படியொரு இடியை அது தலையில கொடுத்த கடவுளே ...கடவுளே ..."என்று கணேசன் தலையிலடித்துக் கொண்டு அழ. . .
அவர் அழும் காரணம் அறியாத நர்ஸ் ...

"அய்யா சொன்னா கேளுங்க ....டாக்டர் உங்களை வர சொன்னார் போய் பாருங்க ..."என்ற நர்ஸ்

"ரொம்ப பாசமா வளர்த்திருப்பார் போல ...பாவம் பொண்ணோட வலியோட இவரோட வலிதான் அதிகமாயிருக்கு ..."என்று கூறிக் கொண்டே சென்றாள்!

மருத்துவரின் அறைக்குள் கணேசன் நுழைய ...

"வாங்க சார் ...அந்த பொண்ணோட ஹஸ்பன்ட் ஐ மீன் உங்க மாப்பிள்ளை வரணும் சார் உடனே .."

"மாப்பிள்ள ....மாப்பிள்ள ...அய்யோ சார் அவர் ...அவர் போயிட்டார் சார் ..."என்று கதறியழ ...

"எங்கே போயிட்டார் சார் ...பொண்டாட்டியை இந்த நிலமையிலே விட்டுட்டு இப்படி அக்கறையேயில்லாம இருக்க ஆளுங்களுக்கெல்லாம் எதுக்கு சார் குழந்தை ...
கஷ்டப்படாம கிடைச்சா ஒரு பொருளோட அருமை தெரியாதுங்கறது உண்மைதான் ...
தன் பொண்டாட்டி வயித்துல ஒரு புள்ள பூச்சி முளைக்காதானு தவமா தவமிருக்கற ஆளுங்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு வரம் ரொம்ப ஈசியா கிடைச்சிட்டதால அதோட அருமை தெரியல ..."

"அய்யோ சார் ...மாப்பிள்ளையை அப்படிலாம் சொல்லாதீங்க ..."

"வேற என்ன சார் சொல்ல சொல்றிங்க....
அந்த பொண்ணோட மனசுல ஏதோ ஏக்கமும், படபடப்பும் இருக்கு ...BP லெவல் தாறுமாறா இருக்கு ...
ரொம்ப சிக்கல்தான் ...

இப்போ ஆப்ரேசன் பண்ணா பெரிய உயிருக்கு ஆபத்து ...ஆப்ரேசன் பண்ணலைனா சின்ன உசிரு போயிடும் ...
ஏதாவது ஒரு உயிரைத்தான் காப்பாத்த முடியும் ...
அதுக்கு அந்த பொண்ணோட ஹஸ்பன்ட் கையெழுத்து போடணும் சார் ...உடனே அவரை வர சொல்லுங்க ..."

"அய்யோ டாக்டர் ...மாப்பிள்ள ...மாப்பிள்ள ....இறந்து போயிட்டாரு ..."என்று கணேசன் கூற அதிர்ச்சியாய் அவர் முகத்தைப் பார்த்தார் டாக்டர்!

"என்ன சார் சொல்றிங்க? ??

எப்போ? ??
எப்படி? ??"
டாக்டர் கேட்கவும் கணேசன் விசயத்தைக் கூற டாக்டரின் விழிகளின் ஓரம் நீர் கசிந்தது!

"சார் ...இப்போ இந்த விசயத்தை அந்த பொண்ணுக்கு சொல்லாதீங்க ...அது அவ உயிருக்கே கேடா முடிஞ்சிடும் ...

இந்தாங்க இந்த பார்ம்ல ஒரு சைன் பண்ணுங்க ...

மயக்க மருந்து கொடுத்து குழந்தையை ஆப்ரேசன் பண்ணி வெளியே எடுத்துடலாம். பட் குழந்தை இறந்து போயிடும் ...
இல்லைனா ஆப்ரேசன் பண்ணி குழந்தையை உயிரோட எடுக்க முயற்சி பண்ணலாம் ...பட் ப்ளட் ப்ரசர் அதிகமாகி அது மூளை நரம்புகளை வெடிக்க செஞ்சி அந்த பொண்ணு இறந்துப் போக நிறைய சேன்ஸ் இருக்கு ..."என்று டாக்டர் கூறவும் கதறியழுதார் கணேசன்!

"பாவி ...பாவி ...அவன் கூடவே அந்த பிஞ்சிக் குழந்தையையும் கொண்டு போக முடிவு பண்ணிட்டான் போல ...
டாக்டர் முடிஞ்சா ரெண்டு உயிரையும் காப்பாத்தி கொடுங்க ...எனக்கப்புறம் என் பொண்ணுக்கு உறவுனு சொல்லிக்க அந்த குழந்தையாவது கண்டிப்பா இருக்கணும் டாக்டர் ...இல்லைனா ரெண்டு உயிரும் போகட்டும் ...
என் பொண்ணு ஒண்டி கட்டையா நின்னு தவிக்க வேணாம் ...தவிக்க வேணாம் ..."என்று கணேசன் கூற...

"என்ன சார் பைத்தியக்காரன் போல பேசறிங்க ...
நான் இவ்ளோ தூரம் சொல்றேன் நீங்க என்னனா அதை புரிஞ்சிக்காம இப்படி பேசறிங்க ...ஏதாவது ஒரு உயிரை காப்பாத்த பார்க்குறதுதான் புத்திசாலித்தனம் ...அதை விட்டுட்டு இப்படி டிலே பண்ணா அதை விட பெரிய பைத்தியக்காரத்தனமே இல்லை ..."

"ஒரு உயிரை காப்பாத்தி ....
ஒரு உயிரை காப்பாத்தி என்ன சார் பண்ண சொல்றிங்க ...
தனக்கு ஒரு பிள்ளை பிறக்கும் ...அதை தன்னோட புருசன் தூக்கி கொஞ்சுவான்ற நினைப்புல வலியோட சேர்ந்து அந்த தருணத்துக்காக காத்திருக்காளே அவளுக்கு புருசனும் இல்ல பிள்ளையும் இல்லைனு ஒத்தையா நிக்க வெக்க சொல்றிங்களா ....

சொல்லுங்க டாக்டர் ஒத்தையா நிக்க வெக்க சொல்றிங்களா? ??"


"இப்படி பைத்தியக்காரன் போல பேசாதீங்க ...இல்லைனா உடனே நீங்க வேற ஆஸ்பிட்டலுக்கு போங்க...."என்று டாக்டர் கூறிக் கொண்டிருந்த விநாடி நர்ஸ் ஒருத்தி பதறியபடி ஓடி வந்தாள்!

"டாக்டர் ...டாக்டர் ...
அந்த பிரசவத்துக்கு வந்த பொண்ணுக்கு ...."

"என்னாச்சி ...என் பொண்ணுக்கு என்னாச்சி ..."என்று கணேசன் வெளியே ஓட ...

"அந்த பொண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துடுச்சி சார் ...
ரெண்டு உயிரும் நல்லாயிருக்காங்க ..."என்று நர்ஸ் கூறிய விநாடி ஒட்டியிருந்த மகேசின் இமைகள் மெல்ல விலகியது ஏதோ ஓர் மூலையில்!

(தொடரும்)
 
#6
வாவ்..... சூப்பர் சார்....

அதுவும் பினிஷ் lines ரொம்ப அருமை.....


கணேசன் யோட தவிப்பு, தீலிப் யோட நேசம் எல்லாம் அப்படியே கண்ணு முன்னாடி வர மாதிரி இருக்கு....
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top