Porkalathil oru pen puraa...(part-10)

Sri Sathya

Active member
#1
போர்க்களத்தில் ஒரு பெண்புறா... (பகுதி-10)

விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த மகேஷ்

அருகில் ஏதோ நிழலாடுவதைப் போல் உணர்ந்தவன் திரும்பி பார்க்க அங்கே சுக்வீந்தர் நின்றிருந்தார்!

"வாங்க சார் ... சாரி சார் நீங்க வந்ததை நான் கவனிக்கல..."

"பரவாயில்லை மகேஷ்...
ஏதோ யோசனையில இருந்திங்க அதான் தொல்லை கொடுக்க வேண்டாமேனு ...."

"ம்ம்ம்..." விரக்தியாய் பதில் வந்தது மகேசிடமிருந்து!

"மகேஷ் உங்க மனப் போராட்டாம் எனக்கு நல்லா புரியுது ...

நீங்க வேணும்னா இந்த ஆப்ரேசன்லயிருந்து ரிலீவ் ஆகிக்குங்க...

வேற ஏதாவது ப்ளான் பண்ணிக்குறேன் நான் ..."

"இ...இல்ல...வேண்டாம் சார் ..."

"இல்ல மகேஷ்...
இப்படிப்பட்ட மனநிலையிலே நீங்க போனிங்கனா அது சரிப்பட்டு வராது ...

இப்படி நீங்க கஷ்டப்படுறதைப் பார்க்க எனக்கு ஒரு மாதிரியிருக்கு மகேஷ் ..."

"நானும் நான், என் குடும்பமென்ற நினைப்பையெல்லாம் தூக்கியெறிஞ்சிட்டு இந்த வேலையிலே முழுசா இறங்கலாம்னு எவ்வளவோ முயற்சி பண்றேன் பட் முடியல சார் ...

என் மகா சிரிக்குறாப் போல இந்த ரூமுக்குள்ள சத்தம் கேட்குது ...

என் குழந்தை ...என் குழந்தை முகம் எப்படியிருக்கும்னு மனசு கிடையா கிடந்து அடிச்சிகிடு சார் ..." சொல்லும் போதே மகேசின் கண்களிலிருந்து இறங்கிய கண்ணீர்த் துளிகள் மெல்ல முகத்தை கடந்திறங்கி அவன் நெஞ்சில் நஞ்சம் புகுந்தது!


"இதுக்குதான் மகேஷ் சொல்றேன் நீங்க இந்த ஆப்ரேசன்ல இருந்து ரிலீவ் ஆகிடுங்க ...

முதல்ல நான் இந்த வேலைக்கு நீங்கதான் சரிப்படுவீங்கனு நினைச்சேன். பட், இப்போ நான் எடுத்த முடிவு தப்போனு தோணுது மகேஷ் ...

இப்படியொரு அன்பா இருக்க ஒருத்தனை அவன் குடும்பத்துலேயிருந்து பிரிக்கறது எவ்வளவு பாவம் மகேஷ் ...

அந்த பாவத்தை நான் பண்ணுனுமானு என் மனசு என்னை கேள்வி கேட்டு கொல்லுது ..."


"சார் ...நீங்க வருத்தப்படாதீங்க ப்ளீஸ்....

இந்த தேசத்துக்காக நீங்க இழந்ததையெல்லாம் கம்பேர் பண்ணா இதெல்லாம் பெரிய விசயமேயில்லை சார் ...

நான் ஒண்ணே ஒண்ணு மட்டும் கேட்பேன் செய்வீங்களா சார் ..."
மகேஷ் கேட்டவுடன் சுக்வீந்தர் ஒரு நிமிடம் யோசனையில் ஆழ்ந்தார்!

'இவன் எதை கேட்கப் போகிறான் ...

பொண்டாட்டி கூட பேசணும்னு கேட்பானோ...

இந்த முறை ஏமாத்தக்கூட முடியாது ...
கேட்டா மறுக்கவும் முடியாது ...'

"என்ன சார் யோசிக்குறிங்க? ??" மகேசின் குரல் சுக்வீந்தரை நிகழ் உலகிற்கு அழைத்து வந்தது!


"எ...என்ன ...மகேஷ்? ??

கேளுங்க..."


"ஏதாச்சும் செஞ்சி என் பழைய நினைவுகளையெல்லாம் அழிச்சிடுங்க சார்..."
மகேஷ் இப்படி கூறவும் தூக்கி வாரிப் போட்டது சுக்வீந்தருக்கு!

'என்ன இவன் நம்ம ப்ளானை அப்படியே அச்சு பிசகாம சொல்றான் ...'

"என்ன சார் பதிலே சொல்ல மாட்றிங்க? ??"

"அது ... வந்து ... ஏன் ..ஏன் மகேஷ் இப்படியொரு விபரீதமான எண்ணம் உங்களுக்கு ..."

"ஆமாம் சார் ... நான் என்னோட பழைய நினைவுகளோட போனா கண்டிப்பா இயல்பா இருக்க முடியாது ...
தயவு செஞ்சி என் நினைவுகளை அழிச்சிடுங்க சார் ..."

"நோ.... நோ மகேஷ் ... திஸ் ஈஸ் எக்ஸ்ட்ரீம் ...

அதெல்லாம் வேண்டாம் ..."


"சார் நான் அங்கே போய் மாட்டிக்கிட்டேன்னா என் உயிரும் போயிடும், காரியமும் கெட்டுப் போயிடும் சார் ...

நான் நானா போக கூடாது சார் அங்கே ..."

"இல்லை மகேஷ் ...
இந்த மூணு மாச ட்ரெயினிங்ல நீங்க கம்ளீட்டா நம்ம ஆப்ரேசன் மோடுக்கு வந்துடுவிங்க...

அதுக்கான பயிற்சி பண்ணாலே போதும் ...

உங்க மனசுல ஒரே குறிக்கோள் ...

குறிக்கோள்னு சொல்றதை விட வெறினு சொல்லலாம்...
அந்த வெறி நம்ம ஆப்ரேசன் மேலதான் இருக்கும்.
அந்த நம்பிக்கை எனக்கிருக்கு ...

நீங்க எதையும் நினைச்சி கவலைப்படாதீங்க ...

உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு மகேஷ் ..." என்று மகேசை அணைத்துக் கொண்டார் சுக்வீந்தர்!

"ஓகே மகேஷ் ...
இன்னும் கொஞ்ச நேரத்துல முகமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் வந்துடுவார் ...

நீங்க கொஞ்ச நாளைக்கு புது முகமூடி போட்டுதான் வாழப்போறிங்க.சோ இந்த முகத்தோட ஒரு செல்பி எடுத்துப்போம் ..." என்று கூறி சுக்வீந்தர் தன் கையிலிருந்த கேமிராவை உயிர்ப்பித்து இருவர் முகத்தினருக் காட்ட அது சில நிமிடங்களில் அவர்களை உள்வாங்கி கர்ப்பம் தரித்து பின் இரண்டொரு நொடிகளில் திரையில் அவர்களை பிரசவித்தது!
**************************************************


"மகாமா ..."குரல் கேட்டு படுத்திருந்த மகா எழுந்து உட்கார முயல கணேசன் கைத்தாங்கலாக தூக்கி கட்டிலில் சாய்த்து அமர வைத்தார்!

"இந்தாம்மா இந்த கஞ்சியை குடி ..."என்று அவள் முன் சொம்பை நீட்ட...

"எனக்கு வேணாம்பா ..." என்றாள் மகா!

"இப்படியே இன்னும் எத்கனை நாள்தான்மா இருக்கப் போற...

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் திரும்புவதில்லைனு சொல்லுவாங்க...

செத்துப் போனவங்களையே நினைச்சி வருந்திகிட்டிருந்தா எந்த ஜீவனும் உலகத்துல நடமாட முடியாதுமா ...

நமக்கானவங்க இல்லாம போயிட்டாங்க நம்ம வாழ்க்கையே முடிஞ்சிப் போச்சினு நினைக்காம நாம யாருக்காக இனி வாழப்போறோம்னு யோசிக்கணும் மகா ...

இதோப் பாரு ...இந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சி ...

இதுக்குனு இப்போ இருக்கறது நீதானே ...
நீயும் இப்படி கிடந்தா இந்த குழந்தையோட நிலமை என்னமா???"

"அப்பா ... என்னால முடியலைப்பா ...

கண்ண தொறந்தா, மூடினா மாமாவோட முகம்தான்பா நினைவுக்கு வருது ...

எதுவும் சாப்பிடப் பிடிக்கலைப்பா ...

எதை சாப்பிட நினைச்சி வாய்ல வெச்சாலும் குமட்டிகிட்டு வாந்தி வருதுப்பா ...

நான் என்னப்பா பண்றது..."என்று பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் தலைமுடியை வருடிக்கொண்டே கேட்டாள் மகா!

"சாப்பிடாமலே கிடந்தா அப்படித்தான் இருக்கும்மா... மருந்து குடிக்குறாப்போல கண்ண மூடி குடி மா ...

உனக்கா இல்லைனாலும் இந்த குழந்தைக்காக குடிமா..." என்று கணேசன் கூற குழந்தையை சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்த மகாவின் கண்களில் தாரை,தாரையாய் கண்ணீர் வழிய கஞ்சியை வாங்கி கண்ணை மூடிக் கொண்டு குடித்தாள் மகா!


*************************************************

சுக்வீந்தரின் செல்போன் சிணுங்க எடுத்து காதில் வைத்தார்!

"எத்தனை முறை சொல்றது இந்த நம்பருக்கு கால் பண்ணாதீங்கனு ...

ஏதாவது விசயம்னா நானே கூப்பிடுறேன்னு சொல்லியிருக்கேன்ல..."

".................."


"ம்ம்ம் இன்னும் கொஞ்ச நேரத்துல அவனோட அடையாளமே முழுசா மறைஞ்சி போயிடும் ...
பக்கா பாகிஸ்தானியா மாறிடுவான் ..."


".............."

"கண்டிப்பா மூணு மாசத்துல அனுப்பி வெக்கிறேன் அதுக்கப்புறம் நீங்க நினைச்சதை சாதிச்சுக்குங்க ...
அதுவரை கொஞ்சம் பொறுமையா இருங்க ப்ளீஸ் ..."

".............."

"கண்டிப்பா .... பாகிஸ்தானிகே ஜிந்தாபாத் ..." என்று கூறி செல்போனை அணைத்து திரும்பிய சுக்வீந்தர் அதிர்ந்தார்!

அங்கே குல்தீப்பும், பஃரூக்கும் சுக்வீந்தரை எரித்து விடுவதைப் போல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்!


(தொடரும்)
 
#2
அங்கே குல்தீப்பும், பஃரூக்கும் சுக்வீந்தரை எரித்து விடுவதைப் போல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்!
sukveendarin narithantha kandu pidichitaangala........... mahesh ini avan manaiviyittam sendru vituvaana..............
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top