• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Porkalathil oru pen puraa (part-3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sri Sathya

நாட்டாமை
Joined
Mar 17, 2018
Messages
65
Reaction score
569
Location
Chennai
போர்க்களத்தில் ஒரு பெண்புறா ...(பகுதி -3)

மகேஷ் என்ற பெயர் பலகை தாங்கியிருந்த சவப்பெட்டி சென்னையை வந்தடைய கணேசன் விமான நிலையத்தில் கதறியழுதது பார்ப்பவர்கள் நெஞ்சை கரைத்தது!

மகா பிறந்து சில மணி நேரமே ஆகியிருந்த பச்சிளங்குழந்தையோடு மருத்துவமனையில் இருந்தாள்!

மகேசின் பெயர் பொறித்த சவப்பெட்டி விமான நிலையத்தில் தயாராய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட சீருடையுடன் வந்திருந்த இராணுவ வீரர்களும்,கணேசனும் அதில் ஏறிக்கொண்டனர்!

"சார் ...மகாகிட்ட விசயத்தை சொல்லிட்டிங்களா? ??"என்றான் திலீப் ...

"நான் ...எப்படி ...அய்யோ ...பச்ச உடம்புக்காரி இதை எப்படித்தான் தாங்கப் போறாளோ தெரியலையே ...கடவுளே ...
எனக்கு அந்த தைரியம் இல்ல தம்பி ...எனக்கு அந்த தைரியம் இல்ல ..."தன் தோளில் கிடந்த துண்டை வாயில் பொத்திக் கொண்டு அழுதார் கணேசன்!

"என்ன சார் இப்படி சொல்றிங்க ...பக்குவமா மகாகிட்ட சொல்லியிருக்கலாமே சார் ...
இப்போ திடு திப்புனு இப்படியொரு அதிர்ச்சியை மகா எப்படி தாங்குவா சார் ..."

"என்ன தம்பி பண்ண சொல்ற ...என்ன பண்ண சொல்ற என்னை ...
பச்ச குழந்தையை பார்த்து,பார்த்து பரவச பட்டுகிட்டிருக்கவகிட்ட போய் உன் புருசன் செத்துப் போயிட்டான்னு சொல்ற தைரியம் எனக்கில்ல தம்பி ..."

"இப்போ என்னதான் பண்ணப் போறிங்க சார் ..."

"அதான் எனக்கு தெரியலை தம்பி ...சத்தியமா என் பொண்ணுகிட்ட இதை சொல்ற தைரியம் எனக்கில்லை தம்பி ..."

"சார் ...இன்னும் கொஞ்ச நேரத்துல பாடி வீட்டுக்கு போயிடும் சார் ...
மகாவுக்கு தெரியாமலே இந்த விசயத்தை மறைச்சிடப் போறிங்களா? ??
மறைக்கத்தான் முடியுமா? ??
வேணாம் சார் ...மகா வந்து பார்க்காம மகேசை அடக்கம் பண்ணா அந்த ஆன்மா நிம்மதியா இருக்காது சார் ..."

"ம்ம்ம் ..."என்று தன் கண்களை துண்டால் துடைத்துக் கொண்ட கணேசன் தன் செல்போனில் பக்கத்து வீட்டிலிருக்கும் கெளசல்யாவிற்கு போன் பண்ணி மகாவை மருத்துவமனையிலிருந்து அழைத்து வர சொல்லிவிட்டு போனை வைத்தார்!

**************************************************

"கெளசல்யா அக்கா ...என்னக்கா குழந்தை பிறந்த முதல் நாளே டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போறிங்க ...அதுவும் நீங்க? ??
அப்பா எங்கேக்கா? ??" கெளசல்யாவிடம் மகா கேட்க கெளசல்யா அமைதியாக இருந்தாள்!

"அக்கா உங்களைத்தான் கேட்குறேன் ...அப்பா எங்கே? ??"

"தெரியாது மகா ...அவர்தான் போன் பண்ணி உன்னை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வர சொன்னார் ...ஏதோ அவசரமா வெளியூர் போகணும் நீ ஆஸ்பிட்டலுக்கு போய் மகாவை டிஸ்சார்ஜ் பண்ணிகிட்டு வீட்டுக்கு வந்துடு நான் இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுறேன்னு சொன்னார்மா ...

ஆஸ்பத்திரி பில்லுக்கு பணம் கூட நம்ம பக்கத்து வீட்டு அண்ணாச்சிகிட்ட வாங்கிக்க சொன்னார்மா ..."அந்த நேரத்திற்கு ஏதோ ஒரு பொய்யை கூறி சமாளித்தாள் கெளசல்யா!

"அப்பாவா ...அப்பாவுக்கு என்னை விட பெரிய வேலை எதுவும் இருக்காதேக்கா ..."

"இதேதான்மா அவரும் சொன்னார் ...என் பொண்ணை விட எனக்கு வேலை முக்கியமில்லை. ஆனா இப்போ நான் போயாக வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்மானு சொன்னார் மகா! "


"அய்யோ அப்பாவுக்கு என்ன பிரச்சனையினு தெரியலையே ...
அக்கா உங்ககிட்ட போன் இருந்தா அப்பாவுக்கு ஒரு போன் போடுங்களேன் நான் பேசணும் ..."


"வர்ற அவசரத்துல நான் போனை வீட்லயே வெச்சிட்டு வந்துட்டேன்மா ..."என்று கூறியபடியே தன் கையிலிருந்த செல்போனை லாவகமாய் மகா பார்க்காத வண்ணம் தன் கையிலிருந்த கைக்குட்டைக்குள் வைத்து மறைத்தாள் கெளசல்யா!


கார் ஊருக்குள் நுழையும் போதே கெளசல்யாவின் இருதயம் பல மடங்கு வேகமாய் துடித்தது!

கார் தெரு திருப்பத்தில் நுழையும் போதே மாலையோடு சிலர் செல்ல ...

"என்னக்கா ஊருல ஏதாச்சும் சாவா? ??"என்றாள் மகா!

"............"

"அக்கா உங்களைத்தான் கேட்குறேன் ...."

"தெ ...தெ...தெரியலைமா ..."

கார் மகாவின் வீட்டை நெருங்க தன் வீட்டின் வாசலில் பந்தல் போடப்பட்டிருப்பதைக் கண்ட மகா அதிர்ச்சியடைந்தாள்!

"அ...அக்...கா...."பயத்தில் குரல் தழுதழுத்தது மகாவிற்கு!

கார் வீட்டை நெருங்கி நிற்க கால்கள் நடு நடுங்க மகா இறங்க ...

இரண்டு பெண்கள் ஓடி வந்து

"பச்ச புள்ள பெத்தவளே ..
உன்ன பாடை பார்க்க வெச்சிட்டானே ....

ஒக்தையிலே நிக்குறியே ...
பாவி மக பார்வையதான் தொலச்சிப்புட்டு ..."என்று இரண்டு பெண்கள் மகாவை கட்டிபிடித்து அழ ...

"அ...அப்பா ...அப்பாவுக்கு என்னாச்சி ...அய்யோ என் அப்பாவுக்கு என்னாச்சி ...அப்பா ...."என்று மகா கதறிக் கொண்டு ஒட உடலெங்கும் பரவிய வலி அவள் அந்த கணமும் உணர தவறவில்லை!

கதறியழுதுக் கொண்டே மகா ஓடிச் சென்று கூட்டத்தை விலக்கி பார்க்க அங்கே தேசியக் கொடியை போர்த்தி வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டியை பார்த்து மகா அதிர ....

"எம்மா ...மாப்ள போயிட்டாரும்மா ..."என்று கணேசன் கதறியழ மகா தன் கையிலிருந்த குழந்தையை தவற விட முயல திலீப் தாங்கிப் பிடிக்க மகா மயங்கி சரிந்தாள்!


*************************************************

மகேஷ் கண் விழித்துப் பார்க்க ஏதோ ஒரு குகையில் இருப்பதைப் போல் உணர்ந்தவன் ...

'இது எந்த இடம்? ??
நாம எப்படி இங்கே வந்தோம்? ??
பதுங்கு குழியில மயங்கி சரியும் முன்னாடி வரை நடந்ததெல்லாம் நியாபகம் இருக்கு ...அப்புறம் என்ன நடந்துச்சி ...நான் எப்படி இங்கே? ??
யார் கூட்டிட்டு வந்தாங்க???'

தன் தோள்பட்டையை பார்த்த மகேஷ் அங்கே தோட்டாக்கள் எடுக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருப்பதைக் கண்டான்!

"மகேஷ் வெல்கம் டூ யுவர் செகண்ட் இன்னிங்ஸ் ..."என்ற குரல் கேட்டு திரும்ப அங்கே நாற்பது வயதை தாண்டியிருந்த ஒருவர் நின்றிருந்தார்!

"யா..யார் ...யார் நீங்க? ??"வலிகளால் வார்த்தை தவணை முறையில் வந்து சேர்ந்தது மகேசிடமிருந்து!

"ஸ்டெய்ன் பண்ணிக்காதிங்க மகேஷ் ...
நான் ஜஸ்வந்த் ...
நம்ம அரசாங்காத்தால தூக்கி வீசப்பட்ட இராணவ ஜெனரல் .. "

மகேஷ் புரியாமல் அவரை பார்க்க ..

"என்ன புரியலையா ...நானும் இராணுவத்துல இருந்தவன் தான் ...
சில துரோகிகளாலே என் பதவி,மானம், மரியாதை எல்லாம் போச்சி ...
நான்தான் உங்களை கூட்டிட்டு வந்தேன்! "

"ரொ ...ரொம்ப நன்றி சார் ...."

"நன்றியா ...நான் சொல்றதை மொத்தமா கேட்டுட்டு நன்றின்னு சொல்லு அப்போ மனசார ஏத்துக்குறேன் ..."

"எ...என்.. உயிரை காப்பாத்தியிருக்கிங்க ..
என...எனக்கு கடவுள் போல ...சார் நீங்க .. "

"அய்யோ மகேஷ் கடவுளா? ?? நானா? ??

ஹாஹாஹாஹா ...

ஒரு நிமிசம் .."என்று கூறிச்சென்று தொலைக்காட்சியை ஆன் செய்தார் ஜஸ்வந்த் ...

அதில்' இராணுவ வீரர்கள் பத்து பேர் வீர மரணம் ...உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது ...' என்ற செய்தியை தொடர்ந்து இறந்தவர்களின் படங்கள் வர அதில் மகேசின் படம் வரவே அதிர்ச்சியில் உறைந்துப் போனான் மகேஷ்!


(தொடரும்)
 




Renuga stalin

புதிய முகம்
Joined
Mar 23, 2018
Messages
9
Reaction score
8
Location
dindigul
மிக அருமை சத்யா, இப்போ மகா கஷ்டபடுறது எல்லாம் என்றாவது ஒருநாள் மகேஷ் வரும்பொழுது சந்தோஷமாக மாறும் என்ற நம்பிக்கை வருது superb
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
சூப்பர் சார்...

இப்படி கூட நம்ம ராணுவத்தில் நடக்குது அப்படினு நினைக்கும் போதே கவலையா இருக்கு.....
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
interesting epi sago. mahesh ellorai porutha varai iranthavan aayitan so sad:(:(:(:(jaswanth enna seiya kathirukiran sago:unsure::unsure::unsure::unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top