Porkalathil oru pen puraa... (part-8)

Sri Sathya

Active member
#1
போர்க்களத்தில் ஒரு பெண்புறா... (பகுதி-8)

மகேஷ் கத்தியது எதிர் முனையிலிருந்த மகாவிற்கு கேட்டபாடில்லை ...

தன் குழந்தையின் அழுகுரல் போனில் கேட்டவுடன் மகேசின் கண்களில் கண்ணீர் கடலாய் பொங்கி வழிந்து!

"என்னம்மா யாருமா போன்ல???" என்ற கணேசனின் குரல் இடையில் கேட்க அதை தொடர்ந்து...

"யாருனே தெரியலைப்பா ... அமைதியாயிருக்காங்க போன் பண்ணிட்டு ..." என்று மகாவின் குரல் கேட்டது!

"ஏதாச்சும் நெட்வோர்க் காலா இருக்கும்மா ...
நீ சாப்பிட்டியா ...
மாப்பிள்ளையையே நினைச்சி சாப்பிடாம இருந்து உடம்பை கெடுத்துக்காதேம்மா ...

நீ சாப்பிட்டு தெம்பாயிருந்தா தானேமா இந்த பிள்ளையை வளர்க்க முடியும் ...

அப்பன்தான் போய் சேர்ந்துட்டான் பெத்தவ நீயும் போயிட்டா இந்த பிள்ளைக்கு யாரும்மா ஆதரவு? ??" என்ற கணேசனின் குரல் கேட்டவுடன் அதிர்ச்சியில் மகேசின் இருதயம் வெடித்து விடுவதைப் போலிருந்தது!

'அப்போ...அப்போ நான் சாகலைனு மகாவுக்கு தெரியாதா? ??

சுக்வீந்தர் சொல்லிட்டதா சொன்னாரே ....' என்று மகேஷ் மனதில் நினைத்துக் கொண்டிருந்த விநாடி

"என்ன மகேஷ் பேசிட்டிங்களா? ??" என்ற சுக்வீந்தரின் குரல் கேட்க திரும்பிய மகேஷ்...

"அதெப்படி சார் பேச முடியும்? ??

நீங்கதான் ப்ளான் பண்ணி மைக் இல்லாத போனை கொடுத்தா எப்படி சார் பேச முடியும் ..."என்று மகேஷ் கேட்க ஸ்தம்பித்து நின்றார் சுக்வீந்தர்!


*************************************************

"இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு அழகாடி ...

இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி வயித்துல பிள்ளைய வாங்கிகிட்டு வந்து நிக்கிறியேடி ..."என்று மலரின் தாய் கலாவதி மலரை போட்டு அடிக்க பேய் பிடித்ததைப் போல் அமர்ந்திருந்தாள் மலர்!

"இவ்வளவு அடிக்கிறனே ஏதாச்சும் சூடு, சுரனை இருக்கானு பாருங்க உங்க மகளுக்கு ..."

"அதெப்படி இருக்கும் ...சூடு,சுரனை இருந்தா இப்படியொரு காரியத்தை பண்ணிட்டு வந்து நிப்பாளா ...
பெத்த கடனுக்கு இந்த கருமத்தயெல்லாம் பார்க்கணும்னு நம்ம தலையெழுத்துடி ...

அவன் வந்து நம்மகிட்ட பொண்ணு கேட்கணும் அதான் முறை ...இவளை பெத்ததுக்கு நான் போய் அவன் கால்ல விழறேன் வேற வழியில்ல ...

ஊரு,உலகத்துக்கு விசயம் தெரியறதுக்குள்ள காதும்,காதும் வெச்சாப்போல விசயத்தை முடிச்சிடறதுதான் நல்லது ..."என்ற சபாபதிக்கு வயது நிச்சயம் ஐம்பதைக் கடந்திருக்கும் என்பதை அவர் காதோரத்து நரை முடிகள் உணர்த்தியது!

"இவ்வளவு திட்டுறமே ஏதாவது வாயை தொறந்து பேசறாளா பாருங்க ...மான,ரோசம் இருக்கவளா இருந்தா தூக்குல தொங்கியிருப்பா ...
என்ன ஜென்மமோ? ??"

"இங்க பாருங்க ... நான் அப்படியென்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்.
சின்ன வயசுலேருந்து திலீப் மாமாதான் எனக்குனு சொல்லி சொல்லி வளர்த்திங்க ...

அப்போலாம் உடம்புல ஒட்டு துணி கூட இல்லாம மாமா பின்னால சுத்தியிருக்கேன் அப்போலாம் ஒண்ணும் தோணல ... இப்போ மாமாவை பார்த்தாளே உடம்பெல்லாம் ஏதோ ஒருவிதமா உணர்ச்சி தோணுது ...
நான் பண்ணது தப்புதான்னே வெச்சிக்கோங்க ஆனா தப்பானா ஆளுக்கூட பண்ணல ...
கல்யாணத்தை முடிச்சி வெப்பிங்களா அதை விட்டுட்டு தேவையில்லாத கதையெல்லாம் பேசிகிட்டு ..

அந்த ஒரு சாண் மஞ்சக்கயிறுதான் முந்தி விரிக்க நுழைவுச்சீட்டுனா அதை அஞ்சி வயசுலேயே என் மாமா எனக்கு கட்டிட்டார்!
இப்போ கூட நானா வந்து சொல்லவேதானே உங்களுக்கு விசயம் தெரியும் " என்று மலர் பேசிக் கொண்டிருக்கும் போதே திலீப் உள்ளே நுழைய சபாபதியும், கலாவதியும் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள ...

"மாமா ...ஏன் மாமா என்னை பார்த்தவுடனே மூஞ்ச வேற பக்கம் திருப்பிகிட்டிங்க..." என்று திலீப் கூற சபாபதி பாய்ந்து திலீப்பின் சட்டையை பிடித்துக் கொண்டார்!

"அடப்பாவி இப்படி ஒரு அசிங்கத்த பண்ணிட்டு எப்படிடா எதுவுமே நடக்காதப் போல வந்து எங்க முன்னால நிக்குற? ??

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கிழவி செத்துப் போயிட்டானு ஊருக்கு வந்துப் போன நீ இப்படியொரு அசிங்கத்தையும் பண்ணிட்டு போயிருப்பனு நான் நினைக்கலைடா ..."

"அய்யோ மாமா ...போதும் நிறுத்துங்க... மலர் கூட நான் அப்படி நடக்கவேயில்லை ..." என்று திலீப் கூற அடுத்த நொடி சபாபதி விட்ட அறையில் திலீப் நிலை தடுமாறி கீழே விழுந்தான்!


"நீங்க என்ன அடிச்சே கூட கொல்லுங்க மாமா ...
ஆனா நான் சொல்றதுதான் உண்மை ..."

"அப்போ... அப்போ ...என் பொண்ணு வேற எவன்கூடவோ படுத்து பிள்ளைய வாங்கிட்டு வந்திருக்கானு சொல்றியா? ??

ராஸ்கல் கொன்னுடுவேன் உன்னை ... என் பொண்ணை வெட்டி கூறுப் போட்டாலும் இன்னொருத்தனை நினைக்கமாட்டா டா ...

தப்பெல்லாம் பண்ணிட்டு இப்போ கழட்டி விடப் பார்க்குறியா ...
ஊரைக் கூட்டி அசிங்கப்படுத்திடுவேன் ராஸ்கல்! " என்று சபாபதி சீற ...

"மாமா நான் சொல்றதை கேளுங்க மாமா ...சத்தியமா நான் தப்பு பண்ணலை மாமா ...
நான் ரெண்டே நிமிடம் மலர் கூட பேசறேன் மாமா ...
அப்போதான் மாமா உண்மை என்னனு தெரியும் ..."


"அடப்பாவி ... என் பொண்ணு வாழ்க்கையை இப்படி கெடுத்து அவ மேல வீணா வேசி பட்டமும் கட்டுறியேடா ...நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டேடா ...நாசமா போயிடுவேடா ..." என்றவாறே திலீப்பின் சட்டையை பிடித்து சபாபதி உலுக்க ...

"அப்பா ...அவரை விடுங்கப்பா ....பேசட்டும்பா ...நீங்க எல்லோரும் வெளியே போங்க ..." என்று மலர் கூற சபாபதி திலீப்பை ஒரு முறை முறைத்துவிட்டு வெளியேறினார்!***-*************************************************

"யாரு மலர்? ??"

"................"

"மலர் ...உன்னைதான் கேட்குறேன் ...யாரு? ??"

"என்ன யாரு மாமா?"

"உன் வயித்துல வளர்ற குழந்தைக்கு அப்பன் யாரு? ??

யாராயிருந்தாலும் சொல்லு மலர் நீ யாருக்கும் பயப்படாதே எல்லோர்கிட்டையும் நான் பேசிக்கிறேன் ...
உன் வயித்துல வளர்ற குழந்தைக்கு நான்தான் காரணம்னு நினைச்சி மாமா என்னென்னவோ பேசுறார் மலர் ...
யாருனு என்கிட்ட சொல்லு அவன் எவனாயிருந்தாலும் நான் கட்டிவெக்கிறேன் மலர் ..." என்று திலீப் கூற கண்களில் ஆறாய் பாயும் கண்ணீரோடு திலீப்பை கையெடுத்துக் கும்பிட்டு
'வேண்டாம் நீங்க கிளம்புங்க ' என்பதைப் போல் சைகை செய்தாள் மலர்!

*************************************************

இரவு மணி பதினொன்றை கடந்த பின்னும் திலீப் உறக்கம் வராமல் மாடியில் உலவிக் கொண்டிருக்க அவன் செல்போன் சிணுங்கியது!

அதில் மலரின் எண் வரவே பரபரப்பாய் எடுத்துக் காதில் வைத்தான்!


"ஹலோ..."

".........."

"ஹலோ மலர் ...."

"............"

மறுமுனையில் மலரின் அழுகைச் சத்தம் சன்னமாய் கேட்க ...

"மலர் ...அழாதே மலர் ...இப்போ அழுது எதுவும் ஆகப்போறதில்லை ...
அடுத்து என்ன செய்யணும்னு யோசிக்கணும் மலர் ... யாரு மலர் ...இப்போவாச்சும் உண்மையை சொல்லு மலர் ப்ளிஸ் ...."


"மா....மா..." விம்மலுக்கிடையே மலரின் குரல் தவணை முறையில் வார்த்தையை உச்சரித்தது!


"சொல்லு மலர் ..."

"மாமா ...உ...உனக்கு ...எப்...படி மாமா அ...ந்த வார்த்தைய கேட்க தோணு...ச்சி. "

"எதை மலர்? ??"

"யார் பிள்ளை உன் வயித்துல வளருதுனு...."

"மலர் ...வேற ...நீ...நான்தான் காரணம்னு சொல்றியா மலர் ..."

"இல்ல மாமா ...யாருமில்லை மாமா..."

"யாருமே இல்லையா ...அப்புறம் எப்படி? ???"

" நான் கர்ப்பமே இல்லை போதுமா? ??

நீ திரும்ப பட்டாளத்துக்கு போறதுக்குள்ள இந்த கல்யாணத்தை நடத்திடணும்னு நினைச்சிதான் இப்படியொரு பொய்யை சொன்னேன்!

நீ ஏன்டி பொய் சொல்றனு கேட்டிருந்தாக் கூட நானே பெருமை பட்டிருப்பேன் மாமா ...

யாரு காரணம்னு கேட்டு என்னை உயிரோட கொன்னுட்ட மாமா நீ ...

ஊரு உலகமே ...ஏன் என்ன பெத்தவங்களே என்னை வேசினு சொல்லியிருந்தாக் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன் மாமா ... ஆனா நீ ...

நீ பட்டாளத்துக்கு போறதுக்கு முன்ன நான் உன் பொண்டாட்டியாகனும்னுதான் மாமா நான் இப்படியொரு பொய்யை சொன்னேன் ...

மாமா..."

"பைத்தியமாடி நீ .... இப்படியொரு பொய் சொல்லிதான் இந்த கல்யாணம் நடக்கணுமா ..."

"மா...மா ..." மலரின் குரல் உடைந்து வந்தது!

"சொல்லு மலர் ..."

"மாமா ...நீ ..என்னை தப்பா நினச்சிட்டல மாமா ..."

"அய்யோ அது ...அப்படியில்ல மலர் ..."


"இல்ல ...நீ ..என்ன தப்பாதான் நினைச்ச ...

மாமா வீடியோ கால் பண்ணேன் .."

"ம்ம்ம்....சரி மலர் ..." என்று திலீப் வீடியோ காலில் மலரை அழைக்க சிறிது நேர இசைக்குப்பின் மறுமுனையில் இணைப்பு கிடைக்க சிறிது கரகரப்புக்கு பின் மலரின் முகம் தெளிவாய் தெரிந்தது!

"மாமா ..."

"ம்ம்ம்...சாரி மலர் ..."

"மாமா... நான் வேசியில்லை மாமா ...." என்றவாறே மலர் செல்போனின் கேமிராவை பக்கவாட்டில் வைத்து எழுந்து நிற்க திலீப் நெஞ்சில் ஓர் படபடப்பு வந்து திடீரென தொற்றிக் கொள்ள அவன் இருதயம் சில துடிப்புகளை இலவச இணைப்பாய் சேர்த்துக் கொடுத்தது!

மலர் உடலில் சிறு துணிக்கூட இல்லாமல் நிர்வாணமாய் நிற்க ...

"ஏய் ...மலர்...என்னடி இது? ??
ஏன்டி இப்படியெல்லாம் பண்ற? ??"


"மாமா... ப்ளிஸ் முழுசாப் பாரு என்னை ... நீதான் மாமா என்னை இப்படி பார்க்கணும் ...நாளைக்கு பிரேத பரிசோதனைன்ற கண்டவனெல்லாம் பார்ப்பான் மாமா ...அதுக்கு முன்ன நீ பாரு மாமா ...நீ பாரு ...." என்று மலர் கூற திலீப் பதறி விட்டான் ...

"ஹேய் மலர் ...என்னடி சொல்ற ...ப்ளீஸ் எதுவும் தப்பான முடிவெடுக்காதே மலர் ப்ளீஸ்டி ....லவ் யூ மலர் ...லவ் யூ சோ மச் டீ ..."


"மாமா... நான் எப்பவோ செத்துட்டேன் மாமா ...
நான் போறேன் லூசு மாமா ...
நான் போறேன்டா .." என்று மலர் கூற அடுத்த விநாடி எதிர்முனையில் இணைப்பு துண்டிக்கப்பட திலீப் மீண்டும்,மீண்டும் முயல மறுமுனையில் பதிலில்லாமல் போகவே திலீப் சபாபதியின் எண்ணிற்கு தொடர்புக் கொண்டு விசயத்தைக் கூற அவர் பதறியடித்து ஓடிச் சென்று ...

"மலர் .......இப்படி பண்ணிட்டு போயிட்டியேடி ...."என்ற அலறல் மலரின் மூச்சு நின்றிருந்ததை உணர்த்தியது!

(தொடரும்)
 
#2
மிக அருமை ஆனா பாவம் மலா் உண்மையா லவ் பண்ண திலீப் ஏன் இப்படி கேட்டான் சிறு வயதில் இருந்தே நேசித்த ஒருவனால் ஒரே நொடியில் இவ்வாறு கேட்க முடியுமா? இதெல்லாம் அநியாயம் ரைட்டா் சாா் கதை செம்ம சூப்பரா கொண்டு போறிங்க சத்யா வாழ்த்துக்கள்
 
#3
அருமை சகோ... ஆனால் பாவம் மலர்... திலீப் ஒரு நிமிடம் யோசிச்சு இருந்த மலர் இப்படி பண்ணிருக்க மாட்ட... நீங்க ஒவ்வொரு தடவையும் மலர ரொம்ப சோதிக்கறீங்க சகோ...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top