• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mugilan 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
ப்ரியங்களுடன் முகிலன் 13

அன்றைய இரவை முகிலன் மகாலிங்கபுரம் இல்லத்திலேயே கழித்துக்கொண்டிருக்க இங்கே வருண் வீட்டில் அமுதன். அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார் .பெரிதாக உறக்கம் வந்துவிடவில்லை வருணுக்கு.

அவருக்கென ஒதுக்கப்படிருந்த மாடி அறையில் உறங்கிக்கொண்டிருந்தார் அமுதன். அவருக்கு எப்போதுமே தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு என்பதை வருண் அறிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் கண்டிப்பாக அதை செய்திருக்க மாட்டான்

உறங்கிக்கொண்டிருந்த அமுதனுக்கு வந்தது அந்த கனவு. படுக்கையில் இப்படியும் அப்படியும் புரண்டவர் சட்டென படுக்கையில் எழுந்து அமர்ந்து குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்க்க துவங்கினார்.

திடீரென படுக்கையை விட்டு இறங்கி அப்படியே பால்கனியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கண்கள் பெரிதாக திறந்து இருக்க மூளை மட்டும் உறக்கத்திலேயே இருந்தது.

‘மாதவா என்னை மன்னிச்சிடு மாதவா. என்னை மன்னிச்சிடு மாதவா. என்ன அண்ணான்னு கூப்பிடு மாதவா’ கத்திக்கொண்டே நடந்தார் மனிதர்.

பக்கத்து அறையில் அரைகுறை உறக்கத்தில் புரண்டுக்கொண்டிருந்த வருணுக்கு இவரது குரல் கேட்க குழப்பத்துடன் எழுந்து அமர்ந்தான் அவன் ‘இவர் யாரை மாதவன் மாதவன் என அழைக்கிறார்?’

உறக்கத்தில் நடந்துக்கொண்டிருந்தவருக்கு ஏதேதோ கனவுகளும் வந்துக்கொண்டிருந்தது.

‘கண்ணா நான் வேணும்னே செய்யலைடா. எனக்கு இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியாதுடா’ கத்திக்கொண்டே மாடிப்படி ஏறலானர் அமுதன். தனது அறைக்கதவை திறந்துக்கொண்டு வெளியில் வந்தான் வருண். அவரது அறைக்கு வந்து அவன் விளக்கை போட்டு பார்க்க படுக்கையில் இல்லை அவர்.

‘முகிலா... என்னை ஒண்ணும் பண்ணிடாதே முகிலா வேண்டாம் முகிலா. நான் கீழே விழுந்திடுவேன் முகிலா. விட்டுடு முகிலா’ கத்திக்கொண்டே இருந்தவர் மாடியின் கைப்படி சுவற்றின் மீது ஏறி இருந்தார்.

‘சார்...’ அலறினான் சரியாக அந்த நேரத்தில் மாடிப்படி ஏறி வந்த வருண். இதயமே நின்று விட்டதை போன்றதொரு உணர்வு அவனுக்கு. ‘சார் என்ன சார் பண்றீங்க? அவரை பிடித்து இழுத்து தன்னோடு தாங்கிக்கொண்டான் அவன். ‘என்னாச்சு சார்?

‘மாதவா... நீயா.. மாதவா இது? நிஜமாவா மாதவா? நிஜமாவா? கத்திக்கொண்டே இருந்தார் அமுதன்.

அவர் தூக்கத்தில் நடக்கிறார் என்றும் இன்னமும் கனவில் இருக்கிறார் எனவும் புரியவில்லை வருணுக்கு. தலை முதல் கால் வரை உச்சகட்ட பதற்றம் பரவியது அவனுக்குள்

‘சார்... யாரு சார் மாதவன்... சார் ஒரு நிமிஷம் என்னை பாருங்க. நான் வருண்’ உலுக்கினான் அவரை. அவர் தன்னிலை பெறுவதாகவே தெரியவில்லை. அவரை அப்படியே தூக்கிக்கொண்டு வந்து படுக்கையில் படுக்க வைத்தான் வருண்.

அடுத்து அவர் முகத்தில் கொஞ்சம் தண்ணீரை அவன் தெளிக்க சற்றே தெளிந்தார் மனிதர். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து சுற்றும் முற்றும் பார்த்தார்.

‘சார் நான் வருண் சார்.’ என்றான் அவர் அருகில் அமர்ந்தபடியே ‘என்னாச்சு சார் திடீர்னு. எதுவும் கனவு கண்டீங்களா?’

‘ம்?’ குழப்பத்துடன் அவன் முகம் பார்த்தார் அவர். ‘இப்போ மணி என்ன?

மணி இப்போ ஒண்ணு ஆச்சு. சரி எதுவும் குடிக்கறீங்களா?’ என்று கேட்டான் மாதவன்.

பதில் ஏதும் சொல்லாமல் அவர் அவன் முகத்தையே பார்த்திருக்க இண்டர்காமில் சமையல்காரரை அழைத்து இரண்டு காபிகள் கொண்டு வர சொல்லிவிட்டு அவர் அருகில் வந்து அமர்ந்தான் வருண்.

வாஞ்சையுடன் அவர் கையை பிடித்துக்கொண்டே கேட்டான் ‘யார் சார் அது மாதவன்?’

‘ஆங்? மாதவனா?’ யோசனையுடனே அவன் முகம் பார்த்தார் அமுதன்

‘ம்’ என்றான் வருண் ‘ நீங்க அப்படியே தூக்கத்திலேயே நடந்து போயிட்டீங்க போல சார்’ என்றான் அவன் மெதுவாக. ‘அப்போ அந்த பேர்தான் நீங்க சொன்னீங்க’

‘மாதவனா? மாதவன்தானே? ‘அவன்... அவன்.... ரொம்ப... நல்லவன் வருண். என்னை அவனுக்கு ரொம்ப பிடிக்கும்’ சொன்னவர் ஒரு நிமிடம் ஏதோ யோசனையில் விழுந்தார் அமுதன்.

பின்னர் ‘அவனுக்கு என்னை அண்ணான்னு கூப்பிடணும்னு ரொம்ப ஆசை’ தெரியுமா வருண்?’ ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு விட்டு பேசினார் அமுதன்.

‘ஓ...அப்படியா? அவர் பேசும் போது அவர் முகத்தில் வந்து வந்து போன பலவித பாவங்களை படித்தபடியே கேட்டான் வருண்.

அதற்குள் காபி வர அதை வாங்கி அவர் கையில் கொடுத்தான் வருண். ‘நீங்க கொஞ்சம் காபி குடிங்க.’

காபியை குடித்துவிட்டு அவர் படுத்துக்கொள்ள வருணும் அவர் அருகிலேயே படுத்துக்கொண்டான். அவரை விட்டு செல்ல மனமே இல்லை வருணுக்கு. அவருக்கு ஒன்று என்றால இவன் உள்ளம் பரிதவித்துதான் போகிறது. ஆனால் அது ஏன் என்று அவனுக்கு புரியவில்லை

‘வருண். நான் கொஞ்சம் தூக்கத்திலே நடப்பேன். தினமும் இல்லை. திடீர் திடீர்னு. அதனாலே எங்க வீட்டிலே யாரையாவது பக்கத்திலே வெச்சுப்பேன். மாடியிலே எல்லாம் படுக்க மாட்டேன்.’ தெளிந்திருந்தார் அமுதன்.

‘ஓ,,, எனக்கு தெரியாது சார். இனி நான் வீட்டிலே இருந்தா கண்டிப்பா உங்களோட படுத்துக்கறேன் சார். நான் இல்லைனா வேறே யாரவது உங்களோட இருப்பாங்க சார் சரியா?’ என்றான் இதமாய்.

‘ரொம்ப பயந்துட்டியா வருண். ரொம்ப சாரிப்பா’

‘அய்யோ என்ன சார். நீங்க எனக்கு எந்த பிரச்னையும் இல்லை சார் நீங்க நிம்மதியா தூங்குங்க அவர் முகம் பார்த்து புன்னகைதான் வருண்’

இருவருக்குமே உறக்கம் வரவில்லை. அமுதனுக்கு குழப்பமாய் ஏதேதோ சிந்தனைகள். அவருக்கு வந்த அந்த கனவு ஏதோ ஒரு புகை போல் அவர் நினைவில் ஆடியது.

‘என்ன கனவு அது? என்ன கனவு? கனவில் வந்தது மாதவன்தானே? ஆம் அவனேதான். ஏதோ சொன்னானே? என்ன சொன்னான்? என்ன சொன்னான் அவன்? என்ன தோன்றியதோ? எது நினைவில் வந்ததோ சட்டென எழுந்து அமர்ந்தார்.

அவனும் எழுந்து அமர அவன் முகத்தை கைகளில் ஏந்திக்கொண்டார் அமுதன். அதை பார்த்துக்கொண்டே இருந்தார் சில நொடிகள்.

‘என்ன சார் புதுசா பார்க்கறீங்க?’

‘நீ வருண்தானே?’

‘ஆமாம் சார் ஏன் உங்களுக்கு சந்தேகம்’

‘இல்லபா. நீ நிஜமா வருண் இல்லையோன்னு தோணுது. என்னவோ என்னென்னவோ கனவு அதான். குழப்பமா இருக்கு.’

‘என்ன சார் குழப்பம்? என்கிட்டே சொல்லுங்க’

‘வருண். நான் இதுவரைக்கும் யார்கிட்டேயும் சொன்னது இல்லை. ஆனா உன்கிட்டே சொல்றேன். ‘என்னனவோ. எனக்கு உண்மையிலேயே முகிலனை பார்த்தா மனசுக்குள்ளே ரொம்ப பயமா இருக்கு அவன் என்னை ஏதாவது பண்ணிடுவனோன்னு பயமா இருக்கு’. அவன் கண்களை பார்த்துக்கொண்டே சொன்னார் அவர். ‘அதை வெளியிலே காட்டிக்காம இருக்கத்தான் நான் அவனோட எப்பவும் சண்டை போடறேன்’

திகைத்தே போனான் வருண் ‘என்ன சார் நீங்க. நீங்க பெத்த பையன் அவன். அதுவும்...’ என்று நிறுத்தியவன் சற்றே இடைவெளி விட்டு சொன்னான் ‘முகிலன்’ சார் அவன். அவன் அப்படி எல்லாம் பண்ணுவானா. யாருக்கு இருக்கோ இல்லையோ எனக்கு அவன் மேலே நிறைய நம்பிக்கை உண்டு?’

‘இல்லப்பா இல்ல. அவன் சித்திரை மாசம் சித்திரை நட்சத்திரத்திலே பிறந்த பையன். அவனை பொறுத்தவரை அவன் ராஜாவா இருப்பான். எல்லாரும் அவனுக்கு அடங்கித்தான் போவாங்க. ஆனா அப்பனை மட்டும் தெருவிலே நிறுத்திடுவான். அதுதான் அவன் ஜாதகம்’

‘அய்யோ சார்’ தலையில் அடித்துக்கொண்டான் வருண். ‘நீங்க இந்த காலத்திலேயும் ஜாதகம் எல்லாம் நம்பறீங்களா?

‘இல்லப்பா. ஜாதகம் மட்டும் காரணம் இல்லை. நான் நம்பற வேறே ஒரு பெரிய காரணம் இருக்கு’ படபடத்தார் அவர்

‘என்னது சார்? என்றான் வாஞ்சையுடன் அவர் கைகளை பிடித்தபடியே.

‘அது... அது வந்து.... எல்லாத்துக்கும் அந்த கண்ணன்தான் காரணம்.’.’

‘கண்ணனா அது யாரு சார்?’ அவர் எங்கே இருக்கார்?

‘முதலில் மாதவன் இப்போது கண்ணன் என்னடா இது விளையாட்டு?’ புரியவே இல்லை வருணுக்கு.

‘அவன் அவன்.. இருக்கான். அவன் இருக்கான். அவன் வந்து.. கண்ணன் என்னை அழிக்க போறான்’ சொல்ல சொல்ல அவருக்கு உடல் வியர்க்க ஆரம்பித்தது. மூச்சு அடைப்பது போல் ஒரு உணர்வு

‘சார்.. சார்...’ என்றான் கொஞ்சம் பதற்றம் சேர்ந்த குரலில் ‘நீங்க முதல்லே ரிலாக்ஸ்டா தூங்குங்க. தேவை இல்லாம நீங்க ரொம்ப யோசிக்கறீங்களோன்னு தோணுது. நாளைக்கு காலையிலே நாம எல்லாத்தையும் பேசுவோம். இப்போ நீங்க படுங்க. ப்ளீஸ் படுங்க’ அமுதனை ஆசுவாசப்படுத்தி படுக்க வைத்தான் வருண்.

அவர் ஆழ் மனதில் மிகப்பெரிய பயம் ஏதோ ஒன்று இருப்பது மட்டும் நன்றாக புரிந்தது வருணுக்கு. அவருக்கு போர்த்தி விட்டுவிட்டு தானும் படுத்துக்கொண்டவன் அவர் கையை தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டு தூங்க முற்பட்டான்.
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
மறுநாள் காலை ஒன்பதரை மணி.

வருண் தான் நடிக்க போகும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்கு செல்ல கிளம்பி கீழே வர ஹாலில் அமர்ந்திருந்தார் அமுதன்

‘மார்னிங் சார். காபி குடிச்சீங்களா’ என்றான் உற்சாகமாய்

‘குடிச்சேன்பா. ராத்திரி உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனோ?’

‘அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. நீங்க ரொம்ப மனசை குழப்பிக்காம சந்தோஷமா இருங்க அது போதும் எனக்கு.’

‘வருண்’ என்றார் ஏதோ சொல்ல வேண்டும் என்ற தவிப்புடன்.

‘சொல்லுங்க சார்’

‘நீ எங்கேயும் அவசரமா கிளம்பறியா?’

‘புது படம். திருச்சி தாண்டி ஒரு கிராமத்திலே ஷூட்டிங் சார். போனா வர மூணு நாள் ஆகும். நீங்க சொல்லுங்க என்ன விஷயம்?’

‘என்கூட ஒரு ஒரு மணி நேரம் உன்னாலே செலவு பண்ண முடியுமா? ஒரு இடத்துக்கு போகணும் நாம ரெண்டு பேரும்’

‘என்கிட்டே எதுக்கு பெர்மிஷன் எல்லாம் கேட்டுக்கிட்டு? வாங்க கிளம்புவோம். எங்கே போகணும்’

‘மகாலிங்கபுரத்திலே இருக்கிற எங்க அப்பா வீட்டுக்கு’

அதே நேரத்தில் அங்கே மகாலிங்கபுரம் வீட்டில் அந்த பெரிய டைனிங் டேபிளில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தான் முகிலன். சமையல் அறையிலிருந்து மூக்கை துளைக்கும் வாசனை வர

‘சந்தானம் அழைத்தான் முகிலன். ‘தடபுடலா சமையல் நடக்குது போல. என்ன விசேஷம்?’

‘அப்பா சாப்பிட வரேன்னு போன் பண்ணார் சார். கூடவே..’ என்று நிறுத்தினார் அவர்.

‘கூடவே?’ சொல்லுங்க யார் வராங்க?’ அவருக்கு பயம் வருண் வருகிறான் என்று சொன்னால் இவன் கோபத்தில் வெடிப்பானோ என்ற பயம்.

‘நம்ம வருணும்...’ தயக்கத்துடன் சொன்னார் அவர்.

‘ஆஹான்...’ என்றான் ஏதேதோ யோசனைகளுடன் நெற்றியை தேய்த்துவிட்டுக்கொண்டபடியே.

சரியாக அவன் கார் கேட்டை தாண்டி வெளியேற மற்றொரு பக்கத்திலிருந்து உள்ளே நுழைந்தது வருணின். கார்.

சற்று முன் முகிலனின் கார் நின்ற அதே இடத்துக்கு சென்று நின்றது வருணின் கார்.

‘இங்கே பக்கத்து வீடுதானே சார் நம்ம மயூரா வீடு?’ என்றபடியே இறங்கினான் வருண். இப்போது அவன் பார்வை அவள் வீட்டை ரசிப்புடன் தொட்டு திரும்பியது

‘நான் ஒரே ஒரு தடவை வந்து அவளை வீட்டு வாசலிலே டிராப் பண்ணிட்டு போனேன். வீட்டுக்குள்ளே போகலை’

இப்போது திரும்பி இவர் வீட்டு தோட்டத்தை ரசிப்புடன் பார்த்தவன் வீட்டை விழிகளால் அளந்தபடியே புன்னகைத்தான்

‘நல்லா இருக்கு சார் வீடு. எனக்கு இந்த வீட்டை எப்பவோ பார்த்த மாதிரி இருக்கு..’ அவன் கண்களை சுருக்கி யோசித்தபடியே சொல்ல சற்று அதிர்ந்து பார்த்தார் அமுதன்.

‘சின்ன வயசிலே வந்திருப்பேன்னு நினைக்கிறேன் சின்ன வயசிலே யார் கூட்டிட்டு வந்திருப்பாங்கன்னு தெரியலையே.’ நெற்றி தேய்த்து விட்டுக்கொண்டான் அவன். எனக்கு எங்க அம்மா அப்பாவே யாருன்னு ஞாபகம் இல்லை. இதெல்லாம் எப்படி ஞாபகம் இருக்கும் சொல்லுங்க’ சிரித்தவனின் பார்வை அந்த பைக்கின் மீது விழுந்தது

‘இது என்னது சார்? பழைய பைக்கா?’ என்றபடியே அதன் அருகில் சென்று ஒரு முறை அதை தொட்டு பார்த்தான். ‘வாவ்’ ‘யார் பைக் சார் இது?’

‘அது அது வந்து என் தம்பியோடது’ வார்த்தைகள் கொஞ்சம் தந்தி அடிக்கவே செய்தது

‘ஓ.. கிரேட்... உங்களுக்கு தம்பி இருக்காங்களா? எங்கே இருக்காங்க?’ என்றான் வருண் விழிகள் விரிய.

‘அவன்.. அவன் வந்து... ‘ அவர் முகத்தில் பய ரேகைகள் பரவ ‘நான் உனக்கு அப்புறமா சொல்றேன் நீ உள்ளே வாப்பா’ என்றார் அமுதன்.

சின்ன புன்னகையுடன் வீட்டை கண்களால் அளந்துக்கொண்டே உள்ளே நுழைந்தான் வருண்

‘வா வருண். வா வாப்பா.. உள்ளே வா’ மகிழ்ந்து போய் அவனை உள்ளே அழைத்தார் அமுதன். அவருக்குள் நிஜமாகவே ஒரு பரவசம்.

உள்ளே வந்து சோபாவில் உட்கார போனவனை தடுத்தார். ‘நீ முதல்லே வந்து சாப்பிடு வா. பசிக்கும் இல்ல உனக்கு?’

‘சாப்பாடு தானே சாப்பிட்டா போச்சு’ மகிழ்வுடன் வந்து அவன் அமர்ந்ததே அவருக்கு நிறைவாக இருந்தது.

அந்த பெரிய டைனிங் டேபிளில் அமர வைத்து ‘நல்லா இருக்காப்பா? சாப்பாடு உனக்கு பிடிச்சிருக்காப்பா. நல்லா சாப்பிடு. இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ’

ஏதோ ஒரு மிகப்பெரிய வரம் கிடைத்ததை போல், ஏதோ இத்தனை நாள் அவர் செய்ய தவறிய மிகப்பெரிய கடமையை அவர் செய்வதை போல் அன்பும் பாசமும் கலந்த பார்வையுடன் அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினார் அமுதன். அவன் சாப்பிடுவதை ரசித்தபடியும் இருந்தார்.

நேற்று இரவு கனவில் வந்த மாதவனும், அவன் சொன்ன வார்த்தைகளுமே இப்போது அவர் மனதில் வந்து வந்து போய்க்கொண்டிருந்தன.

எல்லாவற்றையும் விட வருண் சாப்பிட்டு முடித்ததும் அவர் செய்த அந்த காரியம் வருணை திகைப்பாற்றில் தள்ளியது. அவன் கையை பிடித்துக்கொண்டு சொன்னார் அவர்

‘என்னை தயவு செய்து மன்னிச்சிடுபா’

‘மன்னிக்கவா எதுக்கு சார்?’

‘எல்லாத்துக்கும். நான் செஞ்ச எல்லாத்துக்கும். என்னை மன்னிச்சிட்டேன்ன்னு ஒரு தடவை சொல்லு. அதனாலே நடந்ததை மாத்த முடியாதுதான். உனக்கு நியாயம் கிடைக்காதுதான். ஆனா அந்த வார்த்தை எனக்கு கொஞ்சம் நிம்மதி கொடுக்கும்’ அவர் கெஞ்ச என்னவென்றே புரியாத போதிலும் அவரை அதற்கு மேலே கெஞ்ச விட தோன்றாமல் வேறே வழி இல்லாமல்

‘சரி சார் மன்னிச்சிட்டேன் விடுங்க’ என்றான் புன்னகையுடன்

அவனை சோபாவில் அமர வைத்து விட்டு அவரும் அருகில் அமர்ந்துக்கொண்டார்.

‘வருண்’

‘சொல்லுங்க சார்’

‘சார் வேண்டாம். நீ இப்பவாவது என்னை அப்பான்னு கூப்பிடேன்’ அவர் சொல்ல மெல்ல இடம் வலமாக அசைந்தது அவன் தலை.

‘இல்ல வருண். மாதவன் என்னை அண்ணான்னு கூப்பிடனும்ன்னு ரொம்ப ஆசை பட்டான். அது நடக்கலை. நான் நடக்கவிடலை. நான் அவனை புரிஞ்சிக்கலை. இப்போ அதை உன்னை வெச்சு கொஞ்சம் சரி செய்யலாம்னு பார்க்கிறேன். நீ என்னை அப்பான்னு கூப்பிடேன்’ அவர் படபடபடவென பேச

எந்த வித சலனமும் இல்லாமல் அழகாய் புன்னகைதான் வருண்.

‘யாரந்த மாதவன். அவரை எதுக்கு என்னோட சேர்க்கறீங்க அப்படின்னு எனக்கு புரியலை. ஆனா வருண் ஒரு தடவை சொன்னா சொன்னதுதான். முகிலனை இது மாதிரி உங்க பக்கத்திலே உட்கார வெச்சுக்கோங்க, அவனுக்கும் இதே மாதிரி உங்க கையாலே சாப்பாடு போடுங்க. அதுக்கு அப்புறம் நான் மனசார உங்களை அப்பான்னு கூப்பிடறேன். சரியா?’ எழுந்து விட்டான் வருண்.

அமுதனின் முகம் கொஞ்சம் வாட்டம் கொண்டது. அதனால் பெரிய மாற்றம் இல்லை வருணிடத்தில். இந்த விஷயத்தை தவிர வேறே எந்த விஷயம் வேணும்னாலும் சொல்லுங்க நான் கேக்கறேன். இப்போ வாங்க சார் உங்களை வீட்டிலே விட்டு போறேன்’ என்றான் அவன் இயல்பாய்.

‘இல்ல வருண் நான் இன்னைக்கு இங்கே இருந்திட்டு நாளைக்கு வரேன்’ சொன்னார் அமுதன்.

‘சார் ராத்திரி நீங்க தனியா படுக்க வேண்டாம் சார். நம்ம வீட்டுக்கு போயிடுங்க. நான் தனாவை கூட வந்து படுக்க சொல்றேன்.’ நேற்றைய நிகழ்வுகள் அவனை கொஞ்சம் பயமுறுத்தி இருந்தன.

‘தனா ஷூட்டிங்லே உன் கூட இருக்கனும் இல்லையா வருண். இங்கே சந்தானம் கூட இருப்பார் நான் பார்த்துக்கறேன்’ சொன்னார் அமுதன். அதற்கு மேல் அவரை கட்டாய படுத்தாமல் சந்தானத்திடம் இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டுதான் கிளம்பினான் வருண்.

நேரம் இரவு பத்தை தொட்டிருந்தது. பொதுவாக சந்தானத்துக்கு தூக்க மாத்திரை போடுவது பழக்கம். போட்டுக்கொண்டு படுத்திருந்தார் அவர். சந்தானம் கீழே தரையில் படுத்திருக்க இவர் கட்டிலின் மேலே உறக்கமின்றி படுத்து புரண்டுக்கொண்டிருந்தார்

அந்த வீட்டில் அவர் அமுதன் தங்கி பல வருடங்கள் ஆகிறதே. அப்பாவும் அம்மாவும் இருந்தவரை வேறே வழி இல்லாமல்தான் இந்த வீட்டில் இருந்தார். அதன் பின்னர் ஒரு நாள் கூட இங்கே இருந்ததில்லையே. ஏதோ ஒரு வேகத்தில் தங்கி வேண்டுமென முடிவெடுத்து விட்டார்.. ஆனால் இப்போது?

நேரம் நகர நகர ஏதோ ஒரு அழுத்தம் அவர் மனதை தாக்க உடல் வியர்க்க ஆரம்பித்தது ஏதேதோ பழைய நினைவுகள் அழுத்த ஆரம்பித்தன. தனிமை அதுவும் இந்த வீட்டில் தனிமை அது அவரை வருத்தி எடுத்தது.

இதே வீட்டில்தானே என் திருமணம் மனைவி இருந்த போது சண்டையோ கோபமோ தாபமோ உடன் துணை வந்தாள் முகம் சுளிக்காமல் என்னுடன் துணை வந்தாள். நான் அவளை மதிக்கவில்லையே. போய்விட்டாள். அவளும் என்னை விட்டு போய்விட்டாள். இப்போது எனக்கென யாருமே இல்லையோ?

‘இல்ல அண்.. சார் என் வாழ்க்கையிலே எனக்கு ஒரே லட்சியம். உங்களோட ஒரே படமாவது நடிக்கணும். ஒரே ஒரு சீன் கூட போதும். என்னோட இந்த ஒரு ஆசை நிறைவேறிட்டா போதும் எனக்கு வாழ்க்கையிலே’

இந்த அறையில்தானே? இங்கேதானே நின்றுக்கொண்டு மாதவன் கேட்டான். அன்று எத்தனை திமிராக அவனை அலட்சியமாக பேசினேன். அந்த காட்சி அவர் மனதில் திரும்ப திரும்ப ஓடியது.

‘மன்னிச்சிடு மாதவா. என்னை மன்னிச்சிடு. தயவு செய்து என்னை மன்னிச்சிடு’ மனதிற்குள் அவர் புலம்பிக்கொண்டே இருக்க நெஞ்சில் தொடங்கி முதுகு வரை ஒரு வலி ஓடத்துவங்கியது. சுவாசம் தடுமாற துவங்கியது. உடல் முழுதும் வியர்வை மழை.

ஏற்கனவே அவருக்கு இதயநோய் உள்ளது என்பதால் இந்த அறிகுறிகள் சரியாக படவில்லை அவருக்கு. சந்தானத்தை எழுப்பி பார்க்க அவர் எழுவதாகவே இல்லை.

‘இப்போது யாரை அழைக்க?’ அவர் யோசிக்க வலி இன்னும் தீவிரமானது. தடுமாற்றத்துடன் அறைக்கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தார் அவர். எல்லா விளக்குகளும் அணைக்க பட்டிருக்க இருட்டில் தடுமாறியபடியே கூடத்துக்கு வந்தார் அமுதன்.

‘யாரை அழைக்க? இப்போது யாரை அழைக்க? வருணையா? அவன் எங்கோ கிராமத்தில் அல்லவா இருக்கிறான்? வேறே யாரை முகிலனையா? வேண்டாம். அவன் வேண்டாம்.

அவனை பற்றி நினைக்கும் போதே இவருக்குள் நடுக்கம் பிறக்க, வாசலில் ஒலித்தது அழைப்பு மணி.

‘யாராக இருக்கும். யாராக இருக்கும் அது?’ யோசனையுடன் இவர் நகர நினைக்க அடியெடுத்து வைக்க முடியாத அளவுக்கு வலிப்பிரவாகம். மறுபடியும் அழைப்பு மணி. இப்போது இவருக்கு நிற்கவே மூடியாத நிலை.

இவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு அவர் சாயப்போகும் நேரத்தில் அவரை சட்டென தாங்கிப்பிடித்தது அந்த கரம். அது முகிலனின் கரம். வீட்டுக்குள் நுழைந்து இருளுக்குள் ஊடுருவிய அவனது கண்களுக்கு தட்டுப்பட்டார் தடுமாறிக்கொண்டிருந்த அமுதன். அவனது உள்ளுணர்வு அவனுக்கு இத்தனை நேரம் உணர்த்திக்கொண்டிருந்து இப்போது பலித்து போனதை எண்ணி வியப்பாக கூட இருந்தது அவனுக்கு.

‘யாரு... யாரு... யாரு அது’ இருளில் அமுதனுக்கு கண் சரியாக தெரியவில்லை.

‘நான்தான்... நான்தான் முகிலன். பயப்படாதீங்க’ அவன் சொல்ல அதற்குள் ஷ்யாம் விளக்கை போட்டிருந்தான்.

நல்ல வேளையாக இவனிடம் இருந்தது இந்த வீட்டின் சாவி ஒன்று. கதவும் வெளியிலிருந்து திறக்கும் வகையிலேயே பூட்டப்பட்டிருந்தது.

‘டேய்... நீ... நீ... வேண்டாம்... போ... போடா...’ அவர் வலியில் துடித்தபடியே முனக

‘அ...ப்....பா’ என்றான் அழுத்தமாக. சொல்லப்போனால் பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் அவரை அப்பாவென அழைக்கிறான் முகிலன்.

‘உங்களுக்கு உடம்பு முடியலை. இந்த நேரத்திலுமா நான் வேண்டாம் உங்களுக்கு? கொஞ்சம் சரியாகி எழுந்திடுங்க அப்புறம் போயிடறேன் நான்’ சற்று சூடாக சொன்னவன் அவரை இரு கைகளிலும் தூக்கிக்கொண்டான்.

‘காரை எடு ஷ்யாம்’ ஆணை இட்டான் அவனுக்கு. அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார் அமுதன்.

காலையில் அவர் இந்த வீட்டுக்கு வருகிறார் என்ற செய்தி தெரிந்ததுமே உறுத்தல்தான் அவனுக்கு. சரியான அடிப்படை காரணம் தெரியாவிட்டாலும் இந்த வீட்டில் அவரால் நிம்மதியாக இருக்க முடியாது என அம்மா எப்போதும் சொல்வது மட்டும் நினைவில் இருந்தது அவனுக்கு. அம்மாவுக்குமே இதற்கான காரணம் சரியாக தெரியாதுதான்.

அவர் இரவும் இங்கேயே தங்குகிறார் என சந்தானம் மூலம் தெரிந்து கொண்டான் முகிலன்.

‘சரி எப்படியும் போகட்டும் என ஏனோ இன்று உறங்க முடியவில்லை அவனால். காரணமே இல்லாமல் மனம் நிலைக்கொள்ளாமல் தவித்தது. நீங்க யாரும் எனக்கு வேண்டாம். எனக்கு பாசமும் இல்லை. பந்தமும் இல்லை என்று சொன்னவன்தான் முகிலன். ஆனால் இன்று ஏனோ அப்படி இருக்க முடியவில்லை.

இதைத்தான் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொன்னார்களா தெரியவில்லை அவனுடன் அன்றிரவு தங்கி இருந்த ஷ்யாமையும் அழைத்துக்கொண்டு வந்து விட்டான் இங்கே.
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
மறுநாள் மதியத்துக்குள் சீராகி இருந்தது அவரது உடல்நிலை. இனி பயமில்லை என்ற நிலைக்கு வந்திருந்தார்.

‘மைல்ட் அட்டாக் முகிலன். இனி கொஞ்சம் கவனமா பார்த்துக்கணும்’ அறிவுறித்தினார் மருத்துவர்.

இவன் அவரை பார்க்க சென்ற நேரத்தில் அவர் உறங்கிக்கொண்டிருந்தார். ஒரு ஆழ்ந்த மூச்சுடன் அவர் அருகில் அமர்ந்தான் முகிலன்.

‘விழித்து விட்டால் அவன் அருகில் இருப்பதை அவர் விரும்பவும் மாட்டார். தெரியும் அவனுக்கு.’ அரை மணி நேரத்துக்கு மேலாக அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் மகன்.

‘நான் நிஜமாவே உங்களுக்கு என்னப்பா தப்பு செஞ்சேன். ஏன் உங்களுக்கு என் மேலே இவ்வளவு கோபம், இத்தனை வெறுப்பு’

நேற்று அவரை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியெல்லாம் முகலன் மனதை கீறிய இன்னொரு விஷயம் வரும் அவருடைய புலம்பல்.

‘முகிலா என்னை விட்டுடு முகிலா. முகிலா என்னை விட்டுடு முகிலா’ உச்சகட்ட வலியில் புலம்பிக்கொண்டே வந்தார் மனிதர்.

அதற்குள் இவருக்கு உடல் நலமில்லை என்ற செய்தி வருணை எட்டி இருக்க திருச்சியிலிருந்து வந்து சேர்ந்திருந்தான் மருத்துவமனைக்கு.

‘சார்.’ கலைத்தான் ஷ்யாம் முகிலனின் அருகில் வந்து ‘தலைவர் வந்திருக்கார் சார். வெளியே கார்லே வெயிட் பண்றார். அப்பாவை பார்க்கணுமாம்’

‘ஆஹான்...’ என்றபடியே திரும்பினான். ஷ்யாமின் முகத்தையே பார்த்திருந்தவனுக்குள் ஏதேதோ யோசனைகள்.

‘இனி அப்பா அவன் வீட்டுக்கு வர மாட்டார். நான் அவர் முன்னால் வருவதை கூட விரும்ப மாட்டார். அதுவும் இப்போது அவர் இருக்கும் நிலையில் எதற்கும் கட்டாய படுத்தவும் முடியாது. வருண்தான் அவரை கவனித்துக்கொண்டாக வேண்டும். இதை அவன் புரிந்துக்கொள்வானா? செய்வானா இதை?

என்ன தோன்றியதோ ‘நாம கிளம்பலாம் ஷ்யாம்’ என்றான் இவன் சட்டென.

கார் நிறுத்தத்தில் இவன் காருக்கு பக்கத்திலேயே வருணுடைய கார் நின்றுக்கொண்டிருந்தது. உள்ளே அமர்ந்திருந்தான் வருண். அவன் பக்கம் கூட திரும்பாமல் காருக்குள் சென்று அமர்ந்துக்கொண்டான் முகிலன். கைகள் ஸ்டியரிங்கை இறுக்கமாக பற்றி இருக்க, கண்கள் இறுக மூடிக்கிடக்க அப்படியே அமர்ந்திருந்தான் முகிலன்.

‘என் மனதில் இருப்பதை புரிந்துக்கொள்வானா வருண்?’

காரை விட்டு இறங்கிய வருண் இவன் ஜன்னலருகே வந்து நின்று ‘ஷ்யாம்’ என்றான் உரக்க

‘தலைவா..’ ஓடி வந்தான் அவன்.

‘என்ன நினைச்சிட்டு இருக்கார் உங்க பாஸ். எங்க டைரக்டர் சார் எனக்கும் அப்பா மாதிரித்தான். இங்கே வந்து சும்மா சீன் போட வேண்டாம்னு சொல்லு. எங்களுக்கும் அவரை பார்த்துக்க தெரியும். எப்போ அவர் எங்க வீட்டுக்கு வந்துட்டாரோ அப்போவே பொறுப்பு என்னோடது. இனிமே நாங்க பார்த்துக்குவோம். நிம்மதியா போய் இழுத்து போர்த்திட்டு தூங்க சொல்லு அவரை’

அவன் வார்த்தைகள் முகிலனின் செவிகளை தொட கண்களை திறக்கவே இல்லை அவன். ‘என்ன சொல்கிறான் இவன்? நான் இருக்கிறேனடா நீ தைரியமாக இரு என்றா?’ வெளியே எதையும் காட்டிக்கொள்ளா விட்டாலும் அவன் உள்ளம் மொத்தமாக நிறைந்து போனது உண்மை.

‘ஷ்யாம்’ அடுத்த நொடி எகிறியது முகிலனின் குரல் ‘நீ வண்டியிலே ஏறு நாம கிளம்பலாம்’ ஷ்யாம் ஏறிக்கொள்ள சர்ரென பின்னால் வந்து திரும்பி பறந்தது முகிலனின் கார். அது செல்லும் திசையையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் வருண்

தொடரும்​
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
madhavanuku ennachu......... varun madhavan payana.......... mukilanai parthu en amuthan payapatarau .......... interesting epi sis
 




Devi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
323
Reaction score
1,366
enna nadandhadhu... :unsure::unsure: Madhavan kku enna achu ? adhukku amudhan karanamaa? Venkatraman than edhuvum seydhu irupparo? Mukilan Varun rendu per friendship.. :love::love::love: waiting eagerly to know more
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
மீராவை வைத்து மாதவனை வெறுத்தானா அமுதன்.கண்ணனுக்கு தற்சமயம் மனநிலை சரியில்லையா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top