• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mukilan 26 FINAL

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

prana

புதிய முகம்
Joined
Mar 24, 2018
Messages
7
Reaction score
21
Location
US
Wow!
வத்சலா ராகவன் நன்றாக கதைகள் எழுதுவார் என்று தெரியும். இது ஒரு exceptionally good novel.
congratulations. All my hearty good wishes to write more and be a sought after writer.
God Bless You!
 




Nimmi

புதிய முகம்
Joined
Mar 10, 2018
Messages
15
Reaction score
27
Location
Chennai
Excellent story jenma jenmaii thodarum natpu awesome!!!??
 




Anuradha V

புதிய முகம்
Joined
Sep 6, 2018
Messages
2
Reaction score
0
Location
Chennai
‘முகிலன்?” மெதுவாக கேட்டார் வெங்கட்ராமன்.

‘தெரியலை சார். அவன் இன்னும் கிடைக்கலை. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு’ சொன்னான் வருண்.

‘எங்கே அடித்தால் எங்கே யாருக்கு வலிக்கும் என இறைவன் வகுத்து வைத்த விதியிலிருந்து தப்பிக்க மூடியாமல் தளர்ந்து போயிருந்தனர் இரண்டு தந்தையினரும். பேசக்கூட சக்தி அற்றுப்போயிருந்தனர் மயூராவின் அம்மாவும், அண்ணனும்.

‘செய்தது பாவம் என்று உணர்ந்துவிட்டால் அந்த பாவத்துக்கு கொஞ்சமேனும் விமோசனம் கிடையாதா இறைவா? எதாவது மாயம் செய்து என் முகிலனை எனக்கு தர மாட்டாயா? கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார் அமுதன்.

இந்த சம்பவத்தில் தமிழகமே ஆடிப்போயிருந்தது. முகிலனது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. எல்லாரும் கண்ணீரில் மிதந்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் உடல் கிடைக்காதது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருந்தது. அங்கங்கே அவனுக்காக பிரார்த்தனைகள் துவங்கி இருந்தன.

மறுநாள் அதிகாலை நேரம். இன்னும் இருள் விலகி இருக்கவில்லை. அமுதன் அழுது அழுது அரை உறக்கத்திற்கு சென்றிருந்தார்.

‘ஷ்யாம்; என்றான் வருண் ‘அவன் விழுந்த இடத்திலே போய் பார்த்திட்டு வரலாம் வரியா? நிச்சியமா அங்கே எங்கேயாவது மயக்கமா இருப்பான்.’

‘கண்டிப்பா தலைவா. போவோம்’ கிளம்பினர் இருவரும்.. அங்கே சென்று பார்த்ததில் மேலிருந்து அவன் விழுந்த இடத்தின் நேர் கீழே இருந்தது அந்த நீர்நிலை.

‘தலைவா., தலைவா கண்டிப்பா சாருக்கு ஒண்ணும் ஆகி இருக்காது தலைவா. அவர் நேரே தண்ணியிலே தான் விழுந்திருக்கணும் தலைவா. அவர் நீச்சல் ரொம்ப நல்லா அடிப்பார் தலைவா. எப்படியும் எழுந்து வந்திடுவார் தலைவா’ உற்சாக மிகுதியில் பைத்தியம் போல் கூவினான் ஷ்யாம்.

ஆனாலும் சில மணி நேரங்கள் அந்த இடம் முழுவதும் தேடித்தேடி தோற்றிருந்தனர் வருணும், ஷ்யாமும். முகிலனின் சுவடே தெரியவில்லை.

மறுபடியும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும். ஆனாலும் இன்னமும் சொல்லிக்கொண்டிருந்தான் வருண் ‘முகிலனுக்கு ஒண்ணும் ஆகி இருக்காதுடா’

அதே நேரத்தில் ஐ. சி. யூவில் படுத்திருந்த மயூராவின் செவிகளில் விழுந்தன அந்த வார்த்தைகள்

‘மயூரா. ஹேய்.. ரஸ்னா கொஞ்சம் கண்ணை திறந்து பாரேன்’ அந்த குரலில் அவள் உடல் மொத்தமும் குலுங்கி ஓய்ந்தது.

மறுபடியும் சிறிது நேரம் கழித்து அதே அழைப்பு ‘மயூரா. கண்ணை திறந்து பாரு. நீ என்கிட்டே ஆசைப்பட்டு கேட்டது இதுதானே. நான் உன்னை மயூரான்னு கூப்பிடனும்னுதானே. இதோ கூப்பிடறேன் பாரு. உனக்கு ஒண்ணுமில்லை கண்ணை திறந்து பாருடி ரஸ்னா’

சில நிமிடங்கள் கடக்க ஐ.சி. யூ விலிருந்து வருணிடம் ஓடி வந்தாள் அந்த நர்ஸ் ‘சார் மயூராவுக்கு முழுசா நினைவு திரும்பிடுச்சு. நல்லா கண்ணை திறந்து பார்க்குறாங்க’

திக்கு முக்காடிப்போனான் வருண். விழுந்தடித்துக்கொண்டு ஓடினான் உள்ளே. அவனை பார்த்ததும் புன்னகைத்தாள் மெல்ல. அவள் உச்சரித்த முதல் வார்த்தை ‘முகிலன்’

‘முகிலனா? அவன்..’ தடுமாறினான் வருண். அவளிடம் என்ன சொல்ல? எப்படி சொல்ல? குலை நடுங்கியது வருணுக்கு.

இல்லை அவனுக்கு எதுவும் ஆகி இருக்காது தன்னை தேற்றிக்கொண்டவன் மெல்ல சொன்னான் அவளிடம்.

‘முகிலன் நல்லா இருக்கான். ஒரு வேலையா கோவை வரைக்கும் போயிருக்கான். நாளைக்கு வந்திடுவான்.’ அந்த பதிலில் அவள் புருவங்கள் கேள்வியாய் சுருங்க அங்கே அருகிலிருந்து கேட்டது அந்த குரல்

ஆஹா....ன்’ முகிலன் கோவை போயிருக்கானா?

அந்த குரலில் வருணுக்குள் என்ன ஆனது என்று தனியாக சொல்ல வேண்டுமா என்ன? குரல் வந்த திசையில் ஆனந்தத்தின் மொத்த உருவமாய் திரும்பியவனின் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.

அங்கே மயூராவின் அடுத்த படுக்கையில் ஆயாசமாக படுத்திருந்தான் முகிலன்.

‘டேய்... மு...கி... லா!!!’ ஐ.ஸி.யூ என மறந்து கூவினான் வருண்.

‘டேய்... டேய்.. கையிலே ட்ரிப்ஸ் ஏறுதுடா டேய்...’ என்று முகிலன் கத்தியதை கூட கண்டுக்கொள்ளாமல் அவனை இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டான் நண்பன். அவன் கண்களில் வெள்ளம்.

‘என்னடா முகிலா இப்படி பயமுறுதிட்டே?’ உனக்கு என்னமோ ஏதோன்னு நான் பைத்தியக்காரன் மாதிரி.... தெருத்தெருவா சுத்திட்டு வரேண்டா... நீ இங்கே ஒய்யாரமா படுத்திருக்கே... எங்கேடா போனே??? உனக்கு ஒண்ணுமில்லையே... ரொம்ப பயந்துட்டேன்டா நான்... நீ.. நல்லா இருக்கே இல்லே... உனக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுடா.... நீ என் முகிலன்டா...’ அவனை விட்டு தன்னை விலக்காமல் கதறும் நண்பனை ஆதரவாக முதுகில் வருடிக்கொடுத்தான் முகிலன். இதை ரசிப்பான புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மயூரா.

சில நிமிடங்கள் கழித்து வருண் சுதாரித்த பிறகு நடந்ததை சொன்னான் முகிலன் ‘மலை மேலிருந்து தண்ணியிலே விழுந்துதுட்டேன் வருண். எப்படியோ நீச்சல் அடிச்சு ஏதோ ஒரு கரைக்கு போயிட்டேன். அங்கே போய் மயக்கமா கிடந்தேன் போலிருக்கு. அங்கே ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை. போன் தண்ணிக்குள்ளே போயிடுச்சு. அதுக்கு அப்புறம் ராத்திரி ரெண்டு மணிக்கு என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்காங்க. இப்போதான் கண் திறந்து பார்த்தா பக்கத்திலே நம்ம மயூரா வெங்கட்ராமன் படுத்திருக்காங்க..........’ அவன் அவளை பார்த்தபடியே கண் சிமிட்ட

உடல் முழுதும் வலியில் அழுந்தியபோதிலும் கஷ்டப்பட்டு அவனை முறைத்துவைத்தாள் மயூரா.

‘முகிலன் சார்..’ கூவிய படியே ஆனந்த கடலில் மூழ்கினான் அவனை வந்து பார்த்த ஷ்யாம்.

அருமையான பொக்கிஷத்தை கைக்கெட்டாத தூரத்தில் தொலைத்துவிட்டேன் என்று கதறிக்கொண்டிருந்த வேளையில், இதோ தந்தேன். வைத்துக்கொள் என இறைவன் அதை திருப்பி தந்தால் அங்கே கண்ணீர் ஒன்றே மொழியாகுமா? முகிலனின் மடியில் படுத்துக்கொண்டு அரை மணி நேரம் அழுது தீர்த்தார் அமுதன்.

இது நடந்து முடிந்து சரியாக இரண்டு மாதங்கள் கடந்திருந்தன. சென்னையில் களை கட்டி இருந்தது வெங்கட்ராமனின் வீடும் அதற்கு அருகில் இருந்த அமுதனின் மகாலிங்கபபுரம் பங்களாவும்.

தேவதையாய் தன்னை அலங்கரித்துக்கொண்டிருந்தாள் மயூரா. .புது மாப்பிள்ளையின் தோரணையில் கம்பீரமாக வலம் வந்துக்கொண்டிருந்தான் முகிலன். சினிமாக்காரர்களும் பத்திரிக்கையாளர்களும் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தனர் அங்கே.

மகழ்ச்சி, ஆனந்தம், சந்தோஷம் என்றெல்லாம் வார்த்தையில் வர்ணித்துவிட முடியாத ஒரு பரவச உணர்வில் இருந்தாள் மயூரா. அவளது வாழ்கையில் இந்த நொடி இவ்வளவு சீக்கிரம் வருமென அவள் நினைக்கவில்லை. இவனுடன் எத்தனை போராட வேண்டி இருக்குமோ இதற்கெல்லாம் எனதான் நினைத்துக்கொண்டே இருந்தாள் அவள்.

சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் வெங்கட்ராமன். அவரை இந்த நிலையில் பார்த்த பின்பு சத்தியமாய் நடந்தது எதையுமே நினைக்க தோன்றவில்லை முகிலனுக்கு. வாழ்கை எத்தனை நிலையற்றது என்பது மட்டும் தெளிவாக புரிந்திருந்தது அவனுக்கு.

சுற்றி இருக்கும் எல்லோர் மனமும் மகிழ்ச்சியில் நிரம்பி இருக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க மனம் நிறைந்த புன்னகையுடன் மாங்கல்யத்தை ஏற்றுக்கொண்டாள் அவன் ரஸ்னா.

ஜென்ம ஜென்மமாக வந்த கனவுகளும் ஏக்கங்களும் கைகூடி விட்ட ஆனந்தத்தில் இருவர் கண்களிலும் கண்ணீர். உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தான் நம் மாதவன், இல்லை இல்லை நம் வருண். இதை காணத்தானே அவனும் ஜென்ம ஜென்மமாய் காத்திருந்தான்.

அவளது அப்பா, அம்மா, அண்ணன் என அனைவரது கண்களும் நிரம்பியே விட்டிருந்தன. இமைக்க கூட விரும்பாமல் மேடையையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் அமுதன். தனது அன்பு கணவனின் கைப்பற்றி அக்னியை வலம் வந்தாள் மயூரா.

‘வருண் சார்...’ அப்போது அங்கே ஓடி வந்து அழைத்தாள் மயூராவின் உதவி இயக்குனர் வித்யா.

‘சூப்பர் ஸ்டார் வந்திருக்கார் சார்.. அவரை வெல்கம் பண்ண வரீங்களா?’ என்றாள் அவள் அவசரமாக.

‘எஸ். பேபி இதோ வந்திட்டேன்’ சொல்லிவிட்டு அவசரமாக வாசல் நோக்கி ஓடினான் வருண். அந்த பேபியை அவன் உச்சரித்ததை அவனே அறிந்திருக்கவில்லை. சில மாதங்கள் கழித்து அவளே அவன் பேபி ஆகப்போகிறாள் என்பதை அவளும் அறிந்திருக்கவில்லை.

இரவின் தனிமை

அந்த மகாலிங்கபுரம் வீட்டு மொட்டை மாடியில் முகிலன் மார்பில் படுத்துக்கிடந்தாள் மயூரா.

‘இந்த உலகத்திலேயே மொட்டை மாடியிலே ஃபரஸ்ட் நைட் கொண்டாடுற ஆளு நீங்கதான்’ அவன் அணைப்பில் கசங்கி, முத்தத்தில் கரைந்துக்கொண்டே சொன்னாள் மயூரா. ‘பாருங்க நிலா பார்க்குது’.

அவள் வார்த்தைகளில் வெட்கத்துடன் சிரித்து மேகங்களின் பின்னால் ஒளிந்துக்கொண்டது அவர்கள் வருத்தங்கள், சோகங்கள் இப்போது மகிழ்ச்சி என எல்லாவற்றக்கும் சாட்சியாக நிற்கும் அந்த வெண்ணிலவு.

மீராவின் கண்ணன் மீராவிடமே

எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே

அவளது கைப்பேசி இனிமையாய் இசைத்துக்கொண்டிருந்தது.

நிறைந்தது
Nice story mam really superb
 




N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
சகோதரி வத்சலா ராகவன் அவர்களுக்கு,




உங்கள் நாவல் ப்ரியங்களுடன் ...... முகிலன் பற்றி சில வரிகள் சகோ. நாவலை படித்தவர்கள் எல்லாரும் பரவசத்துடன் சில, பல வரிகள் சொல்லிவிட்டார்கள் சகோதரி. என்னால் அதை தாண்டி ஒன்றும் சொல்லமுடியாது சகோ. அவ்வளவு அருமையாக ஒவ்வொருவரும் சொல்லியுள்ளார்கள் சகோ. இந்த நாவல் என்னுள், என் நினைவலைகளில் ஏற்படுத்திய சில நிகழ்வுகளை மட்டும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைபடுகிறேன்.



ஏதோ ஒரு காரணத்துக்காக படிக்காதவன் திரைப்படம் பற்றி விக்கிபீடியாவில் ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் தமிழில் தேடினேன். அப்போது ரீலிஸ் தேதி 6/11/1985 என்று இருந்தது. எனக்கு நன்றாக தெரியும், அது 11/11/85 என்பது. நீங்கள் அந்த தேதியை குறிப்பிட்டு இருந்ததால் மீண்டும் தேடினால், தமிழில் அதே தேதி. பிறகு ஆங்கிலத்தில் பார்த்தால் இந்த தேதி. அவ்வளவு துல்லியமாக தேதி, அன்று நடந்த மழை பிரச்சனை என கூறியது, அந்த தீபாவளிக்கே அழைத்து சென்றது போல் ஒரு உணர்வு. { நானும் மாதவன் போல் கொடி, மன்றம், பால் என அவமானச்செயல்கள் செய்தவன் தானே, மறக்கமுடியுமா}.


கேசட் பற்றி கூறியது, எவ்வளவு உண்மையான செய்திகள். ரெகார்டிங்கை நோக்கி படை எடுத்த அந்த காலம் மறக்க முடியுமா சகோ. முன்பு இசை தட்டாக இருந்தது, எஜமான் படத்துடன் காலாவதியாகி பின் அதிகமாக 60 கேசட், 90 கேசட் என்று விற்பனையில் சூடுப்பிடித்தது. தங்களுக்கு ஒரு சின்ன செய்தி சகோ. 45 கேசட்டும் அப்போது உள்ளது சகோ. குறைந்த விலையில் திரைக்கதை வசனம் வருமே அந்த கேசட் சகோ. இன்னும் சொல்ல போனால் இதில் குவாலிட்டி அருமையாக இருக்கும். மற்ற கேசட் எல்லாம் பூஞ்சை பிடிக்கும். ஆனால் இந்த 45 கேசட்டில் அது வராது சகோ. { நான் இதில் ஒரு படப்பாடல் பிடித்து சேர்த்து வைப்பேன்}. இது ஒரே ரசிப்பு உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் சகோதரி.



இளையராஜாவுக்கும், A.R.ரகுமானுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால் என் பதில் இப்படி இருக்கும் சகோதரி. இந்திப்பாடலில் மூழ்கி இருந்த தமிழனை, தமிழ் பாடலை ரசிக்க வைத்தவர் இளையராஜா. இந்திப்பாடலில் மூழ்கி இருந்த இந்திக்காரனை தமிழ் பாடலை விரும்ப வைத்தவர் A.R.R. அந்த நினைவுகளையும் மீண்டும் துளிர் விடவைத்தீர்கள் சகோ. நாவலில் வரும் "மீராவின் கண்ணன் மீராவிடமே" பாடல் இடம் பெற்ற இதயக்கோவில் திரைப்படம் பல சாதனை புரிந்தது. ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பர்கள். அதை உடைத்தது. ஆம், வெறும் டைரக்ஷனை மட்டும் படித்து, யாரிடமும் உதவியாளராக பணிப்புரியாமல் இன்று இந்தியாவின் தலைசிறந்த டைரக்டரில் ஒருவராக உள்ள மணிரத்தினத்தின் முதல் தமிழ்ப்படம். பல படங்களுக்கு இசை அமைத்த இளையராஜா எழுதிய முதல் பாடல்தான் இந்த பாடல். அதுவரை வெற்றி நிறுவனமாக இருந்த மதர்லேண்ட், கோவைதம்பியின் தோல்வி ஆரம்பித்த புள்ளி இந்த படம் ( இதிலும் தமிழ் விக்கிபீடியா தவறாக உள்ளது } என பல சாதனைகள் இருந்தாலும் இன்று எங்களுக்கு இந்த நாவலை தந்த பாடல் இடம் பெற்ற படம் என்ற வகையில் மீண்டும் சாதனை புரிந்துள்ளது.


இப்படி இன்னும் ஏதாவது சொல்லிகொண்டே போவேன் சகோ. அந்த அளவுக்கு என் மனதில் மலரும் நினைவுகள்.


உண்மையான நட்பும், காதலும் ஜென்மம் கடந்தும் சேரும் என்ற கோல்டன் வரிகளை கொண்டு படைத்த இந்த நாவலை என்ன சொல்லி பாராட்டமுடியும். இந்த நாவல் மனதில் ரொம்ப நாள் இருக்கும் சகோ. வசிய எழுத்துக்கு சொந்தக்காரர் சகோ நீங்கள். கண்ணன், முகிலன், மாதவன், வருண், மீரா, மயூரா என அருமையான பாத்திர படைப்புகள். நாவலில் காதலையும், நட்பையும் கலந்து சொன்னாலும் நட்பே பிரதானம். என்ன மாதிரியான நட்பு சகோ. மாதவன் (வருணன்) ரொம்ப கொடுத்து வைத்தவன். முகிலனின் (கண்ணன்) ஆளுமை ரொம்ப பிடித்தம் சகோ. மீராவின் காதல் தயக்கம், மயூராவின் காதல் வேகத்தில் நேராகிவிடுகிறது. அனுபமா உன் மீது அனுதாபம் மா. தனஞ்செயன், ஷ்யாம் போன்றோர்கள் உடன் இருக்க வேண்டியவர்கள். வெங்கட்ராமன், அமுதன் போன்றோர்களும் இருக்க வேண்டும், தவறு செய்தால் தண்டனை உண்டு என்பதுக்கு சாட்சிகளாக.


பொதுவாக உரையாடல் தான் பிரமாதம் என்றால், நீங்கள் வார்த்தைகளை பிரமாதப்படுத்தியிருக்கிறீர்கள். ரஸ்னா, ஆஹான், இரண்டும் இரண்டும் நான்கு என்பது போன்ற வார்த்தைகள் இனி கேட்கும் போதெல்லாம் இந்த நாவல் நினைவுகளில் வலம் வரும். இதோடு நிலவையும் ஒரு பாத்திரமாக்கிட்டீங்க.


உரையாடலை சில இடங்களில் கேள்வி – பதில் போல் வடிவமைத்துள்ளீர்கள். எல்லா இடத்திலும் எல்லோரையும் வச்சிடமுடியாது, இது உங்களுக்கான இடம். இதில் வேறு யாரையும் நிறுத்தி பார்க்க முடியாது என்று வந்தால் உடனே, இது இவருக்கான நிரந்தர இடம் என இந்த உலகத்தில் எதுவும் இல்லை. காலமும் நேரமும் கூடி வந்தால் எந்த இடமும் யாருக்கும் பொருத்தும் என பதில் போல் வருகிறது சகோ.



அதேபோல் அங்கங்கு வந்த பளீச் பளீச் வரிகள் அருமை சகோ. சில கேள்விகள் அழகாக இருக்கும் பதில்கள் அத்தனை அழகாக இருக்காது, அது ஏனோ நம் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் மனிதர்களின் திறமைகளைவிட நம்மை விட்டு தூரத்தில் இருப்பவர்களின் திறமைகளைத்தான் நம்மால் வியந்து ரசிக்க முடிகிறது என்பது போன்று பல இடங்கள் ரசித்தேன் சகோ. இறைவனின் செயல்களுக்கு தந்த விளக்கங்கள் அருமை சகோ. உண்மை தான் அவர் மிக பெரிய கணக்கு மாஸ்டர், அவரின் கணக்குகள் ஒருபோதும் தவறுவதில்லை. விதைத்ததை அறுக்க தயாராக இருக்க வேண்டும்.




இந்த தலைமுறைகள் தவற விட்ட வாழ்த்து அட்டைகள், ஒளியும் – ஒலியும், பட்டாசு குவியல் போட்டிகள், என 80 – 90 காலங்களின் வசந்தங்களை பட்டியல் இட்ட இடம் சூப்பர் சகோ. அதேநேரம் இப்போதைய பிரச்சனையையும் சொன்ன விதம், நமக்கு தான் அவள் குழந்தை, சுத்தி இருக்கிறவன் அப்படி நினைப்பது இல்லை என எச்சரித்த விதம் அருமை.



இன்னும் இன்னும் சொல்ல வேண்டும் போல் உள்ளது சகோ. இது ரிவ்யூ பார்த்து படிக்கும் நாவல் இல்லை. நாவல் படித்து விட்டு ரிவ்யூ எழுதி அடுத்தவரையும் படிக்க சொல்லும் நாவல் சகோ.



கடைசி பதிவுகள் படிக்கும் போது கண்ணீர் வந்து கொண்டே இருந்தது சகோ. அது என் மனைவி கண்ணில் பட்டு கேலியாகியது. அதேநேரம் ஒரு சார்வே முடிவு என்ன சொல்கிறது என்றால், சீரியல், நாவல் போன்றவைகளை படித்ததும், பார்த்ததும் கண்ணீர் வருபவர்களை மனதைரியசாலிகள் என்று கூறுகிறது. இதை சொல்லி தப்பிக்க வேண்டியுள்ளது. பார்த்துக்கொள்ளுங்கள், நீங்கள் அப்படி எழுதி, எங்களை இப்படி காரணம் சொல்லும் படி செய்கிறீர்கள்.



வருடத்துக்கு ஒன்று இப்படி செய்கிறீர்கள் சென்ற வருடம் விவேக், இப்போ முகிலன். அதற்காக நீங்கள் நிறுத்திவிடாதீர்கள் . எப்போதும் போல் வசிய எழுத்தில் வசியப்படுத்துங்கள் என்று வாழ்த்தும் வாசகசகோதரன்.
அய்யா
நீண்ண்ட கருத்து பரிமாறல்.
Love it.
எப்படி கருத்தோட்டம் தடைபடாமல் எமுத்துருவுக்கு கொணர்திர்களோ.
நண்றி
அண்புடன்
 




Sakthiabirami

புதிய முகம்
Joined
Apr 30, 2018
Messages
14
Reaction score
9
Location
Salem
Mam congratulations for winning in thedal event......... Very interesting theme...... Traveling between Past and present....... Keep rocking....... All the best:):):)
 




Jeri aji

நாட்டாமை
Joined
Apr 30, 2018
Messages
33
Reaction score
69
Location
Tamilnadu
Superb story:love:....Neraya episodes padikum pothu kanneer varratha ctrl panna mudila:cry:Kannan Mathavan frdship, Mugilan Varun frdship romba nalla irunthu ipdium frds irupangalanu ninaikka vaikkuthu...Ella characters um manasila nikranga...superb(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top