• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

RESULT FOR SHORT STORIES MY DEAR SWEETTIEES

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
முதலில் இந்த அரிய அருமையான
நடுவர்-ங்கிற பதவியை, வாய்ப்பை
இரண்டாவது தடவையாக எனக்குத்
தந்த சஷி முரளி டியர் @ பிரியங்கா
முரளி டியருக்கும் இந்த சைட்டின்
இனியத் தோழர் தோழிகளுக்கும்
என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
கலந்த வணக்கங்கள்

1. ஹுஸ்னா டியரின் "அம்மா"

நிழலின் அருமை வெயிலில்
தெரிவது போல தோழியின்
தந்தையின் இறப்பு பரிக்ஷயாவுக்கு
நல்லதொரு படிப்பினையைக்
கொடுத்து தனி ஒரு மனுஷியாக
வீட்டுவேலை செய்து பரிக்ஷயாவை
வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்த
அந்த ஏழை விதவைத்தாயின்
மீது பாசம் காட்டணும்=ங்கிற
ஞானோதயம் பரிக்கு வருகிறதே

2. ஜெயலட்சுமிகோமதி டியரின் "நடிகை"

நடிகைகளின் வாழ்க்கை எப்பவுமே
விளக்கில் விழுந்த விட்டில்
பூச்சியின் நிலைமைதான்
நடிகையென்பவள் ஒரு
பாவப்பட்ட பிறவி
ஆனாலும் அவளுக்கும் பாசம்,
நேசம் உண்டு-ங்கிறதை
தன்னுடைய காதலனை
தங்கைக்கு மணமுடித்து
அருமையாக நிரூபிக்கிறாள்,
இந்த நடிகை

3. தனுஜா செந்தில்குமார் டியரின் "கடலாழி பெண்ணாழி"

கடலை விட ஒரு பெண் மனசு
ரொம்பவும் ஆழமுன்னும்,
கடல் எப்படி தன்னோட
ஆழத்தில் பலவித அரிய
பொருட்களை வைத்துள்ளதோ
அதே போல ஒவ்வொரு
பெண்ணும், தனக்குள்ளேயே
மகள், மனைவி, சகோதரி,
தாய்-ன்னு பலவிதமான
பரிணாமங்களாய்
மிளிர்கிறாள்-ன்னும்
ஒவ்வொரு நிலையிலும்
பெண் என்பவள் எப்பொழுதுமே
அன்பை மட்டுமே மற்றவரிடம்
கொட்டுகிறாள்-ன்னும் அழகாக
சொல்லியிருக்காங்க, தனுஜா டியர்

இந்த பெண் மனசின் ஆழத்தை
நம்மைப் படைத்த பிரம்மனுக்கே
அறிய முடியலைங்கறப்போ
கொஞ்சமில்லை, நிறையவே
கர்வமாக இருக்குப்பா
''உச்சிதனை முகிர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி''-ங்கிற
பாரதியின் பாடல்தான் என்னோட
நினைவுக்கு வருதுப்பா

4. தனுஜா செந்தில்குமார் டியரின் "பழமையே பெருமை"

ஓல்டு ஈஸ் கோல்டு-ன்னு
பெரியவா சொல்லுவா
எப்பவுமே பழசுக்கு இருக்கிற
மவுசும் மதிப்பும் புதுசுக்கு
வர கொஞ்ச நாளாகும்
சிவகாளையின் கம்பீரம்
வெகு அருமை
உண்மைதான்
அன்றைய ஜல்லிக்கட்டு
விளையாட்டில் வீரம், நேர்மை
கண்ணியம் இதெல்லாம்
இருந்தது
ஆனால் இப்போ………………?

5. சந்தியா ஸ்ரீ டியரின் "பைத்தியம்"

செந்திலுக்கு இருக்கும் பாசமும்,
மனித நேயமும் சிவமணிக்கு
ஏன் இல்லாமல் போனது?
பைத்தியம்-ன்னு சொல்லப்பட்ட
பாட்டி, யார் பைத்தியமுன்னு
தெளிவாக சொல்லிட்டாங்க

ஆம். பத்து மாதம் தன்னை
சுமந்து பெற்ற தாய்க்கு, ஒரு
வேளை சோறு போடாமல்
தவிக்க விடும் ஒவ்வொரு
பிள்ளையும் இந்த உலகில்
பைத்தியம்-தான்ப்பா

6. சுவிதா டியரின் "விடிவெள்ளி"

இன்றைய காலகட்டத்தில் ஏழை
மற்றும் நடுத்தர வர்க்க
மனிதர்களுக்கு மருத்துவப்
படிப்பு-ங்கிற எட்டாக்கனியாகி
விட்டதே
அரசு அளவில் நடக்கும் இந்த
அநீதிகளுக்கு யார்தான்
முடிவு கட்டுவார்களோ?
ஸ்டேட் போர்ட்டில் படித்தவனுக்கு
நீட் தேர்வில் ஏன் ஜெயிக்க
முடிவதில்லை?
அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு
திறமை இல்லை-ன்னு யார்
சொன்னது?
இன்னொரு அனிதாவாக
உருவாகாமல் ஊரார் ஹெல்ப்
செய்ய, ஸ்ரீலக்ஷ்மிக்கு விரும்பிய
கல்வி கிடைத்தது-ன்னு
நல்ல எண்ணங்களோடு
கதையை பாசிட்டிவாக
முடித்திருக்கிறார், சுவிதா டியர்

7. ஈஸ்வரி காசிராஜன் டியரின் "மனைவி"

பார்த்துக்கொண்டிருந்த வேலை
போய் வேறு வேலை தேடும்
குமரன் வேலை கிடைக்காத
விரக்தியில் மனைவியைத்
திட்டுகிறான்
ஆனால் குணவதியான
குமரனின் மனைவி பொறுமை
காக்கிறாள்
பணம், வேலையில்லாத
நண்பனின் மனைவி, அவனை
விட்டுப் போன நிலையில்
குமரனுக்கு வரும் பயம்,
நியாயமே
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த
வரம்-ங்கிறது, உண்மைதான்
ஆண்கள் இதை உணர்ந்து
மனைவியை மதித்தால்
அவங்க வாழ்வு சிறக்குமுன்னு
ஈஸ்வரி டியர் சொல்றாங்க

8. செல்வ சங்கரி டியரின் "வாழ்க்கை பக்கங்கள்"

காதல் தோல்வியால் இறந்த
தோழிக்கு வருந்தும் திவ்யா
தளர்வுற்ற மகளின் மனதை
தற்செயலாக சந்தித்த தன்
முன்னாள் காதலியை வைத்தே
சாதியினால் பிளவுபட்ட
தன்னோட காதல் தோல்வியை
வைத்தே மாற்றும், அப்பா ராம்
வாழ்க்கையின் நிதர்சனத்தை
புரிய வைக்கும் நல்லதொரு
அப்பா, ராம்
மிகவும் அருமையான
சிறுகதை
‘’நம் வாழ்க்கை புத்தகத்தில்
காதல் ஒரு பக்கம்தான்’’
‘’வாழ்க்கையில் காதல்-ங்கிற
பக்கம் சரியில்லாமல்
போனாலும், திருமணம்-ங்கிற
அழகான பக்கம் காத்திருக்கும்’’
ஆஹா, என்ன அருமையான,
அழகான வரிகள்?
ஒரு தேர்ந்த எழுத்தாளரைப்
போலவே எழுதியிருக்கிறீர்கள்,
செல்வ சங்கரி டியர்

9. ஈஸ்வரி காசிராஜன் டியரின் "வாழ்க்கை"

கணவன், மனைவி இருவரும்
படித்து வேலைக்கு செல்வதால்
நீ பெரிதா, நான் பெரிதா-ங்கிற
ஈகோ வருது
அந்த ஈகோ, அவங்களோட
பிள்ளைகளையும்தானேப்பா
பாதிக்குது
வெளி நபர்களிடம் விட்டுக்
கொடுத்துப் போகும் பொழுது
தன்னையே நம்பி வந்த
மனைவியிடமும் கொஞ்சம்
விட்டுக் கொடுத்து வாழணுமுன்னு
அழகானதொரு வாழ்க்கையைப்
பற்றி அப்பாவின் மூலமாக
மகனுக்கு நன்றாகவே
விளக்கிச் சொல்லியிருக்கிறார்,
ஈஸ்வரி காசிராஜன் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
10. மோனிஷா டியரின் "என் கடவுள்"

நம்முடைய கடவுள்களின் சிலைகள்
வெளிநாட்டுக்கு செல்வதைப்
பார்த்து வெகு நாட்களாக
என் மனதில் இருந்த மனசு
உறுத்தலுக்கு இந்த சிறுகதை
படித்ததும் கொஞ்சம் ஆறுதலாக
இருந்தது, மோனிஷா டியர்

அன்னை உமாதேவிக்கே இந்த
நிலைமை-ன்னா, நம்மைப் போல
சாதாரண ஆளுங்க என்னதான்
செய்ய முடியும்?
ஆனால், இதே சாமான்யன்
நினைத்தால் எதுவும் செய்யலாம்
செய்ய முடியும்
எதுவும் மாறலாம்
எதையும் மாற்றலாம்
ஏனென்றால் மாற்றம்
ஒன்றுதானே மாற்றமில்லாதது
உமாதேவி அம்மையின்
காத்திருப்பு வீண் போகவில்லை
‘’கடவுளுக்காக மனிதன்
காத்திருந்த காலம் போய்
மனிதனுக்காக கடவுள்
காத்திருக்க"
‘’எங்கள் கடவுள்களை கடத்திச்
சென்று உங்கள் நாட்டு
அருங்காட்சியகத்தில்
வைப்பதற்கு பேர் ரசனையல்ல,
களவாணித்தனம்’’
ஆஹா, என்ன உணர்வுப்பூர்வமான
வார்த்தைகள்?
என்னுடைய மனதிலிருந்ததை
அப்படியே சொல்லி விட்டீர்கள்,
மோனிஷா டியர்

11. கார்த்திகா மனோகரன் டியரின் "உயிர்"

போரில் இறந்த ராணுவ வீரன்
கௌதம்
இளம் கணவனைப் பிரிந்தாலும்
தன்னுடைய மகனை, கணவனின்
விருப்பப்படி நாட்டுக்கு சேவை
செய்ய அனுப்பிட, தாய்நாட்டுக்கு
நல்லதொரு மகனை ஊனமின்றி
அர்ப்பணிக்க எண்ணும் இளம்
விதவைத் தாய் ப்ரியாவுக்கு
என்னுடைய ராயல் சல்யூட்

அந்தக் காலத்தில் கணவனையும்
தந்தையையும் போரில் இழந்த
பெண்ணொருத்தி, போர் முனைக்கு
வீட்டுக்கு ஒரு காவல் ஆள் கேட்ட
அரசனிடம், விளையாடும் பருவத்தில்
இருக்கும் தன் ஒரே மகனையும்
இதோ என்னுடைய மகனை
அழைத்து செல்லுங்கள்=ன்னு
பால் மணம் மாறாத பாலகன்
சின்னஞ்சிறு பிள்ளையையும்
அனுப்பி வைத்தாளாம்
அந்த வழியில் வந்த பெண்களின்
வீர உதிரம்தானே, இந்த வீரமங்கை
ப்ரியாவின் உடலிலும் ஓடுகிறது

கடுமையான வெயில், மழை
குளிர், சூறாவளி இவற்றைப்
பொருட்படுத்தாமல் நம்முடைய
தாய்த் திருநாட்டைக் காக்கும்
உன்னதமான மாபெரும்
பணியில் ஈடுபடும் ராணுவ
வீரர்களுக்கு என்னுடைய
வீர வணக்கங்கள்,
கார்த்திகா மனோகரன் டியர்

12. வநிஷா டியரின் "சக்களத்தி"

ஹா... ஹா... ஹா........
ஒரு செல் போனை சக்களத்தியாக்கி
வழக்கம் போல வநிஷா டியர்
நமக்கு செம பல்ப்பு
கொடுத்துட்டாங்கப்பா
ஆனாலும் மனைவியை விட
அந்த பாழாப்போன
செல்போன்கள் முக்கியமா,
கணவன்மார்களே?

13. வித்யா நாராயணன் டியரின் "பொட்டில் அடித்தது"

எப்பவுமே ஒரு பொருள் அருகில்
இல்லாத பொழுது-தான்
அதனோட அருமை தெரியுமாம்
ராகவனின் தாயின் பெருமை,
அடுத்தவர் விக்ரமுக்கு தெரியும்
பொழுது ராகவனுக்கு மட்டும்
ஏன் தன்னோட அம்மாவின்
அருமை புரியலை?
இப்போ ராகவன் விஷ்ராந்திக்கு
போவது, அன்னையை அழைத்து
வருவதற்கா?
இல்லை..........?

14, Jaa Sha டியரின் "தொல்லையான பேசி"

ஹா... ஹா... ஹா.........
உயிரோடிருப்பவரை இறந்து
விட்டதாக சேதி சொல்லி
தனலட்சுமியை அலைக்கழித்த
தொலைபேசி, உண்மையில்
தொல்லைப்பேசி-தான்ப்பா

15. சௌந்தர்யா கிரிஷ் டியரின் "உழைப்பாளி"

எல்லோருக்கும் ஒரு கதை
இருப்பது போல கோயில்
மணிக்கும் ஒரு கதையை
சௌந்தர்யா டியர் நமக்கு
கொடுத்துட்டாங்க
கோவில் மணியின் புலம்பலும்
நல்லாத்தானிருக்கு-ப்பா
யப்பா, கோவிலுக்கு வந்து
சாமி கும்பிட்டு மணியை
அடிக்கிறவங்க கொஞ்சம்
பார்த்து அடிங்கப்பா
நம்ம ‘’மணி’’க்கும் வலிக்குமில்லே?

16. அபர்ணா டியரின் "சீமந்தம்"

பிள்ளை வரம் கிடைக்காமல்
பலரின் ஏச்சு பேச்சுக்களுக்கும்
ஆளாக நேரும் கொடுமை,
எந்தப் பெண்ணின் வாழ்விலும்
நடக்கக் கூடாது-ங்கிறதே
என்னோட பிரார்த்தனை
மழலைச் செல்வம் கிடைக்கப்
பெறாமல் நொந்து மனதளவில்
ரொம்பவே பாதிக்கப்பட்ட
ஜோதிக்கு குழந்தை வடிவில்
அம்பாளே வந்து அருள்
பாலிக்கிறாளோ?
அந்த பாட்டி வடிவில் வந்து
வளையல் கொடுத்து
ஜோதிக்கு அம்மனே சீமந்தம்
செய்தாளோ?
அருமையான சிறுகதை,
அபர்ணா டியர்

17. கனிஸ்கா வர்ணா டியரின் "கல்வி"

எதுவுமே இல்லாதபொழுது-தான்
அதனோட அருமை தெரிய
வருமோ?
தமிழ்நாட்டில் கல்வியின்
இன்றைய அவல நிலையை
நன்றாகவே தோலுரித்து
காட்டியிருக்கிறார், கனிஸ்கா
வர்ணா டியர்
மற்றவர்களைப் போல தன்னுடைய
மகனும் நன்கு படித்து எஞ்சினியர்
ஆக வேண்டும்
நிறைய சம்பாதிக்க வேண்டும்-ங்கிற
பழனியின் ஆசை நியாயமான
ஒன்றுதான்
ஆனால், அதற்காக எவனோ
ஒரு கூமுட்டை ப்ரெண்ட்
சொன்னான்-னு படிப்பு
படிப்பு-ன்னு கண்ணன்
பையனை இப்படி கசக்கி
பிழிஞ்சிருக்கக் கூடாது
இப்போ முதலுக்கே மோசமாகி
கண்ணன் இறந்துட்டானே?

ஏதோ ஒரு விஜயகாந்த் சினிமாவில்
காட்டுவது போல, கலெக்டர்
முதலான பெரிய அதிகாரிகளும்
அரசியல்வாதிகளும் தன்னுடைய
மக்களை படிப்பதற்கு அரசுப்
பள்ளிகளில் சேர்க்க முன்வர
வேண்டும்
அப்பொழுதுதான் அரசுப்
பள்ளிகளில் கல்வித்தரம்
உயரும்
தனியார் பள்ளிகளின்
கொட்டமும் அடங்கும்
நடக்குமா..…..:?

18. பிரேமலதா டியரின் "கானல் நீர்"

ஹா... ஹா... ஹா...........
செம ஜாலியான சிறுகதை
இந்த சைட்டில் வலம்வரும்
க்ரீன் சேண்டுகளான லட்டு,
பட்டு, ஜெயா, பாகி என்று
எல்லோரையும் வைச்சு வைச்சு
நல்லா செய்திருக்காங்க
அது மட்டுமா?
ஒரு கதையில கூட ஒரு
ஹீரோவைக் கூட விடலை
எல்லோரையும் தன்னோட
சிறுகதையில் இழுத்துப்
பிடிச்சுப் போட்டுட்டாங்க
போதாக்குறைக்கு அந்த
மனநல டாக்டர் ஷாலினி
அவங்களையும் இழுத்துட்டாங்க,
பிரேமலதா டியர்

ஹா... ஹா... ஹா..........
புலிகளெல்லாம் எலிகளாச்சு
பயந்து, பயந்து பம்மிய
பூனைகளெல்லாம்
வேங்கைகளாச்சு
ஆண்களை ரொம்ப நல்லாவே
ஓட்டியிருக்கிறார், நமது
அன்பிற்குரிய பிரேமலதா டியர்
இந்த சிறுகதையைப் படித்து
என்னால் சிரிப்பை அடக்கவே
முடியலைப்பா

19. ஆர்த்தி டியரின் "மூதாட்டி"

மருந்துச் சீட்டுடன் பணமும்
தொலைந்தது தெரியாமல்
பஸ்ஸில் ஏறிய ஒரு மூதாட்டியைப்
பற்றிய சிறுகதை
நல்லவேளையாக பயணச்சீட்டு
வாங்குமுன் பாட்டி இறங்க
வேண்டிய இடமும் வந்துவிட்டது
செக்கிங்குக்கும் ஆள் வரலை
அப்பாடா, பாட்டியும் தப்பித்தார்
கண்டக்டரும் தப்பித்து விட்டார்
நாங்களும் டென்ஷனிலிருந்து
தப்பித்தோம்

20. HANA RAVIN ஹனா ராவின் டியரின் "காதல்"
ஒரு ஆணோ, பெண்ணோ?
ஒரே பாலரிடம் எப்படி காதல்
வரும்?
ஒரு ஆண், பெண்ணைத்தான்
கல்யாணம் செய்துக்க முடியும்
ஒரு பெண், ஆணைத்தான் கல்யாணம்
செய்துக்க முடியும்
செய்யணும்=ங்கிற பழைய
இயற்கையான கலாச்சாரத்தில்
மட்டுமே எனக்கு நம்பிக்கை
இருக்கு
இயற்கையை மாற்ற முடியுமா?
இந்த காலகட்டத்தில் நடக்கும்
இந்த மாதிரியான கண்றாவிகள்
எனக்கு பிடிப்பதில்லை
ஸாரி, நான் கொஞ்சம் பழமையான
இயற்கையை மட்டுமே விரும்பும்
ஆளு, HANA RAVIN டியர்

ஒரு குழந்தைக்கு பேச்சு
வரும்பொழுது அம்மாவை
அம்மா-ன்னு கூப்பிட்டுவிட்டு
வயதான பின்னர் அதை மாற்றி
அம்மாவை மாமி or அத்தை
என்று அழைப்பதில்லை
எப்பொழுதுமே வாயால்-தான்
சாப்பிடுகிறோம்
அதை ஏன் மாற்றணுமுன்னு
நினைக்கிறீர்கள், என் இனியத்
தோழிகளே?

21. Jaa Sha டியரின் "ஒரு குட்டி மொக்க கதை"

இந்த சிறுகதைக்கு பேர்
இல்லையாப்பா?
ஹா... ஹா... ஹா............
இதுவும் ஒரு ஜாலியான,
தமாஷான சிறுகதை
தான் பார்த்த ஹிந்தி சினிமாவில்
வருவது போல வெள்ளைக்கார
போலீஸிடமிருந்து தப்பிக்க,
பர்ஸை மறந்துவிட்டு வந்து
மனைவியுடன் ரொமான்ஸ் பண்ண
நினைத்த குமாருக்கு செம பலுப்பு
(சுமார் மூஞ்சி குமாராப்பா?)
பொஞ்சாதி குமுதா, பர்ஸை
மறக்காம கொண்டு வந்து
மச்சானுக்கு வைச்சுட்டாயா,
செம ஆப்பு

22. Minni @ மிரு டியரின் "கன்னத்தில் முத்தமிட்டாள்"

அருமையான சிறுகதை
பெற்றால்தான் பிள்ளையா?
குழந்தைப்பேறு கிடைக்கப்
பெறாதவர்கள் அதனால்
துவண்டு போகாமல் அனாதை
ஆசிரமத்திலிருந்து ஒரு
குழந்தையை தத்தெடுத்து
வளர்க்க ஆரம்பிக்கும்
தேவேந்திரனின் எண்ணமும்,
முடிவும், மிகவும் அருமை
ஆராதனாவுக்கு அருமையான
பரிசு, அவளுடைய தத்துக்குழந்தை
ஊஹூம், இனி அவளோட
சொந்தக் குழந்தை
பேசும் தெய்வம் கொடுத்த
பரிசு முத்தம்
ஆராவுக்கு குழந்தை,
''கன்னத்தில் முத்தமிட்டாள்''

23. சஞ்சனாரிஷி டியரின் "இரயில் (சிந்தனையின்) பயணம்"

உண்மையிலேயே இந்த சிறுகதை,
ஒரு நல்ல சிந்தனையின்
பயணம்தான், சஞ்சனாரிஷி டியர்
தங்களுடைய குழந்தைக்கு
பிடிவாதம் ஜாஸ்தி-ங்கிறதை
பிடிவாதம்-ங்கிற கெட்ட பழக்கத்தை
என்னமோ பாரீனில் படித்து
பட்டம் வாங்கின ரேஞ்சுக்கு
கொண்டாடுகிறார்கள்
இது ரொம்பவே தப்பு
அடுத்தவருக்கு உதவி
செய்யணும்-ங்கிற,
அடுத்த மனிதரையும்
மதிக்கணும்-ங்கிற நல்ல நல்ல
பண்புகளை, ஈவு, இரக்கம்,
பிறருக்கு உதவுதல் போன்ற
நல்ல நல்ல பழக்கங்களை
குழந்தைகளுக்கு சொல்லித்
தந்து ''நல்ல பேரை வாங்க
வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும்
தோட்டத்திலே நாளை
வளரும் முல்லைகளே....."-ன்னு
புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்
பாடின மாதிரி, குழந்தைகளை
நல்ல பிள்ளைகளாக வளர்க்க
வேண்டும்-ங்கிற நல்ல மெசேஜ்
கொடுத்த இளம் எழுத்தாளர்
சஞ்சனாரிஷி-க்கு என்னுடைய
மனமார்ந்த பாராட்டுக்கள்

24. ஆர்த்தி டியரின் "ஊடகங்கள்"

தொலைக்காட்சி ஆரம்பித்த
காலத்தில் இருந்த நிலையையும்
தற்போதைய நிலையையும்
ரொம்பவே அழகாக ஆர்த்தி டியர்
சொல்லியிருக்காங்க
உண்மைதான்
இப்பொழுதெல்லாம் தனி ஒரு
நபராகக் கூட டி வி பார்க்க
முடிவதில்லை
ஒவ்வொரு புரோக்ராமும்
அவ்வளவு அபத்தமாக,
கண்றாவியாக இருக்கு
இதிலே எங்கே குடும்பத்தோடு
குழந்தைகளோடு உட்கார்ந்து
எந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது?
என்பது கொஞ்சமில்லை,
ரொம்பவே கஷ்டமான
விஷயம்தான்ப்பா

எல்லோருமே ரொம்பவும்
நல்லா நல்லா எழுதியிருக்காங்க
யாருமே முதல் தடவை எழுதற
மாதிரி எனக்குத் தோணலை
தேர்ந்த எழுத்தாளரைப் போல
அவ்வளவு அருமையாக
ஒவ்வொரு சிறுகதையையும்
எழுதியிருக்காங்க

நம் நாட்டின் கல்வியின் தரத்தைப்
பற்றி, மாணவர்களை படிப்பு
படிப்பு-ன்னு பிழிவதைப் பற்றி
முதியவர்களை மதிக்காததைப்
பற்றி, தாய் நாட்டுக்காக தியாகம்
செய்யும் ராணுவ வீரர்களைப்
பற்றி, நிறைய சமுதாய
சிந்தனைகளை மெசேஜ்ஜாக
கொடுத்திருக்காங்க

மோனிஷா டியர் and கிருஷ்ணப்ரியா
நாராயண் டியர் இரண்டு பேருமே
அவங்களோட சிறுகதையை
போட்டிக்கு எடுத்துக்க
வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க
ஆனால் நம் நாட்டிலிருந்து
கொள்ளையடித்து கொண்டு
போய், அவங்க நாட்டிலே
அலங்காரமாக வைத்திருக்கும்
சாமி சிலைகளைப் பற்றியும்,
உடல்நிலை சரியில்லாத
வாயில்லாத ஜீவனுக்கும்
கருணை காட்டும் மனித
நேயத்திற்கும், நான்
தலைவணங்குகிறேன்

இருந்தாலும் எழுத்து நடையில்
சிறந்ததாக புதிய இளம்
எழுத்தாளர் செல்வ சங்கரி
டியரின் ''வாழ்க்கைப் பக்கங்கள்''
சிறுகதையையும், சிறந்த
கதையாக புதிய இளம்
எழுத்தாளர் சஞ்சனாரிஷி
டியரின் ''இரயில் (சிந்தனையின்)
பயணம்'' ஆகிய இரண்டு
சிறுகதைகளையும் சிறந்ததாக
நான் தேர்ந்தெடுக்கிறேன்-ப்பா

என்னோட தீர்ப்பு தப்பாயிருந்தால்,
குணமா, பதவிசா, பதனமா
பக்கத்துல வந்து நாட்டாமை
தீர்ப்பை மாத்துங்க-ன்னு
சொல்லணும், ஓகே?
பேச்சு பேச்சாகத்தான்
இருக்கணும், ஓகே?
கட்டை, கத்தி, கப்படா-லாம்
தூக்கிட்டு வந்து, இந்த
சின்னப் புள்ளையை
பயமுறுத்தப்படாது, ஓகே?

அநேக கோடி நன்றிகளுடன்
வணக்கம், நமஸ்காரம்,
வந்தனம், நமோஸ்கார்
என்னுடைய இனியத் தோழிகளே
 




Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
பானுமா...

சிறந்த முடிவு... மாற்று கருத்துக்கு இடம் இல்லா விளக்கம்...

Again அந்த கதையை படிக்க முடிந்தது... உங்கள்.. Analysis review மூலம்... நன்றி மா...

@Selva sankari @Sanjanarishi congratulations winners :love::love:
 




Last edited:

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
ஹா..ஹா பானுமா ஸ்டைல் முடிவு.....சூப்பர் பானுமா....சொல்லியவிதம் அருமை....

செல்வாக்கா, சஞ்சனா ரிஷி, வாழ்த்துக்கள்.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
என்னுடைய கதையை வாசித்து நல்லாயிருக்குன்னு நீங்க சொன்னது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு பானும்மா, மிகவும் நன்றி. சஞ்சனாரிஷிக்கும் எனது வாழ்த்துக்கள்.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஹா..ஹா பானுமா ஸ்டைல் முடிவு.....சூப்பர் பானுமா....சொல்லியவிதம் அருமை....

செல்வாக்கா, சஞ்சனா ரிஷி, வாழ்த்துக்கள்.
நன்றி கார்த்திகா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top