• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

sakthipuram-12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஏழுபேரும் தூங்கி எழுந்த உடன் வீட்டை விட்டு வெளியே வந்து நின்றார்கள்.

சக்தி ஆறு வழக்கம் போல் சீறி பாய்ந்து ஒடிக் கொண்டிருக்க அதை பார்த்த குட்டீஸ் முகம் எல்லாம் ஆனந்தம்.

"மிஸ்... இந்த ஆற்றில் தண்ணீர் எவ்வளவு வேகமாக போகுது பாருங்க. இந்த தண்ணீரில் போட்டில் போனால் சூப்பராக இருக்கும்" என்றாள் ஹரிணி.

"மிஸ்... அங்கே பாருங்க... எவ்வளவு கலர் கலராக மீன்கள் போகுது. மீன்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது" என்றாள் ஜெயலட்சுமி.

"மிஸ்... இந்த ஆற்றில் முதலில் குளிக்கனும் மிஸ். இந்த மாதிரி அழகான ஆற்றில் குளிக்க சானஸ் கிடைக்கிறப்ப மிஸ் செய்ய கூடாது." என்று காவ்யா மற்றவர்கள் ஆமோதித்தார்கள்.

"எங்களுக்கு அதே ஐடியாதான். வாங்க கொஞ்சம் மிதமாக தண்ணீர் ஒடுகிற இடத்தில் சென்று குளிப்போம்" என்று திவ்யா சொல்ல சந்தியா அதை ஆமோதித்தாள்.

ஏழுபேரும் எங்கே ஆறு சற்று மிதமாக ஒடுகிறது என்று தேடி நடக்க ஆரம்பித்தார்கள்.

சிறிது நேர நடைக்குபின் ஒரு இடத்தில் ஆற்றின் வேகம் குறைந்து இருப்பதை கண்டு அங்கே ஏழு பேரும் ஆற்றில் குளிக்க இறங்கினார்கள்.

"மிஸ்... தண்ணீர் ஜில்லுன்னு செம சூப்பராக இருக்கிறது. இங்கே இப்படியே குளித்து கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது" என்றாள் பிரதீபா.

"மிஸ்... இந்த மீன்கள் எல்லாம் என்னை சுற்றி சுற்றி வருகிறது. அது என்னை கிஸ் பன்னுகிறது" என்றாள் சந்தோஷி.

தங்களை சுற்றி வரும் மீன்கள் நடுவில் ஆனந்தமாய் குளித்து விளையாடினார்கள்.

சக்தி ஆற்றில் நீர் நிலையில் மாற்றம் ஏற்பட தீடீரென்று வெள்ளம் பெருக்கெடுக்க ஏழு பேரும் நிலை குலைந்தார்கள்.

என்ன செய்வதென்று புரியாமல் குட்டீஸ்கள் காவ்யா,பிரதீபா, சந்தோஷி சந்தியாவை பிடித்து கொண்டு விட்டார்கள்.

ஹரிணி, ஜெயலட்சுமி உடனே திவ்யாவை பிடித்து கொள்ள அவர்களை தாங்கியபடி இரண்டு பேரும் தத்தளித்த வேலை நாணல் புற்கள் காவ்யாவின் கண்ணில் பட்டது.

"மிஸ்... அங்கே பாருங்க... நாணல் அதை பிடித்தால் நாம் தப்பித்து விடலாம்" என்று காவ்யா சொல்ல அதுவே சரி என்று அவர்களுடன் நீந்தி சென்று நாணலை பிடித்து இருவரும் பிடித்து கொண்டு விட்டார்கள்.

குட்டிஸ்கள் ஆளுக்கொரு நாணல் புல்லை உடனே பிடித்து கொண்டு விட்டார்கள்.

இரு மிஸ்களுடன் மற்றவர்கள் கரை ஏற ஹரிணி, ஜெயலட்சுமி மட்டும் அதை பிடித்தபடி கரை ஏறாமல் இருந்தார்கள்.

"மிஸ்... ஹரிணியும், ஜெய்யும் என்ன பன்றாங்க பாருங்க" என்றாள் காவியா.

சந்தியா பார்க்க அவர்கள் கரை ஏறாமல் பிடித்து கொண்டு இருப்பதை பார்த்து,
"ஹரிணி! ஜெய்! என்ன செய்து கொண்டு இருக்கீங்க" என்றாள்.

"மிஸ்... இப்படி பிடித்தபடி தண்ணியில் ரொம்ப ஜாலியாக இருக்கிறது. நீங்களும் வாங்க" என்று சிரித்தபடி இருவரும் கூறினார்கள்.

"உங்களை" என்றபடி சந்தியா அவர்களை செல்ல கோபத்துடன் முறைக்க இருவரும் உடனே சமர்த்தாக கரை ஏறிவிட்டார்கள்.

"இப்பொழுதுதான் நீங்கள் என் தங்கம்ஸ்" என்று சந்தியா சிரித்தபடி கூறினாள்.

"ஆபத்து சமயத்தில் இப்படிதான் சமயோசிதமாக காவியா மாதிரி யோசிக்க வேண்டும்" என்று திவ்யா பாராட்டினாள்.

"இவளுக்கு மட்டும் எப்படித்தான் நாணல் கண்ணில் படுகிறது என்று தெரியவில்லை. அதை வைத்து எல்லோரிடமும் நல்ல பேரு வாங்கி விடுகிறாள்" என்று ஹரிணி சொல்ல "ஆமாப்பா" என்றாள் ஜெயலட்சுமி.

சக்தி ஆற்றில் சிறிது நேரத்தில்
அமைதி ஏற்பட அனைவரும் உடனே ஆற்றில் குளிக்க இறங்கினார்கள்

ஏழு பேரையும் ஏதோ ஒரு சக்தி உள்ளே இழுக்க நீருக்கு அடியில் செல்ல தொடங்கினார்கள்.

சில நொடிகளில் ஆற்றில் நீரின் அடியில் தரையை தொட்டு நின்றார்கள்.

அங்கே நிறைய அழகான வண்ண வண்ண மீன்கள் நீந்தி கொண்டிருக்க அதை பார்த்து மிகவும் ஆச்சரியமாக பார்த்து ரசித்தார்கள்.

"மிஸ்... நாம் தண்ணிக்கடியில் வந்துவிட்டோம். இந்த இடம் செமையாக இருக்கிறது" என்றாள் ஜெயலட்சுமி.

"நாம் எப்படி இங்கே வந்தோம். நம்மை இழுத்த சக்தி எது?" என்றாள் பிரதீபா.

"எதுவென்றாலும் அந்த சக்தி வாழ்க! அது இழுக்கவில்லை என்றால் இவ்வளவு அழகான இடத்திற்கு நாம் வந்திருக்க முடியுமா" என்றாள் சந்தோஷி.

மீன்கள், பாசிகள், கூழாங்கற்கள், குடை காளான்கள், செடிகள் என்று அழகாக அந்த இடம் இருக்க அதை பார்த்தபடி அனைவரும் நடந்தார்கள்.

"எங்களை காப்பாற்றுங்கள்! எங்களை காப்பாற்ற யாராவது வாங்க!" என்ற பெண்களின் அபய குரல் அவர்களுக்கு கேட்க ஆரம்பித்தது.

"மிஸ்... யாரோ உதவி கேட்டு கத்தறாங்க. அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும்" என்றாள் ஹரிணி.

"மிஸ்... சத்தம் கூட நமக்கு எதிரில் இருந்த வருகிறது" என்றாள் ஜெயலட்சுமி.

ஏழுபேரும் சத்தம் எங்கே இருந்து வருகிறது என்று பாறைகளின் அருகில் நின்று கேட்க ஆரம்பித்தார்கள் Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"மிஸ்... இந்த பாறையில் வந்து காது வைத்து கேட்டால் குரல் தெளிவாக கேட்கிறது. இந்த பாறைக்கு பின்னால் நாம் போக வேண்டும்" என்று பாறையில் காது வைத்து கேட்டபடி கூறினாள் ஹரிணி.

சந்தியா பாறையில் காதை வைத்து கேட்டு உறுதி செய்த பின்னர் தன் மேஜிக் வாண்டை பயன்படுத்தி குரல்கள் வரும் இடத்திற்கு அனைவரையும் கொண்டு சென்றாள்.

அங்கே ஐந்து தேவதை போன்ற பெண்களை யாக குண்டத்திற்கு முன் மண்டியிட வைத்து இருந்தார்கள்.

ஐந்து அரக்கிகள் மிக பெரிய அரிவாளை ஏந்தியபடி நின்று கொண்டிருந்தார்கள்.

மிக பெரிய அரக்கி ஒருத்தி அவர்களுக்கு எதிரில் அமர்ந்து இருந்தார்கள்.

யாக குண்டத்தின் தீ வானை தொட்டு கொண்டு இருந்தது.

"மிஸ்... இந்த அரக்கிகள் அந்த நல்ல தேவதைகளை தாங்கள் சக்தி பெறுவதற்காக பலி கொடுக்க போகிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. அவர்களை நாம் உடனடியாக காப்பாற்ற வேண்டும்" என்று கூறினாள் பிரதீபா.

"ஆமாம் மிஸ்... நாம் அவர்களை சீக்கீரமாக காப்பாற்றி விட வேண்டும்" என்று குட்டீஸ்கள் கோரசாக கூறினார்கள்.

"சரி காப்பாற்றலாம் தங்கம்ஸ். முதலில் அவர்களுடன் சண்டை போட தயாராக வேண்டும். அவர்களை எதிர்க்க கைகளில் ஆயுதம், அவர்களுக்கு ஏற்ற மாதிரி உருவத்தில் மாறிவிட்டு நாம் சண்டைக்கு செல்வோம்" என்றாள் திவ்யா.

"திவ்யா மிஸ் சொல்வதுதான் சரி" என்று ஆமோதித்த சந்தியா தன் மேஜிக் வாண்ட் மூலம் ஏழு பேர் உருவங்களையும் அந்த அரக்கிகள் உருவத்திற்கு நிகராக மாற்றி விட்டாள்.

ஏழு பேருக்கும் பெரிய பெரிய கத்திகளை வரவழைத்தும் தந்து விட்டாள் சந்தியா.

குட்டிஸ் தங்கள் பெரிய உருவம் கண்டு முதலில் சிரித்து பின்னர் தங்களை பெரிய பலசாலிகளாக எண்ணி கொண்டார்கள்.

தங்கள் மிஸ்களுடன் ஐந்து குட்டிஸ்கள் தேவதைகள் இருக்குமிடம் நோக்கி சென்று அங்கே நின்றார்கள்.

"தங்கம்ஸ்... முதலில் இந்த அரக்கிகளையும், யாகம் நடத்தி கொண்டிருக்கும் ஆட்களையும் கொன்று விட்டு பின்னர் அந்த பெரிய அரக்கியை தாக்கலாம். நீங்கள் ஐந்து பேரும் முதலில் அதை செய்யுங்கள்" என்றாள் சந்தியா.

"சரிங்க மிஸ்" என்ற ஐந்து குட்டீஸ்களும் நேராக சென்று தங்கள் வாள்கள் மூலம் அந்த ஐந்து அரக்கிகள் தலையை வெட்டி வீழ்த்தினார்கள்.

யாக குண்டத்தில் அவர்கள் தலை சென்று வீழ்ந்து தீயில் பொசுங்கியது.

தீடிரென்று அரக்கிகள் தலை வெட்டபட்டு தீயில் வீழ்ந்தது பார்த்து தேவதைகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

Write your reply...
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Idhenna naanga ellarum periya balasaaligal aittome!!!!arakkigal kooda compete panni win pannitomla...idhan enga task ah ka??sooper sooper..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top