• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

sakthipuram-13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
பெரிய அரக்கியோ யாரோ அந்தியர்கள் தன் எல்லையில் வந்து தன் ஆட்களை வெட்டி கொன்றது கண்டு கோபமாகி விட்டாள்.

"யாராடா அது இந்தி ஜிம்பாலா எல்லைக்குள் புகுந்து அவள் ஆட்களை கொல்றது" என்று சத்தமாக கத்த ஆரம்பித்து விட்டாள் ஜிம்பாலா.

யாகம் நடத்தி கொண்டு இருந்த நபர்கள் எச்சரிக்கையாகி தாக்க தொடங்கும் முன்னர் அவர்கள் தலைகளும் மண்ணில் உருள ஆரம்பித்தன.

ஏழு பேரும் வெற்றி களிப்பில் சிரிக்க அந்த சிரிப்பொலி குகை முழுவதும் எதிரொலிக்க அரக்கி ஜிம்பாலாவின் கோபம் எல்லை கடந்து பதிலுக்கு அலற குகை அதிர்ந்து விட்டது.

அந்த அலறலில் அனைவரும் அதிர்ந்து நின்ற சமயம் அரக்கி ஜிம்பாலா தன் மந்திர சக்தியின் மூலம் அவர்கள் உருவங்களை தெரிய செய்து விட்டாள்.

"அற்ப மனித பதர்களா! என் யாகத்தை அழித்து என்னை திவ்ய சக்தி பெறாமல் செய்த உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்" என்று அவர்களை நோக்கி கூறினாள்.

"ஏய் ஜிம்பாலா! இந்தா வாங்கி கொள்" என்றபடி ஹரிணி தன் வாளால் தாக்க இடது தொடை பகுதியில் காயமாகி ரத்தம் வர ஆரம்பித்தது. ஜெயலட்சுமி வலது தொடை பகுதியில் தாக்கி விட்டாள்.

அரக்கி ஜிம்பாலா வலியால் துடிக்க காவியா, பிரதீபா வயிற்று பகுதியில் வாளை பாய்ச்ச சந்தோஷி மார்பில் தாக்கி விட்டாள்.

ஜிம்பாலா ஆயுதம் ஏந்தினால் நாம் காலி என்று உணர்ந்த சந்தியா, திவ்யா இருவரும் கைகளை வெட்டி வீழ்த்தி விட்டார்கள்.

அரக்கி ஜிம்பாலா ஆக்ரோஷமாகி வாயை திறக்க நெருப்பாக வர குட்டிஸ்கள் அந்த நெருப்பில் இருந்து தப்பிக்க விலகி ஆளுக்கு பக்கம் வீழ்ந்தார்கள்.

சந்தியாவும், திவ்யாவும் சற்றும் தாமதிக்காமல் கழுத்தில் வாளை பாய்ச்ச அரக்கியின் தலை மண்ணில் வீழ்ந்தது.

தேவதைகள் மாயகட்டிலிருந்து விடுபட்ட நேரம் ஜிம்பாலாவின் தலை, கைகள் உடலுடன் ஒட்டி கொள்ள அவள் அனைவரையும் பார்த்து கோரமாக பார்த்து சிரித்தபடி நெருப்பை கக்கினாள்.

சந்தியா, திவ்யா இருவரும் வெப்பம் தாங்காமல் திசைக்கு ஒருவராக வீழ்ந்தார்கள்.

ஐந்து குட்டிஸ்கள் எழுந்து நிற்க அரக்கி சந்தியா,திவ்யா இரண்டு பேரையும் கைகளில் தூக்கி வைத்து கொண்டு முகத்தின் அருகில் கொண்டு போய் பார்த்து விட்டு பின் சிரித்தபடி கைகளை இறுக்க ஆரம்பித்தாள்.

தேவதைகள் அதே நேரம் ஒரு விசேஷ வாளையும், பறக்கும் சக்தியும் குட்டீஸ்களுக்கு தந்தார்கள்.

ஹரிணியும், ஜெயலட்சுமியும் உயரே எழும்பி கைகளை வெட்ட சந்தியா, திவ்யா இருவரும் தப்பித்தார்கள்.

கைகளை திசை மாற்றி போட சொல்லி தேவதைகள் கூற திவ்யாவும் சந்தியாவும் உடனே செய்து விட்டார்கள்.

காவியா, பிரதீபா இருவரும் தலையை வெட்ட சந்தோஷி அந்த தலையை இரண்டாக பிளக்க அதை ஜெயலட்சுமி, ஹரிணி இடம் மாற்றி போட்டு விட்டார்கள்.

சந்தியா, திவ்யா இருவரும் தலை அற்ற உடலை இரண்டாக பிளக்க பயங்கர அதிர்வுடன் ஜிம்பாலா உடல் விழுந்தது.

குட்டிஸ்களுடன் நல்ல தேவதைகள் சேர்ந்து அதை திசை மாற்றி போட எந்த பாகமும் இணையவில்லை.

அரக்கி ஜிம்பாலா மரணம் அடைய குட்டிஸ்கள், சந்தியா, திவ்யா, நல்தேவதைகள் என்று அனைவருக்கும் மகிழ்ச்சி.

நல் தேவதைகள் வானில் எழும்பி அவர்களுக்கு நல்லாசி மொழிந்து வாழ்த்தினார்கள்.

அஸ்னா என்ற தேவதை மட்டும் அவர்களுடன் சில காலங்கள் தங்கி உதவி செய்யும் என்று கூறி விட்டு மற்ற நால்வரும் மறைய அஸ்னா மட்டும் அங்கே இருந்தாள்.

அஸ்னாவுடன் பரஸ்பரம் கட்டி தழுவி தங்களில் ஒருவராக ஏழு பேரும் சேர்த்து கொண்டார்கள்.

"தோழிகளே! நீங்கள் உங்களின் மாய கோலால் கிடைத்த வாள் கொண்டு அரக்கி ஜிம்பாலாவை கொன்று வீட்டீர்கள். இந்த வாள் எப்பொழுதும் உதவி செய்யாது. உங்கள் மாய கோல் சக்தி இழந்தால் வாளுடன் உங்கள் பலம் அழிந்து விடும். நீங்கள் நிரந்தரமாக உங்களுக்கு என்று ஆயுதங்களை பெற வேண்டும் அல்லவா?" என்றாள் அஸ்னா.

அஸ்னாவில் வார்த்தைகளின் உள்ள உண்மை விளங்க ஏழு பேரும் ஆம் என்றார்கள்.

"என்னுடன் வாருங்கள் என் இனிய தோழிகளே! நான் அதற்கான வழி செய்கிறேன்" என்று அஸ்னா கூற ஏழு பேரும் அவளுடன் சென்றார்கள்.

ஜிம்பாலா குகைமை விட்டு வெளியே வந்த அனைவரும் அஸ்னாவுடன் மறுபடியும் ஆற்றின் தரைபகுதியில் மிக அழகான இயற்கையை ரசித்து கொண்டு நடந்தார்கள்.

சிறிது தூரம் நடந்த பின்னர் ஒரு இடத்தில் அஸ்னா நின்றாள்.

அவர்கள் நின்ற இடத்திற்கு எதிரே ஏதோ ஒரு கோவிலின் கதவுகள் மூடி இருந்தது.

"அஸ்னா! இது ஏதோ கோவில் மாதிரி இருக்கிறது. இங்கே இந்த இடத்தில் கோவில் எப்படி வந்தது?" என்று சந்தேகத்தை எழுப்பினாள் சந்தியா.

Message…
 




Last edited:

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"தோழிகளே! இது மிக விசேஷ சக்தி வாய்ந்த தாய் மகாசக்தி அம்மனின் கோயில். ஆற்றின் அடியில் ஆழத்தில் புதைந்து இருக்கும் இந்த கோயிலை யாராலும் எளிதில் காணவோ, அம்மனை தரிசனம் செய்யவோ முடியாது. அபூர்வ சக்தி பெற்ற நல்லவர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரியும்" என்றாள் அஸ்னா.

"இதற்குள் எப்படி செல்வது?" என்றாள் ஹரிணி.

"மாயக் கோலை உபயோக படுத்த முடியாது. மாய மந்திர சக்திகளை பிரயோகம் செய்ய முடியாது. அபூர்வ சக்தி படைத்த ஏழு பெண்கள் அந்த கதவில் தெரியும் தாமரை மலரின் கை வைத்தால் கதவு தானாக திறக்கும்" என்று வழி கூறினாள் அஸ்னா.

ஏழு பேரும் உடனே சென்று ஏழு தாமரை மலர்கள் மீது கை வைத்தார்கள். அவர்கள் கரம் பட்டவுடன் கதவு திறந்து கொண்டது.

"வாங்க உள்ளே போகலாம்." என்று அஸ்னா அழைக்க அவள் பின்னால் ஏழு பேரும் செல்ல ஆரம்பித்தார்கள்.

அஸ்னா அவர்களை மகாசக்தி அம்மன் சன்னதிக்கு கூட்டி சென்றாள்.

அங்கே ஏழு தாமரை மலர்கள் உருவம் சிறிய இடைவெளியில் அமைக்கபட்டு இருந்தது.
தாமரை மலர்களில் ஒரு நபர் அமரும் அளவில் இடமும் இருந்தது.

"ஏழு பேரும் தாமரை மலரில் அமர்ந்து அம்மனை மனதார தியானம் செய்து வழிபடுங்கள்" என்றாள் அஸ்னா.

ஏழுபேரும் தாமரை மலரில் அமர்ந்து கண்களை மூடி அம்மனை நினைக்க ஏதோ சக்தி அவர்களை ஆழ்ந்த தியான நிலைக்கு கொண்டு சென்றது.

"ஏழு பேரும் இப்பொழுது கண்களை திறந்து பாருங்கள்" என்று அஸ்னாவின் குரல் கேட்டு அனைவரும் கண் விழித்து பார்த்தார்கள்.

தாய் மகாசக்தி அம்மன் சிலை முன் யாக குண்டம் கனலாய் எரிந்து கொண்டிருந்தது.

"ஏழு பேரும் இங்கே வந்து உங்கள் கரங்களை கீறி ஒரு துளி ரத்தத்தை குண்டத்தில் விழ செய்யுங்கள்" என்றாள் அஸ்னா.

ஏழுபேரும் குண்டத்தின் அருகில் வந்து நின்றார்கள். சந்தியா, திவ்யா இருவரும் உடனே வாளை எடுத்து வலது கட்டை விரலை கீறி ரத்தத்தை யாக குண்ட தீயில் விழ செய்தார்கள்.

ஜந்து குட்டீஸ்கள் உடனே தங்கள் மிஸ் செய்த மாதிரி செய்து விட்டார்கள்.

மகாசக்தி அம்மன் பிரசன்னமாகி காட்சி அளிக்க அனைவரும் அவரை மண்டியிட்டு வணங்கி ஆசி பெற்றார்கள்.

"குழந்தைகளே! உங்கள் பக்தி கண்டு யாம் பெரும் மகிழ்வு அடைந்தோம். தங்களுக்கு என் ஆசிகள். தங்களுக்கு என்று சில ஆயதங்களை தருகிறோம்" என்று மகாசக்தி அம்மன் கூற அனைவருக்கும் மகிழ்ச்சி.

"ஹரிணி! உனக்கு இந்த சக்தி வாய்ந்த வாள் மற்றும் கேடயம்" என்று அளிக்க பெரும் ஒளியுடன் வாள் ஒன்று அவள் கரங்களுக்கு வந்து சேர வணங்கி பெற்று கொண்டு கைகளில் ஏந்தி கொண்டாள்.

Write your reply...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சினேகாஸ்ரீ பிரதர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top