• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

sakthipuram-7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
சக்திபுரம் கோட்டைக்குள் நுழைந்த ஏழு பேரும் அங்கு மக்கள் நிறைய இருப்பதை கண்டார்கள்.

கோட்டையின் பெரும் பகுதிகள் காலத்தால் அழிக்கப்பட்டு எஞ்சிய சிதிலங்களாக சுவர்கள் மட்டும் இருந்தன. பழங்கால பாரம்பரியத்தின் எச்சங்களாக இருந்த அந்த பாறை கற்களால் ஆன சுவர்கள் வலுவான நிலையில் இருந்து வந்தன.

கிராம மக்களுக்கு அங்கிருந்த அம்மன் சிலைகளை வழிபட வேண்டும் என்பதால் அம்மன் சன்னதி முன்னே பெரும் கூட்டம் நின்றிருந்தது.

அன்று அம்மனுக்கு புத்தாடை அணிவித்து சிறப்பு அபிசேகஷம், பூஜைகள் செய்து அலங்காரம் செய்து வழிபட்டனர்.

சந்தியா, திவ்யாவுடன் ஐவரும் அம்மனை வழிபட்டுவிட்டு அங்கிருந்து சென்று கோட்டை வாசல் வழியே சென்று அங்கு இருந்த அம்மனை வழிபட்டு விட்டு பின்னர் மறுபடியும் கோட்டைக்குள் வந்தார்கள்.

கோட்டையை சுற்றி சுற்றி பார்த்த ஐந்து வாண்டுகளும் சுவர்களை பார்த்து வியந்த வண்ணம் இருந்தார்கள்.

சந்தியாவும், திவ்யாவும் மிக கவனமாக அவர்கள் அருகிலே நடந்து வந்தபடி பார்த்தார்கள்.

ஐவர் அணி அவர்களுக்கு அதிகம் தொல்லை தராமல் அமைதியாக நடந்து வந்தார்கள்.

இறுதியாக ஒரு இடத்தில் ஐந்து குட்டீஸ் அமர்ந்து கொள்ள அவர்களின் இருபக்கத்தில் சந்தியாவும் திவ்யாவும் அமர்ந்து கொண்டார்கள்.

"தங்கம்ஸ்... கோட்டையை நன்றாக பார்த்து விட்டீர்களா?" என்றாள் சந்தியா.

"பார்த்துட்டோம் மிஸ் ஆனால் எங்களுக்கு திருப்தி இல்லை" என்றாள் ஹரிணி.

"ஆமாம் மிஸ். நாங்கள் நிறைய இமேஜின் செய்து வந்தோம். இங்கே எதுவும் இல்லை மிஸ்" என்றாள் காவ்யா.

"சுவர்தான் இருக்கு மிஸ். அது கூட ஸ்டராங்கா இல்லை. இங்கே சிலை, டிராயிங் எதுவும் இல்லை." என்றாள் பிரதீபா.

"அம்மன் சாமியை வழிபட மட்டும்தான் முடிந்தது மிஸ்" என்றாள் ஜெயலட்சுமி.

"மிஸ் இங்கே ராஜா ராணி எல்லாம் இருந்ததாக கதையில் சொல்கிறார்கள். நாங்கள் பார்த்த சினிமா படங்களில் நிறைய காட்டினார்கள். இங்கே வந்து பார்த்தால் அதற்கான எந்த அடையாளமும் தெரியவே இல்லை" என்றாள் சந்தோஷி.

குழந்தைகள் கண்ணாடி போன்ற மனம் உடையவர்கள். அதில் கள்ளம், கபடம் எதுவும் இருக்காது. அவர்கள் மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவார்கள். அவர்கள் மனதை முகம் பிரதிபலிக்கும்.

அவர்களின் கவலையை மாற்ற எண்ணம் கொண்டாள் திவ்யா.

"செல்லம்ஸ்... இங்கே எல்லாம் இருந்ததிக்கும்டா... அதெல்லாம் கால போக்கில் பூகம்பம், புயல், வெள்ளம், மழை, அந்தியர் படை எடுப்பில் இடிக்கபட்டது என்று பல காரணங்களால் அழிந்து விட்டது. மீதம் இருக்கும் இந்த கோட்டை சுவர்கள் அதன் வரலாற்றை சொல்லி கொண்டு இருக்கிறது" என்றாள் திவ்யா.

"ஆமா தங்கம்ஸ் திவ்யா மிஸ் கரெக்டா சொல்லிட்டாங்க. இங்கே நந்தவனம். அரச சபை, குளம். மாளிகைகள், ஆயத கிடங்கு, குதிரை லாயம், வசந்த மண்டபம், கஜானா, தானிய கிடங்குகள் என்று எல்லாம் இருந்திருக்கும். வரலாற்று புத்தகங்களில் இதைபற்றி சொல்லி இருக்கிறார்கள். கதைகள், படங்கள் இதை வைத்து எழுதி இருக்கிறார்கள். மிஸ் சொன்னமாதிரி அழிந்து விட்டது." என்றாள் சந்தியா.

"மிஸ்... நாங்களும் அதை எல்லாம் அருந்ததி, பாகுபலி மாதிரி சினிமா படங்களில் பார்த்திருக்கோம். அதை பார்த்து அதுமாதிரி இருக்குமா என்று பார்க்க வந்தோம். இங்கே அப்படி எதுவும் இல்லை" என்று சோக கூறினாள் சந்தோஷி.

ஹரிணி எல்லோரும் பேசுவதை கவனித்து கொண்டே அருகில் இருந்த மண்ணில் கையை வைத்து கிளறி கொண்டும் இருந்தாள்.

"ஆமா தோஷி... எனக்கும் உன் பீலீங்க்தான்" என்றாள் பிரதீபா.

"செல்லம்ஸ்... எனக்கும் சேம் பீலீங்ஸ்" என்றாள் சந்தியா.

மண்ணை கிளறி கொண்டிருந்த ஹரிணி கையில் ஏதோ ஒரு பொருள் சிக்கியது. அது ஒரு சிறிய உருளை வடிவிலான குச்சி மாதிரி இருந்தது. அதை கையில் எடுத்து பார்த்தாள்.

மேஜிக்காரர்களின் கைகளில் இருக்கும் மேஜிக் வாண்ட் அளவில் இருந்தது. மண்ணை தட்டிவிட்டு கையில் வைத்து கொண்டாள்.

"மிஸ்... டைம் மெசின் மாதிரி ஏதாவது நம்மிடம் இருந்தால் நாம் அதன் மூலம் அந்த காலத்திற்கு போய் இந்த கோட்டை அப்பொழுது எப்படி இருந்ததது என்று பார்த்து வரலாம்" என்றாள் காவ்யா.

"நம்மிடம் மேஜிக் வாண்ட் இருந்தால் உடனே அதை பயன்படுத்தி போய் விடலாம்" என்றாள் ஜெயலட்சுமி.

"ஆமா ஜெய் சொல்றது சரிதான் ஆனால் நம்மிடம் எதுவும் இல்லை. நாம் என்ன செய்வது? இப்படி பேசத்தான் முடியும்" என்றாள் சந்தோஷி.

"தோஷி! இந்தா நீ கேட்ட மேஜிக் வாண்ட். பிடித்து கொள்" என்று ஹரிணி வீச சந்தோஷி பிடித்து கொண்டாள்.

சந்தோஷி அதை பார்த்து விட்டு, "ஏய் ஹரிணி... இது உனக்கு மேஜிக் வாண்டா" என்றாள்.

"சும்மா நினைத்து கொள்ளுடி... எங்கே மந்திரம் போட்டு அந்த காலத்துக்கு போக வை" என்றாள் ஹரிணி.

Message…
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
"சரிடி" என்ற சந்தோஷிக்கும் அங்கே இருக்கும் நபர்களுக்கும் அது மந்திரவாதியின் கையில் இருந்த மேஜிக் வாண்ட் என்று அறிய வாய்ப்பில்லை.

சந்தோஷி குச்சியை கையில் ஒரு கையில் பிடித்து நெற்றி புருவங்களின் நடுவில் வைத்து கொண்டு இரு கண்களையும் மூடி கொண்டு ஏதோ ஒரு மந்திரத்தை முணுமுணுப்பது போல் பாவனை செய்தாள்.

சந்தோஷி பின் கண்களை திறந்து அந்த குச்சியை ஒரு கையில் உயர்த்தி பிடித்து கொண்டு "சொல்லட்டுமா?" என்றாள்.

"ரொம்ப சீன் போடாம சொல்லி தொலைடி. மனதில் பெரிய மேஜிக் ராணி என்று நினைப்பு" என்றாள் ஜெயலட்சுமி

குழந்தைகளின் விளையாட்டை பார்த்து ரசித்தபடி இருந்தார்கள் சந்தியா மற்றும் திவ்யா.

"சொல்ல போறேன் நான்" என்ற சந்தோஷி அந்த குச்சியை இறுக பிடித்தபடி "மேஜிக் வாண்ட்... நானும், என் பிரண்ட்சும், எங்கள் மிஸ்களும் பழைய காலத்து கோட்டையை சென்று பார்க்க வேண்டும். எங்களை எல்லாம் பழைய காலத்திற்கு அழைத்து செல்." என்று சொல்லிவிட்டு குச்சியை எதிர்புறம் நீட்டினாள்.

சந்தோஷியை குச்சியை நீட்டிய நேரம் ஏதோ மின்னல் போல் வெளிச்சம் தோன்றியது.

பூமி அதிர்வது போல் உணர்வு அவர்கள் அனைவருக்கும் ஏற்பட்டது.
****
மீனாட்சி கோட்டை மாளிகைக்கு தன் அக்கா காமாட்சியுடன் வந்து சேர்ந்தாள்.

அவளுக்கு முன்னால் மண்டல அதிபதியாக இருந்த அகல்யா வந்தாள்.

அழகிய மீனாட்சி தங்க தனியாக ஒர் பெரிய அறையும், அவள் அக்கா காமாட்சி மற்றும் அவள் தாய், தந்தை தங்கி கொள்ள மற்றொரு அறையும் தந்தாள்.

காமாட்சியை அங்கே தங்கி இருக்க சொல்லிவிட்டு அழகிய மீனாட்சியை மட்டும் அழைத்து கொண்டு சென்று மண்டல கோட்டையின் ஒவ்வொரு இடங்களாக காட்டி அதை பற்றி விளக்கம் தந்தாள் அகல்யா.

அழகிய மீனாட்சிக்கு மட்டும் இல்லை அவளை போல் மற்ற மூன்று பேருக்கும் அதேபோன்று மண்டல கோட்டையின் உள்ளே அனைத்து இடங்களையும் சுற்றி காட்டி விளக்கம் தந்தார்கள்.

மண்டலாதிபதி தினமும் என்ன செய்ய வேண்டும் என்றவர்கள் கூற புதிய மண்டலாதிபதிகளாக தேர்வான நால்வரும் நன்கு கவனித்து மனதில் பதித்து கொண்டார்கள்.

"மீனாட்சி நீ இப்பொழுதே மண்டலாதிபதியாக பொறுப்பு ஏற்க தேவையில்லை. நீ சாகச பயணம் சென்று வந்த பின் பதவி ஏற்றால் போதும் என்று சொல்லிவிட்டார்கள் அதனால் நீ அதுவரை உன் குடும்பத்துடன் ஆனந்தமாக களிக்கலாம். தினமும் அம்மனை பூஜை செய்து கொண்டும் வா" என்றாள் அகல்யா.

"நான் அப்படியே செய்கிறேன் அக்கா" என்றவள் சொல்ல அகல்யா சென்றுவிட்டாள்.

அழகிய மீனாட்சி தினம் எழுந்து குளித்து பூஜை செய்து விட்டு அகல்யாவை சந்தித்து விட்டு வருவாள்.

தன் குடும்பத்தினருடன் பேசி சந்தோஷமாக இருந்துவிட்டு, மண்டல கோட்டையில் நந்த வன பூங்கா, குளங்கள் ஆகிய இடங்களுக்கு தன் பெற்றோர், அக்காவுடன் சென்று அங்கே ஆனந்தமாக பொழுதை கழித்து வந்தாள்.

அம்மனுக்கு மூன்று வேளை தவறாமல் பூஜை செய்தும் வந்தாள்.

மண்டலாதிபதியாக இருக்கும் அகல்யா தீடிரென்று அழைக்க அவரை காண அவர் அறைக்கு சென்றாள் அழகிய மீனாட்சி.

அங்கே அறையில் நாட்டின் மகாமந்திரி மதிபாலர், அரசகுரு யதுர்ஜெயர், மகரிஷி ஆகஸ்யர், தேவி ஞானசெளந்தரி, அவள் குருவான தேவி கார்த்தியாயினி ஆகியோர் இருந்தார்கள்.

அழகிய மீனாட்சி அனைவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்று கொண்டாள்.

"மீனாட்சி... நீ நாளை மறுநாள் காலை உன் சாச பயணத்தை தொடங்க போகிறாய். நீ உனக்கு துணையாக யாரை அழைத்து செல்ல விரும்புகிறாய்?" என்றார் யதுர்ஜெயர்

"நான் என் அக்கா காமாட்சியை அழைத்து செல்கிறேன் அக்கா" என்றாள் அழகிய மீனாட்சி.

"நல்லது... அப்படியே செய்" என்றார் அரசகுரு யதுர்ஜெயர்.

அவள் அக்கா காமாட்சியும் பெற்றோரும் அழைக்கபட்டு சாகச பயணம் மேற்கொள்ள காமாட்சியை மீனாட்சி தேர்வு செய்த தகவல் அவர்களுக்கு தெரிவிக்கபட்டது

காமாட்சியை தன் துணையாக தேர்வு செய்தது காமாட்சிக்கும், அவள் பெற்றோருக்கும் மிக்க மகிழ்ச்சி தந்தது.

"மீனாட்சி... உன் அக்காவையே உடன் அழைத்து செல்வதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். நீயும் உன் அக்காவும் அந்த சாகச பயணம் மேற்கொள்ள சில சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டி உள்ளது அதனால் உன்னுடைய குரு தேவி கார்த்தியாயினியும், தேவி ஞான செளந்தரியும் இங்கே தங்கி பூஜைகளுக்கு வழி காட்டுவார்கள். நீங்கள் அதை சிரத்தையுடன் செய்து அம்மன் அருளை பெற வேண்டும். பூஜைகள் முடிந்தபின் நாளை மறுநாள் காலை நீங்கள் சாகச பயணம் மேற் கொள்வீர்கள்" என்றார் மகரிஷி ஆகஸ்யர்.

"நாங்கள் அப்படியே செய்து விடுகிறோம் மகரிஷி" என்று இருவரும் கூறினார்கள்.

"நல்லது... அம்மன் அருளை நீங்கள் எங்களது வாழ்த்துக்கள்" என்று ஆசி வழங்கி அனைவரும் சென்று விட்டார்கள்.

தேவி கார்த்தியாயினி மற்றும் தேவி ஞான செளந்தரி மட்டும் அங்கே தங்கி பூஜைகளை செய்ய வழிகாட்ட இருவரும் செய்ய ஆரம்பித்தார்கள்.
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சினேகாஸ்ரீ பிரதர்
 




Last edited:

Pradeep

அமைச்சர்
Joined
Jun 12, 2018
Messages
1,767
Reaction score
3,949
Location
Coimbatore
மேஜிக் வாண்ட் மூலமா பழைய காலத்து கோட்டை பாக்கப் போறோமா. சூப்பர் . அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் சினேகா ப்ரோ.
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
o_Oo_Oo_O pazhaiya kalathuku poga poroma... naanga ellam....... very interesting.... ana.... enna ivlo kutty UD..... :rolleyes:
not enough...:(
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
மேஜிக் வாண்ட் மூலமா பழைய காலத்து கோட்டை பாக்கப் போறோமா. சூப்பர் . அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் சினேகா ப்ரோ.
ஆமா தீபா சிஸ்டர் முழுசாக படிச்சிட்டிங்களா Write your reply...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top