• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sokkattan paarvai - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
பொழுது புலரும் அழகான காலை வேளையில் அந்த விநாயகர் கோவில் மணி சங்கீதமென ஒலித்தது.

சேவல் கூவுகிறதோ இல்லையோ பிரசித்தி பெற்ற கோவை நகரின் புலியகுளம் விநாயகர் ஆலயத்தில் இனிமையான குயில் கூவும்.

அட, யார் அது என்று பார்த்தால் நம் ஷாலினி. எப்பொழுதும் மனதை மயக்கும் மோகனக் குரலால் பாடி விநாயகரையே கவிழ்த்து விடுவாள்.

இது என்றும் நிகழும் ஒன்றுதான். அதனால் கொஞ்சம் அடுத்து என்ன என்று பார்ப்போம்.

அர்ச்சகர் ஷாலினியிடம் தீபாராதனைத் தட்டை நீட்ட, பக்தியோடு அதனைக் கண்களில் ஒற்றிக் கொண்டாள் அவள்.

"ஏம்மா எங்கயோ வெளில போறயோ? இன்னிக்கு ரொம்ப ரொம்ப சீக்கரமே வந்துட்டியே" என்று கேட்க,

"இன்னிக்கு எனக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு மாமா. அதான்
சீக்கிரமா வந்துட்டேன்" என்று கூறி அழகாய் சிரித்தாள்.

"எல்லாம் நல்ல படியா நடக்கும் உனக்கு" என்று உளமார ஆசீர்வதித்தார்.

பின்னர் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு செல்லும் பொழுது அவள் தோழி ரூபா வழியில் தென்பட , இருவரும் சலசலத்த படியே சென்றனர்.

காலை 7.00 மணி.

மிகவும் குறைவான வாகனங்கள் மட்டுமே தென்பட்ட அந்த சாலையில் கருப்பு நிற பென்ஸ் கார் வந்துகொண்டிருந்தது. தோழியரின் அருகில் வந்ததும் அந்தக் கார் எடுத்தது பார் வேகம் ,
பிறகென்ன சாலையில் தேங்கி இருந்த மழை நீர் முழுதும் ஷாலினியை மறுமுறை
குளிப்பாட்டியது.

" டேய் அறிவில்ல? ரோடப் பார்த்து ஓட்டுடா"

இந்தக் குரல் காற்றோடு கலந்து வந்து நாராசமாக காரின் உள் இருந்தவன் காதில் ஒலித்தது.

பிறகு ரூபாவின் குரல் இவனுக்கு நாதஸ்வரம் போன்றா இருக்கும்!

"ரோடப் பார்த்து ஓட்டுனா இத்தன நேரம் அவளைப் பார்த்திருக்க முடியுமா!"

என்று மனதில் எண்ணிக்கொண்டான் அவன்.

சொட்ட சொட்ட நனைந்து இருந்த
ஷாலினி அப்படியே முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள். காரில் இருந்தவன் அவளைப் பார்க்கும் பார்வை அறிந்தால் இன்னும் எப்படி
முறைப்பாளோ.

அவன் ஷாலினியை மனதில் இருத்திக்கொண்டான். எலுமிச்சை நிறம், ஐந்தரை அடி உயரம் இருக்கலாம், கருநாக நிறக் கூந்தல், இளஞ்சிவப்பு நிற சேலை அணிந்திருந்தாள்.

அவனின் வர்ணனை இதற்கு மேல் விரியவில்லை.
என்னடா ஒரு பெண்ணை இவ்ளோதான் வர்ணிக்க முடியுமா என்று கேட்டால், அவனுக்கு இதுவே அதிகம்.

எந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத ஜென்மம்.

அது தன் தாய் ஆகட்டும் தங்கை ஆகட்டும். அவர்கள் பேசக் கூட இவனிடம் சிறப்பு அனுமதி
வாங்க வேண்டும்.இப்படிப் பட்டவனிடம் ஷாலினியை வர்ணிக்க சொன்னால் ?

கார் ஒட்டிக் கொண்டே அவனுக்கு செல்லில் வந்த அழைப்பை ஏற்றான்.
"ஹலோ" ஆழ்ந்து ஒலித்த அவன் குரலில் எதிராளி பயந்து நடுங்கி நாவெல்லாம் வறண்டு போய் , சொல்ல வந்ததையே மறந்து விடுவார்கள்.

ஆனால் அந்தப் பக்கம் பேசியதோ இவனின் பி. ஏ சூர்யா. இவனின் உயிர் நண்பன் கூட.
ஆகையால், அவன் இலகுவாகப் பேசினான்.

"ஹலோ,இன்னிக்கு மீட்டிங் இருக்குல்ல பத்து மணிக்கு. சீக்கிரமா வந்துடு" என்று சூர்யா கூற ,
இவன் உதட்டில் ஒரு ஏளன வளைவு உதித்தது.

" என்கிட்டயே வா" என்று அவன் பதிலுக்குக் கேட்க,

"சாரிடா. நான் வெயிட் பண்றேன்" என்று கூறி அவன் அழைப்பைத் துண்டித்தான்.

வீடு இருக்கும் தெருமுனையில் இவன் கார் நுழைய, அகண்ட பெரிய
வீட்டின் கதவைத் திறந்து சல்யூட் அடித்துக் கொண்டு நின்றான் காவலாளி.

உள்ளே சென்று காரை நிறுத்தி விட்டு ,

"முத்து, இங்க வாங்க" என்று கிட்டத்தட்ட கத்தினான் அவன்.

அலறி அடித்துக் கொண்டு அந்த முத்து என்பவர் வந்தார்.

" நேத்திக்கு என்ன சொன்னேன்.என்னோட ஆடி கார் இன்னும் சர்வீஸ்
போகல போலிருக்கே" என்று அவன் கடுப்பில் முறைக்க ,

"ஐயா, அது இன்னிக்கு ஆளு வந்திடுவாங்க , நாளைக்கு சரி ஆயிரும்" என்று பம்மினான் முத்து.

" ஷிட், இன்னிக்கு ஆடில தான் ஆபீஸ் போவேன்னு சொன்னேன்ல. ஒரு வேலைய உருப்படியா செய்ய முடியாதா. போங்க போய் ராஜீவ் கிட்ட அம்பதாயிரம் ரூபாய்க்கு செக் வாங்கிட்டு வீட்டுக்கு போயிடுங்க. நாளைக்கு உங்களை இங்க பார்த்தேன், அப்பறம் நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது. கெட் லாஸ்ட்"

என்று உருமிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டான். மற்றவர்களாக இருந்தால் இந்தப் பணத்தை வைத்து தாராளமாகக் காலம் தள்ளலாம்.
ஆனால், SM இண்டஸ்ட்ரிஸ், RR manufacturers, மற்றும் சில தொழில் நிறுவனங்களின் முதலாளியிடம் இந்த முத்து என்னும் ஒரு சாதாரண வேலையாள் வாங்கும் மாத சம்பளம் மட்டுமே பல ஆயிரங்களை அசால்ட்டாகத் தொடுமே.

விழி பிதுங்கி நின்றான் முத்து.

காலை 9.55 மணி.

பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல் முகப்பில் வந்து நின்றது இன்னோவா கார்.

உள்ளே இருந்து இறங்கியவன் கிருஷ்.

ஆறடி உயரம், அசப்பில் துல்கர் சல்மான் ஜாடை . நீல நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு ஜீன்ஸ் அணிந்திருந்தான். கண்ணில் மாட்டிய கூலர்ஸ் அவன் கண் பார்வையை ஒளிக்க, வேக எட்டுகள் எடுத்து வைத்து உள்ளே நுழைந்தான்.

அலை அலையாய் பாயும் அவன் கேசத்தை ஸ்டைல் ஆகக் கோதிக் கொண்டே வரும் அவனைக் காணும் ஆண்களே அசந்து விடுவர்.
நம்ம ஊரு பெண்கள் எம்மாத்திரம்?

மாடர்ன் அழகிகள் என்று நினைத்துக்
கொண்டிருக்கும் உள்ளூர் கிழவிகள் அனைவரின் பார்வையும் கிருஷ் மீதே பதிந்தது.

அவனுக்காகக் காத்திருக்கும் பி. ஏவிடம் சென்று தோரணையாக அமர்ந்தான்.

" என்ன இன்னும் அவங்க வரல?"

"இல்லை சர், வந்திடுவாங்க".

சில நிமிடங்கள் பொறுத்தவன் மணியைப் பார்த்தான்.

இப்பொழுது மணி 10.10 ஆகி இருக்க,
"நம்ம கிளம்பலாம்.மீட்டிங் கான்செல்ட்"

என்று கூறி அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் விடுவிடு என்று
சென்றான். அப்பொழுது, உள்ளே நுழைந்த அவளைக் கண்டதும் சடன் பிரேக் அடித்துத் தன்னுடைய கால்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தான் கிருஷ்.

சொக்கட்டான் பார்வை தொடரும்...
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
;)தோழமைகளே...
இது சின்ன ud தான் ...பெருசா வர மாறியே இருந்துச்சு.. type பண்ணிட்டு
பாத்தா குட்டியா ஆகிடுச்சு.

Nxt la irundhu konjam perusa poda try panren ....
Ippa idha padichuttu comments solluveengalama.;););)

நன்றி!!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top