• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Sokkattan paarvai - 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
ஹலோ தோழமைகளே !! எப்படி இருக்கீங்க ?? லாஸ்ட் வீக் கொஞ்சம் என்னோட தாத்தா வீக் . அதான் ud type பண்ண நேரம் இல்லை . அதை சீக்கிரமே காம்பன்சேட் பண்ணிடறேன் . சென்ற ud க்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி !!
அடுத்த ud , prefinal தான் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முடிவை நோக்கி... ஓகே , மறக்காம இந்த ud க்கும் லைக் போட்டு கமெண்ட்ஸ போடுங்க ப்ளீஸ்.


அப்பறமா , ரஞ்சித்தோட முடிவு சுபமா தான் இருக்கணுமா அப்படின்னும் சொல்லுங்களேன் எனக்கு ... ud படிக்க வாங்க தோழமைகளே !!
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
பல தரமான சம்பவங்கள் நடந்து கொண்டிருந்த அன்று இன்னொரு விசேஷமும் கூட இருந்தது.

ஆம் , அன்று பங்குனி உத்திரம் . நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று கூறுவார்கள் அல்லவா !

பேரூர் பட்டீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் குழுமியிருக்க , பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா தொடங்கியிருந்தது .

கூட்ட நெரிசலில் சிக்காமல் தேர் புறப்படும் முன்னரே முருகனை தரிசித்து விட்டுக் கிளம்ப எண்ணியிருந்த சத்யவதியும் , தேரில் முருகன் பவனி முடித்த பின்னர் தரிசிக்க எண்ணியிருந்த சிவசங்கரியும் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டது விதியின் தேரோட்டமா?

"சிவசங்கரி! எப்படி இருக்கீங்க? இருக்கற இடத்தைக் கூட சொல்லாம அப்படி என்ன ரகசியத்தை ஒளிச்சு வெச்சிருக்கீங்களோ !! "

பார்த்த மறுநொடி படபடவென பொரிந்து தள்ளினார் சத்யவதி.

ஆனால் , சத்யவதியைக் கண்ட சிவசங்கரி பொறி கலங்கிப் போனார் .

'அடக் கடவுளே! இவங்க எங்க இங்க? என்னன்னு சொல்லி சமாளிப்பேன் !'

அந்த நொடியே கூட்டத்துடன் கூட்டமாக ஓட்டம் பிடிக்கலாமா என்று கூட சத்யவதி யோசித்தார்.

பின்னர், அந்த நினைப்பைக் கைவிட்டு ,

"சத்யா! நீங்களா? பார்த்தே பல காலம் ஆச்சு. சொல்லுங்க , எப்படி இருக்கீங்க?"

ஆச்சரிய பாவத்தில் தன்னுடைய அதிர்ச்சியை மறைத்தார் சிவசங்கரி.

"நான் நல்லா இருக்கேன் . கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலே வரலையே? வீட்டை காலி பண்ணதோட சரி , ஒரு தடவைக் கூட அந்தப் பக்கம் தலையே காட்டலை , ஃபோனும் பண்ணலை.

நான் பண்ணாலும் வேற யாரோ பேசி ராங்க் நம்பர்னு சொல்லறாங்க?"

ராங்க் என்ட்ரி தான் இன்னிக்கு இந்த கோவில் விசிட் என்று மனதில் கடவுளை அர்ச்சித்தப்படியே என்ன சொல்லலாம் என்று வேகமாக யோசித்தார் சிவசங்கரி .

"அதுவா, நடுவுல என்னோட வீட்டுக்காரருக்கு உடம்பு சரி இல்லாம போயிடுச்சு சத்யா. அப்பறமா , அவரைக் கவனிக்கறதுலயே எனக்கு மாசம் ஓடிடுச்சு. மனுஷன் படுத்தி எடுத்துட்டாரு .

தப்பா நினைக்காதீங்க சத்யா, நம்பர் மாத்திட்டோம். சொல்ல மறந்துட்டேன்"

என்று கோர்வையாகத் தன் கணவனைக் கோர்த்து விட்டார்.

"அப்படியா! இப்ப பரவால்லயா அவருக்கு? தப்பா நினைக்க ஒன்னும் இல்லை . நம்ம எவ்ளோ க்ளோஸா பழகுனோம். அதான் என்னால இதைத் தாங்கவே முடியல.

சரி , இப்ப என்ன ஆயிடுச்சு . தேரைப் பார்த்துட்டு உங்க வீட்டுக்கு தான் வரப் போறேன் "

என்று முடிவு போல் சத்யவதி சொல்ல , சிவசங்கரிக்கு மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது.

தேரை இழுத்து நடுத் தெருவில் விட்ட மாதிரியே தான்!!

வைஷாலி வீட்டில் இல்லைதான். ஆனாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம். அவளை மட்டும் சத்யவதி பார்த்துவிட்டால்?
நினைக்கவே கசந்தது சிவசங்கரிக்கு!


பெற்ற தாயை விட அன்பைப் பொழிந்து வளர்த்த பாசம் சிவசங்கரியை மேலும் யோசிக்க விடாமல் செய்தது .

எப்படியேனும் இவர்கள் இருவரும் சந்திப்பதைத் தடுக்க வேண்டும் .
உடனே கொஞ்சம் தள்ளிப் போய் வைஷாலிக்கு அழைத்தார் சிவசங்கரி.


"சொல்லும்மா.."

சூழ்நிலைக் காரணமாக மெலிதான குரலில் வைஷாலி பேச ,

"இன்னிக்கு நீ மெதுவாவே வீட்டுக்கு வா. நாங்க வர லேட் ஆகும். கொஞ்சம் வெளில போறோம். சரியா?? "

என்று ஆணை போல் கூறிவிட்டு அவள் மேலும் பேசும் முன்னர் அழைப்பைத் துண்டித்தார்.

அப்படியே மஹேந்திரனுக்கும் தகவலைக் கூறிவிட்டு நைசாக வந்தார் சிவசங்கரி.

சிவசங்கரியின் போக்கு ரொம்பவே விசித்திரமாக இருப்பது சத்யவதியின் கண்களுக்குத் தப்பாமல் பட்டது .

'என்னமோ சரியில்லை! நம்மளைப் பார்த்த குஷி கொஞ்சம் கூட இவங்க கிட்டத் தெரியலையே? '

பெண்களின் எண்ணப் போக்கு பெண்களுக்குத் தானே நன்கு புரியும் .

சிவசங்கரியின் வழியிலேயே சென்று நடப்பைத் தெரிந்து கொள்ள நினைத்து அப்போதைக்கு ஒன்றும் பேசாமல் விட்டார் சத்யவதி.

கோவிலில் இருந்து இருவரும் வீட்டிற்கு வர , பரபரப்புடன் வைஷாலியின் பொருட்கள் எதுவும் சத்யவதியின் கண்களுக்குத் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டிருந்தார் மஹேந்திரன்.

"ஹலோ மஹேந்திரன், எப்படி இருக்கீங்க?"

சத்யவதியின் உற்சாகக் குரலில் திடுக்கிட்டவர் , உடனே சுதாரித்து ,

"நான் நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா? ராஜஷேகர் எப்படி இருக்காரு?" என்று கேட்டார்.

"ஹம்ம், நல்லா இருக்கோம் மஹேந்திரன். எதுக்கு உடம்புக்கு சரியில்லாத நேரத்துல வேலை எல்லாம் செய்யறீங்க? "

"எனக்கென்ன நான் நல்லாதான இருக்கேன்"

என்றவர் சைகையில் சிவசங்கரி கூறியதைப் புரிந்து கொள்ள முயன்று தோற்றார்.

"இல்ல உங்களுக்கு ரொம்ப முடியலன்னு.."

சிவசங்கரி கூற வந்தது இப்பொழுது நன்கு புரிய ,

"அதுக்காக இதையே நினைச்சுட்டு இருக்க முடியுமா ? கூடமாட கொஞ்சம் வேலை செஞ்சா எல்லாம் சரியா போயிடும்"

என்று சமாளித்தார்.

"கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க மஹேந்திரன். இல்லன்னா உங்க வைஃப் தான் கஷ்டப்படுவாங்க"

என்று அக்கறையுடன் கூறிய சத்யவதியின் கண்கள் அவர்களின் வீட்டை மெல்ல நோட்டமிட்டது.

மஹேந்திரன் மற்றும் சிவசங்கரியின் கண்கள் பதட்டத்துடன் சந்தித்துக்கொண்டன.

"ஆமா , ஜகதீஷ் இப்ப என்ன பண்ணறான் ? கல்யாணத்துக்குப் பார்க்கறீங்களா ? "

என்று ஆர்வத்துடன் கேட்டார்.

'அட அந்தப் பயலை மறந்துட்டோமே !'

என்ற ரீதியில் இருவரும் விழித்தனர்.

பின்னர் ஏதோ ஒன்றை சொல்லவேண்டும் என்பதற்காக மஹேந்திரன் மழுப்பினார்.

"அவன் இப்ப சென்னைல இருக்கான் . வேற கம்பெனிக்கு மாறியாச்சு. இப்பத்திக்கு கல்யாணத்துக்கு எல்லாம் பார்கற ஐடியா இல்லைங்க "

" ஓஹ் .. பையனை விட்டு இருக்க சிவசங்கரிக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே"

என்று சத்யவதி சிரிக்க ,

"வேலைன்னு வந்துட்டா இதெல்லாம் பார்க்க முடியுமா சத்யா?"

என்று சிவசங்கரியும் சிரித்தபடியே கூறினார்.

பிறகு அவர்களுக்குப் பேச பல மாதக் கதை இருந்தது .

திரித்துக் கூறும் கதை தான் என்றாலும் அதைக் கேட்கும் பொறுமை நம்மிடத்தில் இல்லை.

நாம் சென்று நம் கதையின் மறுபக்கத்தைக் காண்போம் ...

வைத்த கண் வாங்காமல் தன்னுடைய ஆட்டம் முடிவடையப் போவதை பீதியுடன் கண்டுகொண்டிருந்தான் ரஞ்சித் .

"சோ, நீ இங்க தான் ஒளிஞ்சு இருக்கன்னு வெளில சொல்லவா?"

கிருஷ் தீவிரமாகக் கேட்க , மேலும் பதட்டம் கொண்டான் ரஞ்சித்.

"அப்படி எதுவும் பண்ணிடாத. இந்த ஒரு டைம் என்னை மன்னிச்சு விடு ராகவ். இனிமே ஒழுங்கா இருப்பேன் "

மிகவும் ரஞ்சித் கெஞ்ச ,

"ராகவா?"

என்று வைஷாலி நெற்றியை சுருக்கினாள். அருகே இருந்த தர்ஷினி , இவளுக்கு எதுவுமே நியாபகம் இல்லையா என்று எண்ணி வருத்தம் கொண்டாள்.

"அண்ணாவோட பேரு ராகவ்கிருஷ்ணா "

என்று தர்ஷினி மெல்ல சொல்ல ,

"அப்படியா! ஆனா கிருஷ்னு தான எல்லா பக்கமும் இருக்கு? ஃபுல் நேம் சொல்லிக்கவே மாட்டாரோ "

வைஷாலி ஆச்சரியமாகக் கேட்டாள். தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது தர்ஷினிக்கு .

"எல்லாம் உங்களுக்காகத்தான் "

என்று வேகத்துடன் கூறியவள் ,
வைஷாலியின் ஆராயும் பார்வை கண்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.


' தர்ஷினி, கண்ட்ரோல்' என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு ,

"எல்லாத்துக்கும் ஒரு ரீசன் இருக்குன்னு சொல்ல வந்தேன் "

என்று அதே வேகத்தில் கூறிய தர்ஷினி அதன்பின்னர் வைஷாலியின் புறம் திரும்பவே இல்லை .

வைஷாலியோ சந்தேகத்தின் சந்தியில் நின்றிருந்தாள்.

ரஞ்சித் என்ன முயன்றும் அவனுடைய நான்காம் காயும் வெட்டப்பட்டது. தாயமும் விழவில்லை.

ஆகையால் எந்த காயும் களத்தில் இல்லாமல் ரஞ்சித் துவண்டு போயிருந்தான் .

" ராகவ், என்னோட இமேஜ சேவ் பண்ணிடு. நீ என்ன சொன்னாலும் செய்யறேன் "

" டூ லேட் . இது நாள் வரைக்கும் ஏதோ ஃபேமிலி பிரச்சனைன்னு தான் நினைச்சேன் . ஆனா , நீ பல ஃபேமிலிய அழிச்சுட்டு இருக்க .

உன்ன மாதிரி காட்டுமிராண்டி எல்லாம் உசுரோட வெளிய உலாவவே கூடாது "

"ஏற்கனவே ஷாலினி கிட்ட வாலாட்ட நினைச்சு பட்டதெல்லாம் போதும். இத்தோட மறந்துடலாம்"

என்று வைஷாலியைப் பார்த்துக் கூற , ஏற்கனவே தெளிவாக இருந்தவள் சந்தேகத்தின் சந்துக்குள் புகுந்து கொண்டாள்.

இதற்கென்ன பதில் என்பதுபோல் தர்ஷினியை வைஷாலி பார்க்க , அவளின் பார்வையைத் தவிர்த்தவள் கிருஷ்ஷை என்ன சொல்வது என்பதுபோல் நோக்கினாள்.

ரஞ்சித் இவ்வாறு கூறுவான் என்று நினைத்துப் பாராத கிருஷ்ஷும் சமாளிப்பாக ,

" ஷாலு , நீ தர்ஷு கூட கொஞ்ச நேரம் நம்ம கேண்டீன்ல வெயிட் பண்ணு "

என்று சொன்னான்.

' ஹையோ கோத்து விடறியேடா கோதண்டம் '

தர்ஷினி மனதில் அலறி வைத்தாள்.

ஆனாலும் கிருஷ்ஷின் கண்களில் தெறித்த உறுதியைக் கண்டு வாயில் அல்வா இருப்பதுபோல் பாவ்லா செய்தபடி வைஷாலியின் புறம் திரும்பினாள் .

அவளோ ,

"எதுக்கு கிருஷ்? என்ன நடக்குதுன்னு இப்ப என்கிட்ட சொல்லப் போறீங்களா இல்லையா ?"

காட்டமாகக் கேட்டு நகருவேனா பார் என்றபடி அமர்ந்திருந்தாள்.

"சொல்லறேன் ஷாலு. ஆனா, இப்ப இல்ல . சொன்ன மாதிரி கேண்டீன்ல வெயிட் பண்ணு "

அவளின் முகம் பார்ப்பதைத் தவிர்த்தான் கிருஷ். அதிலே இன்னும் கோபம் கொண்டாள் வைஷாலி.

"எப்பதான் சொல்லுவீங்க கிருஷ்?உங்களைப் பார்த்த முதல் நாள்ல இருந்து ரொம்ப வித்தியாசமா தான் பிஹேவ் பண்ணறீங்க. என்னன்னு கேட்டா பதில் சொல்லணும் தான "

" ஷாலு, கொஞ்ச நேரம் இரு. சொன்னா புரிஞ்சுக்கோ"

"சொன்னா தான புரிஞ்சுக்க முடியும் . வெயிட் பண்ணுன்னு தான் எப்பவும் சொல்லறீங்க . இன்னிக்கு ஜாடை மாடையா நிறைய பேசிட்டீங்க . எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்
கிருஷ் "


"சரி சரி , இன்னிக்கே சொல்லறேன். ஆனா இப்ப இது முக்கியமில்லை. "

"அப்போ ஓகே . உங்களுக்கு என்ன முக்கியமோ அதையே பண்ணுங்க . நீங்க எதுவும் சொல்ல வேணாம் . நானே தெரிஞ்சுக்கறேன் "

என்று கூறிவிட்டு வேகமாகத் தன் கைப்பையை எடுத்தவள் அங்கிருந்து திரும்பிப் பாராமல் சென்றுவிட்டாள் .

பின்னோடு ஓடிய தர்ஷினி , சென்ற வேகத்திலேயே வந்து வைஷாலி வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டதைக் கூறினாள்.

அதைக் கேட்டுத் தலையில் கையை வைத்துக்கொண்டான் கிருஷ்.
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
" ராகவ் ..."

என்று ரஞ்சித் இழுக்க, கடுப்பான கிருஷ்

" டேய் , எல்லாம் உன்னாலதான். சொல்லி தான கூட்டிட்டு வந்தேன், அவளுக்கு முன்னாடி பார்த்துப் பேசுன்னு "

என்று எகிறினான்.

"முதல்ல எல்லாத்தையும் சரி பண்ணு."

ரஞ்சித்தும் ஆற்றாமையில் கத்தினான்.

அது கிருஷ்ஷை இன்னும் கோபப்படுத்தியது.

" எதைடா சரி பண்ணனும் ? நீ அழிச்சியே பொண்ணுங்களோட வாழ்க்கையை , அதை சரி பண்ணுவியா நீ ? "

" ராகவ் , அதையே சொல்லாத திரும்பத் திரும்ப . அதுதான் முடிஞ்சு போச்சே.

நடக்கவேண்டியதைப் பத்தி யோசி "

கோபமாக ஆரம்பித்துத் தன்மையாக முடித்தான் ரஞ்சித் .

இருக்கையில் சாய்வாக அமர்ந்த கிருஷ் , நெற்றிப்****** அழுத்திவிட்டுக் கொண்டான்.

சில நொடிகள் கழித்து ,

"ஹ்ம்ம் . நடக்க வேண்டியதைப் பார்த்துத்தான் ஆகணும் "

என்று சொல்லிவிட்டு ராஜஷேகரின் எண்ணிற்கு அழைத்தான். அவர் ஒரு முக்கிய விசாரணையில் இருந்தததால் அழைப்பை எடுக்காமல் இருந்தார்.

விடாமல் மீண்டும் அழைத்துகொண்டே இருந்தான் கிருஷ். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அழைப்பை ஏற்ற ராஜஷேகர் ,

" ஹலோ , ஃபோன் அட்டெண்ட் பண்ணலன்னா பிசியா இருக்கேன்னு தெரிஞ்சுக்க முடியாதா உன்னால ? "

" அதை விட முக்கியமான வேலை இருக்குன்னு தான் கால் பண்ணிட்டே இருக்கேன்னு புரிஞ்சுக்க முடியாதா உங்களால ?"

நக்கலுடன் கிருஷ் வினவ ,

" சீக்கிரமா சொல்லு " என்று எரிச்சலுடன் அவர் மொழிந்தார் .

" நான் என்னத்தை சொல்லுவேன். டிவி பார்த்துட்டு பேசுங்க "

என்று அழைப்பைத் துண்டித்தான் கிருஷ்.

அவனின் தொனியே சிக்கலுக்கான சிக்னல் போலத் தெரிய , அவசரமாக ஃபோனில் நியூஸை ஓடவிட்டார் .

அதில் ரஞ்சித்தைக் குறித்து ஏதேதோ கூறிக்கொண்டிருந்தனர் .

தில்லுமுல்லு வேலை பல செய்து தலைமறைவு ஆன தில்லு தொழிலதிபர் என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

ரஞ்சித் இப்படி எல்லாம் செய்தானா என்று அவருக்கு பெருத்த சந்தேகம் தோன்றியது .

உடனே அவனுக்கு கால் செய்தார் ராஜஷேகர்.

இந்தப் பக்கம் ஃபோன் அடித்ததும் ரஞ்சித் அதை எடுக்கப் போனான்.

அதற்குள் கிருஷ் தன்னிடம் தருமாறு கேட்க , எதுவும் பேசாமல் தந்துவிட்டு மேஜையின் மேல் கவிழ்ந்தான் அவன்.

" ரஞ்சித் , எங்க இருக்க ? நியூஸ்ல நீ அப்ஸ்காண்ட் ஆனதா சொல்லறாங்க."

"அட பரவால்லயே கமிஷனர் , ரஞ்சித் மேல எவ்ளோ அக்கறை உங்களுக்கு ! "

கிருஷ்ஷின் குரலைக் கேட்டதும் ரஞ்சித் தலைமறைவான ரகசியம் புரிந்து போனது அவருக்கு .

" ஓஹ் , நீ தான் எல்லாத்துக்கும் காரணமா ?"

" இல்லை , நீங்க தான் காரணம். கம் டு மை ஆஃபீஸ் சூன்."

என்று சிரித்தவாறே கூறினான் கிருஷ் .

ராஜஷேகருக்கு திடீரென ஒரு விதமான தைரியம் பிறந்தது. அவரின் காரும் RR எண்டர்ப்ரைஸ் நோக்கிப் பறந்தது .

அடுத்த அரை மணி நேரத்தில் , ராஜஷேகர் உள்ளே நுழைந்தார்.

நிம்மதியுடன் ரஞ்சித் அவரை நோக்க , கோபத்துடன் அவர் முறைத்தார்.

"வெல்கம் கமிஷனர். சீக்கிரமா தான் வந்திருக்கீங்க. இதோ தலைமறைவான ரஞ்சித் இருக்கான் பாருங்க."

கிருஷ் சொல்ல ,

"எதுக்கு இப்படியெல்லாம் பண்ற ராகவ்?" என்று ராஜஷேகர் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டார்.

"கர்மா வில் பூமராங்."

" என்ன சொல்லற நீ ? புரியல "

அவரின் கண்கள் கூர்மை பெற்றன.

"நிஜமா புரியல? இல்லை புரிய கூடாதுன்னு நடிக்கிறீங்களா மிஸ்டர் ராஜஷேகர் "

என்று கிருஷ் எகத்தாளமாக வினவினான். அவனின் தொனியில் உள்ளுக்குள் உதறல் எடுத்தது அவருக்கு. எனினும் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கப் பிரயத்தனப்பட்டார்.

அதுதான் முன்னமே ஸ்டேஷனுக்கு வந்து கிருஷ் அவனின் வருகை எதனால் என்று தெளிவாகக் கூறாமல் கூறிவிட்டிருந்தானே.

" சரி , நீ எவ்ளோ கேட்டாலும் தரேன். இதைப் பெருசு பண்ணாத"

என்று தோரணையுடன் கூறினார் ராஜஷேகர்.

" ஓஹ் , நீங்க கமிஷனர் தான . ப்ளீஸ் ஹாவ் யுவர் சீட் சர். "

திடீர் பணிவுடன் கிருஷ் கூற , அதிலே நக்கல் தூக்கலாக இருந்தது நன்றாகவே தெரிந்தது.

இருந்தும் அவனின் எண்ணத்தைக் கணிக்க இயலாமல் மெதுவாக அமர்ந்தார் அவர் .

முன்னே வந்து மேஜையின் மேல் கையை ஊன்றியபடி ,

"இப்பவும் அதே ஸ்டேட்மெண்ட் தான? . எவ்ளோ கேட்டாலும் தருவீங்களா ? இல்ல, பொதுவா டேபிளுக்கு கீழ காசு வாங்க கையை நீட்டி தான உங்களுக்குப் பழக்கம் . அதான் கேட்டேன். "

அவன் கூறியதும் கோபம் மேலோங்க படக்கென எழுந்தார் ராஜஷேகர்.

"மைண்ட் யுவர் வோர்ட்ஸ். யாரைப் பார்த்து என்ன பேசற ? நானெல்லாம் காரியம் ஆக காசு வாங்கவே மாட்டேன்.

யாரோ கொஞ்ச பேரு அப்படி இருக்கலாம் . அதுக்காக ஒட்டுமொத்த போலீஸ் டிப்பார்ட்மெண்டும் இதே மாதிரி தான்னு சொல்லுவியா நீ ? "

இவர்கள் பேசுவதை அத்தனை நேரம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த தர்ஷினி ,
ராஜஷேகர் இவ்வாறு கூறியவுடன் சீறி எழுந்தாள்.


"போதும் நிறுத்துங்க சர். ரொம்ப பெரிய உத்தமர் மாதிரி பேசாதீங்க. ஒட்டுமொத்தமா ஒன்னும் குறை சொல்லல.

உங்களைத் தான் சொல்லறோம். நீங்க காசு வாங்கி காரியத்தை முடிச்சு தந்ததே இல்லையா?"

சரியான டென்ஷனுடன் வந்தவர் அறையினுள்ளே தர்ஷினி இருந்ததையே பார்த்திருக்கவில்லை.

அவள் வந்து இவ்வாறு கேட்பாள் என்று அவர் நினைத்தே பார்த்ததில்லை .

ஒரு நொடி அவரின் பார்வை ரஞ்சித்தை எரிச்சலுடன் தொட்டு மீண்டது .

அதைக் குறித்துக் கொண்ட தர்ஷினி ,

" அவன் அம்பு தான் சர் . அதுல விஷத்தை தேய்ச்சு விட்டது நீங்க தான்னு இப்ப தான் எங்க அண்ணா சொன்னான் . "

என்று ஆராயும் பார்வையுடன் கூறினாள் .

ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்திய ராஜஷேகர் , இதை இன்றே முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

"சரி , அதான் சொல்லிட்டான்ல . இப்ப என்ன பண்ணனும்னு சொல்றீங்க ரெண்டு பேரும் ? சுத்தி வளைக்காம பேசுங்க "

என்க, அடுத்த நொடி பக்கென தர்ஷினி சிரித்தாள் .

" நீங்க எதுவும் பண்ண வேண்டாம் சர் . நாங்க தான் பண்ணனும் இப்ப . என்ன கரெக்ட் தான அண்ணா !? "

என்று அவள் கிருஷை நோக்க , அவனும் கட்டை விரலை உயர்த்திக் காட்டிப் புன்னகைத்தான்.

ரஞ்சித் அதைக் கண்டு , எதுவும் செய்ய வேண்டாம் என்று பழைய பல்லவியையே பேசி படுத்தி எடுக்க , ராஜஷேகரோ என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ராஜஷேகருக்கு டி.ஜி.பி கால் செய்ய , பதறி அடித்துக் கொண்டு அழைப்பை எடுத்தார் அவர்.

அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ , ராஜஷேகரின் முகம் வெளிரிப் போனது . அவர் ஃபோனை வைத்ததும் ,

"என்ன கமிஷனர்?ரொம்ப நல்ல செய்தி போல" என்று கிருஷ் ஆர்வமுடன் கேட்டான்.

"டிஜிபி வரைக்கும் போயிட்டியா ? அவர் கிட்ட எல்லாம் எப்படி பேசுன இதைப் பத்தி ?"

அவர் கடுப்பின் உச்சத்தில் கத்தினார் .

" அட, அவர் நம்ம தோஸ்த் தான். அதுனாலதான் இன்னமும் நீங்க உயிரோட இங்க நின்னு பேசறீங்க.

இல்லன்னா இத்தனை நேரம் எமலோகத்துல என்டர்டெயின்மெண்ட் பண்ணிட்டு இருந்திருப்பீங்க தெரியுமா "

ராஜஷேகரை ஆழமான பார்வை பார்த்துக் கொண்டே அவன் சொல்ல , பிரமிப்பின் உச்சத்தில் தர்ஷினி இருந்தாள்.

சொல்லப்போனால் அவளுக்கு மிகவும் பெருமையாகக் கூட இருந்தது.

"போதும் ராகவ். திஸ் இஸ் யுவர் லிமிட் . சும்மா பூச்சாண்டி காட்டாத.

என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும் . உன்னை உண்டு இல்லைன்னு பண்ணியே தீருவேன்"

என்று ராஜஷேகர் வெறி வந்தது போல் கூறிவிட்டு விடுவிடுவென வெளியேறப் போனார்.

" உங்க பொண்ணு இப்ப என் கஸ்டடில தான் இருக்கா மிஸ்டர் கமிஷனர் "

என்ற கிருஷ்ஷின் குரலில் அப்படியே ரிவர்ஸ் கியர் போட்ட காரைப் போல் திரும்பி வந்தார்.

"சொல்லு , என் பொண்ணு எங்க இருக்கா ? மவனே அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு , உன்ன சும்மாவே விட மாட்டேன் "

" அடடே உன் பொண்ணுன்னா பதறுதோ ! இதுவே ரெட் லைட் ஏரியாக்கு அப்பாவிப் பொண்ணுங்களைக் கடத்தி அவங்க வாழ்க்கையை ஒரே அடியா அழிச்சப்போ ஒன்னும் தெரியலையோ??

இதோ இவனெல்லாம் ஒரு ஆளு . இவன்கிட்ட காசு வாங்கிட்டு கம்பிளைண்ட் வந்தாலும் கண்டுக்காம இருந்து , சம்பவத்தை மூடி மறைச்சுட்டு இருக்க நீ .

உனக்கென்ன வந்துச்சு அதுனால??? காசுக்கு காசு , இவனுக்கென்ன சுகத்துக்கு சுகம். கேவலமா இல்லயாடா உங்களுக்கெல்லாம். "

என்று அங்கிருந்த பூச்சாடியைத் தூக்கி வீசி எறிந்தான் கிருஷ்.

செந்தணலைப் போல் முகம் மாறிவிட்டிருந்தது அவனுக்கு.

ஆனாலும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ரஞ்சித் மெல்லப் பேசினான் .

" ராகவ் , இதைப் பாரு . நான் பண்ணது பெரிய தப்புதான். ஆனாலும் திருந்தி வாழ ஒரு சான்ஸ் எவ்ளோ பெரிய குற்றவாளியா இருந்தாலும் தரலாம்."

" இப்ப வரைக்கும் வெளில நீ பண்ண இந்த அசிங்கமான வேலைய நான் சொல்லலை.

எல்லாரும் நீ ஏதோ கொள்ளையடிச்சுட்டு ஓடிப் போனதா நினைச்சிட்டு இருக்காங்க .

ஆனா நீ கொள்ளையடிச்சது காசு இல்ல , பெண்களோட மானத்தன்னு நான் சொன்னேன்னு வை , நடக்கறதே வேற. "

என்று சொல்லியவன் , அங்கிருந்த பாட்டிலில் இருந்து நீரை வேகமாகப் பருகினான் .

தர்ஷினியிடம் சென்று ஏதோ கேட்டவன் , ராஜஷேகரை நோக்கி,

"இவனுக்கு ஒரு சான்ஸ் தரேன். குற்றவாளிக்கு சான்ஸ் இருக்காமே!! அவனா செத்து போறானா இல்லை நீங்க சுட்டு சாகறானான்னு கேட்டு சொல்லுங்க .

உங்க பொண்ண அப்ப தான் கண்ணுல காட்டுவேன் "

என்று சொல்லிவிட்டு தர்ஷினியிடம் ,

"தர்ஷு, இவங்களை நம்ம RS புரம் பங்களால தங்க வைக்கணும். ஒன் டே டைம் தரலாம். அதுக்குள்ள நல்ல முடிவு வரட்டும் "

முடிவு என்பதை அழுத்திக் கூறிவிட்டு ரஞ்சித்தின் கதறலையும் ராஜஷேகரின் பொருமலையும் கேட்காமல் யாரிடமோ பேசினான்.

அடுத்த சில நொடிகளில் குண்டுகட்டாக இருவரையும் அங்கிருந்து சிலர் அப்புறப்படுத்தி RS புரம் பங்களாவை நோக்கி வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

இங்கே நடந்தது என்ன என்று அறியாமல் , நடப்பது என்ன அறிய முடியாமல் நடக்கப்போவதை அறிய முற்படாமல் படாரெனக் கதவைத் திறந்து புயலென வீட்டினுள் நுழைந்தாள் வைஷாலி.

மனம் முழுவதும் ஆத்திரம் நிரம்பி வழிய பேகைத் தூக்கி எறிந்தபடி அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தாள்.

சத்தம் கேட்டு கிச்சனில் இருந்து வந்த சிவசங்கரி சடன் பிரேக் போட்டு நிற்க , பின்னோடு வந்த சத்யவதி சிலை போல் சமைந்தார்.

" ம்மா , ஒரு கப் டீ . நல்ல சூடா போடு "

நிமிர்ந்து பாராமல் அவள் கூற , இரு தாய்மார்களும் வெவ்வேறு மனநிலையில் அப்படியே நின்றனர்.

பதில் வராமல் போகவே கண்களை உயர்த்திப் பார்த்த வைஷாலி , அடுத்த நொடி

" ம்மா "

என்று கூவியபடி ஓடினாள் .

சொக்கட்டான் பார்வை தொடரும்...
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice update Harinima... ippo intha ponnu yaarai ammannu koopiduthu?? Sathyavathi or shankari??? Ipdi suspense la mudichitiyae ma...
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Super epi pa. Shalu kku nyabagam vandurucha?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top