Sokkattan paarvai - 3

Riha

SM Exclusive
Author
SM Exclusive Author
Ayyoo ayyoo?chellam medhu va prichi vidu ma? nanga wait pannuvom illa ?? don’t wry dear ?kuri pathu ellar manasaiyum thakkurapola poo abba vedu ????????????
Hahahahaha????
Adha dhan pannittu irukken ka...kuri paathu vitruvom. Irunga irunga ka
 

shanthinidoss

SM Exclusive
Author
SM Exclusive Author
அங்கே ஸ்டேஷனில் நடந்த சம்பவம் உள்ளே
கனலை கக்கியது.

"டேய் என்ன மிரட்டி பாக்குறியா. நான் யாருன்னு
தெரியாம விளையாடாத."

அங்கே அவர் கையை விடுவிக்கப் போராட...

" ஹலோ, இந்த கிருஷ் எதிராளியோட பலத்தை தான்
யூஸ் பண்ணுவான். உன்னோட பலவீனத்தை
அடிக்க நான் ஒன்னும் பழைய மாதிரி இல்ல.
இப்ப நான் விளையாட போற கேம் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது."
அவர் என்னவென்று பார்க்க,

"சொக்கட்டான்...
ஆமா நான் சொக்கட்டான் ஆட
போறேன். இது சகுனியே கிருஷ்ணர் கிட்ட தோத்துப் போன விளையாட்டு.
சகுனிக்கு சொக்கட்டான் தான் பலமே. அவன எப்படி அத வெச்சே கிருஷ்ணர் அடிச்சாரோ நானும் அதயே தான் பண்ணப்போறேன்."
என்று கிருஷ் சிரிக்க,

"நீ என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோடா.
என்கிட்டே இதெல்லாம் செல்லாது. "

உள்ளுக்குள்ளே அவருக்கு நடுக்கம் அதிகரித்தது
என்னவோ உண்மையே.

" என்னாங்கடா பாத்துட்டு நிக்கறீங்க. வந்து இவன
புடிச்சு ஜெயில்ல போடுங்க. போலீஸ்னா யாருன்னு
நான் காட்டறேன்".

இதைக் கேட்ட கிருஷ் , "ஆஹான்... கம் ஆன் everyone"

என்று தன் பார்வையை அனைவரையும் நோக்கி ஒரு முறை
சுழற்றினான்.

ஒருவரும் அசையவில்லை!!

"வாட் இஸ் திஸ். Quick " ராஜஷேகர் அவசரப்பட்டார்.

வாய் விட்டு சிரித்த கிருஷ் ,

"சபாஷ். உங்க ஆளுங்களே நீங்க சொல்றத கேக்கலயே
Intetesting"

என்று ஒற்றைப் புருவத்தை ஆச்சரியமாகத்
தூக்க , ராஜஷேகர் அவமானத்தில் குன்றிப் போனார்.

இத்தனை வருட அனுபவத்தில் இது போன்ற நிகழ்வு என்றுமே நடந்ததில்லையே. இவன் என்ன அவ்வளவு பெரிய
ஆளுமை கொண்டவனா!!
அனைவரையும் முறைக்க மட்டுமே இயன்றது அவரால்.

"Actually , நீங்க பண்ணத எல்லாம் சொல்லி உங்கள Suicide இங்கயே பண்ண வெக்கலாம்னு நெனச்சேன்.
ஆனா இந்த இடம் குடுத்து வெக்கலன்னு நெனைக்கறேன்.
யாருமே காப்பாத்த வராம நீங்க செத்துப் போனா, பாக்க நல்லாவே இருக்காதே!! சோ, என்னோட
காய நகர்த்திப் பாக்கறேன். கண்டிப்பா வெட்டு உண்டு.
உங்க பிளான் எல்லாத்தையும்
ஒன்னொன்னா வெட்டுவேன்.!!!

கிருஷ் நிதானமாக , அழுத்தமாகக் கூற , அங்கிருந்த அனைவரையும் கிலி
பற்றியது. விஷயம் என்னவென்று அறியாமலே!!

இருவர் கண்களும் வஞ்சத்தைக் கக்கியது. எவர் கண்களின்
பிரதிபலிப்பு அங்கே வெளிப்பட்டது என்றே யூகிக்க முடியவில்லை.

எழுந்து நின்று அவர் கைகளை விட்ட கிருஷ்,

"உங்க பாவ கணக்குல யாரும் பங்கு போட மாட்டாங்க...ஈவன் இட் மே பீ
யுவர் wife. சோ பீ ரெடி. தி ரியல் ludo ஸ்டார்ட்ஸ் நவ்."

எந்தக் கையால் எதை பிடித்துவிட்டுக்கொள்வது என்றே
புரியாமல் இரண்டையும் மாறி மாறி தேய்த்துக் கொண்டார் கமிஷனர்.தன்னை அழைத்துக் கொண்டு வந்த போலீஸிடம் சென்ற
கிருஷ்,

" உங்க கமிஷனர்க்கு தர வேண்டிய punishment நிறைய இருக்கு. அதெல்லாம் நான் தான் தரணும்.
தந்துட்டு வந்து நீங்க தர்றத அக்சப்ட் பண்ணிக்கறேன்"

என்று
புன்னகைக்க ,

'ஹையோ இவன் எதுக்கு இதை சொல்லி என்னை கோத்து
விட்றான். இவன் சொல்லிட்டு வெளில போயிருவான்.நான் தான் உள்ள போயிருவேன்...இல்ல இல்ல மேலேயே போயிருவேன்.
கடவுளே...இவரு கார எதுக்கு தான் நிறுத்துனேனோ..'

சுவற்றில் மானசீகமாக மண்டையை முட்டிக் கொண்டான்.

வெளியில் ஒப்புக்கு சிரித்து வைத்தான். மறந்தும் கமிஷனர் புறம்
அவன் பார்வை திரும்பவே இல்லை. 'இப்படியே ஓடிரலாமா' என்று
கூட யோசித்தான்.

" சரி இன்னொரு சான்ஸ் கிடைச்சா மீட் பண்ணுவோம்." என்று அவனிடம்
கூறிவிட்டு ,

" அரே கமிஷனர் சாஹிப்...நான் தாயம் போட்டாச்சு. நீங்க எப்ப??"

என்று கூலாக கூலர்ஸ் மாட்டிக்கொண்டு, கார் சாவியை சுழற்றிக்கொண்டே
அழுத்தமாக வேக நடையிட்டுச் சென்றுவிட்டான் கிருஷ்.


வாசலில் வந்து நின்ற லம்போகினி அவன் வந்ததை உணர்த்தியது.
வேகமாக வெளியே வந்த ஸ்ரீதேவி , மகனைப் பார்த்து பரபரப்பாக
உள்ளே சென்று ,

" அன்னம்மா , சீக்கரமா வாங்க. தம்பி வந்துட்டான். டைனிங் ஹால
ரெடி பண்ணுங்க."

"சரிங்கம்மா" என்று கிட்டத்தட்ட ஓடிய அன்னம்மா அந்த மிக
பிரமாண்டமானவீட்டின் சமையல் குழுவின் தலைவி.

வயது கிட்டத்தட்ட நாற்பதை நெருங்கியிருக்கும். அவரின் கீழே 10 பேர் சமையல் செய்கின்றனர்.
அதில் அன்னம்மாவின் கை ருசியே பிரதிபலிக்கும். சமையல் ராணி
என்று கூறினால் மிகையாகாது. பத்து வருடமாக இங்கேயே தான் வேலை செய்கிறார்.வீட்டில் உள்ள அனைவரும்
அவள் உணவிலே மயங்கி , எங்கே சென்றாலும் வீட்டிலேயே உண்பர்.

மூன்று இனிப்பு வகைகள் ,நான்கு காய்வகைகள் , நான்கு கூட்டு வகைகள், இரண்டு வகை சாம்பார் , ரசம் , அப்பளம் , இரண்டு பச்சடி வகைகள், தயிர் என்று எப்பொழுதும் களை கட்டும் உணவு அங்கே உண்டு.

இதைத் தவிர , வார இறுதியில் வகை வகையான வெவ்வேறு நாட்டு உணவு
வகைகளும் இடம் பெறும்.!!!

காலை மற்றும் இரவு கண்டிப்பாக சிற்றுண்டியே . அதுவும் 3 அல்லது 4 வகை இல்லாமல் இருக்கவே இருக்காது.

இங்கு வேலை செய்யும் அனைவருக்கும் அறைகள்
வீட்டின் பின்னால் உள்ள ஒரு பங்களாவில் ஒதுக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட 100 வேலைக்காரர்கள்
இருந்தால் வேறு என்ன செய்வதாம்!!!

வீட்டின் உள்ளே மாடியின் முதல் தளம் முழுவதும் இவனுக்கே
சொந்தம். மேலே சென்று அவன் உணவுண்ண கீழே வரும்
நேரம் எல்லாம் சுட சுட தயாராக இருக்கும். அவனும் அதையே
விரும்புவான்.

உள்ளே வந்த அவனைக் கண்டு ,

"வாப்பா , லஞ்ச் ரெடி.
எல்லாரும் உனக்கு தான் வெயிட் பண்றோம். Refresh பண்ணிட்டு
வரியா?"

என்று அவன் தாய் வினவ,

"ம்ம்" என்றதோடு சென்று விட்டான்.
இதுவே அதிகம் அவனுக்கு.
இதுதான் அவன்.!!!

இவன் வருவதற்குள் இரண்டாம் தளம் செல்வோம். அங்கே அந்த வீட்டின் குட்டி இளவரசி தர்ஷினி செல்பேசியை எவ்வளவு முறைக்க முடியுமோ அவ்வளவு முறைத்துக் கொண்டிருந்தாள்.

"மானம்கெட்டவன். திமிரு திமிரு. இவன அண்ணா கிட்ட
கோத்து விட்டு கொத்து பரோட்டா போடணும்."

என்று திட்டினாலும் , இதழோரம் சிரிப்பு வந்தது அவளுக்கு.

கூடவே, அண்ணா கிட்ட சொல்றதுக்கு சொல்லாமலே இருக்கலாம்.
ரெண்டும் ஒண்ணுதான். அவன் அப்படிதான் என்ற எண்ணமும்
வந்தது .
அதுதான் இவன்!!!

அப்படி என்ன இருக்கு போன்ல ...

" தச்சு..(தர்ஷினிக்கு செல்ல பேராமா!!)
உன்ன எப்ப பாத்தேனோ அப்பவே நான் flat. ஆனா
உங்க அண்ணனோட தங்கச்சியா நீ இருக்கறதுனால எனக்கு பயம் , பீதி உன்கிட்ட சொல்ல.
ஆனா கொஞ்ச நாளா என்னோட கனவுல ஒரே பேய் தான்.
ஆமா ஒரே ஒரு பேய் என்னோட தச்சு தான் வரா.
அதான் பேய் கனவெல்லாம் வராம
நல்லா தூங்க உன்கிட்ட இத சொல்றேன்.
முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்.
பேய பேய் தான் ஓட்டனும்....சோ, ஹெல்ப் பண்ணு pls."

கூடவே ஒரு கவிதை ??வேற..அப்படிதான் சொல்லிருந்தான்..
அந்த சூர்யா!!

காதல் கிளியே தச்சு,
என் நெஞ்சுல உன்ன தெச்சு,
போட்டேன் காதல் ஸ்விட்சு,
நீயும் என்னை மனசுல வெச்சு,
காதல சொல்லுடி தச்சு.

"அடேய் கிராதகா. அண்ணா கூடவே இருந்துட்டு
என்னை சைட் அடிச்சியா. தச்சுவாமே தச்சு...வரேன் டா"

என்று கருவி, தானும் ஒன்றைக் கிறுக்கினாள்.

"எங்க வீட்ல இருக்கு டாக் ஹட்ச்
அத விட்டு உன்ன கடிக்க வெச்சு
உன் மொத்த டிரஸ்ஸையும் பிச்சு
ஓட விடுவா உன் தச்சு."

யோசிக்காமல் அனுப்பி விட்டாள்.
அடுத்த நொடியே சூர்யா ரிப்ளை செய்து விட்டான்.

"தச்சு...ஐ லவ் யூ"
என்ற மெசேஜ் வர ,

இவன் என்ன லூஸா
என்று கடுப்பானாள். பின்னரே பார்த்தால் ,

"உன் தச்சு" என்று அனுப்பிவிட்டோமே என்று முடியைப்
பிய்த்துக்கொண்டாள்...

கீழே வேகமாக இறங்கி வந்த அவன் மேனேஜரை அழைத்தான்.

" எங்க அந்த முத்து. வேலைய விட்டு அனுப்பிட்டீங்களா?"

" அனுப்பியாச்சு சர். ஆனா நல்ல ஆளு சர். சின்ன தப்பு தான. திரும்ப ஒரு சான்ஸ் கொடுக்கலாம்."

வெட்டும்படி பார்த்த அவனைக் கண்டு வெலவெலத்துப்போனார் அந்த மேனேஜர்.

'ஐயோ என்ன இது முத்துக்கு
பேசப்போய் என்னோட சொத்து காலி போலயே'

" நான் சொல்றத மட்டும் செய்யுங்க. சின்ன தப்பா அது, இன்னிக்கு அவனால என்னோட மீட்டிங் flop. பல கோடி நஷ்டம். ஒரு கார் , அத கூட சரியா ரெடி பண்ணி வெக்கத்
தெரியாதவன் எல்லாம் என்கிட்ட வேல செய்ய முடியாது."

இது தான் அவன் ......ராகவ்!!!!

சொக்கட்டான் பார்வை தொடரும்...
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: சூப்பர் சூப்பர் எபி..
 

Sponsored

Advertisements

Top