• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Stress

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

P

PusChr

Guest
Hi sisters.... I am 27 years old... Marriage agi 4 years aguthu... Intha four years la two Times abortion agiruku.... Athum First time twins baby vera.... Correct ah after 5 month tha ipdi aguthu... Two times abortion agum pothum Nan tha romba strong ah irunthen.... But ippo ennala Apdi iruka mudiyala... Second abortion agi 1 yr ku mela aguthu.... Eppavum itha pathiye tha think panitu iruken... Nane enna stress akikiren.... Ithula irunthu epdi na velila vara??
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
neenga treatment edhavadhu poreengala pa.. basically egg strong ah ilana ipdi agum. estrogen treatment panuvanga pa... adhub panirukeengala ?

andha treatment baby ah strong ah stay pana vaikum
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Hi sis,
Ithil irunthu veli vara neenga unglukku piditha visayathil ungaloda mind ah taivat pannunga sis..
Athu cooking or writing or designing eny other ethuvaga irunthalum sari athil ungaloda mind ah fulla taivat pannuga...
Next way...
Athigamaga negative ah ninaikkamal irunga postive thinking than nammala nalla vazhikku kondu pokum... Meload songs athigam kelunga..
Negative va pesaravanga kidda pesatheenga.. Eppoluthum ungala neengale busy ah vechukonga..
Appo mind vera pakkam taivat agathu..
Ithil irunthu neenga seekkaram velivara mudiyum enru neenga muthalil nampunga ithu than medicine...
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Hi sisters.... I am 27 years old... Marriage agi 4 years aguthu... Intha four years la two Times abortion agiruku.... Athum First time twins baby vera.... Correct ah after 5 month tha ipdi aguthu... Two times abortion agum pothum Nan tha romba strong ah irunthen.... But ippo ennala Apdi iruka mudiyala... Second abortion agi 1 yr ku mela aguthu.... Eppavum itha pathiye tha think panitu iruken... Nane enna stress akikiren.... Ithula irunthu epdi na velila vara??
First neenga entha oor pa..
Chennai la mediscan centre la oru appointment vaangi vainga.
Anga complete report scans ellam kodunga.
Avanga sila procedures சொல்லுவாங்க.
நீங்க அதை follow பண்ணுங்க.
கண்டிப்பா உங்களுக்கு triples ye kooda pirappanga.
Ippo naan sonnathu ellam babykku aduthu enna seiyanum அப்படின்றதுக்கான procedures.

Ippo unga stress kku varen
Stress buster kku oru nalla தீர்வு பிடிச்ச பாட்டு கேட்கிறது, பிடிச்ச சமையல் செய்றது, பிடிச்ச விளையாட்டு விளையாடுது இப்படி.
Mind and heart eppovum Namma control la vachukkanum pa.
Yoga பண்ணுங்க இல்லையா walking ponga.
Walking summa pogama appo yaarai ellam thitti theerkanumo theerthudunga ellam மனசுக்குள்ள தான்.
Athuku அப்புறம் நல்லா சாமியை மனசுல நினைச்சு வேண்டுங்க உங்க கஷ்டம் எல்லாம் போய்டும்.

Stress naamalaa erpaduthikirathu pa சூழ்நிலை தகுந்த மாதிரி நாம தான் positive a maathikkanum.

Ithai try பண்ணுங்க பா.. கூடிய சீக்கிரம் good results சொல்லுவீங்க. Best wishes ma..
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
வணக்கம் தோழி நீங்கள் வேலைக்கும் செல்லும் பெண்ணா அல்லது வீட்டில் இருப்பவரா. சிலருக்கு கர்பபை வாய் திடமாக இல்லாமல் இருக்கும் நீங்கள் அதிகபடியான வேலைகள் செய்யும் பொழுது அல்லது மன அழுத்ததாலோ தானகவே கர்பபை வாய் திறந்துவிடும் உங்களின் மருத்துவரிடம் அதற்கான ஆலோசனையை பெறவும் மூன்று மாதம் முடிந்ததும் கர்பபை வாயில் தையல் போடுவார்கள் அதனை பிரசவ டைமில் தையல் பிரித்துவிடுவார்கள் நீங்கள் பிரசவம் முடியும் வரை பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் இன்று மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது தகுந்த மருத்துவரை பாருங்கள் மனதை சந்தோஷமாக வைச்சுக்கோங்க
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹாய் சிஸ்,

"நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை..."

இது கண்டிப்பாக உங்களுக்கும் தெரிந்து இருக்கும் பா. உங்க பதிவிலிருந்தே தெரியவருது நீங்க ஒரு strong personality என்பது. மனதை தளரவிடாதீங்க சகோ...எனக்கு கண்டிப்பாக நல்லது நடக்கும் என்று உங்க மனதில் மந்திரமாக அடிக்கடி நினைத்துக்கோங்க சிஸ்...இந்த பாஸிட்டீவ்வான எண்ணமே நமக்கு ஒரு பெரிய பலம் பா...

அதுவுமில்லாமல் இப்போ மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. கரெக்டான மருத்துவர்களை அணுகி சரியான முறையில் treatment எடுத்தீங்க என்றால் அடுத்த வருடமே உங்கள் மடியை நிறைக்க குழந்தை வரும் சிஸ்..

உங்க மனதை divert பண்ண நீங்க உங்களுக்கு பிடித்த சின்ன சின்ன வேலைகளை செய்யலாம்..
உதாரணமாக புக் படிக்க பிடிக்குமென்றால் படிங்க, ஏதாவது எழுதுங்க, hand work பண்ண தெரிந்தா பண்ணுங்க ....இப்படி ஏதாவது...
கடவுள் மனிதனுக்கு கொடுத்து இருக்கும் மிகப்பெரிய வரம் மறதி தாங்க... So எல்லாத்தையும் மறக்க முயற்சி பண்ணுங்கள்...உங்களால் முடியும்...

இதை பார்த்த உடன் நான் ஏன் ஓடி வந்து பதில் எழுதினேன் என்றால், எனக்கும் திருமணம் முடிந்து 4 வருடங்களாக குழந்தையின்றி treatment ல்லாம் எடுத்து ஓய்ந்து, அலுத்து மன அமைதியில்லாமல் இருந்துருக்கிறேன்...இப்போ கடவுள் புண்ணியத்தில் எனக்கு ஒரு மகன் இருக்கிறான்...அவனுக்கு வயது 15..

So நடந்ததையே நினைத்து கொண்டு இருக்காதீங்க சிஸ்...அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மன அமைதியுடன் திட்டமிடுங்கள்....

வருங்காலத்தில் நீங்கள் விரும்பும் வண்ணம் குழந்தைகளை பெற்று அவர்கள் அடிக்கும் லூட்டியில் திணறி ஐயோ பசங்களா என்று செல்லமாக அலுத்து....மனம் நிறைய நீங்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்தி, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் சகோதரி....
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
அன்புள்ள தோழியே !

மனதை முதலில் திடமாக வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் உணர்வுகளை மதிக்கின்றேன்,மனம் அழுத்தம் என்பது கொடிய நோய் தோழியே அது நமக்கு வேண்டாம், ஐந்து மாதம் கரு தாங்கி பின்பு அது களைவது மிகுந்த வலி தான்,முதலில் ஆறு மாதங்கள் வரை உங்கள் உறவை தள்ளி போடுங்கள் நல்ல உணவு,பழ வகைகளை உண்ணுங்கள்,முக்கியமாகப் போலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள் டாக்டரின் அறிவுரை படி ஏன் என்றால் கரு பை பலவீனமாக இருப்பதே இதற்குக் காரணம்,உடலை தேற்றிக் கொண்டு உங்கள் வாழ்க்கைக்கு அடுத்தப் படிக்குச் செல்லுங்கள்,மனதில் உறுதி வேண்டும் தோழியே,நிச்சியமாக அழகான குழந்தையை ஈன்று எடுப்பீர்கள்,கவலை வேண்டாம் நல்லதே நினையுங்கள் மற்றவர்கள் அர்த்தம் மற்ற பேச்சுக்குச் செவி சாய்க்க வேண்டாம்.நீங்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் கடவுளை கை பற்றுங்கள்.கரு உண்டாக்கினால் ஐந்து மாதம் வரை ஓய்வு கொள்ளுங்கள் உங்கள் கால்களைச் சற்று தூக்கி தலை அணைகளில் வைத்து கொள்ளுங்கள்.கடவுள் உங்களுக்கு வரம் கொடுக்க வேண்டி கொள்கிறேன்.மன வலிமை முக்கியம் .............................................நீங்கள் கருவுற்றாள் எனக்குத் தெரிய செய்யுங்கள் தோழி,அந்நாளுக்காகக் காத்திருக்கிறேன்...............

எனக்கு தெரிந்தவை தோழி..............
 




vidya narayanan

மண்டலாதிபதி
Joined
Apr 29, 2018
Messages
289
Reaction score
1,360
Location
Pondicherry
Hi பா

இது மெயின் ஆஹ் cervix weak இருந்தா hold பண்ண முடியாம ஓபன் ஆகலாம். muscles strength en பண்ணனும்.
Following ஏதாவது இருந்தா correct பண்ணனினாலும் சரி ஆகும்:
1. Over weight body,
2.poly cycstic ovary
3. Stress
4.weight தூக்கறது
5. ஸ்ட்ரோங் intercourse
6.genetic ஆஹ் வேரா யாருக்காவது இருக்குக்கா னு பார்க்கலாம்.

Main ஆஹ் uterus,placenta,cervix strong holding capacity இருந்தாலே miscarriage வராமல் தடுக்கலாம்.
Don't lose hope best wishes ??
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.01489..விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்
கமுத நீழலக லாததோர் செல்வமாங்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.02490. .பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக்
குழக ரென்றுகுழை யாவழை யாவருங்
கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம்
அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.03491. .பொடிமெய் பூசிமலர் கொய்துபு ணர்ந்துடன்
செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம்
அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.04492. .மைய லின்றிமலர் கொய்து வணங்கிடச்
செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.05493..மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட
ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர்
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.06494..வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம்
எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.07
இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.08495..பண்ணின் நேர்மொழி யாளையோர் பாகனார்
மண்ணு கோலம்முடை யம்மல ரானொடுங்
கண்ணன் நேடஅரி யார்கரு காவூரெம்
அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.09496..போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.10497..கலவ மஞ்ஞை யுலவுங் கருகாவூர்
நிலவு பாடலுடை யான்றன நீள்கழல்
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலவ லாரவர் தொல்வினை தீருமே.11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர், தேவியார் - கரும்பனையாளம்மை. தெய்வ நம்பிக்கை இருந்தால் இந்த பதிகத்தை தினமும் படிக்கவும்
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Hi friend,
உங்க பிரச்சனைக்கு சொல்யூஷன் சொல்ற அளவுக்கு மருத்துவம் அறிவியல் குழந்தை பேறு இதில் எல்லாம் பெரிய ஆழ்ந்த அறிவு இல்ல.

இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்ற வகையில் சில விஷயங்கள் தெரியும். அவ்வளவுதான்.

அபார்ஷன் இன்னைக்கு ரொம்பவும் ஆரோக்கியமா இருக்கும் பெண்களுக்கு கூடஇயல்பா நடந்துட்டுதான் இருக்கு. அனுபுவபூர்வமா என்னோட அக்கா தங்கை இருவருக்கும் முதல் கரு அபார்ஷன். என்ன கொடுமை? ஆனா இரண்டு பேருக்கும் அடுத்த பிரசவம் நல்லபடியாக நடந்து குழந்தையும் பிறந்துவிட்டது.

இரண்டு பேருமே என்னை விட ரொம்ப ஆரோக்கியமானவங்க. கருப்பை மாதவிடாய் இது எதிலும் பிரச்சனையில்லை. ஆனாலும் இப்படி நடந்திருக்கு.

இதுக்கு முக்கிய காரணமே ஸ்ட்ரெஸ்தான். பல உடல் ரீதியான பிரச்சனையை கூட மனஉறுதியோட இருந்தா கடந்து வரலாம்.

ஆனா இன்றைய சூழலில் ஒரு சின்ன பிரச்சனைக்கு கூட நம்ம முதலில் மனரீதியாக உடைந்து நொறுங்கி போகிறோம்.

அறிவியலில் சமீபமா நான் படிச்ச விஷயம். மனஉளைச்சல் இல்லாம ஆரோக்கியமா ஏற்படுகிற தாம்பத்யத்தில்தான் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

எல்லாவற்றிற்கும் மருத்துவரை நாடி போவது சிறந்த முடிவோ தீர்வோ இல்ல. மனரீதியாக நம்ம முதலில் எதையும் எதிர்கொள்ள உறுதி தன்மை வேண்டும்.

உங்களுக்கு 27 வயதுதாங்க ஆகுது. உங்க கணவரோட அடுத்த ஒரு வருடமும் முடிந்தளவு சந்தோஷமாக இருங்க. குழந்தை மற்ற கவலைகளை தூக்கி போடுங்க. வாழ்கையை சந்தோஷமா ரசிச்சி வாழுங்க. காதலிங்க....

Be positive be happy. எல்லாமே தானா நடக்கும். அப்படி நடக்காத பட்சத்தில் அடுத்த வருடத்தில் இருந்த மருத்துவரை பாருங்க. ஆனா அப்பவும் உங்க பாஸ்ட்டிவிட்டியை சந்தோஷத்தா விட்டு கொடுத்திராதீங்க.

குழந்தைதான் நம்ம வாழ்க்கையோட டெஸ்டினேஷன் இல்லைங்க. அதை தாண்டி உலகம் ரொம்ப பெரியது. அழகானது.

Love yourself?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top