• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Tamilarasiyin Kathirazhaki! - 22 (a)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் ஹாய் நட்பூஸ்,

என்னை நினைவிருக்கிறதா..? இதோ வந்துவிடுகிறேன் என்று சென்றவள் சொன்னது போலவே ஒரு குறுநாவலை வெற்றிகரமாக முடித்துவிட்டு மீண்டும் வந்துவிட்டேன்.. அதில் ஒரு சின்ன தடுமாற்றம் இந்த எபியில் இருக்கவே செய்யும்.. முடிந்தவரை நாளை இதன் தொடர்ச்சியைக் கொடுக்கிறேன்.. தவறாக நினைக்க வேண்டாம் கொஞ்சம் வேலை அதிகம் அதனால்தான் டைப் பண்ணியவரை போஸ்ட் பண்ணுகிறேன்..

அன்புடன்

சந்தியா ஸ்ரீ
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 22

காலையில் வழக்கத்திற்கு மாறாக லேட்டாக எழுந்த மின்மினி மணியைப் பார்த்தும், “ஐயோ மணி இப்போவே ஒன்பதா..?” என்று அதிர்ந்துவிட்டு வேகமாக எழுந்து குளிக்க சென்றாள்.. அடுத்த அரைமணி நேரத்தில் வேலைக்கு கிளம்பியவளுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது..

‘இந்நேரம் கேண்டீனில் ஒன்னும் இருக்காது.. சரி இன்னைக்கு ஆபீஸ் கேண்டில் சாப்பிட்ட வேண்டியதுதான்..’ என்று நினைத்தவள் அதற்கு மேல் தாமதிக்காமல் அலுவலகம் வந்து சேர்ந்தாள்.. அவள் ஆபீஸ் உள்ளே நுழையும் தருணத்தில் கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் மினி..

பிரபாகரன் காரைவிட்டு இறங்குவதைக் கவனித்தவள், “செம காலையிலேயே தேவனின் தரிசனம்..” அவள் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தும் முதலில் பார்த்தது கடிகாரத்தைத்தான்.. மணி பத்தாக பத்து நிமிடம் இருக்கிறது என்று காட்டவே, “கிரேட் எஸ்கேப் மினி..” என்றவள் மெல்ல மாடிப்படி ஏறினாள்..

அப்பொழுது பிரபாகரனின் செல் அடித்திட வேகமாக அலுவலகத்தின் உள்ளே நுழையவன் செல்போனை ஆன் செய்து காதில் வைத்திட, “ஸார் நான் ஆடிட்டர் சீனிவாசன் பேசறேன்.. நீங்க இப்பொழுது எங்கே இருக்கீங்க..?” என்று பதட்டத்துடன் கேட்டான்..

அந்த நிறுவனத்தை தன்னுடைய கையில் எடுத்த நாளில் இருந்தே அவனுக்கு சில சந்தேகங்கள் இருந்தது.. குறிப்பாக தொழில் வரும் லாபமும், நஷ்டமும் எங்கோ இடிப்பது போலவே தோன்றியது..

அதனால் அதைபற்றிய டிடைஸ் எல்லாம் சீனிவாசனிடம் கொடுத்து கணக்குகளை சரிபார்க்க சொல்லிருந்தான்.. அதைபற்றி பேசவே இப்பொழுது அழைத்தான் சீனிவாசன்..

“நான் ஆபீஸ் வந்துவிட்டேன் சீனிவாசன்.. நீங்க விஷயத்தை மட்டும் சொல்லுங்க..” என்றவன் ஊக்கம் கொடுக்க, “உங்களோட ஆடிட்டிங் கணக்கு வழக்கு எல்லாம் சரியில்ல ஸார்.. பட் நீங்க கொடுத்த கம்பெனி டிடைல் எல்லாம் வெச்சி பார்க்கும் பொழுது.. கணக்கு எழுதுபவர்கள் வேண்டும் என்றே இந்த தவறை செய்தது போல தெரிகிறது..” என்றவன் விளக்கம் கொடுத்தான்..

“ஓஹோ.. சரிங்க சீனிவாசன்.. இனிமேல் நான் பார்த்துக்கொள்கிறேன்.. தேங்க்ஸ் ஃபார் யூவர் இன்பர்மேஷன்..” என்றவன் போனை வைத்துவிட்டு லிப்டின் உள்ளே நுழைந்தான்..

அதற்குள் மதனும் வந்துவிட, “என்ன பிரச்சனை பிரபா..” அவனின் முகம் பார்த்து நேருக்கு நேராக கேட்க, “ஒண்ணுமில்லடா..” என்றவன் தன்னுடைய கோபத்தைக் கட்டுபடுத்திக் கொண்டான்..

அவனின் முகம் இறுகிக் கிடப்பதைக் கவனித்த மதனுக்கு ஏதோ சரியில்லை என்று புரிந்துவிட, அவனும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான்..

மின்மினி மெல்ல மாடிப்படி ஏறிக்கொண்டிருக்க, “ஹாய் மினிம்மா.. குட் மார்னிங்..” என்ற ருக்மணியின் குரல்கேட்டுத் திரும்பியவளின் முகம் பார்த்து குறும்புடன் சிரித்தாள் ருக்மணி..

“ஏண்டி என்னோட மானத்தை இப்படி வாங்கற.. நான் என்ன இட்லி கடை ஆயா முனிம்மா மாதிரியா இருக்கிறேன்..” என்றவளிடம் சண்டைக்கு போனாள்.. அவளை ஏறயிறங்க பார்த்தாள் ருக்மணி..

“நீ இட்லி கடை முனிம்மா இல்ல மினிம்மா.. முடியாண்டி விலாஸ் மினிம்மா மாதிரி இருக்கிற..” என்றவள் மினியை வாரினாள்..

“எல்லாம் என்னோட நேரம்..” என்று சலித்துக்கொண்டவளின் செவியினைத் தீண்டியது அந்த பாடல்.. தன்னையும் அறியாமல் மினியும் அந்த பாடலைப் பாடினாள்..

“கும்மணும் கும்மணும் நல்ல கும்மணும்..” அவள் பாடல்வரிகளை முணுமுணுக்க, “யாரை கும்ம போறீங்க..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டே, அவளுடன் சேர்ந்து படியேறினாள் ருக்மணி..

“உன்னை எல்லாம் கும்மினால்தான் சரிவரும்..” அவள் மிரட்டலுடன் முடிக்கும் முன்னே, “ருக்கு இந்த மினிம்மா கையில் சிக்கினால் நீ அவ்வளவுதான்.. உன்னை ஒரு வழி பண்ணிவிடுவாள்..” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு வேகமாக படியேறினாள்..

அவளின் வேகம் கண்ட மினி சிரித்துக்கொண்டே, “என்ன மணிக்கா இவ்வளவு வேகமாக போற.. தங்கச்சியை பார்த்து பயமா..?” அவளை கேலியுடன் கேட்க, “ஆமா ஆமா..” என்றவள் அங்கிருந்து சிட்டென பறந்துவிட மினியின் சிரிப்பொலி அவளை பின்தொடர்ந்தது..

முதல்நாள் போல இல்லாமல் இப்பொழுது எல்லாம் இருவரும் நன்றாக பேசி பழகினர்.. ருக்மணியின் குறும்பு மினிக்கு பிடித்துவிட, மினியின் துருதுருப்பு ருக்மணிக்கு பிடித்தது.. அதனாலோ என்னவோ இருவரின் இடையே சீக்கிரமே நட்பு மலர்ந்தது..

முதல் ஆளாக மாடியேறி வந்த ருக்மணி, ‘மினிக்கா வரட்டும்..’ என்றவள் அவளுக்காகக் காத்திருக்கவும், மின்மினி படியேறி வரவும் லிப்டின் கதவுகள் திறக்கவும் நேராக அலுவலத்திற்குள் நுழைந்தான் பிரபாகரன்..

அதையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொள்ளாத மின்மினி, “சின்ன வயசு தாங்காது.. தனிதனியா தூங்காது.. பார்க் இருக்கு.. பீச்சி இருக்கு பொண்ணு இருக்கு.. இன்னும் என்ன வேணுங்க..” அவள் மீண்டும் ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே வந்தாள்..

அவளின் பாடல் படிக்கட்டின் கைப்பிடியின் அருகே நின்றிருந்த ருக்மணிக்கு கூட தெளிவாக கேட்க, ‘இந்த மினிக்காவிற்கு நான் வெச்சப்பட்ட பெயர் நிஜமாவே சூப்பர் நேம்தான்..’ என்றவள் மனதிற்குள் புன்னகைத்தாள்..

அவள் மின்மினிக்கு, ‘மினிம்மா..’ என்று பெயர் வைக்க காரணமே அவள் பாடும் பாடல் வரிகள்தான்.. ஒரு படத்தில் ஏதோவொரு பாடலின் இடைப்பட்ட இரண்டு வரிகளை மட்டும் பாடுவாள்.. அதனாலேயே அவளுக்கு அந்த பெயரை வைத்தாள் ருக்மணி..

அப்பொழுது லிப்டில் இருந்து வெளியே வந்த மதன், “சும்மா நிற்பேனடி..” என்றவன் பாடல் வரியைத் தொடங்க, “அண்ணா என்ன மினிக்கா பாட்டுக்கு எசப்பாட்டு இங்கிருந்து வருது.. லாஜிக் எங்கோ இடிக்குதே..” என்றவள் தீவிரமாக யோசித்தாள்..

மதன் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து மினியின் முகம் பார்க்க அவளும் நிமிர்ந்து மதனைப் பார்த்தாள்.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, “காலையிலேயே வா..” என்றவள் சலித்துக் கொண்டாள்..

‘என்ன இவங்களுக்குள் சண்டையும் வரல.. இருவரும் பேசவும் மாட்டேங்கறாங்க.. இதுக்குமேல் பொறுமையாக இருக்காதே ருக்கு.. பொருத்து போதும் பொங்கிவிடு..’ என்று சிந்தித்தவள், “மினிக்கா.. மதன் அண்ணா..” என்று பாசமாக அழைத்து அவர்களின் கவனத்தைக் கலைத்தாள்..

அதற்குள் தன்னிலைக்கு வந்துவிட மதன், “ஒரு பாட்டு பாடக்கூட சுதந்திரம் இல்லாமல் போச்சே..” என்றவன் புலம்பிக்கொண்டே செல்ல, ‘இது என்னடா புது கதையாக இருக்கு..?’ என்றவண்ணம் மினியைப் பார்த்தாள் ருக்மணி..

அவளோ, “நான் இப்போ என்ன சொன்னேன்..” அவளிடம் புரியாமல் கேட்டவள், “ம்ம் சொரக்காய்க்கு உப்பு இல்லன்னு சொல்லிட்டு இருந்தீங்க.. நீங்க போய் கொஞ்சம் போட்டு எடுத்துட்டு வாங்க..” என்றவள் அவளை இழுத்துக்கொண்டு அறையின் உள்ளே நுழைந்தாள்..

மதன் மினி இருவரின் இடையே ஏதோவொரு மௌனம் நிலவியது.. அந்த மௌனத்திற்கான அர்த்தம் மட்டும் அவர்களுக்கு ஏனோ புரியவில்லை.. [உங்களுக்கு ஏதாவது புரியுது..?]

அனால் அதையெல்லாம் கவனிக்காத பிரபாகரன் நேராக அலுவலகத்தின் உள்ளே நுழைந்தும், “மிஸ்.சாந்தி நீங்க கொஞ்சம் என்னோட அறைக்கு வாங்க..” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறையை நோக்கிச் சென்றான்.. அவள் பதட்டத்துடன் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்..

அந்த அறையின் கதவைத்தட்டிவிட்டு அறைக்குள் நுழைந்த சாந்தியை நிமிர்ந்து பார்த்தவன், “இங்கே எப்பொழுது வேலைக்கு சேர்த்தீங்க..” என்றவன் கோபத்துடன் கேட்க, “ஸார்..” என்றவள் இழுத்தாள்..

“என்னடா கம்பெனியின் இலாபம் குறையுதே.. குறையுதே.. என்ன காரணம் என்று இங்கே வந்த நாளிலிருந்து யோசிச்சிட்டு இருக்கிறேன்.. எல்லாம் நீ பொய் கணக்கு எழுதிட்டு இருக்கிற..” என்றவன் கோபத்தின் உச்சாணியில் நின்றுகொண்டு கேட்டான்..

“இல்ல ஸார்..” என்றவள் இழுக்க, “என்ன இல்ல.. இங்கே வந்த நாளில் இருந்தே உன்மேல் ஒரு சந்தேகம் இருந்தது.. உன்னை வேலையில் இருந்து தூக்கிவிட்டேன் கேட் லாஸ்ட்..” அவன் கோபத்தை வெளிபடுத்த பயத்தில் வெடவெடத்து போனாள் சாந்தி..

அடுத்தநொடி அவள் அந்த அறையில் இருந்து வெளியேறிச் சென்றுவிட்டாள்.. உடனே ஆடிட்டருக்கு சீனிவாசனுக்கு போன் செய்து லைனில் காத்திருந்தான் பிரபாகரன்..

மறுப்பக்கம் சீனிவாசன் போனை எடுத்தும், “தேங்க்ஸ் சீனிவாசன்.. நீங்க மட்டும் உண்மையைச் சொல்லாமல் இருந்திருந்தால் இன்னும் இவள் எவ்வளவு பணத்தை பொய் கணக்கு எழுதுவாள் என்றே தெரிந்திருக்காது..” அவன் நிம்மதியுடன் கூறினான்..

“இதெல்லாம் உங்களோட ஐடியாதான்.. நீங்க சொல்லாமல் நாளும் பைலைப் பார்த்திருக்க மாட்டேன்.. அது மட்டும் இல்லாமல் நாமும் இந்த ஆடிட்டிங் வேலைக்கு புதுசு..” அவன் தன்னிலை விளக்கம் கொடுத்தான்..

“தொழிலுக்கு புதுசோ பழசோ தெரியாது.. தொழில் கவனமாக இருக்கீங்களா அதுதான் அந்த சின்சியாரிட்டி ரொம்ப முக்கியம்.. இனிமேல் எதுவாக இருந்தாலும் என்னிடம் தயங்காமல் சொல்லுங்க ” என்றவன் தொழில் பற்றிய பேச்சை எடுத்தான்..

“நம்ம இருவரும் ஒரே ஏஜ் தானே.. நான் உங்களை பிரபாகரன் என்று கூப்பிடவா..” என்று சீனிவாசன் அவனிடம் அனுமதி கேட்க, “இதென்ன கேள்வி சீனிவாசன்.. நீங்க அப்படியே கூப்பிடுங்க..” என்றவன் சிரிப்புடன்..

“உங்களோட கம்பெனி பைல்ஸ் எல்லாம் செக் பண்ணி சொன்னது.. என்னோட ஜூனியர் ஜெயக்கொடிதான்..” என்றான் அவன்..

“ஓஹோ..” என்றவன் வேறு விஷயங்களை பேச தொடங்கிட இருவரின் இடையே நல்ல ஒரு நட்பு மலர்ந்தது.. தொழில் முன்னேற எப்படி போட்டி முக்கியமோ.. அதே மாதிரி தொழில் முன்னே தொழிலாளர் மட்டும் இன்றி மற்றவர்களின் நட்பும் தேவையான ஒன்று..!

குறிப்பாக தொழில் முன்னேற தொழில் நுணுக்கத்தைச் சொல்லிக் கொடுக்க சட்ட ஆலோசகர் மற்றும் ஆடிட்டர் மட்டும் தொழிலாளர்கள் இவர்கள் மூவரும் வேண்டும்.. பணம்பலம் மட்டும் வைத்து தொழிலை வெற்றிகரமாக நடத்த முடியாது..

அந்த தொழிலை நடத்த திறமையும், தேவையான படிப்பும், சிறந்த அனுபவமும், ஆடிட்டர் மற்றும் வக்கீல்களின் உதவியும் வேண்டும்.. இல்லையென்றால் தேவையில்லாத சில பிரச்சனைகளில் தேவையில்லாமல் சிக்கிக்கொள்ள நேரிடும்!

அதனாலோ என்னோவோ பிரபாகரன் அடியிலிருந்து நுனிவரை தந விரல் நுனியில் வைத்திருந்தான்.. யார் மீது எந்த சந்தேகம் வந்தாலும் அதை எப்படி கையாள்வது என்று அவனுக்கு தெரியும்.. தொழில் என்று வந்துவிட்டால் அவனின் கவனம் வேறு எங்கும் திரும்பாது.. அதுதான் பிரபாகரனின் திறமை என்று சொல்லலாம்..!

அவன் போனை வைத்துவிட்டு மினியை அழைத்து சில குறிப்புகளைச் சொல்ல அவளும் கவனமாக நோட்ஸ் எடுத்து அதை டைப் செய்து கம்பியூட்டரில் பதிவிட்டு பிரிண்டவுட் எடுத்து பிரபாகரனின் கையெழுத்து வாங்க வந்தவளிடம்,

“இந்த பைலை மேனேஜரிடம் கொடுத்து சரிபார்த்துட்டு வாங்கிட்டு வாங்க மின்மினி..” என்று அவளை மதனின் அறைக்கு அனுப்பிவைக்க அவளும் மதனிடம் சென்று அந்த பைலைக் கொடுத்தாள்..

“இந்த பைலில் ஸார் சைன் வாங்கிட்டு வர சொன்னார்..” என்றவள் சொல்ல, “இங்கே வெச்சிட்டு போங்க மின்மினி.. நான் அதை சரிபார்த்துவிட்டு உங்களை கூப்பிடுகிறேன்..” என்றவன் வேறொரு வேலையில் மும்பரமாக இருந்தவன் சொல்ல அவளும் பைலை வைத்துவிட்டு சென்றாள்..

அவன் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு அவள் கொடுத்த பைலையும் செக் பண்ணி வைத்துவிட்டு நிமிர மத்தியானம் உணவு இடைவேளைக்கு செல்லும் நேரம் வந்துவிட மதன் எழுந்து பிரபாவின் அறைக்கு சென்றான்..

“பிரபா வாடா சாப்பிட போலாம்..” என்றவன் அழைக்க, “மதன் நீ போய் சாப்பிட்டுவிட்டு வாடா.. எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு..” என்றவன் பைலில் கவனத்தை செலுத்தினான்..

“டேய் நீ இன்னும் சாப்பிடல..” என்றவன் அவனுக்கு நினைவுப்படுத்த நிமிர்ந்த பிரபாகரன், “நான் தனியாக சாப்பிட விடமாட்டியே..” என்றவன் பைலை மூட்டிவிட்டு சேரைவிட்டு எழுந்தான்..

“உன்னை சாப்பிட சொல்லி சொன்னால் நீ நாளைக்கு காலையில் தான் சாப்பிடுவாய்.. வா வா..” என்றவன் அவனை இழுத்துச்செல்ல, “இதனாலேயே உனக்கும் என்னோட மனைவிக்கும அதிகம் சண்டை வரும் போலவே..” அவன் புலம்ப வாய்விட்டு சிரித்தான் மதன்..

“டேய் நீ முடிவே பண்ணிட்டியா..” என்று சந்தேகமாகக் கேட்டவன், “விடுடா.. என்னோட தங்கைதானே..” என்றவன் இலகுவாக பதில் சொல்ல, “பழைய மதனைப் பார்ப்பது போலவே இருக்குடா..” என்றான் பிரபா புன்னகையுடன்..

அவனின் பேச்சில் தன்னுடைய மாற்றத்தை உணர்ந்த மதனும் அதன் அர்த்தம் புரிந்து புன்னகைத்தான்.. இருவரும் சாப்பிட வெளியே ஹோட்டலுக்கு சென்றனர்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top