• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Tamilarasiyin Kathirazhaki! - 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் பிரிண்ட்ஸ்,

நேற்றைய யூடியில் எல்லோரையுமே கதற வைத்துவிட்டேன்.. இனிமேல் மினியின் முடிவு என்னவாக இருக்கும் என்று நீங்க நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியல.. பட் மதன் செய்த காரியத்தில் நால்வரின் வாழ்க்கையும் குறியானது உண்மை.. இதில் பிரபாவின் தவறு எதுவும் இல்லை என்பது என்னோட கருத்து.. நடந்தது ஒரு எதிர்பாராத விபத்து.. இதற்கு மேல் நான் என்ன சொல்றது.. நீங்கதான் சொல்லணும்..
சைலண்ட் ரீடர்ஸ் அண்ட் ப்ளீஸ் ஷேர் யுவர் கமெண்ட்ஸ்..

அத்தியாயம் – 32

அந்த அறையில் இருக்கும் சோபாவில் அமர்ந்து தூங்கும் அவனை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு போதை தெளிந்து எழுந்தும் நடப்பு புரிய தன்னுடைய உலகமே தலைகீழாக மாறிவிட்டதை உணர்ந்தவளுக்கு தலையே சுற்றியது..

ஆனால் நடந்த நிகழ்வை அவளின் மனம் ஏற்கமறுக்க, ‘அவன் வேண்டும் என்றே போதை மாத்திரையை தனக்கு கலந்து கொடுத்து கெடுத்துவிட்டான்..’ என்று நினைத்து அவன் விழிக்கும் வரை பொறுமையை இழுத்து பிடித்து சோபாவில் அமர்ந்திருந்தாள்..

முதல்நாள் இரவு தலைக்கு எறிய போதை கொஞ்சம் இறங்க தூக்கம் கலைந்து எழுந்த பிரபா முதலில் சென்று பாத்ரூம் சென்று முகம் கழுவிவிட்டு, “நேற்று என்ன நடந்தது..” என்று தீவிரமாக சிந்தித்தான்..

முதல் முறை என்பதாலோ என்னவோ அவனுக்கு முதல் நாள் இரவு நடந்தது ஏதும் நினைவு வரவில்லை.. ஆனால் மினியின் மீது தடுமாறி விழுந்தது மற்றும் இன்று உடலில் ஏற்பட்ட சில மாற்றங்கள் அவனின் நேற்று நடந்த நிகழ்வை உணர்த்தியது..

“போதைல என்ன காரியம் பண்ணி வெச்சிருக்கேன்..” என்று தலையில் அடித்துகொண்டு வேகமாக பாத்ரூம் விட்டு வெளியே வந்தான்..

அவன் எழுந்து பாத்ரூம் சென்று திரும்பும் வரையில் பொறுமையாக இருந்தவள், “ஏண்டா என்னை இப்படி செஞ்ச..” என்று அவனை பலமாகத் தாக்கினாள்..

அவளுக்கு இருந்த கொலைவெறியில் அவனை அடித்தே சாய்த்துவிட நினைத்தாள்.. அவனுக்கு கராத்தே தெரியும், அவளை திரும்ப தாக்க அவனுக்கு ஒரு நிமிடம் போதும்.. ஆனால் அவள் அடிப்பட்ட புலி என்ற ஒரே காரணத்திற்காக அவள் அடித்து முடிக்கும் வரையில் தன்னுடைய கரங்களை கட்டுப்பாட்டில் வைத்து பொறுமையாக நின்றான்..

“என்னடா செய்யறது எல்லாம் செஞ்சிட்டு மரம் மாதிரி நிற்கிற.. நான் நேற்றே உன்னிடம் சொன்னேன் இல்ல.. எனக்கு மதனைத்தான் பிடிச்சிருக்குன்னு.. அப்புறம் எதற்கு எனக்கு மாத்திரை கலந்து கொடுத்து இப்படி செஞ்ச..” என்றவள் அடிப்பட்ட புலியாக சீறினாள்..

அவள் வேறு எது சொல்லிருந்தாலும் பிரபா வாய் திருந்திருக்க மாட்டான்.. ஆனால் அவனின் மீது பலி போடுவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை..

“நான் உனக்கு மாத்திரை கலந்து கொடுக்கல.. எனக்கு அப்படி ஒரு அவசியமில்ல.. எனக்கு உன்மேல அந்த மாதிரி தாட் இல்ல.. அப்படி பார்த்த எனக்கும் யாரோ மாத்திரை போட்டு கொடுத்திருக்காங்க.. அதை பற்றியும் யோசி.. சும்மா என்மேல் பலி போடாதே..” என்றவன் உண்மையை அவள் உணர்த்திட அவளின் கை அடிப்பதை நிறுத்தியது..

“ஆமா நீ சொல்றதும் உண்மைதான்.. உன்னோட மனசில ஒரு பொண்ணு இருக்கும் பொழுது நீ இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் உனக்கு இல்ல..” என்றவள் தீவிரமாக சிந்திக்க படுக்கையில் அமர்ந்தான்..

‘இப்படியொரு கேவலமான விஷயம் பண்ணிட்டு மதனோட முகத்தில் நான் எப்படி முழிப்பேன்..’ என்று நினைத்தவனுக்கு ஜெயாவின் முகம் நினைவு வர, ‘என்னோட மனசு நிறைய காதல் இருந்தும் உனக்கு மனசறிந்து நான் துரோகம் பண்ணல ஜெயா..’ என்றவனின் கண்கள் அவனையும் மீறி கலங்கியது..

இதுவரை தவறே செய்து தண்டனை வாங்கிய அனுபவம் அவனுக்கு இல்லை.. அதுவும் உயிருக்குள் இருக்கும் காதலியை மறந்து அந்த இடத்தில் வேறொரு பெண்ணை நினைக்க முடியாது என்று அவன் உணர்ந்தான்..

‘நான் ஏன் உன்னை முன்னாடியே சந்திக்க முடியாமல் போனதுக்கு காரணம்.. நீ எனக்கு கிடைக்க மாட்ட என்ற நிதர்சனத்தை உணர்த்தவா.. நான் உன்னை சந்திக்காமல் இருந்திருக்கலாம் ஜெயா.. இனிமேல் எந்த முகத்துடன் உன் முன்னாடி வந்து நிற்பேன்.. ஜெயா நீ என்னை மன்னிச்சிருடா.. நான் வேண்டும் என்று எதுவும் பண்ணல..’ என்று மனதார அவளிடம் மன்னிப்பு கேட்டான்..

அவனின் காதல் கொண்ட இதயம் வலியில் துடிக்க அவனையும் மீறி அவனின் கண்கள் கலங்கியது.. நேற்றுவரை மனதில் வைத்திருந்த காதல் இப்பொழுது கானல் நீராக மாறுவதை தடுக்க முடியாமல் மனதளவில் நொறுங்கி போனான் பிரபா.. உயிரை உருக்கும் வலியை மறக்க முடியாமல் நிதர்சனத்தை ஏற்கவும் முடியாமல் அவனின் மனம் ஊஞ்சலாடியது..

அதுவரை மதனின் நினைவு இல்லாமல் இருந்த மின்மினி சோபாவில் அமர்ந்து தீவிரமாக யோசிக்க அவளுக்கு எங்கோ பொறி தட்டியது.. நேற்று இரவில் இருந்து மதன் எங்கே போனான் என்ற சிந்தனையுடனே,

“நீ வேண்டும் என்று இந்த காரியத்தை செய்யல.. போதையில் இப்படி பண்ணிட்ட சரி.. நீ எனக்கு வேண்டும் என்றே மாத்திரை கலந்து கொடுக்கல.. அப்போ மதன் எங்கே..? அவன் எங்கே..?” என்று சிந்தனையுடன் பிரபாவின் முகம் பார்க்க, ‘எனக்கு தெரியாது..’ கையை மட்டும் அசைத்தான்..

“மகனே அவன் மட்டும் வரட்டும்.. நீ மாத்திரை கலந்து கொடுத்தாயா..? இல்ல அவனுக்கு நீ ஐடியா கொடுத்தாயா என்று தெரிஞ்சிரும்.. மினிதானே என்று சாதாரணமாக நினைச்சிட்டு இருந்தீங்களோ..” என்றவள் கொலைவெறியுடன் பேசிகொண்டிருக்க பிரபாவின் கவனம் அங்கில்லை..

அந்தநேரம் சுரேஷ் ரூமில் கண்விழித்த மதனுக்கு முதல்நாள் இரவு நடந்தது எல்லாம் நினைவு வர, “சுரேஷ்.. நான் இப்பொழுதே என்னோட ரூமிற்கு போகணும்..” என்றவன் சொல்ல, “டேய் இருடா..” என்றவன் தடுத்தான்..

“இல்லடா நான் இப்பொழுதே போகணும்..” என்றவன் நொடியும் தாமதிக்காமல் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அறைக்கு வந்தான்..

அப்பொழுது அவனின் எதிரே வந்த அந்த பேரர், “ஸார் ஸாரி ஸார்.. நேற்று குடி போதையில் ஆறு மாத்திரை கலந்து மூன்று பேருக்கும் கொடுத்துட்டேன்..” என்றதும், ‘அப்போ மூன்று பேருக்கும் போதை மாத்திரை போட்டு கொடுத்த பிரபா.. மினி..’ என்றவனின் சிந்தனைகள் எங்கோ சென்றது..

“இப்போ நான் என்ன செய்வேன்.. நான் என்ன நினைச்சேன்.. இப்போ என்ன நடந்ததோ..” என்று வெறி பிடித்தவன் போல செல்லும் அவனைப் பார்த்து, “என்ன இந்தாளு இப்படி எதுவும் பேசாமல் வெறி பிடித்தவன் போல போறான்..” என்று திட்டிவிட்டு தன்னுடைய வேலையைக் கவனிக்க சென்றான்..

அவன் நேராக சென்று மினி தங்கியிருந்த அறையின் கதவை தட்ட, “அவன்தான் வந்திருக்கான்..” என்று சுடிதாரின் துப்பட்டாவை இடுப்பில் கட்டிவிட்டு கைக்கு அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று தேடியவளின் விழிகளில் அங்கிருந்த வாக்கிங்ஸ்டிக் விழுந்தது..

நேற்று காலையில் யாரோ அதை மிஸ் பண்ணிவிட்டு செல்ல எடுத்து வைத்திருந்தாள்.. அது இப்பொழுது அவனுக்கு உதவியது.. அதை கையில் எடுத்துகொண்டே சென்ற மின்மினி வேகமாக கதவைத்திறந்து, “வாடா உன்னைத்தான் தேடுகிறேன்..” என்று அசடுவழிய சிரிக்க குழப்பத்துடன் அறைக்குள் நுழைந்தான் மதன்..

அங்கே பிரபாவை புரட்டிபோட்டு அடித்ததை அவனின் உடலில் இருந்த காயங்களே உணர்த்திட நடந்த விபரீதம் மதனுக்கு புரிந்தது.. நிதர்சனம் புரிந்ததும் அவனின் உலகமே தலைகீழாக மாறிவிட, ‘நான் செய்த செயலால் இவனோட வாழ்க்கை போச்சே..’ என்றவன் முன்னே வந்து நின்றாள் மின்மினி..

அவன் சிலையென நின்றிருக்க, “மதன் இந்நேரம் வரையில் நீ எங்கே போயிருந்த..” என்று சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு, “டேய் அவன் என்னை போதையில் கெடுத்துட்டான்.. அவன் எனக்கு வேண்டும் என்று மாத்திரை கலந்து கொடுக்கல.. அப்போ எனக்கு போதை மாத்திரை கலந்து கொடுத்தது யாரு..” கொலைவெறியுடன் கேட்டாள்..

“நான்தான் கலந்து கொடுத்தேன்..” என்றவன் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு உண்மையைச் சொல்ல, “எதுக்கு கலந்து கொடுத்த.. என்னை கெடுக்கவா..” என்று நேர்கொண்ட பார்வையுடன் இடது புருவத்தை கேள்வியாக உயர்த்தினாள் மின்மினி..

அவளின் குணம் அறியாத மதன், “நீ என்னிடம் விளையாடுகிறாயோ என்ற சந்தேகம் வந்தது.. உன்னோட மனசை தெரிஞ்சிக்க அப்படி பண்ணினேன்.. ஆனா..” என்றவன் நிறுத்திவிட, “உன்னை எல்லாம் சும்மாவே விட கூடாதுடா..” என்று அவனையும் அடி வெளுத்துவிட்டு சோபாவில் அமர்ந்தாள்..

அத்தனை அடியை வாங்கிய மதன் அமைதியாக இருக்க பிரபாவின் உயிர் அற்ற உடலாக அங்கே அமர்ந்திருக்க, “டேய் காதலிச்ச அவளிடம் நேரடிய சொல்ல வேண்டியது தானே.. அது என்னடா ஆசிட் ஊத்தறது.. அவளுக்கு போதை மாத்திரை கலந்து கொடுத்து கற்பழிக்கறது.. விருப்பம் இல்லன்னு சொன்ன ஊட ஓட துரத்தி வெட்டுவது.. ச்சீ நீங்க எல்லாம் என்ன மனுஷங்க..” என்று கோபத்துடன் கேட்டாள்..

“உனக்கு என்னை பிடிச்சிருந்தா என்னிடம் நேரடியாக வந்து சொல்ல வேண்டியதுதானே மதன்.. இப்போ அவனோட வாழ்க்கையும், உன்னோட வாழ்க்கையும், என்னோட வாழ்க்கையும் கேள்விகுறி.. இப்போ நீங்க இருவரும் ஆம்பளைங்க என்று சொல்லிட்டு போயிருவீங்க.. யாருக்குடா நஷ்டம்.. இங்கே என்னோட கற்புதான் போச்சுடா..” என்றவள் மட்டும் பேசிக் கொண்டிருந்தாள்..

“டேய் லூசுகளா வாயைத் திறந்து பேசுங்க..” என்றதும் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு நிமிர்ந்த பிரபா, “மதன் என்னை மன்னிச்சிரு..” என்றதும் ஸ்டிக் எடுத்து அவன் தலையில் போட்டவள், “மன்னிப்பு கேட்காதே.. அது ஒருவார்த்தை இப்போ நடந்ததை மாறுமா.. என்னை கொலைகாரி ஆகிட்டாதே..” என்றவள் வெறியுடன் கூறினாள்..

மதன் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அமர்ந்திருக்க, “மினி நான்தான் தவறு செய்தேன்.. நானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என்றதும் அவளுக்கு வந்த கோபத்தில் ஸ்டிக்கை கையில் எடுத்து அவனை மீண்டும் அடி வெளுத்துவிட்டாள்..

பிரபாவின் உடல் முழுவதும் ரத்தமென சிவக்க, “மின்மினியை நீ என்ன நினைச்ச.. மற்ற பொண்ணுங்க மாதிரி நீ என்ன செய்தாலும் பொறுமையாக தலையாட்டிவிட்டு உனக்கு கழுத்தை நீட்டுவேன் என்று நினைச்சியா..” என்றவளை மதன் நிமிர்ந்து பார்த்தான்..

“நான் மின்மினிடா.. எனக்கு நீ கொடுக்கிற வாழ்க்கை வேண்டாம்.. நான் எந்த தவறும் செய்யல.. கற்பு என்பது எனக்கு மனசில்தான் இருக்கு.. எனக்கு இந்த உடலைப்பற்றி எல்லாம் கவலையே இல்ல.. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது..” என்றவளை நிமிர்ந்து பார்த்தான் பிரபா..

தன்னுடைய காதலை குழிதோண்டி புதைத்த பிரபா, “நீ என்ன முடிவு செய்தாலும் நான் அதற்கு கட்டுபடுகிறேன்.. என்னோட காதலை கூட தூக்கி எறிஞ்சிட்டு உன்னோட கழுத்தில் தாலிகட்ட நான்..” என்றவன் பேச முடியாமல் தவிப்பதை பார்த்த மதனுக்குதான் அதிகமாக வலித்தது..
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவன் எந்த அவளுக்கு பனிமலரை விரும்பினான் என்று அவனுக்கு தெரியும்.. ஆனால் இன்று அவன் காதலைத் தூக்கி எறிந்துவிட்டு நடைப்பிணமாக நிற்க யார் காரணம் என்று நினைத்தவனின் மனமே அவனை சாடியது..

“நீ எப்போ கேட்டாலும் என்னோட முடிவு இதுதான்.. உன்னோட கம்பெனியில் வேலை செய்தால் நீ என்ன செய்தாலும் சரின்னு தலையாட்ட நான் ஒண்ணும் பைத்தியம் இல்ல.. என்னோட நாற்பது வருஷ வாழ்க்கையை வீணடிக்க நான் தயாராக இல்ல..” என்றவள் தொடர்ந்து,

“ஆமா நான் சுயநலவாதிதான்.. என்னோட வாழ்க்கை எடுக்கு முக்கியம்.. நான் காதலித்தது மதனைத்தான் உன்னை இல்ல.. இப்போ நடந்த இந்த காரியத்திற்காக உன்னை கல்யாணம் பண்ணிட்டு காலம் முழுக்க் இந்த ஒரு நாளை மட்டும் மனசில் வைத்து நொந்து ஒரு நாள் செத்து போக நான் தயாராக இல்ல..” என்றவள் முடிவை சொல்லிவிட்டாள்..

அங்கே ஒருவன் செய்த தவறால் மூவரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாற மினி தெளிவாக முடிவெடுக்க, “உன்னோட முடிவில் மாற்றம் வரும்.. இது கோபத்தில் எடுக்கும் முடிவு.. நான் குற்றவாளி தானே அதனால நான் பொறுமையாக இருக்கேன்..” என்றவன் அந்த அறையைவிட்டு வெளியேறிவிட்டான்..

அவன் சென்றதும் மதனின் பக்கம் திரும்பிய மின்மினி, “மாத்திரை.. மாத்திரை மாத்திரையா கலந்து கொடுக்கிற.. உன்னை எல்லாம் அடிச்சே சாகடிக்கனும்..” என்று அவனை அடித்துவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தவள்,

“மனசார விரும்பிய பெண் வேண்டாம் என்று தூக்கி எறிஞ்சிட்டு குற்றவாளி மாதிரி போறான்.. நீ மாத்திரை கலந்து கொடுத்து உண்மையை வாங்க பார்க்கிற.. விரும்பின நேரடியாக சொல்ல வேண்டியதுதானே..” என்றவளின் கேள்விக்கு மதனிடம் பதில் இல்லை..

அவன் சிலையென அமர்ந்திருக்க, “ஆண்களோட கட்டுப்பாடு எல்லாம் ஒரு பெண் நெருங்கி வந்து கட்டிபிடிக்கும் வரைதான்.. ஆனால் அவன் நைட் சொன்ன வார்த்தை இப்போ நினைச்சாலும் அந்த பெண் ஜெயாவிற்கு நான் துரோகம் பண்ணினோ என்று நினைக்க தோணுது..” என்றவளின் கண்கள் அப்பொழுது கலங்கியது..

தனக்கு நடந்த பெரிய விபத்தை நினைத்து அவள் இதுவரை கலங்கவே இல்லை.. ஆனால் யாரோ ஒரு ஜெயா என்ற பெண்ணின் வாழ்க்கையை நினைத்து அப்பொழுது கண்ணீர்விட்ட மினியின் முகத்தையே இமைக்காமல் பார்த்தான் மதன்..

பெண் என்ற வரையறைக்கு எதிர்மறையாக இருந்த மினியின் கண்களில் கண்ணீரைப் பார்த்த மதனின் மனமோ வாய்விட்டு கதறியது.. பெண்களின் கண்ணீர் அவ்வளவு அரிதானது.. அவள் கண்ணீர்விட்டு காரியத்தை சாத்திப்பவள் அல்ல.. மனதை கல்லாக்கிக்கொண்டு நினைத்ததை முடிப்பவள்..

திடீரென்று வெறி பிடித்தவள் போல எழுந்து சென்ற மின்மினி தன்னுடைய பேக்கை எடுத்து எதையோ தேடினாள்.. அவள் தேடியது அவளின் கைகளுக்கு கிடைத்துவிட அந்த புத்தகத்தைத் திறந்து கடைசியாக இருந்த கவிதைப் படித்தாள்..

அதன் கீழே, “தமிழரசி என்ற ஜெயக்கொடி..” என்று கையெழுத்து பார்த்தவளின் விழிகள் இரண்டும் கலங்கிட, “நான் உன்னோட முதல் எதிரி ஆகிட்டேனே.. உன்னோட வாழ்க்கை என்னால பாழாய்ப் போச்சே..” என்று கண்ணீர்விட்டு கதறினாள்..

இத்தனை வருடமாக இந்த கவிதை புத்தகத்தை தன்னுடன் பத்திரமாக வைத்திருந்தவளுக்கு அந்த கவிதைக்கான பொருள் புரிந்தது இல்லை.. பல ஆண்டுகளாக இந்த கவிதையை படிக்கிறாள்.. ஆனால் தனக்கு ஏன் இந்த கவிதை புத்தகம் கிடைத்தது என்ற பொருள் இப்பொழுது புரிந்தது..

அவளை சமாதானம் செய்ய நினைக்காமல் மதன் சிலையாக அமர்ந்திருக்க விழிகளைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்த மின்மினி, “டேய் நீ செய்த தவறுக்கு நீதான் தண்டனையை ஏத்துக்கணும்.. நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிற.. இல்ல உன்னை கொலை செய்ய கூட நான் தயங்க மாட்டேன்..” என்றவள் அவனை மிரட்டுவிட்டு துணியை எடுத்துகொண்டு குளிக்க சென்றாள்..

மதன் தீவிரமான சிந்தனையுடன் எழுந்து சென்று அந்த கவிதையைப் படித்தான்.. அந்த வரிகள் உணர்த்திய உண்மையை புரிந்துகொண்ட மதன் மினியிடம் பேசவேண்டும் என்ற முடிவுடன் அவள் வரும்வரை பொறுமையாக அமர்ந்திருந்தான்..

தன்னுடைய முட்டாள்தனத்தால் பிரபாவின் வாழ்க்கை கேள்வி குறியாக மாறியதை அவனின் மனம் நடுநிலையாக நின்று சிந்தித்தது.. இப்பொழுது கூட அவனைக் குற்றவாளியாக நினைக்க மதனால் முடியவில்லை.. தன்னோட அவசரபுத்தியை நினைத்து மனம் நொந்து போனான் மதன்..

அவன் மட்டும் அவரசப்பட்டு அந்த காரியத்தை செய்யாமல் இருந்திருந்திருந்தால் மூவரின் வாழ்க்கையும் இன்று திசை மாறியிருக்க வாய்ப்பே இல்லை என்று உணர்ந்தவன் தலையில் அடித்துகொண்டான்..

‘தன்வினை தன்னை சுடும்..’ என்ற பழமொழியை அவனுக்கு நினைவு படுத்திய அவனின் மனமே, ‘நீயெல்லாம் என்ன ஜென்மம்.. உன்னோட நண்பன் உனக்கு செய்த உதவிக்கு எல்லாம் சேர்த்து நீ நல்ல செய்துவிட்டாய்.. அவனை உனக்கு எதிரியாக மாற்றிட்ட.. இதுக்கு எல்லாம் காரணம் உன்னோட அவசரபுத்தி..’ என்று அவனை சாடியது..

அவள் குளித்து உடை மாற்றிவிட்டு வெளியே வந்து, “வா ஹாஸ்பிட்டல் போலாம்..” என்றவளை நிமிர்ந்து பார்த்த மதன், “நான் உன்னிடம் பேசணும் மினி..” என்றதும் கேள்வியாக அவனைப் பார்த்தாள் மின்மினி..
அங்கிருந்து சென்ற பிரபாவிற்கு மனம் முழுவதும் ரணமாக மாறினாலும் அவனின் வேலைபளு அவனை கரம்நீட்டி அழைக்க வேறு வழி இல்லாமல் குளித்துவிட்டு தெளிவான சிந்தனையுடன் தன்னுடைய வேலையை கவனித்தான்..

கடைசியில் அவனின் காதல் கானல்நீராக மாறிவிட, ‘நண்பனுக்கே துரோகம் செய்துவிட்டேனே..’ என்ற குற்ற உணர்வுடன் மனதிற்குள் நொறுங்கி போனான் பிரபா.. அன்று அங்கிருந்து சென்ற பிரபா ஒருவாரத்தில் அங்கிருந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு ஏர்போர்ட் சென்றான்..

அங்கே மதன் அவனுக்காக காத்திருக்க அவனின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்து தலைகுனிந்தான் பிரபா..

ஆனால் அவனை நேருக்கு நேர் பார்த்த மதன், “டேய் என்னோட முகத்தை நிமிர்ந்து பாருடா..” என்று சொல்ல, “அந்த தகுதி எனக்கு இல்லடா.. நான் துரோகிடா..” என்றவன் அவனைவிட்டு விலகி நடந்தான்..

அங்கே நடப்பதை எல்லாம் கொஞ்சம் தள்ளி நின்று கவனித்த மின்மினியின் அருகில் சென்றவன், “உனக்கு நான் செய்த துரோகத்திற்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் எனக்கு ஓகே..” என்றவனின் முன்னே ரிசைனிங் லெட்டரை நீட்டினாள் மின்மினி..

அவன் நிமிர்ந்து அவளின் முகம் பார்க்க, “எனக்கு இனிமேல் அந்த வேலை வேண்டாம்.. நான் இனிமேல் பெங்களூர் வர மாட்டேன்.. உங்களோட வாழ்க்கையிலும் குறுக்கே வர மாட்டேன்.. சீக்கிரமே உங்க மனசில் இருக்கும் பெண்ணை கல்யாணம் பண்ணிகோங்க..” என்றவள் தொடர்ந்து,

“எனக்கு ஒரு பத்திரிகை அனுப்புங்க பிரபா..” என்றவளை அவன் புரியாத பார்வை பார்க்க, “நமக்கு கிடைச்சது ஒரு வாழ்க்கை.. அதை யாருக்கும் இடையூறு இல்லாமல் சுயநலமாக வாழ்ந்துட்டு போய்விட வேண்டும்.. பிகாஸ் மினி இஸ் சுயநலவாதி..” என்று புன்னகைத்தாள்..

“உன்னோட முடிவு மாறும்..” என்றவன் உறுதியாக சொல்ல, “அதில் மாற்றமே இல்ல..” என்றவள் அவனை புன்னகை முகமாக வழியனுப்பி வைக்க, “நீ என்னை தேடி வருவ மினி..” என்றவன் கசந்த புன்னகையுடன் சொல்லிவிட்டு முன்னே நடந்தான்..

“மினி யாரைத் தேடியும் வரமாட்டாள்..” என்று சத்தமாக சொல்ல, “அதையும் பார்க்கலாம் மினி..” என்றவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.. அவன் உயிரற்ற உடலாக செல்வதைப் பார்த்த மதன் குற்ற உணர்ச்சியுடன் நின்றிருந்தான்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சந்தியா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Madhan panna velaiyil 3 peru life confuse aayituchu .pothaiyil koota olunga irunthu irukalam intha prabha . Madhanai than nyayama purati edukanum sri
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top