Tamilrasiyin Kathirazhaki! - 28 (a)

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் பிரிண்ட்ஸ்,

ஸாரி ஸாரி ஸாரி.. இந்த எபி ரொம்ப சின்னதாக இருக்கும்.. மன்னிக்கவும்.. இனிமேல் முடிந்தவரை சீக்கிரம் எபி தருகிறேன்.. ரொம்பநாள் காக்க வைத்துவிட்டு குட்டி எபி தருவது எனக்கும் சங்கடம்தான்.. மன்னிக்கவும்.. நாளை கொஞ்சம் பேசிய யூடி தருகிறேன்..

நாளைக்கு என்னோட பாட்டிக்கு கண் ஆப்ரேஷன்.. அதனால் தான் யூடி தர முடியாமல் தள்ளி தள்ளி போகிறது.. எப்படியும் வெள்ளிகிழமையில் இருந்து எப்பொழுதும் போலவே ud தர முயற்சி செய்கிறேன்..

பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ

அத்தியாயம் – 28

இன்றோடு அவர்கள் பெங்களூர் வந்து ஆறுமாதம் சென்றிருக்க, ருக்மணி ஜெயாவுடன் பேசி ஒரு மாதம் சென்றிருந்தது.. இந்த ஆறுமாதத்தில் ப்ராஜெக்ட் வேலைகள் ரொம்ப அதிகமாக இருந்தது.. அனைவரும் தங்களின் வேலையில் கவனம் செலுத்தினர்..

வானில் நிலவு தனியாக விடியலை நோக்கி பயணிக்கும் நடுநசி நேரத்தில் தன்னறையில் அமர்ந்து கதறி அழுதுகொண்டிருந்தாள் ஜெயா.. அவளின் அருகில் நித்திரையில் ஆழ்ந்திருந்த ருக்மணி தன் தூக்கம் தெளிந்து விழித்து பார்த்தாள்..

ஜெயா ஜன்னலின் ஓரமான நின்று வாய்விட்டு கதறியழுக, “ஏய் என்னடி ஆச்சு..” என்று பதறியடித்துக்கொண்டு எழுந்து அவளின் அருகில் சென்றாள் ருக்மணி..

நடுஇரவில் தேற்றுவதற்கு ஆள் இல்லாமல் தனியான நின்று அழுகும் தோழியின் நிலையறிந்து, “ஜெயா உனக்கு என்னடி ஆச்சு..?” என்று அவளை தோளோடு சாய்த்து ஆதரவாக அவளின் தோளை வருடினாள்..

அவளின் ஆறுதலில் அவளின் அழுகை கொஞ்சம் குறைய, “ருக்கு நான் அப்பாவைப் பார்க்க போகணும்.. ப்ளீஸ் இப்பொழுதே போலாம்.. நான் அப்பாவையும், அம்மாவையும் பார்க்கணும்..” குழந்தை போல அடம்பிடித்தாள்..

ஜெயா எப்பொழுதும் இப்படியெல்லாம் அடபிடிக்கும் ரகமில்லை.. ஆனால் இன்று ஏனோ அவள் குழந்தைக்கு நிகராக அடம்பிடிக்க, “சரிடி.. நாளைக்கு காலையில் போகலாம்.. இதற்காகவா நீ அழுகிற..” நிதானமாகவே கேட்டாள்..

“இல்ல.. எனக்கு மறுபடியும் அதே கனவு வருது.. எனக்கு என்னவோ சரின்னு தோணல.. நான் அம்மாவைப் பார்க்கணும்..” என்றவள் அழுகையினூடே..

“என்ன கனவு..? ஆமா நேற்று நீ சீக்கிரம் தூங்காமல் இருந்தல்ல என்ன பண்ணிட்டு இருந்த..?” என்று கேள்வியை அடுக்கினாள் ருக்மணி..

“நேற்று கதிரழகி கதையோட எண்டு எழுதினேன்.. அதனால லேட்டாகத்தான் தூக்கினேன்.. மீண்டும் அதே கனவு..” என்றாள்

“உன்னை யாரு இப்பொழுதே எண்டு எழுத சொன்னது..? நைட்ல தூக்காமல் இருந்தா உனக்கு நல்ல கனவு வருமா..?” அவளை அதட்டியவள்,

“ஜெயா மனசைபோட்டு குழப்பாதே.. குழப்பம் என்னைக்கும் ஒரு சிறந்த தீர்வை தராது.. வா வந்து தூங்கு..” அவளை மிரட்டித் தூங்கவைத்தாள்..

அதன்பிறகு வந்த நாட்களில் அவள் இயல்பாக இருப்பதைப் பார்த்து நிம்மதியடைந்தாள் ருக்மணி.. அதெல்லாம் ஒருவாரம் மட்டும்தான்.. மறுவாரமே இருவரும் திருச்சி செல்லும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டாள் ஜெயா

அன்று காலையில் ஆபீஸிற்குள் நுழைந்தவளுக்கு ஏனோ வேலையே ஓடவில்லை.. அது ஏன் என்று புரியாமல் தலையில் கைவவைத்து குழப்பத்துடன் அமர்ந்தாள்..

அவள் தீவிரமான சிந்தனையில் இருக்க, “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிற..” என்று விசாரித்தாள் மின்மினி..

“இல்லக்கா இன்னைக்கு காலையிலிருந்தே ஒரு மாதிரி இருக்கு.. நான் லீவ் எடுத்துட்டு வீட்டிற்கு போறேனே..” என்றவள் சோர்வாகவே..

“ஏன் உடம்பு சரியில்லையா..” என்று கேட்க, “என்னன்னு சொல்ல தெரியல.. மனசு ஒரு மாதிரி இருக்கு..” என்றவள் அலுவகத்திற்கு லீவ் சொல்லிவிட்டு ஜெயாவின் ஆபீஸ் சென்றாள்..

அது ஆடிட்டர் ஆபீஸ் என்பதால் எந்தவிதமான தயக்கமும் இன்றி நேரடியாக அலுவலகத்தின் உள்ளே நுழைய அங்கே யாரும் வேலை செய்யாமல் கூடிநின்று பேசிக் கொண்டிருந்தனர்..

“நம்ம ஆபீஸ்தான் அப்படின்னு பார்த்தா.. இங்கே அதற்கு மேல போல..” என்று புலம்பிக்கொண்டே

அங்கே ஜெயா டேபிளில் படுத்திருக்க, “இவள் பாரு நைட் முழுவதும் யூடி கொடுத்துவிட்டு ஆபீசில் வந்து தூங்கற.. ஆமா இந்த சீனிவாச சக்கரவர்த்தி இவளை சும்மாவா விட்டாரு..” என்று அவளை நெருங்கினாள்..

ஜெயாவின் ஓனர் என்ற முறையில் அவனுடன் அதிகமாக சண்டை போடாமல் இருந்தாள் ருக்மணி. அவனும் ஜெயாவிற்காக அமைதியாக இருந்தான்.. இருவரின் இடையே சண்டை இல்லாவிட்டாலும் கூட இருவரும் கொஞ்சம் கொஞ்சம் பேச தொடங்கினர்..

அப்பொழுது கேபினில் இருந்து வெளியே வந்த சீனிவாசன், “ஜெயாவிற்கு உடம்பு சரியில்ல.. இப்பொழுது என்ன பண்றது..” என்று ஹரிணியிடம் கேட்டான்..

“இவளோட க்ளோஸ் பிரிண்ட் எதிரில் இருக்கும் கம்பெனியில் வேலை செய்யறாங்க.. அவங்களை கூப்பிடுங்க ஸார்..” என்றதும், “ஜெயாவிற்கு என்ன..” என்ற கேள்வியுடன் அவர்களின் அருகில் சென்றாள் ருக்மணி..

அவளின் குரல்கேட்டு திரும்பிய சீனிவாசன், “என்னன்னு தெரியல ருக்மணி.. காலையிலிருந்தே ஒரு மாதிரியாக இருக்கிற.. இப்பொழுது ரொம்பவே முடியாமல் டேபிளில் படுத்து தூங்கிட்டா..” என்றவன் கவலையுடன்..

“நைட் கண்முழித்து உடம்பைக் கெடுத்துக்காதே என்றால் என்னுடன் சண்டைக்கு வருகிற..” என்று புலம்பிக்கொண்டே தோழியின் கழுத்தைத் தொட்டுப்பார்த்தாள்..

அவளின் உடல் தீயென கொதிக்க, “இவளுக்கு ஜுரம் அடிக்கிது போல..” என்றவள், “சீனிவாசன் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணிங்க.. திருச்சிக்கு இரண்டு டிக்கேட் வாங்கி கொடுங்க..” என்றவள் அவனிடம் பணத்தைக் கொடுத்தாள்..

“இந்தநேரத்தில் ஊருக்கு போகனுமா..” என்று பதட்டமாகவே கேட்டாள் ஹரிணி..

“நாங்க ஊரிலிருந்து வந்து ஆறுமாதம் ஆச்சு.. அதற்கு பிறகு நாங்க ஊருக்கே போகல.. இவள் ஒருவாரமாகவே ஊருக்கு போலாம் என்று சொல்லிட்டு இருந்தா..” என்றவள் கவலையுடன்..

அவள் பேசும் பொழுது அவளின் முகம் மாறுவதை கவனித்த சீனிவாசனின் உள்ளத்தில் சலனம் ஏற்படவே, “சரி இரு நான் டிக்கெட் புக் பண்றேன்..” என்று திருச்சிக்கு இரண்டு டிக்கெட் புக் பண்ணினான்..

அதன்பிறகு ஜெயாவை ஹாஸ்பிட்டல் அழைத்துச் சென்றனர்.. இரவு ரயிலுக்கு இருவரும் திருச்சி கிளம்பிச்செல்லும் வரையில் அவர்களுடன் இருந்தான் சீனிவாசன்.. அவர்கள் இருவரும் சென்றதும் அவனுக்கு ஏதோபோல இருந்தது.. அது என்னென்று அவன் சிந்திக்கவில்லை..

‘தடக் தடக்..’ என்ற ஓசையுடன் ரயில் செல்ல தன் எதிரில் அமர்ந்துகொண்டே ஆழ்ந்த துயிலில் இருந்தவளின் முகம் பார்த்த ருக்மணியின் நினைவுகள் எல்லாம் எங்கோ சென்றது..
 
#7
ஜெயா வாழ்க்கையில் என்ன நடந்தது🤔 ஜெயா ஓட உண்மையான அப்பா அம்மா 🤔யாரு 👍அவங்களுக்கு என்ன ஆச்சு ஜெயாவுக்கு வர கனவு நடக்கப் போகிறதா நடந்ததோட ஞாபகமா🤔🤔🤔🤔😇😇😜😜
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top