• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thaalikayiru -12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

paulrasaiya

நாட்டாமை
Joined
Jun 5, 2018
Messages
36
Reaction score
206
Location
Irenepuram
அத்தியாயம் 12

வீட்டைச் சுற்றி மரங்கள் நின்றிருந்த போதிலும் காற்றின் வரத்தின்றி மரங்கள் ஆடாமல் அசையாமல் நின்றன.உச்சி வெயில் உக்கிரத்தைக் காட்டத் துவங்கியது.

கதவு திறந்தே கிடந்தது. கேடி ஜோசப் வீடு என்பதால் திருடன் கூட யோசித்தே உள்ளே நுழைவான்.

கேடி ஜோசப் காலையில் வள்ளியூர் கோர்ட்டுக்கு போவதாகவும் வருவதற்கு தாமதமாகும் என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

வசந்தி அதற்கு ”சரிங்க” என்றோ ”போய்ட்டு வாங்க” என்றோ ஒரு வார்த்தைச் சொல்லவில்லை. அவள் பாட்டுக்கு புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தாள்.

பத்து மணி வாக்கில் சமையல் முடித்து துணிகள் நனைத்து தன்னை ஆசுவாசப்படுத்திய போது மணி ஒன்றைத் தாண்டியது.

மதிய உணவை முடித்து விட்டு ஞாபகங்கள் தாலாட்டும் நாவலில் முகம் புதைத்திருந்தாள் வசந்தி. நாவலில் அச்சாகியிருந்த எழுத்துக்களை விழுங்கிக் கொண்டிருந்தது அவள் விழிகள். நாவலில் பத்து பக்கங்கள் தாண்டும்போது லேசாய் கொட்டாவி வந்தது. உண்ட மயக்கம் என்பதைப் புரிந்து கொண்டு கதவைத் தாளிட்டு விட்டு படுத்துத் தூங்கினாள்

சாயங்காலம் நான்கு மணிக்கெல்லாம் டாண் என்று எழுந்தாள், பக்கத்து கடையிலிருந்து பால் வாங்கி வந்து டீ போட்டு நொறுக்குத் தீனியாக நேந்தரம்பழம் சிப்ஸ் சேர்த்துக்கொண்டு பின்பு ஒன்பது மணி வரை நாவல் வாசிப்பு தான்.

மாலை நான்கரை மணிக்கு மார்த்தாண்டத்திலிருந்து முழங்குழி வழியாக மேலங்கலத்துக்கு வந்து கொண்டிருந்தான் சூர்யா. அவன் மனதில் சட்டென்று வசந்தியும் கேடி ஜோசப்பும் நினைவுக்கு வந்தார்கள்.

வசந்தியை தோட்டத்தில் வைத்து பார்த்த உடனே அவள் மீது மையல் கொண்டு அவளை அடைய இலவு காத்த கிளி போல் காத்திருந்தான். ஆனால் அவன் ஆசையில் மண் அள்ளிப் போட்டான் கேடி ஜோசப்.

வசந்திக்கு திருமணம் ஆகியிருந்த போதிலும் அவளைப் பற்றி மனதில் எழும் குரூர ஆசைகளுக்கு அவனால் அணை போட முடியவில்லை. அவளை என்றாவது ஒரு நாள் அடைய வேண்டும் என்ற வைராக்யம் அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்தது.

வசந்தியின் வனப்பு அவனை வசீகரித்தது. அவள் நினைவாகவே கிடந்தான். அவளுக்கு திருமணம் ஆனதைக் கேட்டவுடன் உள்ளம் அனலில் பட்ட புளுவென துடித்தது.

தீப்பொறி திவாகரின் வயலங்கரை பங்களாவில் வைத்து அந்த செய்தியைக் கேட்ட போது ஒரு கணம் ஆடித்தான் போனான் ஆனால் வெளிக் காட்டிக்கொள்ளாமல் சோகங்களை சுமந்தபடி வீடு திரும்பினான்.

கேடி ஜோசப் முரடன், ரவுடி ஆனால் வசந்தியோ அழகுப் பதுமை. இருவருக்கும் பத்து வயதுக்கு மேல் வித்தியாசம் இருக்கும். அவன் ஆறடி உயரத்தில் ஆஜான பாகுவாக இருந்தான். மார்புகள் விரிந்து, இடை சுருங்கி அகன்ற உருவத்துக்குச் சொந்தக்காரனாக இருந்தான்.

வசந்தி ஐந்தடி உயரத்தில் ஒல்லியாய் நாற்பத்தி இரண்டு கிலோ எடையில் இருந்தாள் இருவரும் சேர்ந்து போனால் யானையும் ஆட்டுக்குட்டியும் போகிறது என்று பார்ப்பவர்கள் கிண்டலடிப்பார்கள்.

ஜோடிப்பொருத்தம் இல்லை, காதல் பொருத்தம் இல்லை பிறகு எங்கே மனப்பொருத்தம் வந்து குடும்பம் நடத்துவார்கள்.

உண்மையிலேயே வசந்தி பிரபாகரனை மறந்து விட்டு கேடி ஜோசப்போடு சந்தோஷமாய் குடும்பம் நடத்துகிறாளா? அல்லது பிரபாகரன் நினைவாக இருந்து அவனுடன் சண்டை போடுகிறாளா? என்பதை அறிந்து கொள்ள அவன் மனம் விரும்பியது.

முளங்குழியிலிருந்து நேராக முள்ளஞ்சேரிக்கு வண்டியைத் திருப்பினான் சூர்யா. கேடி ஜோசப்பின் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு அணிந்திருந்த கூலிங்கிளாசை எடுத்து கையில் வைத்துக்கொண்டு வாசல்படி நோக்கி நடந்தான்.

வீட்டில் கேடி ஜோசப் இருந்தால் தனக்கு விரோதமாக இருக்கும் யாரையாவது ரெண்டு தட்டு தட்ட எவ்வளவு தொகை ஆகும் என்று கொட்டேசன் கேட்பது போல் நடிக்க வேண்டும். அவன் இல்லையென்றால் வசந்தியிடம் ரெண்டு வார்த்தை பேசி விட்டு வரவேண்டும்.

அவன் நினைத்தது போல் கேடி ஜோசப் வீட்டில் இல்லை. வசந்தி வாசிப்பில் லயித்திருந்தாள். அவன் தைரியமாய் வாசல்படி தாண்டி உள்ளே நுழைந்து ஹாலுக்கு வந்தான்.

”என்னம்மா வசந்தி...எப்பிடி இருக்குற? என்ன இளைச்சு போயிட்ட? என்ன ஞாபகம் இருக்கா? நான் சூர்யா. ஆமா உன் புருஷன் கேடி ஜோசப் வீட்டில இல்லையா?” அவன் பார்வையை அவள் மீது படர விட்டபடியே பேசினான்.

”இல்ல...அவர் வெளியே போயிருக்கார், உங்களுக்கு என்ன வேணும்?” உதட்டைச் சுழித்தபடிச் சொன்னாள் வசந்தி.

” அது வேற ஒண்ணும் இல்ல வசந்தி, எனக்கு விரோதமா இருக்குற ஒருத்தன போட்டுத் தள்ளணும், அதான் உன் புருஷன்கிட்ட சொல்லீட்டு போலாமுன்னு வந்தேன், ஏண்ணா உன் புருஷன் பணத்துக்காக எதையும் செய்றவனாச்சே!” புன்னகைத்தபடி சொன்னான் சூர்யா.

”இதெல்லாம் நீங்க அவர்கிட்டதான் பேசணும், என்கிட்ட பேசவேண்டிய அவசியமில்ல, நீங்க போலாம்!” வெடுக்கென்று சொன்னாள் வசந்தி. அவள் வார்த்தைகளில் எரிச்சல் அதிகமிருந்தது.

”வீட்டுக்கு வந்த விருந்தாளிய இப்பிடி விரட்டி அடிக்கிறியே!”

”நீ விருந்தாளியா? ஒரு பொண்ணு தனியா இருக்குற வீட்டுல இப்பிடி வேணுமுன்னே வந்து வம்பளக்கிறியே வெட்கமாயில்ல?”

”வெட்கமா? எனக்கா? வசந்தி நீயோ பிரபாகரன காதலிச்ச, பிரபாகரனும் உன்னக் காதலிச்சான். அவன் கட்ட வேண்டிய தாலிய கேடி ஜோசப் கட்டீட்டான், உங்க குடும்ப வாழ்க்கை இனிக்குதா ? இல்ல கசக்குதா?” நக்கலாகவே கேட்டான் சூர்யா. அவனது வார்த்தைகள் அவள் இதயத்தை குத்திக் கிழிப்பது போல் இருந்தது வசந்திக்கு.

”நீங்க நின்னு பேசிகிட்டு இருக்கிறது கேடி ஜோசப்போட வீடு, ஞாபகம் வெச்சுக்க, என்கிட்ட இந்த மாதிரி பேசுனது கேடி ஜோசப் காதுல விழுந்தா உன்ன உண்டு இல்லையின்னு பண்ணியிடுவார்!” ஆவேசமாய் சொன்னாள் வசந்தி.

”பயமுறுத்துறியா? இந்த ஊருக்குத்தாண்டி உன் புருஷன் கேடி ஜோசப், ஆனா எனக்கு வெறும் ஜோசப். அதனால தாண்டி உன் வீடு தேடி வந்து உன்கூட பேசீட்டு நிக்கிறேன். வசந்தி ஊர்குருவி எண்ணைக்குமே பருந்தாகாது, உன் தகுதிக்கு மீறி அந்த பிரபாகரன் மேல ஆசப்பட்ட, கடைசியில என்ன ஆச்சு, அண்ணைய்க்கே நீ என் ஆசைக்கு இணங்கி இருந்தா கேடி ஜோசப் உன் கழுத்துல தாலி கட்டியிருப்பானா?”

”எனக்கு ஏற்பட்ட வாழ்க்கைய நினைச்சு தினம் தினம் நான் செத்துகிட்டே இருக்கேன், வெந்த புண்ணில வேலப் பாய்ச்சுற மாதிரி என்கிட்ட வந்து பழைய நினைவுகள ஏன் ஞாபகப் படுத்துறீங்க, என் வாழ்க்கை ஒரு பாலைவனம், அந்த பாலைவனத்துல பிரபாகரனோட நினைவுகளோட நான் ஒரு பாறையாகவே கிடந்துட்டுப் போறேன், தயவு செய்து இங்கிருந்து போயிடுங்க!” வசந்திக்கு சட்டென்று பிரபாகரன் ஞாபகம் வர லேசாய் கண் கலங்கியது.

அவள் பேச்சிலிருந்து பிரபாகரனை அவள் மறக்க வில்லை என்ற உண்மை புரிந்தது. அவள் சொன்ன வார்த்தை திரும்பத் திரும்ப அவன் நினைவுக்கு வந்து போனது.

” என் வாழ்க்கை ஒரு பாலைவனம், அந்த பாலைவனத்துல பிரபாகரனோட நினைவுகளோட நான் ஒரு பாறையாகவே கிடந்துட்டுப் போறேன்,” இருவருக்கும் இதுநாள் வரைக்கும் மனப்பொருத்தம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டான் சூர்யா.

”வசந்தி...மனசுக்கு புடிக்காதவன் கூட வாழ்நாள் பூரா வாழ்றது ஒரு வாழ்க்கையா? நீ மனசு வெச்சா என்னோட பழைய ஆசை நிறைவேறிடும், என்ன சொல்ற?” எந்தவித கூச்சமும் இன்றி கேட்டான் சூர்யா.

அவன் வார்த்தைகள் அவள் உடம்பை எரித்தது. இதற்கு மேல் பொறுமை காத்தால் ஆகாது அவனைக் காறி உமிழ வேண்டும் போல் இருந்தது.

சட்டென்று அவள் அப்பாவின் நினைவு வந்து அடக்கிக்கொண்டாள்.

”உன் மவுனத்த சம்மதமா எடுத்துக்கலாமா?” கேட்டான் சூர்யா.

”இந்த வசந்தி நெருப்பு, அவ்வளவு சீக்கிரம் என்ன நெருங்க முடியாது, அதையும் மீறி என்ன தொட நினைச்சா உங்க உயிருக்கு உத்ரவாதம் இல்லையின்னு அர்த்தம். முதல்ல வெளியே போங்க!”

”வசந்தி...நான் சொல்றத..!”

”வெளியே போ!” அவளது குரல் ஆகாயத்தைத் தொட்டது. அவள் முகம் வேறு மாதிரி ஆனது. தலையை குனித்த படி கையை உயர்த்திச் சொன்ன கையை இறக்காமல் அப்படியே வைத்திருந்தாள்.

சூர்யா மிரண்டு போனான். அவளது பார்வையின் வெப்பம் தாங்காமல் வேகமாய் புறப்பட்டான். அவள் உதடுகள் சிணுங்கியது.

லேசாய் அழுகை வந்தது. உடல் குலுங்க கேவிக் கேவி அழுதாள். அவள் அழுகையின் நேரம் கூடியிருந்தது.

மெல்ல மெல்ல அழுகையின் சத்தம் குறைந்து இயல்பு நிலைக்கு வந்தாள், இருந்தாலும் உள்ளுக்குள் மூச்சு வாங்கினாள். சட்டென்று பிரபாகரனின் நினைவு வந்தது.

”பிரபாகரன் உன்ன காதலிச்ச குற்றத்துக்கு நான் அடையிற தண்டனையப் பார்த்தியா? அதுக்கும் மேல என் உடம்ப விரும்புற அயோக்கியன், இந்த வாழ்க்கையே ஒரு நரக வாழ்க்கை ஆகிப்போச்சே!” என்று நினைக்கவும் மறுபடியும் அழுமை வந்து சேர்ந்தது.

வாசல் கதவை தாளிட்டு வந்து கட்டிலில் கமந்து படுத்தாள். பக்கத்திலிருந்த தலையணையை இழுத்து முகத்துக்கு அடியில் தாங்கு கொடுத்தாள். தலையணை அவள் கண்ணீரை உறிஞ்சிக்கொண்டிருந்தது.

பிரபாகரன் நினைவுக்கு வந்தான். அவனை ஒரு முறை பார்த்தால் தேவலாம் போலிருந்தது. அதற்கு என்ன வழி என்று மனசு யோசித்துக்கொண்டிருந்தது. வேண்டாம், பிரபாகரனைப் பார்த்தால் வேதனை தான் கூடும், இரண்டு நாட்கள் தெக்குக்கரையிலிருக்கும் அப்பா வீட்டுக்குப் போனால் என்ன? என்று தோன்றியது. சட்டென்று அலைபேசி எடுத்து அவள் அப்பாவுக்கு டயல் செய்தாள். கருப்பசாமி போனை எடுத்து ஹலோ சொன்னான்.

”நான் ரெண்டு நாள் அப்பா கூட வந்து நிக்கட்டுமா?” பணிந்த குரலில் கேட்டாள் வசந்தி.

”அவரையும் கூட்டிகிட்டு தாராளமா வாம்மா!” கருப்பசாமி ஒளிவு மறைவின்றிச் சொன்னதும் வசந்தியின் முகம் அஷ்ட கோணலாகியது..

” அவர் கோர்டுக்கு போயிருக்கார் வர்றதுக்கு ரெம்ப நேரமாகும், அவர் வர்றதா இருந்தா நான் எதுக்கு வரணும், நான் தனிமையில தான் வருவேன்!”

”இருந்தாலும் மாப்பிள்ளைகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு வர்றது தான் நல்லது. நீ போன வை, நான் மாப்பிள்ளை கூட பேசிகிட்டு அஞ்சு நிமிஷம் கழிஞ்சு உன்ன கூப்பிடுறேன்!” சொல்லிவிட்டு அவரே லைனை கட் செய்தார்.

வசந்தி சலிப்பாய் போனைத் தூக்கி கட்டிலில் வீசினாள். அப்பா என் பேச்சை கேட்பதே இல்லை. மாப்பிள்ளை, மாப்பிள்ளை என்று அவர் சொல்வதைக் கேட்கிறார்.

அப்படி அவர் என்ன மந்திரம் போட்டாரோ தெரியவில்லை அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்.

”என்னக் கேட்காம பக்கத்து வீட்டுக்குக் கூட நீ போகக் கூடாதுன்னு சொன்ன கேடி ஜோசப் சம்மதிக்கப் போவதில்லை, அப்பா அவரிடம் கேட்டு அவர் முடியாது என்று மறுக்க தொங்கிய முகத்துடன் போன் பண்ணுவார்!” வசந்தி நினைத்தபடியே கருப்பசாமி போன் செய்தார்.

”என்னப்பா முடியாதுன்னு சொல்லீட்டாரா உங்க கொம்பன் மீசை மாப்பிள்ளை கேடி ஜோசப்!” நமட்டுச் சிரிப்புடன் சொன்னாள் வசந்தி.

”இல்லம்மா...ரெண்டு நாள் என்ன ஒரு வாரமே நின்னுட்டு வரட்டும்ன்னுட்டார்!” கேட்ட வசந்திக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

”சரிப்பா, உடனே புறப்பட்டு வந்துடுறேன்!” சந்தோஷமாய்ச் சொன்னாள் வசந்தி.

”ஆட்டோ பிடிச்சு வாம்மா!”

”சரிப்பா!” அவள் மனம் குதூகலிக்க ஒரு வாரத்துக்கான துணிமணிகளை பேக்கில் அடுக்கிக் கொண்டு ஆட்டோ பிடித்து தெக்குக்கரைக்கு விரைந்தாள். மனசு லேசாய் சாந்தமாகி இருந்தது
 
N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore

ஏமி டிவிஸ்ட்
 
lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
நல்ல அப்பா பொண்ணுக்கு தான் அப்பாவை புரிந்து கொள்ள முடியவில்லை.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top