• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Then Sinthum Poovanam! -21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் -21

அவன் காரை நிறுத்திய இடம் கடற்கரை சாலையில் அமைத்திருக்கும் ஹோட்டல்.. அதைக் கண்டவள் அவனைக் கேள்வியாக பார்க்க, அவனோ பதிலே பேசாமல் காரைவிட்டு கீழிறங்கினான்.. அவனின் பின்னோடு காரைவிட்டு இறங்கிய பிரியா, “அத்து இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க..??” என்று புரியாமல் கேட்டாள்..

அவளின் அழைப்பைக் காதில் வாங்காத சந்தோஷ், “எனக்கு ரொம்ப படிக்குது தேனு.. என்ன பேசுவதாக இருந்தாலும் சாப்பிட்டு முடித்துவிட்டு பீச்சில் போய் உட்கார்ந்து பேசலாம்..” என்றவன் அங்கிருக்கும் டேபிளில் அமர்ந்தான்..

“அத்து எல்லோரும் லவ் சொல்ல எங்கேயோ கூட்டிட்டு போவாங்க.. நீ ரொம்ப நல்லவன்டா.. உயிரே போவதாக இருந்தாலும் சாப்பிட்டு முடித்துவிட்டு போகட்டும் என்று ஹோட்டலுக்கு வந்து உட்கார்ந்து இருக்கிற..” என்றவள் அவனைக் கலாய்த்தாள்..

“தேனு தேனு.. நீ நெற்றில் இருந்து சாப்பிடவே இல்ல.. அது உனக்கு முதலில் ஞாபகம் இருக்கா..?” என்றவன் நக்கலாகக் கேட்டு சாப்பிட ஆடார் செய்ய, “நான் சாப்பிடாமல் இருந்தேன் என்று உனக்கு தெரியுமா..?” என்றவள் அவனைப் பார்த்து கேள்வியுடன் புருவம் உயர்த்தினாள்..

“எனக்கு நல்ல தெரியும் தேனு.. நேற்று முழுக்க கடந்த காலத்து நினைவில் மூழ்கி ஒரு வழியாகி இருப்ப.. நேற்று நைட் நீ சாப்பிட்டிருக்க மாட்டாய் என்பது என்னோட கணக்கு.. காலையில் எழுந்தும் மேடம் சென்னை கிளம்பியாச்சு.. இப்போ வரை பச்சை தண்ணிகூட குடிக்காமல் என்னோட வம்பு வளர்த்திட்டு இருக்கிற..” என்றவன் மனப்பாடம் செய்தது போல ஒப்பித்தான்..

அவனை ஆச்சரியமாக பார்த்தவள், “முதலில் சாப்பாடு.. அப்புறம் எல்லா பிரச்சனையையும் விலாவரியாக பேசலாம்..” என்றவன் சொல்ல, “அத்து எனக்கு பசிக்கல..” என்றவள் சிணுங்க அவளின் தலையில் நறுக்கென்று கொட்டியவன், “முதலில் சாப்பிடு..” என்றவனும் அவளோடு சாப்பிட ஆரம்பித்தான்..

அவள் சாப்பிட்டு முடித்ததும் ஹோட்டலுக்கு பில் கட்டிவிட்டு வெளியே வந்த சந்தோஷ் அருகில் இருந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளே நுழைய, “அத்து இங்கே என்னடா போற..” என்றவள் கேட்க, “இருடி வருகிறேன்..” என்றவன் வேகமாக உள்ளே சென்றான்..

“இவன் எந்த நேரம் என்ன பண்ணுகிறான் என்று ஒண்ணுமே புரியலையே ஆண்டவா.. எனக்கு இவனை புரிந்து கொள்ளும் சக்தியைக் கொடுப்பா..” என்றவள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வெளியே நின்று வேண்டிகொண்டிருக்க காம்ப்ளக்ஸ் உள்ளே சென்றவன் வெளியே வரும் பொழுது ஆளு உயரத்திற்கு ஒரு சிவப்பு கலர் டெடிபியருடன் வந்தான்..

“அத்து இது என்ன என்னோட உயரத்திற்கு வாங்கிட்டு வருகிற..” என்றவள் அவனிடம் இருந்து அந்த கரடி பொம்மையை வாங்க கைநீட்ட, “அப்போ அத்து சொல்றதுக்கு எல்லாம் நீ தலையாட்டனும்.. அப்போதான் தருவேன்..” என்றவன் அவளிடம் பேரம் பேசினான்.. அவனின் முகம் பார்த்த பிரியா கொஞ்சம் சுதாரித்து, “எனக்கு வேண்டாம் நீ எக்குதப்பாக எதாவது கேட்டு என்னோட உயிரை வாங்குவ..” என்றவளின் கன்னங்கள் இரண்டும் சிவந்தது..

அதை ரசனையோடு பார்த்த சந்தோஷ், “இதை காரில் வைத்து போகலாம்..” என்றவன் காரின் பின் சீட்டில் டெடிபியரை வைத்துவிட்டு பிரியாவுடன் கைகோர்த்த வண்ணம் கடற்கரை மணலில் மெல்ல நடக்க இருவரும் மனமும் காற்றைவிட லேசாகிவிட மனம் ஏதேதோ நினைவுகளுக்கு சென்று வந்தது..

மெல்ல அங்கே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்று மணலில் அமர்ந்தவன் பிரியாவின் பக்கம் திரும்பி, “வா தேனு.. இங்கே உட்காரு.. உன்னோட கொஞ்சம் பேசணும்..” என்றவன் சொல்ல அவளும் அமைதியாக அவனின் அருகில் அமர்ந்தாள்..

வானம் இருளாக மாறிவிட முழு நிலவு வானில் தன்னுடைய பயணத்தைத் தொடங்க கடற்கரை ஓரமாக வீசிய தென்றல் காற்று மனதில் ஒரு வகையான நிம்மதியை கொடுக்க கடலலைகளை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தாள் பிரியா..

“மையூ..” என்று அழைத்தவன் அங்கே நிலவிய அமைதியை முதலில்கலைக்க நிமிர்ந்து சந்தோஷ் முகம் பார்த்தாள் பிரியா.. அவனின் முகம் முழுவதிலும் சோகம் திரையிட்டு இருக்க, “அத்து..” என்றவனின் கரத்தை பிடித்து அழுத்தம் கொடுத்தாள்..

அவளின் கரம் மீது தன்னுடைய கரத்தை வைத்தவன், “நீ என்னைவிட்டு விலக ஆரம்பித்த நாளில் இருந்தே இந்த கடற்கரைதான் எனக்கு நிம்மதியைக் கொடுத்துட்டு இருக்கு..” என்றவன் அவளின் முகம் பார்க்க, “கடந்த காலம் பற்றி பேச வேண்டாம் அத்து..” என்றவள் மெல்லிய குரலில் கூறினாள்..

“இல்ல பேசணும்..” என்று பிடிவாதமாகக் கூறியவன், “நீ எனக்கு எப்போவும் ஸ்பெஷல் தேனு.. என்னோட மனசில் இருப்பதை நான் எப்பவோ சொல்லிருந்தால் நமக்கு இடையே இந்த பிரிவு வந்திருக்காது இல்ல..” என்றவனின் முகத்தை அமைதியாக பார்த்தாள் பிரியா..

“இது நம்ம பிடிவாதத்தால் வந்த பிரிவு அத்து..” என்றவள் சொல்ல, “ஒரு வகையில் நீ சொல்வது நிஜம்தான் நான் இல்ல என்று சொல்லவே இல்ல.. ஆனால் என் மீதும் தவறு இருக்கு.. நான் உன்னிடம் என்னோட காதலைச் சொல்லியிருந்தால் நமக்கு இடையே தீபிகா வர வழியே இல்லாமல் போயிருக்குமே..” என்றவனின் குரல் கரகரத்தது..

அவனின் பேச்சில் அவளின் உதட்டில் புன்னகை அரும்ப, “உனக்கு ஒரு விஷயம் புரியல அத்து.. தீபிகா வரவில்லை என்றால் நம்ம மனசில் இருந்த காதலை நாம் உணராமலே போயிருப்பபோம். என்றவள் வேறொரு கோணத்தில் யோசித்தாள்..

“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் பிரியா.. நீயும், மித்ராவும் சண்டை போடும் பொழுது எல்லாம் உங்களை சமாதானம் பண்ண நான் படும்பாடு எனக்கு தெரியும்..” என்றவனை அவள் இமைக்காமல் பார்த்தாள்..

“எந்த நொடி என்னோட மனதில் நீ காதலியாக மாறினாய் என்று எனக்கே தெரியல.. ஆனால் அதை காதல் என்று நான் உணர்ந்தது.. முதல் முறையாக நீ என்னை ஸார் என்று அழைத்த பொழுதுதான் தேனு..” என்றவன் சொல்ல புரியாத பார்வைப் பார்த்தாள்..

“நான் உங்களை எப்போ அத்து அப்படி கூட்டிட்டேன்..” என்றவள் புரியாமல் கேட்க, “தீபிகூட சண்டை போட்டுட்டு கோவிலில் இருந்து வெளியே வரும் பொழுது..” என்றவன் அந்த நாளை ஞாபகப்படுத்தினான்..

அன்றைய நாளின் தாக்கத்தில் அமந்திருந்திருந்த பிரியா, “அன்னைக்குதான் நானும் உணர்ந்தேன் அத்து.. என்னோட மனசில் இருந்த காதலை.. என்னவோ என்னால உன்னிடம் சொல்ல முடியல..” என்றவள் அவனின் தோள் சாய அவளின் தோளில் கைபோட்டான் சந்தோஷ்..

அவள் அமைதியாக இருக்க, “நீ என்னைவிட்டு விலக விலக என்னோட மனசில் உனக்கு இருக்கும் இடம் எனக்கு புரிய ஆரம்பித்தது தேனு.. ஆனால் அதை நான் உணரவே இல்ல..” என்றவன் சொல்ல அவளின் உதட்டில் குறும்பு புன்னகை மலர்ந்தது..

“அப்போ என்னோட மனசு உனக்கு நல்லாவே தெரியும் இல்ல அத்து..” என்றவள் நக்கலோடு கேட்க, “ஆமா நல்ல தெரியும்.. என்னோட மனசை நீ நல்லாவே புரிஞ்சி வைச்சிருக்க இல்ல.. எதை செய்யாதே என்று சொல்றோமோ அதை நான் சரியாக செய்வேன் என்று தெரிந்தே நீ மெளனமாக இருந்த இல்ல..” என்றவன் அவளைப் பார்த்து புருவம் உயர்த்தினான்..

“ஹா.. ஹா.. ஹா.. அத்து உன்னை நான் புரிந்து வைத்திருத்தால் தான் நானே உன்னைத் தேடி வந்திருக்கிறேன்..” என்றவள் அவனைக் குத்திகாட்டிட, “ஏய் நான் உன்னைத் தேடி வரல என்று என்னைக் குத்தி காட்டிற இல்ல..” என்றவன் அவளை முறைத்தான்..

“அது உண்மைதானே..??” என்றவள் அவனைப் பார்த்து புருவம் உயர்த்திட, “நான் வரவே இல்லை என்று உனக்கு தெரியுமா..?” என்றவன் கேட்டதும், “நீங்க வரவே இல்ல என்று எனக்கு நல்ல தெரியும்..” என்றவள் முகத்தைத் திருப்பினாள்..

“இவளுக்கு தெரிஞ்ச மாதிரியே பேசுவா..” என்றவன் முணுமுணுக்க, “என்ன அங்கே தனியாக புலம்பற..” என்றவள் அவனை அதட்டல் போட, “என்னோட மனசில் இருப்பது புரியாமல் தானே நீ நம்ம வீட்டில் இருக்கும் எல்லோரோட உயிரையும் வாங்கிட்டு இருக்கிற.. அதைதான் சொல்லிட்டு இருந்தேன்..” என்றவன் விளையாட்டாக சொல்ல அவளோ தலையைக் குனிந்து கொண்டாள்..

“தீபிகாவைக் காதலித்தேன் என்று நீ சொல்லும் பொழுது எல்லாம் எனக்கு எவ்வளவு கோபம் வரும் தெரியுமா..?” என்றவன் கேட்க அவளோ தெரியாது என்பது போல தலையசைத்தாள்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“உன்னோட மனதைத் தெரிந்து கொள்ள தீபியை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டேன்.. ஆனால் அதற்கு எல்லாம் நீ மசியவே இல்ல..” என்றவன் அவளின் விழியைப் பார்த்து சொல்ல, “அது எனக்கு தெரியும் சந்தோஷ்..” என்றவள் சொல்ல அவளின் தலையில் நறுக்கென்று கொட்டினான்..

“ஐயோ வலிக்குது..” என்றவள் தலையைத் தேய்த்துவிட, “அத்து என்று கூப்பிடு.. இல்ல உன்னை என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது..” என்றவன் சொல்ல, “ஸாரி..” என்று பாவமாகச் சொல்ல, “இனிமேல் அப்படி கூப்பிடாதே தேனு..” என்றவனின் குரல் கரகரத்தது..

அவள் சரியென தலையசைக்க, “உன்னோட பிடிவாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா..” என்றவன் சொல்ல, “நல்லவே பொய் சொல்றீங்க அத்து..” என்று சிரிக்க, “ஏய் என்னைப் பார்த்தால் பொய் சொல்ற மாதிரி இருக்கா..” என்றவன் அவளின் மலர்ந்த முகம் பார்த்தான்..

“உன்னைவிட்டு நான் ஒவ்வொரு முறை விலகி போகும் பொழுது எல்லாம் அழுது இருக்கிறேன் அத்து.. அது மித்ராவிற்கு நல்லாவே தெரியும்..” என்றவள் சொல்ல, “அவளையும் நீ சொல்ல விடல.. தீபிகா பிரபோஸ் பண்ணிய அன்னைக்கு என்ன சொன்னா நீ என்னிடம் இருந்து தப்பிக்க போகிறாயா..?” என்றவன் அவளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டினான்..

அவள் வெக்கத்தில் தலைக்குனிய, “இப்போதான் நீ என்னிடம் வசமாக மாட்டிகிட்ட தேனு..” என்றவன் குறுஞ்சிரிப்புடன் அவளை கேலி செய்ய, “அத்து இது நான் விருப்பபட்டு அகப்பட்ட இடம்.. அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்ல.. நீங்க அன்னைக்கு சொன்னது போல மனதில் இருக்கும் காதலுக்கு ஐ லவ் யூ என்ற மூன்று வார்த்தை போதாதுதான்..” என்றவள் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்..

அவன் அவளை என்ன என்பது போல பார்க்க, “அன்னைக்கு இருந்த அதிர்ச்சியில் நான் அப்படியெல்லாம் பேசிட்டேன்.. என்னால நீங்க எல்லோரிடமும் கெட்ட பெயர் வாங்கினீங்க.. அத்தை மாமாவிடம் அடிவாங்க வெச்சிட்டேன்.. ஸாரி அத்து..” என்றவள் அவனிடம் மன்னிப்பு கேட்டாள்..

“நான்தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கணும் தேனு.. திடீரென இழுத்துட்டு வந்து கழுத்தில் தாலி கட்டினால் எல்லோருக்குமே அது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.. உனக்கு அன்னைக்கு இருந்த அதிர்ச்சியில் அப்படியெல்லாம் பேசின.. என்னோட மனசில் இருப்பதை உன்னிடம் சொன்னபிறகும் நீ என்னைவிட்டு விலகி போயிட்ட இல்ல..” என்றவன் வருத்ததுடன் கேட்டான்..

“அது எல்லாமே ஒரு கோபத்தில் பேசியது அத்து..” என்றவள் தொடர்ந்து, “ஆனால் வீட்டைவிட்டு வெளியே போனபிறகு பலமுறை இதை நினைத்து வருத்தபட்டு இருக்கிறேன் அத்து.. அது மட்டும் இல்லாமல் என்னோட பிறந்தநாள் அன்று உன்னை ரொம்ப எதிர்பார்த்தேன்..” என்றவள் சந்தோஷ் முகம் பார்த்தாள்..

அவனோ அமைதியாக இருக்க, “நேற்றுதான் அத்து ரொம்ப மனசு கஷ்டமாக இருந்தது.. அதுவும் அந்த கடிதம்..” என்றவள் பல்லைக் கடிக்க, “உன்னை இங்கே கூட்டிட்டு வர எனக்கு வேற வழி தெரியலடி..” என்றவன் அவளின் கையில் அழுத்தம் கொடுக்க அவளோ அமைதியாக இருந்தாள்..

“இந்த விஷயத்தை இப்போ விடு.. அதைபற்றி அப்புறம் பேசலாம்..” என்றவன் தொடர்ந்து, “பிரியா அம்மா மனசில் பெரிய சோகம் மறைந்து இருகிறது.. அதை வெளியே கொண்டுவர நீ எனக்கு ஹெல்ப் பண்ணு பிரியா..” என்றவன் சொல்ல, “அதுக்கு இப்போ என்ன அவசியம் வந்தது..” என்றவள் கேட்டாள்..

“அதுக்கு காரணம் இருக்கு.. தீபிஅம்மாவைத் தப்பாக நினைக்கிறாள்.. என்னோட அம்மா அப்படிபட்டவங்க இல்லன்னு அவளுக்கும் புரிய வைக்கணும்.. அப்போதான் அவள் நாளைய பின்ன தப்பு பண்ணவே மாட்டாள்..” என்றவன் காரணத்தை சொல்ல சரியென தலையசைத்தாள்..

அப்பொழுதுதான் மணியைப் பார்த்தவன், “ஏய் மணி எட்டு பிரியா வா போலாம்..” என்றவன் அந்த இடம்விட்டு எழுந்து கொள்ள, “ஐயோ எட்டு ஆச்சா..?” என்றவள் வேகமாக எழுந்துகொண்டாள்.. அவனும் அவளோடு சேர்ந்து நடக்க இதமான மாலைத் தென்றல் அவர்களை வருடிச்செல்ல அவளின் கையோடு கரத்தைக் கோர்த்துக் கொண்ட சந்தோஷ் அவளுடன் இணைந்து நடந்தான்..

சந்தோஷ் – பிரியா இருவரும் வீட்டிற்கு செல்ல ஏற்காட்டில் நடப்பதைப் பார்க்கலாம் வாங்க..

தன்னுடைய தோழியை நினைத்து கதறியழுத தீபிகா மறுநாள் விடியலுக்காக காத்திருந்தாள்.. ஒரு நல்ல தோழியை தன்னுடைய வாழ்க்கையில் இழந்துவிட்டதை நினைத்தவள் காலையில் எழுந்து சீக்கிரம் கிளப்பினாள்..

அவளின் வேகம் கண்ட தீபக், “தீபி எங்கே கிளம்பற..??” என்றவர் மகளிடம் கேட்க, “அப்பா மான்விழியோட கல்லறைக்கு போறேன் அப்பா.. அவளை மாதிரி ஒரு தோழி மீண்டும் என்னோட வாழ்க்கையில் பார்க்க முடியாதுப்பா..” என்றவர் சொல்ல, “சரிம்மா நீ போயிட்டு வா..” என்றவர் அவளின் விருப்பத்திற்கு சரியென தலையசைத்தார்..

அப்பொழுது அறையைவிட்டு வெளியே வந்த தாத்தாவைப் பார்த்த தீபிகா, “தாத்தா நீங்கள் பெற்ற பிள்ளைக்கு கெடுதல் நினைத்து பாட்டியை இழந்து தனி மரமாக நிற்கிறீங்க.. நான் என்னோட கெட்ட குணத்தால் ஒரு நல்லதோழியை இழந்துவிட்டு நிற்கிறேன்..” என்றவள் கண்ணீரோடு கூறினாள்..

“நீ போய் அவங்களிடம் மன்னிப்பு கேட்க போகிறாயா தீபி..” என்றவர் பேத்தியிடம் கேட்க, “ஒரு தவறைத் தெரியாமல் செய்தால் தான் தாத்தா மன்னிப்பு கிடைக்கும்.. அனைத்து தவறையும் தெரிந்தே செய்த பிறகு மன்னிப்பு என்பது தண்டனையில் இருந்து தப்பித்துகொள்ள முட்டாள் செய்யும் வேலை..” என்றவள் தொடர்ந்து,

“என்னால் இரண்டு உயிர் பலியான பிறகும் எப்படி அவங்க முன்னாடி போய் நிற்க சொல்றீங்க..” என்றவள் கேட்க அவர் அமைதியாக அமர்ந்திருந்தார்..

அவரின் முகத்தை அமைதியோடு பார்த்தவள், “இதுக்கு மேலும் நான் போய் மன்னிப்பு கேட்டாலும், நான் செய்த தவறுக்கு இரண்டு உயிர் போயிருக்கே அதை மீட்டுக்கொண்டு வர முடியுமா..? அது எல்லாம் நடக்கவே நடக்காது தாத்தா..” என்றவள் தந்தையின் முகம் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்..

“நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால் உன்னோட மனசில் இருக்கிற குற்ற உணர்ச்சி கொஞ்சம் குறையும் தீபிகா..” என்றவர் சொல்ல, “நான் மன்னிப்பு எல்லாம் போய் கேட்கவே மாட்டேன் தாத்தா.. இதுவரை கெட்ட பெயர் எடுத்தாச்சு.. இதற்குமேல் நானே போய் நான் நல்லவள் என்னை நம்புங்க என்ற உண்மை சொன்னாலும் என்னை யாரும் நம்பமாட்டாங்க தாத்தா..” என்றவள் சொல்ல மகளின் முகத்தை இமைக்காமல் பார்த்தார் தீபக்..

“நான் அவங்களோட எதிரி.. அது அப்படியே இருந்துட்டு போகுது.. நான் தவறு செய்தேன் என்று எனக்கு தெரியும்.. நான் திருந்துவிட்டேன் என்ற உங்க இருவருக்கும் தெரிந்தால் போதும்.. வேற யார்க்கும் நான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்ல..” என்ற மகளைப் பார்த்த தீபிக் மனம் நிம்மதியடைந்தது..

அவளை பொறுத்தவரையில் அவள் எடுத்த முடிவு சரியே.. வாழ்க்கையில் தெரியாமல் செய்த தவறுக்கு மட்டும்தான் மன்னிப்பு.. அனைத்தையும் தெரிந்தே செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது சுத்தமான முட்டாள்தனம்.. அவங்களோட மன்னிப்பைவிட பெரிய தண்டனை அந்த குற்றஉணர்ச்சியுடன் கடைசிவரையில் உயிரோடு வாழ்வது மட்டுமே என்ற முடிவில் அவள் உறுதியாக இருந்தாள்..

அவளின் தவறை உணர்ந்துவிட்ட நொடியே தோழியின் மகத்துவத்தை உணர்ந்தவள் மன்னிப்பு வேண்டி மான்விழியின் கல்லறைக்கு கிளம்பிச் சென்றாள் தீபிகா.. அன்று பொழுது வரையில் அவளின் கல்லறையில் அமர்ந்தவளின் மனதில் மான்விழியின் நினைவுகள் மட்டுமே இருந்தது..

சந்தோஷ் மனதில் என்ன திட்டம் வைத்திருக்கிறான்.. பிருந்தாவின் உள்ளத்தில் இன்னும் என்ன இருக்கிறது..? அதை தீபிக்கு தெரிய வைப்பதில் யாருக்கு என்ன பலன்..???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top