• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

thevathai-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
View attachment 445
அத்தியாயம்-1

அதிகாலை ஆறு மணி. செல்போனில் செட் செய்திருந்த அலாரம் அடித்தது. சௌமியா பாதி உறக்கம் கலைந்த நிலையில் படுக்கையை விட்டு எழுந்து அமராமல், கண்களையும் திறக்காமல் அப்படியே தன் கைகளை வலது பக்கமாக நீட்டி அருகிலிருந்த செல்போனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கண்களை திறந்தாள்.

செல்போன் திரையில் ஆதிரையன் முகம் தெரிய மலர்ந்த புன்னகையுடன் “குட் மார்னிங்” என்றாள்.

சௌமியா மீண்டும் செல்போன் திரையை பார்க்க சிரித்தபடி கம்பீரமாக அவளின் தோளின் மீது கையை போட்டபடி ஆதிரையன் நின்றிருக்க, பிங்க் நிற சுடிதாரில் அவனுக்கு மிக அருகில் சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள் செளமியா.

“சௌமியா கதவை திறம்மா” என்ற ஆதிரையன் குரல் கேட்டது.

சௌமியா செல்போனை வைத்து விட்டு “கதவு திறந்துதான் இருக்கு. நீ உள்ளே வா அண்ணா” என்று குரல் கொடுத்தாள்.

ஆதிரையன் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்த பொழுது கையில் அவன் பெரிய ரோஜாப் பூங்கொத்தை வைத்திருந்ததைப் பார்த்து புன்னகைத்தாள்.

சௌமியா எழுந்து படுக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சௌமி குட்டி” என்று அவன் நீட்ட அவள் அதை வாங்கிக் கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்றாள்.

ஆதிரையன் அவளை விட பன்னிரெண்டு வயது மூத்தவர். அகன்ற நெற்றி, கூர்மையான கண்கள், எடுப்பான நாசி, அகன்ற பெரிய தோள்கள், பரந்த மார்பு, அளவாக கத்தரிக்கப்பட்ட மீசை, தலைமுடியுடன் நல்ல உயரத்துடன் கம்பீரமான தோற்றம் உடைய அண்ணனின் சிரித்த அன்பான முகத்தை பார்த்தபடியே அவள் அமர்ந்திருக்க “என்ன சௌமி, அண்ணனை அப்படி பார்க்கின்றாய்?” என்று கேட்டான்.

“எனக்கு கிடைத்த மாதிரி ஒரு அண்ணன் யாருக்கும் கிடைக்க மாட்டாங்க. நீ ரொம்ப சோ ஸ்வீட் அண்ணா” என்று மிகுந்த புன்னகையுடன் சொன்னாள் சௌமியா.

“சரிம்மா நீ எழுந்திரிச்சு குளிச்சிட்டு வாம்மா. நம்ம எஸ்டேட் முருகன் கோயிலில் காலையில் எட்டு மணிக்கு பூஜைக்கு சொல்லியிருக்கேன்.” என்றான் ஆதிரையன்.

“சரி அண்ணா” என்று எழுந்து நின்றவள் “அண்ணா ஒரு நிமிசம்” என்றாள்.

“என்ன சௌமி” என்று அவன் பார்க்க “அண்ணா என் பர்த்டே டிரஸ்ஸை இன்னும் நீ தரவில்லையே” என்றாள்.

“நீ குளிச்சிட்டு வருவதுக்குள்ளே அது கட்டில் மேலே இருக்கும்மா”

“சரி அண்ணா” என்று அவள் முகம் கழுவ பாத்ரூம் நோக்கி செல்ல அவன் தன் அறையை நோக்கி சென்றான்.

சௌமியா முகம் கழுவி வந்து கட்டிலைப் பார்த்தாள். அங்கே எதுவும் இல்லை சரி குளிச்சிட்டு வந்து பார்க்கலாம் என்று தன் துணிகளை எடுத்துச் சென்று குளித்து விட்டு வந்து பார்த்தாள்.

அவளிடம் சொன்னபடியே கட்டிலில் சில பைகள் இருந்தன. என்னை சந்தோஷப்படுத்துகிற விஷயத்தில் உனக்கு நிகர் நீதான் அண்ணா என்று தன் அண்ணனை நினைத்து பெருமையடைந்தாள்

அதில் என்ன என்ன இருக்கிறது என்று அவள் பிரித்து பார்த்தாள். அவள் முகம் ஆனந்தத்தில் மலர்ந்தது.

சௌமியாவின் போன் அடிக்க எடுத்தவளிடம் “என்னம்மா பர்த்டே டிரஸ், கிப்ட் எல்லாம் ஒகேவா? உனக்கு பிடிச்சிருக்கா?” என்றான் ஆதிரையன்.

“ரொம்ப அண்ணா” என்று அவள் சொல்ல “சரிம்மா நீ ரெடியாகி வா. அண்ணா கிழே வெயிட் பன்றேன்” என்று போனை வைத்தான்.

சௌமியா அடுத்த அரை மணி நேரத்தில் தயாராகி மாடிப்படியில் இறங்கி தேவதை போல் இறங்கி வந்தாள்.

இருபத்தி மூன்று வயது தேவதையான அவள் மெல்லிய வெள்ளை கலரில் சின்ன சின்ன பூக்கள் போட்ட பிங்க் நிற டிசைனர் புடவையும், அதே நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். அவள் அடர்ந்து வளர்ந்திருந்த கருங்கூந்தலை அழகாய் கனமான பின்னலிட்டு அதில் சிறிய அளவில் மல்லிகை பூவையும் அணிந்திருந்தாள். சிறிய பிறை வடிவ நெற்றியில் கோபுர வடிவ பொட்டையும் இரு புருவங்களுக்கு நடுவே வைத்திருந்தாள். காதுகளில் அவள் மெல்லிய சிறிய ஜிமிக்கி கம்மலையும் அணிந்திருந்தாள். மெல்லிய மை தீட்டிய இரு பேசும் விழிகள், அளவாய் செதுக்கப்பட்ட இரு புருவங்கள், கூர்மையான சிறிய நாசி, புன்னகை தவழ்ந்த லிப்ஸ்டிக் படாத இரு உதடுகள், சிரித்தால் குழி விழும் இரு கன்னங்கள், மெல்லிய விரல்கள் கொண்ட கரங்களில் பிங்க் நிற கண்ணாடி வளையல், சேலையால் மறைக்கப்பட்ட மெல்லிய பூஞ்சையான தேகம் என அழகு தேவதையாய் ஜொலித்தாள். அவள் சங்கு கழுத்தில் மெல்லியதாக டி.ஏ.எஸ் என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இதய வடிவ டாலருடன் கூடிய ஒரு தங்கச் செயின் அணிந்திருந்தாள்.

சௌமியா மருத்துவத்திற்கு படித்துவிட்டு தன்னுடைய சொந்த எஸ்டேட்டான சௌமியா எஸ்டேட்டில் தன் தந்தையின் பெயரில் தர்மலிங்கம் நினைவு மருத்துவமனை என்று ஒரு பன்முக வசதி நிறைந்த அதிநவீன மருத்துவமனையை ஆரம்பித்து வைத்தியத்தை ஒரு சேவையாக செய்து வருகிறாள்.

பல ஏக்கர்கள் பரந்த விரிந்த அந்த தேயிலை எஸ்டேட்டின் நிர்வாக பொறுப்பு முழுவதும் ஆதிரையன் வசம் உள்ளதால் அவள் மருத்துவமனையை மட்டும் பார்த்து கொள்கிறாள். சௌமியாவிற்கு எது தேவை என்றாலும் அவன் உடனே அதை பெற்று தந்து விடுவதால் அவளுக்கு தேவை என்பதே இல்லை.
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
“என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள் அண்ணா” என்று அண்ணனின் கால்களில் அவள் விழ “நல்லா இரும்மா” என்று ஆசீர்வாதம் செய்தான்.

“வாம்மா அப்பாகிட்ட சென்று ஆசீர்வாதம் வாங்கிட்டு நாம் கோயிலுக்கு போகலாம் அம்மா” என்று அவன் அழைக்க அண்ணனும் தங்கையும் சென்று, பெரிய சந்தன மாலை சாற்றப்பட்டு விளக்குகள் எரிந்தபடி இருந்த அப்பா தர்மலிங்கத்தின் படம் முன் இருவரும் நின்றனர்.

“அப்பா என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று படத்தின் முன் மண்டியிட்டு வணங்கிய சௌமியா பின் எழுந்து நின்றாள்.

“அப்பா உங்களுடைய பொண்ணுக்கு இன்னிக்கு பிறந்தநாள் அவளை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று சொல்லி விட்டு படத்தைத் தொட்டு வணங்கிய ஆதிரையனை பெருமையாகப் பார்த்த தங்கையிடம் “வாம்மா இனி நாம் கோயிலுக்கு போகலாம்” என்றான்.

ஆதிரையன் வீட்டுக்கு வெளியில் வந்து காரில் ஏறிக் கொள்ள சௌமியா அவனுக்கு அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

“அண்ணா இங்கே போயிட்டு அப்படியே மலைக் கோயிலுக்கும் சென்று அங்கே அம்மனை வழிபடனும் என்ன சரியா?” என்று அவள் கேட்டாள்.

“சரிம்மா நீ சொல்கிறபடி அப்படியே செய்து விடலாம்” என்றபடி காரை கிளப்பி சென்றான் ஆதிரையன்.

சில நிமிடங்களில் எஸ்டேட் முருகன் கோயிலுக்கு முன் கார் நின்றது.

“சௌமியா இறங்கிக்கோம்மா. நான் காரை பார்க் பன்னிட்டு வர்றேன்” என்று சொல்ல சௌமியா இறங்கிக் கொண்டாள்.

ஆதிரையன் காரை நிறுத்தி விட்டு வந்து “வாம்மா” என்றவுடன் இருவரும் கோயிலுக்குள் சென்றனர். அவர்கள் இருவரும் வருவதைப் பார்த்த அய்யரும் மற்றவர்களும் அவர்களிடம் வந்தனர்.

“வாங்க தம்பி, வாங்கம்மா” என்று இருவரையும் பூர்ண கும்ப மரியாதையுடன் அய்யர் வரவேற்று அழைத்து சென்றார்.

“என்ன சாமி எல்லாம் ரெடியா?” என்று ஆதிரையன் அய்யரிடம் கேட்டான்.

“அபிசேகத்துக்கு எல்லாம் தயாராக இருக்கு. இப்ப உடனே ஆரம்பிச்சிடலாம் தம்பி. நீங்க சொன்னபடி காலை, மத்தியானம் இரண்டு வேளை அன்னதானத்துக்கும் ரெடி பன்னிட்டோம்.” என்றார் அய்யர்.

“சரிங்க சாமி. வாங்க சாமியை தரிசனம் செய்யலாம்” என்று ஆதிரையன் சொல்ல அய்யர் முன் செல்ல இருவரும் பின்னே சென்று சன்னதியின் முன்னால் நின்றனர்.

முருகனுக்கும் உடன் இருந்த வள்ளி,தெய்வானைக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர் என சகல அபிசேகங்களும் செய்து முடித்தார் அய்யர்.

முருகனுக்கும் வள்ளி, தெய்வானைக்கும் புதுத் துணி, மாலை அணிவித்து ஆரத்தி காட்டிவிட்டு ஆதிரையனுக்கும், சௌமியாவுக்கும் சாமி மாலை தர பெற்றுக் கொண்டனர்.

“வாங்க அன்னதானத்தை சின்னம்மா கையாலே ஆரம்பிச்சிடலாம்” என்று அழைக்க சௌமியா கையால் அன்னதானம் ஆரம்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் பிரகாரத்தைச் சுற்றி விட்டு வந்து அமர்ந்தனர்.

சில நிமிடங்களில் எழுந்த அவர்கள் இருவரும் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, கோயில் தரிசனம் சிறப்பாக முடித்த திருப்தியில் வெளியில் வந்தனர்.

“அண்ணா வாங்க நம்ம மலைக் கோயிலுக்குப் போலாம்.” என்றாள் சௌமியா.

சரிம்மா என்று தலையசைத்த அவன் காரை எடுத்து வந்து நிறுத்த சௌமியா ஏறிக் கொண்டாள். அவர்கள் இருவரும் மலைக் கோயில் அம்மனை வழிபட சென்றனர்.

“அண்ணா சீட் பெல்ட் போட்டுக்கோ” என்றபடி அவள் போட, அவனும் காரை நிறுத்தி போட்டுக் கொண்டு மீண்டும் ஆதிரையன் காரை மித வேகத்தில் செலுத்தினான்.

“அண்ணா, இன்னிக்கு கிளைமேட் நல்லா சில்லுன்னு சூப்பராக இருக்குது அண்ணா” என்றாள் சௌமியா.

“ஆமாம்மா” என்று அவன் சொல்ல இயற்கையை ரசித்தபடியும், குளுமையை அனுபவித்தபடியும் அவனுடன் பயணித்தாள் சௌமியா. கார் அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஆள் அரவமற்ற ஒரு ஏகாந்தமான ஒரு மலையில் நின்றது.

ஆதிரையனும் அவன் தங்கையும் இறங்கி நடந்து செல்ல சிறிது தூரத்தில் மலையில் ஒரு சன்னதி இருந்தது. அதில் தாய் துர்கையம்மன் மூல தெய்வமாக வீற்றிருந்தாள். சன்னதிக்கு எதிரே எலுமிச்சை பழம் சொருகப்பட்ட திரிசூலமும் இருந்தது. அங்கே அந்த சன்னதியை தவிர வேறு எதுவும் இல்லை. மலைக் காற்று இனிமையாக வீசிக் கொண்டிருந்தது.

சௌமியாவும் அவள் அண்ணனும் சென்று பார்த்த பொழுது யாரோ அம்மனுக்கு பூஜை செய்து விளக்கும் ஏற்றி வைத்திருந்தனர்.

“அண்ணா நமக்கு முன்னே இங்கே வந்து யாரோ பூஜை செய்திருக்காங்க” என்றாள்.

சௌமியா தான் கொண்டு வந்த மாலையை அம்மனுக்கு சாற்றிவிட்டு விளக்கு ஏற்றி விட்டு பின் கற்பூரம் ஏற்றி விட்டு இருவரும் விழுந்து வணங்கினார்கள். சௌமியா தான் குங்குமம் வைத்துக் கொண்டு அண்ணனுக்கும் வைத்து விட்டாள்.

அவர்கள் இருவரும் தாங்கள் கொண்டு வந்த எலுமிச்சை பழத்தை சூலத்தில் சொருகி விட்டு வந்து பாறையில் அமர்ந்தனர்.
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
“அண்ணா எனக்கு இந்த கோயிலுன்னா ரொம்ப பிடிக்கும். என் வாழ்வில் எது நடந்தாலும் இங்கேதான் நடக்க வேண்டும்.” என்றாள் சௌமியா.

“ஆமாம்மா அப்பா கூட அவர் சாகறதுக்கு முதல்நாள் கூட இங்கே வந்தாரும்மா. அவருக்கு இங்கே வந்தாதான் மனநிம்மதி கிடைக்குதுன்னு அடிக்கடி சொல்லுவாரு” என்றான் ஆதிரையன்.

“அதுமட்டுமில்லை அண்ணா, எனக்கு இப்படி ஒரு பாசக்கார அண்ணா, என்னை கண்ணுக்குள்ளே வைத்து தாங்குகிற அண்ணா, நான் கேட்காமாலேயே என் ஆசைகளை நிறைவேற்றுகிற அண்ணா கிடைச்சதும் இங்கதானே. இந்த அம்மாதானே உன்னை எங்ககிட்ட அனுப்பி வைச்சாங்க. நீ இல்லை என்றால் நான் தனி ஆளாக எப்படி இந்த எஸ்டேட், வீடு, பாக்டரி, ஹாஸ்பிடல் எல்லாம் நிர்வாகம் செய்ய முடியும். அப்பப்பா! நினைத்தாலே பயமாயிருக்கு” என்று அவள் சொல்ல சொல்ல அவனுக்கு பழைய நினைவுகள் தோன்றி மறைந்தன.

ஆதிரையன் கண்கள் கலங்கி கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அவன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுதே விட்டான்.

“அண்ணா உனக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்து விட்டதா? அதை நினைத்து அழறிங்களா? சாரி அண்ணா நான் என்னோட பீலிங்கை சொல்லி உன்னை அழ வைச்சிட்டேன்”

“அதுக்காக நான் அழல சௌமி. அதெல்லாம் பழைய கதை அது நடந்து பத்து வருசம் மேலே ஆயிடுச்சு. உன் பாசத்தை நினைத்து அழுதேன். திக்கு தெரியாமல் அனாதையாக நின்ற என்னை நம்பி முதல்ல எஸ்டேட்டில் மானேஜர் வேலையும், பின்னால் உன்னையும், இந்த எஸ்டேட்டையும் என் கையில் தந்து விட்டுட்டு இறந்து போன நம்ம அப்பாவை நினைத்து பார்த்தேன். என் கண்ணு கலங்கியிருச்சு” என்றான் ஆதிரையன்.

“அண்ணா…! நீ அனாதைன்னா அப்ப நான் யாரு? எனக்கும் அப்பாவை தவிர யாரும் இல்லை. நீ மட்டும் இல்லைன்னா நான்தான் பெரிய” என்று முடிப்பதற்குள் அவள் வாயைப் பொத்தினான் ஆதிரையன்.

“சௌமி இந்த அண்ணா இருக்கிற வரைக்கும் அனாதைங்கற நினைப்பே உனக்கு வரக் கூடாது. அந்த வார்த்தையும் உன் வாயில் இருந்து வரக் கூடாது” என்றான் ஆதிரையன்.

“அண்ணா… அண்ணா… அண்ணா…” என்று அவள் நாக்கு தழுதழுக்க உடனே அவன், “என்னம்மா சொல்லும்மா” என்றான் அண்ணன்.

“அண்ணா நான் அப்படியே உன் மடியில் படுத்துக்கவா?” என்று மெல்ல கேட்டாள் சௌமியா.

“தாரளமா படுத்துக்கோம்மா” என்று கால்களை நீட்ட அவன் தொடையில் தலை வைத்து கால்களை நீட்டி படுத்துக் கொண்ட சௌமியாவின் தலை வருடிய அண்ணனின் பாசத்தில் நெகிழ்ந்த அவள் “தாங்க்ஸ் அண்ணா” என்றாள்.

“அண்ணனுக்கு எல்லாம் தாங்க்ஸ் சொல்லக் கூடாதுன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்” என்றதும் அவள் அமைதியாக புன்னகைத்தாள்.

“மலர்ந்தும் மலராத பாதி மலர்ந்த” என்ற பாசமலர் பாடல் தீடிரென்று கேட்க யாரென்று இருவரும் பார்த்தனர்.

“என்ன பாசமலர்களா? உங்க பாசமழையை இங்கே வந்தும் பொழிய ஆரம்பிச்சிட்டிங்களா?” என்று கேட்டபடி வந்து நின்றான் ஜெயகாந்தன்.

ஜெயகாந்தன் அவளை விட நான்கு வயது மூத்தவன். அகன்ற நெற்றி, கூர்மையான கண்கள், எடுப்பான நாசி, அகன்ற பெரிய தோள்கள், பரந்த மார்பு, அளவாக கத்தரிக்கப்பட்ட மீசை, தலைமுடியுடன் நல்ல உயரத்துடன் கம்பீரமான தோற்றம் கொண்ட ஜெயகாந்தன் மருத்துவத்தில் அறுவை சிகிச்சையில் மேல் படிப்பை முடித்து விட்டு சௌமியாவுடன் அவளுக்கு துணையாக இருக்கிறான்.

ஜெயகாந்தனின் தந்தை அர்ச்சுனனும், சௌமியாவின் தந்தை தர்மலிங்கமும் நண்பர்கள். மீனா எஸ்டேட் என்ற அருகிலுள்ள எஸ்டேட்டின் சொந்தகாரரின் ஓரே மகன்.

“ஏய்! எங்க பாசத்தையா கிண்டல் பண்றே?” என்ற அண்ணனுக்கு ஆதரவாக “நல்லா கேளுங்க” என்றபடி எழுந்து அமர்ந்தாள் சௌமியா.

“இல்லையம்மா கிண்டல் செய்யவில்லை. பாசமலர் சிவாஜி-சாவித்திரி, வேலாயுதம் விஜய்-சரண்யா, வேதாளம் அஜித்-லட்சுமி மேனனுக்கு அப்புறம் நீங்கதான் போதுமா?” என்றான் ஜெயகாந்தன்.

“ஏன் திருப்பதி அஜித், சிவகாசி விஜய்ன்னு சொல்லேன்” என்ற சௌமியாவிடம் “ஆமாமா அவங்களை விட்டுவிட்டேன்” என்றான்.

“பாருங்கண்ணா இவரை” என்று அவள் சொன்னவுடன் “தம்பி அவள் நல்லா மூடுல இருக்கா இல்லைன்னா நீ அவ்வளவுதான் அதனாலே நீ கொஞ்சம் அடக்கி வாசி.” என்றான் அண்ணன்.

“சரி சரி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டாக்டர் மேடம்” என்று பொக்கேவை தர “தேங்க்ஸ்” என்று வாங்கிக் கொண்டாள்.

“சாக்லேட் தர நல்ல பழக்கமெல்லாம் இல்லையா?” என்று அவன் கேட்க “ஹாஸ்பிடலுக்கு வாங்க கேக்கே தரேன்” என்றாள் சௌமியா.

“சரி உங்க பிரண்டு எங்கே?” என்று சௌமியா கேட்க “அவனா? அவன் மலையை பார்த்ததும் தியானம் செய்யறேன்னு உட்கார்ந்து விட்டான்” என்று சொன்னான் ஜெயகாந்தன்

“சரி சரி வாங்க நம்ம கிளம்பலாம்” என்று ஆதிரையன் சொல்ல மூவரும் கிளம்பி இளந்திரையன் இருக்கும் இடம் சென்றனர்.

இளந்திரையன் தியானம் முடித்து விட்டு மலையின் முனையில் நின்று ரசித்துக் கொண்டிருக்க, “அதோ அங்க இருக்கிறான் பாரு நம்ம முனிவரு” என்றான் ஜெயகாந்தன்.
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
சௌமியா தன் அண்ணனைப் பார்த்து “அண்ணா நான் அங்கே போயி மலையின் விளிம்பில் நின்று பார்க்கனும்” என்றாள்.

“சரி ஆனால் நீ அங்கே போயி வாயைத் திறந்துக் பேசக் கூடாது. நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் செய்யனும் என்ன?” என்றான் ஆதிரையன்.

“சரி அண்ணா” என்றவுடன் அவன் கை பிடித்தபடி சென்றவள் விளிம்பை நெருங்க நெருங்க பயத்தால் கையை நீட்டிக் கொள்ள சிறிது தள்ளி நின்று கையை பிடித்தவண்ணம் நின்றுக் கொண்டான். விளிம்பில் நின்று இயற்கையை ரசித்தவளின் முகத்தில் சந்தோசம் துள்ளியதால் அவனைப் பார்த்தாள். அவன் புன்னகையுடன் சிரித்தான்.

சில நிமிடங்களுக்கு பிறகு “பார்த்திட்டியா சௌமி?” என்று சொல்ல திரும்பி ஆம் என்று தலையசைக்க “மெல்ல இரண்டு அடி இரண்டு அடியாய் எடுத்து வை” என்றான்.

சௌமியாவும் அவள் கை பிடித்தபடி அவன் சொன்னபடி மூன்றடி பின் வந்து “அண்ணா... நான் குனிந்து பார்க்கனும்” என்றாள்.

“சரி ஒரடி முன்னாடி வைச்சு முட்டி போட்டு உட்காரு” என அவள் அப்படியே செய்ய “சரி இப்ப மெல்ல குனிஞ்சு பாரு” என்றவுடன் இடது கையை தரையில் வைத்து வலது கையை நீட்டியபடி பார்த்தாள்.

சௌமியா ஆனந்த பரவசத்தில் சிரித்த பிறகு “அண்ணா” என்றாள்.

“சரி சௌமி... மெல்ல நிமிர்” அண்ணன் சொன்னவுடன் நிமிர்ந்து கையை மேல் தூக்க ஆதிரையன் மெல்ல அவளைத் தொட்டுத் தூக்கி நிற்க வைத்தவன் “சௌமி மெல்ல பின்னாடி வா” என்றான்.

“சரி அண்ணா” என்று பாதுகாப்பாக வந்து சேர்ந்தவள் “அண்ணா எவ்வளவு சூப்பராக இருந்துச்சு தெரியுமா? செமையாக இருந்துச்சுண்ணா. சௌமியா வெரி ஹேப்பி அண்ணா” என்று கத்திக் கொண்டே அவனைக் கட்டிக் கொண்டாள் சௌமியா.

“என் சௌமி ஹேப்பியாக இருந்தால் எனக்கு ஒகேதான்” என்று ஆதிரையன் சொல்லி “ஒகேதானே சௌமி?” என்று திரும்ப கேட்க “ரொம்ப அண்ணா” என்றாள் சௌமியா.

“உனக்குதான் பயமாக இருக்கு இல்லையா அப்புறம் ஏன் உனக்கு இந்த ரிஸ்க் எடுக்கிற ஆசை?” என்றான் ஜெயகாந்தன்.

“ஜெயா, அவளை சப்போர்ட் பன்னலைன்னாலும் பரவாயில்லை அவளை குறை சொல்லாதே” என்று பரிந்து வந்த இளந்திரையனை பார்த்து “சரிங்க முனிவரே” என்றான் ஜெயகாந்தன்.

இளந்திரையன் அவளை விட ஐந்து வயது மூத்தவன். அகன்ற நெற்றி, கூர்மையான கண்கள், எடுப்பான நாசி, அகன்ற பெரிய தோள்கள், பரந்த மார்பு, அளவாக கத்தரிக்கப்பட்ட மீசை, தலைமுடியுடன் நல்ல உயரத்துடன் கம்பீரமான தோற்றம் கொண்ட இளந்திரையன் எம்.எஸ்.சி கணிதம் முடித்து விட்டு சௌமியாவுக்கு சொந்தமான பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்க்கிறான்.

“நீ என்ன அவரை முனிவருன்னு கிண்டல் செஞ்சிகிட்டு இருக்க. தியானம் பன்றது எவ்வளவு நல்லது தெரியுமா? அது உடல், மனம், புத்தி எல்லாவற்றையும் ஒருநிலைப்படுத்த உதவும் தெரியுமா? அது ஒரு மனுசனுக்கு சக்தி கொடுக்கும். நம்மளை மாதிரி டாக்டர்களே இப்ப மெடிட்டேசனை செய்ய சொல்லி வரும் நோயாளிகள் எல்லாருக்கும் அட்வைஸ் செய்யறாங்க” என்று ஆவேசமாகப் பேசினாள்.

“சரி சரி இனி அப்படி சொல்ல மாட்டேன் கூல்” என்றான் ஜெயகாந்தன்.

“அப்புறம் என் அண்ணா கூட இருக்கிற வரைக்கும் நான் எந்த ரிஸ்க் வேண்டுமானாலும் எடுப்பேன். நீங்களே பார்த்தீங்க இல்லையா? அவரு என்னை எப்படி செய்ய வைச்சாருன்னு” என்றாள் சௌமியா.

“சரி வாங்க... நாம் எல்லாரும் அவங்க அவங்க வேலையை பார்க்க போகனும். சௌமியா நீயும் நானும் ஹாஸ்பிடல் போகனும். இவன் ஸ்கூலுக்கு போகனும். உங்க அண்ணா எஸ்டேட்டை பார்க்க போகனும்” என்றான் ஜெயகாந்தன்.

“அண்ணா இன்னிக்கு முழுக்க என் கூடவே இருக்கிறதாக சொல்லியிருக்காரு. அவரு இன்னிக்கு என்னை விட்டு எங்கேயும் போக மாட்டாரு. அப்படிதானே அண்ணா?” என்றாள்.

“ஆமாம் சௌமியா. வா போகலாம்.” என்று சொல்ல புன்னகைத்த தங்கையை அழைத்துக் கொண்டு சென்ற அண்ணன் சீட் பெல்ட் போட்டபின் காரை ஸ்டார்ட் செய்தான்.

“ சரி நாங்க ரெண்டு பேரும் பைக்கில் பின்னாலே வருகிறோம்” என்று அவர்களும் பைக்கை ஸ்டார்ட் செய்தனர்.

“அப்புறம் சௌமியா உன்னை அப்பா லஞ்சுக்கு வரச் சொன்னாரு” என்றான் ஜெயகாந்தன்.

“சரி சரி நான் வந்திடறேன். நீங்க பைக்கை பார்த்து மெல்லமாக டிரைவ் பன்னுங்க” என்றாள்.

சௌமியா சீட்பெல்ட் அணிந்தபின் கார் முன்னால் செல்ல அதை தொடர்ந்து அவர்கள் பைக்கும் வந்துக் கொண்டிருக்க சௌமியா அவர்களை பார்த்தபடியே வந்தாள்.

“பாரு பாரு நான் சொன்னதை கேட்காமல் வேகமாக வர்றாங்க அவங்களை நான் என்ன சொல்லுவது?” என்று அவன் வேகத்தை அதிகரித்த பொழுதெல்லாம் திட்டிய தங்கையை பார்த்து சிரித்தான் ஆதிரையன்.

“ஏன் அண்ணா சிரிக்கிறாய்? நான் அவங்க மேல காட்டுகிற அக்கறை உனக்கு சிரிப்பாக இருக்கா?”

“இது வெறும் அக்கறைதானே? இல்லை வேற ஏதாவது?” என்று கேட்டான் ஆதிரையன்.

“அண்ணா இது ஒரு பிரண்டு மேல காட்டுகிற அக்கறைதான். அதை தவிர வேற எதுவும் எங்களுக்குள் இல்லை” என்று சொன்ன விதத்தை பார்த்தான்.

“நம்பி விட்டேன்… நம்பி விட்டேன்” என்று ஆதிரையன் சிரிக்க அதேசமயம் சிரித்துக் கொண்டிருந்த சௌமியாவின் முகம் வாடி அழ ஆதிரையன் அதிர்ந்தான்.
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
“இல்லம்மா கிண்டல் செய்யல. பாசமலர் சிவாஜி-சாவித்திரி, வேலாயுதம் விஜய்-சரண்யா, வேதாளம் அஜித்-லட்சுமி மேனனுக்கு அப்புறம் நீங்கதான் போதுமா?” என்றான் ஜெயகாந்தன்.
ivangaluku atuthu athi& sowmiyava:):):):)nice. heroes intro over........... sowmiyoda hero illava:unsure::unsure::unsure:
நம்பிட்டேன்… நம்பிட்டேன்” என்று ஆதிரையன் சிரித்தான். சிரித்துக் கொண்டிருந்த சௌமியாவின் முகம் வாடி அழ அதிர்ந்தான்.
ethukaga crying:rolleyes::rolleyes::rolleyes: nice epi sis:):):)
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
இருபத்தி மூன்று வயது தேவதையான அவள் மெல்லிய வெள்ளை கலரில் சின்ன சின்ன பூக்கள் போட்ட பிங்க் நிற டிசைனர் புடவையும், அதே நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். அவள் அடர்ந்து வளர்ந்திருந்த கருங்கூந்தலை அழகாய் கனமான பின்னலிட்டு அதில் சிறிய அளவில் மல்லிகை பூவையும் அணிந்திருந்தாள். சிறிய பிறை வடிவ நெற்றியில் கோபுர வடிவ பொட்டையும் இரு புருவங்களுக்கு நடுவே வைத்திருந்தாள். காதுகளில் அவள் மெல்லிய சிறிய ஜிமிக்கி கம்மலையும் அணிந்திருந்தாள். மெல்லிய மை தீட்டிய இரு பேசும் விழிகள், அளவாய் செதுக்கப்பட்ட இரு புருவங்கள், கூர்மையான சிறிய நாசி, புன்னகை தவழ்ந்த லிப்ஸ்டிக் படாத இரு உதடுகள், சிரித்தால் குழி விழும் இரு கன்னங்கள், மெல்லிய விரல்கள் கொண்ட கரங்களில் பிங்க் நிறக் கண்ணாடி வளையல், சேலையால் மறைக்கப்பட்ட மெல்லிய பூஞ்சையான தேகம் என அழகு தேவதையாய் ஜொலித்தாள். அவள் சங்கு கழுத்தில் மெல்லியதாக டி.ஏ.எஸ் என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இதய வடிவ டாலருடன் கூடிய ஒரு தங்கச் செயின் அணிந்திருந்தாள்.
good character intro
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
சௌமியா தன் அண்ணனைப் பார்த்து “அண்ணா நான் அங்க போயி மலையின் விளிம்பில நின்னு பார்க்கனும்” என்றாள்.

“சரி ஆனா அங்க போயி வாயத் திறந்துக் பேசக் கூடாது. நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் செய்யனும் என்ன?” என்றான் ஆதிரையன்.

“சரி அண்ணா” என்றவுடன் அவன் கை பிடித்தபடி சென்றவள் விளிம்பை நெருங்க நெருங்க பயத்தால் கையை நீட்டிக் கொள்ள சிறிது தள்ளி நின்று கையை பிடித்தவண்ணம் நின்றுக் கொண்டான். விளிம்பில் நின்று இயற்கையை ரசித்தவளின் முகத்தில் சந்தோசம் துள்ளியதால் அவனைப் பார்த்தாள். அவன் புன்னகையுடன் சிரித்தான்.

சில நிமிடங்களுக்கு பிறகு “பார்த்திட்டியா சௌமி?” என்று சொல்ல திரும்பி ஆம் என்று தலையசைக்க “மெல்ல இரண்டு அடி இரண்டு அடியாய் எடுத்து வை” என்றான்.

சௌமியாவும் அவள் கை பிடித்தபடி அவன் சொன்னபடி மூன்றடி பின் வந்து “அண்ணா நான் குனிந்து பாக்கனும்” என்றாள்.

“சரி ஒரடி முன்னாடி வைச்சு முட்டி போட்டு உட்காரு” என அவள் அப்படியே செய்ய “சரி இப்ப மெல்ல குனிஞ்சு பாரு” என்றவுடன் இடது கையை தரையில் வைத்து வலது கையை நீட்டியபடி பார்த்தாள்.

சௌமியா ஆனந்த பரவசத்தில் சிரித்த பிறகு “அண்ணா” என்றாள்.

“சரி சௌமி மெல்ல நிமிர்” அண்ணன் சொன்னவுடன் நிமிர்ந்து கையை மேல் தூக்க ஆதிரையன் மெல்ல அவளைத் தொட்டுத் தூக்கி நிற்க வைத்தவன் “சௌமி மெல்ல பின்னாடி வா” என்றான்.

“சரி அண்ணா” என்று பாதுகாப்பாக வந்து சேர்ந்தவள் “அண்ணா எவ்வளவு சூப்பரா இருந்துச்சு தெரியுமா? செமையா இருந்துச்சுண்ணா. அயாம் வெரி ஹேப்பி அண்ணா” என்று கத்திக் கொண்டே அவனைக் கட்டிக் கொண்டாள் சௌமியா.
what a brother
 




mahathipriya

மண்டலாதிபதி
Joined
Mar 2, 2018
Messages
153
Reaction score
281
Location
jayankondam
தியானம் பன்றது எவ்வளவு நல்லது தெரியுமா? அது உடல், மனம், புத்தி எல்லாவற்றையும் ஒருநிலைப்படுத்த உதவும் தெரியுமா? அது ஒரு மனுசனுக்கு சக்தி கொடுக்கும். நம்மள மாதிரி டாக்டர்களே இப்ப மெடிட்டேசன செய்ய சொல்லி வரும் நோயாளிகள் எல்லாருக்கும் அட்வைஸ் செய்யறாங்க
nice words
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top