THIRUMAMA MALARGAL THARUVAYA-1

Maha

Author
Author
SM Exclusive Author
#43
முருகன் துணை....

திருமண மலர்கள் தருவாயா....

அத்யாயம்-1

அது மழை காலம் என்பதால் மேகமகள் தன் ஆனந்தத்தை அவ்வப்பொழுது மாரியாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்..."மழை" அனைத்து ஜுவராசிகளும் ரசித்து மகிளும் இயற்கை அழகி..அவளை அள்ளி அனைக்க ஆசைகொள்பவர்கள் ஏராளம்...இதற்கு நம் கதயின் நாயகி 'மீனாட்சி' மட்டும் விதிவிளக்கல்ல.....
விடியலில் பொழியும் மழைக்கு கூடுதல் ஆழகு சேர்ப்பதுபொல் அந்த இடத்தை ரம்மியமாக்கியது அவள் மாடித்தோட்டத்தில் புதிதாய் மலர்ந்திருந்த ரோஜா மலர்கள்...நேசத்தோடு அவற்றை தீண்டியவள் அந்த சூழலை ரசித்து கைகளை விரித்து அப்படியே நின்று விட்டாள்....மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி....
அவிநாசியின் மையப்பகுதியில் அமைந்திருந்த அவள் வீடு....இரண்டு தளங்களை கொண்ட....இயல்பிற்கும் சற்றே அகலமான வீடு....கீழ் தளம் ஹால்,கிட்ச்சன்,இரு அறைகள் என அளவான வேளைபாடுகளோடு....கலை நயத்துடன் காட்சி தந்தது....ஹாலின் ஒரு ஓரத்தில் மாடிப் படிகள் வளைந்து சென்றன...
மேல் தளம் இரு அறைகளை கொண்டது...ஒன்று விருந்தினர் அறை மற்றொன்று மீனாட்சியின் ஆட்சியை முழுமையாக பெற்ற அறை....அவள் அறைக்கு இரு கதவுகள் உண்டு....ஒன்று, அறைக்குள் செல்வதற்கு....மற்றொன்று அவளின் அறை வழியாக மாடித் தோட்டத்திற்கு செல்லும் வாயல்... நம் மீனாட்சி இயற்கை மீது கொண்டுள்ள ரசனையை பறைசாற்றும் சொர்க்கத்தின் நுழைவாயல் .....
அவ்விடம் முழுவதும் பல வகை ரோஜாகள் ,சாமந்தி,அடுக்கு மல்லி,பிரம்ம கமலம் போன்ற செடிகள் நேர்த்தியாகவும் எழிலோடும் காட்சி தந்தன.... இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல் ஒரு கோடியில் அழகிய குடில் ஒன்று அமைந்திருந்தது...அதன் இரு பக்கங்களிலிருந்தும் ஜாதிமல்லி கொடிகள் அக்குடில் முழுவதும் நிறைந்திருந்தன..... அதன் உள்ளே அவள் வரைந்த ஓவியங்கள்....மினியேச்சர் வகை சிலைகள் அதற்கான உபகரணங்கள் என அந்த இடமே வண்ணமயமாக காட்சியளித்தது....அரைக்கதவுகள் தட்டப்படும் சத்தம் மீனாவை நினைவுலகிற்கு கொண்டு வந்தது.....
"மீனா....ஏய்....மீனா....டோர் ஓபன் பண்ணு....இன்னும் என்ன தூக்கம்...."வாசலில் நின்று தட்டிக்கொண்டிருந்தார் செண்பகம் மீனாவின் தாய்....
"இன்னைக்கும் மழைல நினையரையாடி...அப்படி மட்டும் இருந்துச்சு ....இங்க நடக்க்....." முடிப்பதற்குள் அரை கதவுகள் சடாரென திறக்கப்பட்டன....ஆனால் யாரும் வெளி வரவில்லை....சந்தேகத்துடனே நுழைந்த செண்பகம் கதவுகளுக்கு பின்னே தேடினார் ஒருவரும் இல்லை கட்டிளை பார்த்தார்..
அங்கே வெடி வைத்து எழுப்பினாலும் எழ மாட்டேன் என்ற உறுதியோடு நித்திரையில் இருந்தால் அவரது இரண்டாவது மகளான அபிராமி....பின் அரை முழுவதும் நோட்டமிட்டார்.... அங்கே தோட்டத்தின் கதவுகள் திறந்திருப்பதை பார்த்து அங்கே செல்ல யதனிக்க...அவரை பின்னிருந்து தள்ளியது இரு கரங்கள் .....
"ஏய் ஏய் ...என்னடி பன்னிவைக்ரே என்னவிடு...ஒதப்படபோரடி....மீனா....ஐயோ சுத்தாதடி ...கையவிடு மீனா....."
"ஹா..ஹா...ஹெப்பி மார்னிங் மா....மழை சூப்பரா இருக்குள்ள... கொஞ்ச நேரம் இப்படியே சுத்தலாமே... மா...."
"முருகா.... முடில மீனா...நிறுத்துடி....தலசுத்திவரும்டி விடு.....இப்போ நீ...விடல...காபியும் கிடையாது ஒன்னும் கிடையாது....சொல்லிட்டேன்....." தாய் இப்படி சொல்லவும் சுற்றுவதை நிறுத்தினால் மீனா...
சற்று அசுவசப்படுத்திக்கொண்டபின் முழு வீட்சில் பாய்ந்தார் செண்பகம்...
"அறிவையும் சேத்து சலவைக்கு போட்டுடயாடி....காலங்கார்த்தால இப்படியா பான்னுவ...நீ நனையருத்துக்கே ரெண்டு நாள் கஷாயம் கொடுக்கனும் இதுல என்னையும் சேர்த்துவிட்டத்துக்கு ஒரு வாரம் கரெண்டி...."
கஷாயம் என்றதும் அஷ்டகோணலாக மாறிய மீனாவின் முகம்....பிற்பகுதியை கேட்டு பயத்தை காட்டியது....கண்கள் பிதுங்க தாயிடம்..

"மா... மீனா வெரி பாவம் மா... இந்த பாவப்பட்ட முகம் அந்த கஷாயத்தை குடிச்சா எப்படி மரிப்போகும்???அதனால....அந்த கருமத்துக்...இல்ல இல்ல...அந்த கஷாயத்தை டீல்ல விட்டுட்டு ....சமத்தா காபி குடுங்க பாப்போம்...."

"கேடி...நீ பாத்தி்ருக்க வேலைக்கு இன்னைக்கு கண்டிபா காபி கிடையாது...பாரு உன்னால என் புடவை பூரா நிலைஞ்சிடுச்சு....தாத்தா வாங்கி கொடுத்த புடவைடி...."

"ஆஹா...பார்ரா....மா... என் மழையால உங்க சாரி நிலைஞ்சு மட்டும் தான் இருக்கு....என்னமோ சாயம் பூசுன மாதிரி பீல் பன்றிங்கோ ...இன்னாங்கோ.... இன்னா.."

"பன்றத பன்னிட்டு நக்கல் வேற பேஸ்ரயாடி..."என்று திட்டியபடியே தன புடவையை சரிசெய்தார் அதை பார்த்து சிறுசிரிப்புடன் மீண்டும்

"மாதாஜி உண்மைய சொலுங்க...இது உங்க அப்பா வங்கினதுன்னுதானே இவ்ளோ டென்ஷன் ஆகரிங்க ...இதே எங்க அப்பா வாங்கினதுனா இன்னும் கொஞ்ச நேரம் மழைல நிப்பிங்கள்ல...."
என்று சொல்லிவிட்டு வரபோகும் ஆடியிலிருந்து தப்பிக்க ரூமினுக்குள் ஓடியவளை செண்பகம் துரத்த.. கைக்கு சிக்காமல் அங்கும் இங்கும் தாவினால் மீனா...

"ராஸ்கல் நில்லு ....ஒடம்பெல்லாம் கொழுப்பு மட்டும் தான் இருக்கு..."

"எல்லாம் நீங்க போட்ற சாப்பாடுதான் மாதாஜி...உங்களையே ஏன் திட்டிகிறீங்க...."
இப்படி சொல்லியவள் பெட்டில் தாவியிருந்தால்,அப்பொழுதுதான் கண்விழித்திருந்த அபிராமி இவளை கண்டதும்..

"சிக்குனான்டி சிவனாண்டி.....மாட்னயா மீனாட்ட்ட்சிசிசி...இனி எப்படி தாவுவனு பாக்கறேன்..மா..வாங்க வாங்க வந்து முறைய செய்ய ஆரம்பிங்க..."

"தவறு இழைத்துவிட்டாய் அபிராமி...உன்னை அடுத்த மழைக்கு பார்த்து கொள்கிறேன்...." பாகுபலி ஸ்டைலில் கூறிவிட்டு தாயை பாவமாக பார்த்தால் மீனாட்சி...அவள் அருகில் வந்த செண்பகம் அவள் காதுகளிரண்டியும் பற்றிக்கொண்டார்....

"ம்ம்ம்ம்....போடு...தோப்புக்கரணம்...இந்த தடவை முழுசா பத்துபோடனும்....ஆரம்பி..."

வேறுவழியின்றி "ஒன்னு....ரெண்டு....மூ...மூ....ன்னு....மா...."

"அம்மா தான்...வேற யாரு....இன்னைக்கு சலுகையே கிடையாது..."

"என்னமோ முதல் தடவை மாதிரி சீனப்போடற....மழைநாவே இப்படித்தானே...பன்னு பன்னு...மா நோ கம்பிரமைஸ்...."என்ற அபியை எறித்து விடுவதை போல் பார்த்த மீனா ....
தாயிடம் திரும்பி முகத்தை பாவமாக வைத்துகொண்டு செண்பகத்தின் தோள்மீது கைபோட்டு அவர் கன்னங்களை கிள்ளிபடியே...

"என் செல்ல அம்மா இல்ல...பட்டில்ல உங்க பொண்ண பார்த்தா பாவமா இல்லையா....இனிமே இப்படி பண்ண மாட்னுங்க...விற்றுங்க மா...." இவ்வாறு முகத்தை சுறுக்கி கெஞ்சிய மகளை காண செண்பகத்திற்கு கோவமெல்லாம் மறைந்து அங்கே சிரிப்பு குடிகொண்டது.....அதை பார்த்த மீனா அன்னையை கட்டிகொண்டு பெருமூச்சொன்றை வெளியிட்டால்.....

"கவுந்துட்டீங்களே....செண்பா....இது தான் உங்க கோவமா....அவ கெஞ்சுனா நீங்க ஏன் தான் இப்படி மயன்கறிங்களோ...." அபிராமி கூறியது போல....

பெயருக்கேற்றார் போல் வசிகரிக்கும் கண்கள்...நீண்டு வளைந்திருந்த புருவங்கள்...கூர் நாசி... சற்றே தடித்திருந்தாலும் அதில் என்னேரமும் தவழும் புன்னகை...இடையைதொட்ட அடர்ந்த கேசம்...இளமஞ்சள் நிறம்...சுருங்கச் சொன்னால் ரசனைக்கொண்ட சிற்பியின் கைதேர்ந்த சிற்பம் நம் மீனாட்சி...
அபியின் கூற்றை மனதிற்குள் அமோதித்தாலும் வெளியே காட்டி கொள்ளாது பேசலானார்...
"சரி சரி...நடிச்சது போதும் ரெண்டு பேரும் போய்...குளிச்சு ரெடி ஆகி வெரசா கீழ வர...வழியபாருங்க...."

"ஏன்மா சீக்கிரம் வீக்கெண்டு தானே பொறுமையா வரோமே..."

இப்படி கூறிய தன் இரண்டாவது மகளை முறைத்த செண்பகம்

"ஏண்டி....தூங்கி எழுந்தா நைட் பேசுனதெல்லாம் மறக்ரமாதிரி ஏதாச்சும் நோய் வந்துடுச்சா உனக்கு....மீனா என்னால இவளுக்கு டியூஷன் எடுக்க முடியாது மா....நீயே....சொல்லு ...நான் கீழ
போறேன்...." என்று கூறிவிட்டு செல்ல..

"மாதாஜி ...கடைசில இப்படி காப்பிய கண்ணுல காட்டாம பொறிங்களே.....நியாயமா....."

"நீ காட்டுன ஆடத்துல காபி ஆரிப்போச்சு மீனா....ரெண்டு பேரும் ரெடி ஆகி வாங்க சூடா தரேன்..." வாயெல்லாம் பல்லாக விடைகொடுத்தால் மீனா....அவர் சென்ற பிறகு அபி மீனாவிடம்..

"மீனா என்ன மேட்டர்டி....உனக்கே தெரியும்ல நேத்து வால்டர் பேசரப்போ....பாப்பா அரை போதைன்னு..... சோ சொல்லு ...."
வால்டர் வேறு யாரும் இல்லை....நம் இரு முத்துக்களை பெற்ற ரத்தினம்....வடிவேலன் தான்.... "சுயம்புநாதர் தானியங்கி வினையகம்" அந்த அவிநாசி வட்டாரத்தில் பெரிய பெயர் பெற்ற நிறுவனம்....அதை இன்றளவிலும் வெற்றிகரமாக நடத்தி வருபவர் வடிவேலன்....தந்தைக்கே உரிய கடுமை அவரிடத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கும்....பிள்ளைகள் மீது நெஞ்சம் நிறைந்த பாசம் இருந்தாலும் அதை அவர்களிடத்தில் காண்பிக்க மாட்டார்.....வெளியில் தெரியும் அந்த கடுமைக்கு குடும்பம் வைய்த்த பெயர் WALTER VELAN ....

"ஏனுங்.....அபிங்.....போதையில் கூட நாலு பூரிய நாசுக்கா மொக்குநின்களேங்....அது எப்படிங்......."

"ஹி...ஹி... அது ஒரு தனி கழை மீனாட்சி ....அத விடு மேட்டரசொல்லு...."

"அபி நம்ம சுஜி அக்கா கல்யாணம் டென்டேஸ்ல வரப்போகுதில்ல அதுக்காக செக்கண்ட் ரவுண்டு ஷாப்பிங்டி...இந்த தடவை கோவை... போறோம்....."

இதை கேட்ட அபி துள்ளிகுதித்து கொண்டு குளியல் அறை நோக்கி ஓடினாள்.....அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த மீனா திரும்பி தன் ஓவியங்கள் இருந்த அறைக்கு சென்றால் அங்கு தான் புதிதாய் வடிவமைதிருந்த சிறியகுதிரையை பார்த்து

"உன் மேல உட்கார வைக்க சீக்கிரமே ஒரு ராஜகுமாரன் வரபோராங்க பரி....நீ மட்டும் இல்ல நானும் அவங்களுக்காக வெயிட் பன்றேன்....."முகத்தில் சிரிப்போடு முதல் நாள் இரவில் தந்தை தன் தாயிடம் கூறியவற்றை நினைவு கூர்ந்தால்

"செண்பா....கடவுள் புண்ணியத்துல நம்ம சுஜிக்கு கல்யாணம் கூடப்போகுது....அவ கல்யாணம் முடிச்ச கையோட நம்ம மீனாட்சிகும் வரன் தேட ஆரம்பிக்கலாம்னு தோணுது....நீ என்ன நினைக்கிற...."

"ஏன்ஜெ இதுல.... நான் சொல்ல என்ன இருக்கு....நம்ம சுஜி உங்க அக்கா பொண்ணுனாலும் ..... சின்னதுல இருந்து நம்ம கூடவே வளந்த பொண்ணு....அதனால கொஞ்சம் நாள் ஆனாலும் பொறுத்துதிருந்து சுஜிக்கு முடிஞ்ச உடனே மீனாக்கு எடுக்க சொல்லலாம்னு இருந்தேன் இப்போ நீங்களே கேட்டுட்டீங்க.... " என்றார் முகத்தில் மகிழ்ச்சி பொங்க

"ஆமா... செண்பா....மீனாட்சியும் இந்த வருஷம் படிப்பை முடிக்கபோரால்ல...இப்பொருந்தே பார்த்தா தானே அவ முடிக்க போறப்ப கரெக்டா இருக்கும்....."
தண்ணீர் எடுக்க வந்த மீனாவுக்கு இதை கேட்டு வெட்கம் ஒரு பக்கம்.... மகிழ்ச்சி ஒரு பக்கம் என கலவையான உணர்வு....அப்படியே மாடி ஏறி படுக்கையில் தங்கையுடன் சாய்ந்தாள்....இன்று காலை மீண்டும் அதை எண்ணி நிற்கையில் தான்....அவள் மழையும் தன் பங்கிற்கு பொழிந்து தன் மகிழ்ச்சியை தெறிவித்தது.... அவள் செய்துவைத்திறுந்த ‘பரி’ பிரத்யேகமாக அவள் வருங்கால கனவருக்காக காதுக்கொண்டிருந்தது மீனா அதை பார்த்து...
"Mr.UNKNOWN.....I’M..வெய்ட்டிங் ...." முகத்தில் சிறு சிரிப்போடு குறிக்கொண்டாள்....

அவள் என்ன அலைகள் அவனை அடைந்தது போல....தன் நித்திரையில் இருந்து துயில் எழுந்தான் "மாறன்"..... முகத்தில் சிந்தனை ரேகைகள்... தான் கண்ட கனவின் தாக்கம் அப்பட்டமாய் அவன் முகத்தில் தெறிந்தது.......

விரைவில்..... அடுத்த அத்யாயத்துடன் மலர்வோம்......
(எழுத்து பிழைகள் இருந்தால்....மன்னிக்கவும்)
இயற்கையின் அழகன் மழையோட கதையின் தொடக்கம் அருமை 👏🏻👍😊மொட்டை மாடி தோட்டத்திம் மலரோடு மலர்ராக மீனாட்சியின் அறிமுகம் நல்ல ரசனையோடு ஆரம்பம் சுபெர் அப்பு 😉👏🏻👍🙆🏻‍♀️😁அடுத்து மாறன் இவர் எந்த நாட்டு ராஜாவோ எப்பிடி சந்திக்க போறாரு நிழல் பாரியோடகாத்துக்கிட்டு இருக்கும் பாவையா nice manju ma waiting for next ud👍😍😊
 

Manjula Saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#44
இயற்கையின் அழகன் மழையோட கதையின் தொடக்கம் அருமை 👏🏻👍😊மொட்டை மாடி தோட்டத்திம் மலரோடு மலர்ராக மீனாட்சியின் அறிமுகம் நல்ல ரசனையோடு ஆரம்பம் சுபெர் அப்பு 😉👏🏻👍🙆🏻‍♀️😁அடுத்து மாறன் இவர் எந்த நாட்டு ராஜாவோ எப்பிடி சந்திக்க போறாரு நிழல் பாரியோடகாத்துக்கிட்டு இருக்கும் பாவையா nice manju ma waiting for next ud👍😍😊
😍😍😘😘😘Ulamarntha nandrigal🙏🙏🙏....maha jiii.....romba santhosam jiiii.... comments Padichitu😂😂😂😍😘😘😘
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top