• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THIRUMANA MALARGAL THARUVAAYAA - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
:love::love::love:வணக்கம் சகாஸ்....
போன எபிசோடிற்கு தாங்கள் தந்த ஆதரவிற்கு நன்றியோ நன்றி கண்ணுங்களா ...
இப்பொழுது அடுத்த அத்தியாயத்தை இங்கு கொடுத்துல்லோம்.... இதை தொடர்ந்து இன்னொரு எபிசோடும் போற்றுக்கனுங்கோ...அதையும் நீங்க படிக்கணும்னு இருகரம் கூப்பி வேண்டுகிறேன்...:giggle::giggle:

'சும்மா நாலு லைக்ஸ்.... முடிஞ்சா ஒரு கமெண்ட் போட்டிங்கன்ன'

இந்த புள்ள கரெக்ட்டான பாதைல தான் போரனானுதெரிஞ்சிப்பேன்....உங்கள் விமர்சனுத்துக்காக காத்திருக்கிறேன்....:love::love:
இதோ

அத்யாயம்-7


இனிதான மழைக்கால விடியலின் சூரிய கதிர்கள் மிதமாய் பரவிக்கொண்டிருந்தது உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்கள் நகரும் மேகங்களைப் பின்னணியில் கொண்டிருக்க...பட்சிகள் சிறகடித்து பறந்துகொண்டிருந்தன...அந்தச் சுற்றமே வண்ணமயமாய் காட்சி தந்தது... இந்தச் சூழ்நிலையை பார்த்த எந்தக் கவிஞனும் ஒரு ஹைக்கூ எழுதிவிடுவான்... ஆனால் இந்தத் திசையை கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகப் பார்த்திருந்த மாறனுக்கு அதன் சுவடுகள் கூடத் தெரியவில்லை...

மாடியிலிருந்த தன் அறையை ஒட்டியே தனக்கான உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்திருந்தான் மாறன் அந்த அறையின் ஒரு பாதி முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்டது கதவுகளைத் தாண்டி சிறிய அளவில் பால்கனி... அவன் அறையின் பால்கனியும் இந்த பால்கனியும் அருகருகே அமைந்திருந்தது...அந்தத் திசையை நோக்கியே பெரும்பாலான இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது... இயற்கையை ரசித்த வண்ணம் உடற்பயிற்சியில் ஈடுபடலாம் என்பதற்காக... அதெல்லாம் நம் மாறன் போன்ற ஆண்மகனுக்கு விதிவிலக்கு...
நடைப்பயிற்சி இயந்திரத்தில் ப்ரீசெட் செய்து வைத்திருந்த நேரம் முடிந்துவிட்டதன் அறிகுறியாக அதன் வேகத்தை குறைக்கத் தொடங்கியது... உடல் முழுவதும் வேர்வையால் குளித்திருக்க கீழிறங்கித் துடைப்பதற்கு டவலைக் கையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்த பீம் பாக்கின் மீது அமர்ந்தான் ...
சிறிது நேரம் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு தன் அறையை நோக்கிச் சென்று அடுத்து இருபது நிமிடத்தில் தயாராகி ஜாக்கெட் அண்ட் ஜீன்ஸ் சகிதம் வெளியே வந்தவன் தன் கைக்கடிகாரத்தைச் சரி செய்தப்படியே படியிறங்கி வேகநடையிட்டு வாசலுக்கு விரைந்தான்... இதைப் பார்த்துக் கிட்ச்சனிலிருந்து ஓட்டமும் நடையுமாக வந்து அவனைத் தடுத்தார் அகிலா...

"மாறா... இவ்ளோ காலைலேயே கிளம்பரியேப்பா முன்னமே
சொல்லி இருந்தா சாப்பிட ஏதாச்சும் பண்ணி இருப்பேனே..."

"நோ பிராப்ளம்... டிரைவர் கிட்ட அப்புறம் கொடுத்து அனுப்புங்க"

"மீட்டிங் இருக்கா இன்னைக்கு..?"

"ஆமா மா..."

"எவ்ளோ நேரம் இருக்கும்"

"ஈவினிங் வரைக்கும் எக்ஸ்டென்ட் ஆகும்...ஏன் மா என்ன வேணும்??"

"இல்ல இன்னைக்கு நான் ரேஷ்மி அம்மா அப்பா எல்லாரும் பத்திரிக்கை வைக்க கிளம்புறோம் அதனால நீயும் ரேஷ்மியும் தான் போய் ரிங் வாங்கணும்..."
என்று சொல்லி அவனைப் பார்க்க

"அம்மா ஷெட்யூல் டய்ட்...அதுவும் இல்லாமல்... ரிங்காக நான் வரனுமா...ரெண்டு பேருக்கும் சேத்து நீங்களே எடுங்க..."

"அட்ஜஸ்ட் பண்ணி நீ போயிட்டு வர முடியாதா??"

"அது சாத்தியம் இல்லை... வேற ஏதாச்சும் சொல்லனுமா..."

"......."

" நான் கிளம்பறேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்....

அகிலாவிற்கு தான் சம்மந்தி வீட்டை என்ன சொல்லிச் சமாளிப்பது என்று புரியவில்லை ஏனென்றால் இந்த யோசனையைக் கூறியதே அவர்கள் தானே...இது குறித்து தன் அப்பாவிடம் சென்று ஆலோசிக்கலானார்... யோகா செய்து முடித்திருந்த மூர்த்தி தன் மகள் வந்தவுடன் அவருடே சேர்ந்து நடந்த வண்ணம் பேசினார்

"இப்ப என்ன பண்றது இவன் போகலைனா பரதன் அண்ணா ஏதாச்சும் நினைத்துக்கப் போறாங்க..."

" நீ நிதானமா இரு அகிலாம்மா.... நான் அவன் கிட்ட பேசி பாக்றேன்.."

" அவனுக்கு விஷயத்தைப் புரிய வைங்கப்பா சும்மா கூப்பிட்டாலாம் வரமாட்டான்.."

"ஹ்ம்ம்...புரியுது மா நான் பேசறேன் பார்க்கலாம் என்ன சொல்றான்னு"

" அப்ப நான் அண்ணா கிட்ட என்ன சொல்றது "

"இப்போதைக்கு மாறனுக்குச் சின்ன வேலை இருக்காம் அவன் முடிச்சுட்டு வந்துடுவான்னு சொல்லுமா"

" சரிப்பா நான் அங்க கிளம்பரேன்... வழியில் என் நாத்தனாரையும் கடையில் விட்டுட்டுப் போகணும் "

"ஓகே...மா...நீ கவலை படமா போ"

"சரிப் பா..."
அவர் அகன்ற பின்பு மூர்த்தி கூப்பிட்டது மாறனுக்குத் தான் ...

"சொல்லுங்க தாதா..."

"பிசியா....மை பாய்..."

"இருக்கு தாதா... பட் நீங்க விசியம் இல்லாம ஆபீஸ் அவர்ஸ்ல கூப்பிடமாட்டிங்க....சோ சொல்லுங்க..."

"யா...மாறா... நீ ரேஷ்மியை கூட்டிட்டு போகணுமே பா"

"தாதா...ஐயம் ஹெல்டப் ஹியர்..."

இப்படிக் கூறிய மாறனுக்கு உண்மையிலேயே வேலை அதிகம் இருந்தது...அன்றைக்கு அவன் அங்கு இருப்பது அவசியம்... ஏனெனில் தன் தொழிலின் அடுத்த கட்ட வளர்ச்சியாக புது வகையான ஏற்றுமதி நுட்பங்களைத் தொடங்க அனுமதி பெரும் நாள்...அணைத்தும் தயாராக இருந்தது ஆனால் அதை முறையாக இன்று தான் பெறுகிறார்கள்...நிறைவு பெற மாலை ஆகிவிடும் இதைப் பொருட்டே அவன் காலையிலேயே தன் தாயிடம் கூறினான்...இப்பொழுது மூர்த்திக்குச் சற்று விளக்கமாகவே அங்கு நடப்பதைக் கூறினான்....அகிலா மூர்த்தியை விளக்கிச் சொல்லச்சொன்னார் ஆனால் இங்கு அவர் மகன் தான் விளக்குகிறான் என்ன செய்ய...!!

"தாதா...திஸ் இஸ் மை சிட்சுவேஷன்...டெல் மீ நௌவ்"
இனி நீங்கள் என்வழிக்குத் தான் வரவேண்டும் என்று கூறியது அந்தக் குரல்...ஆனால் தன் பேரன் இப்போதிலிருந்தே பழகவேண்டும் என்றெண்ணி மேலும் கேட்டார்...

"மாறா...ஜஸ்ட் கன்சிடெர் திஸ் ஆல்சோ....ஈவினிங் முடிச்சிட்டு நீ போய்ட்டு வரலாமே..."
சற்று அமைதிக்குப் பின்னர்...

"தாதா...ஒன்னு பண்ணுங்களேன்...அம்மா தான் இன்னைக்கு அவைளபில் இல்லை நீங்க ப்ரீதானே...வை காண்ட் யூ..." மேலும்
"ஐயம் நாட் சூயர் ஹியர்...கமிட்மெண்ட் குடுத்துட்டப்ரோம் பின் வாங்க முடியாது தாதா...சோ வரேன்னு என்னால சொல்ல முடியாது"

"மாறா...திஸ் இஸ் ஆல்சோ யுவர் கமிட்மெண்ட்...ஒரு சில விசயங்கள் நீ செய்து தான் ஆகணும்பா..."

முக்கியம் இல்லை என்றால் மூர்த்தி இவ்வளவு வற்புறுத்த மாட்டார் என்பதை மாறன் அறிவான் ஆகையால் சில நொடிகளில் அன்றைய வேலைகளை ஒரு முறை சரி பார்த்துவிட்டு பிறகு...

"ஆல்ரைட் தாதா....மேக் இட் ஆஸ் ஈவினிங் 6...அதுக்கு முன்னாடி அய் காண்ட்..."

செய்வதரியாது இருந்த மூர்த்திக்கு மாறனின் இப்பதிலைக் கேட்டு உண்மைலேயே நிம்மதியாக இருந்தது...அதன் வெளிப்பாடாய்

"டெபினெட்லி மை பாய்...நான் அவங்ககிட்ட சொல்லிட்ரேன்...நீ 'லலிதா' வந்திடு..."என்று
கூறிவிட்டு இணைப்பை அணைத்து விட்டார்...
அவர் ரேஷ்மியை அழைத்துக் கொண்டு போகச் சொல்லலாம் என்று எண்ணியிருந்தார் ஆனால் மாறனின் அவசரத்தில் அதை அப்படியே சொல்லாமல் விட்டுவிட்டார்...அவர்கள் பழகினாலே போதும் என்ற எண்ணம் அவருக்கு... அகிலாவிடம் விசியத்தை கூறி அங்கு தெரிவிக்கச் சொல்லிவிட்டார்...

'பின்னணி இசை...'

காதலே...காதலே...
தனிப்பெரும் துணையே...
கூடவா...கூடவா...
போதும்..போதும்..
காதலே...காதலே...
வாழ்வின் நீளம்
போகலாம்...போகவா நீ ....

மீண்டும் 'இசை...'

"கால் அட்டெண்ட் பண்ணு மீனாட்சி...."

"அட இரு எலி...மியூசிக்க ரசிப்போம்..."

"எம்மா.... அதுக்கு போட்டு தனியா கேளு...இப்போ எடு..."
மீண்டும் ஒலித்தது... இது வேலைக்கு ஆகாது என அஞ்சலியே யார் அலைப்பதென்று பார்த்தாள் அதில் 'வில்லன்' என்றிருக்க அதை அட்டெண்ட் செய்து மீனாட்சியின் காதில் வைத்தாள்... மறுமுனையில்

" மீனாட்சி...காலேஜ்ல இப்போ அவர்ஸ் நடக்குதா??"

"இல்லையே ரகு..."

"அப்ரோம் ஏன் என் கால்லை எடுக்கல??"

"உன் கால்னு தெரிந்தே தான் எடுக்கலை...ரிங்டோனை ரசிச்சிட்திருந்தேன்" என்று அசால்ட்டாக பதிலளித்தாள்..
இதைக் கேட்டு கடுப்பானவன் அமைதியாக இருக்க...மீனாட்சி அதைப் புரிந்தவளாய் தணிந்த குரலில் அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக

"ரகுவரா...விடுப்பா...மியூசிக்ல மயங்கிட்டேன்...மனிச்சிக்கோ..."
இதற்கு மேல் அவனும் எதிர்பார்க்கவில்லை சகஜமாக பேச தொடங்கிவிட்டன்...ஏனேனில் அவர்களுக்குள் இது சகஜம்...

"சுஜி இப்போ உங்க காலேஜ் தான் வந்துட்டு இருக்கா மீனாட்சி உங்களை பிக்கப் பண்ணிக்க....கூட டிரைவர் வராப்ல...அங்கத்த பிரெண்ட்ஸ்கு இன்விடேஷன் வைக்கணுமாம் சோ அவ கூட ஜாயின் பண்ணிக்கோங்க..."

"ஓஹ்ஹ்...ஓகே..அப்ரோம் ரகு பூர்ணி,அஞ்சலி வீட்டுக்கு சொல்லியாச்சா??"

"சொல்லாம இருப்போமா...அதெல்லாம் ஆச்சு...நீங்க டக்குனு குடுத்துட்டு சீக்கிரமா வீடு வர வழிய பாருங்க"

"யா...ஓகே ஓகே..."

"சரி போன வைக்கிறேன்...அப்போ அப்போ எங்க இருக்கிங்கன்னு அப்டேட் பண்ணு..."

"சரிப்பா வில்லா...அப்படியே வால்டர் தான்...ஹே...உன்ன ரோமியோ ஆக்குன கிளி வருது கூப்பிடட்டா..."

"வேணாம் வேணாம் .... அப்ரோம் எனக்கு வேலை ஓடாது ...நான் போன கட் பன்றேன்..." என்று கூறி சிரித்துக்கொண்டே போனை வைத்தான்.... அவளும் சிரித்துக்கொண்டே மற்ற இருவருக்கும் சுஜியின் வரவைத் தெரிவித்துவிட்டு தாங்கள் செல்வதற்கு தயாராக இருக்கச்சொன்னாள்....சற்று குரலை குறைத்து பூர்ணி மட்டும் கேட்கும் வண்ணம்....

"என்னடி பண்ண எங்க பையன... நீ பேசுனாவே வேலை ஓடாதாம்.."

"ஹே...மீனா...சும்மா இருடி..." என்று கூறி அவள் கைகளில் செல்லமாகத் தட்டினாள்....

"எப்பா...வெட்கப்பட்டா முகம் இவ்ளோ கேவலமா மாறுமோ..."

"ஆமா... டி...ஆமா... நீங்க படுவிங்கல்ல அப்போ பாக்ரேன்..."

"அடப்போடி...என்னைப் பார்த்து அவனுக்கு வராம இருந்தா சரி..."

"ஓஹ்ஹ்... இந்த நினைப்பு வேற இருக்கோ...அப்படிலாம் நினைச்சுராதே... உன்னையும் அடக்கி ஆழ ஒருத்தன் இல்லாமையா போய்டுவான்..."

"கரெக்ட்....பூர்ணி அந்த நாளுக்காக நாங்க எல்லாரும் வெயிட்டிங்" என்று அவர்கள் குழுவே சேர்ந்து கோரஸ் பாடியது...அதைப் பார்த்து துள்ளியெழுந்த மீனாட்சி....

"அடப் பாவி மக்கா....எல்லாரும் இதே என்னத்தோட தான் சுத்தறிங்களா... உங்களையெல்லாம் கட்டிட்டு வந்து வசிக்கிறேன் "

"நீ கட்டிகிட்டா... முதல் காலேஜ் வருவியா??" நண்பிகளில் ஒருத்தி...

"காலேஜ் முடிச்சிட்டு தான் மேரேஜ் அதுல மாற்றம் இல்லை...சோ இந்தக் கேள்வி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....."

"ஹே....இப்போ தான் உங்க அத்தை பொண்ணு மேரேஜ்கு போவல்ல அப்போ உன் டேஸ்ட்க்கு ஏத்த மாதிரி செட் பன்னிடு..."

"என் டேஸ்ட்ட விட என் அப்பா டேஸ்ட் இதுல நல்லாருக்கும்பா அதனால அதை ஒன்ன மட்டுமாவது அவர்ட விற்றுவோம்...என்ன சொல்ற..."

"ஏ...மீனாட்சி...வாயில்லனா உன்ன நாய் தூக்கிட்டு போய்டும்டி..."

" விட்ரா...விட்ரா...நமக்கு புகழ்ச்சி புடிக்காதுனு தெரியும்ல..."
 




Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
இதற்குள் சுஜி அவர்களுக்குத் தான் வந்து விட்டதாகக் குறுஞ்செய்தி அனுப்ப மூவரும் தங்கள் நட்புவட்டாரத்திடம் விடைபெற்றுக்கொண்டு கடைசி இரண்டு மணிநேரம் மட்டும் பெர்மிஷன் போட்டு விட்டுக் கிளம்பினர்...அவர்கள் சுஜியுடன் கிளம்புகையில் மணி 2.30 தாண்டியிருந்தது முதலில் அவர்கள் சுஜி வேலை செய்த அலுவலகத்திற்குச் சென்றனர்...அதற்கு அருகில் சாட் கார்னர் இருந்தமையால் சுஜியை உள்ளே செல்லச்சொல்லி விட்டு இவர்கள் அங்கே சென்றனர்...செல்லும்போதே தங்களுக்கு தேவையானதைப் பட்டியலிட்டு ஆர்டர் செய்வதற்காக மீனாட்சி வரிசையில் நின்றக...அப்போது ஓர் உற்சாகமான குரல்....


"ஹெல்லோ.... மீனாட்சி...."
இதைக் கேட்டு திரும்பியவள் முகத்திலும் லேசான சிரிப்பு

"வாட் எ ஸ்வீட் சர்ப்ரைஸ்...உங்கள இங்க எதிர்ப்பாக்கலை...."

சிரித்த முகமாக அங்கே நின்றிருந்தான் ராஜேஷ் ரகுவின் உற்ற தோழன்...

' எதிர்ப்பாக்கலையா.... யோவ் இது எல்லாருக்கும் பொதுவான இடம்யா....நீ எதுக்கு என்ன எதிர்பாகனும் ரகுக்கு பிரென்ட்னால இந்த தேவாங்கையெல்லாம் பொறுக்க வேண்டியிருக்கு....'

"ரகு வந்திற்கானா???"

"......."

"என்னங்க அமைதியாவே இருக்கிங்க...."

'என்னது நான் அமைதியா!!!!ஏன்பா சொல்லமாட்ட....இவன் பேசலைன்னா விடவா போறான்'

"நாங்க சுஜிக்கா கூட வந்தோம்....அவங்க இன்விடேஷன் குடுக்க ஆபீஸ் போய்ருக்காங்க....நானும் என் பிரெண்ட்சும் இங்க வந்தோம்...."

"நீங்கப் போங்க மீனா..நா..."

"வெயிட் வெயிட்...மீனாட்சி.....ஒன்லி... மீனாட்சி"

"ஹ்ம்ம்...போன தடவையே சொன்னீங்கல்ல சாரி.."

"தட்ஸ் பைன்...அண்ட் நானே வாங்கிக்கிறேன்..தேங்க்ஸ் பார் ஆஸ்கிங்..."

"அட உங்களுக்காக இது கூட செய்ய மாட்டேன்னா என்ன..."

'இவன் யாருடா எப்போ பாரு பால்ஸ் ஓபன் பண்ணிட்டே இருக்கான்'

"தேவையில்லைங்க நான் பார்த்துக்கறேன்..."

"அட என்னங்க நான் தான் வாங்கி தரேன்னு சொல்றேன்ல நீங்க போங்க...."

'திருந்தாது'

"ஓகே நாங்க வெயிட் போன்றோம் அங்க" என்று கூறி விட்டு தன் தோழிகளுடன் வந்து அமர்ந்து கொண்டாள்....

"என்னடி போன வேகத்துல வந்துட்ட யாரு வாங்குவா..??"

"அக்கட சூடு....மா...." அங்கே திரும்பி பார்த்த இருவரும் ஒரு சேர

"ராஜேஷ் தானே...."

"அவனே தான்..."

"இங்க என்ன பன்றான் மீனாட்சி...."

"அவனும் சாப்பிட வந்திருக்கான் நம்மல பார்த்தவுடனே பொது சேவையில் இறங்கிட்டான்..."

"ஓஹ்ஹ்...."
என்றனர் கோரஸ்சாக அதைக் கேட்டு அனல் பறக்க அவர்களைப் பார்த்தாள் மீனாட்சி....

"சும்மா பாக்காத மீனாட்சி....அவன் உன்ன மேல இன்ட்ரெஸ்டெட்டா இருக்கிறது எங்களுக்குத் தெரியாதா...நாங்களும் அவனை பார்க்கரோமில்ல...அவன் உன்னப் பார்த்தவே பறப்பதை..."

ஆம் உண்மையில் அவன் பறந்து தான் வந்திருந்தான்....சுஜி வேலைசெய்து வந்த நிறுவனத்தில் தான் தற்காலிகமாக ராஜேஷ் வேலை செய்கிறான்...வீட்டிற்கு ஒரே பிள்ளை தந்தை நிழத்தரகர் மற்றும் பைனான்ஸ் நடத்துகிறார் அதில்லாது பரம்பரை சொத்துக்கள் ஏகபோகமாக உள்ளது...தந்தையுடன் சேர்ந்துக்கொள்ளும் முன்பு கொஞ்ச நாள் வேலை செய்வோம் என்று அங்கு வேலைக்குச் சேர்ந்திருந்தான்...
ராஜேஷிற்கு மீனாட்சியின் குணத்தின் மேல் நிரம்ப இஷ்டம்...வெளியே கலகலப்பாக இருப்பினும் உள்ளே அதற்குக் குறையாத பொறுப்பும் இருப்பதை அவன் விரும்பினான்...தனக்கு வரப்போகும் மனைவி இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என முதலில் எண்ணியவன்...மீனாட்சியை பார்க்கப் பார்க்க அவளே மனைவியாக வரவேண்டும் என முடிவு கட்டிவிட்டான்...இதை அவளிடம் கூறுவது தனக்குத் தானே குழி வெட்டுவதை போன்றது என்பதை தன் முன் அனுபவங்கள் மூலம் நன்கு அறிவான்.... ரகுவுடன் இருக்கும்பொழுது தயக்கமின்றி பேசும் மீனாட்சி அவன் இல்லாமல் பேசினால் ஓரிரு வார்த்தையோடு நிறுத்தி நடையைக் கட்டி விடுவாள்...இதைக் குறித்து ரகுவிடம் வினவிய போதும்....

"ஏன்டா...மீனாட்சி நீ இருக்கும்போது சகஜமா பேசுது நீ இல்லனா ஒரு வார்தைலயே கத்தறிச்சிட்டு போய்டுது.."


அவனை முறைத்தவாறு "டேய்.... என்னடா நான் இல்லாம அவ எதுக்கு உன் கூட பேசணும்..."

"ஹே ஹே....சும்மா தான்டா கேட்டேன்... "

"உண்மையா சொல்லு என்ன நடந்துச்சு..."

"அது ஒன்னும் இல்லடா...நீ கால் வருதுன்னு போனபோது அவளை மீனானு கூப்பிட்டேன் அதுக்கு அவ 'கால் மீ ஒன்லி மீனாட்சி' னு சொல்லிட்டு போயிட்டா..."

"ஹா..ஹா..ஹா..ஆமாடா...அவளுக்குத் தேவை இல்லாம உரிமையெடுப்பது பிடிக்காது....மவனே ஏதோ நீ நல்லவன்றதால தான் உன்ன விட்டுவச்சிருக்கேன்...மத்தபடி என் மாமன் மகல டிஸ்டர்ப் பண்றனு தெரிஞ்சது அப்ரோம் நாம்ம மத்த பேருக்கு பண்றதை நான் உனக்குப் பண்ணவேண்டியிருக்கும்...."

இவை அனைத்தையும் ரகு விளையாட்டு போலவே சொன்னாலும் ராஜேஷிற்கு அதன் அர்த்தம் விளங்கியது....அதிலிருந்து அங்கு முறையாய் போகவில்லை என்றால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை அறிந்துகொண்டான்....அவள் கல்லூரி முடித்ததும் அவர்கள் வீட்டில் பெண் கேட்கும் எண்ணத்திலிருந்தான்...ஆனால் இன்று அமைந்தது போன்ற அவ்வப்போது அமையும் சமயங்களையும் அவன் நழுவ விட்டதில்லை...சுஜியுடன் அவர்கள் வருவதைத் தொலைவிலேயே பார்த்துவிட்டவன் அவர்களுக்காகக் காத்திருந்தான்....ஆனால் சுஜி மட்டும் உள்ளே வர மற்ற மூவரும் அருகிலிருந்த கடையினுள் நுழைவதைப் பார்த்துவிட்டு வேறு வழியாகப் புகுந்து அந்தக் கடைக்கு வந்துவிட்டான்....

இப்பொழுது அவர்கள் ஆர்டர் செய்ததை வாங்கிக்கொண்டு அவர்கள் இருக்கும் இடம் நோக்கி வந்தான்....
"ஹாய்... போத் ஆப் யூ...எப்படி இருக்கிங்க...."

"பைன்....ராஜேஷ்..." ரகுவின் நம்பன் என்பதால் பூர்ணி சற்று அடக்கி வாசித்தாள்

"நலம் நலம்...." அஞ்சலிக்கு அவன் தெரிந்தவன் மட்டுமே என்ற ரீதியில் பேசினாள்....

"எப்படி போகுது காலேஜ் எல்லாம்...."

"பைனல் இயர் சோ செம்ம ஜாலி தான்...."

"நைஸ்..."

அடுத்த கேள்வி.... கடைசி வருட மாணவர்களின் உயிரைக் குறைப்பதற்கென்றே கேட்கப்படும் பிரத்தியேக கேள்வி

"கேம்பஸ்கெல்லாம் ப்ரிப்பேர் பன்றிங்கலா??"

"என்னப்பா பாக்ரவங்க எல்லாம் இதே கேள்வி கேக்றிங்க...."அஞ்சலி பொறுக்கமுடியாது கேட்டே விட்டாள்...

"ஐயோ....ரொம்ப தப்பா கேட்டுட்டேனோ...."

"ஹே...அஞ்சு இப்படியா பேசுவ.... சாரி ராஜேஷ் அவ தப்பா மீன் பண்ணல...."

" ஓஹ் பிலீஸ்....சும்மா தான் கேட்டேன்..."

இவர்கள் பேசிக்கொண்டிருக்க மீனாட்சி தாங்கள் இருக்கும் இடத்தை தெரிவிப்பதற்காக ரகுவிற்கு அழைத்திருந்தாள்....

"மங்கம்மா....எங்க இருக்கிங்க...."

"நாங்க சுஜிகா ஆபீஸ் பக்கத்துல இருக்க சாட் கடைக்கு சாப்பிட வந்திருக்கோம்...சுஜிகா ஆபீஸ் உள்ள போயிருக்காங்க..."

"ஹ்ம்ம்....ஓகே.ஓகே..பி சேப்... அத்தைக்கு நான் சொலிக்கிறேன்..."

"இங்க ஷாப்ல உன் பிரெண்ட் ராஜேஷ்சைப் பார்த்தோம்....இப்போ அவங்க கூடத் தான் பேசிட்டு இருக்கோம்..."

"ஓஹ்....அவன் சுஜி ஆபீஸ்ல தான் வேலை பாக்கறான்...நீ வை நான் அவனுக்கு கால் பேசிக்கிறேன்...."

"ஹ்ம்ம்...ஓகே ரகு பை..."

"எங்க இருக்கோம்னு ரகு சொல்லச்சொன்னான் அதான் இன்பார்ம் பண்ணேன்"

முதலில் ரகு என்றதும் சற்று அதிரிச்சி தான் ராஜேஷிற்கு அதை முகமும் சற்று பிரதிபலித்தது ஆனால் விரைவில் இயல்பாகினான் அவன் நண்பன் தானே என்ற எண்ணம் ...இப்பொழுது அவன் மொபைலிற்கு ரகுவிடமிருந்து கால் வந்தது அதை அட்னெட் செய்து காதிற்குக் கொடுத்தான்


"மாப்ள ....அங்க சாட்ல உக்கார்ந்து சத்தமில்லாம உள்ளதள்ளிட்டு இருக்க போலயே.."

"டேய்....உன்ன விட்டிட்டு சாப்பிடறேன்னு கோவமா...."

"இல்லையா பின்ன.....பிசினஸ் டேக்கோவர்....பிரஷர் இல்லாம இப்போதைக்கு நீ போலச்சிருக்கியே..."

"எப்படியும் சீக்கிரமே வந்திரும்...சோ கொஞ்ச நாளைக்கு சந்தோசப்பட்டுக்கறேனே "

"ஹ்ம்ம்...பொழச்சிப் போ அவங்க அங்க தான் இருக்காங்கலாம்!!"

"ஆமாடா தோ சுஜி கூட வந்துட்டாங்க..."

"ஓஹ்ஹ்...அப்படியா அப்போ சரிடா....நீங்க பாருங்க நான் அப்ரோம் கூப்பிட்றேன்"

என்று கூறி ரகு போனைக் கட் செய்தவுடன் சுஜியிடம் உரையாடினான்...

"ராஜேஷ்....நான் வீட்டுக்கே வந்து இன்விடேஷன் வச்சுட்டேன் சோ கண்டிப்பா கல்யாணத்துக்கு அம்மா அப்பா கூட்டிட்டு வந்திடனும் ஓகே"

"கண்டிப்பா சுஜி...நீங்க ரகுக்கு மட்டும் இல்ல எனக்கும் அக்கா தான்...."

இதை அவன் உணர்ந்தே சொன்னான்...ஏனெனில் அவன் அலுவலகம் சேர்ந்த புதியதில்....வயதில் பெரியவளாக...தன் தம்பிக்கு எப்படி வழிநடத்துவாளோ அப்படியே ராஜேஷையும் வழிநடத்தினாள் அதனால் ராஜேஷிற்கு சுஜியின் மீது மரியாதை கலந்த அன்பு....

அதிக நேரம் இல்லை என்று கூறி சுஜியும் மற்ற மூவரும் கிளம்ப அவர்களை வழியனுப்பும் விதமாக கார்வரை வந்து அனைவரிடமும் விடைகொடுத்தான்

'சப்பா....பத்தாயிரம் ரூபாய்க்கு நடிக்கிறானே...இவனை என்ன தான் பன்றது....நம்மள பாக்கறப்போ மட்டும் பார்வை மாறுதே...நல்லதுக்கே இல்லையே'

"டேக் கேர் மீனாட்சி....சுஜி அக்கா கல்யாணத்துல சந்திக்கலாம்..."

"சூர்...." என்று கூறிவிட்டு டிரைவர் சீட்டில் ஏறச்சென்றாள்... இதைப் பார்த்த டிரைவர் பதரியப்படி அவளைத் தடுக்க முயன்றார்

"மீனாட்சி கண்ணு வேணாம்மா....நீ ஓட்டினது தெரிஞ்சா...தம்பி திட்டுவார் "

"அந்தத் தம்பியை அடக்கி வைக்க எங்க வசமும் ஆல் இருக்கு அதனால பயப்படாம வந்து உட்காருங்க அண்ணா..."

" கண்ணு...."

"அண்ணா....வாங்க நாங்க சொல்லிக்கிறோம்"

இதற்கு மேல் அவரால் எதுவும் கூறமுடியவில்லை கம்மென்று வந்து முன்சீட்டில் அமர்ந்து கொண்டார் மற்றவர்கள் ஏறியவுடன் கார் நேராகக் கடைவீதியை நோக்கிச் சென்றது...ஒப்பணக்கார தெரு தகரம் முதல் தங்கம் வரை அங்கே கிடைக்கும் கோவை வாசிகளின் அன்றாடத்தில் நீக்க முடியாத இடம்...இப்பொழுது சுஜி செல்வது அங்கே இருக்கும் அவள் தோழமைகளை சந்தித்து பத்திரிக்கை வைக்க....

அடுத்த அத்யாயத்தில் மலரும்:love::love::love:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
மஞ்சுளா டியர்
 




Last edited:

banupriya

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
591
Reaction score
831
Anga maran ah meet panuvala??? Next ud sekuram kudunga
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்னப்பா மதுரை மீனாட்சி
இல்லையில்லை, கோயம்புத்தூரு
மீனாட்சிக்கு இந்த மாறன்
தாலி கட்டுவானோ-ன்னு
பார்த்து பார்த்து கண்கள்
பூத்திருந்தேன், மஞ்சுளா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top