• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THIRUMANA MALARGAL THARUVAYA - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
வணக்கம் தோழிகளே??......

போன எபிக்கு தங்கள் பொன்னான நேரத்தை கொடுத்து படித்த தோழிகளுக்கும் .... படிச்சிட்டு மேலும்... உற்சாகமூட்டும் விதமா லைக்சும்.....கமென்ட்ஸும் கொடுத்த தோழிகளுக்கும்......கோடான கோடி நன்றிகள்......நம் தோழிகள் இந்த எபியும் படிச்சிட்டு உங்க அன்ப வெளிபடுத்துவிங்கனு நம்பறேன்.........??????

திருமண மலர்கள் தருவாயா...

அத்யாயம்-2

" ஹெல்லோ யங் மேன்......என்ன.....இப்பவே...பெட் உன்ன விட மாட்டிக்கிது பொலயே........" இந்த குதுகலக் குரலுக்கு சொந்தக்காரர் குணாமூர்த்தி மாறனின் தாத்தா........

காலையில் தன் பேரனை காண அவன் அறைக்கு வந்த மூர்த்தி கண்விழித்தும் இன்னும் கட்டிலை விட்டிறங்காதவனை குரும்போடு பார்த்து இவ்வாறு கேட்டார்....மேலும்

" ஐ தின்க் யூ வுட் பி டூ ரொமேண்டிக் இன் பியூச்சர் மேன்.....ஏன்னா ரூம் குள்ள வந்து நிற்கும் போதே பிரீஸ் ஆகுதே.... என்ன இருந்தாலும் நீ உன் தாதா ஆக முடியாது மை மேன்...."

என்று கூறி சிரித்துக்கொண்டே அவனை பார்த்தார் ஆனால் மாறனிடம் எந்த பதிலும் இல்லாமல் போக அவன் கட்டில் அருகே சென்று அவனை ஆறாய்ந்தார்....முகத்தில் தெரிந்த புருவ முடிச்சை தவிர வேரேதும் அவரால் கண்டுகொள்ள இயலவில்லை....

"என்ன யோசனை மாறா....வாட்ஸ் ஈட்டிங்கி யு...." என்றார் கேள்வியாக....

"ஹ்ம்ம்....நித்திங் தாதா.... கிவ் மீ பியூ மினிட்ஸ் .....பிரெஷ் ஆகிட்டு வந்து விடுகிறேன்...."

இனி இவனிடத்திலிருந்து ஏதும் வாங்க முடியாதென்பதை அரிந்தவர்....

"டேக் யுவர் ஓன் டைம் யங் மேன்....நான் லான்ல வெயிட் பன்றேன்....." என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்....

அவர் சென்ற பின் தன் பாத்ரூமினுல் சென்ற வாஷ்பேஷன் நீரை முகத்தில் அடித்தவன் மனமோ மீண்டும் அந்த கனவை எண்ணமிட்டது...முகத்தை நிமிர்த்தியவன் எதிரே கண்ணாடியில் தெரிந்த தன் முக பிம்பத்தை பார்த்துக்கொண்டே...

"இது என்ன மாதிரி கனவு..?? நான் ஏன் எல்லார் முன்னாடியும் தலை குனிந்து நிற்கிறேன்....அங்க இருக்க அத்தனை பேரும் என்ன ஏதோ கேள்வி கேட்கிரமாதிரி தெரியுதே....கனவாவே இருந்தாலும்.....என்ன பார்த்து கேள்வி வருமா என்ன...!!நெவெர்...."

இதே யோசனையில் தன்னை பார்த்தவன் கண்களை மேலும் சுருக்கி....

"அது என்ன ஒரு உணர்வு....யாரோ...என் பக்கத்துல நின்னு என்னையே பாக்ர மாதிரி.....அதும்...ஒரு பொண்ணு!!!
அதை பார்த்து எனக்குள்ள என்ன உணர்ரேன்....." சட்டென்று தன் தலையை குளுக்கிக்கொண்டவன்....

"கமான் மாறா....இது என்ன சில்லியா....ஒரு கணவுக்காக இவ்ளோ நேரம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு....ட்ரீம் இஸ் ஆல்வேஸ் அ ட்ரீம்...."
இப்படி ஒரு என்னம் தோன்றிய பின் அதை நினைத்து அவன் மனத்தை குழப்பிக் கொள்ளவில்லை.....

ஆனால்..... நம் விதி பையன்தான்.....ஏற்கனவே கணக்கு போட்டு விட்டானே....அதற்கான முன்னோட்டத்தை தான்..... கனவின் வாயிலாக கொடுத்து எச்சரித்தான்.....அதை உணர்ந்து கொண்டாள்தான் மாறன் மனிதன் அல்லவே.....
ஹ்ம்ம் ....என்ன செய்வது...... எல்லாம் "விதி !!!!!".....

குளித்து தயாராகி ஹாலிற்கு வந்தவன் அங்கு வேலை ஆட்கள் சுத்தம் செய்து கொண்டிருப்பதை கவனித்தான்...அவர்கள் வணக்கத்திற்கு பதில் வணக்கம் வைத்துக்கொண்டு சென்றவனை....மகிழ்ச்சியாக எதிர்கொண்டாள் அவன் தங்கை கயல்....

"ஹாய்.... அண்ணா குட் மார்னிங்...." அங்கு அவளை எதிர்பாராதவனுக்கு சிறிய அதிர்ச்சி.....

"குட் மார்னிங் கயல்....எப்போ வந்த ஊர்லருந்து ...எனக்கு யாரும் இன்பார்ம் பன்னலையே"

"இல்லனா... அது வந்து....நான் வர்றத யாருக்கும் சொல்லலை...இன்பாக்ட் நானும் அவங்களும் சர்ப்ரைஸ்சா தான் கிளம்பி வந்தோம்...."
தன் தங்கை அவள் கணவனுடன் பாதுகாப்பாய் தான் வந்திருக்கிறாள் என்பதை அறிந்தவன் மனதில் நிம்மதியோடு....

"ஓஹோ...யோகியும் வந்திருக்காரா....எங்கடா அவரு....."கண்கள் அவரை தேடியது....

"இங்க பக்கத்துல ஒரு வேலையா போயிருக்காங்க....இன்னும் ஒன் அவர்ல வந்திருவாங்க ...."

"ஓகே ...ஓகே..ட்ரெயின் ஜெர்னிலாம் சேப்தானே....ஏ.சி. கோச் கிடைச்சத்துள்ள...."

"அண்ணா....நாங்க கார்லயே வந்துட்டோம்..."

"வாட்....சென்னை டு கோவை நியர்லி 500 கிலோமீட்டெர்ஸ்...விளையாட்றயா....கயல்....நீ ப்ரெக்னென்ட்னு மறந்துட்டியா....முதல்ல....யோகி எப்படி உன்ன கூட்டிட்டு வந்தாரு..."

என்று கேட்டுக்கொண்டே தொலைபேசியில் யோகியை தொடர்புகொள்ள எதனிக்க...அதை கண்ட கயல் அவனை தடுத்து குறுக்கிட்டு...

"யோகி....முடியாதுனுதான் சொன்னாங்க...பட்...நான் தான் ..."என்று இழுக்க

"நீதான்...அவரை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்திருக்க....நீ தெரிஞ்சு தான் பன்ரியா....ஹெல்த் மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லாம இருக்கியே கயல்...."

கண்களில் வருத்தம் அப்படியே தெரிந்தது....தனது ஆருயிர் அண்ணனை இப்படி காண சகிக்காமல்....

"யோகிகூட கார்ல ட்ராவல் பன்னி ரொம்ப நாள் ஆச்சுணா.... அதான் அவங்கள காட்டயப் படுத்தி கூட்டிட்டு வந்தேன்....ஆனா நீங்க வருத்தப்பட்ரதை பார்கும் போது தப்போனு தோணுதுன்ணா....அயம் சாரி...." வருத்தம் மேலோங்க தலை கவிழ்த்துக்கொண்டாள்....

வீட்டுக்குச் செல்ல மகளான தன் ஒரே தங்கையை இப்படி காண மனமின்றி....

"கயல்....லீவ் இட்...இனிமேல் யோசிச்சு செய்...இப்போ அத விடு...கமான்... கிவ் எ ஸ்மைல்...."என்று கூறி அவள் தோழ்களை தொட...உற்சாகமான சிரித்த கயல்....அண்ணனின் கையை பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் .....தங்கையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவளுக்கு ஈடு கொடுத்து பொறுமையாக நடந்தான்....

"ஐந்தாவது மாதத்திற்கான செக்கப் போனல்ல... என்ன சொன்னாங்க டா?"

"ஹ்ம்ம்.... நாங்க ரெண்டு பேருமே ஹெல்த்தியா இருக்கோமாம்....இன்னும் டேஸ் போக போக....கவனமா இருக்க சொன்னாங்க...."

என்று கூறி விட்டு தானே மாட்டிக் கொண்டதை என்னி நாக்கை கடித்து கொள்ள....அவன் அதை கண்டும் காணாமல் நடந்தான்....

அவன் எப்பொழுதும் அப்படித்தான்...அனைத்தையும் கவனித்துக் கொள்வானே தவிர அவசியம் ஏற்படும் வரை அதை கவனித்ததாக காட்டிக்கொள்ள மாட்டான் அவன் முகமும் ஏதையும் ப்ரதிபலிக்காது....

பதினேழு வயதில் தன் தந்தையை இழந்து நின்ற குடும்பத்திற்கு ஒரே உறுதுணை.... தனது தாய் அகிலாவை பெற்ற குணாமூர்த்தி மட்டுமே....அவர்களை துவண்டு போகா விடாமல்...ஒற்றை ஆளாய் இருந்து....அவர்களையும் தன் மருமகனின் தொழிலையும் பாதுகாத்தார்....ராணுவத்தில் இருந்ததால் இயற்கையாகவே அவருக்கு சுறுசுறுப்பு அதிகம்....இது மருமகன் தொழிலையும் சாயாமல் காக்க உதவியது....

தன் தாத்தாவின் உழைப்பும்,நேர்மையும்,மனதில் நினைத்ததை மறைக்காமல் கூறும் அவர் குணமும் மாறனை என்றும் ஈர்பவை.....
அந்த வயதில் இருந்தே அவருக்கு உதவியாய் இருந்து...தொழில்,குடும்பம்,படிப்பு என அனைத்திலும் பங்குகொண்டான்....

படிப்பை முடித்து வந்த கையோடு மூர்த்திக்கு ஓய்வு கொடுத்துவிட்டு முழுவீச்சில் தொழிலில் இறங்கினான்.....இடைவிடாத உழைப்பும் தொழிலில் அவன் காட்டிய புது அனுகுமுறையும்,புத்திசாலித்தனமும்.....அவனை வெற்றியின் சுவையை காணவைத்தது...இப்பொழுது அவன் நிர்வகிக்கும் 'SNM Exporters' நிறுவனம் ஏற்றுமதி உலகின் அரசன் என்று கூறும் அளவிற்கு.... பிரம்மாண்டமாய் வளர்ந்திருக்கிறது.....

இப்படி வெற்றியை நோக்கி வளர்வதாலோ என்னவோ....ஆளும் 6.2 அடி உயரம்....தன் ஓய்வு நேரம் முழுவதையும் ஜிம்மிலேயே செலவிடுவதால் வயிற்றுபகுதியில் படிக்கட்டுகள் தாராலமாக தெரிந்தன....ஆண்மைக்கு அழகு சேர்க்கும் திராவிட நிறம்....உழைப்பை மட்டுமே காணும் நீண்டு வளர்ந்திருந்த கைவிரல்கள்....

அலை அலையாய் கேசம்...நேர்த்தியாக வெட்டப்பட்ட மீசை....அளவாய் ட்ரிம் செய்த தாடி...என ஆள் பார்க்க அம்சமாக இருந்தான்....

தன்னை பொறுத்தமட்டில் செய்யும் தொழிலும் சரி குடும்பமும் சரி அனைத்தும் ஒன்று தான்...அன்பு ,பாசம் இவைக்கூட கடமைக்கு உட்பட்டது தான்....அவனுக்கென்று ஒன்றும் செய்து கொள்ளமாட்டான்.....மற்றவர்கள் தனக்கு செய்யும் நிலமையையும் வைத்துக் கொள்ள மாட்டான்....மொத்தத்தில்...மாறன் தன் தாய்க்கு அன்பு மகன்....தங்கைக்கு பாதுகாவலன்...தாத்தாவிற்கு நல்ல மாணவன்....கேள்வி என்று தன்னை கேட்கும் அளவிற்கு அவன் எந்த காரியத்திலும் குறை வைத்ததில்லை....

தன் தங்கையின் திருமணத்தையும் ஒரு வருடத்திர்க்கு முன்பு.... தன் அம்மா வலி சொந்தத்திலேயே நன்கு அறிந்த குடும்பமாக பார்த்து திருமணம் முடித்து வைத்திருந்தான்....
 




Last edited:

Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
Me first ?
:love::love::love::love:romba santhosam jiiii.....intha time la kuda....effort yaeduthu.. importance kuduthu padikarathu ku......??????feeling hapiii hapiii jiii....ithoda continuationum irkku ji...nalarukkunu thonichu na athaiyum padichu .....solunga....??????...thanks again jiii????inthanga chocolate saptutae padinga???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top