THIRUMANA MALARGAL THARUVAYA - 6

Manjula Saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
:love::love::love:நேசம் நிறைந்த தோழிகளே....
நான் வந்துட்டேன்.....:giggle::giggle::giggle:
உங்கள் பார்வைக்கு இங்கு 'திருமண மலர்கள் தருவாயா அத்யாயம்-6 மலர்ந்துவிட்டது....
கட்சிப் பணி தொடர்ந்து அழைத்தமையால்
விரைவில் வர இயலவில்லை:cautious::cautious::censored::censored::cry::cry: தங்காஸ்...
எம்மை தயவு கூர்ந்து மன்னிக்கவும்...
படிக்கும் ஆர்வம் குறைய நானே காரணமாகிறேன்:cry:....
இனி சீக்கிரம் வந்துவிடுவேன் மக்கா...:love::love::love:
இத படிச்சவங்க கொஞ்சம் கீழ ஸ்க்குரால் பண்ணி கதையையும் படிச்சு...உங்க விமர்சனத்தை தருமாறு...:giggle::giggle: தாருமாறா கேட்டுக்ரேனுங்கோ.....:love::love:
அது நிச்சயம் என் தவறுகளை திருத்திக்கொள்ள உதவும் மக்கா:giggle:;)நல்ல விசியம் நாலு பட்டாலும் சொல்லுங்கோ;);)...ஓரமா போய் சந்தோசப்பட்டுக்குவேன் சகாஸ்:giggle:...
இப்போ கதைக்கு போய்டுவோம் தோழிகளே...(y)(y)(y) 1311334321baf78e33be5177ed1fbffd80f0231d89.jpg DKPXkoXVYAAFcFs.jpg அத்யாயம் - 6

"அங்கிள்....எனிதிங் சீரியஸ்..!!"

"நித்திங் டு வோரி மாறன்...ஹி இஸ் பெர்பக்ட்லி ஆல்ரைட் நவ்...இது அவர் வயசுக்கு சகஜம் பட் ஹீயர் ஆஃப்டர் டேக் ஸ்பெஷல் கேர் ஆன் ஹிஸ் புட் டைமிங்ஸ்...."

"சேகர் சார்...என் பேரன்கிட்ட எதுவும் சொல்லாதீங்க அப்ரோம் என்னை ஹோம் அர்ரெஸ்ட் பண்ணிடுவான் ...."

"ஹா..ஹா...ஹா...மாறன் அப்படி ஏதும் பண்ணிடாதிங்க...அப்ரோம் அதுக்கும் ஸ்ட்ரெஸ் ரிலீப் கவுன்சிலிங் வரனும்..."

"சேகர் சார் ....அதுதானே இப்பத்த பேஷன்.....பேராண்டியை பாருங்க சிரிச்சு பழகாத வாய்...ஸ்ட்ரெஸ் வராம என்ன பண்ணும்..."

"தாதா...."

"ஓகே...ஓகே.."என்று சரண்டர் ஆனார் அவன் அன்பு தாத்தா....

"அங்கிள்....எனி புட் டயட்??"

"அப்படி எதுவும் தேவையில்லை மாறன்..... புட் ஸ்கிப்ஸ் மட்டும் தவிர்க்கணும்... இப்போதைக்கு எனர்ஜி இன்கிரீஸ்க்கு மட்டும் பிரிஸ்க்ரைப் பண்றேன் .."

" தேங்க்ஸ் அங்கிள்...."

" இட்ஸ் மை டியூட்டி மாறன் ..."என்று கூறி புன்னகைத்தார்...

சேகர் மாறனின் குடும்ப மருத்துவர் அவன் தந்தையில் ஆரம்பித்து இப்பொழுது யோகியின் தாய் தந்தை வரை அவர்தான் பார்க்கிறார் இவர்களைநன்கு அறிந்தவர் ...மாறன் குடும்பத்தின் எல்லாக் கட்டங்களிலும் சக நண்பராக இருந்து அவரால் முடிந்ததைச் செய்து உதவியவர்...

குணா மூர்த்தியை விட ஆறு ஏழு வயது இளையவர் அவரின் உன்னதமான படிப்பிற்கான மரியாதையே மூர்த்தியின் 'சார்' என்ற அழைப்பு.....வாழும் மனிதனின் நிரந்தர பயம் 'மரணம்' அந்த மரணத்தை தள்ளிப் போடும் ஆற்றல் மருத்துவத்திற்கு உண்டு அதிலும் சேகர் அவர் மருமகனின் மரணத்தையே எமன் வாயில் சிக்கி விடாமல் ஆறு வருடங்கள் காத்தவர் ஆயிற்றே

"மூர்த்தி சார்...இனிமே ஜஸ்ட் ஒரு சேப்டிக்காக எனி ஸ்வீட் ஆர் பிஸ்கட் வச்சிக்கோங்க புட் டைம் எக்ஸ்ட்டென்ட் ஆனால் அதுக் கை கொடுக்கும்..."

"நிச்சயமா ...டாக்டர்...."

"ஓகே....மாறன் உங்க கல்யாணத்தில் மறுபடியும் மீட் பண்ணுவோம்"

"சூர்... அங்கிள்...தேங்க்ஸ் அகைன்...நாங்க கிளம்பறோம்"

என்று கூறி இருவரும் வெளியேறினர்...இவர்களுக்காகக் காத்திருந்த யோகி... மாறன் மூர்த்தியை ஒரு பக்கம் பிடித்து அழைத்து வருவதைப் பார்த்து... உதவி புரிய எண்ணி தானும் மறு பக்கம் பிடித்தான்...ஆனால் மூர்த்திக்கு அப்படி திடீர் நோயாளியாவதில் துளி கூட விருப்பம் இல்லை....இருவர் கைகளையும் பார்த்து ....


"பாய்ஸ்...லீவ் மீ..."

அவர் தொணியைப் பார்த்து இருவரும் ஒரு சேர முடியாது என்பது போல தலையை அசைத்தனர்...

"என்னை இப்படி வயசானவன் மாதிரி ட்ரீட் பண்ணி அசிங்கப்படுத்தாதிங்க...."

"வயசான...மாதிரியா...???தாதா...நிஜமாலுமே உங்களுக்கு வயசு தான் ஆகிடுச்சு..."

"கரெக்ட்...எனக்கு ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ற வயசு ஆகிடிச்சு....பியூட்டீஸ் கூடச் சேந்து ஊர் சுற்றும் அளவுக்கு...நீங்க தான் தம்பிங்களா இன்னும் வளரலை..."

"அடடே...பியூட்டீஸ் க்யூல நிக்கிறாங்களோ!!!!"

"இல்லையா பின்ன....'உன் புன்னகை என்ன விலைன்னு' என்ன பார்த்து எத்தனை யங்ஸ்டர்ஸ் கேக்கறாங்க...அந்தப் பேன் கிளப் நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆயிட்டே இருக்கு ....தெரியுமில்ல...."

"தாதா...உங்க ஏஜ்க்கு பாட்டீஸ் கூட யங்ஸ்டர்ஸ் தான் தாதா...."
என்றான் யோகி கேலி செய்தவாறே ...

"தம்பி காலைல என் கூட வாக்கிங் வாங்க என்னோட யூத் கேர்ள்பிரெண்ட் தினமும் என் கன்னத்தை பிடித்து 'கியூட் ஸ்மைல்ன்னு' சொல்லிட்டு போகும் "

இவ்வளவு நேரமும் இவர்களின் உரையாடலை மறை முக மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருந்த மாறன் மூர்த்தியின் பதிலை கேட்டு வெகுண்டெழுந்தான்

"தாதா இது டூ மச் ..."

அவனை ஒரு ஆச்சரியத்தோடு பார்த்தான் யோகி 'இவன் சாதாரணமான பேச்சில் கூட கலந்து கொள்வானா' என்று திறந்த வாய்ப் பின் மூடவேயில்லை

"மாப்பிள அத்திப் பூத்தாற்போல இந்த மாதிரி நடக்கும் அதனால இந்த ரியாக் ஷன விடுங்க..."
என்றார் காற்று மட்டம் வந்த குரலில் இதற்குள் மாறன் அடுத்து ஏதோ வாய்மொழிந்தான்...

" யோகி அந்த பொண்ணு வயசு என்னனு கேளுங்க"

" தாதா...வாட்ஸ் ஹெர் ஏஜ்..."

"அவங்களுக்கு அஞ்சு.... வயசு.... மாப்பிள"
என்று இழுத்தார் இதைக்கேட்ட யோகி நேரடியாகவே முறைதான் பின்பு .....

"யு ஆர் ரைட் மாறன் தாதா....இது ஓவர் தான்....இதற்கு ஒரே பெனால்டி நீங்கத் தனியா நடந்து வாங்க..."

" எப்பா...மாப்பிள இதுக்குதான் நான் இவ்வளவு தூரம் போராடினேன்... இப்ப ரெண்டு பேரும் என்ன விடறீங்களா"

" யோகி தாதாவ கூட்டிட்டு வாங்க நான் கார் எடுத்துட்டு வரேன்"

" ஓகே... நீங்கப் போங்க"
அவன் சென்ற உடன் மூர்த்தி யோகியிடம்

"மாப்பிள இன்னும் நீங்க என்ன விடல"

" அதெல்லாம் முடியாது சும்மா வாங்க தாதா இல்ல உங்க பாப்பக்கு கால் பண்ணி கொடுத்திடுவேன்"

"ஐயோ அப்டிகிப்டி செஞ்சுடாதீங்க மாப்பிள நீங்கக் கையை மட்டும் தான் பிடிக்கிறீங்க... ஆனா உங்க பொண்டாட்டி உங்ககிட்ட என்ன தூக்கிட்டே நடந்து வர சொல்லுவா..."

"புரிஞ்சா சரி... வாங்கப் போகலாம்" என்று கூறிவிட்டு அவர் கைகளைப் பற்ற.. வேறு வழியின்றி மூர்த்தியும் நடக்கத் தொடங்கினார்...அவர்கள் வெளியே வருவதற்கும் மாறன் காரோடு வரவும் சரியாக இருந்தது இருவரும் காரில் ஏற கார் வீட்டை நோக்கிப் பறந்தது...

வேலன் குடும்பம் வீட்டை அடைய இரவாகியிருந்தது வரும் வழியில் சிறு சிறு வேலைகளை முடித்துக்கொண்டும் மற்ற சாமான்களை வாங்கிக்கொண்டும் வந்தனர்...பாதி வழியிலேயே ரகுவும் அவர்களுடன் சேர்ந்து விட்டான் ...அவினாசியை அடைந்தவுடன் பூர்ணி மற்றும் அஞ்சலியை விடுவதற்காக ரகுவின் கார் தடம் மாறியது... உள்ளே இருந்த அனைவரும் ஒவ்வொரு பக்கம் சாய்ந்திருக்க... ஒரு முகத்தில் மட்டும் அந்தச் சாலையில் இருந்த மொத்த விளக்கின் பிரகாசமும் மொத்தமாய் எரிந்து கொண்டிருந்தது... வாய்க் காது வரை சென்று உறைந்திருந்தது... இது அனைத்துக்கும் உரியவர் நம் மாண்புமிகு மாணவர் 'ரகுவரன்' தான்

பின்னே... இருக்காதா... பக்கத்தில் அவன் கிளி அமைதியே வடிவாக அவன் தோளில் சாய்ந்து உறங்குகிறதே...

கார் கோவையில் இருந்து கிளம்பும் பொழுது சுஜிதான் முன்னே அமர்ந்து இருந்தாள்... சிறிது நேரத்தில் தனக்கு தூக்கம் வரவில்லை என்று கூறி பூர்ணியை முன்னால் அமரச் சொல்லிவிட்டு அவள் பின்னால் சென்று விட்டாள்...

ரகு மறுவார்த்தை பேசாமல் சம்மதித்தான் இதுவே பூர்ணிக்கு பதில் சுஜி யாரைக் கூப்பிட்டிருந்தாலும் ரகு அவளை கடிந்துதிருப்பான் ஆனால் கூப்பிட்டது தன்னவளை ஆயிற்றே ஐஸ்கிரீம் சாப்பிடக் குழந்தைக்கு கசக்குமா என்ன...
 
Last edited:

Manjula Saravanan

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
மிதமான ஈரப்பதம் ...நிறைந்தக் காற்று நிலவு தேவதையே வரவேற்கக் காத்திருக்கும் நிலம் ....அந்திசாய்ந்த நேரம்......NH சாலையில் கார் பயணம்.... காதல் கொண்ட நெஞ்சத்துக்கு அதை வெளிப்படுத்த இதைவிட நல்ல நேரம் தேவையா என்ன...

ரகு அப்போதே உறுதிபூண்டுவிட்டான் ...இந்தப் பயண இறுதியில் பூரணியின் சம்மதத்தைப் பெற்று விட வேண்டும் என்று...சம்மதம் தருவாள் என்பது நிச்சயம்.... ஏனெனில் பூரணியின் மன ஓட்டத்தையும் ஓரளவு கணித்து வைத்திருந்தான்... அவள் பார்வை பரிமாற்றம் பிரத்தியேக உரிமை என அனைத்திலும் 'நீ சொன்னால் நாம் மறுக்கமாட்டேன்' என்பதை உணர்த்தியது... அவள் தானாக வந்து என்றைக்கும் வெளிப்படுத்த மாட்டாள் என்பதும் உறுதி..... இதை மனதில் கொண்டு அந்தச் சூழ்நிலையை ரசித்தபடி எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்த வண்ணம் காரை செலுத்தினான்...

அவளும் இவன் அருகாமையை ரசித்தாள் போலும்...முகத்தில் மந்தகாசம் தான் முன்னால் அமர்ந்ததால் பின்னால் உறங்குபவர்கள் தன்னை கவனிக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்தவள் தன் மனதின் பிரதிபலிப்பை முகத்தில் காட்டி ஓரப் பார்வைப் பார்க்க அதை கண்டு கொண்டு ரகுவிற்கும் உடலில் புது ரத்தம் பாய்ந்தது... வார்த்தைகள் அவசியமின்றித் தங்களுள் லயிக்கும் ஒரு மோன நிலை.... கார் சலனமின்றி சாலையில் ஒரே வேகத்தில் சென்று கொண்டிருந்தது.... காத்திருந்த நேரம் வந்துவிட்டது என ரகுவரன் தன்னைத் தயார் செய்து கொண்டு வாயைத் திறந்த நேரம்....

"ரகுவரா......"

மீனாட்சியின் மெல்லிய இழுவையான அழைப்பு..... அவ்வளவுதான் எல்லாம் வடிந்துவிட்டது குரலைக் கேட்டு பூர்ணி தன்னிலை பெற்றாள்....

'ஓ....' என்று கத்த வேண்டும் போல் இருந்தது அவனுக்கு இயலாமையால்கண்களை மூடித் திறந்தவன் பின்மண்டையை தன் சீட்டில் இடித்துக் கொண்டான் ....
குரலை உயர்த்தி மேலும் மற்றவர்களை எழுப்ப அவன் விரும்பவில்லை... அதற்குள் அவன் பின்னால் அமர்ந்திருந்த மீனாட்சி தன் தலையை மட்டும் முன்னால் காட்டி அவனைப் பார்த்து...

"இங்க என்ன நடக்குது செல்லோ..." என்றாள்
அடங்கிய குரலில் ரகுவரன்

"ஏய் பேசாம சாஞ்சிடு... மூஞ்ச முன்னாடி நீட்னே... மூக்கை ஒடச்சிடுவேன்...."

"பாஸ் பாஸ் பாஸ்..... கூல் டவுன்... கூல் டவுன்...."என்றாள் வடிவேல் ரீதியில்
இதைக் கேட்டு அவனுக்கு இன்னும் பல்ஸ் எகிறியது ...

"மவளே கெடச்ச மண்ட போலந்திடும்....வெசம்... வெசம்... நீதான்டி எனக்கு நீலி...."
அதைக் கண்டு கொள்ளாத அவள் மேலும் அவன் காதுகளை நெருங்கி அவன் மட்டும் கேட்கும்படி

"அவட்ட சொல்லிட்டல்ல..... ஓகே சொல்லிட்டா தானே ...எனக்குத் தெரியும் ரகு"

"மீனாட்சி உண்மையாவே உன்மேல செம்ம காண்டில் இருக்கேன்.... அதைக் காட்ட வச்சிடாத...."

"ஓஹ்..... காட்...அப்போ படம் ஆரம்பத்திலேயே நான் வந்துட்டேனா"
என்று சரியாக கணித்து விட்டாள் மீனாட்சி....

வெறுமையாகத் தலையை மட்டும் அசைத்தான் ரகு.... இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிக்கு தன்னை அடக்க முடியவில்லை கைகளை வாய்க்குக் கொடுத்து குலுங்கிக் குலுங்கி சிரித்தாள் திரும்பிய இருவருக்கும் வெவ்வேறு என்னம்....

'சண்டாளி நா மண்டைக் காய்கிறது அம்மூட்டு ஆனந்தமாயிருக்கா உனக்கு.... உன்ன கைமா பண்ணல....'
இது பாவப்பட்ட ரகுவரன் மைண்ட் வாய்ஸ் , மீனாட்சி வாய்திறந்து கேட்டே விட்டாள்

"உனக்கு எங்க ரகுவ பார்த்தா இளக்காரமா இருக்கோ.... இப்படிச் சிரிக்கிற"

பூர்ணி மேலும் குலுங்க ஆரம்பித்து விட்டாள் இதற்கு மேல் தாங்காது என்று நினைத்த ரகு

" ஏய்...மீனா....வாய க்லோஸ் பன்னிக்கிட்டு பின்னாடி போ இல்ல... மாமா வண்டில ஏத்தி விட்டிடுவேன்..."

அவன் குறளில் இருந்து உறுதியில் செய்தாலும் செய்வான் என்ற அபாயம் இருந்ததால் அதற்கு மேல் வாய் திறக்காமல் தான் எழுந்ததன் மூலகாரணமான நீர் அருந்துதலை மட்டும் செய்துவிட்டு மீண்டும் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள் .....அங்கு மீண்டும் அமைதி இப்பொழுது ரகுவரன் நிலையைப் பார்த்துக்கொண்டிருந்த பூர்ணியின் கண்களில் பழைய ரசனைக் குடிக்கொண்டிருந்தது சிறிது நேரம் செல்லச் செல்ல அவனைப் பார்த்த வண்ணம் உறங்கிப் போனாள் ...

மீனாட்சியால் ஏற்பட்ட எரிச்சலுக்குப் பிறகு சாலையில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தான் ரகுவரன்... சற்று நேரத்தில் தன் தோள் மீது ஒரு பூங்கொத்துப் புரள்வதை உணர்ந்து திரும்பி பார்த்தான் நல்ல உறக்கத்தில் பூர்ணி நழுவி தன் தோள்களில் சாய்ந்து கொடுத்திருந்தாள் அங்கு எரிய ஆரம்பித்த வெளிச்சம் அவள் வீட்டை அடைந்து அவளை மெதுவாக எழுப்புவது வரை நீடித்தது.... அவள் பெயர் சொல்லி இரு முறை அழைத்தான் ஒரு ஆசைவும் இல்லை அவளிடத்தில் பின்பு அவளது கன்னங்களை மெதுவாகத் தொட அந்த ஸ்பரிசத்தில் மெதுவாக விழிகளைத் திறந்தாள்... அவன் தோள்களில் சாய்ந்து இருப்பதை உணர்ந்து அவனைப் பார்த்த வண்ணம் எழுந்தமர்ந்தாள்... அவனுக்குள் ஒரு உந்துதல் அவளிடம் வெளிப்படுத்திய தீரவேண்டும் என்று... பூர்ணி தன் முகத்தைச் சரி செய்து கொண்டு இறங்கக் கதவுகளை திறக்க... பட்டென்று அவள் கைகளைப்பற்றி கொண்டு...

" உன்னோடு கொஞ்சம் பேசணும்"
சில நொடி அதிர்ந்தவள் பின்பு மெதுவாக

"தெரியும்....நீங்க அம்மா அப்பா கிட்ட பேசுங்க..."
என்று சொல்லிவிட்டு அவள் கைகளை உருவிக்கொண்டு இறங்கிவிட்டாள்...பின்பக்கம் சென்று அஞ்சலியை எழுப்பி அவளையும் அழைத்துக்கொண்டு சென்றவள்...இவனை முழிப்பதைப் பார்த்துவிட்டு அவனது கதவின் அருகில் குனிந்து...

"ஏன் இப்படி முழிக்கிறீங்க..."

"நீ சொன்னது புரில..."

"இதுவே புரிலயே... உங்கள கட்டிக்கிட்டு நான் எப்படி காலம் தள்ளப்போரனோ தெரில..."

அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் முகத்தில் சிறிது சிறிதாய் மகிழ்ச்சி பிரவாகம் எடுப்பது தெரிந்தது...இதைப் பார்த்தவள் அவன் கண்டுக்கொண்டான் என்பதை அறிந்து நிமிர்ந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்...ரகுவிற்கும் இதுவே போதுமானதாக இருந்தது... உள்ளே உட்கார இயலாமல் இறங்கி விட்டான்...அப்படியே ஓடிச் சத்தமிட்டு கத்த வேண்டும் போல் தோன்றியது...மேல் நோக்கிப் பார்த்து கண்களை மூடிக்கொண்டான்...பிறகு இதை மீனாட்சிக்குத் தெறிவிக்க கீழே குனிந்து மீனாட்சியின் ஜன்னல் கதவை தட்டினான்... தூங்கிக்கொண்டிருந்த மீனாட்சி டக்கென்று முழித்து இவனைப் பார்த்தாள்... அவளைக் கீழே இறங்கும்படி செய்கையை செய்தான்...அவளும் மறுவார்த்தை பேசாமல் கீழே இறங்கிவிட்டாள்... அவள் கைகளை பற்றிக்கொண்டு நடந்ததைக் கூறினான்.....இதைக் கேட்டவளுக்கும் சொல்லொன்னா மகிழ்ச்சி....

"ரகு....ஆசம்.....ஐ பீல் சோ ஹாப்பி பார் யூ..."

என்று கூறி அவன் கைகளை பிடித்துக் குதிக்க ஆரம்பித்து விட்டாள்.... மீனாட்சி கேலியும் கிண்டலுமாக இருந்தாலும் அடிப்படையில் பொருப்பானவள்... தன்னைச் சார்ந்தவர்களுக்கு தவறு நடந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பாள் இப்படிபட்ட தன்மை நல்லதா தீயதா என்பதை அவள் யோசிக்கும் நாளும் வரும் என்பதை அவள் அறியவில்லை....

இப்பொழுது ரகு விசயத்திலும் அப்படித்தான்....அவன் காதல் என்பது எத்தகையது என்பதைப் பல சோதனைகள் வைத்து ஆராய்ந்துள்ளாள் அதில் அவளுக்கும் திருப்தியே....பூர்ணியை பற்றியும் அவளுக்குத் தெரியும்...அவள் தோழி ஆயிற்றே...

இவர்கள் இணைவதில் மீனாட்சிக்கும் மகிழ்ச்சியே...ஒரே வகையைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டளவிலும் பெரிய எதிர்ப்பைப் பெறப்போவதில்லை....இத்தனையும் ஒரு தோழியாய் யோசிக்க வேண்டி உள்ளது...ஏனெனில் இருபக்கமும் அவளுக்கு உற்றவர்களின் வாழ்க்கை....எப்படிப் பார்த்தாலும் இருவர் தரப்பிலும் சம்மதம் கிடைத்துவிடும் என்பது உறுதி....

"ரகு..எப்போ வீட்ல சொல்லப்போரே...??" இவளின் முகத்தைப் பார்த்து அவனுக்கும் மகிழ்ச்சி தாண்டவமாடியது... இருந்தும் இரவின் அமைதியை முன்னிட்டு அமைதியான குரலிலேயே...

"நம்ம சுஜி கல்யாணம் முடியட்டும் அப்ரோம் சொல்லிக்கலாம்...பெர்மிஸ்சன் வாங்கிட்டோம்னா உன் கல்யாணம் முடிச்சப்ரோம் எங்க கல்யாணம்...அதுக்குள்ள நானும் பிசினஸ்ல ஸ்டேபில் ஆகிடுவேன்...."

"ரகு... உஷார் கேடிப்பா நீ.....என்னமா பிளான் போட்ர போ....என் கல்யாணம் வரைக்கும் யோசிக்கிரையா நீ....கவலையே படாதே...இதுக்காகவே சீக்கிரம் கட்டிக்கிறேன்...."

"ஆஹா....சந்தடிசாக்குல உன் கனவையும் சொல்லிட பாத்தியா..."

"என்ன ...நான் ....என்ன சொன்னேன்"

"மலுப்பாத மீனாட்சிமா...உங்க கனவு என்னனு எங்களுக்குத் தெரியாதா என்ன..."

"அப்படி என்ன தெரியும் உனக்கு..."

"என் வாயாலயே கேக்க அம்முனிக்கு ஆசை...ஏன் கெடுப்பானே... "

"ஹே...."

"உண்மைய சொல்லு....என் வருங்கால அண்ணன் யாருனே தெரியாமா கனவு கானல??அடிக்கடி அவுட் ஆப் பாக்ஸ் ஆகரது அவர நினைச்சுத் தானே..."

இதைக் கேட்டு அவனை அடிக்க வந்தவள் சிறு சிரிப்போடு அப்படியே கையை இறக்கிக் கொண்டாள்....மேலும் அவனைப் பார்த்து

"தெரியுதில்ல...ஒழுங்கா இப்பத்துல இருந்தே தேடற வழிய பாரு...அதான் உன் லைன் கிறீன் சிக்னல் ஆகிடுச்சே....அதனால வால்டர் கூடச் சேந்து தேட ஆரம்பி ஓகே...."

"சரிங்க மகாராணி.....உங்க அதிம்பேல பார்த்து உங்க கைல குடுக்க வேண்டியது எங்க பொறுப்பு.....ஆனா எங்க மானத்த அங்க போய் காப்பாத்த வேண்டியது உன் பொறுப்பு..."

"நிச்சயம் அருள்வேன் பக்தா..."
என்று கூறி ஆசிர்வதிப்பதைப் போன்று கைகளை அசைத்தாள் மேலும்

"இப்பொழுது நீங்கள் வண்டியைச் செலுத்தவில்லை என்றால்... என் தீவிர பக்தர் ஒருவர் உங்களை வைத்து நேத்திக்கடன் தீர்த்துவிடுவார்...எப்படி வசதி...."

அது வேலன்தான் என்று புரிந்தவுடன் கால்கள் தானாக ஏறி வண்டியைச் செலுத்த தயாரானது...மீனாட்சியும் அமர இருவரும் பேசிக்கொண்டே வீட்டை அடைந்தனர்...இரவு பால் மட்டும் போதும் என்று உறங்கச் சென்றுவிட்டாள் மீனாட்சி....குளித்து இரவு உடைக்கு மாறியவள் நேரே சென்றது மாடித்தோட்டத்திற்கு தான்...நிலவு வெலுச்சத்தில் அதின் சோபை இன்னும் கூடியிருந்தது....அதை ரசித்த வண்ணம் கைகளில் மினியேச்சர் செய்யும் கருவிகளுடன் அமர்ந்தாள்...தன் மரக்குதிரையான 'பரி'க்கு ஏற்ற ராஜகுமாரன் செய்ய ஆரம்பித்துவிட்டாள்...உருவ அமைப்பு பற்றி இத்துணை நாள் யோசித்திருந்த மீனாட்சிக்கு இன்று ஏனோ ஆரம்ப கட்ட வடிவத்தைச் செய்தேயாகவேண்டும் என்று தோன்றியது அதன்படி கையில் எடுத்தும் விட்டாள் கருவியை மரத்துன்டின் அருகில் கொண்டு செல்லும் போதுதான் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தாள்... மனதை அலசி ஆராய்கையில் திடும்மென வந்து நின்றது மாறனின் உருவம்...வாய்விட்டே பேச ஆரம்பித்து விட்டாள்

"மீனாட்சி...இது யார நினைச்சு செய்யும் உருவம்னு தெரியும்ல...அப்ரோம் எப்படி அந்த வளந்தவன் முகம் உனக்கு ஞாபகம் வரலாம்??இது ரொம்ப தப்பு..."

அவள் மனசாட்சியோ

'அப்போ உங்களுக்கு எதுக்கு இந்த விபரீத வேலை...சும்மா இருக்க வேண்டியது தானே...'

"நான் மட்டும் வேணும்னேவா செய்றேன்...என்னமோ மனசு செய்ய தொடங்கென்று சொல்லுதே..."

'அப்போ அத பத்தி மட்டும் யோசி ஏன் இன்னொருத்தர் லவ்வர்ரை பத்தி நினைக்கிற'

இப்படி மனசாட்சி சாடவும்...அவளால் அதை மீறி மீண்டும் கருவியில் கை வைக்க முடியவில்லை....

"கரெக்ட்...கடைல பார்த்தப்பவே அந்த வளந்தவன் அவன் லவ்வர் பாக்க தான் வந்தான்....நான் ஏன் அப்ரோம் அவனை யோசிக்கணும்....!!!"
அதன் சாரம் புரிந்த பின்பு ஒரு முடிவுக்கு வந்தவளாக தன் வலது கை ஆள்காட்டி விரலை முகத்திர்க்கு முன் நீட்டி

"மீனாட்சி...எல்லாம் உன் வயசு கோளாறு வேற ஒன்னும் இல்ல....பிரீயா விடு...அவனை நினைக்க நீ யாரு... இதுல ரியாக்ட் பன்றதுக்கு ஒன்னும் இல்லை...லீவ் இட்"
என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டு வந்து தன் படுகையில் விழுந்தாள்...சிறிது நேரத்தில் தன் தங்கை மேல் பாதி மோதிக்கொண்டு உறங்கி விட்டாள்...

பார்ப்போம் அவள் எண்ணியதற்குப் பரிட்சையாக மறு நாளே அவனை நேருக்கு நேர் சந்திக்கப்போகிறாள்...பேசும் நிலையும் வருமே அப்பொழுது என்ன செய்வாள் என்று !!!

மீண்டும் மலர்வோம் மக்கா....:love::love::love:
 
Last edited:
#6
ஒரு வழியாக பூரணியிடம், ரகு
லவ்ஸ்ஸை சொல்லிட்டானா,
மஞ்சுளா டியர்?
பய புள்ளைக்கு ரொம்பத்தேன்
வீரம் வந்திடுச்சு போலவே?
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top