• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulirvidum Nesamadi! - 44 Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 44

எனது நேசம் துளிர்விட

காதல் பாவையவள் கைசேர

நிலவின் மடியில் மலரானேனடி

இந்த மகிழனின் நேசமது

மீண்டும் துளிர்விட தொடங்கியடி

பெண்ணே உனது கருவறையில்..

அந்த தளிரை கையில் வாங்கிய

நொடிபொழுது உணர்ந்தேனடி

இவள் என்மீது கொண்ட

காதலும் துளிர்விடும் நேசமேன்று..!

மகிழன் வீட்டின் முன்னே காரை நிறுத்திய மறுநொடியே காரைவிட்டு வேகமாக இறங்கிய வளர்மதி வீட்டின் உள்ளே நுழைந்தாள்.. வீட்டிற்கு நுழைந்ததும் அவளின் பின்னோடு வீட்டின் உள்ளே செல்லாத மகிழனோ காரைத் திருப்பிக்கொண்டு செல்வதைப் பார்த்த வளர்மதி, “இப்போ எங்கே போறார்..?” என்று யோசிக்க அன்று முழுவதும் அவனுக்காக காத்திருக்க காலையில் சென்ற மகிழனோ மாலை மயங்கும் நேரத்தில் வீடு வந்து சேர்ந்தான்.. அவனின் வரவை எதிர்பார்த்து கோபத்துடன் வாசலில் அமர்ந்திருந்தாள் வளர்மதி..

மகிழன் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு காரில் வீடு வந்து சேர வாசலில் அமர்ந்திருந்த வளர்மதியைப் பார்த்து அவனின் உதட்டில் புன்னகை அரும்ப காரை வேகமாகக் கொண்டு சென்று அவளின் முன்னே நிறுத்தியதும், “ஐயோ என்னோட செடி..” என்று பதட்டத்துடன் எழுந்த வளர்மதியோ வந்து மகிழன் என்று அறியாமல், “யாரு அது என்னோட செடியின் மீது வண்டியை கொண்டு வந்து விடுவது..?” என்று கோபத்துடன் கேட்டவளைப் பார்த்தபடி காரைவிட்டு இறங்கினான் மகிழன்..

அவனைப் பார்த்த மறுநொடியே, “என்னோட செடியில் கொண்டு வந்து காரை விடுறீங்க..” என்று இடையில் கையூன்றி கோபத்துடன் கேட்ட வளர்மதியைப் பார்த்த மகிழனோ, “ஏன் உன்னோட செடிக்கு ஒன்னு என்றால் உன்னால தாங்க முடியாதோ..” என்று திரும்பிய மகிழன் அங்கிருந்த மனோரஞ்சிதம் செடியைப் பார்த்து, “மகிழம்பூ பிடிக்குன்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு மனோரஞ்சிதம்..” என்று கேட்டதும், “எனக்கு மனோரஞ்சிதம் ரொம்ப பிடிக்கும்.. அதுமேல கை வெச்ச எனக்கு கேட்ட கோபம் வரும்..” என்றவள் கோபத்துடன் சொல்ல அந்த செடியையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான்..

“ஐயோ இத்தனை நாள் எனக்கு இந்த விஷயம் தெரியாதே..” என்று செடியை கிள்ள அதனருகில் சென்ற மகிழனைப் பார்த்த வளர்மதியோ, “மாமா செடியில் மட்டும் கை வைக்காதே..” என்றவள் சொல்ல, “நேற்று பேச வந்தப்போ நீ விட்டியா இல்லையே.. நானடி செடியில் இருக்கும் இலையைக் கிள்ளுவேன்..” என்று செடியில் கைவைக்க அவன் செடியில் இருக்கும் இலையைக் கில்லிவிடுவானோ என்று பயந்தவள், “மாமா நமக்குள்ள என்ன பிரச்சனை என்றாலும் பேசி தீர்த்துக்கலாம்.. செடி மேல கை வைக்காதே..” என்றவள் சொல்ல திரும்பி நின்று அவளைப் பார்த்து சிரித்த மகிழனை முறைத்துவிட்டு வீட்டின் உள்ளே சென்றாள் வளர்மதி..

அவள் வேகமாகச் சென்று சமையலறைக்குள் நுழைய
அவளின் பின்னோடு சமையலறைக்குள் நுழைந்த மகிழனோ, ‘இங்கே என்ன வெச்சிருக்கா..?’ என்று யோசித்தபடியே அவளின் பின்னோடு சென்று நின்று பார்த்தான்.. அவளோ அவன் வந்ததைக் கூட கவனிக்காமல் ஊறுக்காய் பாட்டிலை திறந்து ஒரு ஸ்பூன் மாங்கா ஊறுகாயை எடுத்து சாப்பிட அதை கவனித்த மகிழனின் புருவம் சுருங்கியது..

அவளின் பின்னோடு வந்த மகிழன் அவளின் இடையோடு கைகொடுத்து இறுக்கிக்கொண்டு, “இங்கே என்னடி பண்ற.. அதுவும் திருட்டுத்தனமாக என்னது திங்கற..” என்று கேட்டவனின் கரம் அவளின் இடையோடு விளையாட, “அது எல்லாம் உன்னிடம் சொல்ல முடியாது பனமரம்..” என்றவள் அவனுக்கு பதில் சொல்ல அவளைத் தன்பக்கம் திருப்பிய மகிழனோ, “மனோரஞ்சிதம் பூசெடி வேணும் இல்ல..” என்று கேட்ட மகிழனைப் பார்த்தவள், “ஏன் மாமா என்னிடம் இப்போ வம்பு பண்ற.. நீ காலையில என்னை தனியாக விட்டுட்டு போனதில் நான் ரொம்ப கோபமாக இருக்கேன்..” என்றவள் சொல்ல அவனின் பார்வையோ அவளின் இதழில் நிலைத்து நின்றது..

அவனின் பார்வை சென்ற திசை பார்த்த வளர்மதி அதற்கு மேல் முடியாமல், “உன்னோட பார்வை சரியில்ல மாமா..” என்று கோபத்துடன் கூறியவள் திரும்பி நின்று மாங்காய் ஊறுக்காயை சுவைக்கவும் அவளை தன்பக்கம் திருப்ப முயற்சி செய்தவனின் கையைத் தட்டிவிட்டு மீண்டும் திருப்பிய வளர்மதியின் இதழோடு இதழ் பதித்தான்.. அவனிடம் இந்த முத்ததை எதிர்பாராத வளர்மதியோ அவனின் கைக்குள் கட்டுப்பட்டு நிற்க அவளின் இதழில் முத்தமிட்டு நிமிர்ந்த மகிழன், “என்னடி முத்தம் கொடுத்தா இனிக்கும்.. இது என்ன உன்னோட இதழ் மட்டும் மாங்கா மாதிரி புளிக்குது.. யெப்பா சரியான நாட்டு மாங்கா..” என்று கண்ணடித்தவனைப் பார்த்து வெக்கத்தில் தலை குனிந்தாள் வளர்மதி..

அப்பொழுதுதான் அவளின் பின்னோடு இருந்த மாங்கா ஊறுகாயைப் பார்த்த மகிழன் எதுவும் அறியாதவன் போல, “என்னடி மாங்கா ஊறுக்காய் சாப்பிற என்ன விஷயம்.. என்கிட்ட மட்டும் சொல்லு..” என்றவளைக் கேட்டதும் வெக்கத்தில் அவளின் கன்னங்கள் இரண்டும் சிவந்தது.. “ச்சீ போ மகி.. நான் மாங்கா சாப்பிட காரணமே நீதான்.. ஆனா நீ என்னடான்னா எதுவும் தெரியாத மாதிரி கேட்கிற.. சரியான வில்லேஜ் மாங்கா..” என்று அவனுக்கு விளக்கம் சொன்னவள் அவனை கேலி செய்யவும் மறக்கவில்லை.. அவள் சொல்லி முடிக்கும் வரையில் அவளின் முகத்தில் தெரிந்த பாவனைகளை எல்லாம் சேகரித்து தன்னுடைய மனபெட்டகத்தில் சேர்த்தவன், “யாரு வெளிநாடு போய் படிச்ச நான் வில்லேஜ் மாங்காவா..? அப்போ நீ என்னோட வாய்ஸ் மெசேஜ் கேட்கவே இல்ல..” என்றவன் கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்த வளர்மதியின் முகம் குழப்பத்தில் இருந்தது..

“நீங்கதான் என்னோட பேசவே இல்லையே..” என்று குறைபட்டாள் வளர்மதியின் கைகளைபிடித்து தன்னுடைய அறைக்குள் அழைத்துச் சென்ற மகிழனோ அவளின் செல்லை எடுத்துகொண்டு படுக்கையில் அமர, “மாமா இந்நேரம் வரையில் நீங்க எங்க போனீங்க.. அதை முதலில் சொல்லுங்க..” என்றவள் மிரட்ட, “எனக்கு ஒரு சின்ன வேலை இருந்துச்சு அதை முடிச்சுட்டு இப்போதான் வரேன்..” என்று சாதரணமாக கூறியவன் கட்டிலில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்தான்.. அது என்ன வேலை என்று அவனும் கேட்கவில்லை அவளும் சொல்லவில்லை..

அவனின் மார்பில் சாய்ந்து அமர்ந்த வளர்மதியோ அவனின் கையில் இருந்த செல்லை வாங்கி, “நான்தான் பார்ப்பேன் மாமா..” என்று சொல்லி அவன் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் எடுத்து ஒலிக்க விட, அவனும் அவளை அணைத்தபடியே, “இந்த மெசேஜ் கேட்காம வீட்டில் இருக்கும் எல்லோரையும் ஒரு வழி பண்ணி வெச்சிருக்க..” என்று கூறியவன் அவளின் கன்னத்தில் முத்தமிட, “இந்த வாய்ஸ் மெசேஜில் என்ன மகி பேசி இருக்கீங்க..” என்றவள் கேட்க அவனின் குரலில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது..

தங்க நிலவுக்குள் நிலவொன்று

மலருக்குள் மலர் என்று வந்ததே..

எந்தன் கனவுக்குள் கனவொன்று

நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே..

கொடிமுல்லை கொடிகட்டும் மன்னனோ

இன்ப சிறைபட்டு திரை இட்ட கண்ணனோ..



முத்துகள் கொட்டிய நட்சத்திரம்

அந்த நட்சத்திரம் என் பக்கம் வரும்..

வித்துக்கள் கட்டிய முத்துச்சரம்

என் பக்கம் வந்து பொன் முத்தம் தரும்..

ஒரு முத்துத்தான் உடைபட்டுத்தான் பூவாய் மாறும்

அதை தொட்டுத்தான் அணை கட்டித்தான் பாடும் ராகம்

வண்ணசிலை பெற்றுத்தரும் அன்புச்சின்னக்கிளி

கலை கற்றுத்தரும் அந்த வண்ணக்கிளி

சிந்திட்டாமல் வந்த தேனே சொந்தமானேன் நான்..



இந்த பூவைக்கு பூவைத்துச் சூடிடும் மாமனுக்கு

நல்ல தொகையில் தொகையில் சொக்கிடும் மாமானுக்கு

அன்பிற்கும் பண்பிற்கும் ஆள் வரப் போகுது

அம்மா என் அப்பா என்றாட்டிடப் போகுது..



வெக்கத்தில் மின்னிடும் தங்கக்குடம்

அது தொட்டுத்தரும் உன் சொர்க்கம் வரும்..

கற்பனைக் கட்டிய முல்லைச்சரம்

எனை கட்டிக்கொள்ள தன் கையைத் தரும்

பலஎண்ணம் தான் ஒரு எண்ணம் தான் பாலாய் ஊரும்..

ஒரு செல்லம்தான் இவன் செல்வன் தான் நாளைத்தோன்றும்

கன்னம்தனில் சின்னம்ல என்று எண்ணித்தரும்

இன்னும் பல இன்பங்களைச் சொல்லித்தரும்..

முத்துமாலை நித்தம் போடசித்தமானேன் நான்..” என்றவன் பாடும் குரலில் மயங்கியவள் பாடல் முடிந்த பின்னரும் கூட கண்விழிக்காமல் அவனின் மார்பில் சாய்ந்துகொண்டு குழந்தை என்ற கற்பனையில் ஆழ்ந்தவளின் நெற்றியில் இதழ் பதித்து நனவுலகிற்கு அழைத்து வந்தான் மகிழன்...

“மகிமா உன்னால மட்டும் எப்படி இப்படியெல்லாம் முடியுது.. பாட்டு செலக்சன் சூப்பர்.. அதுவும் உன்னோட குரலில் நீ பாடிய பாட்டில் நானே என்னை மறந்துவிட்டேன்..” என்றவள் காதலோடு அவனின் விழிகளைப் பார்த்து அவள் சொல்ல, “உன்ன மாதிரி நல்ல வாய்பேசற குட்டி பொண்ணு ஒன்னே ஒன்னு மட்டும் பெத்துக்கொடு துளிரு..” என்று ஆசையாக கேட்டவனின் கைகள் அவளின் வயிற்றை வருடியது..

“எனக்கு உங்க மாதிரி பையன்தான் வேணும்.. நான் ஒருத்தி பண்ற சேட்டை பத்தா.. எனக்கு போட்டியாக இன்னொரு ஆல்வேறு வேண்டுமோ..?” என்று குறும்புடன் கேட்டதும், “உன்ன மாதிரியே என்னோட மகள் இருந்தான்தான் உன்னோட சேட்டையை நான் அடைக்க முடியும்..” என்று கூறியதும் அவள் மறுப்பாக தலையசைத்தாள்.. அவளின் மணி வயிற்றில் முத்தம் பதித்த மகிழனோ, “நீ வேண்டான்னு சொன்னாலும் எனக்கு பொண்ணுதான் வேணும்..” என்றவன் பிடிவாதமாக கூறினான்..

“முடியாது பையன்தான்..” என்று அடம்பிடிக்க அவளின் இதழில் முத்தம் பதித்த மகிழன் அவளுக்கு தொலைந்து போனான்.. நாட்கள் வேகமெடுத்து செல்ல ஆரம்பிக்க மகிழன் இங்கிருந்த படியே எல்லா பிராஞ்சிலும் தன்னுடைய வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.. மிதிலனும் அவனுடைய தொழில் கவனம் செலுத்த மனைவியுடன் வந்து பாரியூரில் தங்கிவிட்டார் சுகுமாறன்.. வளர்மதி அந்த வீட்டின் மகாராணி போல அவளை எல்லோரும் தாங்கிட மகிழனோ அவளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டான்..

ரஞ்சிதாவின் பெற்றோர் ஊருக்கு வர மிதிலனின் திருமணம் நல்லபடியாக பேசிமுடிக்க வளர்மதி ஆறாவது மாதம் முடிய எழாவது மாதத்தில் மிதிலனின் திருமணம் முடிவு செய்ய பாரியூரில் அவனின் திருமணம் நடக்க அவனின் திருமணத்திற்கு மகிழனின் நட்பு வட்டத்தில் இருந்த எல்லோரும் மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.. மித்ரன் மஞ்சரியுடன் வந்திருக்க திருமண மண்டபத்தின் உள்ளே நுழைந்தவள் அங்கே வேலை செய்து கொண்டிருந்த வளர்மதியைப் பார்த்தாள்..

அப்பொழுது அவர்களை வரவேற்க வாசல் வரையில் வந்த மகிழனைப் பார்த்தவள், “மாமா ப்ரமோஷன் வாங்கிய விஷயத்தை என்னிடம் சொல்லவே இல்ல பார்த்தியா..” என்று குறும்புடன் கேட்ட மஞ்சரியைப் பார்த்த மகிழன், “நீ ப்ரமோஷன் வாங்கிய விஷயத்தை என்னிடம் நீ இன்னும் சொல்லவே இல்ல..” என்றவன் அவளை வம்பிழுக்க, “நான் வாங்கிய ப்ரமோஷன் உனக்கு யார் சொன்ன மாமா..?” என்று சந்தேகமாகக் கேட்டதும், “என்னோட நண்பன் எதுக்கு இருக்கிறான்..” என்று மித்ரனின் தோளில் கைபோட கணவனை முறைத்தாள்..

அதற்குள் மண்டத்தின் உள்ளே நுழைந்த ஷீலாவைப் பார்த்த வளர்மதி மகிழனின் அருகில் வந்து நின்று மஞ்சரியைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டி, “மஞ்சரி மகிழன் மாமாவோட முதல் ஒய்ப் வராங்க பாரு..” என்று சொல்ல அதிர்ந்து திரும்பிய மஞ்சரியைப் பார்த்து வாய்விட்டு சிரிக்க அங்கே வந்து கொண்டிருந்த ஷீலாவைப் பார்த்து, “அது ஷீலாதானே..” என்று சந்தேகமாகக் கேட்ட மகிழனோ வளர்மதியை முறைக்க, “என்ன மாமா இதுக்கெல்லாம் கோவிச்சுகிற..” என்று கண்ணடித்தாள்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மகிழன் வளர்மதியை முறைக்க அதற்குள் அங்கு வந்த ஷீலாவைப் பார்த்த வளர்மதி, “அக்கா எப்படி இருக்கீங்க..” என்று புன்னகை முகம் மாறாமல் கேட்டவளை விழியால் அளந்த ஷீலா, “நிலா..” என்றழைத்தும், “ம்ம் என்னோட பெயர் கூட மறக்காமல் வெச்சிருக்கீங்க..” என்று கூறியவளின் அருகில் வந்து நின்ற மகிழனைப் பார்த்த ஷீலா, “தேங்க்ஸ் நிலா உன்னால் நான் காதல் என்றால் என்னென்னு புரிஞ்சுது.. மகிழனால் வாழ்க்கையில் நம்ம எப்படி இருக்கணும் என்று உணர்ந்துவிட்டேன்..” என்று கூறிய தன்னருகே வந்து நின்றவனைப் பார்த்து, “இவர் என்னோட கணவர் சுரேஷ்..” என்று அறிமுகம் செய்தாள்..

“வாங்க..” என்று அழைத்தவள் அவர்களை மண்டபத்தின் உள்ளே அழைத்துச் சென்று அமர வைக்க மகிழனோ ஷீலாவின் மாற்றம் கண்டு, ‘என்னோட காதல் இவளுக்கு ஒரு பாடமாக மாறி இருக்கிறது..’ என்று திகைக்க மகிழனின் அருகில் வந்த அபிமன்யு, “மச்சான் அது யாருடா..” என்று கேட்க அவன் கைகாட்டிய திசையை பார்த்தான் மகிழன்.. அவன் காட்டிய திசையில் ராகவி வந்து கொண்டிருக்க, “அவள் என்னோட ப்ரிண்ட ராகவி..” என்று கூறியதும் அவளை இமைக்காமல் பார்த்தவன், “எனக்கு இவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு.. நான் இவங்கள கல்யாணம் பண்ணிக்கொள்ள அவங்க சம்மதிப்பங்களா..?” என்று கேட்டான்..

அவனின் கேள்வியில் மனதிற்குள் சிரித்த மகிழனோ, “நீயே அவளிடம் போய் கேளுடா..” என்று சொல்லிவிட்டு நகர அவளின் எதிரே சென்று நிற்க திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவள் முகம் பார்த்தவன், “நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..” என்று கேட்டதும், “எனக்கு கல்யாணம் பண்ற ஐடியா இருந்தால் உங்களிடம் சொல்றேன்..” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்..

பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் மிதிலன் – ரஞ்சிதாவின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிய அந்த திருமணத்தின் முடிவில் ராகவி அவனிடம் தன்னுடைய விருப்பத்தைச் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றாள்.. அடுத்து வளர்மதியின் சீமந்தம் சிறப்புடன் நடைபெற தாய்வீட்டிற்கு சென்று திரும்பினாள் வளர்மதி.. நாட்கள் நகர நகர எல்லோரும் அவளின் மீது தனிகவனம் செலுத்தினர்.. மகிழனோ அவளின் அருகில் இருந்து அவளை நன்றாக கவனித்துக் கொண்டான்.. அவளுக்கு திடீரென பிரசவவலி பிடிக்க அவளை உடனே மருத்துவமனையில் சேர்க்க தங்க தளிர் போல ரோஜாப்பூ நிறத்தில் பெண் குழந்தை ஒன்றை பெற்றாள் வளர்மதி..

தன்னுடைய ஆசைப்படி மகளைப் பெற்றுத்தந்த வளரின் நெற்றியில் காதலோடு முத்தமிட்டான் மகிழன்.. அவனின் கையில் கொண்டு வந்து கொடுத்த குழந்தையைக் கையில் வாங்கிய மகிழனோ, “மதிநிலா..” என்று பாசத்துடன் அழைக்க எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.. தன்னுடைய குழந்தையின் முகம் பார்த்து தன்னுடைய பெயரை வைத்த கணவனை முறைத்த வளர்மதிக்கு ஒரு முத்தமிட்டு சமாதானம் செய்தவனுக்கு மகளைக் கையில் வைத்திருப்பதில் அவனின் உள்ளம் பூரித்து போக பேசவே தெரியாத குழந்தையிடம் ஆயிரம் கதைகளைப் பேசினான் மகிழன்..

அதற்குள் பானுமா வந்துவிட, “பாட்டி உங்க கொள்ளு பேத்தி பாட்டி..” என்று அவரின் கைகளில் கொடுக்க அந்த தளிரினைக் கையில் வாங்கிய பானுமாவிற்கு துளிரை தன்னுடைய கையில் வாங்கிய நாள் நினைவிற்கு வர, “டேய் மகிழா என்னோட பேத்தியை என்னிடம் கொடுடா.. நான் அவளை ராணி மாதிரி வளர்த்துகிறேன்.. எனக்கு பெண் குழந்தை என்றால் ரொம்ப பிடிக்கும்..” என்று சொல்ல பேத்தியை தன்னுடைய கையில் தூக்கி வைத்துக் கொண்ட சிவராமனும், “மகிழா உன்னோட பாட்டி சொன்னது உண்மைதாண்டா.. குழந்தையை என்னிடம் கொடுடா..” என்று ஆசையாக கேட்டவரைப் பார்த்த பொன்னுத்தாய்க்கு அன்றைய நாளின் நினைவுகள் கண்முன்னே வந்து போனது..

“தாத்தா அவங்களோட குழந்தையை உங்களிடம் கொடுத்துட்டு அவங்க என்ன பண்ணுவாங்க..” என்று கிண்டலுடன் கோரசாக கேட்ட மிதிலன் – ரஞ்சிதாவைப் பார்த்த பானுமா, “ஏன் மகிழனை இன்னொரு பெண் குழந்தை பெற்று அவனைக் கொஞ்ச சொல்லு.. என்னோட பேத்தியை நான் கொடுக்க மாட்டேன்..” என்று சொல்ல வளர்மதியைப் பார்த்து, “நிலாம்மா எனக்கு ஓகே உனக்கு ஒகேவா..” என்று குறும்புடன் கேட்டவனைக் கவனிக்காத தாத்தாவோ, “இப்போ அவன் பொண்டாட்டியைக் கூட்டிட்டு ஹனிமூன் போக சொல்லுடா.. அடுத்த பத்து மாசத்தில் எனக்கு இன்னொரு பேரன் வேணும்..” என்று கூறியதும் படுக்கையில் படுத்திருந்த வளர்மதியோ, “அப்பாரு..” என்று சிணுங்கலுடன் குரல்கொடுத்தாள்..

“நீ உன்னோட மகியை கவனிம்மா.. நீங்க வாங்க ராஜாத்தி.. தாத்தாவும் பாட்டியும் உங்களுக்கு உலகத்தையே அறிமுகம் பண்றோம்..” என்று பேத்தியிடம் பேச ஆரம்பித்த பெரியவர்களைப் பார்த்த சிறுவர்கள் நால்வரும் வாய்விட்டுச் சிரித்தனர்.. “நம்ம ஒரு ஜோடி இருக்கோன்னு எல்லோருமே மறந்துட்டாங்க போல..” என்று குறைப்பட்ட மிதிலனைப் பார்த்த ரஞ்சிதா, “மிதில் நம்மைப்பற்றி கவலைப்பட இங்கே யாருமே இல்லடா..” என்று வருத்தத்தைப் பார்த்த மகிழனும் நிலவும் வாய்விட்டுச் சிரித்தனர்..

சிவராமன் – பானுமா, சிவசங்கரன் – ஜெயலட்சுமி, சுகுமாறன் – ஜெயசக்தி, மாரிமுத்து - பொன்னுத்தாய் இவர்களுக்கு எல்லாம் குழந்தையின் மீது பாசத்தை பொழிய நிலாவின் மீது பாசத்தை பொழிந்தான் மகிழன்.. எத்தனை குழந்தைகள் பிறந்து வளர்ந்தாலும் மீண்டும் வீட்டில் குழந்தை பிறந்தால் பெரியவர்களும் அவர்களோடு சேர்ந்து மீண்டும் பிறந்த பெரியவர்களின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி கண்டு நிலாவின் முகம் மலரென மலர்ந்தது

“இதுதான் மாமா வாழ்க்கை.. பானுமா முகம் பாருங்க என்னவொரு சந்தோசம் இல்ல..” என்று கேட்டதும் நிலாவின் முகம் பார்த்த மகிழனும், “இதுக்கு எல்லாம் காரணம் என்னோட நிலா மட்டும் தான்..” என்று சொல்ல அவன் சொன்ன அர்த்தம் புரியாமல் நிமிர்ந்து பார்த்த நிலாவினைப் பார்த்தவன், “நான் சொன்னது என்னோட காதல் நிலா என்னோட துளிர்நிலா தான் எல்லாவற்றிற்கும் காரணம்டி என்னோட செல்ல பொண்டாட்டி..” என்று அவளின் இதழில் இதழ்பதித்த மகிழனைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டியதும் அவளின் இதழில் காதலுடன் முத்தமிட்டான் மகிழன்..

அன்று மகிழனுக்காகவே துளிர்நிலா பிறக்க அவளை ஆசையசையாக வளர்த்த பானுமா கடைசியில் தன்னுடைய பேரனுக்கே திருமணம் செய்து வைத்து பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்க அவர்களுக்கு பிறந்த மதிநிலாவோ அவர்களை எல்லாம் மீண்டும் உறவென்ற பாச சங்கிலியில் பிணைத்திருந்தாள்.. உறவுகள் என்றும் தொடர்கதைதான்.. ஆயிரம் பிரச்சனை வந்தாலும் பொறுமையுடன் இருந்தால் காலம் என்ற படகு நம்மை கரை சேர்க்கும் என்று கடைசி வரையில் பொறுமையுடன் வாழ்ந்த பானுமா, சிவராமனுக்கு அவர்களின் பிள்ளைகள் அதே பாசத்துடன் அவர்களின் கடைசி காலத்தில் அவர்களின் அருகில் இருந்தனர்..

பெரியவர்கள் ஆசையுடன் விதைத்த விதைகள் காலம் கடந்த சென்ற பிறகு காதல் என்ற மழையில் அவனின் நேசமது விதையென விழ அதில் துளிர்விட தொடன்கியவளின் நேசமும் வளர்பிறையாக மாறிவிட காலம் கடந்து உறவுகள் கைசேர பாலமானது அவர்களின் துளிர்விடும் நேசம்..! இவர்களின் காதல் துளிர்விடும் என்றால் பாசம் காலத்தால் அழியாத பாலமிடும்..! காலம் கடக்கும் முன்னே அந்த பாலம் பாசமான உறவுகளை நமது கை சேர்க்கும்..!

நேசம் பயிரானது...
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
சந்த்யா.. நான் இந்த கதைல ஒரு நாலஞ்சு எபி தான் படிச்சிருக்கேன்... அப்போ என்ன கமெண்ட் போட வந்தேன்னு கேக்கறீங்களா?

44 எபிஸோட்ஸ்... ப்பா.. நிஜமா சாதனைன்னு தோணுது... அதுவும் இவ்வளவு வேகமா.... பெரிய்ய.. பிரேக் எதுவும் எடுக்காம..... கண்டிப்பா பெரிய விஷயம்....

வாழ்த்துகள்... நிச்சயமா நேரம் கிடைக்கும்போது... உங்க கதையை படிச்சிடுவேன்...

இன்னும் நிறைய எழுதுங்க.. மாறுபட்ட கதாபாத்திரங்கள்... வேறே வேறே கதைக்களம் ... ன்னு உங்க எழுத்துப்பணி தொடரட்டும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top