• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

TTM 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அத்தியாயம் – 3

கல்லூரி முடிந்து, மேட்(MAT) தேர்வும் எழுதி அதில் தேர்ச்சி பெற்று வேறு கல்லூரியில் M.B.A. படிக்க நினைத்த மதியை, கோமு அவளை அதே கல்லூரியில் தொடர்ந்து படிக்குமாறு கூறி அவளுக்கு வேப்பில்லை அடித்து இருந்தார்.

“இந்த கோமு மம்மி, பண்ணுறது கொஞ்சம் கூட சரியில்லை டாடி. இப்படி எப்போ பார்த்தாலும் ரூல்ஸ் போட்டுகிட்டே இருக்காங்க, நான் என்ன இன்னும் சின்ன குழந்தையா?” என்று தந்தையிடம் முறையிட்டுக் கொண்டு இருந்தாள் மதியழகி.

“உன் அம்மா உன் நல்லதுக்கு தான் எப்பொழுதும் சொல்லுவாங்க, அது உனக்கே தெரியும். அப்புறம் ஏன் டா, என் வீட்டுகாரியை குறை சொல்லிகிட்டே இருக்க?” என்று கேட்டார் அவளின் தந்தை.

“அதான பார்த்தேன்! நீங்க எப்படி எனக்கு சப்போர்ட் செய்வீங்க? எப்போவும் மம்மிக்கு தான் சப்போர்ட் செய்வீங்க” என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டாள்.

“அங்க என்ன சத்தம்?” என்று அடுப்படியில் நின்று வேலை செய்து கொண்டு இருந்த கோமு, ஹாலை பார்த்து குரல் கொடுத்தார்.

“அங்க இருந்தாலும், இங்க ஹால் ல பேசுறது இந்த மம்மிக்கு காதுல விழுது. ஹ்ம்ம்.. இனி நான் வீட்டுல எப்போவும் பாட்டை அலற விட்டுகிட்டே இருக்க போறேன், பாருங்க” என்று சிலிர்த்துக் கொண்டு மாடி ஏறி சென்றாள் மதியழகி.

அதை பார்த்த பெற்றவர்கள் இருவருக்கும், சிரிப்பு வந்தது. என்ன தான் அவள் அப்படி முகத்தை தூக்கி வைத்து இருந்தாலும், செல்லம் கொஞ்ச அவளுக்கு எப்பொழுதும் தாய் வேண்டும்.

அது மட்டுமா! லீவ் நாட்களில், அவரை படுத்தி விட்டு தனக்கு ஊட்டி விட வேண்டும் என்று அடம் பிடிப்பாள். அதோடு விட்டேனா பார் என்பது போல், அவர் சோபாவில் அமர்ந்து இருந்தால் போதும், மடியில் தலை வைத்து படுத்து விடுவாள்.

அந்த அளவிற்கு அவள் அம்மா செல்லம், ஆனால் சண்டை பிடிப்பதும் தாயிடம் தான். அவளுக்கு வேண்டியதை கேட்டு பார்ப்பாள், தாய் அழுத்தி முடியாது என்று சொன்னால், அதை செய்யவே மாட்டாள். ஆனால் விளையாட்டாக தந்தையிடம், அதை பற்றி புகார் சொல்லி விட்டு தான் மறுவேலை பார்ப்பாள்.

அவளை பற்றி புரிந்த இருவரும், அவளை நினைத்து பெருமிதம் கொண்டாலும், தங்கள் மகள் இன்னும் சிறு பெண் போல் இருப்பதை நினைத்து வருத்தம் கொண்டனர்.

மேலே அவளது அறைக்கு வந்த மதி, அவளின் செல்பேசி அடிப்பதை பார்த்து எடுத்து யாரென்று பார்த்தாள். அழைப்பது கீர்த்தி அக்கா, ஆதியின் தங்கை எனவும் உடனே எடுத்து பேச ஆரம்பித்து விட்டாள்.

“கீர்த்தி அக்கா எப்படி இருக்கீங்க? அப்புறம் அடுத்த வாரம் கல்யாணம், சஞ்சய் மாம்ஸ் கூட டூயட் பாட போயிடுவீங்க, எங்களை எல்லாம் அப்போ நியாபகம் இருக்குமோ, என்னவோ?” என்று கிண்டல் அடிக்க தொடங்கினாள்.

“அடி! பேச்சை பாரு, நான் நல்லா இருக்கேன். உன் கிட்ட ஆரத்தி தட்டு ரெடி பண்ண சொன்னேனே, அதை செய்துகிட்டு இருக்கியா, இல்லையா?” என்று கேட்டாள் கீர்த்தி.

“அக்கா அது அல்மோஸ்ட் ரெடி, இன்னும் சில டிங்கரிங் வேலை மட்டும் பாக்கி. சோ கல்யாணத்துக்கு, மாப்பிள்ளை அழைப்புக்கு எல்லாம் ரெடியா இருக்கும். ஆமா ஆதி சார், என்ன செய்றார் அக்கா? போனே காணோம் அக்கா இப்போ எல்லாம்” என்று ஆதி பற்றி விசாரித்தாள்.

“அது ஏன் கேட்குற மதி, அண்ணா இப்போ எல்லாம் ரொம்ப பிஸி. ஆபிஸ் வேலையும் பார்த்துகிட்டு, சில கல்யாண வேலையும் பார்த்துகிட்டு ஓடிகிட்டே இருக்கார் எப்போவும். அண்ணா இப்படி ரெஸ்ட் எடுக்காம வேலை செய்றது, கொஞ்சம் கஷ்டமா இருக்கு மதி” என்று கூறியவளை எப்படி சமாதானப்படுத்த என்று தெரியவில்லை மதிக்கு.

ஆதியை பற்றி அவளுக்கு நன்கு தெரியும், ஒரு வேலையை எடுத்துக் கொண்டால் அதை பெர்பெக்ட்டாக முடிக்கும் வரை ஓய மாட்டான். யார் என்ன சொன்னாலும், அதை செய்து முடித்துவிட்டு தான் ஓய்வு எடுப்பது பற்றி யோசிப்பான்.

இப்பொழுது நடப்பதோ இரண்டு கல்யாணம், அதுவும் அவன் இப்பொழுது பெரிய தொழிலதிபன். இந்தியாவின் பத்து முக்கிய பணக்காரர்கள் பட்டியலில், இவர்கள் குடும்பமும் ஒன்று. ஆகையால், அதற்க்கு தகுந்தது போல் செலவு கூட செய்து தான் திருமணம் நடத்த வேண்டும்.

அதனால் தான் அவனின் உழைப்பும், ஓட்டமும் நிற்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் யாரும் அவனை ஓய்வு எடுக்க சொல்லி கட்டாயப்படுத்தவே முடியாது.

“என்ன கீர்த்தி அக்கா, இதுக்கு போய் பீல் பண்ணிக்கிட்டு. ஆதியை பத்தி உங்களுக்கே நல்லா தெரியும் தானே, அப்புறம் ஏன் இப்படி புலம்புறீங்க? கல்யாணம் ஆன உடனே பாருங்க, சார் வீட்டுல தான் எப்போவும் இருக்க போறார், நீங்க தான் துரத்தி விட போறீங்க, போய் வேலையை பார்க்க சொல்லி” என்று கூறி சிரித்தாள்.

“ஹா ஹா! அது என்னமோ உண்மை தான் மதி. ஆமா அண்ணா என்னை விட மூத்தவங்க, என்னை அக்கான்னு கூப்பிட்டு, அவனை மட்டும் நீ பெயர் சொல்லி கூப்பிடுற?” என்று அதை பற்றி தெரிந்தாலும், மீண்டும் அவள் பதில் தெரிந்து கொள்ள கேட்டாள்.

“என்ன அக்கா உங்களுக்கு தான் தெரியும் ல, அவன் எனக்கு ஒரு நல்ல பிரண்டு மட்டும் கிடையாது, என்னோட விளையாட்டு பார்ட்னர் அவன் தான். சின்ன வயசுல இருந்தே, நான் ஹரி அண்ணாவோட இருந்ததை விட, இவனோட தான் அதிக நேரம் இருந்து இருக்கேன்”.

“எனக்கு எல்லாமே அவன் தான், அவன் எனக்கு ரோல் மாடல் அக்கா. என்னை அவன் தான் நல்லா பார்த்துகிட்டான், இப்போ வரைக்கும் காலேஜ் ல எனக்கு ஒரு பிரச்சனை வந்தா அவன் முன்னாடி இருந்து தீர்த்து வைப்பான்”.

“இப்போ வரைக்கும், என் பிரண்ட்ஸ் யாருக்குமே எனக்கு அவனை தெரியும் அப்படினே தெரியாது. அந்த அளவுக்கு வெளியிடத்தில், நாங்க ஒரு எல்லையில் நிப்போம். எங்க நட்பு எப்போவும் தொடரும் அக்கா, ஹி இஸ் மை பெஸ்டி ஆல்வேஸ்” என்று ஆதிக்கும் அவளுக்குமான உறவை விளக்கினாள்.

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
கீர்த்திக்கு இப்பொழுதும் ஆச்சரியம் தான், இவ்வளவு புரிதலுடன் இவர்களின் நட்பு இருப்பதை நினைத்து. இவர்கள் இப்படி இருப்பதை பார்த்து, ஒரு முறை பார்வதி பாட்டி இவர்கள் இருவர்க்கும் திருமணம் பேச நினைக்க, இவர்கள் நட்பு தான் எங்களுக்குள் வேறு ஏதும் இல்லை என்று அடித்து கூறினர்.

அதன் பிறகு தான் ஆதிக்கு, தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற வரனாக சுஷ்மிதா வரன் வரவும், ஜாதக பொருத்தம் பார்த்து பேசி நிச்சயம் முடித்து, இப்பொழுது கல்யாணம் செய்ய போகின்றனர்.

கீர்த்தியிடம் அதன் பின் சில விஷயங்களை பேசிவிட்டு, போனை வைத்த மதி மீண்டும் அது ஒலி எழுப்பவும் எடுத்து யாரென்று பார்த்தாள். ஆதி பையா காலிங் என்று வரவும், சிரித்துக் கொண்டே போனை எடுத்து பேச தொடங்கினாள்.

“டேய் ஆதி! உனக்கு ஆயுசு நூறு டா. இப்போ தான் நானும் கீர்த்தி அக்காவும், உன்னை பத்தி பேசி முடிச்சோம். சரியா அவங்க போன் வச்ச உடனே, நீ எனக்கு கால் பண்ணிட்ட” என்று கூறினாள் மதி.

“அடிபாவிகளா! ரெண்டு பேரும் இவ்வளவு நேரம், என் தலையை தான் உருட்டி விளையாடி இருக்கீங்களா? எவ்வளவு நேரமா நான் உங்க ரெண்டு பேருக்கும் பேச, செல்லில் மாத்தி மாத்தி ட்ரை பண்ணேன் தெரியுமா?” என்று சிடுசிடுத்தான்.

“கூல் பா! என்ன விஷயம்? வாய்ஸ் ஏன் இவ்வளவு டல் அடிக்குது? எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டாள் அவனின் குரலை வைத்து.

தன் குரலை வைத்தே, தன் மனநிலையை தெரிந்து கொண்ட தன் தோழியை நினைத்து அவனுக்கு பெருமையாக இருந்தது. இப்பொழுது அவனுக்கு அவளின் உதவி வேண்டும், அதற்காக தான் அழைத்து இருக்கிறான்.

“மதி! இங்க நம்ம காலேஜ் ல ஒரு பில்டிங் ல யாரோ தீ வச்சு இருக்காங்க, அந்த பில்டிங் ரொம்ப சேதாரம் ஆகிடுச்சு. அது மட்டுமில்லை, என்னோட ஆபிஸை அடிச்சு நொறுக்கி இருக்காங்க, இப்போ இதை அப்பா, அம்மா பார்வைக்கு கொண்டு போக எனக்கு இஷ்டமில்லை”.

“நான் உன் அண்ணா ஹரி கிட்ட ஹெல்ப் கேட்கணும், நீ வீட்டுல தான இருக்க. உன் அண்ணாவும் வீட்டுல இருக்கனா, இல்லை ஆபிஸ் போயிட்டானா?” என்று கேட்டான் ஆதி.

மதிக்கு இந்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியாக இருந்தது. திருமணம் அடுத்த வாரம் என்ற நிலையில், இப்பொழுது இப்படி ஒரு சம்பவம் என்றால், அவன் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறான் என்பதை அவள் அறிந்து கொண்டாள்.

“அண்ணா வீட்டுல தான் இருக்கான் ஆதி, நீ வா நாங்க உனக்கு கண்டிப்பா சப்போர்ட்டா இருப்போம்” என்று அவனை தேற்றி விட்டு, தன் அண்ணன் ஹரியை தேடி சென்றாள்.

தாய், தந்தை சற்று முன் தான் கோவிலுக்கு சென்று இருக்க. ஹரி ஹாலில் சவிதாவுடன், போனில் உரையாடிக் கொண்டு இருந்தான். போன மாதம் இறுதியில் தான் இவர்களுக்கு, ஆண் பிள்ளை பிறந்து இருந்தது.

மூன்று மாதத்திற்கு தாய் வீட்டில் இருந்து விட்டு வருகிறேன், என்று கூறி சென்று இருந்தாள். தன் முன்னால், தங்கை ஒரு வித டென்ஷனில் இருப்பதை கவனித்து, ஹரி சவிதாவிடம் அப்புறம் பேசுவதாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டு, தங்கையை ஏறிட்டான்.

அவள் சிறிது தயக்கத்துடன், ஆதியின் விஷயத்தை கூறி முடித்தாள். ஹரியும், ஆதியும் ஒரே வயது தான். என்னவோ, ஹரி மட்டும் இவர்களோடு எப்பொழுதும் சற்று தள்ளியே இருப்பான், அதற்கென்று முகத்தை தூக்கி வைத்து இருக்க மாட்டான்.

கேட்ட கேள்விக்கு பதில், என்பது போன்ற அளவில் தான் அவன் இவர்களுடன் பழக்கம் வைத்து இருந்தான். ஆகையால், இப்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஆதிக்கு உதவி புரிய, அண்ணன் வருவானா, மாட்டானா என்று தெரியாமல் அவள் குழப்பத்தில் இருந்தாள்.

சரியாக அந்த நேரம் ஆதியும் வரவும், ஹரி அவனை வரவேற்று தங்கை விஷயத்தை கூறியதை அவனிடம் தெரிவித்தான்.

“இப்போ மீடியாக்கு இந்த நியூஸ் போகாம, நான் ஒரு வேலை பார்த்துட்டேன். எனக்கு இப்போ திரும்ப வேற பிரச்சனை கல்யாணத்துக்கு முன்னாடி வராம பார்த்துக்கணும், அதான் உன் ஹெல்ப் கேட்டு வந்து இருக்கேன்” என்று மிகுத்த தயக்கத்துடன் கேட்டான் ஆதி.

ஹரிக்கு அவனின் தயக்கம் புரிந்தது, அவன் தன்னால் ஆன எல்லா உதவியும் செய்து தருவதாக கூறினான். ஆதிக்கு ஆச்சரியம், ஹரி உதவி செய்வானோ, மாட்டானோ என்ற தயக்கத்தில் தான் இருந்தான். அவன் மாட்டேன் என்று சொன்னால், கிரியை வைத்து அவன் செய்து இருப்பான் தான்.

ஆனால் அது தந்தை காதுக்கு இப்பொழுது இல்லையென்றாலும், கிரி தப்பித் தவறி வாய் விட்டான் என்றால் அவருக்கு தர்மசங்கடமாக போய்விடும். ஆதிக்கு இதை செய்தது யார் என்று தெரிந்தாலும், அவன் திருமணத்தை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய வேண்டாம் என்று எண்ணி சற்று பொறுமை காத்தான்.

இல்லையென்றால், அவன் இப்பொழுது ஹரியிடம் கூட உதவி கேட்காமல் எல்லாவற்றையும் அவனே ஒரு கை பார்த்து இருப்பான். ஹரிக்கும் ஆள் பழக்கம் அதிகம் உண்டு, ஆகையால் தான் காதும் காதும் வைத்த மாதிரி பிரச்சனை வெளியே தெரியாமல் இருக்க அவனின் உதவியை நாடியது.

அதை உணர்ந்த ஹரியும், வெளியே தெரியாமல் விஷயத்தை அவன் கட்டுப்பாடில் வைத்து இருந்தான். திருமண நாளும் வந்தது, அங்கே தான் ஆதி அந்த துரோகிகளின் சுய ரூபத்தை போட்டு உடைக்க நேரம் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனுக்கு அப்பொழுது தெரியவில்லை, அந்த திருமண நாள் அவனின் வாழ்க்கையில் பல திருப்பங்களோடு அமைய போகிறது என்று. அது அவனுக்கு அதிர்ச்சியா? இல்லையா? என்பது அவன் மட்டுமே அறிவான்.

தொடரும்..

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Hi friends,
Third EPI post பண்ணிட்டேன். இது என்னுடைய முதல் குழந்தை, ஆகையால் பிழை இருப்பின் சற்று சுட்டிக் காட்டி சொல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மக்களே..

அன்புடன்
உமா தீபக்.
 
Mathurajalini Karthikeyan

நாட்டாமை
Joined
Jul 3, 2019
Messages
45
Reaction score
73
Location
Swissp

Good story
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top