• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode TVPN-4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
ஹாய் பிரெண்ட்ஸ்

அடுத்த எபியோட வந்திட்டேன் படிச்சிட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்...


அந்த பகுதியில் பிரசித்தியான பிள்ளையார் கோவிலில் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடந்துக் கொண்டிருந்தது ஆர்யவர்தன் சாருலதா திருமணம்.சாருலதாவின் சார்பாக அவளின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.ஆர்யவர்தனுக்கு வெங்கு ஒருவரே.


பிரச்சனைக்கு திருமணமே தீர்வு என்று வெங்கு யோசனைக் கூறியப் போது ஆர்யா சாரு இருவருமே முடியவே முடியாது என்று மறுத்தனர்.விவாதம் அதிகமாகவும் வெங்கு ஆர்யாவைத் தோட்டத்திற்கும் சாருவை குடும்பத்தவர் அவளின் அறைக்கும் அழைத்துச் சென்றனர்.


நட்சத்திரமில்லா வானை வெறித்த ஆர்யாவின் தோளை ஆதரவாக தட்டிக் கொடுத்த வெங்குவை,


"பாபாயா!ஏன் அப்படி சொன்னீங்க?எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்ல...நம்ம பாப்புவ கூட்டிட்டு போய்டலாம்"


"நாயினா!இதுல என்ன தப்பு?!நீயும் எத்தனை நாள் தனியா இருப்ப?அம்மாயிய மாத்திரம் கூட்டிப் போனா உன்னால அவளை தனியா பாத்துக்க முடியுமா?உதினா ஆரோக்கியமா இருந்திருந்தா அவங்களே பாத்துக்குவாங்க...ஆனா இப்ப அவங்க இருக்கற நிலைமைல என்ன செய்ய முடியும்!பாப்பு சாருலதாவ தன் தாயா நினைக்குது...அவக்கிட்டேயிருந்து அத பிரிக்கறதும் தப்பு...எல்லா பிரச்சனைகளுக்கும் இது தான் நல்ல தீர்வு...உன் சங்கடமும் இதுனால தீரும்...நா சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கறேன்!"


அவரின் எல்லா வாதங்களை விட கடைசியாக அவர் கூறிய விஷயம் அவனை யோசிக்க வைத்தது.


அங்கே சாருவின் நிலையோ அந்தோ பரிதாபம்.அனைவரும் சேர்ந்து ஒரே மனதாக அந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளும்படி அவளை வற்புறுத்தினர்.ஒரு கட்டத்தில் தாங்கமாட்டாமல்,


"ஸ்டாப் இட்...ஐகாண்ட்"என்று கத்திவிட்டாள்.


திகைத்து நின்றவரை தான் பார்த்துக் கொள்வதாக ஜாடைக் காட்டினான் சமர்த்.அறையை விட்டு அனைவரும் வெளியேறினர்.உறவில் மாமன் மகளானாலும் அவளை தன் தங்கையாகவேப் பார்த்தான் சமர்த்.அவள் வாழ்வு செழிக்க இது பொன்னான வாய்ப்பாக தோன்றியது.இங்கே பேச வரும் முன்பே விசாகப்பட்டினத்தில் அவனின் பிஸ்னஸ் பார்ட்னர் ஒருவரிடம் ஆர்யாவர்தனனைப் பற்றி விசாரித்து கூறும்படி கேட்டிருந்தான்.


அந்த நபருக்கே ஆர்யாவைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது.அவர் விசாரித்த வரையிலும் கூட அவனைப் பற்றி நேர்மறையான தகவல்களே கிடைத்தது.அதைக் கொண்டு பரிசீலித்த சமர்த்திற்கு ஆர்யா சாருவிற்கு ஏற்ற கணவனே என்று திடமாகத் தோன்றியது.


"சாரு!பாரு ஆர்யாவர்தன் ரொம்ப நல்லவரு... உனக்கு கரெக்டான சாய்ஸ்!அம்முக்கும் அப்பா வேணும்...நீ இதுல மறுக்க என்ன இருக்கு?"


அவன் பேச்சில் கோபமடைந்த சாரு,


"ரொம்பபப நல்லவரா!அவ்ளோ நல்லவரு பெத்த பொண்ண ஏன் தொலைக்கனும்?ஏன் இத்தனை வருஷம் தேடல?"


"சாரு!குழந்தை தொலைஞ்சு போறது எத்தனையோ இடங்கள்ல நடக்கறது தான்..‌அதுக்காக ஒருத்தர குறை சொல்ல முடியுமா!தேடறதுன்னா அவர் இத்தன வருஷமா தேடிக்கிட்டு தான் இருந்திருக்காரு...அவருகிட்ட டிடெக்டிவ் ரிபோர்ட்ஸ் இருக்கு..."


"எல்லாம் நிஜமாவே இருக்கட்டும்... எனக்கு அவர கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை.. அவ்ளோதான்"


"நீ உன்னைப் பத்தி மட்டும் யோசிக்கற சாரு!அமூல்யாவோட எதிர்காலத்தைப் பத்தி யோசிக்கவே மாட்டியா?நாளை அவ விவரம் தெரியற வயசு வரும் போது தன் அப்பா எங்கேன்னு கேள்வி கேப்பா.‌.நீ அத சொல்ல மறுத்தா உன் மேல அவளுக்கு வெறுப்பு வரும்...தன் பொண்ணு கெடைச்சப்பரும் ஆர்யவர்தன் கண்டிப்பா அவளை கூட்டிட்டு போவாரு...நீ வேண்டாம்னா வேற பொண்ண அவருக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க...யாரோ ஒரு பொண்ணு அம்முவ நல்லபடியா பாத்துக்குவான்னு என்ன கேரண்டி...?அவ மனசு ஒடிஞ்சு போறது உனக்கு சம்மதமா?இவ்ளோ தான் நீ அவ மேல வெச்சிருக்கற பாசமா?"


பாசம் என்ற சொல் சாருவின் பிடிவாதத்தை அசைத்தது.என்ன ஆனாலும் தன் செல்ல மகளுக்காக எந்த தியாகம் செய்யவும் தயாரானாள்.


இருவரின் சம்மதத்தின் பேரில் நான்கு நாட்களில் ஆர்யவர்தன் சாருலதா திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.ஆர்யாவின் அன்னை உடல்நலம் இல்லாததால் அவரிடம் போனிலேயே சம்மதம் பெற்றான் அவன்.மகன் தனிமரமாக நின்றுவிடுவானோ என கவலைக் கொண்டிருந்த அந்த தாயிக்கு இந்த செய்தி வயிற்றில் பால் வார்த்தது போல் ஆனது.


திருமண நாள் வரை ஆர்யா வெங்கு இருவரும் சமர்த் வீட்டில் தங்குவதாக முடிவானது.திருமண ஷாப்பிங் எதற்கும் சாருலதா வர மறுத்துவிட்டாள்.அதனால் அவளுக்கு தேவையானது எல்லாமே நியதி ஸ்ருதி சின்மயி இவர்களே வாங்கிக் குவித்தனர்.


திருமண விஷயம் அறிந்த நியதி கிடைத்த முதல் அவகாசத்தில் சாருவை தனியாக சந்தித்தவள்,


"சாரு! கரெக்ட் டிசிஷன் எடுத்திருக்கே!ஆனா ஆர்யவர்தன் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டியா?"


"இல்ல....எப்படி சொல்றது?அம்மு காணாம போகறதுக்கு இவரே காரணமா இருந்தா?...அதான் நா எதையும் இப்போதைக்கு சொல்லப் போறதில்ல... இந்த கல்யாணம் ஜஸ்ட் அம்முக்காக..."


அவள் பதிலில் திகைத்து விட்டாள் நியதி.குழந்தைக்காக திருமணமா?...பாட்டியின் ஆசைக்காக நடந்த தன் திருமணத்தை நினைத்துக் கொண்டாள்.அதே போன்றதொரு இந்த கட்டாய திருமணத்தின் எதிர்காலம் என்ன?


குறித்த முகூர்த்தத்தில் பெரியோர்கள் அட்சதை தூவி வாழ்த்த சாருலதாவின் கழுத்தில் மங்கல நாணை அணிவித்து அவளை தன் தன்னில் பாதி ஆக்கிக் கொண்டான் ஆர்யவர்தன்.


தாயின் உடல்நலத்தை காரணம் காட்டி அன்று மாலையேப் புறப்பட வேண்டும் என்று கூறிவிட்டான் ஆர்யா.


தன்னதும் அமூல்யாவதும் உடைமைகளை சரிப்பார்த்துக் கொண்டிருந்த சாருவின் அருகில் வந்த கேசவன் அவள் தலையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தார்.


"சாரும்மா!அப்பா மேல கோபமா இருக்கே இல்லையாடா!அப்பா உன் நல்லத்துக்கு தான்டா சொல்வேன்...வாழ்க்கைங்கறது நாம நினைக்கறபடி இருக்கறதில்ல...எப்ப என்ன எப்படி வேணா மாறும்.. அதுக்கு தகுந்தாற்போல வளைஞ்சுக் கொடுத்தா தான் நம்மளால நிம்மதியா வாழ முடியும்...அதுனால கிடைச்ச வாழ்க்கைய நீ நல்லபடியா வாழனும்டா! இந்த அப்பாவுக்கு அதுதான்டா வேணும்"என்று கண்கலங்கினார்.


அதுவரை திருமணத்திற்கு வற்புறுத்தினார் என்று கோபமாக அவரோடு பேசாமல் இருந்த சாரு அவர் கண்கலங்கவும்,


"அப்பா....!"என்று அவர் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
ஷ்..பாப்பா அழக்கூடாது! நீயும் குட்டிப் பாப்பாவும் ஆர்யவர்தனோட நல்லபடியா வாழனும்...என்னப் பத்தி கவலப்படாதே...அஸ்வின் சீக்கிரம் வந்திடுவான்... அவன் வந்ததும் நான் அங்க வரேன்...சரியா!"


சரியென தலையசைத்தவள் அவர் உணவு மருந்துகள் பற்றி அறிவுறுத்தி தன் ஆசை மகளோடு அன்று தான் கணவனான ஆர்யவர்தனனோடு விமானத்தில் அவன் ஊரை நோக்கிக் கிளம்பி விட்டாள்.


தாய் தந்தை இருபுறமும் அமர நடுவில் அமர்ந்திருந்தாள் அமூல்யா.இந்த நான்கைந்து நாட்களாக லேசுபாசாக அவன் தான் தந்தை அவனோடு அவளும் சாருவும் வேறு ஊருக்கு போகப் போகிறார்கள் என்று நியதி சமர்த் கேசவன் என்று எல்லோரும் ஒரே போல கூறவும் அவளுக்கு ஆர்யவர்தன் சிறிதே பரிச்சயமானவனாகத் தோன்றினான்.அவன் பாராத போது ஓரக்கண்ணால் அவனைப் பார்ப்பது அவன் ஏதேனும் தின்பதற்கு கொடுத்தால் வாங்கிக் கொள்வது என்று கொஞ்சமாக அவனை ஏற்றுக் கொண்டது அந்த பூக்குவியல்.


சாருலதாவிற்கோ அவன் கைகள் அவள் கழுத்தில் உரசி தாலிக் கட்டியதிலிருந்து நூறு டன் பாரத்தை இதயத்தில் தூக்கி வைத்தது போல் திண்டாடினாள்.எங்கிருந்தோ திடிரென வந்து அவள் வாழ்க்கை பாதையை மாற்றிய அவனைக் கண்டு சொல்லொணா கோபம் பொங்கியது அவளுக்கு.அதிகமான வேகத்தில் பறந்த விமானத்திலிருந்து மகளோடு குதித்து ஓடிவிடத் தோன்றியது அவளுக்கு.ஆனால் அப்படி செய்ய முடியாத காரணத்தால் பக்கத்தில் எதுவுமே நடந்திராது போல் கெத்தாக லேப்டாப்பை தட்டியப்படி அமர்ந்திருந்தவனைப் பார்க்க பிடிக்காமல் மகளை அணைத்தவாறு வெளிப்புறமே முகத்தை திருப்பிக் கொண்டிருந்தாள்.


இரவு ஏழு மணி அளவில் விசாகப்பட்டினம் விமான நிலையத்தை வந்தடைந்தது அவர்கள் பயணித்த விமானம்.அங்கிருந்து மூன்று மணி நேர கார் பயணத்தில் இருந்தது அம்பாபுரம்.நகரம் தாண்டி சிறிது நேரத்தில் இருபுறமும் மரங்கள் சூழ்ந்த பாதையில் விரைந்தது அவர்கள் கார்.விமானத்தில் இருந்த நிலையிலேயே இருந்தனர் புதுமணத் தம்பதியர்.ஆனால் விமானத்தில் சிறிது நேரம் தூங்கிவிட்ட அம்மு தாயிடம் அது எந்த இடம்? அது ஏன் இப்படி இருக்கிறது?ஊர் வர எவ்வளவு நேரம் ஆகும்?என அவளுக்கு பதில் தெரியாத கேள்விகளை அவளை நோக்கி வீசினாள்.எல்லாவற்றுக்கும் தெரியாது என பதிலளித்த தாயை ஏமாற்றமாகப் பார்த்தவள் தந்தை ஒருவேளை பதிலளிக்கக் கூடுமோவென அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.


மகளின் கேள்விகள் நிற்கவும் ஆர்யாவும் அப்போது அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனிடம் கேட்பதா வேண்டாமா என்று யோசிக்கும் மகளைக் கண்டு சிரிப்பு வந்தது அவனுக்கு.ஆனால் சிரித்தால் கேலி செய்வதாக அவள் கோபித்துக் கொண்டு கேள்வி கேளாமலே விட்டு விட்டால் அவளோடு நட்பாகும் வாய்ப்பு தவறிவிடுமே!அதனால் அவள் பார்த்த போது லேசாக நட்பு புன்னகை புரிந்தான்.


அதில் லேசாக தைரியம் வரப் பெற்ற குழந்தையும் அதையே அவனிடம் அனுப்பியது.தயங்கி தயங்கி


"அப்பா!நம்ம ஊரு எப்ப வரும்?"என்று முடிவில் கேட்டே விட்டது.


அமூல்யாவின் அப்பாவில் ஆர்யா சாரு இருவரும் இரு வேறு விதத்தில் பிரபலித்தனர்.முதன்முதலாக மகளின் அப்பா என்ற அழைப்பில் ஆர்யா இதுவரைக் காணாத மகிழ்வை அடைந்தான் என்றால் சாருவோ இதுவரை தன்னை மட்டுமே சார்ந்து அன்பு செலுத்திய மகள் இன்று அவளின் நெருங்கிய வட்டத்தில் தந்தையைச் சேர்த்ததில் உள்ளூர தாங்க முடியாத பொறாமையில் பொறுமினாள்.


கிடைத்தது வாய்ப்பென்று மகளை தன் கைவளைவில் அணைத்தபடி அவர்கள் வீடு செல்லும் நேரம்..அங்கே யார் யார் இருக்கிறார்கள்...அமூல்யாவின் அறை எப்படிப்பட்டது என்று ஏதேதோ பேசி மீதி பயணம் முழுவதும் அவளை தன்புறமே இருக்குமாறுப் பார்த்துக் கொண்டான் அந்த காரியக்காரன்.


வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதையில் பயணித்து முடிவில் அரண்மனை போன்ற வீட்டின் முன் வந்து நின்றது அவர்கள் கார்.வேலையாட்கள் பரபரப்பாக சாமான்களை உள்ளே எடுத்துச் செல்ல விமலாவின் வயதையொத்த ஒரு பெண்மணி இருவரையும் அருகே நிறுத்தி ஆர்த்தி எடுத்தார்.அவர்தான் தன் மனையாள் வத்சலா என்று அறிமுகப்படுத்தினார் வெங்கு.அவரைப் போலவே நல்ல உள்ளம் கொண்டவர் அவர் என்பது பார்த்தாலே தெரிந்தது.


நான்கைந்து பெண்கள் ஐந்தாறு ஆண்கள் வீட்டின் உள்ளேயிருந்து பார்த்திருக்க கணவன் மகளோடு வீட்டிற்குள் நுழைந்தாள் சாருலதா.


அமூல்யா தந்தையுடனே நன்றாக ஒட்டிக் கொண்டு அவனுடனே சென்றுவிட்டாள்.


அவளுக்காக தயார் நிலையில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார் வத்சலா.வெங்குவைப் போலவே கொச்சையான தமிழில் சிறிது ஃப்ரெஷ் செய்துக் கொண்டு கீழே வருமாறு கூறிச் சென்று விட்டார்.


சாருலதாவின் வீட்டில் பாதியாக இருந்தது அந்த அறை.அதன் அழகும் நேர்த்தியும் அவளை வெகுவாக கவர்ந்தது.ஆனால் பிறகு மெதுவாக பார்த்துக் கொள்ளலாம் என குளியலறைச் சென்று சூடான நீரில் வேகமாக குளித்து அங்கேயே உடை மாற்றியவள் கதவை திறக்க முயல அது திறக்க முடியவில்லை.எவ்வளவு இழுத்தும் திறக்காத கதவு யாரோ வெளியேயிருந்து அதை தாழ் போட்டதை உணர்த்தியது.லேசாக எழுந்த பயத்தில் கதவை படபடவென கை ஓயும் வரை தட்டினாள் சாருலதா.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சுதா? ஏன் வெளியே பூட்டு போச்சு போ ஆர்யா நீ வில்லனாடா:unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top