• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Parvayin Varigalil-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilsurabi

நாட்டாமை
Joined
Mar 20, 2019
Messages
20
Reaction score
70
Location
Thanjavur
IMG-20190320-WA0000.jpg


"பிருந்தா கல்யாணத்த பத்தி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்"என்றார் ஜகந்நாதன்.


அந்த அறையில் புத்தகம் படித்தபடி இருந்த பிருந்தாவும் அப்போதுதான் காபி கப்புகளுடன் வந்த அவள் தாய் வேணியும் அவர் சொன்னதைக் கேட்டு அவரை உற்றுப் பார்த்தனர்.மனைவியின் கையிலிருந்து ஒரு கப்பை எடுத்து சுடான காபியைக் குடித்தவர் பிருந்தாவைப் பார்த்தார்.அவளோ அவர் சொல்லி முடித்தப் பின் படிப்பதற்கு தயாராக புத்தகத்தின் மத்தியில் தன் விரலை வைத்துக் கொண்டிருந்தாள்.அதை பார்த்துக் கடுப்புடன்,


"பிருந்தா!மொத்தல்ல அந்த புத்தகத்தை கீழ வை"என்றார்.


அவர் அப்படி சொல்லவும் புத்தகத்தின் பக்கத்தை சரி பார்த்தப் பின் அதை ஓரமாக வைத்தாள்.அதை பார்த்த அவருக்கு அவள் மேல் கட்டுக்கடங்காத கோபம்தான் வந்தது.புத்தகம்....புத்தகம்...எப்பொழுதும் புத்தகம் படிப்பது இல்லையென்றால் தோட்டத்தில் பூக்கள் வானில் சிறகடிக்கும் பறவைகள் இவற்றை வேடிக்கைப் பார்ப்பது இதுதான் அவள் அன்றாட வாழ்க்கையாக இருந்தது.பிஸ்னஸ் புலியான அவர் மகளுக்கும் அதை போதிக்க பங்கு மார்க்கெட்டைப் பற்றியும் உற்பத்தியை பற்றியும் கற்பிக்க வந்தால் அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் தேன் சிட்டுக்கள் தன் குட்டிக்கு உணவூட்டுவதை காண்பிப்பாள்.


இப்படிப்பட்டவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார் அவர்.முதலில் வந்த வரன் இந்தியா முழுவதும் தன் பிஸ்னஸை விரிவாக்கியிருக்கும் இளம் தொழிலதிபன்.அவனின் நேரமின்மையும் மீறி அரைமணிநேரம் பெண் பார்க்க வந்தவனை தோட்டத்தில் பூத்திருக்கும் சாமந்தியின் விதவிதமான வண்ணங்களைப் பற்றி பேசி பத்து நிமிடங்களில் ஓட வைத்தாள்.


தோட்டத்தில் இருந்தால் ஆகாது எனக் கண்டு இந்த முறை வந்தவனை ரூமில் உட்கார வைத்தார்.அவனிடம் அங்கிருந்த ஷேக்ஸ்பியர் ஷெல்லி எழுதிய புத்தகங்களை காட்டி அவள் விவாதிக்கத் தொடங்கிய போது பாதியில் எழுந்து சென்றவன் ஜகந்நாதன் எத்தனை முறை போன் செய்தாலும் இவரோடு பேச மறுத்தான்.அதன்பின் ஊரெங்கும் பிருந்தாவின் குணம் பிரசித்தி அடையவே அவளுக்கு மாப்பிள்ளைத் தேடுவதில் அவர் படுதோல்வியைக் கண்டார்.அதனால் அதற்கு ஒரு முடிவு அன்று கண்டுபிடித்திருந்தார்.


"பிருந்தா கல்யாணத்தப் பத்தி என்ன முடிவு செய்திருக்கீங்க?என்றார் வேணி கவலையோடு.


"முடிவு என்ன முடிவு இவளுக்கு இன்னும் மாப்பிள்ளை தேட முடியாது என்னால"


"விடுங்க!அதான் பெரிய மாப்பிள்ளை பாக்றேன்னு சொல்லியிருக்கார் இல்ல!"


"அவர் பாக்கற பையன் அவருக்காக இவள பண்ணிக்குவானே தவிர இவளுக்காக இல்ல."


"எப்படியோ கல்யாணம் ஆனா சரி!"


"ஆகனும்.இல்லேன்னா..."


அதுவரை பேசாமல் இருந்த பிருந்தா,"
இல்லேன்னா?"என்றாள் சந்தேகத்தோடு.


அவளை கூர்மையாக பார்த்தப் படி,"இன்னும் மூணு மாசத்துல இவ கல்யாணம் செட்டில் ஆகனும்.இல்லேன்னா நா சொல்றவனோடு இவ கல்யாணம் நடக்கும்"


அதே கூர்மையோடு அவரைப் பார்த்த பிருந்தா,"அது யாரு?"என்றாள்.


அழுத்தமான குரலில்,"மாதவன்... அவன்தான் என் செலக்சன்"


அதைக் கேட்டு அதிர்ச்சியான வேணி,"மாதவனா?!ஏங்க நம்ம அந்தஸ்து என்ன?அவன் அந்தஸ்தென்ன?வீடு வாசல் சொத்து சுகம் எதுவும் இல்லாதவனுக்கா நம்ம பொண்ண கொடுக்கறது?"


அவள் வார்த்தையில் கொதித்த அவர்,"ஏன் அதெல்லாம் விட அவன் திறமை பெரிசு.அவன போல ஒரு பையன சல்லடைப் போட்டு சலிச்சாலும் கெடைக்காது....தெரிஞ்சுக....அவன் குணம் சாமர்த்தியம் முன்னால நம்ம ஆஸ்தி அந்தஸ்து எல்லா தூசி"


"இருந்தாலும்..."


"இருந்தாலும் இல்ல ஒண்ணும் இல்ல.மூணு மாசம் டயம் அதுக்குள்ள வேற வரன் கெடைக்கலேன்னா என் இரண்டாவது மாப்பிள்ளை மாதவன்தான்.இதுல எந்த மாற்றமும் இல்லை"என கண்டிப்பாக பேசியவர் அங்கிருந்து வேகமாக சென்றார்.


கல்லாக சமைந்திருந்த மகள் அருகில் வந்த வேணி அவள் தலையை கோதியவாறு,


"பிருந்தா!நீ கவலைப்படாதே...கண்டிப்பா நா இந்த கல்யாணம் நடக்க விடமாட்டேன்.உங்க அக்காவும் உன் பக்கம் தான் இருப்பா!"என்றவர் காலி கப்போடு அங்கிருந்து அகன்றார்.


பிருந்தா எவ்வளவு முயன்றும் மாதவனின் முகம் அவளுக்கு நினைவிற்கு வரவில்லை.அவள் அவனை கடைசியாகப் பார்த்தது அவள் அக்கா புவனாவின் திருமணத்தின் போது.அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு.அப்போது நெடு நெடு என்று ஒட்டடை குச்சியைப் போல் இருந்தான்.முதலிலிருந்தும் பிருந்தாவிற்கு மாதவனைக் கண்டால் பிடிப்பதில்லை.தன் தந்தையைக் காக்காய் பிடித்து அவரின் நம்பிக்கையை வென்று இன்று அவரின் வலக்கையைப் போன்று இருக்கிறான் என்று அவனை வெறுத்தாள்.


ஆனால் அவரின் அந்த கண்மூடித்தனமான நம்பிக்கை தம் மகளையே அவனுக்கு கொடுக்கும் அளவிற்கு போகும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.


'இல்ல இது நடக்காது!நடக்க விட மாட்டேன்.எப்படியாவது இந்த கஷ்டத்திலேந்து தப்பனும்.ஏதாவது ஐடியா கண்டுபிடிச்சே ஆகனும்.அக்காவ கேட்டா?!.... அதுதான் சரி"


உடனே தன் மொபைலில் புவனாவின் நம்பரை அழுத்தியவள் அவள் போனை எடுக்கவும்,"அக்கா!நா உடனே உன்னப் பாக்கனும்.நாம யூஷ்வலா போற ஹோட்டலுக்கு அத்தான கூட்டிட்டு இப்பவே வா"என்றாள்.





"நீ இருக்கற நிலைமைல உன்ன படுத்தக் கூடாதுன்னு தான் நினைச்சேன்...ஆனா இந்த அப்பா அடிக்கிற கூத்துல உன்ன கூப்பிடும்படி ஆயிடுச்சு"என்றாள் பிருந்தா தன் அக்கா புவனாவைப் பார்த்து.


புவனா தன் மூன்றாவது மாதத்தில் இருந்தாள்.திருமணமாகி ஐந்து ஆண்டுகள் பின் தாயாகும் மகிழ்ச்சி அவள் அழகை அதிகப்படுத்தி இருந்தது.அத்தோடு மசக்கையின் விளைவாக தலைசுற்றலும் வாந்தியும் அவளைப் படுத்தி எடுத்தது.சோர்வாக கணவனின் தோளிலில் சாய்ந்தவாறு தங்கையைப் பார்த்தவள் மெல்லியக் குரலில்,


"என்னடா பிருந்தா!என்ன பிரச்சினை?"என்றாள்.


சொல்வதற்கு வாய்யெடுத்த பிருந்தா அத்தான் தினகரின் கையசைவில் நிறுத்தி தன் அக்காவைப் பார்த்தாள்.வரும் வாந்தியை தடுக்க தன் கையால் வாயைப் பொத்தியப்படி இருந்தாள் பிருந்தா.அவள் முதுகை தடவிக் கொடுத்த தினகர் ஆர்டர் செய்த எலுமிச்சை சாறை சிறிது சிறிதாக தன் காதல் மனைவிக்கு புகட்டினான்.அவள் போதும் எனவும் நிமிர்ந்து மைத்துனியைப் பார்த்த பார்வையில் சிறிது மனத்தாங்கல் தெரிந்தது.இருக்காதா?!தன் உயிரான மனையாள் மசக்கையினால் அவதியுறும் போது அது அவள் தங்கையே ஆனாலும் அவளை தொந்தரவு கொடுப்பது அவன் அனுமதிக்க முடியாதது.


பிருந்தா அவ்வளவு அசடல்ல.அத்தானின் பார்வை கூறும் எச்சரிக்கை அவளுக்கு புரிந்தே இருந்தது.அவளுக்கும் தன் தமக்கையை தொல்லைக் கொடுப்பதற்கு சிறிதும் இஷ்டமில்லை.ஆனால் தலைக்கு மேல் கத்தி ஆடும் போது அதையெல்லாம் பார்க்கும் நிலைமையில் அவள் இல்லை.
 




Tamilsurabi

நாட்டாமை
Joined
Mar 20, 2019
Messages
20
Reaction score
70
Location
Thanjavur
புவனா பிருந்தாவை விட ஐந்து ஆண்டு மூத்தவள்.பெற்றோரை விட பிருந்தாவிற்கு புவனாவே எல்லாம்.உடுத்தும் ஆடையிலிருந்து கல்லூரியில் உடன் படிக்கும் மாணவன் லவ் லெட்டர் கொடுத்தது வரை பிருந்தா அக்காவிடம் கேட்காததே இல்லை.ஒவ்வொன்றிருக்கும் அக்காவை சார்ந்து வாழ்ந்த அவளுக்கு புவனாவின் திருமணத்திற்கு பின் அவளின் ஒரு பாதி நீங்கியது போலவே இருந்தது.


அக்கா தன்னால் கஷ்டப்பட கூடாது என எண்ணி இப்போதெல்லாம் முக்கியமான விஷயமென்றால் மட்டுமே அவளை அணுகினாள்.பிறப்போடு உண்டான சொந்தத்தை உரிமைக்கார கணவனாலும் தடுக்க முடியாது.அதனால் ஆனது ஆகட்டும் என தமக்கையை இன்று அழைத்தாள்.ஆனால் அவளின் நிலைக் கண்டு அவளால் எதையும் சொல்ல முடியவில்லை.


கணவனின் கவனிப்பில் சிறிது தெளிந்த புவனா நிமிர்ந்து தன் தங்கையைப் பார்த்து,


"இப்ப சொல்லுடா! அந்த ஹிட்லர் என்னதான் சொல்றார்?"


அக்காவின் கேள்வியில் தைரியமடைந்த பிருந்தா,


"அக்கா! இந்த அப்பா பண்றது கொஞ்சம் கூட சரியில்ல.... இன்னும் மூணு மாசத்துல எனக்கு கரெக்டான மாப்பிள்ளை கிடைக்கனுமா! இல்லேன்னா அவர் சொல்றவனுக்கு நா கழுத்த நீட்டணும்...அவர் செலக்சன் யார் தெரியுமா?"


"யாரு அது"என்றாள் புவனா ஆவலோடு.


"அது வேற யாரும் இல்ல ஹிட்லரோட வலது கை... அவனதான் நா கல்யாணம் செய்துக்கனும்....


"அவனையா?!!!!!"என்றபடி சில நொடி தங்கையையேப் பார்த்தவள் பின் அடக்கமாட்டாமல் சிரித்தாள்.அவளின் சிரிப்பினால் சிறிது கடுப்பான பிருந்தா,


"அக்கா....."என்றாள்.


தங்கையின் கோபத்தை அறிந்தவளாதலால் மீண்டும் மீண்டும் பொங்கிய சிரிப்பை சிரமப்பட்டு அடக்கியவள்,


"சாரி...சாரி... உன்னையும் அவனையும் சேர்த்து நினைச்சேனா சிரிப்ப அடக்க முடியலை....சே..... இந்த அப்பா ஏன் இப்படி செய்றார்? போயும் போயும் அவனா கிடைச்சான் மாப்பிள்ளையா!.."


அக்கா தங்கையின் பேச்சில் இப்போது சிறிது சுவாரஸ்யமடைந்த தினகர் தன் மனைவியைப் பார்த்து,


"புவி!யாரு அந்த வரன்? உங்க இரண்டு பேருக்கும் அவரை முன்னாடியே தெரியுமா?"


"தெரியுமாவா? பத்து வருஷமா தெரியும்.உங்களுக்கு தான் அவ்வளவா தெரியாது.அப்பா கம்பெனில தான் வேலைல இருக்கான்.திருவிழாவுக்கு கிராமத்துக்கு போறோம்ல அவனும் அங்க வருவான்.அப்ப பாருங்க அவன.கொஞ்சமாவது நம்ம பிருந்தாவுக்கு பொருத்தமான்னு...."


"மாமா கம்பெனிலியா?யாரு?.......ம்...ஓ.. மிஸ்டர் மாதவனா?


"அவனேதான்!"


"ஏன் புவி அவருக்கென?மாமா செலக்சன்னு ஆனது மேல அவரு சரியாதானே இருப்பாரு?


இதுவரை பேசாமல் இருந்த பிருந்தா,


"அவருக்கு வேணா சரியா இருக்கலாம்.எனக்கு இல்ல."என்றாள்.


"தினா நீங்க ஒரு வாட்டி அவனப் பாத்தா உங்களுக்கே புரியும்.அப்பாவுக்கு பிஸ்னஸ சரியா நடத்தறான்.ஆனா பிருந்தாவுக்கு சரியான புருஷனா அவனால இருக்க முடியாது.யாரும் அவன்கிட்ட பேசவே முடியாது.நூறாரு கேள்வி கேட்டு நம்மகிட்டயிருந்து விஷயத்தை வாங்குவான்.ஆனா திருப்பி ஒரு விஷயத்தை கூட நம்மால அவன்கிட்டயிருந்து வாங்க முடியாது.கல்லுலிமங்கன்....."என்றாள் புவனா.


"அவங்கிட்ட விரும்பும் படியா ஒரு அம்சமும் இல்லை"என்றாள் பிருந்தா.


"ஆமா வெறும் எலும்பு கூடு"என்ற புவனா கட்டுமஸ்தான தன் கணவனைப் பார்த்து பெருமையடைந்தாள்.


"அவர்கிட்ட சரியானது ஒண்ணு கூடவா இல்லை"என்றான் தினகர்.


"இருக்கு!அது அவன் பல்லு... வரிசையா நல்லா இருக்கும்."என்றாள் பிருந்தா சிரித்தபடி.


"அத நீ எப்ப பாத்தே? அவன்தான் சிரிக்கவே மாட்டானே"என்றாள் புவனா.


"நீங்க இரண்டு பேரும் அவர பத்தி கடுமையா விமர்சிக்கறீங்க.இத்தன வருஷத்துல அவர் எவ்வளவோ மாறி இருக்கலாமே!"என்றான் தினகர்.


அதில் திகைத்த பிருந்தா,"எவ்ளோ மாறினாலும் எனக்கு புடிக்கும்படியா மாறியிருக்க மாட்டான்"


"உனக்கு பிடிக்கலேன்னா நீ அவன கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்...இல்லையா தினா?"என்றாள் புவனா தன் கணவனைப் பார்த்து.


"புவி சொல்றது கரெக்ட் பிருந்தா! உனக்கு பிடிக்கலேன்னா வேண்டாம்"என்றான் தினகர்.


"பாத்தியா தினாவும் நம்ம கட்சி தான்.நீ எதுக்கும் பயப்படாதே... திருவிழாவுக்கு போய்ட்டு வந்து நாங்களே ஒரு நல்ல வரனா பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்...சரியா?"என்றாள் புவனா.


"ஆமா பிருந்தா டோன்ட் வொர்ரி... நாங்க எல்லாம் பாத்துக்குறோம்.."என்றான் தினகர் மனைவியின் கையை பற்றியபடி.


அவர்களின் பேச்சினால் பிருந்தாவிற்கு புது தைரியம் பிறந்தது.


????????????


பூம்பொழில் அழகான கிராமம்.உயரமான மலைகளும், பச்சை பசேல் என வயல்வெளிகளும், குளுமையான தோப்புகளும் இயற்கை விரும்பிகளின் சொர்க்கமாக இருந்தது.வீட்டின் பின்புறத்தில் இருக்கும் சிறிய தோட்டத்தையே ரசிக்கும் பிருந்தாவிற்கு இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் அந்த ஊர் தெவிட்டாத இன்னமுதமாக இருந்தது.


ஊருக்கு வந்த நாள் முதல் வெளியிலேயே சுற்றி வந்தாள்.இவர்களுக்கே சொந்தமான வயல் மற்றும் தோப்புகளில் மனம் போல் சுற்றினாள்.இயற்கை அழகை எவ்வளவு ரசித்தாலும் உள்ளுக்குள் தந்தையின் நிபந்தனையே ஓடியப்படி இருந்தது.


எதற்கும் மகளோடு சேராத வேணியும் இந்த விஷயத்தில் மகளோடு சேர்ந்து மாதவன் வேண்டாம் என்றாள்.அவன் ஜகந்நாதனின் திரண்ட சொத்துக்காகவே அவர் தலையில் இந்த திருமண ஏற்பாட்டை பற்றிய விஷயத்தைத் திணித்திருக்க வேண்டும் என்றாள்.இதில் அவள் மகள் பக்கம்தான் என சத்தியம் செய்தாள்.


அதையெல்லாம் எண்ணியவாறு தங்கள் வயலில் நடந்த பிருந்தா வயலுக்கு நீர் இறைக்கும் கிணற்றை குனிந்து பார்த்தாள்.நீச்சல் தெரிந்திருந்தால் அதில் நீந்தி இருக்கலாமே என்றிருந்தது அவளுக்கு.அதை இன்னும் அருகில் பார்க்கும் ஆவலில் முன்னே கால் வைத்தவள் அங்கே அவள் கால் வழுக்கவும் கிணற்றில் விழப் போனாள்.அப்போது இரண்டு வலிமையான கரங்கள் அவள் இடையை இறுக பற்றியது.


கிணற்றில் விழுந்தே விட்டோம் என எண்ணி நடுங்கிய பிருந்தா தன்னை யாரோ இறுக பற்றவும் மெல்ல தன் கண்களைத் திறந்து பார்த்தாள்.அங்கே ஆஜானுபாகுவாக நின்றிருந்தான் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய
"உன் பார்வையின்
வரிகளில்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
தமிழ்சுரபி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தமிழ்சுரபி டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top