• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..! Naam Vazha..! - Episode 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
உயிர் - 4

மும்பை – தாராவில்...

KNஇண்டீரியர் கம்பெனி மிகபரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது.. இன்று தான் கம்பெனியின்MD திகிரி சியோரா மகன் கெளதம் சியோரா பொறுப்பெடுக்க போகிறான்... அவனை வரவேற்க தான்இந்தபரபரப்பு... இத்தனை நாட்கள் குதிரை ரேஸ் என்று அதன் பின் ஓடிக்கொண்டு இருந்தவன் இப்பொழுது தான் ஒரு முடிவு எடுத்து இங்கு வந்திருக்கிறான்... அவனை வரவேற்க தான் கம்பெனி ஸ்டாப்ஸ் எல்லாரும் கையில் பூங்கொத்துடன் நின்றனர்... அவர்கள் நின்ற சிறிது நேரத்தில் வரிசையாக மூன்று கார்கள் வந்து நின்றன...
அதில் முன்னால் வந்த ஸ்விப்ட் காரில் இருந்து 3 கார்ட்ஸ் இறங்க அவர்கள் ஓடி வந்து பின்னால் வந்த BMW i8யை திறந்து விட்டனர்... அதில் இருந்து KN கம்பெனியின் MD சியோரா இறங்கினார்... அவரை நேரில் பார்க்கவே எல்லாரும் பயபடுவர்... அத்தனை கம்பீரமானவர்.... வெள்ளை நிற பேண்ட், வெள்ளை நிற ஷர்ட் அணிந்துஇருந்தார், இடது பேண்ட் பாக்கெட்டில் கையை வைத்திருப்பார் எப்பொழுதும்... அது தான் அவரின் கம்பீர அழகு..


காரில் இருந்து இறங்கிஎல்லாரையும் ஒரு முறை பார்த்து விட்டு...கார் உள்ளே பார்த்து வா என்று கண் அசைத்தார் அவர்.. அவர் கண் அசைவுக்கு அவரின் மகன் கெளதம் சியோரா கீழே இறங்கினான் கம்பீரமாக...

அவன் இப்பொழுது இங்கு வருவது கூட அவன் அப்பாவின் ஆசைக்காக மட்டுமே... இத்தனை வருடத்தில் மிகவும் கஷ்ட்டபட்டு, பல தடைகளை தாண்டி வந்தவர் தான் சியோரா... இப்பொழுது ஒரு அழியா இடத்தை பிடித்திருக்கிறார்... அதுக்கு அவர் செய்த தகிடு தனம் அதிகம் தான் ஆனாலும் அவரை எதிர்த்து யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள்.. அப்படி யாரவது இவருக்கு எதிராக எழுந்தால் அடுத்த நிமிடம் அந்த உயிர் போய் இருக்கும்.. இதுக்கு இவருக்கு உறுதுணையாக இருப்பது அவரின் இரண்டாம் மகன் கெளதம் சியோரா மட்டுமே... அவருக்கு எதிராக இருப்பது அவரின் மூத்த மகன் கௌசிக் சியோரா நேர்மையானவன்...

சியோரா அவர் உயர எந்த நிலைக்கும் போவார்... அதே போல எந்த அளவுக்கு கிழ் இறங்குவார் அவர்.. ஆக மொத்தம் சியோரா நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்... இதே போல தான் நமது நாயகனும்...

அவனுக்குகொடுத்த மரியாதையை அமைதியாக சிறு தலையசைப்புடன் பெற்று முன்னே செல்ல அவன் அப்பா சியோரா பின்னே சென்றார்... அவனுக்கு பின்னே அவர் செல்வது அவருக்கு அத்தனை பெருமையாக இருந்தது... அவரின் வளர்ச்சிக்கு இவனும் முக்கிய காரணமே....

அவன் ரூம் வந்து அவன் செய்ய வேண்டியது எல்லாம் கூறினார் அவனுக்கு.. அதில் முக்கியமான ஒரு பைல் எடுத்து தனியாக வைத்துக் கொண்டார் அவர்...அதை கெளதம் பார்த்தான் ஆனால் ஏதும் கேட்கவில்லை.... காரணம் அவனுக்கு தெரிய வேடனா விஷயமாக இருந்தால் அவரே அவனுக்கு கூறி இருப்பார்...

அவர் கூறியதை எல்லாம் தெளிவாக கேட்ட அவன்.. அப்பா இப்போ அந்த RK ஏதாவது ப்ரோப்லேம் பண்ணுறானா என்று கேட்டான் கெளதம்... அவன் கேட்பதை உணர்ந்த சியோராவும்.. இப்போ அவன் ஏதும் பண்ணலடா கெளதம்.. பேசாம அவர் பொண்ணை நம்ம கௌசிக்கு கல்யாணம் செய்து வைத்து அவனை நம்ம பார்ட்னர் ஆக்கிருவோமாடா என்று கேட்டார் சியோரா…

அவரின் யோசனை அவனுக்கும் சரி என்றே தான் பட்டது.. காரணம் அவருக்கு இருக்கும் ஒரே தொழில் எதிரி தற்பொழுது அவன் மட்டுமே... அவனை எப்படியாவது சரி கட்ட வேண்டும் என்று நினைத்து.. சியோராவை பார்த்து அப்பா இதை நாம பிறகு பாத்துக்கலாம்.. வர்ஷிக் வந்துட்டானா?? அந்த கோட்டை என்ன ஆச்சு அது பத்தி ஏதாவது சொன்னானா என்று கேட்டான் கெளதம்…

அவன் கேட்கவும் தான் அவருக்கு வர்ஷிக்கை அங்கு அனுப்பின நியாபகம் வந்தது... உடனே அவனுக்கு அழைப்பெடுத்தார்... ஆனால் அவனுக்கு அழைப்பு இல்லை.. யோசனையாக போனை பார்த்துக் கொண்டு இருந்த அவரை கலைத்தான் கெளதம்…

அப்பா என்ன அவன் போன் எடுக்கலியா.. என்று கேட்டான்...

அவன் கேட்கவும் ஆமாடா கெளதம் எடுக்கல, ஒரு வேளை அந்த கிராமத்துல டவர் இல்லாமல் இருக்கும். அதனால் தான் அவனுக்கு கிடைக்காத இருக்கும் என்று அவனிடம் கூறினார்...அவர் கூறுவதும் அவனுக்கு சரி என்றே பட்டது... பின் வேலையில் மூழ்கி விட்டான் கெளதம்...

அதே நேரம் அங்கு கோட்டைநல்லூரில் சத்ரியன் தீவிர யோசனையில் இருந்தார்... அவரின் குடும்பத்துக்கு இப்படி ஒன்றன் பின் ஒன்றாக ஆதி விழுவது அவரால் தங்க முடியவில்லை... என்ன செய்வது இப்பொழுது இருப்பது ஒரே ஒரு பேத்தி மட்டுமே அவளையும் எப்படியாது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினார் அவர்... இப்பொழுது தான் அவள் 12 முடித்திருக்கிறாள்.. இப்பொழுது தான் ஒரு திருமணம் நின்று இருக்கிறது..
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
மீண்டும் ஒரு திருமணம் வைத்து அது நிற்கும் நிலை வந்தால் தன்னால் உயிருடன் இருக்க முடியாது என்று எண்ணி.. அவளை வேறு எங்காவது அனுப்ப முடிவு செய்தார்...

அதே நேரம் சத்ரியா வீட்டில் இருந்தும், திகிரி சியோரா தன் மகன் நியாபக படுத்திய கோட்டைநல்லூர் பற்றி அவர் குடும்பத்தை எண்ணிக் கொண்டு இருந்தார்கள்... அவளுக்கு அவளின் திருமணம் நினைவு வந்தது... அவள் அப்பொழுது தான் 12 முடித்து இருந்தாள்... அந்த விடுமுறையில் தான் அவள் அப்பா சத்ரியன் அந்த கோட்டைத்தாய் பற்றி கூறினார்... கோட்டையம்மாள் வேற ஊரில் இருந்து இங்கு வந்து அருள்வாக்கு கூறியதும், பின் ஊர் கட்டுப்பாட்டை மீறி சியோராவை திருமணம் செய்ததும், பின் ஒருநாள் அவர்களை காணவில்லை.. அதுக்கு பிறகு 5 வருடம் கழித்து வந்தும், அதன் பின் அவள் சாமி ஆகியது வரை கூறினார்... அதுக்கு பிறகு நடந்ததை.. கூறவில்லை.. சத்ரியன் அன்று அவரின் மூதாதையர் கூறியதை அவர் பெரிதாக எண்ணவில்லை...

அதன் பிறகு தான் அவள் இந்த கோட்டைத்தாய் புகழ் பரப்ப இந்த கோட்டைத்தாய் பற்றி எழுதி அனுப்பினாள். அது அடுத்த முறை பேப்பரில் ஒரு ஆர்டிகிலாக வந்தது... அதில் இந்த கோட்டைத்தாய் போட்டோவும் இணைத்து அனுப்பி இருந்தாள் சத்ரியா... அதை மும்பையில் இருந்த திகிரி பார்த்தான்... அதே போட்டோவும் அவன் வீட்டில் இருந்தது…அது எப்படி வந்தது என்று அவனுக்கு தெரியாது...

அகி சியோரா பேரன் தான் அந்த கோட்டைத்தாய் திருவிழாவின் போது அங்கு சென்று கோட்டைத்தாய் போட்டோ கொண்டு வந்து அவன் தாத்தாவின் இறுதி ஆசையை நிறைவேற்றினான்....

அதை பார்த்த திகிரிக்கு சந்தேகம் எப்படி திருநெல்வேலியில் இருக்கும்ஏதோ ஒரு கிராமத்துக்கும் இங்கு மும்பையில் இருக்கும் நம்ம வீட்டுக்கும் சம்மந்தம் வந்தது என்று.. உடனே அவன் அப்பா ஆதிவ் சியோராவிடம் கேட்டான்.. அப்பொழுது தான் அவர் முழு கதையும் கூறினார்...

100 வருடங்களுக்கு முன்...

கோட்டைத்தாய் அகியை அங்கு இருந்து அனுப்பினவுடன் அவனுக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை.. ஆனாலும் எங்காவது செல்லவேண்டும் அது தான் அவன் அப்பா, அம்மா இருவரின் ஆசையும் கூட.. அதிலும் அவன் அங்கு இருக்கும் பொழுது ஒவ்வொரு நேரமும் கூறுவாள் கோட்டைத்தாய் அவனின் அப்பாவை கொன்றது இந்த கோட்டை மனிதர்கள் என்று அதிலிருந்து அவனுக்கும் அவர்களை பழிவாங்கும் எண்ணம் தான்...

ஆனாலும்அவனால் எதுமே செய்யமுடியாது.. வயதோ சிறு வயது.. எங்கையாவது சென்று முதலில் நாம் நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி அங்கு இருந்து கிளம்பி பலரின் உதவியுடன் மும்பை வந்து சேர்ந்தான்... அங்கு வந்து அவன் கையில் இருந்த பணம், அவன் அம்மா கொடுத்த வளைவி இதை கொண்டு காட்டில் புதைத்து வைத்தான்... அப்பொழுது தான் அங்கு நிறைய ராணுவ வீரர்கள் தங்கி இருந்தனர்.. அவர்கள் கூடவே இருந்தான் அகி...

அவர்கள் தரும் சுட்ட சப்பாத்தியை சாப்பிட்டும் அவர்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்து கொண்டும் அவர்களுடனே இருந்தான்.. இப்படியாக நாட்களும் மாதங்களும் கடந்தது... அன்று அப்படி தான் மிக பெரிய சண்டை நடந்தது கடற்கரையில் அங்கு இவன் சென்றான்.. அந்த சண்டையில் ஒருவன் இறந்து விட்டான்... அவன் இறந்ததும் அவனை விட்டு போயினர்.. இவன் விளையாட்டு போக்கில் அந்த இறந்தவன் மேல் சும்மா கல் தூக்கி போட்டுக் கொண்டு இருந்தான்...

அந்த நேரம் வந்த போலீஸ் இவன் தான் அவனைக் கொன்று விட்டான் என்று இவனை பிடித்துக் கொண்டு சென்றனர்.. பின் நிறைய வருடம் களைத்து வெளியில் வந்தான்.. அப்படி அவனுக்கு ஜெயிலில் அறிமுகமானவள் தான்தீபிஷா... ஏதோ ஒரு குற்றத்துக்காக அவளும் அங்கு சென்றவள்.. இவர்களுக்கு காதலாகி ஜெயிலில் இருந்து வெளியில் வந்ததும் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்ந்தனர்... அவர்களுக்கு பிறந்தது ஆண் குழந்தைகள்.. அதன் பிறகு வந்த வாரிசு எல்லாமே ஆண் குழந்தைகள் தான்... அந்த நேரம் தான் வாழ்கையின் இறுதி நாளில்இருந்தான் அகி.. அப்பொழுது தான் கழுத்தில் கிடந்த சாவியை கழட்டி அவன் பேரன் கையில் கொடுத்து.. இது என்ன சாவி என்று தெரியாது.. என் அம்மா அந்த இக்கட்டான நிலையிலும் அந்த சாவியை தந்தாள்...

இந்த சாவியை பத்திரமாக பாத்துக்கொள்..அந்த ஊருக்கு சென்று இது என்ன சாவி என்று கண்டு பிடி.. அதே போல் எப்படியாவது என் உயிர் போகும் முன் என் அம்மா முகத்தை எப்படியாவது நான் காண வேண்டும் அதுக்கு ஏறபாடு செய் என்று கூறினான்.....
அகி அப்படி கூறவும் அவனின் பேரன் உடனே அங்கு சென்று விட்டான் அங்கு சென்று அந்த பெட்டியை தேடினான் ஆனால் அவனுக்கு அது எந்த பெட்டி எங்குதேடியும் கிடைக்கவில்லை... அதே போல் அவன் கோட்டைத்தாய் சிலைஇருந்த பெட்டியை அவன் கருத்தில் கொள்ளவில்லை... இவன் சென்ற நாள் தான் கோட்டைத்தாய் கோவில் திருவிழா நடந்துக் கொண்டு இருந்தது... அப்படி தான் அந்த கோவில் போட்டோவும், அந்த கோட்டைத்தாய் போட்டோவும் எடுத்துக் கொண்டான்... அங்கு இரவு இருக்கும் பொழுது தான் இருவர் பேசுவது அவனுக்கு கேட்டது....


மெதுவாக அங்கு சென்றான்.. அதே தான் அவனுக்கு கொட்டைத்தாயின் சபதம் தெரிந்தது.. ஆனாலும் முழுமையாக தெரியவில்லை... தாத்தாக்கு தெரியாத நிறைய விஷயம் இங்கு இருக்கு என்று நினைத்து எப்படியாவது முழுமையாக அவர்களிடம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று தீவிரமாக யோசித்தான்..

அப்பொழுது தான் அவனுக்கு பட்டை சாராய நினைவு வந்தது... கையில் பட்டை சாராயமும், கொஞ்சம் தும்பட்டும் (விஷம்)வாங்கிக் கொண்டான்.. சில நேரம் உதவும் என்று... வாங்கி வந்து அவர்களை ஒதுக்கு புறமாக அழைத்து சென்று அவர்களுக்கு குடிக்க கொடுத்து அவர்கள் வாயிலாக எல்லாம் அறிந்துக் கொண்ட அவனுக்கு கோபமாக வந்தது.. அந்த இருவர் தான் அந்த 9பேரில் உள்ளவர்களின் பேரன்கள்... எல்லாம் அறிந்தஅவனுக்கு ரத்தம் கொதித்தது.. அநியாயமாக அவனின் பூட்டனையும், பூட்டியையும் கொன்று விட்டனர்.. இவர்களை சும்மா விட கூடாது என்று எண்ணி அந்த சாராயத்தில் விஷம் வைத்துக் கொன்றான்....

அடுத்த நிமிசமே அந்த ஊரை விட்டு கிளம்பி விட்டான்... இனி இந்த ஊரில் இருக்க கூடாது என்றும், யாரையும் வர விட கூடாது என்றும் எண்ணி கிளம்பி வந்து விட்டான்.. அவனுக்கு கோட்டை எண்ணம் அறியாமல் அப்படி மனதில் நினைத்தான்... ஆனாலும் அவன் இருக்கும் வரை யாருக்கும் அவன் இந்த ஊர் பற்றி கூறவில்லை... அவன் இறக்கும் தருவாயில் எல்லா உண்மையும் கூறி அவன் தாத்தா தந்த சாவியை அவர்கள் கையில் கொடுத்து விட்டு உயிரை விட்டான்....

அதன் பிறகு இந்த சாவி அப்படி இப்படி என்று ஒருவர் கை ஒருவர் மாறி ஆதிவ் கைக்கு வந்தது.. அவன் தான் யாருக்கும் தெரியாமல் அங்கு சென்று அந்த கோவிலில் எல்லா இடமும் தேடினான்.. அப்படி தான் அந்த சிலை கிழ் இருக்கும் பெட்டியை கண்டான்.. அதில் இருந்த பூட்டு மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தது.. அந்த சிலையை மெதுவாக நகட்டி வைத்து பெட்டியை திறந்துப் பார்த்தான்.. அதில்ஒரே ஒரு பேப்பர் மட்டுமே இருந்தது.. யோசனையாக அதை எடுத்து பார்த்தான்.. அதில் தான் கோட்டைக்கு வரும் மரணத்தை பற்றியும்,அவளின் சபதமும், பழி வாங்கலும், அவள் இந்த பெட்டியில் தான்இருக்கிறாள் என்பதையும் அறிந்துக் கொண்டான்...

ஆதிவ் அறிந்துக் கொண்டதை எல்லாம் திகிரிக்கு கூறி அதன் பிறகு அவரும் மரணித்து போனார்... கடைசியில் கோட்டைத்தாய் பற்றி முழுமையாக அறிந்தது இந்த திகிரி சியோரா மட்டுமே...

அப்படி தான் அந்த பாவிகளின் பெண்களுக்கு கோட்டைத்தாய் அளித்த சாபமும் தெரிந்தது... தெரிந்த உடனே அங்கு கோட்டைநல்லூருக்கு கிளம்பி விட்டான்.. தன்னால் யாரையாவது காப்பாற்ற முடியுமா என்று எண்ணி?? ஆனாலும் அவருக்கு டவுட் இப்பொழுது அவர்களுக்கு பெண் குழந்தைகள் இருக்குமா என்று.. இப்பொழுதுவந்த ஆர்டிகிலில் உள்ள சத்ரியா யாராக இருக்கும் அவர்களின் வாரிசா இருக்குமோ??
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
என்றுபலவாறான யோசனை அவருள்.. ஆனாலும் சரி ஒருமுறை அங்கு சென்று தான் பார்ப்போமே, போய் அந்த கோட்டைத்தாயின் தரிசனைதையாவது பெற்று வருவோம் என்று கிளம்பினார் திகிரி சியோரா...

அவருக்கு தான் பெண்கள் எங்கு கஷ்டம் அடைந்தாலும் அங்கு முதல் ஆளாக நின்று அவர்களை காப்பாற்றி விடுவார்... அவரின் இதே பழக்கம் நமது நாயகனுக்கும் உண்டு அப்படி தான் நிறைய நிறைய செயல் யாருக்கும் தெரியாமல் அவனது ஆட்களை வைத்து செய்துக் கொண்டு வருகிறான்... அது வெளியில் வரும் பொழுது அவன் உயிர் போய் இருக்கும்.. இது தான் கெளதம் விதி....அந்த விதியை காப்பாற்றுவார் யாரோ??

அங்கு திகிரி செல்லும் போது மதிய நேரம்... முதலில்அவர் நேராக கோவிலுக்கு தான் சென்றார்... அங்கு சென்று கோட்டைத்தாயை சந்தித்தான்.. எப்படியாவது உன்னை கொன்ற அந்த பாவிகளுக்கு பெண் குழந்தை இருந்தால் எனக்கு காட்டிவிடு... ஒண்ணும் அறியாத அவளை ஏன் நீ அழிக்க நினைக்குற?? உன்னை, உன் கணவரை அழித்தவர்களை தான் நீ அழித்து விட்டாயே.. மீண்டும் ஏன் இப்படி பழி வாங்க நினைக்குற?? அவளை மட்டும் நீ அழிக்காத.. அவர்களுக்கு பெண் வாரிசு இருக்கா என்று எனக்கு தெரியாது ஆனாலும் நம்ம குடும்பத்தில் ஒண்ணும் அறியாத பெண்களை நீ அழிக்காத.. அவளை நான் எங்கையாவது அழைத்துக் கொண்டு போறேன்... அதுக்கு பிறகு அவளை இங்கு விடவே மாட்டேன் அப்படி இங்கு விட்டால் அன்றே அவளை நீ அழித்து விடு என்று மனதார கேட்டான் திகிரி சியோரா...

அந்த நேரம் கோட்டைத்தாய் என்ன நினைத்தாளோ தெரியவில்லை... அந்த பூவரசம் மரத்தின் பூக்களை அவன் மேல் தூவ செய்து அவன் வேண்டுதலை கேட்டு செவிசாய்த்து அவனுக்கு சரிஎன்று கூறினாள்...அவனும் மன நிறைவுடன் கோட்டையை நோக்கி சென்றான்...

அவன் செல்லவும் கோட்டைதாய் மனதில் நினைத்து விட்டாள் சத்ரியாவுக்கு இந்த ஊரில் தான் மரணம் என்று... என்று அவள் இந்த ஊருக்கு வருகிறாளோஅன்று அவளுக்கு மரணம் நிச்சயம்.....

அங்கு சத்ரியன் வர்ஷ்க்கு கொடுத்த அதே அறையை தான் கொடுத்தான்...திகிரியும் பேசாமல் அங்கு சென்றான்.. மாலை6 மணியாகவும் அவன் காதில் இனிமையான பாட்டு குரல்.. சத்ரியா தான் விளக்கு பூஜை நடத்திக் கொண்டு இருந்தாள்... அவளுக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம்....

பாட்டு குரல் வந்த திசையை நோக்கி செல்லவும் அவனை இருவர் பிடித்து வெளியில் போக முடியாத படி செய்தனர்.. அவளை பார்க்க முடியாமல் போக மீண்டும் அவன் அறைக்கு வந்து பால்கனிக்கு சென்று அவளைப் பார்த்தான்... யார் என்று அவனுக்கு தெரியவில்லை.. ஆனால் அழகாக இருந்தாள்....

பின் மெதுவாக யாருக்கும் தெரியாமல் வெளியில் வந்த திகிரி அந்த கோட்டையை முழுமையாக அலசி ஆராய்ந்தான்... அப்பொழுது தான் கோவிலில் பார்த்த அந்த பெண் இங்கு சுவற்றில் மாட்டி இருந்த போட்டோவில் இருந்தாள்... அப்பொழுதே முடிவெடுத்து விட்டான் வெளியில் போகும் போது இவளை அழைத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்று... அவளை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு இருந்தான்.. அப்பொழுது தான் சத்ரியன் உடல் நலம் சரி இல்லாமல் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருந்தான்... அது இவனுக்கு சாதமாக இருந்தது...

அப்படியே அவளை தினமும் பார்க்கும் சாக்கு கிடைத்தது.. அதை வைத்து வந்த 2 வாரத்தில் அவள்மனதில் இடம் பிடித்து விட்டான்.. அவள் மனதில் இடம் பிடிக்க முக்கிய காரணம் கோட்டைத்தாய் கோவில் தான்.. அவளுக்காக இது வரை அவன் செய்யாத எல்லாம் செய்தான் திகிரி.. நேரமே எழுந்து கோவிலை பெருக்கி சாமி சிலைக்கு பூ வைத்து, கோலம் வரைந்து, கோவில் கோபுரத்தில் விளக்கு வைப்பது வரை செய்து விடுவான்... சத்ரியா வரும் பொழுது எல்லா வேலையும் முடிந்து இருக்கும்.. இதில் தான் சத்ரியாக்கு அதிர்ச்சி இந்த வேலையை யார் செய்வது என்று....

அன்று ஒரு நாள் நேரமே அவனுக்கு முன்னே எழுந்து கோவில் அருகில் மறைந்து இருந்துப் பார்த்தாள். திகிரி ஒரு புக் வைத்து கோலம் வரைய முடியாமல் அழித்து அழித்து கோலம் வரைந்துக் கொண்டு இருந்தான்.. வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, தலையில் ஒரு டவலையும் கட்டி படு ஸ்டைலாக இருந்து கோலம் போட தெரியாமல் போட்டான்... அந்த பாவனை அவள் மனதை கவர்ந்து விட்டது... அப்படியே காதலும் வளர்ந்து.. யாருக்கும் தெரியாமல் அவர்கள் பேசி பழகி...

அன்று அப்படி தான் திகிரி அவளிடம் எப்படி அவளிடம் காதலை கூறுவது... அவள் திருமணத்திற்கு இன்னும் 1௦ நாள் தான் இருக்கு.. அதுக்குள்ள அவளிடம் காதலை கூற வேண்டும் என்று எண்ணி அவன் ரூம் பால்கனியில் அமர்ந்து அதில் இருந்த தூணில் சாய்ந்து இருந்து யோசித்துக் கொண்டு இருந்தான்.. யோசித்தானோ இல்லை அந்த கோட்டைத்தாயிடம் வேண்டுதல் வைத்தானோ அது அவனே அறிவான்....

அந்த நேரம் தான் அவன் அருகில் மிக மிக அருகில் கொலுசு சத்தம்... ஆனாலும் அவன் திரும்பி பார்க்காமல் கண்களை மூடி அந்த இசையை ரசித்துக் கொண்டு இருந்தான்...
அப்பொழுது அவன் தோள் மேல் ஒரு கரம் மெதுவாக விழுந்தது... அது அவள் கரமாக இருக்கும் என்ற எண்ணம் அவனுக்கு அப்பொழுதும் அவன் திரும்பவில்லை.... மெதுவாக கிரி என்று அழைத்தாள் அவள்...


அந்த பெயரில் திரும்பினான் திகிரி... எப்படி திரும்பாமல் இருப்பான் அவன் அவள் தான் அவனுக்கு அழகான ஒரு செல்ல பெயர் வைத்து விட்டாளே.. அதில் அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சி.. தன் தோளில் இருந்த அவள் கரத்தை எடுத்து அவன் கைகளுக்குள் அடைக்கி கொண்டான்....

அதிலையே அவள் உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறந்தது.. முதல் ஆணின் ஸ்பரிசம் அவளை சிலிர்க்க செய்தது... அவன் கைகளில் இருந்து அவள்
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
கையை மெதுவாக உருவ பார்த்தாள்.. ஆனால் அவளால் முடியவில்லை.. அவனின் பிடி இரும்பு பிடியாக இருந்தது...

அவளை பார்த்து ரியா என்ன இந்த நேரம் மாடிக்கு வந்திருக்குற.. உங்க அப்பா பாடிகாட்ஸ் வந்த பிரச்சனையாகிரும் போ உன் ரூம்க்கு நாம நாளைக்கு கோவில்ல பாத்துக்கலாம் என்றுக் கூறினான்.... அவன்கூறுவதை கேட்டஅவளுக்கும் கொஞ்சம் உதறலாக தான் இருந்தது.. இப்படி பேசுற விஷயம் மட்டும் அவள் அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் இவர் உயிருடன் வெளியில் போக முடியாது.. என்று மனதில் கொஞ்சம் பயத்துடனே நினைத்து அவனை இழுத்துக் கொண்டு அருகில் உள்ள ரூம்க்கு சென்று கதவை அடைத்து விட்டாள்...

அவள் அவனை அப்படி இழுத்துக் கொண்டு வரவும் அவனுக்கு பெரும் மகிழ்ச்சி.. பின்ன மகிழ்ச்சி இருக்காத என்ன இத்தனை நாட்கள் அவளை தூரத்தில், இருந்து பார்த்தும் யாருக்கும் தெரியாமல் ஒரு சில வார்த்தைகள் பேசியும் இப்படி உரிமையாக கை பிடித்தல் என்கிற விஷயம் நடக்கவே இல்ல.. இதில் தானாக அவனின் ரியா வந்து கைபிடித்து இழுத்து ரூம் வந்து கதவை பூட்டினால் அவனுக்கு எப்படி இருக்கும் மனதில் கற்பனைகள் தறிக் கெட்டு ஓடியது.. கண்களில் மயக்கத்துடன் அவளை காதல் பார்வைப் பார்த்தான் அவன்....

அவன் பார்வையில் மயங்கிய சத்ரியா.. பின்கண்களில் பயத்தை தேக்கி அவனை நோக்கி கிரி நீ....நீங்க இல்ல நாம நினைக்குறது நடக்குறது கஷ்டம். எங்க அப்பா பத்தியும், எங்க ஊர் பத்தியும் உங்களுக்கு சரியா தெரியல.. ரொம்ப மோசமானவங்க.. போன மாசம் இப்படி தான் ஒரு பொண்ணு வேற ஊர் பையனை லவ் பண்ணி யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்துக் கொண்டு சென்று விட்டாள்.. ஆனால் அவளை உடனே தேடி ரெண்டு பேரையும் கொன்னுட்டாங்க...

நம்மளையும் அப்படி பிரிச்சுருவாங்க.. நீங்க கிளம்பி ஊருக்கு போங்க.. விதி படி நடக்கும், நடக்குறது நடக்கட்டுஎன்று கூறி அவன் முகத்தைப் பார்த்தாள் அவள்...
அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தான் அவன்... பின்ன இது எல்லாம் தெரிந்து தான் அவன் இங்கு வந்து அவளை காதலித்ததே மறுபடியும் அவனைப் பார்த்து இப்படி கூறினால் அவனுக்கு சிரிப்பு வராமல் என்ன செய்யும்.. அவனின் சிரிப்பை புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள்..


அவள் அருகில் வந்து அவன் இங்கு வந்த கதையைக் கூறினான்... பின் அவளை பார்த்து அவள் கண்களைப் பார்த்து என்னை கல்யாணம் பண்ணிகிறியா ரியா என்றுக் கேட்டான் திகிரி.... அவன் இப்படி நேரடியாக கேட்பான் என்று அவள் நினைக்கவில்லை... அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை... ஆனாலும் அவனை பிடித்து தான் இருந்தது.. அவனின் பேச்சு, அவனின் கம்பீரம் இப்படி எல்லாமே அவன் பால் அவளை ஈர்த்தது....

அவனுக்கு எப்படி பதில் கூறுவது என்று அவளுக்கு தெரியவில்லை... அவன் அருகில் மிக மிக அருகில் வந்து அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு தன் பதிலை மறைமுகமாக கூறினாள்.... அவளின் இச்செயலில் அவனுக்கு சந்தோசம் பிடிபடவில்லை... பதிலுக்கு அவளை மெதுவாக அனைத்துக் கொண்டான்...

அவனுக்கு நிம்மதி அவள் உயிரை காப்பாற்றி விட்டோம் என்று... பின் நேரம் ஆவதை உணர்ந்து மெதுவாக அவனிடம் இருந்து அவளை பிரித்து நீ போ ரியா நாளைக்கு பார்க்கலாம் என்றுக் கூறினான்... எல்லாத்தையும் நான் பாத்துகிறேன் நீ கவலை படாத என்று கூறினான்.. அவன் அப்படி கூறவும் கண்களில் பயத்தை தேக்கி அவனைப் பார்த்தாள் அவள்... அவளின் பார்வையை கண்ட அவன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.. அவனின் அணைப்பு அவளுக்கு ஒரு தைரியத்தையே கொடுத்தது... மெதுவாக நெற்றியில் அவனின் முத்திரையை பதித்து அவளை அழைத்துக் கொண்டு அவள் ரூம் விட்டு வந்தான் திகிரி...

அதன் பிறகு அவன் நாட்கள் வண்ணமயமாக சென்றது.... திருமண நாள் நெருங்க நெருங்க சத்ரியாவுக்கு பெரும் பயமே.. அவளின்அப்பா ஊரையே அடைத்து பந்தல் போட்டிருந்தார்... அவன் கூறியது போல் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு அவன் அழைத்துக் கொண்டு மும்பை சென்று விட்டான்...

அங்கு சென்று இன்றும் இதே காதலுடன் வாழ்கிறான்...திகிரிக்கு சத்ரியா என்றால் உயிர்.. அவளிடம் கூறி இருக்கிறான் அந்த ஊரை நீ மறந்து விடு.என்று அவளுக்கு எல்லாம் கூறினான்.. அந்த காதலுக்கு அடையாளமாக தான் இரண்டு மகன்கள்.. மூத்தவன் கௌசிக் சியோரா,இரண்டாமவன் தான்கெளதம் சியோரா....

சியோரா யோசித்து முடிக்கவும் வீட்டுக்கு செல்லும் நேரம் வரவும் சரியாக இருந்தது... கௌதமிடம் வந்து அவனை அழைத்தார் ஆனால் அவன் சிறிது வேலை இருபதாய்க் கூறி அவரை அனுப்பினான்.. அவர் என்ன வேலை இருந்தாலும் சரியாக 6மணிக்கு வீட்டுக்கு கிளம்பி விடுவார்...

அவர் வீட்டுக்கு கிளம்பவும் யாருக்கும் தெரியாமல் தொடங்கிய ஆபிஸ்க்கு வந்த முக்கியமான வேலையை பார்க்க சென்றான் கெளதம்...
அப்படி அவன் என்ன வேலை செய்கிறான்.. யாருக்கும் தெரியாமல் செய்யும் அளவுக்கு அது என்ன வேலையாக இருக்கும்.. ஆவலுடன் நானும்...


உயிர் எடுப்பாள்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
உன் உயிர் தா...!! நாம வாழ...!!!
எபி 4 போட்டுட்டேன் படிச்சு சொல்லுங்க...
கோட்டைதாயின் எண்ணம் ஈடேறுமா??
படிச்சு தெரிஞ்சுக்கோங்க....
எனக்கும் சொல்லுங்க.. :)
 




Madhini jayakumar

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
46
Reaction score
79
Location
Chennai
Update so nice hani ma:love::love: sathriyavin saabam theeratha.... thikriyin kaathal kathai romba menmaiya irunthuchi ma. ..indraya epi gowthamuku kidaiyatha :) kowshikin marmathai therinchika waiting ma:cool:
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Ssssaappaaa palivangum padalam
Ana ipadi sondatulaye kothu vidranga
Satriya va ooruku varavaipangala kotaithai
Ana gowtham iranduviduvadu pola solirukeenga
Gowtham tan Kotaithai ayudam.
Ana avan ivanga ninaipuku edirana seyalkalai seidukondrukane(pengalai kapatruvadu)
Idanal randuperukum potti erpadum polave
Than appavai pol kenjuvana ila edirpana
Edunalum very interesting dear
Waiting aavaludan
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
akiyoda grandson athiv, his son than thikariya sis.gowtham than kotiammavin ayuthama:unsure::unsure:Fb nice sis(y)(y)(y)
thank you sis..gowtham than kottai aayutham..aanal avan avalai ena seiya pokiran entru theriyavilai.... wait pannuvom... :)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top