• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un Uyir Thaa..! Naam Vazha..! - Episode 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
கையை மெதுவாக உருவ பார்த்தாள்.. ஆனால் அவளால் முடியவில்லை.. அவனின் பிடி இரும்பு பிடியாக இருந்தது...

அவளை பார்த்து ரியா என்ன இந்த நேரம் மாடிக்கு வந்திருக்குற.. உங்க அப்பா பாடிகாட்ஸ் வந்த பிரச்சனையாகிரும் போ உன் ரூம்க்கு நாம நாளைக்கு கோவில்ல பாத்துக்கலாம் என்றுக் கூறினான்.... அவன்கூறுவதை கேட்டஅவளுக்கும் கொஞ்சம் உதறலாக தான் இருந்தது.. இப்படி பேசுற விஷயம் மட்டும் அவள் அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் இவர் உயிருடன் வெளியில் போக முடியாது.. என்று மனதில் கொஞ்சம் பயத்துடனே நினைத்து அவனை இழுத்துக் கொண்டு அருகில் உள்ள ரூம்க்கு சென்று கதவை அடைத்து விட்டாள்...

அவள் அவனை அப்படி இழுத்துக் கொண்டு வரவும் அவனுக்கு பெரும் மகிழ்ச்சி.. பின்ன மகிழ்ச்சி இருக்காத என்ன இத்தனை நாட்கள் அவளை தூரத்தில், இருந்து பார்த்தும் யாருக்கும் தெரியாமல் ஒரு சில வார்த்தைகள் பேசியும் இப்படி உரிமையாக கை பிடித்தல் என்கிற விஷயம் நடக்கவே இல்ல.. இதில் தானாக அவனின் ரியா வந்து கைபிடித்து இழுத்து ரூம் வந்து கதவை பூட்டினால் அவனுக்கு எப்படி இருக்கும் மனதில் கற்பனைகள் தறிக் கெட்டு ஓடியது.. கண்களில் மயக்கத்துடன் அவளை காதல் பார்வைப் பார்த்தான் அவன்....

அவன் பார்வையில் மயங்கிய சத்ரியா.. பின்கண்களில் பயத்தை தேக்கி அவனை நோக்கி கிரி நீ....நீங்க இல்ல நாம நினைக்குறது நடக்குறது கஷ்டம். எங்க அப்பா பத்தியும், எங்க ஊர் பத்தியும் உங்களுக்கு சரியா தெரியல.. ரொம்ப மோசமானவங்க.. போன மாசம் இப்படி தான் ஒரு பொண்ணு வேற ஊர் பையனை லவ் பண்ணி யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்துக் கொண்டு சென்று விட்டாள்.. ஆனால் அவளை உடனே தேடி ரெண்டு பேரையும் கொன்னுட்டாங்க...

நம்மளையும் அப்படி பிரிச்சுருவாங்க.. நீங்க கிளம்பி ஊருக்கு போங்க.. விதி படி நடக்கும், நடக்குறது நடக்கட்டுஎன்று கூறி அவன் முகத்தைப் பார்த்தாள் அவள்...
அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தான் அவன்... பின்ன இது எல்லாம் தெரிந்து தான் அவன் இங்கு வந்து அவளை காதலித்ததே மறுபடியும் அவனைப் பார்த்து இப்படி கூறினால் அவனுக்கு சிரிப்பு வராமல் என்ன செய்யும்.. அவனின் சிரிப்பை புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள்..


அவள் அருகில் வந்து அவன் இங்கு வந்த கதையைக் கூறினான்... பின் அவளை பார்த்து அவள் கண்களைப் பார்த்து என்னை கல்யாணம் பண்ணிகிறியா ரியா என்றுக் கேட்டான் திகிரி.... அவன் இப்படி நேரடியாக கேட்பான் என்று அவள் நினைக்கவில்லை... அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை... ஆனாலும் அவனை பிடித்து தான் இருந்தது.. அவனின் பேச்சு, அவனின் கம்பீரம் இப்படி எல்லாமே அவன் பால் அவளை ஈர்த்தது....

அவனுக்கு எப்படி பதில் கூறுவது என்று அவளுக்கு தெரியவில்லை... அவன் அருகில் மிக மிக அருகில் வந்து அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு தன் பதிலை மறைமுகமாக கூறினாள்.... அவளின் இச்செயலில் அவனுக்கு சந்தோசம் பிடிபடவில்லை... பதிலுக்கு அவளை மெதுவாக அனைத்துக் கொண்டான்...

அவனுக்கு நிம்மதி அவள் உயிரை காப்பாற்றி விட்டோம் என்று... பின் நேரம் ஆவதை உணர்ந்து மெதுவாக அவனிடம் இருந்து அவளை பிரித்து நீ போ ரியா நாளைக்கு பார்க்கலாம் என்றுக் கூறினான்... எல்லாத்தையும் நான் பாத்துகிறேன் நீ கவலை படாத என்று கூறினான்.. அவன் அப்படி கூறவும் கண்களில் பயத்தை தேக்கி அவனைப் பார்த்தாள் அவள்... அவளின் பார்வையை கண்ட அவன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.. அவனின் அணைப்பு அவளுக்கு ஒரு தைரியத்தையே கொடுத்தது... மெதுவாக நெற்றியில் அவனின் முத்திரையை பதித்து அவளை அழைத்துக் கொண்டு அவள் ரூம் விட்டு வந்தான் திகிரி...

அதன் பிறகு அவன் நாட்கள் வண்ணமயமாக சென்றது.... திருமண நாள் நெருங்க நெருங்க சத்ரியாவுக்கு பெரும் பயமே.. அவளின்அப்பா ஊரையே அடைத்து பந்தல் போட்டிருந்தார்... அவன் கூறியது போல் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு அவன் அழைத்துக் கொண்டு மும்பை சென்று விட்டான்...

அங்கு சென்று இன்றும் இதே காதலுடன் வாழ்கிறான்...திகிரிக்கு சத்ரியா என்றால் உயிர்.. அவளிடம் கூறி இருக்கிறான் அந்த ஊரை நீ மறந்து விடு.என்று அவளுக்கு எல்லாம் கூறினான்.. அந்த காதலுக்கு அடையாளமாக தான் இரண்டு மகன்கள்.. மூத்தவன் கௌசிக் சியோரா,இரண்டாமவன் தான்கெளதம் சியோரா....

சியோரா யோசித்து முடிக்கவும் வீட்டுக்கு செல்லும் நேரம் வரவும் சரியாக இருந்தது... கௌதமிடம் வந்து அவனை அழைத்தார் ஆனால் அவன் சிறிது வேலை இருபதாய்க் கூறி அவரை அனுப்பினான்.. அவர் என்ன வேலை இருந்தாலும் சரியாக 6மணிக்கு வீட்டுக்கு கிளம்பி விடுவார்...

அவர் வீட்டுக்கு கிளம்பவும் யாருக்கும் தெரியாமல் தொடங்கிய ஆபிஸ்க்கு வந்த முக்கியமான வேலையை பார்க்க சென்றான் கெளதம்...
அப்படி அவன் என்ன வேலை செய்கிறான்.. யாருக்கும் தெரியாமல் செய்யும் அளவுக்கு அது என்ன வேலையாக இருக்கும்.. ஆவலுடன் நானும்...


உயிர் எடுப்பாள்..
1st 4 ud text therila sis so knjam confusing bt intersting
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top