• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Un vizhiyil veezhnthenada-13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அழுது கொண்டே நிமிர்ந்த வெண்பா முன்னால் நின்றனர் அவளது குட்டி நண்பர்கள்.

அழுது கொண்டிருந்த வெண்பாவின் கண்களைத் துடைத்து விட்ட அருண் "ஏன் வெண்பா அழுவுற? மிஸ் அடிச்சாங்களா?" என கேட்க இல்லையென தலையசைத்தாள் வெண்பா.


"அப்போ மஞ்சு ஆன்டி திட்டுனாங்களா?" என அம்மு கேட்கவும் அதற்கும் இல்லையென தலையாட்டினாள் வெண்பா.


"அப்போ ஏன் அழுவுற? நாங்க எல்லாரும் உன் கூட விளையாட வரலனு அழுவுறியா? உன் பேஸ், ஐஸ் எல்லாம் ரெட்டிஸா இருக்கு பாரு. நல்லாவே இல்ல" என்று விட்டு அபினவ் தன் கரங்களால் அவள் கன்னங்களைத் துடைத்து விட தன்னை சூழ நின்ற குழந்தைகளை அணைத்துக் கொண்டாள் வெண்பா.


சிறிது நேரத்தின் பின் அவர்களை அணைப்பிலிருந்து விடுவித்தவள் "ஸ்கூட்டில வரும் போது கண்ல தூசி விழுந்துடுச்சுடா குட்டீஸ். அதனால்தான் கண்லாம் ரெட்டிஸா இருக்கு. நான் அழலடா" என்று குழந்தைகளைப் பார்த்து சிரித்தாள் வெண்பா.


"ஹய்யா.....வெண்பா ஸ்மைல் பண்ணிட்டா" என குழந்தைகள் ஆரவாரமிட "ஸ்ஸ்ஸ்....சத்தம் போடக்கூடாது. மத்தவங்களுக்கு டிஸ்டர்பா இருக்கும்லே" என்று குழந்தைகளை அமைதிப்படுத்தினாள் வெண்பா.


"நான் போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன். சரியா?" என்று குழந்தைகளிடம் கூறி விட்டு சென்றவள் குளிர்ந்த நீரினால் முகத்தை அடித்துக் கழுவினாள்.


சற்று உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி ஏற்பட்டது போல் இருந்தது.


குழந்தைகளோடு சிறிது நேரம் பேசி, விளையாடி விட்டு நேரத்தை பார்த்தால் மணி ஆறை நெருங்கி கொண்டிருந்தது.


"ஓகே பிரண்ட்ஸ் இன்னைக்கு இவ்வளவு போதும். சரியா? அகைன் இன்னொரு டே விளையாடலாம். இப்போ டைம் ஆச்சு. எல்லாரும் வீட்டுக்கு போங்க. அம்மா தேடுவாங்கலே. போய் ரெஸ்ட் எடுங்க. ஓகே வா?" என்று குழந்தைகளிடம் கூறி விட்டு வீட்டை நோக்கி சென்றாள் வெண்பா.


ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்த வெண்பா மஞ்சுளாவுடன் பேசிக் கொண்டிருந்த இளமதியைப் பார்த்ததும் ஓடிச்சென்று அவளை கட்டிக் கொண்டாள்.


"ஏன் மதி இவ்வளவு நாளா எங்களை எல்லாம் பார்க்க வரல? அவ்வளவு பிஸியாகிட்டியா? அத்தான் உன்ன தனியா எப்படி விட்டாரு? கம் மாதிரி உன் கூட ஒட்டிட்டு தானே திரிவாரு" என்று கேலி பண்ணிய வெண்பாவின் தோளில் செல்லமாக தட்டினாள் இளமதி.


"போடி போக்கிரி. உன் வாய் இருக்கே அத எங்களால எல்லாம் சமாளிக்க முடியாது. உன்ன விட மேலா ஒருத்தன் வந்துதான் உன் வாய அடக்குவான். அப்போ நீ நல்லா மாட்டிக்கிட்டு முழிப்பேலே. அன்னைக்கு உன்ன கவனிச்சுக்குறன்" என இளமதி கூற வெண்பா ஒரு கணம் ஆதித்யாவை நினைத்துப் பார்த்தாள்.


"சேச்சே இனி அவனப் பத்தி யோசிக்கவே கூடாது. எப்படிலாம் பேசிட்டான்" என தனக்குள்ளேயே எண்ணிக் கொண்ட வெண்பா


"அது நடக்கும் போது பார்த்துக்கலாம் மதி. பிளவர் எங்க?" என கேட்கவும் "பிளவரா?" எனக் கேட்ட மஞ்சுளாவைப் பார்த்து சிரித்த வெண்பா


"பிளவர் னா பூ. அப்படினா பூங்குழலி" எனக் கூறியவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார் மஞ்சுளா.


"எவ்வளவு அழகான தமிழ் பேரு. அதப் போய் இப்படி பண்றியே" என மஞ்சுளா கூறவும் "நிக் நேம் தான் மஞ்சு இப்போ பெஷன்" எனக் கூறி சிரித்தாள் வெண்பா.


இளமதியோடு பேசிக் கொண்டும் பூங்குழலியோடு விளையாடிக் கொண்டும் இருந்த வெண்பா அந்த கணம் அவள் கவலை, மனக்குழப்பம் எல்லாவற்றையும் மறந்திருந்தாள். அது எல்லாம் ஒரு சில மணி நேரங்கள் தான் நீடித்தது.


இளமதி, பூங்குழலி சென்ற பின் வெண்பாவின் மனதை வெறுமை சூழ்ந்து கொண்டது. மனதின் ஆழத்திற்கு சென்றிருந்த அவளது கவலைகள் மீண்டும் மேலெழுந்து வந்து அவள் மனதை ரணப்படுத்தியது.


இரவுணவு கூட சாப்பிட பிடிக்காமல் அறைக்குள் வந்து நுழைந்தவள் அறைக் கதவை சாத்தி விட்டு அதன் மேலே சாய்ந்து நின்று அழத் தொடங்கினாள்.


கைப்பைக்குள் இருந்த பரிசை எடுத்து தூக்கி தூர வீசி எறிய நினைத்தவள் ஏனோ மனம் கேட்காது அதைக் கொண்டு சென்று அலமாரியில் வைத்தாள்.


கண்ணீர் மட்டும் நிற்காது அருவி போல வந்து கொண்டே இருந்தது. மேஜை மேல் இருந்த டைரியை எடுத்தவள் இன்று நடந்த நிகழ்வுகளை அனைத்தையும் ஒன்று விடாது எழுதியவள் தன் மனக்குமுறலை எல்லாம் டைரியிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்.


அழுது அழுது டைரி எழுதி கொண்டிருந்த வெண்பா அவளையறிமால் உறங்கிப் போனாள்.
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
காலை சூரிய கதிர் முகத்தில் படவும் கண் விழித்து பார்த்த வெண்பா இருந்த நிலையில் உறங்கி இருந்ததை அப்போது தான் கவனித்தாள்.


இரவு முழுவதும் அழுது கொண்டிருந்ததால் என்னவோ தலை பாரமாக இருந்தது வெண்பாவிற்கு.


இந்த நிலையில் காலேஜ் செல்ல முடியாது என்பதால் மஞ்சுளாவிடம் தலைவலி அதனால் காலேஜ் செல்லவில்லை எனக் கூறி விட்டு சிறிது நேரம் தூங்க முயன்றாள் வெண்பா.



ஆனால் தூக்கம் வரமாட்டேன் என அடம்பிடிக்க வேறு வழியின்றி குளித்து விட்டு ஹாலுக்கு சென்று டிவி பார்க்கலாம் என அமர்ந்தாள் வெண்பா.


"தலைவலியோட டிவி பார்க்க போறியா?" என மஞ்சுளா கேட்கவும் "குளிச்சதும் தலைவலி கொஞ்சம் குறைஞ்சிருச்சும்மா. ஒரு பிளேட் ல டிபன் எடுத்துட்டு வாம்மா. செம்ம பசி" என்று விட்டு மறுபடியும் டிவி பார்ப்பதில் மூழ்கினாள் வெண்பா.


வெட்டியாக இருந்தால் ஆதித்யாவின் நினைவுகள் வரும் என்பதனால் தன் மனதை திசை திருப்ப அரும்பாடுபட்டாள் வெண்பா.


டிவி பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் கவனம் அங்கு செல்லவில்லை.


ஆதித்யாவிற்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் என்று கூறியதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேறு ஒருவரோடு அவனை இணைத்து பார்க்க அவளால் முடியாது.


இந்த யோசனையோடு உழன்று கொண்டிருந்தவள் யோசனையைக் கலைப்பது போல அழைத்தது வெண்பாவின் அலைபேசி.


எடுத்து பார்த்தவள் மித்ராவிடம் இருந்து அழைப்பு வரவும் அப்போதுதான் இன்று காலேஜ் வர முடியாது என்று அவளிடம் கூற மறந்ததை எண்ணி கவலையுடன் போனை அட்டன்ட் செய்தாள் வெண்பா.


"ஸாரி மித்து! ரியலி ஸாரி டி. காலையில இருந்து செம தலைவலி. நான் போனை பார்க்கவே இல்ல. இப்போ கால் வரவும் தான் போனை பார்த்தன். ரியலி ஸாரி டி. அதுதான் இன்னைக்கு காலேஜ் வர முடியாதுனு சொல்ல முடியாம போச்சு ஸாரி டி" என வெண்பா கெஞ்சலாக கூறவும்


"உண்மையாவே தலைவலி தானா? இல்ல வேற எதுவும் ரீசனா?" என மித்ரா சந்தேகமாக கேட்க சிறிது தடுமாறிதான் போனாள் வெண்பா.


தன் பதட்டத்தை காட்டிக் கொள்ளதவாறு "ஹேய் உண்மையாவே தலைவலி தான்டி. வேற எந்த ரீசனும் இல்லடி" என வெண்பா கூறவும் "ஓஹ்........" என்று இழுத்தாள் மித்ரா.


"ஏன்டீ இப்படி சந்தேகமாகவே கேட்குற?" என வெண்பா வினவவும் "இல்ல ஸ்வேதா இன்னைக்கு ஒரு விஷயம் சொன்னா அதான்" என்று மித்ரா கூறவும் ஒரு கணம் வெண்பா அதிர்ந்தாள்.


"நேற்று ரெஸ்ட்டாரண்ட்ல நடந்தத ஆதித்யா ஒரு வேளை கவி அண்ணாகிட்ட சொல்லி அவரு ஸ்வேதாகிட்ட சொல்லிருப்பாரோ?" என யோசித்த வெண்பா "சேச்சே அப்படி எல்லாம் இருக்காது" என மனதினுள் எண்ணிக் கொண்டாள் வெண்பா.


"என்ன சொன்னா ஸ்வேதா? என தயங்கியவாறே மித்ராவிடம் கேட்டாள் வெண்பா.


"ஆதித்யாவிற்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தமாமே. ஒரு வேளை அந்த நியூஸ் உனக்கு தெரிஞ்சு அத நினைச்சு பீல் பண்ணி அதனால்தான் காலேஜ்க்கு லீவ் போட்டுட்டியோனு கேட்டேன்" என மித்ரா கேட்கவும் "சேச்சே அப்படி எதுவும் இல்லடி" என வெண்பா கூறினாலும் அவள் கண்கள் கலங்கவே செய்தது.



சிறிது நேரம் மித்ராவுடன் பேசி விட்டு போனை வைத்த வெண்பாவிற்கு மீண்டும் நேற்றைய நிகழ்வுகள் நினைவில் வந்து அவளை கொல்லாமல் கொன்றது.


தலையில் கையை வைத்து கொண்டு அமர்ந்திருந்த வெண்பா அருகில் வந்த மஞ்சுளா "என்னடாம்மா தலை ரொம்ப வலிக்குதா?" என அவள் தலையை வாஞ்சையுடன் தடவியவாறே கேட்க அவர் மடியில் சட்டென்று தலை வைத்து படுத்துக் கொண்டாள் வெண்பா.


"என்னடா? உடம்புக்கு எதுவும் முடியலயா? நேத்துல இருந்து முகமெல்லாம் வாடி போன மாதிரி இருக்கே" என மஞ்சுளா கேட்கவும் "அப்படி எதுவும் இல்லையேம்மா" என கூறி விட்டு கண்களை மூடிக் கொண்டாள் வெண்பா.


"ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே" என மஞ்சுளா கூறவும் "என்னம்மா?" என கேட்டாள் வெண்பா.


"நம்ம ஸ்வேதாக்கு நிச்சயம் பண்ணுன பையனோட தம்பிக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தமாம். அவங்க அம்மா காலையில போன் பண்ணி இருந்தாங்க" என மஞ்சுளா கூறவும் "அவங்கள எப்படி உங்களுக்கு தெரியும்? அவங்க ஏன் உங்ககிட்ட திடீர்னு போன் பண்ணி சொல்லனும்?" என குழப்பமாக கேட்டாள் வெண்பா.


"நான் அவங்க அம்மா கலையரசியை அடிக்கடி கோவில்ல சந்திச்சுருக்கன். ஸ்வேதா வீட்டில வைச்சு பார்த்த அப்புறம் நல்ல பழக்கமாகிட்டாங்க" என மஞ்சுளா கூறவும் எதுவும் பேசாமல் எழுந்து அமர்ந்து கொண்டாள் வெண்பா.


"பொண்ணு அவங்க வீட்டுகாரரோட பிரண்டோட மகளாம். ஐடி கம்பெனில வேலை பார்க்குறாளாம். ரொம்ப நல்ல பொண்ணாம். அவ்வளவு அமைதியான பொண்ணாம்.." என மஞ்சுளா கூறிக்கொண்டே போக


"போதும் நிறுத்துமா. இப்போ எதுக்கு அந்த பொண்ணப் பத்தி இப்படி புகழாரம் பாடுற? அவங்க போன் பண்ணி சொன்னா அத ஏன் என்கிட்ட சொல்ற?" எனக் கோபமாக கூறினாள் வெண்பா.


"இப்போ எதுக்கு இவ்வளவு கோபப்படுற உனக்கும் தெரிஞ்சவங்க தானேனு சொன்னா இப்படி பத்ரகாளியாட்டம் முறைக்குற?" என மஞ்சுளா கேட்கவும் "போமா போய் லஞ்ச் ரெடி பண்ணு. வெட்டியா பேசிட்டு இருக்காம" என கூறினாள் வெண்பா.


"என்னாச்சு இவளுக்கு? இவ்வளவு நேரம் நல்லா பேசிட்டு இருந்தா. இப்போ இப்படி கத்துறா. இந்த காலத்துப் பிள்ளைகள எல்லாம் புரிஞ்சுக்கவே முடியல" எனத் தனக்குள்ளே புலம்பியவாறே தன் வேலைகளை கவனிக்கச் சென்றார் மஞ்சுளா.



ஏற்கனவே மித்ராவுடன் பேசி விட்டு வேதனையில் உழன்று கொண்டிருந்த வெண்பா மஞ்சுளா ஆதித்யாவின் நிச்சயதார்த்தம் பற்றி கூறவும் மொத்தமாக உடைந்து போனாள்.


கஷ்டப்பட்டு கலங்கிய கண்களை மறைத்து கொண்டவள் மஞ்சுளா அந்த பெண்ணைப் பற்றி மேலும் புகழ்ந்து கூறிக்கொண்டே போக கோபத்தின் உச்சிக்கு சென்றாள் வெண்பா.


ஆதித்யாவை இனி சந்திக்க கூடாது என மனதில் முடிவெடுத்தாலும் அவனை வேறு ஒரு பெண்ணுடன் கற்பனையில் கூட அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.


இப்படியே மனக்குழப்பத்திலும், வேதனையிலும் தன் வாழ்க்கை முடிந்து விடுமோ எனப் பயம் கொண்டாள் வெண்பா.


ஆதித்யாவைத் தவிர வேறு எவருக்கும் அவள் வாழ்வில் இனி இடம் கிடையாது என்ற முடிவில் வெண்பா உறுதியாக இருந்தாள்.


இனி தன் படிப்பில் மாத்திரம் கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் தன் வாழ்வின் ஒரே குறிக்கோள் சிறந்த வழக்கறிஞராக வர வேண்டும் என உறுதி கொண்டவள் இனி ஆதித்யாவைப் பற்றி நினைக்கவே கூடாது என முடிவெடுத்தாள்.


ஆனால் விதியோ அவளைப் பார்த்து உன்னை அவ்வளவு எளிதில் விட்டு விட மாட்டேன் என சிரித்துக் கொண்டது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
விடு, வெண்பா
ஆதி கொடுத்து வைச்சது
அவ்வளவுதான் போல
உன்னோட அருமை
அவனுக்கு தெரியலே,
வெண்பா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top