• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unakkaaga oru vaanam1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaa sha

மண்டலாதிபதி
Joined
Jul 28, 2018
Messages
301
Reaction score
1,103
Location
Karaikudi
தமிழ் எழுத்தாளர்களே தமிழ் எழுத்தாளர்களே !
நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் நீந்திவிடமாட்டேன்..
நீச்சல் தெரியாமல் செத்துவிடுவேன்!..
என் எழுத்துகளில் உங்கள் மனம் புண்பட்டால் மன்னித்துவிடுங்கள்...

அத்தியாயம் 1

அகிலாவின் வாழ்வில் இனி சந்தோக்ஷம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நாமும் விடைபெறுவோமாக ...என்ற வரிகளோடு அவள் ஆழ்ந்துபடித்துக்கொண்டிருந்த நாவல் உலகிலிருந்து வெளி வந்தாள் பாரதி...

"டீ பாரதி" என்ற அக்கா ஹரிணியின் அழைப்பு செவிகளை அடைய அறையிலிருந்து வெளி வருகிறாள்...எத்தனை தடவ கூப்பிடகிறேன்.. வைசு இன்னும் தூங்கல ... மாமா வேற கால் பண்றார்..நீ அவள கொஞ்சம் தூங்க வக்கிறயா ப்ளீஸ் டா..

என்னக்கா, இதுக்குபோய் ப்ளீஸ் போடுற.. நீ வாடா வைசு குட்டி...நம்ம ரூம்ல போய் கதைச்சுட்டே தூங்கலாம்..
"பாரு,எனக்கு மாமா சொல்லும் டிக்கி டிக்கி கதை சொல்றியா" என்றாள் பாரதியின் அருமை அக்கா மகள் வைசு ...

எத்தன தடவடி அதையே கேட்பாய் என பல்லை கடித்தாள் பாரதி ...
"வைசு டாலி "என அழைத்தபடி வந்தான் ஹரிஸ்..பாரதிக்கு 2 வருடம் பெரியவனும் ஹரிணிக்கு 3 வருடம் சிரியவனுமாவான ஹரிஸ் ..

ஹரிஸ் நல்ல நேரம் வந்த, இவள்ட இருந்து என்னை காப்பாத்துடா ...நீ பாட்டுக்கு இவள்ட டிக்கி கதைய சொல்லிட்டு போயிட்ட...இப்ப என்ன படுத்தி எடுக்கரா ...
"கதை தான சொல்றேன் அதுக்கு முன்ன மை ஸ்வீட் லிட்டில்க்கு கேட்பெரீஸ்"..சூப்பர் மாமா தாங்க்ஸ் மாமா-வைசு.."பாரு இனி நீ கதை சொல்ல வேணாம் போ" ...அக்கா உன் பொண்ணு சாக்லேட் சாப்புடுறா வந்து என்னனு கேளு..என கத்திக்கொண்டே அறையை விட்டு வெளியேறினாள் பாரதி..

பின்னோடு ஹரிஸும் வைசுவும் சென்று பாரதியை பிடித்து ஹரிஸ் தன் கதையை ஆரம்பித்தான்..
பாரு உனக்கு ஞாபகம் இருக்கா ஹரிணிக்கா டிக்கி கதை சொன்னா நம்ம சிரிச்சிட்டே சண்டைய மறந்துடுவோம்..

மாமாஆ உன்னோட கொசுவத்தி சுருள நிப்பாட்டு..டெல் மீ த ஸ்டோரி -வைசு.. "ஹரிஸ் நீ கதைய ஆரம்பி இல்ல இவ ஸ்பீக்கர் ஆன் பண்ணிடுவா"-பாரதி..ஹரிஸ் தொண்டையை செறுமிக்கொண்டு சைனா போறான்.

"ஹரிஸ் போதும் உன்னொட சீனு"-பாரதி..ஸ்வாரஸ்யமா சொல்ல ட்ரை பண்ரேன் விட மாட்டியே...என கதைகுள் சென்றான் ஹரீஸ்..

முன்னாடிலாம் சைனால பெருசா தான் பேரு வப்பாங்கலாம்..அதுவும் 2 வயசுக்கு மேல தான் வப்பாங்கலாம்..அவ்ளோ பெரிய பேர்னா அப்ப யோசிக்கனும்ல அதான் 2 வருசம் போல ..என்று இடை இட்டாள் பாரதி ..

"பாரதி க்ராஸ் பண்ணா கதை சொல்ல மாட்டேன் வைசு" ..பாரு உனக்கு தான் ரைம்ஸே ஒழுங்கா சொல்ல வராது என வம்பு செய்தாள் வைசு.

அந்த டைம்ல அங்க ஒரு வீட்ல ரெண்டு பசங்க இருந்தாங்கலாம். அண்ணனும் தம்பியும் ஆப்பிள் பறிக்க தோட்டத்துக்கு போறாங்க.. பெரியவனுக்கு பேர் வச்சிட்டாங்க தம்பிக்கு இன்னும் பேர் வக்கல..

கிணத்துக்கு பக்கத்துல ஆப்பிள் மரம்...பறிக்கும் போது ஆப்பிள் தவறி அத புடிக்க போயி பெரியவன் கிணத்துல விழுந்திடுறான்...அச்சச்சோ !என்றாள் வைசு.."புதுசா கேக்கிற மாதிறியே சீனப் போடுறாளே"..என பாரதி அங்கலாத்தாள்..
உடனே சின்னவன் அய்யய்யோ ! எங்கண்ணன்- டிக்கி டிக்கி, டிம்போ ரோஸி,நிம்போ ஹாய், ஹாய் புஸ்கி,புஸ்கி பான்,பாய் போண்டா,நோ மெ டாம் பாய்...(விஜய் ஒரு படத்துல டெலி போன் நம்பர் சொல்ற மாறி இதை படிக்கவும்) கிணத்துல விழுந்திட்டான் அப்புடினு கத்தினானாம்..

இத கேட்டு தோட்டகாரன் ஓடிவந்து என்னது! சின்னய்யா ,"டிக்கி டிக்கி, டிம்போ ரோஸி,நிம்போ ஹாய், ஹாய் புஸ்கி,புஸ்கி பான்,பாய் போண்டா,நோ மெ டாம் பாய்..கிணத்துல விழுந்துட்டாரானு "கேட்டுட்டு வீட்ல சொல்ல ஓடினானாம்...

"அம்மா மா..சின்னயா டிக்கி டிக்கி, டிம்போ ரோஸி,நிம்போ ஹாய், ஹாய் புஸ்கி,புஸ்கி பான்,பாய் போண்டா,நோ மெ டாம் பாய்..கிணத்துல விழுந்திட்டாருமா" என்றானாம்..
அந்தம்மா, "என்னது ,என் பையன் டிக்கி டிக்கி, டிம்போ ரோஸி,நிம்போ ஹாய், ஹாய் புஸ்கி,புஸ்கி பான்,பாய் போண்டா,நோ மெ டாம் பாய்..கிணத்துல விழுந்த்திட்டானா"..இந்தம்மா இன்ஸ்டண்ட்டா மயக்கம் கம்மிங்...

சமயல் காரனிடம் போய்," கயிறு கொண்டு வா, நம்ம சின்னய்யா- டிக்கி டிக்கி, டிம்போ ரோஸி,நிம்போ ஹாய், ஹாய் புஸ்கி,புஸ்கி பான்,பாய் போண்டா,நோ மெ டாம் பாய்"..கிணத்துல விழுந்திட்டாருனு சொல்ல...அந்த சமயல்காரன்" என்ன நம்ம சின்னய்யா, டிக்கி டிக்கி, டிம்போ ரோஸி,நிம்போ ஹாய், ஹாய் புஸ்கி,புஸ்கி பான்,பாய் போண்டா,நோ மெ டாம் பாய்".. கிணத்துல விழுந்திட்டாரானு..ஓடிப்போயி கயிறோட வந்தானாம்..

இப்டி எல்லாரும் விரைந்து வந்து காப்பாத்துரதுக்குள்ள பையன் போயே போய்டானாம்..அதோட அங்க யாரும் இவளோ நீளத்துக்கு பேரு வக்கிறதில்லைனு தான் சைங், யங், மங்னு பேரு வக்கிறாங்கலாம்..என கதையை முடித்தான் ஹரீஸ்..
சிரிச்சு சிரிச்சு ஓய்ந்து போனாலும் வைசு திருப்பியும் அடுத்த ரவுண்ட் கிளம்பிட்டா..இப்படியே விட்டா இன்னக்கி தூக்கம் போய்டும்னு ஹரீஸை வெளியே அனுப்பி வைசுவை தூங்க வைத்தாள் பாரதி..இந்த கதை வைசுக்காக மட்டும் சொல்லவில்லை பாரதி சிரிக்க வச்சு பாக்க எப்பவும் ஹரீஸ்கு பிடித்தமே..இதை பாரதியும் அறியும் ஒன்று..ஹரீஸ் மேல பாரதி வச்சிருக்கும் அன்பும் மேலானதே..

ஹரிணி,பாரதி,ஹரீஸ் அன்பான உடன்பிறப்புகள் ..கமலம்,ராஜன் தம்பதியர்களின் பிள்ளை செல்வங்களாவர்.இவர்கள் சொந்த ஊர் மதுரை அருகே ஓடப்பட்டி எனும் கிராமம்..படிப்பு மற்றும் வேலை காரணமாக மதுரையில் குடிபெயர்ந்தது.
ஹரிணி தன் சொந்த அத்தை மகனை திருமணம் செய்து சென்னையில் வசித்து வருகிறாள். ஹரிணியின் கணவர் ராஜேஸ் வேலை காரணமா வெளிநாடு சென்றுவிட, ஹாஸ்டல்ல படித்து வந்த ஹரீஸ் 2 வருடமா அக்கா வீட்டில் தங்கி படிப்பை தொடர்கிறான்..

பாரதி கூர் நாசி, நேர் பார்வை,பேசும் கண்கள் இப்டியெல்லாம் பெருசா வர்ணிப்பு குடுக்கலனாலும் அவள் அழகியே.கண்ணுக்கு உறுத்தாத முக அழகும், கண்கள் கண்டறியா அக அழகும் கொண்ட பேரழகியவள்.

அவள் கல்வித்தகுதி 12 தேர்ச்சி அவ்வளவே.. பள்ளிப்படிப்பை முடித்தவுடன், அவள் குறையை சொல்லி திருமண ஏற்பாடு அவசர கதில நடந்து ,நின்னும் போச்சு..ஆம் பாரதிக்கு ஒரு கண் பார்வை மட்டுமே.. அவளோட 2 வயதில் இடது கண்ல வந்த பருவினால்..அம்மைனு வீட்ல வச்சு மருத்துவம் பாக்காம விட்டு பலன் ஒரு கண் பார்வையே இழந்துவிட்டாள்.
கமலம் பிறந்த ஊரிலிருந்து உறவு முறையில் பெண் கேட்பதாக கமலத்தோட அக்கா சகுந்தலா சொல்லி வைக்க.. பெண்ணின் குறையை மனதில் கொண்டு, தெரிந்து வருகிறார்கள் என நிச்சயம் வரை செய்தாகி விட்டது.

சகுந்தலாவின் கணவர் விநாயகம் முன்னின்று செய்வதால் மாப்பிள்ளை வீட்டில் அனைத்தும் அவர்களே பேசிக்கொள்ள, பாரதியின் சிறுவயதில் ஒரு பார்வை இழந்த விசயம் தெரியாமலே போனது...இதற்கிடையே மாப்பிள்ளை ராகவனின் தங்கை ராதா போனில் பாரதி,ராகவனை பேச வைதிட, அங்கே தொடங்கியது பிரச்சனை..

ராகவன் MCA முடித்து சென்னையில் RK.SOLUTIONS என்னும் தொழில் நிறுவனம் நடத்தி வர, ராகவனின் படிப்பு ,தொழில் இதனை கொண்டு பாரதி குடும்பத்தில் அனைவரும் திருப்தி அடைய திருமண ஏற்பாடு நல்ல முறையில் நடந்து கொண்டிருக்க...பாரதி ராகவன் பேச்சுப்பரிமாற்றங்களில், பாரதி அறிந்த வரை ராகவன் தன்னிடம் ஏதோ குறை காண்பதாகவே பட, ஹரிணியிடம் அதனை தெரிவிக்க...

ஹரிணி ராகவனிடம் பேசிட, அங்கே பல திசைல பேச்சு போயி கடைசியில் பாரதியின் இடது கண் பார்வை போன கதையும் வர ராகவன் இது என்ன புது கதைனு கேட்டுவிட..இப்படி பலவாறு பேசி நிச்சயம் செய்த திருமணம் நின்று விட்டது. ஹரிணி ராகவனிடம் பேசியதை கொண்டு திருமணம் நின்றதில் பாரதி தப்பித்ததாகவே உணர்ந்தால்...
ராகவனுக்கு கல்யாணம் குறித்து விருப்பம் பெருசா இல்லைனும், எங்க அம்மாகாக தான் பண்ணிக்கிறேன் என்றிட..அதிலும் உங்க தங்கைக்கு ஏதோ கண்ல சின்ன அறுவை சிகிச்சைனு தான் சகுந்தலா அத்தை சொன்னாங்க இப்டினா எனக்கு என்ன சொல்றதுனே தெரியல என்றிட..

ஹரிணி "முடிவா என்ன சொல்றிங்க அத்தான் .". என கேட்டுவிட அங்கே அவன் தன் விருப்பமின்மை தெரிவிக்க... "எதுவா இருந்தாலும் நீங்களே உங்க வீட்ல சொல்லிடுங்க சார்னு" சொல்லி போனை கட் பண்ணிவிட்டாள் ...அத்தோடு பேச்சு முடிந்ததுனு.. அன்றிலிருந்து பாரதிக்கு அவளும் ஒரு தாயாகிவிட்டாள்..வீட்ல உறவுகள் கோபம் முழுதும் ஹரிணி மேல தான்..

அதை பற்றி ஹரிணி ஒன்றும் பெரிதாகவே கொள்ளவில்லை..அவள் கவலை எல்லாம் பாரதிக்கு இடது பார்வை இழந்த காலத்தையே அசைபோட்டது..சுற்றத்தாரின் பேச்சை கேட்டு வீட்டினர் அலட்சியம் அதனாலே அவளுக்கு குறை ஏற்பட்டதாகவே அவள் வருத்தம் கொண்டால்...
அன்று முதல் பாரதியை சென்னை அழைத்து மருத்துவ முயற்சி எடுத்து கொண்டிருக்கிறாள்..அப்படி ஒரு சிகிச்சைக்கே பாரதி இப்போது சென்னை வருகை...
..

..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top