• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unakkaaga oru vanam 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaa sha

மண்டலாதிபதி
Joined
Jul 28, 2018
Messages
301
Reaction score
1,103
Location
Karaikudi
கதையோடு நான்...
கருத்து சொன்ன நீங்க...
நன்றி சொல்லும் நான்...
பெற்றுக்கொள்வது நீங்க...

நன்றியோ நன்றி பேபிகார்ன்ஸ்
( மக்காஸ் கு தான் பேபிகார்ன்s nu me கண்டுபுடிச்சிங் பா)
நல்லா இருந்தா சரி..நல்லா இல்லனானும் சரி ...அடுத்த எபில மாத்திவிடுவோம்...

மொக்க போதும் கதைக்கு போகலாம்...

அத்தியாயம் 2

ஹரிணிக்கு ஒரே தயக்கமாக இருந்தது பாரதியிடம் பேசுவதற்கு... அதை உணர்ந்து பாரதியே " என்ன விசயம் அம்மா போன் செய்தார்களா..இந்த சக்குமா மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்காங்களா .." என கேட்டே விட்டாள்...

இது இது எப்டி உனக்கு தெரியும் என ஹரிணி பார்க்க...

"நீ என் கிட்ட பேச தயங்குறனா ,அது பஜ்ஜி, சொச்சி மேட்டரா தான் இருக்கும் ...இது கூடவா எனக்கு தெரியாது..."

இந்த சக்குமா இருக்கே ..நா எப்ப இங்க வருவேன்னு காத்திட்டு இருப்பாங்க போல...

" அப்படி இல்ல பாரு , இது ரகுண்ணா ஃப்ரண்டோட தம்பியாம்.. தெரிஞ்ச பையன்னு சொன்னாங்க அதான் வர சொல்லிட்டேன் " என ஹரிணி சொல்ல...

" என்னது வர சொல்லிட்டியா " என பாரதி அதிர்வு காண்பிக்க...

ஹரிணி பேச்சை தொடர்ந்தால்.." சக்குமா நமக்கு நல்லது தான் எப்பவும் பார்ப்பாங்க ... அவங்களே எதிர்பாக்கல ராகவன் இப்டி செய்வார்னு...அதையே நினச்சு நீ அவங்கள தப்பா நினைக்காதடா.."

" எனக்கு அது புரியாம இல்ல க்கா ..அது நான் அப்டி யோசிக்கல தோல்வினு தெரிஞ்சும் திரும்ப திரும்ப ஏன் முயற்சி பண்ணனும்" என பாரதி சொல்லிவிட..

ஹரிணிக்கு முகம் வாடிவிட்டது... உடனே பாரு," சரி விடுக்கா வழக்கம் போல அவங்களே வேணாம்னு போயிடுவாங்க.. இதுல ஏன் பெரியவர்கள் வருத்தப்படுத்த ..." வா கிளம்புவோம் என..
இப்படியாக பேசி ஹரிணி தன் உடன்பிறப்புகளோடு சகுந்தாவின் வீடு சென்றிட , வீடே பரபரப்பு பெண் பார்க்கும் படலம் இனிதே துவங்கியது..

பையனோட அப்பா அம்மா என அலமேலு மற்றும் சுந்தரம் அறிமுகம் செய்துகொள்ள .. சகுந்தலா தன் தங்கை மற்றும் கணவர் மதுரையில் இருப்பதாக சொல்லி...அதை தொடர்ந்து பாரதி அழைத்து வந்தனர் ஹரிணியும் ரகுவின் மனைவி சுதாவும்...

பையனும் பொண்ணும் தனியா பேச விடுங்கப்பா என கூட்டத்தில் ஒரு பெருசு சொல்லிட...இதோ இப்ப இப்ப தான் பாரதி நிமிர்ந்து பார்க்கிறாள்..

பாக்க பிக்பாஸ் ஹரீஸ் கல்யாண் மாதிரி நல்லா தான்யா இருக்கான் .. What to do நமக்குதான் அவள் ஒரு தொடர்கதை சுஜாதா கல்யாண ராசியாச்சே...( இந்த ரண களத்துல இது தேவையானு கேட்காதிங்கப்பா .. அவளும் எவ்வளவு நாள் தான் ஸோகேஸ் பொம்மையா நிக்கிறது, அதான் மனசுக்குள்ள கவுண்டர் கண்ணாம்பாளாகிட்டா)

(ஹரீஸ் கல்யாண் மாதிரி ஒரு மாப்பிள்ளை யாருனு நினைச்சிங்க..நம்ம கதையோட ஹீரோ கௌதம் வாசுதேவன்.. எந்த வித முன்னறிவிப்பும் இல்லாம தொபுக்கடீர்னு கதைல குதிச்சிட்டான்..

பாருவ பொண்ணும் பாக்க வந்திட்டான்.. சரி அதுங்க ரெண்டும் என்ன பேசுதுங்கனு பார்ப்போம்)

பாரதிக்கு சிரிப்பதா இல்ல சீரியஸா முகத்த வச்சிக்கிறதான்னு குழப்பம் ஆகிடுச்சு ..because நம்ம வாசு பேசினது அப்படி...

எங்க அம்மாக்கு படிச்ச பொண்ணுங்க மேல நம்பிக்கை இல்ல , அதான் உங்கள பத்தி ரகு சொல்லவும் என் கிட்ட எதுவும் கேட்காம இங்க கூப்பிட்டு வந்திட்டாங்க...

But நா அப்டி திங்க் பண்ணல வரும் wife நல்லா படிச்சிருக்கனும் அப்படிதான் நான் ஃபீல் பண்றேன்...

"அதுக்கு உங்கள குறை சொல்லல , சொல்ல போனா நீங்க அழகா தான் இருக்கிங்க..இப்ப கூட நீங்க ஏன் படிக்காம போனிங்கனு தான் ஃபீல் பண்றேன்..

எனக்கு யாரையும் மனசு கஸ்டபடுத்த புடிக்காது இதுல நீங்க அழகா வேர இருக்கிங்க ..உங்கள போய் நா எப்டி புடிக்கலனு பொய் சொல்றது...அதுனால நீங்களே என்ன புடிக்கலனு சொல்லிடுங்க " என நீண்டு உரையாற்ற ..

பாரதி ..இது என்னடா நமக்கு வந்த சோதனை..நம்மள தான் எல்லாரும் வேணாம்னு ஓடுவாங்க...இங்க கதையே திரும்புது ..நானும் ஒரு ஆளுக்கு rejection card குடுக்கவா அதுவும் உன்ன போய்.. அட போங்கபா நீங்களும் உங்க கல்யாணமும் இப்படி ஓவரா திங்கிங்ல போயிட்டா...

இப்படியாக பேசி வெளியே வர அங்க வேற கலவரம் தொடங்கி ஓடிட்டிருந்தது .. (நம்ம eyesite பத்திதான் ஓடுதுனு பாரதி புரிஞ்சிக்கிட்டா ...நம்ம கௌபாய்க்கு ஒன்னும் புரியல..

வாசுவோட அம்மா அலமேலு nonstop ஸ்பீச்ல புடிச்சிட்டாங்க எப்டி மறைக்கலாம் இந்த விசயத்த அப்படினு...

உங்க பொண்ணுக்கு படிப்பு மட்டும் தான் குறைவுனு பாத்தா இதுவேரயா..

கௌதம் அம்மாவ புடிச்சு என்னனு விசாரிக்க கொட்டிட்டாங்க மொத்தமா.." அவங்க பொண்ணுக்கு ஒரு கண்ல பார்வையே இல்லையாம் ஏதோ பிளாஸ்டிக் போல கண் வச்சிருக்காங்களாம் அதுக்கு நாமளா கிடைச்சோம் ...

இத சொல்லாம மறைக்க பார்த்திருக்காங்க .. நானும் நம்ம ரகுவோட சித்தி பொண்ணுனு எதுவும் விசாரிக்காம வந்திட்டேன்...இப்பவும் இவங்க சொல்லல அந்த பையன் சொல்லனா தெரிஞ்சிருக்காது ..." என ஹரீஸை காண்பித்தார்.. ( சொல்ல சொன்னதே பாரதிதான்னு பாவம் அவங்களுக்கு தெரில)

இப்ப பாரதிய கௌதம் திரும்பி பார்க்க ..அவள் பார்வை ஆயிரம் சொன்னது ..இதில் எங்கே உயிரற்ற பார்வை..இப்படி ஒரு பிரச்சனைனு அவனுக்கு ஒரு மாதிரியா வருத்தமாகிடுச்சு..

இப்ப அவளிடம் எதுவும் சொல்ல இயலாத நிலை ..நான் முன்னே நினைத்தென்ன இப்போ என் மனதில் ஓடுவதென்ன ..இது எதுவும் இந்த சூழல்ல சொல்ல முடியாது..

அவள் அதையே தன்னை பரிதாபமாக உணர்ந்தால்..

ஆனால் இதுவர வந்த, எந்த வரனும் தன்னை அப்படி கூட பாக்கலனு அவள் நினைப்பதை அவனும் உணரல...

சகுந்தலா எவ்வளவு சமாதான படுத்தியும் அலமேலு தனியவில்லை.. கடைசியா எல்லாரும் எழுந்து கொள்ள அலமேலு " இப்படி குறையோட இருக்க பொண்ணுக்கு நீங்க 2ம் தாரத்துக்கு பாக்குற மாப்பிள்ளைதான் பார்க்கனும் "என்றுவிட..

அதுவரை பொறுமை பொறுமைனு இருந்த ஹரிணி பொங்கிட்டா..
" எங்க பொண்ணுக்கு எப்படிவேணா மாப்பிள்ளை நாங்க பார்த்திக்கிறோம் , உங்க பையனுக்கு ஒரு குறையும் இல்லாமயே பொண்ணு தேடிக்கங்க..

ஏன்னா மொத்த குறையும் உங்க மனசுலயே இருக்கு..." என்றுவிட... பதில் பேசாமா எல்லாரும் நிக்க, கிளம்பிவிட்டார் அலமேலு, இனி இங்க நிக்ககூடாதுனு மகனோடு...

( அவர்களோடு எழுந்து கொண்டார் சுந்தரம்..இவளோ நேரம் இவர் என்ன பண்ணாருனா கேட்குறிங்க, மிச்சர் யார் சாப்பிடுவது so no questions)

கௌதம் பார்வை பாரதியை தொட்டுச்சென்றது.. பாரதி எதிர்பார்த்தது தான் நடந்ததுனாலும் கொஞ்சம் நிமிர்ந்து பாக்க முடியல ...

இப்படியாக கலவரமா பொண்ணு பார்க்கும் படலம் நடந்தறியது...
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Gowtham and bharathi...seriyana jodi dhaan..alamelu va adakkanum ka..
Last la harini sonnadhu dhan crt...avanga manasula dhan korai??
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai sis...

Nice UD..

En sis.. Bharathi homela irukuravangalum.... varavangaluku firstey unmai solurukalam... sis.... intha alamelu amma romba pesitanga... too much... avangaluku vendamna silentah poga vendithaney... sumah suggestion solikito....

Gowtham... super sis... decentah solitan... bt epathan payapulla feel panuthu pola... Eagerly waiting nxt Ud...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top