• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Unathu Vizhiyil Tholainthen penne! - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 15

அவர்கள் சிரித்து முடித்ததும் ஆஷாவைப் பார்க்க அவளோ, அன்புவைப் பார்த்து, “அன்பு இவள் ஒரு கேஸ் விஷயமாக வந்திருக்கிறாள்.. அந்த கேஸ் பற்றி கொஞ்சம் பேச வேண்டும்..” என்று சொல்லவும்,

அவன் மணியைப் பார்த்துவிட்டு, “இப்பொழுது மணியைப் பார்த்தாயா..?” என்று கேட்டதும் மணியைப் பார்த்தவள், “என்னது மணி ஒன்பது ஆகப்போகிறதா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டவள்,

“சரி அன்பு இப்பொழுது என்ன செய்வது..?” என்று கேட்டதும், “நீ இவங்களை உன்னோட வீட்டிற்கு அழைத்துப் போ ஆஷா.. மற்றதை காலையில் பேசிக்கொள்ளலாம்..” என்று மறதியில் கூறினான் அன்பு..

“அன்பு மறந்துவிட்டாயா..? அப்பாவிற்கு டிரான்ஸ்பர் ஆகிவிட்டது என்று போன வாரம் தான் ஹாஸ்டலில் சேர்ந்தேன்..” என்று சொல்ல, “அட ஆமாம் நான் மறந்தே விட்டேன் ஆஷா..” என்று கூறினான் அன்பு..

அவள் ஆதியின் பக்கம் திரும்பி வேண்டும் என்றே, “உன்னோட வீட்டிற்கும் எழிலை அழைத்துப் போக முடியாது.. இவளை இப்படியே ஊருக்கு அனுப்பவும் முடியாது.. இப்பொழுது என்ன செய்ய..?” என்று ஆதியிடம் கூறியவளை இடைமறித்தாள் எழில்..

“என்னால் யாருக்கும் எந்த சிரமமும் வேண்டாம் ஆஷா.. நான் ஊருக்கே போகிறேன். அடுத்தமுறை வந்து கேஸை பற்றி பேசிக்கலாம்..” என்று சொல்ல அன்பு எழில் பேசுவதைப் பார்த்து அமைதியாக இருந்தான்.

“நீ வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் எனக்கு அதுவே போதும் தாயே.. உன்னை இங்கிருந்து அனுப்பிவிட்டு நீ ஊருக்கு செல்லும் வரையில் இங்கே உட்கார்ந்து புலம்புவது யாரால் முடியும்..?” என்று கேட்டவள்,

அன்புவைப் பார்த்த ஆஷா, “என்ன அன்பு நீ ஒன்றும் பேச மாட்டேன் என்கிறாய்.. இப்பொழுது என்ன செய்ய..?” என்று அவனிடம் தீர்வு கேட்டவள்,‘என்னைப் புலம்ப விட்டிங்க இல்ல இருவரும்.. இருங்க உங்களை கவனித்துக் கொள்கிறேன்..’ என்று மனதில் நினைத்தவள்,

“அன்பு இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உன்னோட வீட்டிற்கு அழைத்து போடா.. நாளை நாம் இந்த கேஸை பற்றி பேசிவிட்டு இவளை நான் பத்திரமாக அனுப்பி வைக்கிறேன்..” என்று ஆஷா பவ்வியமாக கூற அவளை முறைத்தான் அன்பு..

அவனின் முறைப்பைப் பார்த்து, “எதுக்குடா இப்பொழுது என்னை முறைக்கிறாய்..?” என்று கேட்டவளிடம், “என்ன ஆஷா விளையாடுகிறாயா..? இவங்களை நான் அங்கே அழைத்துச் சென்றால் அவங்களுக்கு தான் கேட்ட பெயர் வரும்.. அதுவும் இந்த நேரத்தில்..” என்று சொல்ல,

“எனக்கு நீ சொல்வது புரிகிறது அன்பு.. ஆனால் இப்பொழுது இவளை தனியாக அனுப்புவது ஆபத்து..” என்று அவள் எடுத்துக் கூறினாள்..

அன்பு மனதில், ‘நான் இவளை தனியாக அனுப்புவேன் என்று நீ எதிர்பார்த்தாயா ஆஷா.. எனக்கு இவளின் பாதுக்காப்பு ரொம்ப முக்கியம்.. உன்னோட வாயில் இருந்து என்ன வருகிறது என்று பார்க்கத்தான் இப்படி அமைதியாக இருந்தேன்..’ என்று நினைத்தான்..

“இந்த பிரச்சனை எல்லாம் என்னால் தான் வந்தது.. காலையில் இவள் சாப்பிடும்போது நான் வாயை வைத்து சும்மா இருந்திருந்திருந்தேன் என்றால் இவங்க வந்த நேரத்திற்கு இந்நேரம் திரும்பவும் ஊருக்கு சென்று கொண்டிருப்பார்கள்..” என்று தனது வருத்ததை வெளியிட்டான் ஆதி..

“சரி நடந்தது எல்லாம் நடந்து முடிந்ததது.. இனி நடப்பதைப் பற்றி யோசிப்போம்..” என்று ஆஷா சொல்ல, “சரி ஆஷா நான் எழிலை எங்கள் வீட்டிற்கே அழைத்துச் செல்கிறேன்..” என்று அன்பு ஒரு வழியாக ஒப்புக்கொள்ள பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள்,

“எழில் நீ இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அன்பு வீட்டில் இரு.. மற்றதை நாம் காலையில் பேசிக்கொள்ளலாம்..” என்று எழில்விழியிடம் கூறியவளை பார்த்து எழில் தயக்கமாக,

“வேண்டாம் ஆஷா எதுக்கு இந்த வீண் பிரச்சனை நான் ஊருக்கே போகிறேன்.. அடுத்தமுறை வந்து மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம்.. என்னை ரயிவே ஸ்டேஷன்ல கொண்டுபோய் விடு ஆஷா..” என்று எழில் பிடிவாதமாகச் சொல்லவும்,

“இங்கே பாரு எழில் நீ என்னை நம்பித்தான் சென்னை வந்தாய்.. உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வது என்னோட பொறுப்பு.. உன்னோட வேலை முடியாமல் உன்னை அதுவும் இந்த ராத்திரி நேரத்தில் தனியே அனுப்ப எனக்கு விருப்பம் இல்லை.. சோ, நீ இன்னைக்கு அன்புவின் வீட்டில் இரு.. நாளை வந்த வேலை முடித்துவிட்டு ஊருக்கு உன்னை நானே அனுப்பி வைக்கிறேன்..” என்று ஆஷா சொல்லிவிட்டு மணியைப் பார்த்தாள்..

“ஐயோ அந்த வார்டன் உள்ளே விடமாட்டாளே..” என்று புலம்பியவள், “ஆதி என்னை ஹாஸ்டலின் முன்னால் இறக்கு விடுடா..” என்று சொல்ல, ஆஷாவின் முகம் பார்த்தவன்,“சரி வா ஆஷா..” என்று அழைத்துக் கொண்டு,

“எழில் சிஸ்டர் நீங்க அன்புவுடன் கிளம்புங்க.. மற்றவைகளை பற்றி நாம் காலையில் பேசுவோம்.. இவளை பற்றி நான் உங்களிடம் கம்ப்ளைண்ட் பண்ணனும் சிஸ்டர்..” என்று புன்னகையுடன் கூறியவன் ஆஷாவை உடன் அழைத்துச் செல்ல,

அவளின் பின்னோடு வாசல் வரை சென்ற எழில், “ஏய் ஆஷா உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும் நில்லுடி” என்று அவள் கூப்பிட கூப்பிட காதே கேட்காதது போல சென்ற ஆஷா ஆதியுடன் வண்டியில் ஏறியமர்ந்தவள்,

“ஆதி சீக்கிரம் வண்டியை எடு..” என்று கூற பைக்கு மின்னல் வேகத்தில் பறக்க, “காலைப் பார்க்கலாம் எழில்..” என்று கூறியவள் எழில்விழியின் கண்ணை விட்டு மறைய, எழில்விழி தயக்கத்துடன் வாசலில் நின்றாள்..

அதற்குள் ஆபீஸை பூட்டிவிட்டு வந்த அன்பு, “வாங்க எழில்..” என்று அழைத்தவன் அவளின் முன்னே நடந்து செல்ல, அவனின் பின்னோடு அமைதியாக சென்றாள் எழில்விழி..

அன்பு காரில் டிரைவிங் சீட்டில் அமர, “எழில் முன்னாடி வந்து ஏறுங்கள்..” என்று கூறியதும் அவனைப் பார்த்து சரியென்று தலையசைத்துவிட்டு முன்னிருக்கை ஏறியமர்ந்தாள் எழில்விழி..

அன்பு காரை ஸ்டார்ட் செய்து செல்ல ஒரு திருப்பத்தில் நின்று இவர்களைப் பார்த்த ஆஷா, ஆதி இருவரும் ஹை – பை கொடுத்துக் கொண்டனர்..

அவர்கள் சென்ற பிறகு, “அன்புவின் மனதில் இந்த பொண்ணு தான் இருக்கிறாள் ஆஷா.. இவனை நானும் இத்தனை வருடம் பார்க்கிறேன் அவனின் மனதில் உள்ளதை சொல்லாமல் மறைத்துக்கொண்டு இருக்கும் காரணம் தான் எனக்கு புரியவில்லை..” என்றவன்,

“அவளுக்கு அவளின் தங்கை வாழ்க்கை முக்கியம் இவனுக்கு இவனின் காதல் முக்கியம், இது தவிர வேற என்ன காரணம் இருக்க போகிறது இருவருக்கும்..!” என்று சாதாரணமாக கூறினாள் ஆஷா..

அவள் கூறியதைக் கேட்டு அவளை நோக்கிய ஆதி, “அடிப்பாவி என்னமா பொய் சொல்கிறாய்.. அந்த வார்டனுக்கு தண்ணி காட்டுபவளே நீதான்.. வார்டனுக்கு பயந்த பிள்ளை போல என்னமாய் நடிக்கிறாய்..” என்றவன் பைக்கில் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்ய அவனின் பின்னோடு அவள் ஏறியதும் வண்டியை எடுத்தான் ஆதி..

அவன் அப்படி சொல்லவும் சிரித்தவள், “எழிலை என்னோட அழைத்துச் செல்லத்தான் நினைத்தேன் ஆதி.. ஆனால் இருவரும் சேர்ந்து என்னை முட்டாள் ஆக்க பார்க்க அவர்கள் முன்னே சும்மா நடித்தேன் ஆதி..” என்று கூறியவள்,

“அன்புவும் – எழிலும் சந்தித்திருக்கின்றனர்.. ஆனால் அந்த சந்திப்பின்போது நான் எங்கே இருந்தேன் என்று தான் எனக்கே தெரியவில்லை..” என்று புலம்பியவளுக்கு தெரியாது.. அவர்கள் சந்திக்க காரணமே தான் தான் காரணம் என்பது..

ஆதி சீரான வேகத்தில் வண்டியை செலுத்த அவனின் பின்னோடு அமர்ந்திருந்த ஆஷா தீடிரென்று “ஆதி எனக்கு பயமாக இருக்கிறது டா..” என்று சொல்ல வண்டியை ஸ்லோ பண்ணியவன், “எதுக்கு பயப்படுகிறாய்..?” என்று கேட்டான்..

“இல்லடா அன்புவின் பெற்றோர் அவளை என்ன நினைப்பார்கள் என்று தெரியலடா.. எழில் இதுவரையில் சொந்தபந்தங்கள் வீட்டிற்கு கூட போனது கிடையாது.. இங்கே என்ன நிகழுமோ என்று பயமாக இருக்கிறது..” என்று தோழிக்காக அவள் பயத்துடன் சொல்ல,

“ஜெஸ்ட் ரிலாக்ஸ் ஆஷா.. அன்பு இருக்கும் பொழுது நீ நினைப்பது எதுவும் நடக்காது.. எல்லாவற்றையும் அன்பு பார்த்துக் கொள்வான்.. எல்லாம் நல்லபடியாக நடக்கும்..” என்று அவன் அன்புவை புரிந்து கொண்டு சொல்ல ஆஷா மனம் கொஞ்சம் சமாதானம் அடைந்தது..

அவன் அப்படி கூறியதும் அவளின் முகம் கொஞ்சம் தெளிய ஆதி வண்டியை எடுக்க, “ஆதி எனக்கு பசிக்கிறது இங்கே இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு போகலாமா..?” என்று கேட்டதும்,

“அடியே காலையில் இருந்து உன்னை சமாதானம் செய்ய நான் செய்த செலவு என்ன தெரியுமா..? ஐயாயிரம் ரூபாய்.. இதற்கும் மேல் என்னிடம் எந்த காசும் இல்லடி..” என்று பரிதாபமாக அவன் கூறியதும் ஆஷாவின் முகத்தில் புன்னகை அரும்பியது..

“நான் உனக்கு வாங்குத் தருகிறேன் வா ஆது..” என்று கூறியவள் அவனை அழைத்துக் கொண்டு ஹோட்டலின் உள்ளே சென்றாள்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அன்பு வண்டியை சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டே அருகில் அமர்ந்து இருந்த எழில் முகத்தைப் பார்க்க, அவளோ ஜன்னலின் வழியே ஒளிரும் மின்விளக்குகளையும், புயல் வேகத்தில் செல்லும் வாகனங்களைப் பார்த்தவாறு வந்துக் கொண்டிருந்தாள்..

அவள் அவ்வாறு பார்த்துக் கொண்டே வந்தாலும் அவளின் உள்ளம் அனைத்தும் அவளின் தங்கை மீதே இருந்தது.. அவள் பிறந்ததில் இருந்து ஒரு முறை கூட அவளை விட்டு பிரிந்தது கிடையாது எழில்.. இது தான் அவளின் முதல் பிரிவு.. அதுதான் அவள் தங்கை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள்..

தீடிரென்று ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி இறங்க அன்புவின் முகத்தைக் கேள்வியோடு நோக்கியவளிடம், “கீழே இறங்கு எழில்..” என்று கூறியவன், அவள் இறங்கியதும் காரின் கதவுகளை லாக் செய்துவிட்டு அருகில் இருந்த ஹோட்டலின் உள்ளே சென்றான்..

அதன் பெயர் பலகையைப் படித்தவள், “இப்பொழுது இங்கே எதற்கு வந்திருக்கிறோம் அன்பு..” என்று கேட்டாள்.. இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் அழைத்ததை கவனிக்கவே இல்லை..

அவளின் கேள்வியில் அவளைத் திரும்பிப் பார்த்தவன், “ஹோட்டலுக்கு எதற்கு வருவாங்க..?” என்று கேட்டதும், அவள் பதில் பேசாமல் அவனின் முகத்தைப் பார்க்க, “வா எழில்..” என்று அவளை அழைத்து சென்றான்..

ஹோட்டலின் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த டேபிளில் அமர்ந்தவனைப் பார்த்து அவளும் அமர, “என்ன சாப்பிடுகிறாய் எழில்..” என்று கேட்டான்..

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு எதுவும் வேண்டாம்..” என்று தலையைக் குனிந்துக் கொண்டு சொல்ல, “நீ இப்படி இருப்பதைப் பார்த்தால் நான் உன்னை கடத்திட்டு வந்து கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பது போல இருக்கிறது எழில்... நீ எப்பொழுதும் போல சாதாரணமாக இரு..” என்று அவன் உதட்டில் அரும்பிய புன்னகையுடன் கூறினான்..

அவன் சொன்னதைக்கேட்டு சரியென்று தலையசைத்தவள், எப்பொழுதும் போல எந்த பயமும் இல்லாமல் சாதாரணமாக அமர அன்புவின் விழிகள் அவளைப் பாராட்டியது..

“சரி இப்பொழுது சொல்லு என்ன சாப்பிடுக்கிறாய்..?” என்று கேட்டதற்கு அவள் எதுவும் பேசாமல் இருக்க, “நீ சாப்பிட்டேன் என்று சொன்னது பொய் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.. இதற்கு மேலும் என்னை ஏமாற்றலாம் என்று நினைக்காதே!” என்று சொல்ல அவள் பயத்தில் விழிகள் இரண்டும் படபடக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

அவன் கூறியதைக் கேட்டு மனதில் தோன்றிய பதட்டத்துடன், “உங்களுக்கு எப்படி தெரியும்..” என்று கொஞ்சம் அதிர்வுடன் அவள் கேட்டதும்,

அவளின் கேள்வியில் சிரித்தவன், “நீதான் காலையில் இருந்து உண்ணாவிரதம் இருந்ததை உடன் இருந்து பார்த்தேன் அது தான்..” என்று அவன் நக்கலாகக் கூறவும் தன்னையும் மீறி அவனை முறைத்தாள் எழில்..

அவள் முறைப்பதைக் கண்டு அன்பு ஒற்றை புருவம் உயர்த்தி அவளைப் பார்த்து, “காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்தவள் நான் கேட்டதும் சாப்பிட்டேன் என்று பட்டென்று பதில் சொன்னதும் எனக்கு தெரிந்துவிட்டது நீ சொல்வது பொய் என்று..!” அவன் கூறியதும் மெல்ல இதழ்களை விரித்து அழகாக சிரித்தாள் எழில்..

அவள் சிரிப்பதைக் கண்ட அன்பு, “நான் சாப்பாடு வாங்கித் தந்தாலும் சாப்பிட்டிருக்க மாட்டாய்.. ஏற்கனவே ஆபீஸ் உள்ளே வந்ததும் நான் நல்லவனா..? கெட்டவனா..? என்று வேறு ஆராய்ச்சி செய்தாய்.. அதுதான் நான் அமைதியாக இருந்தேன்..” என்று கூறியவன் அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு மேலும் தொடர்ந்தான்..

“அதுதான் அங்கே உன்னிடம் எதுவும் சொல்லாமல், உன்னை இங்கே அழைத்து வந்தேன்.. இப்பொழுது சொல்லு உனக்கு என்ன பிடிக்கும்.. என்ன சாப்பிடுகிறாய்..?” என்று அவளை அழைத்து வந்ததின் காரணத்தைக் கூறியவன், அவளிடம் கேட்டு அவளுக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் கொடுத்தவன் அமைதியாக இருந்தான்..

அவளின் பார்வை ஹோட்டலை சுற்றிலும் பார்வையைச் சுழற்ற, அன்புவோ அமைதியாக அவளைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான்.. இவளின் அமைதி அவனுக்கு எப்பொழுதும் அவனுக்கு பிடித்த ஒன்று.. அவளின் விழிகள் அங்கே இங்கே செல்வதைக் கண்டு அதை ரசித்தவண்ணம் அமர்ந்திருந்தான்..

அவன் ஆர்டர் கொடுத்த உணவுகள் கொண்டு வந்து வைக்கப்பட, “ம்ம் சாப்பிடு..” என்று சொல்ல, “இல்ல எனக்கு வேண்டாம்..” என்று அவள் சாப்பிட மறுத்ததும், “உஸ்ஸ் எதுவும் பேசக்கூடாது.. சாப்பிட மட்டும் தான் வாயைத் திறக்க வேண்டும்..” என்று சொன்னதும் அவனையே இமைக்காமல் பார்த்தாள்..

“இப்படியே நீ என்னைப் பார்த்துட்டு இருந்தால் உனக்கு ஊட்டி விடுவதைத் தவிர எனக்கு வேற வழியே இல்லை..” என்று அவன் சிரிக்காமல் சொல்ல அது அவளிடம் சரியாக வேலை செய்தது..

அவள் சாப்பிடுவதை அமைதியாகப் பார்த்தவன், “அடுத்தவங்க சாப்பிடவில்லை என்றால் நீ மட்டும் வருத்தப்படுகிறாய்.. அதே போல தானே உனக்காக மற்றவர்களும் வருத்தப்படுவார்கள்..” என்று அவன் கூறியதும்,

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்காக வருத்தப்பட யாரும் இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும் அதனால் நான் அதிகம் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை அன்பு..” என்று சொல்லியவள் அவனிடம், “நீ சாப்பிடாமல் இருக்கிறாய்..” என்று அவனைக் கேட்டாள்..

“நான் சாப்பிட்டுக் கொள்கிறேன்..நீ முதலில் சாப்பிடு..” என்று கூறியவனும் சாப்பிட, அவளும் அமைதியாக சாப்பிட்டாள்.. இவர்கள் இருவரையும் வேறொரு டேபிள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர் ஆதியும், ஆஷாவும்..!

ஆதி ஆஷா இருவரும் உள்ளே நுழையும்போது தான் அன்புவும், எழிலும் சாப்பிட அமர்ந்தனர்.. அவர்கள் அமர டேபிளைத் தேட, அவர்கள் கண்ணில் பட்டனர் அன்புவும் எழிலும்..!

ஆஷா இருவரையும் பார்த்துவிட்டு தனது கண்ணையே நம்ப முடியாமல் கண்கள் இரண்டையும் கசக்கிக்கொண்டு மீண்டும் பார்க்க, அன்பு – எழில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்..

அவளின் செய்கையைக் கவனித்த ஆதி அவளின் பார்வை சென்ற திசையைப் பார்த்து வாயைப் பிளந்து நின்றதுதான் மிச்சம்.. அவர்கள் இருவரையும் பார்த்த இருவரும் அதிர்ச்சியுடன் நின்றனர்.. அன்பு – எழில் இருவருமே இவர்களைக் கவனிக்கவில்லை..

முதலில் அதிர்ச்சியில் இருந்து மீண்ட ஆதி, “ஆஷா வா..” என்று அழைத்துச் சென்று டேபிளில் அமரவைக்க அவளோ அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்..

அவளுக்கு அன்பு – எழில் இருவரையுமே ஆரம்பத்தில் இருந்து தெரியும்... இருவரின் குணத்தைப் பற்றி முழுவதும் அறிந்து வைத்திருந்த ஆஷாவிற்கே இவர்களின் செய்கை ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியும் ஒரே நேரத்தில் கொடுத்தது..

அங்கே நடப்பதை இவர்கள் இருவராலும் நம்ப முடியவில்லை.. அன்புவை அவர்கள் முன்னபின்ன அப்படி பார்த்தும் இல்லை.. ஆனால் இன்று நடப்பது எல்லாம் முற்றிலும் தலைகீழாக நடந்ததது..

அதில் ஆஷாவிற்கு தலையே சுற்ற, “என்னடா நடக்குது இங்கே..? எல்லாமே தலை கீழாக நடக்கிறது..?” என்று கேட்டாள்

அவளின் கேள்வியில் அவளைப் பார்த்த ஆதி, “நீ சாப்பிடாமல் இருப்பதால் உனக்கு கண்ணைக் கட்டுகிறது ஆஷா.. முதலில் சாப்பிடு..” என்று கூறியவன் ஆர்டர் கொடுத்தான்

அவர் ஆர்டர் கொடுத்தபடி அமர்ந்திருக்க, எழில் - அன்பு இருவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்து செல்ல, “ஆதி நாம் பார்ப்பது நம்முடைய அன்பா..?” என்று ஆஷா இன்னும் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து வெளிவாராமல் கேட்டாள்..

“எனக்கும் அதுதான் சந்தேகமாக இருக்கிறது..” என்று கூறினான் ஆதி. இவர்கள் இருவரும் தங்களின் கண்களை நம்ப முடியாமல் இருக்க, எழிலை அழைத்துக் கொண்டு வீடு நோக்கி பயணப்பட்டான் அன்பரசன்..

அவனுக்கு எழிலைப் பார்த்தும் காலையில் நடந்தது எல்லாம் மறந்துவிட்டது போல, காலையில் திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தவன் இரவு ஒரு பொண்ணுடன் சென்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை அறியாமல் சென்றான்..

எழில் வெளியே சாதரணமாக இருந்தாலும் அவளுக்கும் உள்ளுக்குள் பயம் இருக்கவே செய்தது.. தான் காதலிக்கும் காதலன் வீட்டிற்கு முதல் முறையாக செல்கிறோம்.. அதுவும் இந்த நிலையிலா செல்ல வேண்டும் என்று நினைத்துதான் ஆஷாவிடம் மறுத்து மறுத்து பேசினாள்.. ஆனாலும் கடைசியில் எல்லாம் மாறிவிட்டது..

இப்பொழுது ‘இவனுடைய வீட்டில் இருப்பவர்களை சந்திக்க போகிறோம்’ என்று ஒரு மனம் துள்ளிக் குதித்தாலும் மற்றொரு மனம், ‘அவர்கள் உன்னை என்ன நினைக்க போகிறார்களோ.. அங்கே என்ன அவமானம் எல்லாம் காத்திருக்கிறதோ தெரியவில்லை..’ என்று அவளை பயமுறுத்தியது..

அவள் இந்த சிந்தனையில் வந்ததால் கார் அவனின் வீட்டுக்குள் நுழைத்து போர்டிகோவில் நின்றதையோ அன்பு இருமுறை அவளை அழைத்தாயோ அவள் அறியவே இல்லை..

அவளை அழைத்து அழைத்துப் பார்த்தவன், “கனவில் யார் கூட டூயட்..?” என்று கேட்டதும் அவளின் சிந்தனை கலைய மீண்டும் கார் நின்றிருப்பதைப் பார்த்து, “என்ன திரும்பவும் காரை நிறுத்தியிருக்கீங்க..?” என்று கேட்டவளுக்கு அப்பொழுதுதான் புரிந்தது கார் நிறுத்தபட்டிருக்கும் இடம் அவனின் வீடு என்று..!

அதுவரையில் இருந்த பயம் இன்னமும் அதிகரிக்க, அன்புவின் முகத்தைப் பார்க்க அவளின் பயத்தை உணர்ந்தவன், “நான் இருக்கிறேன் எழில் பயப்படாதே.. என்னோட வீட்டில் சிங்கம், புலி, கரடி எல்லாம் வர வாய்ப்பே இல்லை..” என்று அவன் சிரிக்காமல் சொல்ல, அவளின் பயம் மறந்து அவளின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர கீழே இறங்கினாள்..

கார் வந்து நின்றும் அன்பு உள்ளே வராததைக் கவனித்த சுமித்ரா வாசலுக்கு செல்ல, தனது மகன் காரை விட்டு இறங்க, மறுபக்கத்தில் இருந்து இறங்கிய எழிலைப் பார்த்து அதிர்ச்சியுடன் நிற்க,

அவளின் அதிர்ச்சியைக் கண்டு வாசலுக்கு வந்த தியாகுவும் அதிர்ச்சியில் நின்றார்..

இவர்கள் அதிர்ச்சியில் நிற்பதைப் பார்த்த அறிவு, “அப்பா, அம்மா இருவருக்கும் என்ன ஆச்சு.. இப்படி பேயை நேரில் கண்டது போல நிக்கிறீங்க..?” என்று கேட்டவன் வாசலுக்கு வந்து பார்க்க, தனது அண்ணனுடன் நின்ற பெண்ணைப் பார்த்து அறிவு மயக்கம் போடாத குறைதான்..

இவர்கள் அதிர்ந்த பார்வையைக் கவனித்த அன்பரசனுக்கு அப்பொழுதுதான் தான், ‘காலையில் எனக்கு திருமணம் வேண்டாம்...’ என்று சொன்னது ஞாபகம் வர அவனும் அவர்களைப் பார்த்தவண்ணம் அமைதியாக நிற்க, இவர்களை பார்த்து பயத்துடன் நின்றிருந்தாள் எழில்விழி..

அன்புவின் பெற்றோர் எழிலை உள்ளே அழைப்பார்களா..? இல்லை எழில் நினைத்தது போல அவள் அவமானப்பட நேருமா..?
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அன்பு மேல அவங்களுக்கு நம்பிக்கை இல்லாமலா போகும் அப்புறம் எழில் செல்லத்தை போய் தப்ப நினைப்பாங்களா அவங்க ஊர்காரி வேற
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நான்தான் முதல் கமெண்ட்
சொன்னமாதிரியே முதல் கமெண்ட்:love::love::love: சூப்பர் சிஸ்டர்(y)(y)(y)...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
:D :p :D
Me Second,
சந்தியா ஸ்ரீ டியர்
என்னோட பானும்மா கமெண்ட்ஸ் வந்தாலே போதும்.. அது முதல் கடைசி என்ற பாகுபாடு இல்லை எனக்கு.:):):)
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அன்பு மேல அவங்களுக்கு நம்பிக்கை இல்லாமலா போகும் அப்புறம் எழில் செல்லத்தை போய் தப்ப நினைப்பாங்களா அவங்க ஊர்காரி வேற
அவர்கள் அப்படி பண்ணுவாங்க என்று எனக்கு தோன்றவில்லை சிஸ்டர்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top